• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

என் தேடலானவளே 4

ரமா

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 11, 2023
Messages
25
" நீங்களா நீங்க தான் வி கே வா..." என்று அதிர்ச்சியுடன் கேட்டாள் ரூபவாஹினி.

விவேக் கண்ணாவோ என்ன ஆயிற்று இவளுக்கு நேற்று தான ஷாப்பிங் மால்ல பார்த்தா... ஆனா இன்னைக்கு புதுசா பாக்குற மாறி கேட்குறா... என்று அவளின் மேல் சந்தேகத்துடனே "எஸ் மேம் ஐ ஆம் வி கே... வி கே குருஃப் ஆஃப் கம்பெனிஸ் எம் டி..." என்று அவளின் பதவிக்கு மரியாதை கொடுத்து பதிலளித்தான்.

"நேத்து நீங்க உங்க நேம் விவேக் கண்ணான்னு சொன்னீங்க..." என்று அவனின் பதிலில் மறு கேள்வி எழுப்பினாள்.
இவளென்ன பைத்தியமா... என்ற ரீதியில் பார்த்தவன் பார்வையில் அவளின் விழிகளில் என் கேள்விக்கான பதில் என்ன என்ற தேடுதல் இருந்தது.
"மேம் விவேக் கண்ணாவோட பர்ஸ்ட் லெட்டர் தான் வி கே... உங்களுக்கு என்னோட நேம்ல எதுக்கு இவ்வளவு டவுட்..."என்ற கேள்வியுடன் அவளைப் பார்த்தான்.
"அப்போ நேத்ரா...?"
"நேத்ரா என்னோட பொண்ணு..."
"உங்களுக்கு மேரேஜ் ஆயிடுச்சா...?
"மேரேஜ் ஆகாத ஐந்து வயசுல பொண்ணு மட்டும் எப்படி மேம்... இந்த கவர்மெண்ட் புராஜெக்ட் ல இதெல்லாம் கேட்குறாங்களா மேம்..."என்றான் இகழ்ச்சியுடனே.
அவள் அவனின் குரலில் இருந்த வேறுபாட்டையெல்லாம் கவனிக்கவில்லை... அவளுக்கு நினைவிலிருந்தது அவனுக்கு திருமணம் ஆகி குடும்பத்துடன் உள்ளான் என்பதிலே நின்றது. 'இவனுக்கு திருமணம் முடிந்து விட்டதா... என்னை முழுவதும் அவன் மறந்து விட்டானா... அவன் மனதின் சிறு ஓரத்திலும் என் நினைவு இல்லையா..இதற்காகவா இத்தனை தேடல்... இதற்கா இத்தனை வலிகளை கடந்தேன்...இந்த நொடி வாராமலே இருந்திருக்கக் கூடாதா...' என்ற நினைவிலும் ஏற்கனவே அவள் இருந்த மனநிலையும் மாறி அவளை மயக்கமடையச் செய்தது. அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் கீழே விழுவதற்குள் பிடித்துக் கொண்டான். அவன் "மேடம் என்னாச்சு உங்களுக்கு..." என்று அவனின் சத்தம் கேட்டு வெளியில் இருந்தவர்கள் உள்ளே வந்தனர். அதற்குள்ளாகவே அவளை தூக்கிக் கொண்டு அவசரமாக வெளியில் வந்தவன் பக்கத்தில் வந்த பியூனிடம் தனது கார் சாவியை கொடுத்து டோரை ஓபன் பண்ண சொன்னான். அவனிடம் சொல்லிக்கொண்டு அருகிலுள்ள மருத்துவமனை அழைத்து சென்றான்.
அவளை உள்ளே அனுமதித்தவன் வெளியே காரிடாரில் நடக்கும் சமயம் போலிஸ் வண்டி வந்து நின்றது... அதிலிருந்து கரண் இறங்கினான். அவசரமாக வந்தவன் விவேக்கின் வந்து "சார் வாஹினிக்கு என்னாச்சி..." என்றான் பதற்றத்துடன்.
அவனை நீ யார் என்ற கேள்வியுடன் பார்த்தான் விவேக். அவனின் பார்வையின் பொருளை உணர்ந்தவன் " ஐ ஆம் கரண்... டி எஸ் பி இன் சிட்டி.. வாஹினி மை பெஸ்ட் பிரண்ட்.." என்றான் அவன் கேள்விக்கான பதிலாய்...
