• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ஒரு விபச்சாரியின் காதல் பாகம்- 2

navivij

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 11, 2024
Messages
7
ஒரு விபச்சாரியின் காதல் பாகம்- 2

ஜூஸை குடித்த வனஜாவும் லீலாவும் இரண்டு மணி நேரம் கழித்து கண் விழித்தபோது தங்கள் கோலத்தை பார்த்து அழுதனர். அந்த ஆண்கள் இருவரும் இவர்கள் இருவரின் கற்பை சூரையாடிவிட்டனர்.
உங்களோட முதலாளி உங்களுக்கு ஃபுல் பேமென்ட் கொடுக்கமாட்டான்னு எனக்கு தெரியும் இந்தாங்க ஜாலியா இருங்க..... என்று சொல்லி நூறு ரூபாய் நோட்டு கட்டுக்குள் இரண்டினை இருவருக்கும் தூக்கி போட்டான் லோகேஷ்.
இருவரும் அழுதுகொண்டே எழுந்து தங்களின் ஆடைகளை சரி செய்து கொண்டு மசாஜ் சென்டருக்கு வந்தனர். இருவரும் அந்த மசாஜ் சென்டர் முதலாளியின் கன்னத்தில் அரைந்தனர். பின்னர் அவன் முகத்தில் காரி துப்பிவிட்டு அந்த எண்ணெய்களை அவனுடைய முகத்தில் தூக்கி எறிந்து விட்டு வெளியே வந்தனர்.
இந்த சமுதாயம் நம்மல ஒழுங்கா வாழ விடாது லீலா.... நம்ம செத்திடலாமா.... என்றாள் வனஜா.
வனஜா அப்படி சொல்லாதே.... வாழ்க்கைல போராட்டங்கள் வரத்தான் செய்யும்.... அதுக்கு பயந்து சாக நினைச்சா உலகத்தில பெண்களே இருக்கமாட்டாங்க....
என்னத்தான் லீலா அறிவுரை கூறினாலும் வனஜாவால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவர்கள் இருவரும் லேடிஸ் ஹாஸ்டலுக்கு நடந்து செல்லும் போது வனஜா வேகமாக வந்த காரின் முன்னால் போய் விழுந்தாள்.... கார் வந்த வேகத்தில் அவள் தூக்கி எரியப்பட்டாள். பதறிப் போனாள் லீலா....வனஜாவை அங்கிருந்தவர்களின் உதவியுடன் ஆஸ்பிட்டலில் சேர்த்தாள்....
டாக்டர் உடனே ஆப்ரேஷன் செய்ய வேண்டும் என்று கூறவே.... தன்னிடம் இருந்த இரு நூறு ரூபாய் நோட்டு கட்டுக்களை கொடுத்தாள்.... அது பத்தாது என்றார் டாக்டர்.
நாளை மறுநாள் கொடுப்பதாக வாக்களித்து விட்டு.... லோகேஷிடம் போய் காசு கேட்டாள்....
அதெல்லாம் முடியாது போ.... உனக்கு இன்னும் எவ்வளவு கொடுப்பாங்க.... என்றான்.
பிளீஸ்.... வனஜா ஹாஸ்பிடலில் இருக்கா.... ஹெல்ப் பண்ணுங்க....
அவளை பார்த்ததும் அவனுக்கு மறுபடியும் ஆசை தோன்றியது.... சரி மறுபடியும் வரீயா.... என்றான்.
வேறுவழியின்றி ஒப்புக்கொண்டாள். அன்றிலிருந்து அவளுடைய நைட் ஷிஃப்ட் ஆரம்பம் ஆனது.... காசை வாங்கிக்கொண்டு ஹாஸ்பிடலில் கட்டி நல்லபடியாக ஆப்ரேஷன் நடந்தது. மூன்று மாதங்கள் ஆனது வனஜா பரிபூரணமாக குணமாவதற்கு. பிறகு லீலா விபச்சாரம் செய்து தான் தன் உயிரை காப்பாற்றினாள் என்று தெரிந்து மிகவும் வருந்தினாள்.
