• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
எபிலாக்

நான்கு வருடங்களுக்கு பிறகு!!!

“மது எனக்கு ஒரு டவுட்!” என வந்தான் ராஜ்.

“ஆரம்பிச்சிட்டியா?” – மது

“ப்ச்! நான் உன் புருஷன் தானே?”

“டேய் உனக்கு வேற வேலையே இல்லையா? டெய்லியும் இதே கேள்வியா கேட்டுட்டு இருக்குற?”

“அப்படி தான் கேட்பேன் பதில் சொல்லு”

“ஆமா ஆமா! என்னோட புருஷன் தான்.. எனக்கு மட்டுமான புருஷன் தான்.. போதுமா?”

“ம்ம் அப்ப ஏன் என்னை விட்டுட்டு இங்கே வந்து இருக்குற.. என்னை பார்த்தால் பாவமா இல்லையா?”

“யோவ்! எதானா சொல்லிட போறேன்.. பொண்ணுக்கு இன்னும் ரெண்டு வயசு கூட ஆகல.. அதுக்குள்ள அடுத்த ஒன்னு.. இதுல ஏன் அப்பா வீட்டுக்கு வந்தன்னு கேள்வி வேற!”

“ப்ச்! நீ வா.. இங்கே தான் இருக்கணும்னு எல்லாம் இல்ல.. நான் அம்மாகிட்ட பேசிக்குறேன்”

“லூசா டா நீ? ஒழுங்கா ஓடி போய்டு.. நானே செம்ம கோபத்துல இருக்கேன்” என்று சொல்ல பாவம் போல நின்றான் ராஜ்.

“ப்ரியா எங்கே?” மது கேட்க,

“அவளை ஆனந்த் வெளில கூட்டிட்டு போய்ட்டான்”

“சரி நான் ரெண்டு நாள் இருந்துட்டு வர்றேன்”

“மது!

“ன்னா?”

“உங்க அப்பா மிலிட்டரிய பார்த்தாலே இன்னும் எனக்கு உதறுது.. இன்னும் ரெண்டு நாள் நான் இங்கே வரணுமா?”

“கழுதை வயசாச்சு.. ஒரு பொண்ணுக்கு அப்பா.. ஆனா என் அப்பாக்கு பயப்படுற.. நல்ல மனுஷன் டா நீ! நாளைக்கே வரேன் போதுமா.. மரியாதையா போய்டு.. ஏதாச்சும் சொல்லிட்டு டெய்லி வந்துட்டே இருக்க வேண்டியது..”

“சரி சரி ப்ரியா உன்னை பார்க்கணும் சொன்னா.. ஈவினிங் கூட்டிட்டு வர்றேன்..”

“திருந்தவே மாட்ட டா பொறுக்கி”

“சரி சரி அம்மாவையும் சேர்த்து கூட்டிட்டு வர்றேன்”

“போய் தொலை” என்றவள் முகத்தில் புன்னகையே!

திருமணம் ஆன முதல் வருடத்தில் ப்ரியா என்ற அழகு தேவதைக்கு தகப்பன் ஆனான் ராஜ்.

இப்போது ஏழு மாத கர்ப்பமாக இருக்கிறாள் மது. அந்த கோபத்தில் அடிக்கடி ராஜிடம் கோபம் கொள்வது வழக்கம் தான்.. ராஜ் சிறிதும் அதை சட்டை செய்ய மாட்டான்.

இவர்களுக்குள் இருக்கும் புரிதல் இது. அவள் அப்படித்தான் என அவனும் அவன் அப்படித்தான் என அவளும் புரிந்து வைத்துள்ள ஜீவன்கள்.

ஆனந்த் அபிக்கு ஒரு பையன் தீரன். ப்ரியா தீரன் இருவருக்கும் ஒரே வயது தான்.. தீரன் ப்ரியாவிற்கு சில நாள் மூத்தவன்.

