• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ஒளிப்படைத்த கண்ணினாய் - 19

Vathani

Administrator
Staff member
Joined
Jul 23, 2021
Messages
863
அத்தியாயம் 19

நந்தவனமாய் பூத்து குலுங்கிய இல்லம் இன்று வறண்ட பாலைவனமாய் காட்சி அளித்தது..அனைவரும் அவரவர் எண்ணங்களில் மூழ்கி இருந்தனர்.

ஆசிரமத்தில் ருத்ராவை பார்த்ததும் அதிர்ந்த மஞ்சு நீயா !!!!!!!!!என கேட்க

ருத்ராவோ எந்த பதிலும் சொல்லாமல் நிற்க

இதை கவனிக்காத அர்ஜுன் சந்தோசத்தில் “அம்மா உங்களுக்கு ஆருத்ராவ தெரியுமா?அப்போ பிரச்சனயே இல்லை” என சொல்லி கொண்டிருந்தவன் இருவரும் எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக இருப்பதை பார்த்து திகைத்தான்.

பத்மநாபன் உடனே “என்ன மஞ்சு உனக்கு ஆருத்ராவை முன்பே தெரியுமா? பாருடா அர்ஜுன் மாமியாரும் மருமகளும் ஏற்கனவே சந்திச்சிருக்காங்க” என சிரித்து கொண்டே சொல்ல

“யாருக்கு யார் மருமக ?????அது ஒருநாளும் நடக்காது!!!!!! ....அர்ஜுன் என்னை முதல்ல வீட்ல கொண்டுபோய் விடு” என மஞ்சு கிளம்ப

“ஏம்மா ....என்னாச்சு “ என பதறிய அர்ஜுன் ருத்ராவையும் மஞ்சுவையும் மாறி மாறி பார்த்தான்.

“மஞ்சு என்ன இது.. வந்த இடத்துல இப்படியா நடந்துக்கிறது.நம்ம இங்க எதுக்கு வந்தோம் அதை முடித்து விட்டு செல்வோம்.ஏற்கனவே அபி குழந்தைகளை பார்க்க போய்ட்டாள்..நீயும் உள்ளே போ” என அவரை உள்ளே அனுப்பிவிட்டு வந்தார்.

“என்னடா அர்ஜுன் ருத்ராவுக்கு மஞ்சுவை முன்பே தெரியுமா?ஆனா உங்க அம்மா ரொம்ப கோபபட்றாலே என்ன நடந்திருக்கும் ?”என்று கேட்க

“அர்ஜுன் எனக்கும் ஒன்னுமே புரியலை அப்பா “ என சொல்லிவிட்டு திரும்பியவன்

அங்கு ருத்ரா அப்படியே சிலைபோல் நிற்க,கண்களில் இருந்து கண்ணீர் அருவியாக கொட்டி கொண்டிருந்தது.

“ஆரு உனக்கும் அம்மாக்கும் எதாவது பிரச்சனயா ? எதுக்கு அம்மா உன்னை பார்த்து கோபபடறாங்க “என அவளை உலுக்கினான்.

ருத்ராவோ ஏதும் பேசாமல் அழுது கொண்டே நின்றாள் .

உடனே பத்மநாபன் “அர்ஜுன் ரிலாக்ஸ் ...பாவம் அந்த பொண்ணே அழுதுட்டு நிற்குது.நீ மேலும் அதை வேதனைபடுத்தாத...ருத்ரா எதா இருந்தாலும் நாளைக்கு பேசிக்கலாம். நீ கிளம்பும்மா” என்றார்.

அதற்க்கு தலையை மட்டும் அசைத்த ருத்ரா அப்படியே திரும்பி செல்ல இங்கு அர்ஜுனுக்கு தன உயிரே அறுந்து விழுவது போல் இருந்தது.

கவலையுடன் பத்மநாபனை திரும்பி பார்க்க ...”வேதனைகள் இல்லாத வெற்றி ஏதும் இல்லை அர்ஜுன்.பொறுமையா இரு...என்ன நடந்ததுன்னு விசாரிப்போம்.அப்புறம் அதற்க்கு தீர்வு கண்டுபிடிப்போம்.இப்போ வந்த வேலையை கவனிப்போம் வா” என்று அழைத்து சென்றார்.