வனஜா ஏற்கனவே ஒருவனை காதலித்து வருகிறாள்.... அவனிடம் தன் கற்பு சூறையாடப் பட்டது என்று சொல்லி அழுதாள். கற்பு போனால் என்ன?.... நான் உன் மனசை தான் காதலிக்கிறேன் ... என்று சொல்லி அவளை திருமணம் செய்து கொண்டு சென்னைக்கு அழைத்து சென்றான். ஒரு மாதத்திற்கு பிறகு வனஜா லீலாவிற்கு கால் செய்தாள்.
என்னடி.... இப்போ தான் உனக்கு என் நியாபகம் வருதா.... உன் புருஷனோட அன்பில என்னை மறந்திட்டியா?.... என்றாள் லீலா.
தேம்பி தேம்பி அழுதாள் வனஜா....
என்னடி.... என்னாச்சு.... ஏன் அழற?
என் புருஷன் நல்லவன் இல்லடி.... நல்லவன் மாதிரி நடிச்சு என்னை கல்யாணம் பண்ணி....ஒரு வாரம் என்னை நல்லா பார்த்துக்கிட்டான்.... அவனோட ஆசை அடங்குற வரைக்கும் என்னை நல்லா அனுபவிச்சிட்டு.... இப்போ தினம் தினம் ஒருத்தனை என் கிட்ட அனுப்பி காசு வாங்கிக்கிறான்.... ஏன்டா இப்படி பண்ற ன்னு நான் அவனிடம் கேட்டதற்கு....
நீ என்ன பெரிய உத்தமியா.... ஏற்கனவே கற்பை இழந்தவ தான.... அதனால காசு வந்தா நமக்கு நல்லது தான.... அப்படின்னு சொன்னான்....என்று சொல்லி அழுதாள் வனஜா.
அடப்பாவி.... அவன் நல்லாவே இருக்கமாட்டான்.... நீ முதல்ல இங்க கிளம்பி வா....
இல்ல லீலா.... நான் இங்கேயே இருக்கேன்.... எனக்கு அங்க வர ரொம்ப கஷ்டமா இருக்கு.... ஆனா அவன் கூட நான் இருக்க போறது இல்ல.... நானே தனியா இருந்திக்கிறேன்.... இவனால நிறைய வெயிட் பார்ட்டிங்க அறிமுகம் கிடைச்சுது.... அதை வச்சு நான் புழைச்சுப்பேன்..... என்றாள் வனஜா.
நம்ம ரெண்டு பேரோட வாழ்க்கையும் இப்படி ஆயிடிச்சே டி..... என்று சொல்லி கண் கலங்கினாள் லீலா.
நம்ம தலையெழுத்தை யாரால மாத்த முடியும்.
இருவரும் வேறுவழியின்றி அந்த தொழிலை செய்ய தொடங்கினார்கள்.
ஒருநாள் லீலா ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்தாள்.... அப்போது.... ராஜூ.... ரோட்டின் ஓரத்தில் மயங்கி விழுந்து கிடந்தான்.
முதலில் குடிபோதையில் ஒருவன் விழுந்து கிடக்கிறான் என்று நினைத்து கொண்டே நடந்தவள்.... அவன் வலியில் முனகுவது தெரிந்தது. அவனை திருப்பி பார்த்தாள்.... தலையில் லேசாக அடிப்பட்டு இருந்தது....
தன் கர்ச்சீப்பால் தண்ணீர் தொட்டு துடைத்து.... தண்ணீர் தெளித்து அவனை எழுப்பினாள். பிறகு அவன் பசியால் மயங்கி விழுந்து அடிப்பட்டதை தெரிந்து கொண்டு அவனுக்கு டிபன் வாங்கி கொடுத்தாள்.
அக்கா.... நான் உங்க கூட வரவா.... என்றான் ராஜூ.
ஏனோ லீலாவிற்கு இறந்து போன தன் தம்பி உயிரோடு இருந்தால் இவன் வயது ஒத்து இருக்கும் என்று நினைத்துக் கொண்டாள்.