அவளை வி கே அழைத்து வரவும் பியூன் மூலம் கரணுக்கும் ஃபோன் பறந்தது. அதன் மூலம் ஹாஸ்பிடலின் பெயரை அறிந்து கொண்டு விரைவாக வந்தான். அவன் பதட்டத்துடன் வரவும் அவளின் காதலனே எனும் நினைவில் அவளை அழைத்த வீதம் அவன் நினைவில் இல்லை. "தெரியல சார்... டாக்டர் பாத்துட்டிருக்காங்க..." என்று அதற்கு மேல் பேச ஒன்றுமில்லை என்பதை போல முடித்துக் கொண்டான்.
சில நிமிடங்களில் மருத்துவர் வெளியில் வந்தார்... வந்தவர் வி கே விடம் "அவங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை சார்... ரொம்ப வீக்கா இருக்காங்க.. எதோ அதிர்ச்சியான விஷயம் கேள்விபட்டுருக்காங்க.. சோ அதுதான் பீபி லோ ஆகி மயங்கிருக்காங்க... அவ்வளவுதான் கொஞ்ச நேரத்துல எழுந்துருவாங்க போய் பாருங்க..." இருவரிடமும் சொல்லிக்கொண்டு சென்றுவிட்டார். அவர்கள் இருவரும் அவளின் எழுவதற்காக காத்திருக்கும் நேரம் ஒருவன் மனதிலோ 'நேத்து நல்லாதான பார்த்து பேசுனா...இப்போ என்னாச்சி இவளுக்கு... நேத்தே நான் என் பேர சொல்லிட்டேனே... சரி அவளுக்கு என்ன ஆனா எனக்கு என்ன நான் ஏன் இவ்வளவு நேரம் இப்படி பித்து பிடிச்ச மாறி இருந்தேன்... முதல்ல அவ எழட்டும்..' என்றும்
இன்னொருவனோ அதிர்ச்சியான விஷயமா... அப்படி என்ன இருக்கும்... கொஞ்ச நேரம் முன்னாடி நான் பேசும் போது நல்லாத்தான பேசுனா.. அதுக்குள்ள அப்படி என்ன அதிர்ச்சியான விஷயம் நடந்திருக்கும்.. அவளுக்கு அதிர்ச்சினா ஒரு வேலை அவனுக்கு ஏதாவது ஆகியிருக்கு மோ... இல்லையோ நானும் அவனைத்தான தேடிறேன்... ஆனா அவன் எப்படி இருப்பான் எங்க இருக்கான்னு தெரியலையே.. அடியே வாஹி என்னாச்சி டி உனக்கு... நீ எவ்வளவு போல்டானவ...அப்படி என்ன விஷயத்துக்குடி இப்படி ஹாஸ்பிடல் வர அளவுக்கு இருக்கு... புரியவே இல்லை.. எழுந்து வாடி.. அப்புறம் இருக்கு..' என்று இருவரும் வெவ்வேறு மனநிலையில் இருந்தனர். இருவரின் புலம்பலுக்கு காரணமானவளோ மருந்தின் வீரியத்தில் உறங்கி கொண்டிருந்தாள்.
இருவரும் அவரவரின் சிந்தனையில் இருக்கும் பொழுது விவேக்கின் மொபைல் ஒளி இருவரையும் நடப்புலகத்திற்கு கொண்டு வந்தது. அது நேத்ராவின் பள்ளியிலிருந்து... இந்த நேரத்துல ஏன் ஸ்கூலிலிருந்து கால் பன்றாங்க.. என்ற யோசனையுடன் காலை அட்டென்ட் செய்தான்.. அந்தப் பக்கம் என்ன சொல்லப்பட்டதோ "வாட் எப்போ என்னாச்சி..." என்று பதட்டத்துடன் பேசினான்.
" ......"
"ஒரு சின்னப்பொண்ண உங்களால பாத்துக்க முடியலையா... என் பொண்ணுக்கு மட்டும் எதாவது ஆகட்டும்.. உங்கள இருந்த இடம் தெரியாம அழிச்சிடறேன்.. எந்த ஹாஸ்பிடல் சொல்லுங்க.." என்று ரௌத்திரம் பொங்கிய குரலில் எதிரிலிருந்தவர்களை வசைபாடினான். பின்பு கரண் தன்னையே பார்ப்பதை கண்டு அவனிடம்
"சாரி மிஸ்டர் கரண்.. எனக்கு கொஞ்சம் அவசரமா போகனும் நீங்க அவங்கள பாத்துக்கோங்க.." என்று அவசரமாக கிளம்பியவனை கண்டவன்
" சார் யாருக்கு என்னாச்சி..." என்றான் கரண்
" என் பொண்ணுக்கு அடிபட்டு ஹாஸ்பிடலில் சேர்த்திருக்காங்க.. நான் போகனும்..."என்று சுருக்கமாக அவனிடம் சொல்லிக் கொண்டே கிளம்பினான்.