வீட்டிற்கு வந்ததில் இருந்தே மஞ்சு ஒரே புலம்பல். “வேண்டாம் அர்ஜுன்.இந்த பொண்ணு நமக்கு வேண்டாம்.நான் உனக்கு இதை விட நல்ல பொண்ணா பார்கிறேன்.இல்லை நீயே வேற பொண்ணை பாரு” என்று சொல்லி கொண்டே இருந்தார்.

ஏன்?எதற்காக? என்ற கேள்விக்கு மட்டும் அவர் பதில் சொல்லவே இல்லை.இந்த பெண் வேண்டாம் என்ற ஒரு வார்த்தையை மட்டும் திரும்ப திரும்ப சொல்லி கொண்டிருந்தார்.வீட்டில் அனைவரும் கேட்டு பார்த்தனர்.சொல்ல மறுத்துவிட்டார் மஞ்சு.

சரி இரண்டு நாட்கள் அமைதியாக இருப்போம்.பின்பு இதை பற்றி பேசுவோம் என பத்மநாபன் முடிவுக்கு கட்டுபட்டு அதற்கு பிறகு யாரும் பேசவில்லை.

மறுநாள் காலை எப்போது போல் கம்பெனிக்கு கிளம்பினான் அர்ஜுன்.உடல் மட்டும் கிளம்பி கொண்டிருந்ததே தவிர மனம் அதிர்ச்யில் இருந்து மீளாமல் இருந்தது .மஞ்சு முதலில் கோபபடுவார்.பின்னர் சமாதானம் ஆகிவிடுவார் என்று தான் நினைத்தான்.இப்படி ஆகுமென்று நினைக்க வில்லை.

புறப்பட்டு கீழே வந்தவன் வீடே அமைதியாக இருக்க, அபி சமையில் அறையில் உருட்டி கொண்டிருந்தாள்.

“அபி அம்மா எங்கே?” என கேட்டான்.

“அம்மா தூங்கிட்டு இருக்காங்க...அப்பா தொந்தரவு பண்ணவேண்டாம்னு சொல்லிட்டாங்க .அதான் நான் டீ போடலாம்னு வந்தேன். நீ கிளம்பிட்டீயா ....உனக்கு ப்ரெட் டோஸ்ட் போட்டு தரட்டுமா” என கேட்க

“வேண்டாம் அபி...நீ ஆபிஸ் வரலியா?அப்பா எங்கே?” என கேட்டு கொண்டே அவரின் அறைக்கு சென்று கதவை மெதுவாக தள்ள அங்கு மஞ்சு நல்ல உறக்கத்தில் இருந்தார்.அவரையே சிறிது நேரம் பார்த்து கொண்டிருந்தவன் பின்பு தந்தையை காண சென்றான்.

வெளியே அமர்ந்திருந்த பத்மநாபனிடம் சென்றவன் “அப்பா ... அம்மா எதாவது சொன்னாங்களா?” என்றான்.

“இல்லை அர்ஜுன்.இரவு முழுவது ஒரே அழுகை.விடியற்காலையில் தான் உறங்கினாள்”..

சிறிது நேரம் அப்படியே நின்றவன்.”சரி நான் கிளம்ப்றேன்பா “என சொல்லிவிட்டு கிளம்பினான்.

அவனது நடையே அவனின் தளர்வை காட்ட,.வளர்ந்தும் குழந்தை போல் இருக்கும் மனைவியை நினைக்க பத்மநாபனின் மனதில் மீண்டும் ஒரு சுமை ஏறியது.

எப்போதும் புத்துணர்ச்சியுடன் உள்ளே நுழையும் அர்ஜுன் இன்று களை இழந்த முகத்துடன் உள்ளே வர கார்த்திக் மனதில் சந்தேகம் எழுந்தது.

“பாஸ் உடலை நிலை சரி இல்லயா? மாத்திரை எதாவது வேணுமா?” என்று கேட்க

எதுவும் வேண்டாம் என்று தலை அசைத்தவன் “அகில் எங்கே இருக்கான்” என்று கேட்டான்.

“அவர் வீட்லதான் இருக்கார் பாஸ்” என்றான் கார்த்திக்.

