• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

என் மாண்புறு மங்கையே!- ஐ. ஆர். கரோலின்

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Joined
Jul 30, 2021
Messages
566
பரந்து விரிந்த இவ்வுலகை படைத்தது கடவுளா? அறிவியலா? என்ற சந்தேகம் பலருக்கும் இருந்தாலும் பதில் என்பது இன்றும் இல்லை. ஆனால், இப்பூமியில் ஒவ்வொரு மனிதனும் அவதரிக்கக் காரணமாக இருப்பவள் தாய் என்பவள் என்ற உண்மையை மறுக்க யாராலும் முடியாது.

தன் உயிருக்குள் அடைக்காத்து அவர் குருதியை பாலாகப் புகட்டி, உயிர் போகும் தன் பிரசவ வலியை பொருட்படுத்தாது ஒவ்வொரு குழந்தையும் இப்பூமியில் உதிக்கக் காரணமாக இருப்பவள் அன்னையைத் தவிர வேறு யார் இருக்க முடியும்? தான் ஈன்ற ஒவ்வொரு குழந்தையின் வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் பெரும் பங்கு வகிப்பது அன்னையின் அயரா உழைப்பும், பிள்ளைகளின் மீதுள்ள எல்லையில்லா அன்பு மட்டும்தான்.

குழந்தைகளுக்கு தேவை என்ன? என்பதை அறிந்து, அதை நிறைவேற்றி வைப்பது தாயைத் தவிர வேறு யாராலும் செய்திட முடியுமா? முடியாது. குழந்தைகள் முதலில் நல்ல பழக்க வழக்கங்களைத் தன் தாயிடமிருந்தே கற்றுக் கொள்கிறார்கள். குழந்தைகளுக்கு நல்வழி காட்டுவது தாயின் அன்பால் மட்டுமே சாத்தியமாகும். பிள்ளைகளின் வளர்ச்சிக்கு தாய் தந்தை இருவருக்கும் சம பங்கு இருந்தாலும் தாய் என்பவளே முதலிடம் வகிக்கிறாள்.

“தாயிற் சிறந்த கோயிலுமில்லை…” என்ற பூவை செங்குட்டுவன் அவர்களின் வைர வரிகளிலே தாயின் புனிதத்தை அறிந்து கொள்ளலாம். யாருக்கு கடன் பட்டிருக்கிறமோ இல்லையோ! தாயின் அன்பிற்குக் கடன்பட்டிருப்பதே உண்மை. ஏனெனில், அவர் பிள்ளைகளின் மீது காட்டும் அன்பை திரும்ப எந்தப் பிள்ளைகளாலும் கொடுக்க இயலாது.

“அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே, அம்மாவை வணங்காமல் உயர்வில்லையே, நேரில் நின்று பேசும் தெய்வம் பெற்ற தாயன்றி வேறொன்று ஏது” என்ற வாலியின் வைர வரிகளில் கடவுளை அழைக்காதவர்கள் யாருமில்லை அப்படிப்பட்ட கடவுளுக்கு ஈடானவள் தாய் என்ற உண்மையை உணர்ந்து கொள்ளாமல் இருக்க முடியுமா? சிறு அடிபட்டாலும் கடவுளே என்பதைவிட ‘அம்மா’ என்ற வார்த்தையே முதலில் ஒலிக்கும், இந்தக் கூற்று ஒன்றிலே தாயின் மகத்துவத்தை அறிந்து கொள்ளலாம்.

"ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்" என்பது போலத் தன் கணவனோடு சேர்ந்து தன் உழைப்பையும் அதன் பலனையும் உறவுகளின் முன்னேற்றத்திற்கு வாரி இறைத்து, மலையின் உயரத்தை தொட முக்கியக் காரணியாக இருந்தது, சொந்தங்கள் என்றும் நம்முடன் கூடவே வருவார்கள் துணையாக நிற்பார்கள் என்ற நம்பிக்கை மட்டுமல்ல… அவர்கள் மீதுள்ள பாசம் அவர்கள் முன்னேற்றத்திற்குப் பாலமாக நிற்க வைத்தது.

அன்பிற்குக் கட்டுப்பட்டு ஏணியாக நின்றவர் மூலம் மேலே சென்ற சொந்தங்கள் தன் தேவை முடிந்ததும், தன் குடும்பமே பெரிது என்று எண்ணி ஏணியைக் கீழே தள்ளிச் சென்றதை தவிர வேறொன்றும் பெரிதாகச் செய்திடவில்லை!

எஞ்சியிருந்த உறவுகளும் தங்களின் நயவஞ்சக வார்த்தைகளால் பேசிப் பேசியே மீதமிருந்த கொஞ்ச நஞ்ச சொத்துகளையும் அபகரித்துச் சென்றது மட்டுமில்லாமல், நல்வழி காட்டுகிறேன் என்று குழந்தைகளோடு நிர்முலமாக நடுத் தெருவில் நிற்க வைத்தவர்களை நினைத்து வருந்துவதைவிட, தான் பெற்ற பிள்ளைகள் ஒரு வேளை சோற்றுக்கு வழியில்லாமல் நிற்பதை பார்த்துக் கண்களில் வெள்ளமாக ஊற்றெடுக்க நிர்கதியாகத் தாலி கட்டிய துணையோடு நின்றவரை தாங்கிப் பிடித்தார்கள் அண்டை வீட்டார்கள்.

