• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ஒளிப்படைத்த கண்ணினாய் - 13

Vathani

Administrator
Staff member
Joined
Jul 23, 2021
Messages
874
 அத்தியாயம் 13


என்னது!!!!!!!!! என் அதிர்ச்யில் அர்ஜுன் எழ

“என்னாச்சுடா....டேய் அர்ஜுன் என்ன ஆச்சு” என அகில் அவனை உலுக்க

அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றவன் பின்னர் சுதாரித்து “நமக்கு பேங்க் லோன் சாங்க்ஸன் ஆகலைடா...நம்ம கொடுத்த சூரிட்டி பத்தலையாம்.இப்ப என்ன பண்றது.எல்லாவேலையும் பாதில இருக்கு .....இந்த மாதம் நம்ம கிட்ட இருக்க பணத்தை வச்சு சமாளிச்சிடலாம்.அடுத்த மாதம்”..... என அர்ஜுன் புலம்ப

“அர்ஜுன் பொறுமையா இரு.இது பெரிய ப்ராஜெக்ட் ...நம்ம லெவல் மீறி இதை செய்யறோம்.அதனால இது போன்ற தடைகள் எல்லாம் வரத்தான் செய்யும்.பொறுமையா யோசனை பண்ணா எல்லா பிரச்சனைக்கும் தீர்வு உண்டு .நீ கவலை படாதே..... நம்ம இதை நல்ல படியா முடிக்கிறோம்.முதல்ல பாங்க்ல பேசி பார்க்கலாம் வா” என அவனை அமைதி படுத்தினான் அகில்.

வங்கயில் இவர்கள் கேட்கும் கடனிற்கு இவர்கள் அடமானமாக கொடுத்திருக்கும் சொத்தின் அளவு குறைவாக இருப்பதால் அந்த அளவு தொகை தர வங்கி நிர்வாகம் மறுத்து விட்டது.வேண்டுமானால் இன்னும் வேறு எதாவது அடமானம் வைத்தால் அதற்கு வாய்ப்பு உண்டு என கூறிவிட்டது.

பத்மநாபனும் முயற்சி செய்து பார்த்தார்.ஆனால் முடியவில்லை.இப்படியே இரண்டு நாட்கள் ஓடின.

இரவு இரண்டு மணிக்கு ருத்ரா தொலைபேசி அழைக்க.....இந்நேரத்தில் யார் என்று சலித்து கொண்டே எடுத்தவள் அதில் அர்ஜுன் பேர் இருக்க

"அடபாவி இந்நேரத்திற்கு கூப்பிட்ரானே....அம்மா மட்டும் பார்த்தாங்க "என சொல்லி கொண்டே அருகில் உறங்கிய வனஜாவை பார்க்க அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க தொலைபேசியை ஆன் செய்த படியே குளியல் அறைக்குள் புகுந்து கொண்டாள்.

“என்ன அஜுன் நீ இந்த நேரத்துல கூப்பிடற ....இப்பதான் என் நியாபகம் உனக்கு வந்துச்சா...ஏண்டா நேத்து நீ போன் பண்ணல...மெசேஜ்ம் பண்ணல...உன் மனசுல என்ன நினச்சுட்டு இருக்க” என அவள் வழக்கம் போல் ஆரம்பிக்க

“ஹே நிறுத்து நிறுத்து...நீ நாளைக்கு காலையில நம்ம ஆபிஸ்க்கு வந்திடு ...உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்” என அவன் சீரியசாக அதே சமயத்தில் வேகமாக சொல்ல

“என்ன அர்ஜுன்...ஏதாவது பிரச்சனையா” என கேட்க

“ஆமா நீ கிளம்பி வா...எல்லாம் பிசினஸ் விஷயம்தான்” என கூறிவிட்டு தொலைபேசியை அனைத்தான்.

“வேலைன்னு வந்திட்டா கால நேரம் ஏதும் பார்கிறதில்லை இவன்...மணி என்னாவது....இன்னும் வேலையை பத்தி யோசிச்சுட்டு இருக்கான்” என மனதினுள் அவனை பற்றி பெருமை பட்டு கொண்டே உறங்க சென்றாள்.

மறுநாள் அர்ஜுனனின் அறையில் மூவர் கூட்டணி தீவிர விவாதத்தில் ஈடுபட்டு இருந்தது.