அகில் வெளியேறுவதால் அவனுடிய பொறுப்புகள் அனைத்து கார்த்திக்கிற்கு கொடுக்கப்பட்டது.அதனால் அகில் அதிகம் கம்பெனிக்கு வருவதில்லை.அன்றைக்கு நடந்த பேச்சு வார்த்தைக்கு பிறகு அகிலும் அர்ஜுனும் பேசி முடிவு பண்ணி அவர்களது நியூ ப்ரொஜெக்ட் டையிங் யூனிட் முழுவதும் அகிலின் வசம் ஒப்படைக்கப்பட்டது.அதை அவன் ஊரில் இருந்தே அவன் பார்த்து கொள்ளவேண்டும்.இதில் 80 %ஷேர் அகில்...மீதம் 2௦ % ஷேர் அர்ஜுனோடது என முடிவு செய்யப்பட்டது.அது சம்பந்தமான வேலைகளை அகில் பார்த்து கொண்டிருந்தான்.





 வீட்டின் அழைப்பு மணி ஓசை கேட்க ...”கிளம்பும் நேரத்தில் யாரது” என சலித்துகொன்டே கதவை திறந்த அகில் ,அங்கு அர்ஜுனை கண்டதும்

“டேய் மச்சான் ....என்னடா இந்த நேரத்துல வந்திருக்க...நான் தான் எல்லா பைல்ஸ்ம் கார்த்திகிட்ட கொடுத்து விட்டுஇருந்தனே “என்றான்.

“முதல்ல உள்ளே போலாமா “என சொல்லி கொண்டே ,அவனை தள்ளி கொண்டு உள்ளே நுழைந்தவன் சோபாவில் தொப்பென்று அமர்ந்தான்.

“என்ன அர்ஜுன் என்ன ஆச்சு?ஆமா நேத்து ருத்ராவ பார்க்க போறிங்கனு மித்து சொன்னா .எனக்கு வேலை இருந்தது அதான் வரலை.என்ன எல்லாம் ஓகே தான” என்றான்.

“எனக்கு ஒன்றுமே புரியல அகில்....என்னை சுத்தி என்னனென்னமோ நடக்குது என்றவன் நேற்று நடந்த விபரங்கள் அனைத்தையும் சொன்னான்.அம்மா ஏன் இப்படி சொல்றாங்கனு புரியல...அவ என்னடானா அழுதுகிட்டே நிற்கிறா....எனக்கு பைத்தியமே பிடிச்சிடும் போல இருக்கு.அபி உன்கிட்ட சொல்லிருப்பனு நினச்சேன்” என்றான்.

“இல்ல மச்சான் நேற்று முழுவதும் நான் வெளியல இருந்தேன்.இரவு 12 மணிக்கு தான் வீட்டுக்கு வந்தேன்.அங்க அலைபேசி எடுக்காது” என்றான்.

“சரி இப்போ என்ன பண்ணலாம்? அத்தை காரணம் இல்லாம அப்படி சொல்ல மாட்டங்க.கண்டிப்பா நியாமான காரணம் எதாவது இருக்கும்” என்றாவனை அர்ஜுன் நிமிர்ந்து பார்க்க

அவனது வேதனையை தாங்க முடியாத அகில் “.மச்சான் எந்த பிரச்னைக்கும் தீர்வு உண்டு.நீ கவலைபடாதே.ஆமா நீ ருத்ராகிட்ட பேசினியா” என்றான்.

“இல்ல அகில்.நேற்று முழுவதும் போன் ஸ்விட்ச் ஆப் னு வருது.அதான் மேலும் குழப்பம். அவளுக்கு என்ன பிரச்சனையோ...என்னால முடியலடா” என்றான்.

“அப்படியா!!!!!!!!!!!!!” என யோசனையில் ஆழ்ந்தான் அகில்.
சிறிது நேரம் கழித்து “சரி என்ன நடந்ததுன்னு முதல்ல கண்டு பிடிப்போம்.ஆமா நீ சாப்ட்டியா என கேட்டவன் அருகில் இருக்கும் பழத்தை அவனுக்கு கட் பண்ணி வைத்தவன் நீ முதல்ல சாப்பிடு.அப்புறம் யோசிக்கலாம்” என்றான்.