வி கே ஹாஸ்பிடலில் தனது வண்டியை நிறுத்திவிட்டு வேகமாக இறங்கி உள்ளே சென்றான்.. ஆம் அது அவனின் மருத்துவமனை தான். நேத்ராவிற்கு அடிபட்டதும் அவளை இங்கே கொண்டு வந்து சேர்த்தனர்.. வி கே அந்த பள்ளியின் ஒரு பங்குதாரரும்... தன் மகளுக்காகவே அதில் இணைந்தான். அவன் உள்ளே வரவும் அங்கிருந்த டாக்டர் அவனை பார்த்து விட்டு சார் என்று பயத்துடனே அங்கே வந்தான்.
அவனை பார்த்து "நேத்ரா எங்க மிஸ்டர் ரிஷி..." என்றான் கேள்வியுடன்.
சார் ஐசியூ ல இருக்காங்க சார்...
என்னாச்சி ரிஷி... சீரியஸ் இல்லைல.. அவ நல்லாருக்கா இல்லை... என்று படபடப்புடனே கேட்டான்.
"சார் தலைல பலமா அடிபட்டுருக்கு.... டிரிட்மெண்ட் போய்ட்டுருக்கு சார்.. ஒரு மணி நேரம் கழிச்சு தான் சார் சொல்ல முடியும்.." என்று அசராமல் வார்த்தையில் வெடிகுண்டு வீசினான் ரிஷி.
அதை கேட்டதும் இவ்வளவு நேரம் இருந்த தைரியம் கானாமல் போனது. 'நேதுமா... வந்துருடா அப்பாகிட்ட... நீ இல்லாம அப்பாவால இருக்க முடியாது டா.. உனக்காகத் தான்டா நான் இன்னும் இருக்கேன்... சொல்லப்போனா உன்னால் தான் இருக்கேன்... நீ என் தேவதைடா...' என்று மனதிற்குள்ளாக தனது மகளிடம் பேசினான். அவன் ஐசியூ வாயிலில் நடந்து கொண்டிருந்த போது குருபரன் வந்தான்... "அண்ணா யாழுமா க்கு என்னாச்சி... "என்ற கேள்வியுடன்.
அவனைக் கண்டதும் குரு என்று வார்த்தையிலே அவன் எவ்வளவு வலியில் உள்ளான் என்பதை உணர்த்தியது.
"அண்ணா யாழுக்கு எதுவும் ஆகாது.. நீங்க கவலை படாதிங்க... நம்ம ஏஞ்சல் வருவா அண்ணா..." அவள் அவனுக்கும் மகள் போலத்தானே... அதை அவனின் வார்த்தையும் உணர்த்தியது.
விவேக்கிற்கும் குருவிற்கும் இப்பொழுது அவள் கண்விழித்து தன்னை டார்லிங் என்று அழைக்க வேண்டும்.... அவ்வழைப்புக்காக இருவருமே காத்திருக்க தொடங்கினார்கள்.
ரூபி எழுந்ததும் சுற்றிலும் பார்வையை அலைய விட்டாள்.. அதன் இடத்தின் வரும் வாசனையே உணர்த்தியது அது மருத்துவமனை என்று. அவள் விழி மலர்ந்ததும் அருகில் இருந்த கரண் "வாஹி இப்போ எப்படி இருக்கு... என்னாச்சி திடிர்னு நீ மயங்கற அளவுக்கு... அதுக்கும் கொஞ்சம் முன்னே என்கிட்ட நல்லாத்தானே பேசுன... அப்படி என்னதான் டி ஆச்சு...நீ இவ்வளவு வீக்கானவளும் இல்லை... நீ எவ்வளவோ வலிகள் கடந்து வந்துருக்க... அப்போ கூட நீ எவ்வளவு தைரியமா நின்னு வந்த... ஆனா இப்போ இப்படி ஹாஸ்பிடல் வர அளவுக்கு என்னாச்சிடி.. வாஹி உன்கிட்ட தான் கேட்குறேன்... சொல்லுடி..." என்றான். அவளிடம் பதிலில்லாமல் போகவும் "வாஹி"... என திரும்ப அழைத்தான்.
அவளோ அவனின் கேள்விக்கு பதிலளிக்காமல் "என்ன யாரு ஹாஸ்பிடலில் சேர்த்தது கரண்.." என்று பதில் கேள்வி கேட்டாள்.
" நான் என்ன கேட்டா நீ என்னடி பதில் கேள்வி கேட்குற..." என்று தனது கேள்விக்கு பதிலளிக்காமல் மறு கேள்வி கேட்ட கோபத்தில் பதில் கூறினான்.
"கேட்டதுக்கு மொதல்ல பதில் சொல்லு கரண்... நீ வரும் போது என்கூட யாரு இருந்தாங்க... " அவளின் குரலில் வலியே மிகுந்து காணப்பட்டது... அதில் இருந்த வலியினை உணர்ந்தவன் அவளின் கேள்விக்கு பதிலளித்தான்.
" விவேக் கண்ணானு ஒருத்தர் டி... ஏன்டி என்னாச்சி..." என்றான் கேள்வியுடன்.
"அவரு தான்டா வி கே... யார நேர்ல பாக்க கூடாதுன்னு நெனச்சேனோ அவருடா..." என்றாள் குரலில் வலியுடன்.
"என்னடி சொல்ற... நீ விகே விகே ன்னு புலம்புவியே அவரா..." என்றான் ஆச்சரியத்துடன்.
"ஆமாடா... அவரே தான்.. அதுமட்டுமில்லாமல் அவருக்கு கல்யாணம் ஆயிடுச்சி டா... ஐந்து வயசுல ஒரு பொண்ணு இருக்குடா... என்னால் இதை நம்ப முடியலை டா... அவரால என்னைவிட்டு இன்னொருத்திய கண்டிப்பா ஏத்துட்டிருக்க முடியாது டா... ஆனா எப்படி நடந்துச்சி... புரியல டா... ஒரே குழப்பமா இருக்கு..." என்று தலையை பிடித்துக் கொண்டாள்.
"ஹேய் வாஹி நான் அவரை பத்தி விசாரிக்கிறேன் நீ டென்ஷன் ஆகாத... ஓகே வா.. உனக்கு அவரு மேல் நம்பிக்கை இல்லையாடி..." என்று சந்தேகத்துடன் கேட்டான்.

