சரணடைந்தேன் – 8
நாயகன் மேலிருந்து நூலினை ஆட்டுகின்றான்
நாமெல்லாம் பொம்மையென்று நாடகம் காட்டுகின்றான்
காவியம் போலொரு காதலை தீட்டுவான்
காரணம் ஏதுமின்றி காட்சியை மாற்றுவான்
ரயில் சிநேகமா
புயலடித்த மேகமா
கலைந்து வந்து கூடும் பின் ஓடும்
நாம் கூத்தாடும் கூட்டமே
எல்லோரும் சொல்லும் பாட்டு
சொல்வேனே உன்னை பார்த்து
மறுவீடு விருந்தெல்லாம் முடிந்து இரண்டு நாட்கள் நான்காக முடிய, ஆலங்குடி வந்து சேர்ந்திருந்தனர் புது மண தம்பதிகள் இருவரும்…
கோவைக்குப் போகலாம் என வீம்பு செய்து கொண்டிருந்த வனிதாவை யாரும் ஒரு பொருட்டாகக் கூட நினைக்கவில்லை… வனிதா ராமசாமியிடம் கூற அவரும் “மங்கை அங்கே வந்த பிறகு நீ வா…” என்று சொல்லி விட, மிகுந்த கோபத்தில் இருந்தார்… மேலும் அவர்கள் மங்கையின் பழைய வீட்டிற்கேச் சென்றது வேறு அதிர்ச்சியைக் கொடுத்தது… வெற்றியை அவள் ஒதுக்க, இப்போது அனைவரும் சேர்ந்து தன்னை ஒதுக்குகிறார்களோ என்று பயம் வந்து விட்டது வனிதாவிற்கு…
எல்லோரிடமும் பேசினாலும், வீட்டின் மருமகளாக யாரையும் வருத்தாமல் அனைத்து வேலைகளையும் செய்தாலும், தான் ஏனோத் தனிமைப்படுத்தபட்டது போல் உணர்ந்தார் வனிதா… காரணம் பாலன் அவரிடம் பேசுவதை முற்றிலுமாக நிறுத்தியிருந்தார்…
அதோடு தன் செல்ல மகன் எங்கே போனானோ என்ன ஆனானோ…? என்ற கவலை வேறு… தன்னிடம் சொல்லி அதன் பிறகு செய்யும் மகன் இதை ஏன் சொல்லவில்லை… அவனுக்கு சொல்ல முடியாத அளவில் வேறு ஏதேனும் பிரச்சனையோ, அதனால தான் இப்படி ஒரு முடிவு எடுத்து விட்டானோ, கடவுளே… எங்கிருந்தாலும், எப்படியிருந்தாலும் அவனை என்னிடம் கொண்டு வந்து சேர்த்து விடு, என விடாது பிரார்த்திக் கொண்டிருந்தார்…
பாலனும் முதலில் புகழின் மேல் இருந்தக் கோபத்தில் கண்டு கொள்ளாமல் விட்டாலும், தாயின் மூலம் அனைத்தையும் தெரிந்த பிறகு, அவருக்கும் மனது சங்கடமாகிவிட்டது… தனக்கு தெரிந்த போலீஸ் அதிகாரிகள் மூலம் புகழைத் தேடும் வேலையை ஆரம்பித்தார்…
வெற்றியும் ஒரு டிடெக்டிவ் மூலம் அதே வேலையை செய்ய சொல்லியிருந்தான்… வனிதாவைக் கூட சமாதானம் செய்து விடலாம் போல, மங்கையை சமாளிக்க முடியவில்லை வெற்றியால்… புகழிடம் பேச மட்டுமாவது வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்க தொடங்கி விட்டாள்…
அன்றைய நாள் மாலையில் பாலனும் நாச்சியும் தோட்டத்து கணக்கு வழக்குகளைப் பற்றி பேசிக் கொண்டிருக்க, அப்போது தான் வெளியே இருந்து வந்தான் வெற்றி… அவனைப் பார்த்ததும் தனக்கு அருகில் இடமிட்டு அமர்ந்த பாலன், அவனை அமரும் படி செய்கை செய்து, “ஏன் வெற்றி தேங்காய் லோடு ஏத்தியாச்சா…? நம்ம அன்னூர் மண்டிக்கு எத்தன லோடு அனுப்பியிருக்க, அங்க மேனேஜர் கிட்ட சொல்லிட்டியா…? நாளைக்கு நாங்க கிளம்புறோம் டா… இங்க பார்த்துக்குவதானே… ஆபீஸ் வேலை நெறைய பெண்டிங்க் இருக்கு பார்க்கணும்…” என்றத் தகப்பனைப் பார்த்து சிரித்தவன்,