“வேற வழியே இல்ல அர்ஜுன்...உங்க அப்பா கணக்குல வராத அந்த ஒரு பங்கு அமௌண்ட கணக்குல கொண்டுவந்தா நம்ம சொத்தோட மதிப்பு அதிகமாகும்.பேங்க் கேட்கிற சூரிட்டிக்கும் இது போதும்” என ருத்ரா சொல்ல

“அப்ப இது ஒன்னும் பிரச்சனை இல்ல...அப்பா கேட்டா கொடுத்திடுவார்.நான் ரொம்ப பயந்திட்டேன்...தேங்க்ஸ் ருத்ரா” என சொல்ல

“ஆமா ருத்ரா...நீங்க பெரிய உதவி பன்னிருக்கிங்க” என அகில் சொல்லி கொண்டிருக்கும்போதே அவன் தொலை பேசி அழைக்க excuseme என சொல்லிவிட்டு அவன் வெளியே செல்ல

அவள் கீழே குனிந்து கணக்குகளை சரி பார்த்து கொண்டிருக்க...அப்போது இரண்டு கைகள் அவள் கழுத்தில் விழ ...சட்டென்று நிமிர்ந்தவள் அங்கு அர்ஜுன் அவள் தோளில் தன் கைகளை போட்ட படி அவள் பார்த்த கணக்குகளை இவனும் பார்க்க

ருத்ராவின் முகம் குங்குமாமாக சிவக்க....”அர்ஜுன் என்ன இது...இது ஆபிஸ் ...கையை எடுங்க” என அவள் சிணுங்க

“ஆமா ஆபிஸ்தான் இது...நீ கணக்கு பார்க்கிற..... நான் கணக்கு பண்றேன் அவ்ளோதான் “என சொல்ல

“என்ன இப்படி எல்லாம் பேசரிங்க என சிணுங்கி கொண்டே அகில் வந்து விட போறார் ....கொஞ்சம் தள்ளுங்க நீங்க” என அவள் சொல்ல

“யார் அவனா ....அவன் கிடக்கிறான் சாமியார் பையன்...அவனுக்கு என்ன தெரியும்......மனசுக்கு பிடிச்சவ பக்கத்துல இருக்கும்போது...அதுவும் இரண்டு நாளா பார்க்காம இப்ப பார்க்கும்போது இது கூட இல்லினா எப்படி?” என கேட்டு கொண்டே அவள் கன்னத்தோடு தன் கன்னத்தை உரசி கொண்டே பேச

கதவு தட்டும் சத்தம் கேட்டு சட்டேனென்று விலகி தனது இருக்கையில் அமர அகில் உள்ளே வரவும் சரியாக இருந்தது.


“சரி ருத்ரா நான் அப்பா கிட்ட பேசிட்டு சொல்றேன்” என அர்ஜுன் சொல்ல

“அப்போ நான் கிளம்பறேன் சார்.....எதாவது முக்கியமான விஷயமா இருந்த போன் பண்ணுங்க” என கிளம்பியவள்

“சார் அந்த file மட்டும் எடுங்க” என அகிலிடம் கேட்டதும் அவன் திரும்பி எடுக்க ...அதற்க்குள் ருத்ரா காற்றில் ஒரு முத்தத்தை அர்ஜுனுக்கு பறக்க விட....அர்ஜுன் சந்தோஷத்தில் துள்ள

“இதுவா என அகில் கேட்டதும் நன்றி சார்” என கூறி விட்டு கிளம்பினாள்.
.
காற்றில் வந்த காதலின் முத்தம் மனதை மயக்க ,அகில் தன்னை பார்த்து கொண்டு இருப்பதை அறிய வில்லை அர்ஜுன்.

“ok மச்சான் இனி பார்ப்போம்” என அர்ஜுன் சொல்ல

“அதான் எல்லாம் பார்த்தாச்சே ...இனி என்ன பார்க்கணும்” என அகில் கோபமாக சொல்ல

“என்ன பார்த்தடா” என அர்ஜுன் பதறி கேட்க

“என்னடா நடக்குது இங்க ....தொழில் விஷயமா வர சொல்லிட்டு நீ என்ன பண்ணிட்டு இருக்க ....எல்லாமே நான் பார்த்தேன்.....அந்த பொண்ண பார்த்தா நல்ல பொண்ண தெரியுது....உன் விளையாட்டு தனத்துக்கு அளவு இல்லயா....அதும் நம்ம இப்போ இருக்குற நிலைமைக்கு இது தேவையா “என கேட்க

