• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ஒளிப்படைத்த கண்ணினாய் - ஃபைனல்

Lashmi Ravi

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
145
அத்தியாயம் 21

காலை நேரம் AP இண்டர்நேஷனல் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது.BUYERS மீட்டிங்கல அர்ஜுன் இருந்ததால் வரும் தொலைபேசி அழைப்புகள் அனைத்தும் கார்த்திக்கிற்கு அனுப்பபட்டது. அனைத்திற்கும் பொறுமையாக பதில் அளித்து கொண்டிருந்தவன் சரியாக பதினோறு மணி அளவில் ஒரு காபி குடித்தால் பரவாயில்ல என நினைத்த உடன் அவன் முன்பு ஆவி பறக்கும் காபி இருக்க நிமிர்ந்து பார்த்தவன் அங்கு தாமரை புன்னகையுடன் நின்றாள்.

சிறிது நேரம் அவளையே பார்த்து கொண்டிருக்க
உடனே அவள் புருவத்தை தூக்கி “என்ன” என்று கேட்க

“இதெல்லாம் சரியா பண்ற....ஆனா ஒன்னு கேட்டா மட்டும் ரொம்ப பிகு பண்ற” என சலித்து கொண்டே சொல்ல

“நீங்க என்ன கேட்டு நான் பிகு பண்ணேன்” என அவள் சொல்லி கொண்டே யோசிக்க

“அப்படியா உணக்கு அப்ஜெக்ஷன் இல்லையா “என எழுந்து வேகமாக அவன் கிட்டே வர

“ஏய் என்ன பண்ற நீ “என அவள் பயந்து பின் வாங்க

“அச்சோ லோட்டஸ் ஏன் கத்தற...பார்க்கிறவன் நான் உன்னை என்னமோ பண்றேன்னு நினச்சுகுவான்....2 வருசமா காதலிக்கிறேன்.ஒரு சைவ முத்தம் கூட இல்ல” என அவன் முகத்தை சோகமாக வைத்து கொண்டு சொன்னான்.

“அகில் சாரோட தம்பியா இருந்துகிட்டு இப்படியா நடந்துக்குவிங்க....அவர் எவ்வளவு கண்ணியமா நடந்துகிட்டார் அபி மேடத்துகிட்ட....நீங்களும் தான் இருக்கிங்கலே...காஞ்ச மாடு கம்பகாட்டுல பூந்த மாதிரி...கிட்ட வந்தா போது தாவிட்டு வந்தரிங்க” என சொல்ல

“எல்லாம் நேர கொடுமை....இந்த பூனையும் பால் குடிக்குமானு இருந்த அந்த பூனை ஐந்து வருசத்துக்கு முன்னாடியே லிப் டு லிப் அடிச்சது யாருக்கு தெரியுது?என மனதுக்குள் நினைத்தவன் ஆமா அவரு ஒரு மாசத்துக்கு ஒரு முறை வந்தாலும் ஒரே நாள்ல ஒரு மாசத்து வேலையே முடிச்சுட்டு போய்டறார்.மாசம் முழுவதும் கூடவே இருக்கேன்.இன்னும் அரிச்சுவடியே ஆரம்பிக்கல” என புலம்ப

“எங்க பாஸ் பத்தி அப்படி சொல்லாதிங்க...எல்லாரும் உங்கள மாதிரி இல்லை” என தாமரை அகிலிற்கு ஆதரவாக பேச

“அது எப்படி லோட்டஸ் பொண்ணுங்க எல்லாம் இப்படி அமைதியா இருந்து எல்லாம் வேலையும் பண்றவங்களையே நல்லவன்னு சொல்றீங்க...உங்கள எல்லாம் திருத்தவே முடியாது” என சொன்னவன்

“அப்படியா இதை எல்லாம் உங்க அண்ணா வரட்டும் சொல்றேன்” என தாமரை மிரட்ட

“என்ன சொல்ற தாமரை” என கேட்டுகொண்டே உள்ளே வந்தான் அகில்.

“சார்...வாங்க...வாங்க” என தாமரை தடுமாற

கார்த்திகிர்க்கோ பேச்சை வரவில்லை...அப்படியே விகித்து போய் நிற்க
அவன் அருகில் வந்து அவன் தோளில் கை போட்ட அகில் மெதுவாக அவனிடம் “ஏண்டா என் தம்பியா இருந்துட்டு இவ்ளோ நேரம் லெட்சர் கொடுத்திட்டு இருக்கே.என்னை பத்தி சொன்னா பத்தாது.அதை பாலோ பண்ணனும்.என் தம்பின்னு இனி வெளியே சொல்லாத கேவலமா இருக்கு” என காதை கடித்தவன்

“என்ன தாமரை காலையிலே என்ன அரட்டை...எப்பவும் பேச்சு இருக்க கூடாது...காரியத்துல கண்ணா இருக்கனும்” என சொல்ல

“இல்ல சார்...சும்மாதான்...ok சார்....இனி பேசமாட்டோம்...செயல்ல இறங்கிடறோம்” என அவள் வேலையை மனதில் வைத்து சொல்ல

“என்ன தம்பி புரிந்ததா?”என அகில் அவனை பார்த்து கண்ணடித்து சிரிக்க

“அண்ணா!!!!!!!!!! எனது அப்படியே அவன் காலில் விழுந்தவன் இனி நான் பார்த்துகிறேன் அண்ணா” என சொன்னான்.