மீண்டும் அழைப்பு மணி ஓசை கேட்க யாராக இருக்கும் என யோசனையுடன் கதவை திறக்க அங்கு ருத்ரா நின்று கொண்டிருந்தாள்.

முதலில் சற்று தடுமாறியவன் பின்னர் “வாங்க...வாங்க” என உள்ளே அழைத்து சென்றான்.

ருத்ராவை பாரத்தும் “ஆரு!!!!!!! என்று அருகே சென்றவன் ஆமா நீ எப்படி இங்க” என வினவ

“நான் தான் அழைத்து வந்தேன்” என மிது பின்னல் வர

உங்களை தேடி வந்தாங்க....உங்கள உடனே பார்க்கணும்னு சொன்னங்க...கார்த்தி தான் சொன்னான்.நீங்க இங்க போய் இருப்பிங்கன்னு ...அதான் கூட்டிட்டு வந்தேன் என்றாள்.

அவளை பார்த்ததும் அகிலின் முகத்தில் ஒரு சந்தோசம் மலர புன்னகையுடன் அவளை பார்த்தவன்,அவள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க புரியாமல் முழித்தான் அகில்.

அதற்குள் “உங்க போன் என்ன ஆச்சு? என்றாள் “ ருத்ரா கோபமாக

“எங்கிட்ட தான் இருக்கு” என்று வெளியே எடுத்தவன் அது சார்ஜ் இல்லமால் உயிர் போய் இருந்தது.

“அச்சோ இரவு சார்ஜ் போட மறந்திட்டேன்” என்றான்.

காலையில இருந்து எத்தன முறை உங்களுக்கு போன் பண்ணேன் தெரியுமா?நீங்க எடுக்கவே இல்லேன்னதும் உயிரே போய்டுச்சு.ஏன் அஜுன் இப்படி பண்றிங்க....நீங்களும் என்னை வெருத்திட்டிங்கலோனு நினச்சேன்” என்றவள் அதற்க்கு மேல் பேசமுடியாமல் குலுங்கி குலுங்கி அழ அகிலுக்கு அபிக்கும் மிகவும் தர்மசங்கடமாக இருந்தது.

உடனே அர்ஜுன் அவள் அருகில் சென்றவன் “இல்ல ஆரூ...நானே இப்பதான பார்த்தேன்.நேற்று நடந்த குழப்பத்தில் எனக்கு எந்த நியாபகமும் இல்லை அதான் “என அவன் பேசி கொண்டிருக்க அதை கேட்கும் மனநிலையில் அவள் இல்லை.அழுகை மட்டுமே பிரதனாமாக இருந்தது.ஆரூ...ஆரூ...என இரண்டு முறை அழைத்தும் பதில் இல்லாததால் குட்டிம்மா இங்க பாருடா என அவள் முகத்தில் இருந்து அவள் கைகளை எடுத்தவன்” நான் இருக்கேண்டா “என்றதும் அவனது மடியில் படுத்தவள் எனக்கு பயமா இருக்கு அஜுன்.நம்ம இரண்டு பெரும் சேருவோமானு தெரியல.செத்திடலாம் போல இருக்கு அஜுன்” என்றவள் அவன் மடியில் படுத்த படியே அவனது இடுப்பை கட்டி கொண்டு அழுதபடியே பேசினாள்.

“முட்டாள்தனமா பேசாத குட்டிம்மா ...கண்டிப்பா நம்ம சேருவோம்.இப்ப எழுந்திரு...என்னை பாரு” என அர்ஜுன் சொல்ல ருத்ராவோ அவனை விடாமல் இறுக்க பற்றி கொண்டு எழ மறுக்க

“ருத்ரா இப்ப நீ அழுகையை நிறுத்த போறியா இல்லையா...... “என ஒரு அதட்டல் போட சட்டென்று அழுகையை நிறுத்தியவள் மெதுவாக அவனை விட்டு எழுந்தாள்..அப்போது தான் அகிலும் அபியும் தன்னையே பார்த்து கொண்டிருப்பதை பார்த்தவள்” சாரி.....” என தயக்கத்துடன் சொல்லி விட்டு வேகமாக நகர

“அண்ணி நீங்க முதல்ல ரிலாக்ஸ் ஆகுங்க” என அவளை அமைதி படுத்தினாள் அபி.