“மச்சான் சாரிடா.....உன்கிட்ட நான் சொல்லல...நானும் ஆருத்ராவும் விரும்புறோம்....மூன்று மாசமா இது போய்கிட்டு இருக்கு.... அவளை பார்த்து இரண்டு நாள் ஆச்சா...அதான் கொஞ்சம் எமோஷனல் ஆகிட்டேன்” என வழிய

“ம்ம்ம் ...எனக்கும் கொஞ்ச நாளா சந்தேகம் இருந்தது...அதான் கொஞ்சம் சவுண்ட் விட்டு பார்த்தேன்...செம கில்லாடிடா நீ “ என அகில் கிண்டல் பண்ண

“அவன் சிரித்து கொண்டே ...இல்ல மச்சான் உன்கிட்ட சொல்லகூடாதுன்னு இல்ல ....இன்னும் கொஞ்சம் டெவலப் பண்ணிட்டு சொல்லாம்னு தான் “என அர்ஜுன் சொல்ல

“எப்படி என்னை சாமியாருன்னு உன் ஆளுகிட்ட சொல்ற அளவுக்கு டெவலப் ஆகிருக்க இதுக்கு மேலயுமா?????....அது எப்படிடா figuraa பார்த்தா கூச்சமே இல்லாம friend பத்தி மட்டமா சொல்லிட்ரிங்க”.... என அகில் நக்கலாக கேக்க

“ஹஹஹா எல்லாமே கேட்டுட்டியா” என அர்ஜுன் வழிய

“ரொம்ப வழியுது ...துடைச்சுக்கோ என சொல்லிவிட்டு சரி அர்ஜுன் தொழில்ளையும் கொஞ்சம் கவனத்த செலுத்து...இது தான் நமக்கு முக்கியம் “என்றான்.

“கண்டிப்பாடா....ம்ம்ம் அகில்” என இழுக்க

“தெரியுது.....தெரியுது...இந்த விஷயத்த மாமா அத்தைகிட்ட சொல்ல வேண்டாம் அவ்ளோதான.....முயற்சி செய்யறேன்” என சொல்லிவிட்டு நகர

“என்னது முயற்சியா...மச்சான் மாட்டி விட்டுடதடா” என அவன் கெஞ்ச

“ம்ம்ம் ...அத நான் சாமியாருன்னு சொல்றதுக்கு முன்னாடி யோசிச்ருக்கணும்” என சொல்லி விட்டு சிரித்தவன்....”போடா போய் வேலையை பாரு” என சொல்லிவிட்டு தனது அறைக்கு சென்றான்.


அன்று இரவு உணவு வேலை முடித்து விட்டு சிறிது நேரம் பேசிகொண்டிருந்தனர் அபி குடும்பத்தினர்.

“அப்பா வர வர இந்த மஞ்சு பண்றது ஏதும் சரி இல்லை....நேத்து என்ன பார்க்க நம்ம கார்த்தி வந்திருக்கா...அவளை பார்த்து வீட்டு வேலை எல்லாம் செய்வியானு கேட்டு இருக்காங்க....அவ என்கிட்ட வந்து புலம்பறா ....நானே எங்க வீட்ல வேலை செய்யறதுக்கு ஓபி அடிச்சுட்டுதான் இங்க வரேன் ....இங்க உங்க அம்மாவும் இப்படியே கேட்கிராங்கனு” என சொல்ல

“ஏன் மஞ்சு இப்படி பண்ற ....எப்ப பார்த்தாலும் இவகிட்ட வீட்டு வேலை செய்ய சொல்லி அவளை சிரமபடுத்தற” என கேட்க

“ம்ம்ம்...நல்ல கேளுங்கப்பா” ...என அபி இன்னும் தூண்டி விட

"இந்த கார்த்திகாக்கு வேற வேலையே இல்லையா ....அம்மா எதார்த்தமா கேட்டு இருப்பாங்க ...அத உன்கிட்ட வந்து போட்டு கொடுத்திட்டளா" என அர்ஜுன் மஞ்சுவிற்கு ஆதராவாக பேச

"நல்லா கேளு அர்ஜுன் ...இவகூட இருக்குற ஒரு பொண்ணாவது அடக்கமா இருக்கா ...எல்லாம் அறுந்த வாலுங்க" என மஞ்சு திட்ட