பின்பு அகில் அவனிடம் “கார்த்தி எனக்கு நீ ஒரு கண்ணுனா தாமரை இன்னொரு கண் .எதாவது பிரச்சனைனா அவ்ளோதான்” என அழுத்தமாக சொல்ல

“நான் உங்க தம்பினா....இரண்டு வருடமா காதலிக்கிறேன்.இப்பதான் 6 மாசத்துக்கு முன்னாடி அவகிட்ட சொன்னேன்” என பொறுப்பாக சொல்ல

“சரி கார்த்திக்...அப்போ அப்போ சம்பளம் கொடுக்கிற முதலாளிக்கும் கொஞ்சம் வேலையே பாருங்க” என சொல்லிவிட்டு நகர்ந்தான்.

இப்படியே மாதங்கள் ஓடின....அகிலும் தொழிலில் ஓரளவு தேறிவிட்டான்.ஒரு நாள் பத்மநாபன் அகிலை அழைத்து திருமணம் பற்றி பேச்சு எடுத்தார்.அகில் சிறிது யோசனை பண்ண மஞ்சு அவனை உள்ளே அழைத்து ஏதோ பேச்சுவார்த்தை நடத்தினர்.பின்னர் அவன் சரி என்று சொல்ல நாள் குறிக்கப்பட்டது .

அர்ஜுன் ஆரூவும் அதிகம் பேசிகொள்ளாமல் அதே நேரத்தில் மனதளவில் நெருங்கி இருந்தனர்.

ஆருவிடம் அவசரமாக பேச வேண்டும் என அர்ஜுன் சொல்லி இருந்ததால் மகாலட்சுமி கோவிலில் காத்திருந்தாள் ஆருத்ரா.அர்ஜுன் காரை விட்டு இறங்க வெகுநாட்களுக்கு பிறகு அவனை பார்த்த ஆரு அப்படியே சிலையாய் நிற்க

அவனும் அவளை நெருங்கி வந்தவன் அந்த இடத்தில் பேச்சு இல்லை...ஒரு தழுவல் இல்லை...கண்கள் மட்டும் இமைக்காமல் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டிருக்க நெருங்கி வந்து அவள் கைகளை பிடித்தவன் அந்த கையின் அழுத்தம் நான் இருக்கிறேன் என அவளுக்கு உணர்த்த அவளோ அந்த கைகளை விடாமல் பிடித்தவள் உன்னை விட்டு எங்கும் செல்லமாட்டேன் என்பதை அவனுக்கு உணர்த்த சிறிது நேரம் உணர்வுகளே பாஷையாக மாறி இருந்தது.சில நிமிடங்க அப்படியே நின்றவன் பின்னர் “எப்படி இருக்க ஆரு” என பேச்சை ஆரம்பித்தான் அப்போதும் அந்த கைகளை இருவரும் விடவில்லை.

நன்றாக இருக்கிறேன் என தலையை மட்டும் ஆட்டியவள் வேறு ஏதும் பேசாமல் அமர்ந்திருக்க

அவள் அகைகளில் இருந்து தனது ஒரு கையைய அவன் பிரித்து எடுக்க,தன் உயிரே பிரிவது போல் அவள் பதற

“ஆரு என்ன இது” என சொன்னவன் ஒரு பத்திரிக்கையை எடுத்து அவளிடம் கொடுத்தான்.”அபிக்கு திருமணம்.இது முடிந்த உடன் நான் அம்மாவிடம் மறுபடியும் பேசுகிறேன்” என்றான்.

“உங்கள் வீட்டில் நிலைமை எப்படி இருக்கு” என கேட்க

“எந்த மாற்றமும் இல்லை அஜுன். அம்மா அதே போலதான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்றாங்க....எனக்கு ரொம்ப பயமா இருக்கு அஜுன் “என்றவள் அதற்க்கு பின்பு ஏதும் பேசாமல் அவன் கைகளையே இறுக பற்ற அதில் இருந்த அழுத்தம் அந்த நொடி அவள் அவன் மேல் வைத்திருந்த அன்பு அர்ஜுனை மெய்சிலிர்க்க வைத்தது.

நாளை நடக்கபோவது அவனுக்கே தெரியாத சமயத்தில் அவளுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என நினைத்தவன் அவளை அழைத்து கொண்டு கோவிலுக்குள் சென்றான்.

இருவரும் மனம் உருக கடவுளை வேண்டினர். அர்ஜுனோ இனி நான் இவளை சந்திக்கும்போது என் மனைவியாக மட்டுமே சந்திக்க வேண்டும் என வேண்ட

ஆரூவோ கடவுளோ இனி நான் இவரை சந்திக்கும் அடுத்த சந்திப்பு எனது அம்மா இவரை ஏற்றுகொள்ளும்போது தான் என வேண்டினாள்.

இருவருமே அடுத்த சந்திப்பில் இணைந்துவிடவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர்.






 “அர்ஜுன் எல்லாமே எடுத்திட்டியா.அது கிராமம் ...எல்லா பொருளும் அங்க கிடைக்காது என மஞ்சு பரபரக்க

பத்மநாபன் மஞ்சுவிடம் ...”கொஞ்சம் பொறுமையா இரு மஞ்சு...எல்லாமே எடுத்தாச்சு.நீ பண்ற ஆர்பாட்டத்துல எடுத்தத மறுபடியும் எடுத்து வைக்க வேண்டியதா இருக்கு” என அவரை அடக்க

“அம்மா எனக்கு இந்த புடவை இடுப்புல நிற்கவே மாட்டேங்குது” என சிணுங்கி கொண்டே புடவையை ஒரு கையில் பிடித்த படி அபி இறங்கி வந்தாள்..