அதற்க்குள் அகில் தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க அதை வாங்கி மடமடவென்று குடித்தாள்..

“சரி இப்போ நீ ரிலாக்ஸ் ஆகிட்டியா” என அர்ஜுன் கேட்க ம்ம்ம் என்று தலை ஆட்டினாள் ருத்ரா.

“இப்போ சொல்லு எங்க அம்மாவை உனக்கு முன்பே தெரியுமா?எப்படி தெரியும்?உங்க இரண்டுபேருக்கும் என்ன பிரச்சனை” என கேள்விகளை அடுக்கி கொண்டே போக

இல்ல அஜுன்..அது வந்து....அது வந்து என அவள் இழுக்க

“என்ன விளையாடறிங்களா இரண்டு பேரும்.அம்மாவும் கேட்டால் ஏதும் சொல்ல மாட்டேன்கிறாங்க....நீயும் இப்படி ஜவ்வு மாதிரி இழுக்கற” என கோபத்தில் கத்த

“டேய் அர்ஜுன் எதுக்கு கத்தற.அவங்களே குழம்பி இருக்காங்க ...இங்க பாருங்க ருத்ரா நீங்க சொல்ற பதிலை வச்சு தான் நாங்க அடுத்தது என்ன பண்ணனும்னு முடிவு பண்ண முடியும்.அதுநால என்ன நடந்ததுன்னு கொஞ்சம் தெளிவா சொன்னா நல்லா இருக்கும்” என்று தன்மையாக கேட்டான்.

ம்ம்ம்ம் என்று தலை ஆட்டியவள் நடந்ததை சொல்ல ஆரம்பித்தால்.”

அது வந்து உங்க அம்மாவும் நானும் கோவில்ல பார்த்திருக்கிறோம் அஜுன்.அர்ஜுனனிடம் காதலை சொல்லி விட்டு வந்தவள் ஷோபாவிடம் நடந்த விபரங்களை சொல்ல அவள் மிகவும் சந்தோசபட்டாள்..

“எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு ருத்ரா என சொல்லிவிட்டு இதுக்கு கண்டிப்பா எனக்கு ட்ரீட் கொடுக்கணும் நீ” என்றாள்.

“.ட்ரீட் தான கொடுத்தா போச்சு என்றாள்” ருத்ரா.

“அதற்க்கு முன்பு கோவிலுக்கு போயிட்டு போகலாம்.நான் உனக்காக வேண்டி இருக்கிறேன்” என ஷோபா சொல்ல

அவளை பாசமாக அணைத்தவள் “எனக்கு சகோதரி இல்லாத குறையைய நீதான் தீர்த்து வைக்கிற ஷோபா” என்றாள்..

“சரி சரி இப்படியே சென்டிமென்ட்டா பேசிட்டு இருக்காம கிளம்பு,...நானும் கிளம்பனும் நேரமாகிடுச்சு” என்றாள் ஷோபா .

“எங்க கிளம்பற நீ ...நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன்...இப்பவே கோவிலுக்கு போறோம்...அப்புறம் ஹோட்டல் போறோம் சரியா “என்று அவளை இழுக்க

ஷோபாவோ கொஞ்சம் தயங்க “ருத்ரா உனக்குத்தான் எங்க மாமியார் பத்தி தெரியும்ல ...நேரமாகிடுச்சுனா அதுக்கும் திட்டு விழும்” என அவள் சொல்ல

ருத்ராவிர்க்கும் அது தெரியும்.ஷோபா திருமணம் காதல் திருமணம்.தன் பேச்சை கேட்காமல் தன் மகன் காதல் திருமணம் செய்ததை அவரது தாயாரால் ஏற்று கொள்ள முடியவில்லை.அந்த கோபத்தோ வார்த்தையால் தேள் கொட்டுவது போல் கொட்டி தீர்ப்பார்.கணவனது துணை முழுவதும் அவளுக்கு இருந்தததால் அவள் அதை பெரிது படுத்த மாட்டாள்.அதனால் நேரமாகிவிட்டால் யார் அவரிடம் திட்டு வாங்குவது என எண்ணி பயந்து அவள் மறுத்தாள்..