“அதெல்லாம் ஆச்சு, நீங்க கிளம்புங்க, இங்க நான் டிடெக்டிவ் ஏஜென்சியில் சொல்லி வச்சு இருக்கேன் புகழைத் தேடச்சொல்லி. தகவல் கிடைச்சதும் நான் உங்களுக்கு இன்ஃபார்ம் பன்றேன்… அவங்களைப் பத்திரமா பார்த்துக்கோங்க… அவங்ககிட்ட கோபத்தைக் காட்டாம பேசுங்க… இப்போ நீங்க பேசாம இருந்து எதைச் சாதிக்கப் போறீங்க… இதையெல்லாம் நீங்க முன்னாடியே செஞ்சுருக்கனும்…” என்றதும் தந்தையின் முகம் சுருங்க,
அதைக் கவனித்தவன் “சரி நான் எதுவும் பேசல, நீங்க உங்களுக்கு ஒரு காரணம் வச்சுருக்கலாம்… எனக்கு அது வேண்டாம்… “நான் பேச வந்தது வேற, வனிக்கு PG எங்க அப்ளை பண்ணலாம்னு எதுவும் ஐடியா வச்சுருக்கீங்களா, புகழ் உங்ககிட்ட சொல்லிருப்பான் தான..” எனவும்,
அம்மா என்ற வார்த்தை வெற்றியின் வாயில் இருந்து வரவே இல்லை. அதைக் கவனித்தார் பாலன். மகனின் பேச்சில் இருந்த ஒதுக்கம் புரியாதவர் அல்ல அவர், அதோடு அவன் கூறியது போல, இதை முன்னமே செய்திருக்க வேண்டும், காலம் கடந்து அதைப் பற்றி பேசியோ வருந்தியோ பிரயோஜனம் இல்லை என முழுதாக உணர்ந்தவர்… மற்றதைப் பேசாமல் மங்கையைப் பற்றி மட்டும் பேசினார்…
“சென்னை இல்ல பெங்களூர் தான் சொன்னான்… வேற எங்கேன்னாலும் போக மாட்டேன்னு மங்கை அடம் பன்றதாகவும் சொன்னான்…” என,
“ம்ம்… ரொம்ப தூரமும் வேண்டாம் தான், ஆனா வேற எங்கையும் கிடைக்காத என்ன…?” என்றான் யோசனையோடு.
“கிடைக்காம என்ன…? மனிபால் காலேஜ்ல கிடைச்சது மெரிட் சீட், இவ வேண்டவே வேண்டாம்னு சொல்றா…? நமக்கு தெரிஞ்சவர் தான் இப்போ அங்க டீனாகவும் இருக்கார்… மங்கைக்கு ஓகேன்னா நாம மேற்கொண்டு பேசலாம்…” என்றார் பாலன்…
“நீங்க பேசுங்க, நான் வனிக்கிட்ட பேசுறேன் அங்கையே சேர்த்துடலாம்… அப்புறம் குமரனை உங்க கூட அழைச்சிட்டு போங்க, அவனுக்கு பாரின் ஆஃப்ரஸ் நெறைய வருது. ஆனா அத்தை வேண்டாம்னு சொல்றாங்க… இங்க இருந்தா ரெண்டு பேருக்கும் முட்டிக்கிட்டே இருக்கும்… புகழ் வர வரைக்கும் அவன் அங்கே இருக்கட்டும்… உங்களுக்கும் உதவியா இருக்கும்… போகும் போது கூப்பிட்டுப் போயிடுங்க… அத்தைக் கிட்ட நான் சொல்றேன்…” எனத் தந்தையிடம் பேசியவன்…
ஆச்சியிடம் திரும்பி, “ஆச்சி நாளைக்கு ரெண்டு அத்தைங்க வீட்டுக்கும் போயிட்டு வந்துடுறோம்… விருந்து எல்லாம் கையோட முடிச்சிட்டா மங்கை காலேஜ் அனுப்ப வசதியா இருக்கும்… அவ போயிட்டா லீவு போட ரொம்பக் கஷ்டம், நீங்க என்ன சொல்றீங்க…” என்றான்…