அர்ஜுன் அவளை பார்த்து சிரித்து கொண்டே..”.இதுக்கே இப்படியா ...அங்க போனா கண்டாங்கி தான் கட்டனுமா...அந்த ஊரு பழக்கமா அது...உனக்கு இருக்கு ஆப்பு...இனி நீ மாட்ன அபி” என கிண்டல் பண்ண

“என்னது!!!!!!!!!! கண்டாங்கியா”என அவள் வாயை பிளக்க

“அவன் கிண்டல் பண்றான் அபிம்மா...அப்படி எல்லாம் இல்லை...நீ கவலைபடாத ...ஆனா எதுக்கும் நடக்கும்போது குச்சி மட்டும் கைல வச்சுகோடா” என பத்மநாபன் கிண்டல் பண்ண

“அப்பா நீங்களுமா ....எல்லாம் இந்த அம்மாவலதான்...அந்த ஊர்லதான் கல்யாணத்தை வைக்கனும்னு அடம்.இருக்கட்டும் இந்த மாம்ஸ்ஸ போய் வச்சுகிறேன்” என திட்டிகொண்டே காரில் ஏறி அமர்ந்தாள்.

ஊருக்குள் நுழையும்போதே தோரணங்கள் வரவேற்க..... அங்கு பெரிய கூட்டமே நின்று கொண்டிரந்தது.முன்னே கேரளா மத்தளம் முழங்க பின்னே யானை, குதிரைகள் நிற்க அதற்கு பின்னே 1௦8 சீர்தட்டுகள் வரிசையாக செல்ல அதற்க்கு பின்பு ஊர்காரர்கள் புடை சூழ பெண் அழைப்பிற்காக காத்திருந்தான் அகில்.

கீழே இறங்கியது மித்து குடும்பத்தினர் நிலைகுத்தி நின்றனர்.அவர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை.மித்துவிர்க்கோ பேச்சே வரவில்லை.மஞ்சுவிர்க்கோ தூக்கிஎறிந்து பேசிய சொந்தகாரர்கள் அனைவரும் அவள் அருகில் வந்து அவளை நலம் விசாரித்து அவளை வரவேற்க, நெஞ்சமெல்லாம் நிறைவுடன் அகிலை பார்த்து கண்ணீர் விட அதற்க்கு புன்னகை மட்டுமே பதிலாக தந்தான் அகில்

..திரும்பி அகில் தன்னவளை பார்க்க அவள் அப்படியே சிலை போல் நிற்க,மெதுவாக வந்து அவள் கைகளை பற்ற அப்போது சரியாக அந்த பாடல் ஒலித்தது.

தானே தந்தானே தானே தந்தானே…..
தானே தந்தானே தானே தந்தானே…..
தானே தந்தானே தானே தந்தானே
கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி குலவையும் போட்டு கும்மியடி
குமரி பொண்ணுக்கு மாலை வந்தது
குளைஞ்சு குளைஞ்சு கும்மியடி
வயசு பொண்ணுக்கு வாழ்வு வந்தது
வளஞ்சு வளஞ்சு கும்மியடி
எங்க வீட்டு தங்க விளக்கு
ஏங்கி நீக்குது கும்மியடி
எண்ணெய் ஊற்றி திரியை தூண்ட
ஆளு வந்தது கும்மியடி

அடி செக்க சிவந்த அழகா
கொஞ்ச செழிச்சு கிடக்கும் திமிரா
பத்து வருஷம் பக்கம் இருந்தும்
பார்க்கவில்லையடி நானும்
அந்த ராஜா திறந்தா
பல ரகசியமும் தெரிஞ்சா
பத்தியம் கிடந்த மாப்பிள்ளை பயனும்
பைத்தியம் ஆக வேணும்
அடி தூக்கி இருக்கும் அழகு
அவன் தூக்கம் கெட்டு போகும்
அடி பாக்கி இருக்கும் அழகு
உசிர் பாதி வாங்கி போகும்
தானே தந்தானே தானே தந்தானே…..
அடி பஞ்சு மெத்தையிலே…
ஒரு பந்தயம் நடக்குமே…
அந்த பந்தயம் முடிவிலே
அட இரண்டுமே ஜெயிக்குமே

தானே தந்தானே தானே தந்தானே…..
தானே தந்தானே தானே தந்தானே


அவன் மெதுவாக அவள் அருகில் வந்து அவள் கையை பிடித்ததும் அவள் “மாமா” என ஆரம்பிக்க ....”இங்க ஏதும் பேசாத,அமைதியாக வா” என அவன் கண்களால் சொல்ல ஏதும் பேசாமல் அவனுடன் முன்னே நடக்கு,அர்ஜுன் குடும்பத்தினர் அவர்கள் பின்பு நடக்கஅவர்களுக்கு பின் ஊர் மக்கள் வந்தனர்.அந்த ஊர்வலமே காண்பவர்கள் கண்களை கொள்ளை கொள்வதாக இருந்தது.

வீட்டிற்க்கு வந்ததும் அதன் முகப்பை பார்த்ததும் அசந்து போய் நின்றாள் மித்து.வீட்டில சின்ன சின்ன மாற்றங்கள் செய்து அவள் விரும்பியது போல் முன் பக்கம் தோட்டம்,பவுண்டன் மற்றும் நிறைய பறவைகள் என வைத்திருந்தான்.அவள் அப்படியே நிற்க அகில் அவள் கைகளை அழுத்த அவனை நிமிர்ந்து பார்த்தவள் அவன் உள்ளே செல் என தலை அசைக்க உள்ளே நுழைந்தவள் ஆச்சரியத்தில் அசந்து போய் நின்றுவிட்டாள்.அவள் விரும்பிய கண்ணன் ராதை கொண்ட ஆயில் பெய்ண்டிங் படங்கள் சுவரை அலங்கரித்து இருந்தன.