அவளே மென்மையாக சிரித்து விட்டு "நான் என்னை விட அதிகமா அவர நம்பறேன் டா.. ஆனா ஏன் இப்படி.. நேத்ரா அவரு பொண்ணுன்னா அவரோட ஒய்ஃப் எங்க... நேத்து உன்னை மால்ல பாத்துட்டு வரும்போது ஏன் அவ என்ன அம்மான்னு கூப்பிட்டா..." என்ற குழப்பத்துடனே கேட்டாள்.
"என்னடி சொல்ற...நேத்து பாத்தியா எப்போ எங்க..."
"ம்ம்... உன்னை பாத்துட்டு வரும்போது" என்று நேற்று நடந்ததை கூறினாள். "சரி இப்போ அவரு எங்கேடா..." என்று அவனை கண்களால் துழாவினாள்.
அவளின் தேடலைக் கண்டு மனதில் சிரித்தவாறு "அவரு ஏதோ எமர்ஜென்சின்னு கால் வந்துச்சி... பாக்க போயிருக்காரு டி.." என்றான் பாதியை மறைத்து... அவனுக்கு முழுவதும் சொல்லலாம் தான்... ஆனால் ஏற்கனவே மனது சரியில்லாதவளுக்கு அவன் போன விஷயம் தெரிந்தால் இன்னும் தன்னுள் உழப்பிக் கொள்வாள்... ஒரு நண்பனாக அவள் உடல்நிலையை வைத்தும் மனதை வைத்தும் அவளிடம் பொய்க் கூறினான்..
டாக்டர் வீட்டிற்கு செல்லலாம் என்று கூறியதால் அவளை கரண் தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.
இங்கே நேத்ரா எழுந்ததிலிருந்து தன்னிடம் யாரையும் நெருங்க விடாமல் எல்லாவற்றையும் தூக்கி எறிந்தாள். ஏன் அவளின் தாயுமானவனையும் அருகில் விடாமல் கத்தினாள்... அவனோ "நேதுமா டாடி டா... பாருடா தங்கம்.. நான் உங்களோட டார்லிங் தான... பேசுடா டாடி கிட்ட..." அவன் மகளிடம் இறைஞ்சினான்.
எதற்கும் கலங்காத ஆறடி ஆண்மகன் தன் மகளின் நிலையில் கலங்கி கண்ணீர் சிந்தினான்... அவன் வாழ்நாளில் அழுதது மிகவும் குறைவே... நீண்ட நாட்களுக்குப் பிறகு அவன் கண்ணில் கண்ணீரின் தடம். எல்லாவற்றையும் தூக்கி கடாசியவள் இறுதியில் கை கால்கள் ஒரு பக்கமாக இழுத்தது.. அதைப் பார்த்ததும் விவேக்கும் குருவும் டாக்டர் என்று கதறினர்.
அவர்களின் குரலில் வந்த மருத்துவர்கள் அவர்களை வெளியே அனுப்பி விட்டு சிகிச்சையை மேற்கொண்டார்கள். இருவருக்கும் ஒன்றும் புரியவில்லை.. பள்ளியில் குழந்தைகள் விழுந்து எழுவது இயல்பான நிகழ்வு... ஆரம்பத்தில் அவன் கோபத்தில் கத்தியதும் கூட ஆசிரியர்கள் ஏன் கவனிக்கவில்லை என்று தான்.. ஆனால் இப்பொழுது மயக்கம் தெளிந்து எழுந்தவள் ஏன் இப்படி நடந்துக் கொள்ள வேண்டும். தங்களை கூட அருகில் சேர்க்காமல் ஏன் இப்படி நடந்து கொண்டாள்.. இருவருமே ஒரு நிமிடம் ஸ்தம்பித்து விட்டனர்.
"குரு ஏதோ தப்பா இருக்குடா... நம்ம குட்டிமா இப்படி நடந்துக்க மாட்டாடா..."
"ஆமாண்ணா... எனக்கும் அதுதான் தோனுது... நார்மல் ஃபீவர்னாலே நம்மள விட்டு விலக மாட்டா.. ஆனா இப்போ நம்மள நெருங்கவே விட மாட்றா.. பயமா இருக்கு அண்ணா.."
"குரு... ராக்கிய விசாரிக்க சொல்லு...யாருகிட்ட வேணாலும் பர்மிஷன் வாங்கி குடு... என் பொண்ணுக்கு என்னாச்சின்னு எனக்குத் தெரியனும்.. என் பொண்ணோட இந்த நிலைக்கு காரணமான யாரும் நிம்மதியா இருக்கக் கூடாது.." என்று சிங்ககுரலில் கர்ஜித்தான்.
"நான் இப்பவே சொல்றேன் அண்ணா..." என்று தனது மொபைலை எடுத்துக் கொண்டு வெளியில் சென்றான்.