அவரும் “எல்லாம் சரி தான். ஆனா இப்பவே காலேஜ் போகனும்னு என்ன அவரசம், ஒரு ரெண்டு மாசம் போகட்டும் கண்ணா. கல்யாணம் முடிஞ்சக் கையோட அனுப்பினா புள்ள ஏங்கிப் போயிடுமே ராசா…” என,
“ஆச்சி உங்களுக்கு அவளைத் தெரியல, லீவு போடச் சொன்னா போட்டுகிட்டே இருப்பா, படிக்கவே வேண்டாம்னு சொல்லுங்க அவ்வளவு சந்தோஷப்படுவா, எனக்குத் தெரியாம நீங்களும் அவக்கிட்ட எதுவும் உளறி வைக்காதீங்க… சரியான சோம்பேறி…” எனச் சிரிக்க…
கூடச் சேர்ந்து சிரித்த பாலனும், “அம்மா அவன் சொல்றது சரி தான்… மங்கையை இப்படியே விட்டோம்… ஜாலியா சுத்திட்டு இருப்பா… அங்கையே புகழ் படி படின்னு ரிங் மாஸ்டர் வேலை தான் பார்ப்பான்…” என்றவர்,
மகனிடம் திரும்பி, “அப்போ நீங்க விருந்துக்குப் போயிட்டு வந்ததும், நாங்க கிளம்புறோம்… இங்கே அம்மா தனியா இருப்பாங்க… மொழிக்கும் இப்ப லீவு தான பிரச்சனையில்லை, ஆபீஸ் வெர்க் கொஞ்சம் இருக்கு, உனக்கு மெயில் பன்றேன், அதை செக் செய்திட்டு அமௌன்ட் டேலி ஆகுதா பாரு, அப்படியே மேனேஜருக்கு பார்வேர்ட் பண்ணிடு, அப்படியே வொர்கர்ஸ் சாலரியை போட்டுடச் சொல்லு…”
“நான் தாத்தாவை செக் சைன் பண்ணி ஆபிஸ்ல கொடுக்கச் சொல்லிடுறேன்… அப்புறம் மங்கையோட சர்டிபிகேட்ஸ் எல்லாம் எனக்கு மெயில் பண்ண சொல்லு நான் அந்த டீன் கிட்ட பேசுறேன்…” என்றவர் எழுந்து உள்ளே செல்ல,
“ஆச்சி என் பதிலை கேட்காமலே உங்க மகன் வேலையைச் சொல்லிட்டு போறாரு, நான் செய்வேனு நம்பிக்கை ரொம்ப போல… நான் ஏன் செய்யனும், அதெல்லாம் மாட்டேன்…” எனச் சிரிக்க,
“போடா… போக்கிரி உன்னை எனக்குத் தெரியாதா…? அவன் சொல்றதை செய், விளையாடாதே… குமரன் இங்க நம்மக் கூட இருக்கட்டுமே வெற்றி… ஏன் அப்பாக் கூட அனுப்புற,” என்றார் யோசனையோடு,
“அங்க வேலை நெறைய ஆச்சி, புகழும் இல்லை இவருக்கும் கஷ்டம். குமரனும் சும்மா தானே இருக்கான்… போய் வேலைக் கத்துக்கட்டும், பின்னாடி கண்டிப்பா உதவும்… இதை விடுங்க, அத்தைக்கிட்ட எதையும் கேட்காதீங்க, அவன் போறது போறது தான்…” என்று முடிவாகச் சொன்னவன்…
“ஏன் ஆச்சி, நான் வந்து எவ்வளவு நேரம் ஆகுது, இன்னும் எட்டிக்கூட பார்க்கல என்னைக் கட்டிகிட்டவ, கொஞ்சம் கூட ஒரு பொறுப்பே இல்லாதவளை, வீம்பு பண்ணி மிரட்டி எனக்கு கட்டி வச்சுருக்க, பேச்சு சத்தம் கேட்டுக்கூட வந்து எட்டிப் பார்த்தாளா பாரு…” எனச் சிரித்தவனிடம்,
பதிலுக்குச் சிரித்தவர்… “வீட்டுல ஒருத்தர் பொறுப்பா இருந்தா போதும் கண்ணா… நீ மட்டும் உன் பொறுப்பை வச்சு பருப்பு வடை சுடு, அவ அவ பாட்டுக்கு இருக்கட்டும் எந்தக் கவலையுமில்லாமல்..” என்றவர்,