அவள் பின் வந்த அனைவரும் அவனை பாராட்ட எதுமே பேசாமல் அவனியே பார்த்து கொண்டிருந்தவள் வேகமாக ஓடி சென்று அவனை அணைத்து “மாமா ஐ லவ் யூ “என சொல்லிகொண்டே கன்னத்தில் முத்தமிட இதை எதிர்பார்க்காத அகில் “ஹே மித்து என்னிது” என அதிர்ந்தவன் பின்பு அவனும் அவளை அணைக்க சில நிமிடங்கள் அந்த இடத்தில ஒரு அமைதி நிலவ

“டேய் மாப்பிள்ளை போதுண்டா...ஊர்காரங்க எல்லாம் ப்ரீயா சினிமா பார்த்துட்டு இருகாங்க” என ரகு அருகில் சென்று சொல்ல ,சட்டென்று அவளிடம் இருந்து நகர்ந்தவன்,”சரி சரி இங்க என்ன வேடிக்கை ...மாமா சமையல் செக்சனுக்கு யாரு இருக்கா சீக்கிரம் வேலைய பாருங்க” என சொல்லிகொண்டே ஒன்றும் நடக்காதது போல் நகர “உலக மகா நடிப்புடா சாமி” என கூட்டத்தில் இருந்து ஒரு குரல் கேட்டது.

சந்தோசத்தில் மனம் ததும்ப அளவில்லா ஆனந்தத்துடன் அந்த வீட்டிற்குள் சென்றாள் மித்து.திருமண ஏற்பாடுகள் கிராமத்து முறைப்படி சிறப்பாக நடைபெற்று கொண்டிருந்தது.விடிந்தால் திருமணம்.

“மணி 5 ஆச்சு ...இன்னும் என்ன பண்ணிட்டு இருக்க” என வனஜா சத்தம் போட

“லீவு நாள் கூட நிம்மதியா தூங்க முடியல இந்த வீட்ல...கோவிலுக்கு போகணும்னு கொடுமை படுத்தறாங்க” என முனகிகொன்டே எழுந்து குளியல் அறைக்கு சென்றாள் ருத்ரா.

“என்ன முனகல் அங்க” என வனஜா கேட்டுகொண்டே உள்ளே வர

“இதோ அவ்ளோதான் கிளம்பிட்டேன்மா” என்றவள் வேகமாக புறப்பட்டாள்.இப்போது தான் வனஜா இவளிடம் சுமுகமாக பேச ஆரம்பித்து இருக்கிறார்கள்.அதற்கு அவளது கோபத்திற்கு ஆளாக வேண்டாம் என்று நினைத்தவள் கிளம்பி வெளியே வந்தாள்.

“கிளம்பிட்டியா ...என்ன இது புடைவை கட்டி இருக்கலாம்ல” என கேட்க ...
“இல்லைம்மா கோவில்ல கும்பலா இருக்கும்.இதுனா எனக்கு வசதியாக இருக்கும்” என்றாள்.

“சரி சரி கார் ரொம்ப நேரமா வெயிட் பண்ணுது வா” என சொல்லிகொண்டே முன்னே நடந்தாள்.

கார்ல கோவிலுக்கு போறமா அப்படி எந்த கோவிலுக்கு போறோம் என் யோசித்து கொண்டே காரில் ஏறி அமர்ந்தாள் ருத்ரா .சிறிது தூரம் சென்ற பின்பு “அம்மா எந்த கோவிலுக்கு போறோம்” என கேட்க

வனஜா அவளை திரும்பி ஒரு முறைக்க “இல்லம்மா புது வழியா இருக்கே அதான் கேட்டேன்” என்றவள் அதற்கு பின்பு ஏதும் பேசவில்லை.

“என்னப்பா எல்லாம் ரெடி ஆகிடுச்சா...கல்யாண பொண்ணு வந்துகிட்டே இருக்கு.வந்த உடனே எல்லாம் முடிந்தாகனும் .லேட் பண்ணகூடாது” என ஒருவர் சொல்ல ஐயர் அதற்க்கு தலை அசைக்க ஏற்பாடுகள் வேகமாக நடந்து கொண்டிருந்தன.

அங்கு ஒரு கும்பல் அவளை சுற்றி ஆர்ப்பாட்டம் பண்ணிகொண்டிருன்தது.

ஆனாலும் மித்து “உன்ற மாமா ரொம்ப ரசனகாரர்தான்” என்று அவள் தோழி சொல்ல

“ஆமாம் மித்து இந்த புடவை ரொம்ப நல்லா இருக்கு.”என கார்த்திகா சொல்ல

“இது எனக்காக மாமா டிசைன் பண்ணி வாங்கினது” என பெருமையுடன் சொல்லி கொண்டிருந்தாள் மித்து.


“சீக்கிரம் பொண்ணை வர சொல்லுங்கோ என ஒரு சத்தம் போட மித்துவ சீக்கிரம் வர சொல்லுங்க” என மஞ்சு சொல்லி கொண்டிருந்தார்.

இங்கு வனஜாவோ சீக்கிரம் போப்பா என டிரைவரை விரட்டி கொண்டிருந்தார்.

“ஏம்மா நேரமாகிடுச்சுனா பரவாயில்லை ...மதியம் இருந்து தரிசனம் பண்ணிட்டு வரலாம்” என ருத்ரா சொல்ல

“ஆமா என் கஷ்டம் உனக்கு எங்க புரியபோகுது” என சொல்லி கொண்டிருக்க காரும் ஓரிடத்தில் நின்றது .

