• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

என் மாண்புறு மங்கையே-சாலிஹா அலி

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Joined
Jul 30, 2021
Messages
566
"மங்கையராய் பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டும்" என்று பாடியுள்ளார் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை.ஆனால் மாதவம் புரிந்து பிறந்துள்ள பலரும் இந்த சமுதாயத்தில் பெரும்பாலும் சமமாகவும்,மரியாதையுடனும் நடத்தப்படுவதில்லை.ஏன் அவர்களை சக மானுடப் பிறப்பாய் கூட பெண்களை நினைப்பதில்லை.ஆனாலும் தைரியத்தையும்,நம்பிக்கையையும்,துணிச்சலையையும் ஆயுதமாகக் கொண்ட பெண்கள் இந்த மண்ணில் வியக்க வைக்கும் செயல்களை புரிந்துள்ளனர்.

அப்படி அவர்கள் தொடங்கி வைத்தது தான் இன்று பல பெண்கள் பல்வேறு துறைகளில் கால் பதிக்க உதவி புரிந்துள்ளது.அந்த வகையில் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய சுதந்திர வரலாற்றில் ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண்ணரசி,பெண்ணினத்தின் பேராண்மை,கால் முளைத்த சூரியன், வீரத்தின் மறுஉருவம் ஆனாலும் தாய்மையின் உச்சம் அறிவுக்கடல்,தன் உடலில் ஓடும் குருதியிலும்,எண்ணத்திலும்,செயலிலும் வீரம் ஒன்றே பொதிந்துக் கிடந்த

வீரப்பேரரசி, மூடநம்பிக்கைகள் மூழ்கிக் கிடந்த அக்காலத்திலேயே பெண்கள் முயன்றால் வெற்றியை தன் வசமாக்க முடியும் என உணர்த்தி செயலில் காட்டிய வீரத்தாய் வேலுநாச்சியாரைப் பற்றி ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து அவர்வழியில் நமது பிரச்சினைகளைக் கையாள கற்றுக் கொள்ள வேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

நமக்கெல்லாம் பரிச்சயமான ஜான்சிராணி சரித்திரத்துக்கு (1828)

வெகு முன்பே கிட்டத்தட்ட நூறு வருடங்களுக்கு முன்பே (1730) வீரத்தின் விளைநிலமாம் தமிழ் மண் பெற்றுத்தந்த வீர தமிழச்சிதான் வேலுநாச்சியார்.

அன்று இராமநாதபுரம் விழாக்கோலம் பூண்டிருக்கிறது.இராமலிங்க விலாசம் அரண்மனை வண்ணமிகு பூக்கோலங்களாலும்,மணமிகு மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு ஜோதிமயமாய் ஒளிர்கிறது.

இராமநாதபுரம் மன்னர் செல்லமுத்து சேதுபதிக்கும் இராணி சக்கந்தி முத்தாத்தாளுக்கும் பிறந்த ஒரே அரசபெண் வாரிசாய் மண்ணில் பிறப்பெடுத்தார் வேலுநாச்சியார்.ஆண் வாரிசு பிறக்கவில்லையே என வருந்தாமல் மன்னர் செல்லமுத்து சேதுபதி தன் மகளை ஆண் வாரிசாய் வளர்த்தார்.

"ஆத்தா" என அனைவராலும் அன்பாய் அழைக்கப்பட்ட வேலுநாச்சியார் தன் இளம் வயதிலேயே தாயை இழந்தவர்.வில்,வேல்,வாள்,களரி,

கத்திச்சண்டை என அனைத்திலும் சிறுவயதிலிருந்தே வீரம் கொண்டு பயின்றார்.யானையேற்றம்,குதிரையேற்றம் என போர்கலைகளையும் பயின்று அதில் சிறந்து விளங்கினார்.

தமிழ்,ஆங்கிலம்,தெலுங்கு,உருது,

பிரெஞ்சு எனக் கிட்டத்தட்ட 10 மொழிகளில் பண்டிதம் பெற்று விளங்கினார்.1746 ல் சிவகங்கை சமஸ்தானத்து அரசர் முத்து வடுகநாதரை மணமுடித்து சிவகங்கை சீமையில் தன் பொற்பாதங்களை பதிக்கிறார்.தன் தந்தையிடமிருந்து விருப்பப் பரிசாக குதிரை ஒன்றையும் கேட்டுப் பெற்றுக் கொள்கிறார் அந்தப் வீரப்பேரரசி.

திரும்பிய பக்கமெல்லாம் பசுமை,செல்வச்செழிப்பு,

குடிமக்களின் ஆனந்த வாழ்வு என விளங்கிய சிவகங்கை சீமையின் ஆக்கிலேயர்களின் கண் பதியாமல் இருந்தால் தான் ஆச்சரியம்.