அபி ஆனந்த்தோடு ஆபீஸ் செல்கிறாள். அபியை ஆனந்த் அவ்வளவு மாற்றி இருக்கிறான்.

“அபி! எனக்கு ஒரு காபி” – ஆனந்த்

“இதோ வரேன்ங்க” என்றவள் தீரனுக்கு பாலை கேட்ச் போட்டுவிட்டு ஓடினாள்.

“சொல்லுங்க”

“பவானி அத்தை கூப்பிட்டாங்க.. உன் போன் எங்கே?”

“பேக்ல இருக்குங்க.. நான் பேசிக்குறேன்.. ப்ரியா தீரன் தனியா இருக்காங்க போய் பாருங்க” என ஆனந்த்தை அனுப்பிவிட்டு பவானிக்கு அழைத்தாள்.

“சொல்லுங்க பவானிம்மா!”

“சும்மா தான் டா பண்ணினேன்.. நீங்க இல்லாமல் வீடே போராடிக்குது.. பசங்க என்ன பன்றாங்க?”

“அம்மா! நாங்க காலையிலே தானே கிளம்பி வந்தோம்.. இன்னும் மூணு மணி நேரத்துல வீட்டுக்கு வந்திட போறோம் அதுக்குள்ள தேடுறிங்களே”

“ஆமா! பின்ன.. னே எங்கயாச்சும் போனா தானே? பவானிம்மா பவானிம்மானு வீட்டுக்குள்ளே இருந்துட்டு நீங்க வெளில போனாளே வீடு எதுவும் இல்லாத மாதிரி ஆயிடுது”

இப்படி தொடர்ந்தது பவானி அபியின் பேச்சுக்கள்.

அபி மாசமாய் இருந்தபோது தாய் வீட்டிற்கு என்று செல்ல முடியாத நிலை. அவளை வருத்தப்படாமல் தாயாய் பார்த்துக் கொண்டார் பவானி. கனகாவின் விருப்பமும் கூட அது தானே.

இப்படி கூடவே இருந்து பார்த்து பார்த்து இவளை அதிகமாய் தேட ஆரம்பித்து விட்டார் பவானி.. போதாதற்கு இரண்டு பேரப் பிள்ளைகளும் பவானி செல்லம் தான்.

ஆனந்த் அபி இருவரும் நீண்ட நாட்களுக்கு பின் ஞாயிறு விடுமுறைக்காக காலையில் கிளம்பி குழந்தைகளுடன் வெளியே வந்திருக்க அதற்குள் தான் அழைத்து விட்டார் பவானி.

“சரி பவானிம்மா சீக்கிரம் வந்துடுறோம்” என்று பேசிவிட்டு வந்த போது ஆனந்த் குழந்தைகளுடன் குழந்தையாய் விளையாடிக் கொண்டிருந்தான்.

“என்ன சொன்னாங்க உங்க அம்மா?” ஆனந்த் கிண்டல் செய்ய,

“ம்ம் மருமகன் சேட்டை பண்ணினா சொல்ல சொன்னாங்க” என்றாள் சிரித்தபடி,

“அப்ப சேட்டை பண்ணியே ஆகணுமே! என்ன பண்ணலாம்?”

“ம்ம் உங்க அத்தை மட்டும் இல்ல என்னோட அத்தையும் சேர்ந்து தான் சொல்லியிருக்காங்க... அப்புறம் உங்க இஷ்டம்” அவள் சொல்லிச் செல்ல,

“ஆஹான்! குட்டிஸ் அபிமாவை புடிங்க பார்க்கலாம்” ஆனந்த் சொல்ல,

“அபிமா” என குழந்தைகள் அவளிடம் ஓட, அவர்களுக்கு அகப்படாமல் ஓட்டம் காண்பித்தாள் அபி.

இவர்களை பார்த்து ரசித்தப்படி நின்றான் ஆனந்த்.


முற்றும்.
 
Top