• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Dheera

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 17, 2023
Messages
234
ஐந்து வருடங்களுக்குப் பிறகு..


"டேய் தீரா இன்னும் என்னதா செய்ற..?" என இடுப்பில் கைவைத்து அந்த சின்ன வாண்டு தன் அப்பன் செய்யும் தோசைக்காக காத்திருந்து காத்திருந்து இதோ பசியில் கத்தி விட்டது.

"என்னது டா வா...?" என அதிர்ந்து திரும்பியவன் நான்கு வயது தன் மகள் நின்றிருந்த தோரணையில் சிரித்தே விட்டான்.

அதில் கடுப்பான தீராஷ்வதி "அப்பா பசிக்குது..தாப்பா..." என அவனது பேண்டை இழுக்க அவசரமாக பேண்டைப் பிடித்தவன் "பேபி வெயிட் பண்ணுடா.. நானும் சுடுரன் இந்த எலவு வட்டமா வரமாட்டிக்கிடா..." என அழுதே விட்டான்..

"வத்தமா வராட்டியும் பரவாயில்லைப்பா..தாஆஆஆஆஆ...." என அலற காதை மூடிக் கொண்டவன் கோபத்தில் அனுவைக் கத்தியிருந்தான்.

"ஏய் அனு எங்கடி இருக்க..?வந்து தொலைடி..உன்னை மாதிரியே புள்ளைய பெத்து போட்டிக்கடி..தாங்க முடிலடி இவட அலப்பறை..." என்ற தகப்பனை முறைத்த வாண்டு ஸ்டூல் போட்டு ஏறி தீராவின் கையில் கடித்து வைத்தது...

"ஆஆஆஆ விஷக்கிருமியே..ஏன்டி கடிச்ச..?" என மகளிடம் கேட்க அதுவோ "நீ ஏன்டா மம்மியை டி போட்டு பேசுற...?" என கடிய மகளின் கேள்வியில் விழி பிதுங்கியவன் "அது..அது..அப்படித் தான்.." என்றுவிட்டு மகளை அவனும் இடுப்பில் கை வைத்து முறைத்து வைத்தான்.

தீராஷ்வதியும் அவனைப் போல நிற்க "சரியான கொழுப்பு, அந்த எருமைப் போல.." என மெலிதாக திட்டினாலும் அந்தக் குழந்தைக்கு கேட்டு விட்டது.. "நீ எல்லாம் ஒரு போதிசாப்பா...?" எனக் கேட்டு வைக்க "க்ஹும் போலிஸையே உருப்படியா சொல்லத் தெரியல்லை..உனக்கு வாய் வேற..." என மகளுக்கு அப்பனாக இல்லாமல் எதிரி மாதிரி பேசுபவனை உதட்டை சுழித்துப் பார்த்தவள் "அப்பா கொஞ்சம் குனியேன்.." என கண்சிமிட்டி அழகாக சிரிப்புடன் கேட்க தகப்பனுக்கு அப்படியே உருகிற்று..

"எதுக்குடா செல்லம்...?" என்றவன் மகளின் சூழ்ச்சி தெரியாமல் ஸ்டைலாக தலையை கோதி விட்டுக்கொண்டே குனிய அப்படியே இழுத்து வைத்தது தந்தையின் குடுமியை...

"ஆஆஆஆஆஆ குட்டிப் பிசாசே விடுடி..." என அலறியவனை காப்பாற்றத் தான் யாருமிருக்கவில்லை.

அப்பன் மகள் சண்டையை, எப்போதும் நடக்கும் தெருக் கூத்துப் போல தீராவின் தாயும் தந்தையும் பார்த்து விட்டு கடந்து விட்டனர்.

உரியவளோ நன்றாக குறட்டை விட்டு தூங்கி விட்டு இப்போது தான் இவன் அலறிய அலறலில் காதைக் குடைந்து கொண்டு எழும்பி வருகிறாள்..

"அங்க என்ன சத்தம்..?" என்றவாறு வந்தவளை முறைக்கக் கூட நிமிர விடாமல் மகள் உச்சி முடியை கத்தையாக பிடித்து இழுத்து வைத்திருக்கிறாள்.

அனுவோ அதைப் பார்த்து அதிர்ந்து விட்டு பின் அடக்கமுடியாமல் சிரித்தே விட்டாள்.

"சனியனே சிரிக்காம வந்து காப்பாத்தி தொலைடி.." என கத்த சிரிப்பை விட்டு விட்டு ஓடி வந்து மகளின் கையைப் பிடித்தாள்.