“ஒ ஒ சரி...சரி நீ கிளம்பு” என ஆரூ சோகமாக சொன்னதும் ஷோபாவிற்கு கஷ்டமாக போய்விட்டது.”சரி ருத்ரா இன்று கோவிலுக்கு மட்டும் போவோம்.நாளை ஹோட்டல் போலாம் ஓகேவா” என்று சொல்ல ருத்ராவும் சந்தோசமாக தலை ஆட்ட நடக்க போகும் விபரிதாம் தெரியாமல் சீறி பாய்ந்தது ருத்ரா வாகனம்.

இருவரும் பூ சூடம் எல்லாம் வாங்கி கொண்டு உள்ளே செல்ல அன்று கோவிலில் நல்ல கும்பல்.இவர்கள் தரிசனம் முடித்து வெளியே வர வெகு நேரமாகி விட்டது.

“என்ன ஷோபா ரொம்ப நேரமாகிடுச்சு ... நீ வீட்ல போய் திட்டு வாங்குவியே “என ருத்ரா வருத்தத்துடன் கேட்க

“பரவாயில்லை ருத்ரா.எனக்கு மனசு திருப்தியா சாமி கும்பிட்டேன்.நான் பார்த்துகிறேன்.நீ கவலை படாதே” என்று சிரித்து கொண்டே சொன்னாள்.
அதற்க்குள் ருத்ரா “கொஞ்சம் பொறு ஷோபா...உனக்கு ஏதும் வாங்கி கொடுக்கலை ...சாமி லட்டாவது வாங்கி தரேன்” என சொல்லி விட்டு அதை வாங்க ஓடினாள்..

விதியும் அவள் பின்னால் ஓடியதை அவள் அறியவில்லை.

லட்டை வாங்கிவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தவள் ...ஷோபா நின்ற இடத்தில் இரண்டு பெண்கள் அவளிடம் பேசி கொண்டிருக்க அவள் தலையை கீழே போட்டவள் நிமிராமல் இருக்க ....அருகில் வர வர அவர்கள் பேசியது காதில் விழுந்தது.

“இப்படிதான் நீ ரொம்ப நாளா சுத்திகிட்டு இருக்கியா....நாங்க கேட்டா ஆபிஸ்ல வேலைன்னு பொய் சொல்லிட்டு இங்க எவனடி பார்க்க வந்த” என அப்பெண்மணி கோபமாக கத்தி கொண்டிருக்க

அருகில் வந்து விட்ட ருத்ரா....”என்ன ஷோபா...யாரு இந்த பொம்பளை...ஏன் இப்படி கத்திகிட்டு இருக்கு” என கேட்க

பேசிகொண்டிருந்த பெண்மணி “இவ யாரு? இவளும் உன்ன மாதிரி வீட்ல பொய் சொல்லிட்டு வெளிய்லே சுத்தற கேஸா...நீங்க எல்லாம் எந்த மாதிரி குடும்பத்துல இருந்து வந்து சேர்ந்திங்கிளோ” என சொல்ல

ருத்ராவிர்க்கு வந்ததே கோபம்....”ஏய்ய்ய்ய்ய் மரியாதையா பேசு...நானும் வயசுல பெரியவங்கலாச்சேனு பார்க்கிறேன்....ஷோபா யாரு இவங்க...நீ எதுக்கு இவங்க பேசறத கேட்டுட்டு இருக்க வா போலாம்” என அவளை இழுக்க

“இவங்கதான் என் மாமியார்”... என ஷோபா சொன்னது ஒரு நிமிடம் அதிர்ந்த ருத்ரா,பின்னர் அவர் ஷோபாவை பண்ண கொடுமைகள் நினைவு வர பொங்கி எழுந்துவிட்டாள்..