உடனே அபி "வேண்டாம் அர்ஜுன்" என அவனை பார்த்து முறைக்க

"விடு அர்ஜுன்...சின்ன பொண்ணுங்கதான ...சந்தோசமா இருந்திட்டு போகட்டும்" என அவளுக்கு ஆதரவாக பத்மநாபன் பேச

உடனே அர்ஜுன் “அப்பா நீங்க இவளுக்கு ரொம்ப செல்லம் கொடுக்கிரிங்க...அன்னைக்கு டூ வீலேர்ல அவளோ வேகமா போறா ரோட்ல...நானே பார்த்தேன்.இனி அவ வண்டி எடுக்க வேண்டாம்னு சொல்லுங்க...வேணும்னா உங்களோட கார்ல் வரட்டும்” என சொல்ல

“ஆமாண்டா அபிம்மா...நீ ரொம்ப வேகம்மா போற ....இனி நீ என்கூட வந்திடு” என பத்மநாபன் சொல்ல

உடனே அம்மாவும் மகனும் ஹய் பைவ் கொடுத்து கொண்டனர் .

உடனே அபி ..”.ஆமாப்பா...இப்போ டூ வீலேர்ல போறதும் பாதுகாப்பு இல்ல ...பகல் நேரத்திலேயே வண்டில இருந்து காருக்குள்ள பொண்ண கடத்துறாங்க “ என சோகமாக சொல்ல

“என்னடி உளற” என மஞ்சு அதட்ட

“அம்மா உங்களுக்கு விஷியம் தெரியாதா....அன்னைக்கு நான் வண்டில போறப்ப ஒரு சூப்பர் figureமா...அந்த பொண்ண ஒரு சப்ப figure பையன் அப்படியே கார்ல தூக்கி போட்டுட்டு போய்ட்டான்”...என விவரிக்க

“எப்போ!!!!!!” என அர்ஜுன் வியந்து கேட்டவன் சட்டென்று உரைக்க...அபியின் கண்களை பார்த்தவன் அவள் கண்ணடித்து கொண்டே சிரிக்க

“அச்சோ ...எவன் அப்படி பண்ணவன்...அவனுக்கு எல்லாம் அக்கா தங்கச்சியே இல்லயா” என மஞ்சு டென்ஷன் ஆக ‘

இங்கு அர்ஜுனுக்கோ அடிபாவி நம்ம கதைய ஓட்ராளா..இருக்காதே...யாருமே இல்லயே அப்ப என யோசிக்க

“நிஜமாவ அபிம்மா” என பத்மநாபன் சீரியசாக கேட்க ‘

“ஆமாப்பா...நிஜம் தான்....”

“அப்புறம் என்ன நடந்துச்சு” என மஞ்சு கேட்க

“கொஞ்ச நேரம் கழிச்சு அவனே அந்த பொண்ண கொண்டு வந்து இறக்கி விட்டுட்டான்”.....என சொல்ல

“ஹப்பா ...ஏண்டி இந்த கருமத்தை எல்லாம் நீ ஏன் பார்க்கிற....ரோட்ட்ட பார்த்து வண்டி ஓட்ட வேண்டியது தான” என மஞ்சு அவள் மேல் பாய


“ம்ம்ம் ...நல்ல கேளுங்கம்மா...அதுக்குதான் சொன்னேன்....இனி இவளை வெளியே அனுப்பாதிங்க...”என சொல்லிகொண்டிருக்கும்போது
‘’
“கண்ணா இரண்டாவது லட்டு திங்க ஆசையா” என மறுபடியும் அபி சொல்ல

“ஆஹா ...இவ எல்லாமே முழுசா பார்த்திருக்கா என தெரிந்தவன்....கண்ட கதை எல்லாம் நமக்கு எதுக்கு ...பனி கொட்டுது பாருங்க எல்லாம் வாங்க உள்ள போலாம்” என பரபரக்க

‘”என்னது பனி கொட்டுதா ...டேய் காத்து இல்லைனு தான் வெளியே வந்து உட்கார்ந்தோம்....இங்க போய் எங்க பனி வந்தது” என பத்மநாபன் கேட்க

“அச்சோ அப்பா தோழரி...இல்ல..... தெரியாம சொல்லிட்டேன் வாங்க...எனக்கு தூக்கம் வருது நான் படுக்க போறேன்” என அவசரமாக ஓட