"வதி விடுமா..டாடி பாவம்ல..." என அவளது பிஞ்சுக் கையை பிடித்து முடியை எடுத்து விட்டாள்.

அதுவோ அம்மாவைப் பார்த்து "மம்மி இந்த டாடி மோசம்..பேட் வேட்ஸ் பேசுறாரு.. மம்மியை வாடி சொல்லுறாரு..நாம வேறு டாடி வாங்குவோம்.." என மழலை மொழியில் தன் கருத்தை எடுத்து விட்ட மகளின் பேச்சில் ஜெர்க்கானவன் "எதே..வேற டாடியா...?" என வெளிப்படையாகவே அதிர்ந்திருந்தான்.

"ஓகேடா செல்லம்..வதி பேபி சொன்னா சரியாத்தான் இருக்கும்.." என அந்த டம்மி வேறு சொல்லிக் கொண்டே மகளை தூக்கிக் கொண்டு போக தன்னை முறைத்த தந்தையைப் பார்த்து பழிப்புக் காட்டிய தீராஷ்வதி "உன்னோட கா..." என்றுவிட்டு சென்று விட்டாள்.

இங்கே தலைவலிக்க நின்றிருந்தது என்னவோ தீரா தான். ஒன்றை வைத்துக் கொண்டே படாதபாடு பட்டவன் இப்போது அதைப் போலவே ஜெராக்ஸில் குட்டி வந்திருக்க அவன்பாடு திண்டாட்டம் தான்..

மகள், தாத்தா பாட்டியுடன் விளையாடிவிட்டு வர அங்கே அனுவோ தீராவிற்கு தலையை மசாஜ் செய்து கொண்டிருந்தாள்.

அதைப்பார்த்து மகளிற்குமே தந்தையை நினைத்துப் பாவமாகிப் போய் விட்டது..

தீராவின் மடியில் ஏறி அமர்ந்த தீராஷ்வதி "டாடி வலிக்கிதா டாடி..?சாரி..." என முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு தந்தையின் தலையை தன் பிஞ்சு விரல்களால் தடவி விட அப்படியே அவனுக்கு மனம் கலங்கி விட்டது..

மகளை அணைத்தவன் உச்சியில் முத்தம் வைத்து "இல்லடா..அப்பாக்கு லேசான தலைவலி அது தான் அம்மா தலையை தடவி விடுறா..." என்றவன் "அப்படித் தானே அனு...?" என கேட்க அவளும் ஆமோதிப்பாய் தலையை ஆட்டிய பிறகு தான் அந்த குழந்தை தெளிந்தது..

அப்படியே அவனது நெஞ்சில் ம்ம் என்றவாறு சாய்ந்த குழந்தையை தட்டிக் கொடுத்தவன் அனுவைப் பார்க்க அவளும் கண்களை மூடித் திறந்தாள்.

பின் நிலைமையை மாற்றும் பொருட்டு "அப்போ கொஞ்ச நேரம் முன்னாடி வதி பேபி வேற டாடி வாங்கலாம்னு சொன்னாங்க..வாங்குவோமா..இந்த டாடி வேணாமா..?" என முகத்தை உற்றென வைக்க பதறி எழுந்த குழந்தை "வேணாம்..வேணாம்..எனக்கு..எனக்கு தீராப்பா தான் வேணும்..நா..நான் யாருக்கும் தீராப்பாவ கொடுக்க மாட்டேன்.." என அழத்தொடங்கி விட்டது..

"ஏய் பேபி..!! டாடி சும்மா சொன்னேன்டா..வதிம்மாவ விட்டுட்டு அப்பா போவேனாடா..." என்றவன் மகளின் கன்னத்தில் அழுந்த முத்தமிட அதுவும் தகப்பனுக்கு முகம் முழுவதும் கண்ணீருடன் முத்தமிட்டது..

மகளின் அழுது சிவந்திருந்த முகத்தை துடைத்து விட்டவன் தன்னுடன் அணைத்து அப்படியே தலையைக் கோதிவிட அந்தக் குழந்தையும் தகப்பனின் மார்புச் சூட்டில் தூங்கி விட்டது..

இவள் அப்படியே தீராவைப் போல.. தாய் தந்தையின் சுட்டித்தனம் சேர்ந்தே அவளுக்குள் செல்வாக்கு செலுத்தி இருந்தாலும் தந்தையை மட்டும் தான் தன் பேச்சினால் வாட்டி வதைப்பாள்..