சிவகங்கை அரசவை மீது ஆணவமும் காழ்புணர்வும் கொண்ட கவர்னர் லாட்டீ காட் முத்துவடுகநாதரிடம் வரி கேட்டு வந்தான்.அரசவையில் கால் மேல் கால் போட்டப்படி கர்வத்துடன் கவர்னர் லாட்டீ காட். எதிரே முத்துவடுகநாதர் மற்ற அமைச்சர்கள்.பக்கத்து அறையில் இவர்களை எல்லாம் கண்காணித்தபடி வேலுநாச்சியார்.

"மிஸ்டர் முத்துவடுகநாதர்,தாங்கள் நெடுநாட்களாகக் கப்பம் கட்டவில்லை.கட்டாததற்கான காரணங்களும் சொல்லவில்லை" எனச் சரளமான ஆங்கில மொழியில் குற்றப்பத்திரிக்கை வாசிக்க…

மொழிபெயர்க்கும் அமைச்சர் உடன் இல்லாததால் மொழி புரியாமல் முத்துவடுகநாதர் தத்தளிக்க, கவர்னருடன் வந்திருந்த மொழிபெயர்ப்புக்காரன் துவாஷீம் வேடிக்கைப் பார்க்க…

யாரும் சற்று எதிர்பாரா நேரத்தில் புயலென அரசவைக்குள் நுழைந்து கவர்னரைப் பார்த்து சிறிதும் அச்சமின்றி விரல்நீட்டி பேசுகிறார் வீரத்தமிழச்சி இராணி வேலுநாச்சியார் சரளமான ஆங்கில மொழியில் லாட்டீ சொன்ன சேதியை ஆங்கிலம் மட்டுமல்லாமல் தெலுங்கு,மலையாளம்,கன்னடம்,

உருது என ஐந்து மொழிகளில் பந்தாடினார்.

தொடர்ந்து அவரின் வீர வசனம் பிற்காலத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் ஜாக்சன் துரையிடம் பேசிய வீர வசனத்துக்கு ஈடான வார்த்தைகளால் எதிரொலித்தன.

வேலுநாச்சியார் சொன்ன அனல் தெறிக்கும் வார்த்தைகள் "இங்கிருக்கும் ஒவ்வொரு துரும்பும் எங்கள் உழைப்பைச் சொல்லும்.எம்நாட்டு மக்களின் உழைப்பாலும் உதிரத்தாலும் உருவானது எங்கள் நாடு.இங்கே ஓடுகின்ற நதிகளும்,நிற்கின்ற மரங்களும்,வீசுகின்ற காற்றும்,அடிக்கின்ற வெயிலும்,பெய்யும் மழையும் எங்கள் மண்ணின் பெருமையைச் சொல்லும்....

வீரம் எங்களுக்கு விளையாட்டு… விவேகம் எங்களுக்கு தாலாட்டு… அன்புக்கு எங்கள் தலை குனியும்…

ஆணவம் கொண்டோர் தலை எங்கள் மண்ணில் உருளும்… எங்கிருந்தோ வந்து எங்கள் பூமியில் பிழைக்க வந்த உங்களுக்கு எங்களிடம் வரிகேட்க உரிமையும் இல்லை… அதில் ஒழுக்கமும் இல்லை… அதனால் எங்கள் மன்னர் சார்பிலும் எங்கள் மக்கள் சார்பிலும் சொல்கிறேன்,வரி என்று கேட்டு வந்தது இதுவே இறுதியாக இருக்கட்டும் இனிமேல் இது தொடர்ந்து வந்தால் வரி கேட்டு வருபவனுக்கு வாயே இருக்காது!இது எச்சரிக்கை மட்டுமல்ல எங்கள் இறுதி அறிவிப்பும் இது தான்" என்று ஆங்கிலத்தில் வீரமாய் முழங்கினார்.

மக்களை குறிப்பாக பெண்களை தன் சொற்களாலும் செயல்களாலும் வெகுவாய் ஈர்த்தவர் இந்த மாதரசி.

அன்று சிவகங்கை அரண்மனை விழாக்கோலம் பூண்டிருந்தது. இராமலிங்க விலாஸ அரண்மனை வேலு நாச்சியாரைப் பெற்றெடுத்த போதிருந்த விழாக்கோலத்தை விட பல மடங்கு மகிழ்ச்சியும் ஆனந்தமும் சிவகங்கை மண்ணில் காரணம் வேலுநாச்சியார் பெற்றெடுத்த செல்ல மகள் வெள்ளைச்சி நாச்சியார்.

பெண் மகவு,நிறைவான வாழ்க்கை, ஆன்மிக பணிகள்,மக்களுக்கான செயல்பாடுகள் என அரசி வேலுநாச்சியார் சுழன்றுக் கொண்டிருந்த நேரத்தில் முத்துவடுகநாதரின் இரண்டாம் மனைவி கெளரி நாச்சியார் வருகை.