என்னம்மா கார் இங்க நிற்குது என ருத்ரா சொல்லி முடிக்கும் முன்பே வேகமாக இரண்டு பெண்கள் ஓடி வர “என்ன இவ்ளோ நேரம் “ என சொல்லிகொண்டே அவளை இழுத்து கொண்டு மேலே செல்ல

“என்னம்மா நடக்குது இங்க” என அவள் கத்திகொண்டே செல்ல

“ம்ம்ம் எல்லாம் எனக்கு தெரியும் நீ நட “ வனஜா சொல்ல
என்னது!!!!!!!!!! ... என அவள் கத்தும் முன்பே அவளை இழுத்து கதவை மூடிய வனஜா அமைதியா” நான் சொல்றத கேளு...இல்ல அப்புறம்” என மிரட்ட

அதற்குள் புடைவை நகை எல்லாம் வர அவளை சுற்றி இரண்டு பெண்கள் அலங்காரம் பண்ண

ருத்ராவிர்க்கோ எதுவும் புரியவில்லை.எல்லாம் முடிந்தாகிவிட்டது என அவர்கள் சொல்லி விட்டு வெளியே சென்றனர்.


இப்போது அறையில் வனஜாவும் ருத்ராவும் மட்டுமே....”அம்மா என்ன இது எல்லாம்” என ருத்ரா கேட்க

“எதுவும் பேசாத...நான் சொல்றபடி நீ செய்” என வனஜா மிரட்ட

“முடியாது...நான் இப்பவே இங்க இருந்து குதிச்சுடுவேன்” என சொல்லி கொண்டே கதவின் அருகில் செல்ல

அதற்க்குள் கதவை திறந்த ஒரு உருவம் “என்ன சத்தம் இங்க...எல்லாம் ரெடியா” என கேட்டு கொண்டே உள்ளே வர

அங்கு சமையல் இடத்தில் மேற்பார்வை செய்து கொண்டிருந்த அர்ஜுனை நோக்கி ஓடிவந்த ரகு

“டேய் மாப்பிள்ள என்னடா இங்க நிற்கிற...அங்க உனக்கு நிச்சியதார்த்தம்னு சொல்றாங்க என சொல்ல, பொண்ணு ஏதோ பக்கத்து ஊராம்” என சொல்ல

ஒரு நிமிடம் அர்ஜுனைனின் இதயம் நின்று துடித்தது.

“யாருடா சொன்னது” என வேகமாக அவனை கேட்டு கொண்டே உள்ளே செல்ல

“இங்க என்ன சத்தம்...எதுக்கு இந்த அழுகை...எனக்கு அழுகுற பொண்ணுங்களை கண்டால் பிடிக்காது “என சொல்லிகொண்டே ருத்ராவின் கையை பிடித்து வா என இழுத்துக்கொண்டு வெளியில் நடக்க

அவரை பார்த்ததும் பிரம்மை பிடித்தவள் போல் நின்ற ருத்ரா ,அவர் கையை பிடித்து இழுத்த பிறகே நிதானத்திர்க்கு வந்தவள்
“ஆன்ட்டி “என சொல்ல...

“இன்னும் என்ன ஆன்ட்டி ...அத்தைன்னு சொல்லு” என சொல்லி கொண்டே அவளை அழைத்து கொண்டு மாணவறை நோக்கி நடந்தாள் மஞ்சு .
 

Lashmi Ravi

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
145
கோபத்தில் முகம் ஜொலிக்க,வேகமாக உள்ளே வந்தவன் மஞ்சு ருத்ராவின் கையை பிடித்து அழைத்து வருவதை பார்த்தான்.ஒரு நிமிடம் அப்படியே நின்றவன் பின்னர் தலையை உலுக்கி மீண்டும் பார்க்க

“என்ன மச்சான் ....இன்னும் சந்தேகமா “என அகில் காதருகில் கேட்க

அவனை திரும்பி பார்த்த அர்ஜுன்....ம்ம்ம் எனது தலையை ஆட்ட

“கனவில்லை நிஜம்....சீக்கிரம் கிட்ட போய் நின்னுடு ...அப்புறம் அந்த இடத்துக்கும் 2 ஆண்ட்டீஸ்ம் சேர்ந்து வேற ஆள நிற்க வச்சுடுவாங்க” என சொல்ல

அப்போ இது என அவன் யோசிக்க

“போடா....இப்பதான் யோசிச்சுட்டு இருக்கான்” என அவனை பிடித்து முன்னே தள்ள

அந்த நேரத்தில் ருத்ராவும் அவன் அருகில் வர இரண்டு கண்களும் ஒன்றோடு ஒன்று கலந்தன.இருவரும் சிறிது நேரம் அப்படியே நிற்க

“டேய் அர்ஜுன் பப்ளிக் பப்ளிக் ....எல்லாரும் பார்கிறாங்கடா...ஏண்டா இப்படி என் மானத்த வாங்கிற” என மஞ்சு வாய்க்குள் மெதுவாக முனக

அப்போதுதான் சுற்றும் கவனித்தவன் அனைவரும் இவர்களையே பார்த்து கொண்டிருக்க

ஐயரோ பொண்ணை அழைச்சுட்டு வாங்க என மறுபடியும் சொல்ல

வேகமாக அர்ஜுன் முன்னே செல்ல

“நீ எங்கட போற....பொண்ணதான்டா கூப்பட்றாங்க” என ரகு அவனை இழுத்து பிடிக்க

ஹிஹிஹி என வழிந்தவன்,ரொம்ப வழியாத வந்து டிரஸ் மாத்து என அவனை இழுத்து சென்றனர்.

அங்கு மஞ்சுளா பத்மாநாபன் தம்பதிகளின் மகனாகிய அர்ஜுனக்கும் வனஜா செந்தில்நாதன் மகளாகிய ஆருத்ராவிர்க்கும் நிச்சயதாம்பூலம் வாசிக்கபட்டது. பின்பு அர்ஜுனை வரவழைத்து ஒரே மேடையில் இருவரையும் அமரவைத்து சடங்குகளை செய்தனர்.அந்த இடமே சந்தோஷ அலைகளில் நிரம்பி வழிந்தது.