“உன் பொண்டாட்டியும் உன் தங்கச்சியும் கோவிலுக்குப் போயிருக்காங்க, வர நேரம் தான்…” எனவும்,
“அதானேப் பார்த்தேன்… என் சத்தம் கேட்டதும் துள்ளிக்குதிச்சு ஓடி வருவாளே, ஆளையேக் காணோமேனு, கூட யார் போயிருக்கா, தனியாவா போயிருக்காங்க…” என்றான் கண்களில் சிரிப்பைத் தேக்கி,
“இல்ல… இல்ல… உன் அம்மா போயிருக்கா, இன்னைக்கு பௌர்ணமி, பூஜைக்கு சொல்லிருந்தேன், அது தான் போயிட்டு வர சொன்னேன்…” என்றார் அவரும் சிரிப்போடு.
வனிதாவும் உடன் போயிருக்கிறார் என்றதும், மனைவி அன்றுக் கோவிலில் வைத்துப் பேசியது எல்லாம் ஞாபகம் வர, அதுவரை இருந்த இளக்கம் மாறி, இறுக்கம் வந்து ஒட்டிக் கொள்ள, அப்படியே அமைதியாகி விட்டான் மங்கையின் மணாளன்…
பேரனின் அமைதியைப் பார்த்து நாச்சியாருக்கும் வருத்தம் தான். ஆனால் இனி எல்லாம் சரியாகும் என்று அவருக்குத் தெரிந்தது… அதனால் மேலும் அதைப் பற்றி பேசாமல், வேறு பேசினார்… அப்போது கோவிலுக்குப் போன மூவரும் உள்ளே வர, மங்கையின் முகம் மிகவும் வாடி இருந்தது…
தங்கையின் முகத்தில் கடுகு வெடித்துக் கொண்டிருந்தது… ஆனால் இதற்கும், தனக்கும் சம்பந்தமே இல்லாது போல வனிதாவின் முகம் நிர்மலமாக இருந்தது… “என்ன ஆச்சு…”? என அவன் யோசிக்கும் முன்னே, மொழி வந்து அண்ணனிடம் பொரிந்துக் கொண்டிருந்தாள்…
“சோறு முக்கியம்… சோறு முக்கியம்னு எல்லாரும் சொல்றது சரி தான்… அதுக்காக இப்படியா…? எங்க இருக்கோம், எதுக்கு வந்துருக்கோம்னு கூடத் தெரியாம போய் பிராசதத்துக்கு கியூவுல நிற்குறது…. நானும் சோறு முக்கியம்னு சொல்லிட்டுத் திரியிற ஆளுதான், ஆனா இவங்களை மாதிரி இல்லை…”
“கோவில்ல அர்ச்சனை செய்ய ஆளைத் தேடுறோம் காணோம்… தேடிப் பார்த்தா புளியோதரை கியூவுல நின்னுட்டு இருங்காங்க மேடம். அப்புறம் என்ன..? அங்க நடக்க வேண்டிய அர்ச்சனை இங்க நடந்துச்சு…” என மங்கையைக் காட்டி கத்த,
அவளோ… ‘இதுக்கெல்லாம் யாராவது திட்டுவாங்களா, நானெல்லாம் கோவிலுக்குப் போறதே பிராசதம் வாங்க தான்… இதுங்க என்னமோ பில்டப் கொடுக்குதுங்க…’ மனதுக்குள் சலித்த படி, வெளியே பாவம் போல் நிற்க,
வெற்றியோ, தங்கை சொன்னதும், மனைவியின் முகத்தில் தெரிந்த பாவத்தில் வெடித்துச் சிரித்தான்… என்ன முயன்றும் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துக் கொண்டே இருக்க, அவளோ கண்ணை உருட்டி மிரட்ட, சிரிப்பு நிற்காமல் தொடர, பூஜைக் கூடையில் இருந்த வாழைப்பழத்தை எடுத்து அவன் வாயில் தினித்து விட்டு ஓடிவிட்டாள்…
இரவு உணவின் போது அவர்கள் பேசியதை பாலன் பொதுவாகக் கூற, அது தனக்குத் தான் என்றுத் தெரியாதவரா வனிதா, பதிலேதும் சொல்லவில்லை, கேட்டுக் கொண்டார். மொழி தான் நானும் கூட வருவேன் என்று அடம் பிடித்து சம்மதமும் வாங்கி விட்டாள்…