சிக்கலான நேரத்தில் கூட அழகான முறையில் கையாண்டார் வேலுநாச்சியார்.முத்துவடுகநாதருக்கும் அந்தப் பெண்ணிற்கும் தானே முன் நின்று திருமணம் நடத்தினார்.

ஆன்மீகமும்,மக்களுமாக நேரத்தை நிறைத்திருக்கும் வேளையில் கப்பம் கட்டாமல் இருந்த சிவகங்கையில் சீமையை தாக்குவதற்கு காத்திருந்த வெள்ளையர்கள் கூட்டம் சிறந்த சிவபக்தரான முத்துவடுகநாதர் காளையர் கோயில் இறைவனை சேவிக்க வந்த பொழுது சமரசம் பேசுவதாக வந்து அரசனையும்,கெளரி நாச்சியாரையும் கொல்கின்றனர்.

உடன்கட்டை ஏறும் கலாச்சாரம் இருந்த அக்காலக்கட்டத்தில் மகள் வெள்ளச்சியை ஒரு கரத்தில் பற்றிக் கொண்டு காளையர் கோவிலில் சிதறிக்கிடந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உடல்களுக்கு நடுவே தன் கணவன் உடல் மேல் சபதம் கொள்கிறார் எம்பேரரசி வேலுநாச்சியார்.

தன்னை கொல்லத்துடிக்கும் ஆங்கிலேயர்களை எதிர்ப்பது விவேகமாகாது என்று எண்ணியவர் தனது நம்பிக்கைக்குரியவர்களான பெரிய மருது சின்ன மருது சகோதர்கள்,சிலம்பு வாத்தியார்,அமைச்சர் தண்டவராயன் ஆகியோரிடம் பொறுப்புகளை தந்து விட்டு தன் கணவரின் இறுதிகாரியங்களை முடித்து விட்டு தன் குதிரையின் மீது ஏறி கானகம் நோக்கி புறப்பட்டார்.

ஆனாலும் அவரை விடாது குளம்பிப் படைகள் துரத்தி வந்தன.அவர்களின் கண்களில் சிக்காமல் சுமார் எட்டு ஆண்டுகள் காலம் மறைந்து வாழ்ந்து ஐந்தாயிரம் பெண்களை ஒன்றுதிரட்டி அவர்களுக்கு "உடையாள் படை" என்று பெயரிட்டு அவர்களுக்கு போர் பயிற்சிகள் கற்றுக் கொடுப்பது,போர்படை தளங்களாக கோட்டைகளை அமைப்பது,பதுகுழி,ஆயுதக்கிடங்கு அமைப்பது,போர் வியூகங்கள்,காற்றை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் களரி வித்தைகளை என எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்து படையை உருவாக்கினார்.

அதோடு திண்டுக்கல் கோட்டை அரியாசனத்தில் இருந்த ஹைதர் அலியும் வெள்ளைக்காரர்களை எதிர்த்ததால் அவரிடம் சென்று நட்புப் பாராட்டி உதவிக் கேட்டுச் சென்ற வேலுநாச்சியார்,அரசவையில் ஹைதர் அலிக்கு நிகராக உருது மொழியில் பேசிய பொழுது ஹைதர் அலிக்கு தன் மகளைப் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்பட அவரும் போரில் உதவுதாகச் சொல்லி எல்லா உதவிகளையும் செய்தார்.

1780 ல் போர் அறிவிப்புக் கொடுத்து பல போர் வியூகங்களை அமைத்து விஜயதசமி அன்று அதில் வெற்றியும் கண்டார்.அந்த வெற்றியைப் பெறும் பொழுது வேலுநாச்சியாருக்கு வயது ஐம்பது.

ஒரு பெண் நினைத்தால் எதுவும் சாத்தியம் எதிலும் வெற்றி நிச்சயம்.வயது,சூழ்நிலை,சந்தர்ப்பம் என நமக்குப் பாதகமாக இருக்கும் காரணிகளை யாவும் சாதகமாக்கி நினைத்த காரியத்தை சாதிக்கலாம் என்பதை நம்மைப் போன்ற பெண்களுக்கு அன்றே கற்றுத் தந்து சென்றிருக்கிறார் நம் அன்னை.

நம்மை விட ஆயிரம் சோதனைகளைச் சந்தித்து தளர்ந்து விடாமல் தனது சபதத்தை நிறைவேற்றிய வீர மங்கை வேலுநாச்சியாரைப் பற்றி தெரிந்து கொண்டு அவரைப் போலவே நாமும் கையாள்வோம் வெற்று பெறுவோம்.

நன்றி!

சாலிஹா அலி

Admin 02

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
320

வாழ்த்துக்கள் சாலிஹா
 
Top