"யூ இடியட்... நீ என்ன பண்ணி வச்சிருக்கன்னு தெரியுதா... வி கே பொண்ணு மேல டா.. இது மட்டும் வி கே க்கு தெரிஞ்சுது நீ எங்க போனாலும் விடமாட்டான் டா... ஏண்டா இப்படி பண்ண... இடியட் கொஞ்சம் கூட யோசிக்க மாட்டியா... இவ்வளவு நாளா நாம யாருகிட்டேயும் மாட்டல... ஆனா இப்போ நீ செஞ்ச வேலைக்கு நல்லா மாட்டிக்கப் போறோம்..." என்று தனக்கு எதிரிலிருந்தவனை பார்த்து கத்தி கொண்டிருந்தான் ரஞ்சித்.

தேடல் தொடரும்......


ஹாய் செல்லம்ஸ் எபி எப்படி இருக்குன்னு சொல்லுங்க டியர்ஸ்... கொஞ்சம் உங்க நிறை குறைகளையும் கமெண்ட்டையும் அள்ளித் தெளிச்சிட்டு போங்க... சைலண்ட் ரீடர்ஸ் கொஞ்சம் உங்களோட கருத்துதுகளை சொல்லிட்டு போங்க மக்களே கொஞ்சம்... உங்களோட கருத்துகள் தான் என்னை மேலும் ஊக்குவிக்கும்.. சோ அப்படியே என்னை கொஞ்சம் ஊக்குவித்துட்டு போங்கோ டியர்ஸ்..
உங்களின் மேலான விமர்சனங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் பல.... 🙏🙏🙏🙏🙏🙏💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
 

Joss uby

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
415
Nice.
 
Top