உனக்கு என்ன வயசு?
16....
எனக்கு 20 வயசு....
சரி அக்கா....
நான் சொல்றது உனக்கு புரியுமா ன்னு தெரியல....
அமைதியாக இருந்தான் ராஜூ....
நான் விபச்சாரம் செய்யறேன்....
மறுபடியும் அமைதியாக இருந்தான்.
சரி.... நான் போறேன்.... எதாவது டீ கடையில ஹோட்டல்ல வேலை தேடி புழைச்சிக்க....
அக்கா.... நான் உன் கூட வரேன்.... நீ தப்பா நினைக்கிலன்னா நான் உனக்கு ஆள் புடிச்சு தரேன்.... என்றான் ராஜூ.
என்ன சொல்ற?
ஆமாம் அக்கா.... நம்ம ஊர்ல நிறைய பெரிய மனுஷங்க என்ற பேர்ல .... கேவலமானவனுங்க இருக்காங்க.... நான் முன்னாடி வேலை செஞ்ச டீ கடையில என்னோட முதலாளி ஒரு சின்ன பொண்ணு கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணினான்.... அந்த ஆளை புடிச்சிக்கிட்டு அந்த பொண்ணை தப்பிக்க வெச்சேன்.... அதனால என்னை அடிச்சு வேலையை விட்டு துறத்திட்டான்.... ரெண்டு நாளாக வேலை தேடி அலையிறேன்.... எந்த வேலையும் கிடைக்கல.... பசி மயக்கத்தில விழுந்திட்டேன்.... அந்த டீக்கடையில இருந்த ஆள் மாதிரியானவங்களை உன் கிட்ட கூட்டிக்கிட்டு வந்தேன்னா.... அந்த சின்ன பொண்ணுங்களை அவன் தொந்தரவு பண்ணமாட்டான் இல்ல?.... என்று கண்கள் கலங்க கூறினான்.
லீலாவிற்கும் கண்கள் கலங்கியது. அவன் தலையை கோதி விட்டு....
தம்பி.... இந்த மாதிரி ஆம்பளைங்க நிறைய பேர் இருக்காங்க.... அவனுங்க புத்தி அது.... அவனுங்க சாகுற வரைக்கும் மாறமாட்டாங்க.... நீ சொன்ன மாதிரி என் கிட்ட அவன் வந்திட்டு போனாலும்.... அவன் வேற எதாவது சின்ன பொண்ணை பார்த்தாலும் அப்படி தான் நடந்துக்குவான்.
சரி.... நீ சொல்றதும் ஒரு வகையில கரெக்ட் தான்.... கொஞ்ச நேரத்திற்கு என்னால ஒரு பொண்ணு காப்பாத்த படுவா இல்ல.... சரி வா போலாம்.... ஆனா நான் லேடீஸ் ஹாஸ்டல்ல இருக்கேனே....
அமைதியாக இருந்தான் ராஜூ.
நான் ஒரு வாரத்துக்குள்ள ஒரு வீடு வாடகைக்கு எடுத்துட்டு சொல்றேன்.... அதுவரைக்கும் எங்கன்னா தங்கிக்கோ.
சரி அக்கா.... என்றான்.
ஒரு வீடு எடுத்து தங்கி தொழிலை தொடங்கினாள் லீலா.
சில மாதங்களுக்கு பிறகு குடும்ப பிரச்சனை என்று அந்த தொழிலுக்கு வந்து சேர்ந்தனர் கஸ்தூரி மற்றும் காஞ்சனா.
லோகேஷ் தான் ரெகுலர் கஸ்டமர். எப்போதும் லீலாவையே கேட்பான் அவன். அவனால் வந்த வினையை தான் அனுபவித்து விட்டு இப்போது சென்னைக்கு பயணம் செய்து கொண்டு இருந்தாள் லீலா.
தூக்கத்தில் லீலாவின் தோளில் சாய்ந்தான் ராஜூ.
ஸ்மைல் செய்துகொண்டே.... அவனை ஒழுங்காக படுக்க வைத்து கொண்டாள் லீலா.....
சென்னையில் கால் பதித்ததாள் லீலா....


தொடரும்....
அ.வைஷ்ணவி விஜயராகவன்.
 
Top