அவனும் விரும்பியே தன் மகளுடன் வாயடிக்க தினம் தினம் சண்டையும் இதோ இதைப் போல் சமாதானமும் தான்.. எவ்வளவு தான் சண்டை போட்டாலும் அந்தக் குழந்தை என்னவோ தன் தகப்பனின் நெஞ்சில் தான் தூங்கும்.. அதில் அனுவிற்குமே பொறாமை வந்து முகத்தை திருப்பிக் கொண்டு போவது வேறு கதை..

அவளும் அப்படியே குனிந்து பின்னாடி இருந்து அவனைக்கட்டிக் கொண்டு "அப்போ அனு பேபிக்கு கிஸ்..?" என உதட்டைப் பிதுக்க சிரிப்புடனே அவளுக்கு உதட்டில் முத்தம் வைத்தான்.

...


"விதுர்ஷனா எங்க இருக்க...?" என விக்ரம் சத்தம் கொடுக்க "டாடி ஐ அம் ஹியர்..." என எதிர் குரல் கொடுத்தாள் விக்ரமின் தவப் புதல்வி.

"உன் அம்மாவ எங்கடா...?" என எரிச்சலுடன் கேட்டவனின் முன் வந்து நின்ற நான்கரை வயது சிட்டு "அதை அம்மாவ கூப்பிட்டு கேட்டிருக்கலாம்ல...?" என அடிக்கண்ணால் முறைக்க "அப்படியே அம்மாவப் போலவே முறைக்கிறா.." என்றவன் பாவமாக முகத்தை வைத்துக் கொள்ள அவனைக் கண்டு கொண்டவள் "இப்படி பேபி மாதிரி ஃபேஸ்ஸ வச்சிட்டே சமாளிச்சிருங்க டாடி..ஹூம்..." என்றவள் வந்த வழியே சென்று விட்டாள்..

"இப்போ நீ ஸ்ரவனைப் பார்க்க வரியா இல்லையா...?" எனக் கேட்க அவசரமாக ஓடி வந்தவள் "வரேன் வரேன்..டாடி ஆதிப்பாட வீட்டுக்கு போறோமா..?" என சந்தோஷத்துடன் கேட்க ஓடி வந்தவள் தந்தையின் காலைக் கட்டிக் கொண்டாள். அப்படியே அவளைத் தூக்கி முத்தம் கொடுத்தவன் "எங்கடா உன் அம்மா...?" எனக் கேட்க தலையில் அடித்துக் கொண்ட குழந்தை "உங்க வைஃப் இன்னும் லிஃப்டிக் போட்டு முடியலை டாடி.. சீ இஸ்ஸ மேக்கப் க்யீன்.." என தாயைப் பற்றி தந்தையிடம் புகார் வாசிக்க வாய்விட்டு சிரித்தவனின் வாயை அவசரமாக பொத்தியவளிடன் சிரிப்பை விடுத்து என்னவென பார்வையால் கேட்க "அய்யோ டாடி.. அம்மாக்கு மட்டும் நாம சொன்னது கேட்டிச்சு இன்னைக்கு நாள் முழுக்க மூஞ்சிய தூக்கிட்டு திரிவாங்க.." என்று காதில் கிசுகிசுத்து முடிப்பதற்குள் அவள் வந்து முறைத்துக் கொண்டு நின்றாள்.

இப்போது மகள் என்னவென தந்தையிடம் பார்வையால் கேட்க முகத்தை திருப்பி தாயைக் காட்டிவன், மகள் கிண்டல் செய்வது போலவே முகத்தை பாவமாக வைத்திருந்தான்.

அவசரமாக அப்பனிடமிருந்து இறங்கியவள் ஓடிப் போய் தாயின் விரலைப் பிடித்துக் கொண்டு "மம்மி நான் இல்லை..அப்பா தான் நீ மேக்கப் க்யீன்னு சொன்னாரு..." என ப்ளேட்டைப் மாற்றிப் போட இந்த ட்விஸ்டை எதிர்பாராத விக்ரம் திருட்டு முழியுடன் வராத காலை எடுத்து காதில் வைத்துக் கொண்டு "ஆமா சார்..இதோ வந்துட்டு தான் இருக்கேன்..அவசரமா சார்..? இதோ வரேன்..." என்றவன் வெளியேறி விட்டான். பின்ன...! உண்மையை சொன்னாலும் சொல்லாவிட்டாலும் சேதாரம் அவனுக்குத் தான். அதற்குள் எஸ்ஸாகி விட்டான்.