தந்தை அனுப்பிய மெயில்களை செக் செய்து கொண்டு, அதற்கான வேலையில் இருந்தவனைப் பார்த்து, “மாமா மாமா…” என ஏலம் விட்டாள் அவளின் மனைவி…
“வனி வேலை இருக்கு, முடிச்சிட்டு வர்ரேன்… நாளைக்கு எடுத்துட்டு போக வேண்டியதை பேக் செய்து வச்சுடு…” என கணிணித் திரையை விட்டு அகலாமல் பேச,
‘உம்மென்ற முகத்துடன்’ அவன் சொன்னதையெல்லாம் எடுத்து வைத்தவள். மீண்டும் அவனுக்கு எதிரே வந்து அமர, அரவம் உணர்ந்தவன், “நீ படு வனி… முடிச்சிட்டு வந்துடுறேன்…” எனவும்,
“ம்ப்ச் என்ற சலிப்புடன், பெட்டில் தொப்பென விழுந்தவள் இங்குமங்கும் உருண்டு கொண்டே இருக்க, இதற்கிடையில், “ப்ச்…ப்ச்..” என்ற சலிப்பு வேறு, உடன் படுக்காமல் தூங்க மாட்டள் என்று புரிய கணிணியயை மூடி வைத்தவன், எழுந்து அவளிடம் வந்தான்…
“என்ன வனி இது… சின்ன பிள்ளைங்க மாதிரி, வேலை இருக்குன்னுத் தானே சொன்னேன்… அதுக்கு ஏன் இவ்வளவு பிடிவாதம்…” என்றான் சற்றே சலிப்பேறியக் குரலில்.
“நான் உங்களை வாங்கன்னு எப்போ சொன்னேன், போய் உங்க வேலையைப் பாருங்க, நான் தூங்கறேன்… தூங்கின பிறகு வந்து எழுப்பக் கூடாது சொல்லிட்டேன்…” என முறுக்கிய படி திரும்பிக் கொள்ள,
“ம்ச் என்னடி பிரச்சனை உனக்கு, நான் தான் வர்ரேன்னு சொல்றேன் தான கொஞ்ச நேரம் வெயிட் பண்ண முடியாதா…” என அவனும் கடுப்படிக்க,
அதில் பட்டென எழுந்தமர்ந்தவள், அவனை முறைத்துப் பார்க்க, “என்ன..”? எதுக்கு இப்போ லவ்வாங்கிள் சைட்…” என மேலும் வெறுப்பேற்ற,
“மாமா பீ சீரியஸ்… எனக்கும் கோபம் வரும் பார்த்துக்கோங்க…” என்றாள் நுணி மூக்கு சிவக்க,
“நானும் உன் கோபத்தைப் பார்த்ததே இல்ல, வரட்டும் அது எப்படி இருக்குன்னு நானும் பார்க்குறேன்…” என மேலும் கிண்டல் செய்ய, தலையனையைக் கொண்டு மொத்தியெடுக்க, அதில் அவன் மேலேயே விழுந்தவளைப் பிடித்துக் கொண்டவன்,
“மாமாவுக்கு மசாஜ் பண்ண உனக்கு ஆசையா இருந்தா எங்கிட்ட சொல்ல வேண்டியது தானே, எதுக்கு இப்படி சிரமப்படுற…” எனவும் முழித்தவள், பின் அவள் அடித்தது தான் மசாஜ் செய்தது போல இருக்கிறது எனக் கிண்டல் செய்கிறான் என்றுப் புரிய,
“இதெல்லாம் ரொம்ப ஓவர், போங்க போங்க…” என்று விட்டு முகத்தைத் தூக்கி வைத்து விட்டு, படுக்கையில் சுருண்டு விட, மனைவியின் செய்கையில் சிரிப்பில் குளித்தவன், பின் லைட்டை அணைத்து, அவளையும் அனைத்து கெஞ்சி, கொஞ்சி சமாதனக் கொடியை பறக்க விட்டு, மெல்ல மெல்ல தன் ஆளுகைக்குள் கொண்டு வந்தவன் கூடலின் முடிவில், “மாமா… புகழ் மாமா பத்தி எதுவும் தெரிந்ததா…?” என்றாள் அந்த நாளின் முப்பதாவது முறையாக..