“டேய் அண்ணா உனக்கு ரெண்டாவது லட்டு வேண்டாமா” என அபி கத்த

“சதிகாரி...இந்த எக்ஸ்ரே மூளைய வச்சுக்கிட்டு மனுசுல நினச்ச டயலாக் முதற்கொண்டு சொல்றா......போட்டு கொடுத்ருவாலோ....ம்ம்ம் அப்படி செய்ய மாட்டா...ஆனாலும் கொஞ்சம் நல்லவ தான்..”என நினைத்து கொண்டே மேலே சென்றவன் தொழில் நியாபகம் வர

இறங்கி மீண்டும் கீழே வர அதற்குள் அனைவரும் படுக்க செல்ல...பத்மநாபன் மட்டும் நடை பயிற்சியில் இருந்தார்.

“அப்பா உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் என்றவன்...காலையில் நடத்தை சொல்ல அப்பா அந்த பணத்தை கணக்கில் கொண்டு வந்து விட்டால் போதும்...நமக்கு எந்த பிரச்சனையும் இல்ல...நீங்க ஆடிட்டர்கிட்ட சொல்லிடுங்க” என சொல்லி விட்டு நகர...

“இல்ல அர்ஜுன் அது முடியாது....அதை யாருக்கும் கொடுக்க மாட்டேன்” என பத்மநாபன் அழுத்தமாக சொல்ல

திரும்பி நடந்தவன் அப்படியே நின்று...”அப்பா என்ன சொல்றிங்க.....புரிஞ்சுதான் பேசறிங்களா......அப்பா எனக்கு உங்க பணம் வேண்டாம்...இந்த ஆர்டர் முடிஞ்சா உடனே அதை கொடுத்து விடுகிறேன்....ஆனா இப்போ அத கொடுங்க போதும்” என சொல்ல

“இல்ல அர்ஜுன்...அது முடியாது.....”என அவர் சொல்ல

“ஆமாம்...இந்த பணம் யாருக்கு???????....யார்க்காக அந்த பங்கு??” என அவன் கேட்க

அவன் கண்களை உற்று பார்த்தவர்

“இல்லப்பா....நான் திருப்பி கொடுத்தறேன்” என அர்ஜுன் தடுமாற

“இது வரை உன்னிடம் நான் கோபபட்டு பேசியது இல்லை...இன்று பேச வச்சிடாத “என சொல்லிவிட்டு அவன் பதிலை எதிர்பார்க்காமல் அவர் உள்ளே சென்றார்.

இதை எதிர்பார்க்காத அர்ஜுன் சில மணி நேரம் அவன் மூளை வேலை செய்யவே இல்லை....பின்னர் அமைதியாக தன் அறைக்கு திரும்பினான்.

காலையில் நேரமே கிளம்பி கம்பெனிக்கு வந்தவன் நடந்ததை அகிலிடம் சொல்ல

அகில் பயங்கர டென்ஷன் ஆக ...”நான் வேணா கேட்கட்டுமா...மாமாகிட்ட....உனக்கு கொடுக்காம யாருக்கு கொடுக்கிரதுக்கு அந்த பங்கை வச்சிருக்கார்” என எகிற

“இல்ல அகில்...அப்பா இது வரை எங்கிட்ட இப்படி பேசினது இல்லை....எதோ இருக்கு” என அவன் சொல்ல

“இப்போ என்னடா பண்ணலாம்.....buyers வேற வரபோறாங்க” என அகில் கவலை பட

“எனக்கும் அதுதான் புரியல...அப்பாவ எதிர்த்து என்னால ஏதும் பேச முடியல” என்றான்.

“அர்ஜுன் எனக்கு ஒரு ஐடியா” என்றவன்...பொறு என சொல்லிவிட்டு திரும்பி வரும்போது ஒரு டாகுமென்ட்டோடு வர.... இந்தா இத பிடி என கொடுத்தான்.