அவர்கள் எந்த ஜாதி? என்ன மதம்? மனித ஜாதி என்பதைத் தவிர வேறு எதுவும் தெரியாது. இரத்த சம்மந்தமா? அதுவும் இல்லை. இரத்த சம்மந்தங்கள் கைவிட்ட நிலையில் எந்தவித சம்மந்தமும் இல்லாதவர்கள், உனக்குத் துணையாக நாங்கள் இருக்கிறோம் என்று இரு கரம் நீட்டியவர்களிடம் கையேந்தி நிற்காமல், என் பிள்ளைகளைக் காப்பாற்ற இருக்க இடம் மட்டும் போதும். எனக்குத் தெரிந்த தையல் தொழில் செய்து பிழைத்துக் கொள்வோம் என்றவரை வியந்து நோக்கியவர்கள், உடனே அதற்குரிய ஏற்பாட்டையும் செய்துகொடுத்தனர்.

உற்றாரின் உதவியினால் தனக்குத் தெரிந்த தையல் கலையோடு விறகு, இட்லி வியாபாரம் என்று தொழில் கலை கட்டத் தொடங்கினாலும், அதில் வந்த சொற்ப பணத்தைக் கொண்டு குடும்பத்தை வழி நடத்த முடியாமல் திணறினாலும், தன் அயரா உழைப்பை தொழிலின் முன்னேற்றதிற்காகவும் குடும்பத்திற்காகவும் இரவு பகல் பாராமல் உழைத்து, தன் பிள்ளைகளின் வளர்ச்சிக்கு அசைக்க முடியா ஊன்று கோலாக நின்றார்.

தன் குழந்தைகளுக்குப் படிப்பு நேரம் போகத் தொழிலையும் உழைப்பின் மகத்துவத்தையும் சிறிது சிறிதாகப் புகட்டியது மட்டுமில்லாமல் அதன் பலனை சேமிப்பது பற்றியும் கற்றுக் கொடுத்தவர் தன் வயிறு காய்ந்தாலும் பிள்ளைகளின் வயிறு வற்றாமல் பார்த்துக் கொண்டார்.

வஞ்சகமின்றிக் கூரையைப் பிய்த்துக் கொண்டு ஊற்றும் மழை வெள்ளத்தில் பிள்ளைகளைப் பாதுக்காப்பாகப் படுக்கச் செய்துவிட்டு தான் படுக்க இடமின்றியும் ஊன் உறக்கமின்றியும் கிடைத்த இடத்தில் ஒண்டிக் கொண்டு மழை நாட்களைக் கடந்தவர் தண்ணீரில் நனைந்த பொருட்களைப் பார்த்து எத்தனையோ இழந்துவிட்டேன் இது என்ன பெரிது? என்று இலகுவாகத் தன் மனதை மாற்றிக் கொண்டு வேலையைத் துவங்கி ஓயாது ஓடினார், ஓடிக் கொண்டிருக்கிறார் இன்னும் ஓடுவார்.

பிறர் மீது எல்லையில்லா நம்பிக்கை வைக்காதே, பிறர் உன் மீது வைக்கும் நம்பிக்கையை ஒரு போதும் இழந்துவிடாதே, பிறரைச் சார்ந்து நிற்காமல் உன் சொந்த உழைப்பை மட்டுமே நம்பி வாழ். உன் தேவை போக மற்றவருக்கு உதவி செய். ஆனால், உதவி என்று வந்தவருக்கு உன்னால் முடிந்ததை மட்டும் செய். மற்றவரின் பேச்சு கேட்க இனிமையாக இருக்கும். அதனால், அதில் மயங்கிவிடாதே. ஏனெனில், அது உன்னைக் கீழே தள்ள ஒரு நிமிடம் போதும். உன்னை நம்பி வந்தவர்களை ஒரு நாளும் ஏமாற்ற நினைக்காதே, அது எந்நாளும் உன்னை நிம்மதியாக வாழவிடாது என்ற போதனை போதிக்க ஒரு நாளும் மறந்ததில்லை.

சதா உழைப்பு! உழைப்பு! என்பதை மட்டுமே தாரக மந்திரமாகக் கொண்டு தான் பெற்ற நான்கு பிள்ளைகளைச் சுயநலமாகவும் நம்பிக்கை துரோகம் செய்து விட்டுச் சென்ற உறவுகள் பொறாமையோடு பார்க்கும் அளவுக்கு அவர்கள் முன் ஒற்றுமையின் பலத்தோடு அசையா சிகரமாக விளங்கச் செய்து, நால்வருக்கும் பக்கத் துணையாக இன்றும் நிற்கிறார்.

தனக்குத் துணையாக வந்த கணவனை இழந்தும், எழுபது வருடங்களைக் கடந்திருந்தும் தையல் கலையை விடாமல் இன்றும் தன் உழைப்பினால் மட்டுமே வாழுவேன் என்று தான் பெற்ற பிள்ளைகளைச் சார்ந்து நிற்காமல் தனித்து நின்றே சாதித்துக் கொண்டிருக்கும் என்னைப் பெற்ற அன்னையே என் மாண்புறு மங்கை!​
 
Admin 02

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
320

ஆமா கரோலின்கா எல்லோரோட மாண்புறு மங்கை அம்மா மட்டும் தான்
 
Top