“அப்படி என்ன நியூஸ் வந்தாலும் உன் கிட்ட தான் முதல்ல சொல்லுவேன்னு சொல்லிருக்கேன், மறுபடியும் அதே டாப்பிக்கை ஆரம்பிக்காத வனி, தூங்கு, நாளைக்கு சீக்கிரம் கிளம்பனும்…” என அழுத்தமாய் பேச. கப்பென்று வாய் மூடிக் கொண்டாள் மங்கை…
இந்த ஒரு வாரத்தில் கணவனைப் பற்றி ஓரளவுக்குப் புரிந்து வைத்திருந்தாள் மங்கை… இப்படி அழுத்தமாகப் பேசினால் அடுத்து அவள் பேச ஒன்னுமில்லை என்று அர்த்தம்… எவ்வளவு சிரித்து சிரித்துப் பேசுகிறானோ, கொஞ்சுகிறானோ, அதே அளவுக்கு அழுத்தமாகவும் இறுக்கமாகவும் இருப்பான்… அதை மீறி அவளால் பேச முடிந்ததில்லை முயற்சித்ததும் இல்லை…
எப்படியும் புகழைக் கண்டுப்பிடித்து விடுவான் என்ற நம்பிக்கை பெருமளவு இருந்தது தான். ஆனாலும், “அவன் தனக்காகத் தானே போய்விட்டான்…” என்ற குற்ற உணர்ச்சி தான் மங்கையை வாட்டி வதைத்தது… அது கொடுத்த வருத்தம் தான், புகழைப் பற்றியும் கேட்க வைத்தது…
மனைவியின் வருத்தம் வெற்றிக்கும் புரியத்தான் செய்தது… அவளை விட அவனுக்குத் தான் வருத்தம் அதிகமே… ஒன்றாகப் பிறந்தவர்கள் தான், ஆனால் ஒன்றாக வளரவில்லை இருப்பினும் இருவருக்குள்ளும் இருக்கும் அன்பும் அக்கறையும் மற்றவர்கள் அறியாதது… அவர்கள் மட்டுமே அறிந்தது…
புகழ் தனக்காக விட்டுக் கொடுத்தது, தாயிடம் மல்லுக்கு நின்றது என அவன் சொல்லா விட்டாலும், தங்கையின் மூலம் அவனுக்குத் தெரியத்தான் செய்யும்… மனம் மகிழவும் செய்யும்… ஆனால் வெளியில் காட்டியதில்லை…
இப்போது புகழ் சென்றது மிகவும் மன வருத்தத்தைக் கொடுக்க, அதிலும் அவனைத் தொடர்பு கொள்ள முடியாதது தன் கையாளாகதத் தனத்தையும் காட்ட, மனதளவில் மிகவும் உடைந்து போயிருந்தான். தன் வாழ்க்கையில் பிடிப்பேற்பட காரணமாக இருந்தவன், எப்படியாகினும் அவன் மீண்டு வந்துவிட வேண்டும் என்பதே வெற்றியின் பிரார்த்தனையும், எண்ணமுமாக இருந்தது.