“என்னடா இது” என அர்ஜுன் வாங்கி பார்த்தவன்

“அகில் இது உன் வீட்டு டாகுமென்ட்” என சொல்லிவிட்டு அவனை பார்க்க

அவன்” ஆமா அதுகென்ன இப்போ சும்மாதான இருக்கு.......இதை கொண்டுபோய் பாங்கில் கொடுக்கலாம்.இதோட மதிப்பும் இப்ப அதிகம் தான்” என சொல்ல

“இல்ல அகில் வேண்டாம்” என அர்ஜுன் மறுக்க

“ஏன் அர்ஜுன் ........நான் கொடுத்தா நீ வாங்க மாட்டியா” என ஒரு மாதிரியான குரலில் கேட்க

“டேய் மச்சான்” என அவனை கட்டி அணைத்தவன் வா போகலாம் என இருவரும் வங்கிக்கு சென்று பேசி அந்த பிரச்சனைக்கு முற்றுபுள்ளி வைத்தனர்.

இரண்டு நாட்கள் பத்மநாபன் யாரிடமும் பேசவில்லை.அமைதியாக இருக்க ,மஞ்சு அதை அர்ஜுனிடம் சொன்னாள் .

பத்மநாபனை பார்க்க அவர் அறைக்கு சென்றவன்...அவர் யோசனையில் இருக்க ...”அப்பா...அப்பா” என இருமுறை அழைத்தும் அவரிடம் பதில் இல்லாமல் போக

“அப்பா என அருகில் வந்து அவர் தோளை தொட்டவன்.....ம்ம்ம் ...ஒ ...அர்ஜுன் வா...வா என்றவர்” மீண்டும் ஏதும் பேசாமல் தலை குனிய

“அப்பா உங்க மேல எனக்கு எந்த கோபமும் இல்ல...நீங்க கொடுக்கலைன்னா அதற்க்கு எதாவது முக்கியமான காரணம் கண்டிப்பாக இருக்கும்.எனக்கு புரியுது ...நீங்க போட்டு குழப்பிக்காதிங்க” என சொல்ல

அர்ஜுன்......எனக்கு பெருமைய இருக்குடா...என்னோட மனச நீ இந்த அளவுக்கு புரிஞ்சு வச்சிருக்கியே அதே போதும் மை டியர் சன் ........கண்டிப்பா நேரம் வரும்போது அதற்கான காரணத்த சொல்றேன்....ஆமா அகில் லேன்ட் வச்சுதான் பிரச்னையை சரிபண்ணினிங்களா ...மேனேஜர் போன் பண்ணினார்” என சொல்ல

“ஆமாப்பா ...அவன்தான் சரியான நேரத்துல அந்த உதவியை பண்ணினான் “ என்றான் அர்ஜுன்.

பத்மநாபன் முகம் மறுபடியும் சுருங்க...”அப்பா விடுங்க என் அப்பா எனக்கு எப்பவும் நல்லது தான் செய்வார்...எனக்கு நம்பிக்கை இருக்கு....நீங்க இப்படி இருக்காதிங்க...அம்மா ரொம்ப பீல் பண்றாங்க என்றவன் ...எங்க உங்க தளபதியை காணோம்” என கேட்க

அவர் சிரித்து கொண்டே "அவள் தூங்க போய்ட்டாள்....அப்புறம் அர்ஜுன் டிசைன்ஸ் சாம்பிள் காட்டும்போது அபிதும் சேர்த்துக்கோ...ரொம்ப சின்சியரா பண்ணிட்டு இருக்கா"....என சொல்ல

"எனக்கும் தெரியும்பா....நான் பார்த்துகிறேன்...நீங்க கவலைப்படாதிங்க....சரிப்பா நான் போய் தூங்கபோறேன் "என சொல்லிவிட்டு அவன் நடக்க அவன் போவதை பார்த்துகொண்டே இருந்தார் பத்மநாபன்.
அவர் கண்ணில் தெரிவது சந்தோசமா....இல்லை கர்வமா????????

தன் உயிரினில் இருந்து பிரிந்த கிளை

தன்னை மீறி வளரும்போது

அதை கண்டு தாளாத இன்பம்

கொண்டு

மனநிறைவோடு வாழ்த்துவது

பெற்றமனம் மட்டுமே!!!!!!!!!!!!!!!

இந்த வாழ்த்துக்கள் தொடர்ந்து அந்த கிளைக்கு கிடைக்க நாமும் வாழ்த்துவோம் .
 

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,971
அர்ஜுன் ரெண்டாவது லட்டு திங்க ஆசப்பட்டது எல்லாம் தெரிஞ்சிடுச்சே இப்படியா இந்த பயபுள்ள பப்லிக்கா தூக்கிட்டு போவான் 😁😁😁😁😁😁
 
Top