ஆருத்ராவிற்க்கோ நடப்பது எல்லாம் புரியாமல் இருக்க

அர்ஜுன் அவளருகில் “குட்டிம்மா ரொம்ப நேரமா நான் மட்டுமே உன்னை பார்க்கிறேன்...கனவுலே இருக்கியே...கொஞ்சம் என்னையும் பாருடா...நம்ம நினைச்சுது நடந்திட்டு இருக்கு” என சொல்ல

அவனது குரல் கேட்டு நிஜம் என நினைத்து அவனை வெட்கத்துடன் திரும்பி பார்க்க

அவளது அந்த முகத்தை கண்களை அசைக்காமல் பார்த்து கொண்டிருந்தான் அர்ஜுன்

எல்லாம் முடிந்தும் அவர்கள் அந்த இடத்தை விட்டு எழாமல் அமர்ந்திருக்க

“மச்சான் ஏற்கனவே ரொம்ப நாள் உன் தங்கச்சிக்காக காத்திருக்கேன்.கஷ்டப்பட்டு கல்யாணம் மாணவறை வரைக்கும் வந்துட்டேன். இனியும் என்னால பொறுத்திருக்க முடியாது கொஞ்சம் இடத்தை காலி பண்றியா” என அவன் அருகில் வந்து அகில் பல்லை கடித்து கொண்டே மெதுவாக சொல்ல

“சாரிடா அகில் “என்றவன் ,அவள் கையை பிடித்தபடியே நகர

பொண்ண வரசொல்லுங்கப்பா என ஐயர் டென்ஷன் ஆக

“ மித்து இங்க வா “என அவளை அழைத்து வந்து அவனே மணவறையில் அமர வைக்க

“என்ன மாமா எதுக்கு இவ்ளோ அவசரம்...அதுக்குதான் நாங்க எல்லாம் இருக்கிறோம்ல....... உங்களுக்கு சரினு சொல்லுங்க நாங்க ரெடி ...அதும் மது அதுக்காகவே வெயிட் பண்ணிட்டு இருக்கா” என அவனை சுற்றி இருந்த உறவுக்கார பெண்கள் சொல்ல

மித்து அகிலை திரும்பி முறைக்க...யார் அந்த மது என கேட்க

“அச்சோ அவங்க எல்லாம் எனக்கு மாமா பொண்ணுங்க ...சும்மா கிண்டல் பண்றாங்க மித்து...நீ நம்பாத” என அகில் பதற

“மாமா பயப்படாதீங்க ....இந்த மது எங்கடி போனா சீக்கிரம் வர சொல்லு” என ரேவதி கேட்க

“மித்துவின் முகம் கோபத்தில் சிவக்க

“அடிபாவிங்களா ...நல்ல இருக்கிற குடும்பத்துல எதுக்கு இப்படி கும்மி அடிச்சு விட்ரிங்க “என அவன் புலம்ப

“என்ன அபி...உனக்கு முன்னாடி இங்க ஏகப்பட்ட டிராக் ஓடிருக்குமாட்ட இருக்கு” என கார்த்திகா இன்னொரு வெடியை கொளுத்தி போட

“ஆகா இந்த கும்பல் வேற வந்திடுச்சா.....இனி அவ்ளோதான்” என தலையில் கை வைக்க

“என்ன மாம்ஸ் சிவ பூஜைல கரடி பூந்தா இப்படிதான இருக்கும்” என கார்த்திகா நக்கலாக கேட்க

“ஆஹா...சொல்லி வச்சு பலிவாங்ககிறாங்கலே” என மனதில் புலம்பியவன்

“அம்மா தாய்களா ... எதா இருந்தாலும் பேசி தீத்துக்கலாம் ...இந்த வகையான அட்டாக் வேண்டாம் என கெஞ்சியவன்...... என்னை பத்தி என் மித்துவுக்கு தெரியும்...நீங்க கொஞ்சம் குழப்பத்தை உண்டு பண்ணாம அமைதியா இருக்கிங்களா” என முகத்தை பாவமாக வைத்து கொண்டு சொன்னான் .

“ம்ம்ம் அந்த பயம் இருக்கட்டும்” என கார்த்திகா சொல்ல

அபியோ முகத்தை உர் என வைத்து கொண்டிருக்க

அதற்குள் ஒரு வயதான பெண்மணி “ஏண்டி குமரிங்களா இங்க என்ன பண்றிங்க...அவனை வம்பிழுத்தது எல்லாம் போதும் கிளம்புங்க” என சொல்லிவிட்டு

அபியின் அருகில் வந்தவர் “இது இந்த ஊர்ல வழக்கம்.தாலிகட்றதுக்கு முன்னாடி இப்படி முறைக்கற புள்ளைங்க பேசிக்குவாங்க...ஆனா மனசுல ஏதும் இருக்காது..சும்மா கிண்டல் பண்றதுக்குதான்” என விளக்க

அப்போதுதான் அகிலின் உயிரே திரும்ப வந்தது.ஹப்பாடா என பெருமூசுவிட்டவன்

அதற்க்குள் கார்த்திகா “இல்லேயே...இதுல ஏதோ “ என பேச்சே ஆரம்பிக்க

“ஐயரே கெட்டி மேளம் கெட்டி மேளம் சொல்லுங்க” என அவனே சொல்லி கொண்டு தாலி எடுக்க

இதை தானே நான் 5 நிமிடமா சொல்லிக்கிட்டு இருக்கேன் என அவர் சொல்ல அவர்களது அலம்பலகளை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவர்கள் மனம் விட்டு சிரிக்க நல்ல நேரத்தில் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ்த்த மித்துவின் கழுத்தில் மூன்று முடிச்சு போட்டான் அகில்.