“ஒ நீங்கதான் அந்த ஆல் இன் ஆல் அழகு ராணியா? ஏம்மா நீங்க எல்லாம் பையனை பெத்தா பெரிய மகாராணின்னு நினைப்பா.உங்க பையனும் தான சம்மத பட்டு கல்யாணம் பண்ணார். என்னமோ இவ மட்டும் தப்பு செஞ்ச மாதிரி திட்டிகிட்டே இருக்கீங்க.ஆமா திருமணம் ஆனதற்கு பின்பு உங்க பையன் எங்கும் வெளியே போனதில்லியா?...லேட்டா வீட்டுக்கு வந்தது இல்லியா?...அவரையும் இப்படிதான் பேசுவிங்களா நீங்க?...பொண்ணுங்கனா அவ்ளோ இளக்காரமா உங்களுக்கு.....அவ சம்பாரிச்சு தர பணம் வேணும்.ஆனா அவ சந்தோசமா இருக்க கூடாது அப்டித்தான...உங்களை எல்லாம் போலீஸ்ல சொல்லி உள்ள தள்ளனும்...இவ ஒரு அப்பாவி...எல்லாத்தையும் தாங்கிட்டு இருக்கா பாரூ அதான் இந்த பேச்சு பேசறிங்க...இங்க இத்தனை பேர் பார்த்திட்டு இருக்காங்க ...கொஞ்சாமாவது யோசிச்சிங்களா....வயசு ஆனா மட்டும் பத்தாது...மரியாதைனா என்னனு தெரிஞ்சிருக்கணும்” என கோபத்தில் ருத்ரா பேசி கொண்டே சொல்ல

“பாரு மஞ்சு நான் சொன்னா நம்பமாட்டேனு சொன்னில...ஷோபா ரொம்ப நல்ல பொண்ணுன்னு சொன்னில...பாரு எப்படி ஆல் வச்சு என்னை கேவலபடுத்தரானு...இவ இவ்ளோதூரம் பேசறா...ஷோபா எதாவது சொன்னாளா...அப்படியே நிற்கிறா பாரு “என அந்த பெண்மணி பேச

இதனை பேருக்கு முன்னால் வயதிற்கு மரியாதை தராமல் இப்படி பேசியது மஞ்சுவிற்கும் தவறு என்று பட...”ஏம்மா ஷோபா என்ன இதெல்லாம்” என கேட்க

முன்பே தன்னால் தான் ஷோபா திட்டு வாங்ககிகொண்டிருக்கிறாள் என்ற ஆதங்கத்தில் பேசிகொண்டிருந்த ருத்ரா ,மஞ்சுவும் ஷோபாவையே குற்றம் சொல்ல கேட்கவா வேணும் ருத்ராவிர்க்கு காளி அவதாரமே எடுத்து விட்டாள்..

உடனே “இங்க பாருங்க...நீங்க என்ன அவங்களுக்கு சப்போர்ட்டா ...ஓ நீங்களும் இவங்கள் மாதிரிதானா ...கொடுமைக்கார மாமியாரா” என நக்கலாக கேட்க

“என்னம்மா ...மரியாதையா பேசு” என மஞ்சு அதட்ட

“உங்களுக்கு எதுக்கு மரியாதை...கோவில்ல இத்தனை பேருக்கு முன்னாடி இந்த அம்மா இப்படி கேவலமா பேசுது...அத பார்த்து நீங்களும் அமைதியா இருந்தீங்க...இப்போ எதுக்கு எங்கிட்ட கோபபட்ரிங்க....ஒ உங்க மருமளையும் நாளைக்கு எப்படி பேசறதுன்னு பார்த்திட்டு இருந்திங்கலா....இவ அமைதியா இருகிறதால என்னென்ன பேசறிங்க...அவ நினச்சா இந்த நிமிஷமே உங்க பையனை உங்ககிட்ட இருந்து பிரிச்சு கூட்டிட்டு போய்ட முடியும்.இவ பயந்தகொல்லி...நானா இருந்தா எப்பவே கிளம்பி இருப்பேன்.மரியாதை இல்லாத வீட்ல ஒரு நிமிஷம் இருக்க மாட்டேன்.”