அவன் சென்ற பிறகு மகளும் மனைவியும் ஹை ஃபை போட்டு சிரித்துக் கொண்டனர்.


...



"திரூ இங்க வாயேன்..." என அழைக்க குளித்து முடித்து இடுப்பில் டவலைக் கட்டிக் கொண்டு வந்தவன் "என்னடி...?" எனக் கேட்டான்.

மேக்னாவோ எதையோ பின்னாடி மறைத்து வைத்திருப்பதை கவனித்தவன் "என்னத்தை மறைச்சி வச்சிருக்க...?" என எட்டிப் பார்க்க பயந்து பின்னாடி போனவள் "ஒ..ஒன்னுமில்லையே..." என சமாளிக்க அவள் சுதாரிக்கும் முன் பறிக்க கையை பின்னாடி விட்டு எடுக்க கையோடு வந்தது கரிச்சட்டி ஒன்று..

நுனியில் பிடித்து அதைத் தூக்கியவன் "என்னடி இது..?" என அதிர அவளோ முகத்தை பாவமாக வைத்திருந்தாள்..

"என்னனு கேக்குறன்ல..?" என இடுப்பில் கைவைக்க "நீ முறைக்கிற பார்த்தியா..போ நான் சொல்லமாட்டேன்..." என கண்ணைக் கசக்கினாள்..

அதில் அப்படியே மலையிறங்கியவன் சட்டியை அப்படியே வைத்து விட்டு இடுப்பை சுற்றி கைகோர்த்து அவளை தன்னை நோக்கி இழுக்க அவன் நெஞ்சில் மோதி நின்றாள்... "புதுசா என்ன ட்ரை பண்ணுனிங்க குக்கர்...?" எனக் கேட்க அவனது நெஞ்சில் வாகாக சாய்ந்தவள் "ஒரு டிஷ் யூடூப்ல பார்த்தேன்..ட்ரை பண்ணுவோம்னு போக நான் சமைச்சிட்டு இருக்கும் போது மதன் முழிச்சிட்டான்.. ஓடிப் போய் அவனை தூங்க வச்சிட்டு வரதுக்குள்ள தீஞ்சி போய்டு..." என மூக்கை உறிஞ்சியவளைப் பார்த்து சிரித்தவன் "சரி அதுக்கிப்போ என்ன..? ஓடர் பண்ணி சாப்பிட்டுக்கலாம்.. அவன் மட்டும் முழிச்சான் லா படிக்காமலே லாயர் மாதிரி பேசுவான்டி..வேற வினையே வேணாம்..." என்றவன் அப்படியே மனைவியை கைகளில் ஏந்திக் கொண்டு தங்களது அறைக்குள் நுழைந்து விட்டான்.


...


டைனிங் டேபிளில் ரதி இருக்க அவளுக்கு உணவை ஊட்டி விட்டுக் கொண்டிருந்தான் அரவிந்த்..."போதும் அத்தான்..." என அவள் கெஞ்சக் கெஞ்ச வாயில் வைத்துத் திணித்துக் கொண்டிருந்தான்.

இந்த அலப்பறை தாங்க முடியாமல் அவர்களது செல்லப் பையன் ஆராதிரன் டேபிள் மேல் ஏறி "இப்படியே ஊட்டி விடுங்க ஒரு நாளைக்கு யானை மாதிரி வந்து நிற்பாங்க அம்மா..." என முறைத்தான்.

ஆம் அரவிந்தின் கவனிப்பில் கொஞ்சம் கொழுத்திருந்தாள் ரதி...

"போடா..உனக்கு பொறாமடா என் புருஷன் ஊட்டி விடுறது.."என்ற தாயைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டவனை அரவிந்த் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

"போம்மா..எனக்கு ஒரு ஆமையும் இல்லை..பாப்பா நானே சம்த்தியா அப்பா ஊட்டி விட சாப்பிட்டுட்டேன்..நீ ஏன்மா சின்னப் பொண்ணு மாதிரி நடிக்கிற..." எனக் கேட்டவனிடம் "ஹூம் உனக்கும் இவர் தானே ஊட்டி விட்டாரு..அதுவரைக்கும் நான் சும்மா தானே வாய் பார்த்துட்டு இருந்தேன்.. உனக்கு மட்டும் என்னடா..?பேசாம வாய்பாரு..." என்றவள் ஆஆஆ என அவனிடம் வாயைக் காட்ட அழகாக உணவை அவளின் வாயினுள் திணித்தான்.

தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டே இறங்கி சென்ற மகனைத் தூக்கி தன் மடியில் இருத்திய அரவிந்த் "ஆரா..!! சம்த்துப் பிள்ளை தானே..அப்பா சொல்லுறதை கேட்டா தான் பீச் கூட்டிட்டுப் போவேன்..." என நெற்றியில் முட்ட "சரிப்பா..." என அமைதியாகி விட்டான் அவன்.

அச்சு அசல் ஒரே மாதிரி இருந்த தன் கணவனையும் குழந்தையும் ஆசையாக பார்த்துக் கொண்டிருந்தவளைக் களைக்கும் முகமாக அவளது தாய் மாமனின் குரல் கேட்டது..

"ரதிம்மா மாமா கடைக்குப் போறேன்டா.. என்னவாச்சும் வேணுமாடா உனக்கு...?" என குரல் தர "ஆமா மாமா..... ஐஸ்கிரீம் மட்டும் வாங்கிட்டு வாங்க..." என்று கூறிய தாயை வெட்டவா குத்தவா என ஆராதிரன் பார்க்க இளித்து வைத்தாள் ரதி.


....


"நான் கோவம்..போங்க போங்க..." என கைகட்டி நின்று கொண்டான் ஸ்ரவன். ஆதித்ய தேவ் மற்றும் வர்ஷினியின் மூத்த பொக்கிஷம்..

"டேய் அவளை மாதிரியே டபிள் டபிளா பேசி சாவடிக்கிறடா நீ..." என்றவன் அவன் கதறக்கதற தூக்கிக் கொண்டு போய் தண்ணீர் தொட்டியில் போட்டு விட்டான்..

குளிப்பதற்குத் தான் இந்த அட்டகாசம் அவனிடம்..

"டேய்..!! அப்பா அந்த வயசுலயே சட்டைல ஒரு தூசு பட விடமாட்டேன்.. எனக்குப் பொறந்த நீ ஏன்டா குளிக்கிறதுக்கு தினம் தினம் அலப்பறை பண்ணுற...?" என கேட்க அவனிடம் முறைப்பு மட்டுமே...

"ஐ திங் உன் அம்மா டேட்டி ஃபெலோ கிட்ட இருந்து தான்டா உனக்கு இந்த ஜீன் பாசாகிக்கனும்..." என சீரியஸாக தாடியைத் தடவ ஸ்ரவன் வாயில் கைவைத்து சிரித்தான்.

அவனைப் புரியாமல் பார்த்தவன் அவனின் பார்வை சென்ற திக்கில் பார்க்க அங்கே வர்ஷினி தான் இடுப்பில் கைவைத்து அவனை முறைத்துக் கொண்டிருந்தாள்.

"என்ன மொறைப்பு...?" என அவள் மீது தண்ணீரைத் தெளிக்க அவள் உள்ளே வர எத்தணிக்க "ஏய் வர்ஷூ பாத்துடி..கீழே தண்ணி கிடக்கில்ல..அறிவில்லையாடி..." என எட்டு மாத கர்ப்பிணியாக இருந்த தன்னவளைத் திட்ட அதோ உதட்டைப் பிதுக்கி அழத் தயாராகி விட்டாள்..

தலையில் அடித்துக் கொண்டவன் அவளருகில் வந்து வழமை போல கன்னம் தாங்கி "ரெண்டு பிள்ளைக்குத் தாயாக போற..இன்னும் கண்ணை கசக்கிட்டு நிற்கிறியேடி..." என செல்லமாக அவளது நெற்றியில் முத்தம் வைக்க அவனது நெஞ்சில் கை வைத்து தள்ளியவள் "போங்க போங்க..திட்டுறீங்க..நான் கோவம்..." என முகத்தைத் திருப்ப அங்கே ஸ்ரவன் களுக்கென சிரித்து வைத்தான்..

"பாருடி உருவத்துல என்னை மாதிரி அழகா இருந்தாலும் குணத்துல உன்னை மாதிரியே அச்சு அசலா இருக்குறான்டி..." என்கவும் "இந்தப் பெருமைக்கு மட்டும் கொறச்சல் இல்லை..." என்ற பொறுமலுடன் அவனது மீசையை இழுத்து விட்டு தன் பெரிய வயிற்றை தள்ளிக் கொண்டு போக அவளை அலேக்காக தூக்கியவனின் தோளை சுற்றி கைபோட்டவள் அவனது இதழில் குட்டி முத்தம் வைத்தாள்..


சுபம்.
 
Top