ஹப்பா என பெருமூச்சுடன் அமர்ந்தனர் வனஜாவும் மஞ்சுவும்.

நடந்த விஷயங்களை அர்ஜுனக்கு ருத்ராவிர்க்கும் சொன்னவர்கள் ,பின்னர் அன்று வனஜாவும் மஞ்சுவும் பேசி முடிவு செய்த பின் அகிலை கூப்பிட்டு கேட்க

அவனுக்கு மிகவும் சந்தோசம்.அத்தை நீங்க என்ன சொல்றிங்களோ அதை செய்கிறேன் என்றான்.அதற்க்கு பின்புதான் இந்த திட்டத்தை தீட்டினர்.அர்ஜுன் ஆருவை தவிர அனைவர்க்கும் இது தெரியும்.கல்யாணத்திற்கு முன்பே நிச்சயம் வைக்க வேண்டும் என்பது அபியின் விருப்பம்.அண்ணனும் அண்ணியும் சேர்ந்துதான் எங்களை வாழ்த்த வேண்டும் என்று விருப்ப பட்டதால் இது திடிரென்று தீர்மானக்கப்பட்டது.இல்லையெனில் திருமணம் முடிந்த பின்பு தான் நிச்சியம் என்று இருந்தது.

“என்ன அர்ஜுன் சந்தோசமா” என மஞ்சு கேட்க அம்மா!!!!! என அவளை தூக்கி 2 சுற்று சுத்தியவன்

“டேய் டேய் எனக்கு இருக்கிறது ஒரே பொண்டட்டிடா “என பத்மநாபன் அலற

அவளை இறக்கிவிட்டு தந்தையை அணைத்து கொண்டவன் thank u பா என சொல்ல

இந்த சந்தோசம் உனக்கும் என்னைக்கும் இருக்கனும் அர்ஜுன் என அவரும் மனதார வாழ்த்தினர்.

வனஜாவை கட்டி பிடித்து அழுத ருத்ரா” ஐ லவ் யூ மா” என சொல்லி கொண்டு இருக்க

“இங்க என்னப்பா நடக்குது.....கல்யாணம் பண்ணவங்க அம்போன்னு நிற்கிறோம் ....நிச்சியம் முடிஞ்சவங்களை சுத்தியே எல்லாரும் பேசிட்டு இருக்கீங்க...வாங்க மாமா நம்ம ஓடிபோயடலாம்...இவங்களை எல்லாம் கூப்பிட்டு கல்யாணம் பண்ணதே தப்பு” என மித்து வேகமாக சொல்ல

ஒரு நிமிடம் அனைவரும் அவளது பேச்சில் அதிர்ந்தவர்கள் பின்னர் அதன் அர்த்தம் புரிந்து சிரிக்க

அவள் அருகில் வந்து தோளோடு அணைத்து கொண்ட அர்ஜுன் “அபிம்மா நீ எப்போதும் இந்த சந்தோசத்தோட இருக்கணும்டா” என சொல்ல அவன் தோளில் சாய்ந்தாள் அவன் அன்பு தங்கை.

பின்னர் ஊர் பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்க அனைவருமே “எத்தனையோ கல்யாணத்தை பார்த்து இருக்கிறோம்.இது போல் ஒரு கல்யாணத்தை பார்த்தது இல்லை என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் எல்லாம் நல்ல படியாக முடிந்து விட்டது” என பேசி சிரித்தனர்.

அனைவரும் பேசிகொண்டிருக்க அர்ஜுன் மஞ்சுவை தனியாக அழைத்து சென்று அம்மா அதான் எல்லா பிரச்சனையும் முடிஞ்சுருச்சே....எங்க கல்யாணத்தையும் ஏன் தள்ளி போடணும்” என கேட்க

மஞ்சு அவனை முறைக்க

“இல்லைமா...ஒரே செலவோட முடிஞ்சுடும்ல அதான் கேட்டேன்” என மெதுவாக சொல்ல

“ஏண்டா இப்படி அலையற.....அடுத்த முகூர்த்தத்துல உங்க கல்யாணம் தான் ...ரொம்ப பேசினா அப்புறம் அடுத்த வருசத்துக்கு தள்ளி போட்ருவேன்” என மிரட்ட

“இல்லைமா நீங்க என்ன பண்ணாலும் சரி என சொல்லிகொண்டே அந்த இடத்த விட்டு வேகமாக வந்தவன் எதிரில் வந்து கொண்டிருந்த ருத்ரா மீது மோத

“என்னாச்சு அஜூன்” என அவள் கேட்க

அவன் விபரத்தை சொல்ல

“விடுங்க அஜுன் கல்யாணம் தான அடுத்த முகூர்த்தம் ..மத்ததுக்கு எல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லில” என சொன்னவள் அவனை பார்த்து கண்ணாடிக்க

“குட்டிம்மாமாமாமாமா!!!!!!!!!!!!!!!!!!!!!!! என அவன் அவளை அணைக்க வர

வெவே என பலித்து கொண்டே அங்கிருந்து ஓடினாள் அவனின் நெஞ்சை கொள்ளை கொண்டவள்.


அடுத்த முகூர்த்தத்தில் அர்ஜுனனின் திருமணம் மிகவும் ஆடம்பரமாக முடிந்தது.திருமணம் முடிந்து மாப்பிள்ளை வீட்டிற்கு செல்லும் நேரத்தில் ஆருவிர்க்கு அடிவயிற்றில் இருந்து சில்லென்ற பய உணர்வு மேலேளுந்தது.அனைவரும் அவளை எதிர்பார்த்து நிற்க அவளோ கைகளை பிணைந்து கொண்டே அறைக்குள்ளே இருக்க

அர்ஜுன் அவளை அழைக்க உள்ளே செல்ல அவனை தடுத்த மஞ்சு அவர் உள்ளே வந்தார்.

அவளிடம் வந்தவர் அவள் முகத்தை பார்த்ததும் மனதிற்குள் சிரித்து கொண்டே ஆனால் அவள் அருகில் வந்து...”என்ன பயம்மா இருக்கா...ஆமா நான் கொடுமைக்கார மாமியார்தான்.உன்னை பழிவாங்கதான் இந்த கல்யானத்திர்க்க சம்மதித்தேன்” என வில்லி ரேஞ்சுக்கு பேச

சாதரணமாகவே ஆடுபவள் நம்ம ருத்து...இதை கேட்டது அவள் சும்மா இருப்பாளா....”இந்த வேலை எல்லாம் எங்கிட்ட வச்சுகாதிங்க......அதுக்கெல்லாம் நான் அசரமாட்டேன்....பார்க்லாம் நீங்களா ...நானான்னு” என வேகமாக சொல்லி கொண்டே வெளிய வர

அவளது வேகத்தை பார்த்த அர்ஜுன் ஆஹா அதுக்குள்ள வில்லங்கம் ஆரம்பிச்டுச்சா என நினைத்து கொண்டே மஞ்சுவே பார்க்க அவர் கட்டை விரலை தூக்கி வெற்றி என சைகை செய்ய அவன் முகத்தில் அப்போது தான் நிம்மதி திரும்பியது.

“அர்ஜுன் இப்படியே எத்தன நாளைக்கு” என ஒரு குரல் அவன் அருகில் கேட்க திரும்பியவன் அங்கு பத்மநாபன் நின்று சிரித்து கொண்டிருக்க

“என் நிலைமை உங்களுக்கு அப்படி இருக்கு என சொன்னவன் எப்டிப்பா சமாளிக்கிறது” என பாவமாக கேட்டான்.

“எல்லாம் சரி ஆகிடும் என அவர் சொல்ல ....அப்போ
மாறிடும்னுசொல்றிங்கள என அர்ஜுன் கேட்க இல்லைடா உனக்கு பழகிடும்னு சொல்றேன்” என அவர் சொல்லி சிரிக்க

“ம்ம்ம்ம் எம் பொலப்புதான் சிரிப்பா சிரிக்க போகுது இனி” என் சொல்லிகொண்டே காரில் அமர்ந்தான்.

அன்றைய இரவு இனிய இரவாக இருவருக்கும் இருக்க ஒரு வாரம் எந்த பிரச்சனையும் இல்லாமல் ஓடியது.

அன்று காலை ஆருத்ராவை அழைத்த மஞ்சு “இன்னும் சிறிது நாளைக்கு நீ வேலைக்கு போக வேண்டாம்.உனக்கு கடினமான வேலை தரலாம் என்று இருக்கிறேன் அதை தான் நீ பார்க்க வேண்டும் “என்றார்.

ஏற்கனவே அர்ஜுன் அம்மாவிடம் ஏதும் பேச வேண்டாம் என்று அவளிடம் சொல்லி வைத்து இருந்ததால் அவள் சொல்வதை அமைதியாக தலை ஆட்டினாள். ஆனால் கோபம் நெஞ்சுக்குள் கனன்று கொண்டிருந்தது.

இந்த நீ என்ன வேலை செய்யணும் அப்படின்னு இதுல இருக்கு என ஒரு லிஸ்ட் அவளிடம் கொடுத்தார் மஞ்சு.அதை வாங்கி கோபமாக பிரித்தவள்

அதில் சீக்கிரம் எனக்கு பேரனோ பேத்தியோ பெத்து கொடு...இது தான் உனக்கு முழு நேர வேலை என இருக்க

“அத்தை” என சந்தோசத்தில் அவளை கட்டி தழுவி கன்னத்தில் முத்தமிட

“அச்சோ என்னடி இது....எம் பையன் நிலைமை ரொம்ப கஷ்டம்” என சொல்ல

“இப்போ தெரியுதாமா” என கேட்டு கொண்டே அவன் உள்ளே வர

நடந்த விஷயங்களை சொன்ன ஆரு அந்த லிஸ்டில உள்ளதை மட்டும் சொல்லாமல் அவனிடம் அதை காட்ட அவன் சிரித்து கொண்டே இப்ப தெரியுதா எங்க அம்மாவை பத்தி என சொல்ல

நல்ல ஜால்ரா போட்ரடா நீ .....என்னோட பேரை கப்பத்திட்டடா என பத்மநாபன் அவனை தட்டி கொடுக்க

அனைவரும் சிரிக்க

அந்த வீட்டில் சந்தோஷ தேவதை நிரந்தர வாசம் செய்தாள்.



அன்பு என்னும் தோட்டத்தில்

ஆசை என்ற விதைகளை விதைக்க

அதற்கு பாசம் என்னும் நீர் ஊற்றி

நேசம் என்னும் உரமிட்டு

நம்பிக்கை என்னும் வேலி அமைத்து

பாதுகாத்து வளர்த்தாலும்

புல்லுருவி என்பது முளைக்கதானே செய்யும்.

அதை முனையிலே கில்லி எறிந்து விட்டால்

விதைகள் பூவாகி காயாகி கனியாகி

அனைவருக்கும் பலன் தரும்

இதே புரிந்து கொண்ட இந்த உள்ளங்கள்

தங்கள் இல்லத்தை சந்தோஷ பூக்களால்

அலங்கரித்தன !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


ஒளிபடைத்த கண்ணினாய் வா வா இனிதே நிறைவு பெறுகிறாள்


நன்றி



 
Top