“இங்க பாருங்க என மஞ்சுவை பார்த்து சொன்னவள்..சத்தியமா உங்க மருமக உங்க கூட இருக்கமாட்டா...கண்டிப்பா உங்க பையனை பிரிச்சு கூட்டிட்டு போய்டுவா.எல்லாம் வந்து சேர்ராங்க பாரு...பெருசா பையனை பெத்து வச்சிருக்காங்களாம் .இவங்களும் ஒரு காலத்துல மருமகளா இருந்தவங்க தானே” என அவள் சொல்லி கொண்டே செல்ல

"அச்சோ ருத்ரா கொஞ்சம் பேசாம இரு" என ஷோபா அவளை பிடித்து கொஞ்ச தூரம் இழுத்து சென்றவள் . ருத்ரா என்ன இது.?பாவம் அந்த ஆன்ட்டி ...ரொம்ப நல்லவங்கப்பா...எங்க மாமியார்தான் எதோ தப்பா சொல்லி வச்சிருக்குது அவங்க கிட்ட....ஆனா ருத்து எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்குது.காதல் திருமணம்.கேட்கிறதுக்கு ஆல் இல்லாதவனு நினச்சுட்டு தான என்ன அந்த பாடு படுத்துனாங்க...இப்போ இப்படி ஒரு ஆளு இருக்கணு தெரிஞ்சா கொஞ்சம் பயம் வரும்.சரி...சரி நான் அவங்களோட போய்கிறேன்..நீ கிளம்பு ...நான் பார்த்துகிறேன்.சாரிடா உன்னோட சந்தோஷ மூடையும் கெடுத்திட்டேன்” என ஷோபா சொல்ல

“இல்ல ஷோபா...நான் தான் உன்ன அழைச்சுட்டு வந்து இப்படி ஒரு பிரச்சனயை கிளப்பி விட்டுட்டேன்..நீ என்னதான் எனக்கு ஆறுதலா பேசினாலும் உன் கண்ணுல இருக்க பயம் எனக்கு உன் மனச சொல்லுது.சாரி ஷோபா...உன்னை உன் மாமியார் அப்படி பேசின உடனே தாங்க முடியல..அதான் கொஞ்சம் எமோசனல் ஆகிட்டேன்...நான் வேணா உன் வீட்டுகார்க்கு போன் பண்ணி நடந்ததை சொல்லிடட்டுமா” என ருத்ரா கேட்க

“நான் பார்த்துகிறேன் ருத்ரா நீ கிளம்பு” என சொல்லி அவளை அனுப்பி விட்டு வந்தவள்

அவளது மாமியாரும் மஞ்சுவும் அதே இடத்தில் நிற்பதை பார்த்தவள்

“மஞ்சு ஆன்ட்டி சாரி...அவ ஏதோ புரியாம பேசிட்டா...எனக்காக கொஞ்சம் மனிச்சிடுங்க” என்றாள்..

அவள் பேசிய அதிர்ச்யில் இருந்து மீளாத மஞ்சு ஏதும் பேசாமல் தலையை மட்டும் ஆட்டிவிட்டு ,”உன் மாமியார் கொஞ்சம் தடுமாறாங்க அவங்கள பத்திரமா பார்த்து கூட்டிகிட்டு போ” என சொல்லி விட்டு விடு விடுவென்று நடந்தார்.

ருத்ராவின் பேச்சில் ஷோபா மாமியார் ஆடி போய்விட்டார்,இவளை கேட்கிறதுக்கு யார் இருக்கா என்ற ஆணவத்தில் இருந்த அவருக்கு இப்படி ஒரு பெண் பக்கபலமாக இருக்கிறாள் என்ற நினைப்பே அவர்க்கு பயத்தை ஏற்படுத்திவிட்டது.அமைதியாக ஷோபாவுடன் வீடு சென்றார்.


“இதான் அஜுன் நடந்தது.அவங்க தான் உங்க அம்மான்னு எனக்கு தெரியாது...அவங்க மேல எனக்கு எந்த கோபமும் இல்ல...அவங்க குறுக்க பேசின உடனே நான் கோபத்தில் பேசிட்டேன் “ என நடந்தவைகளை சொல்லி முடிக்க

“உனக்கு எத்தன முறை சொல்லிருக்கேன்...கோபத்துல வார்த்தையை விடாதனு...இப்ப பாரு அது எங்க போய் முடிஞ்சு இருக்குனு....எல்லாம் என்தலை விதி....நான் பொருத்துகுவேன்...எல்லாரும் அப்படியே இருப்பாங்களா? என அர்ஜுன் கோபத்தில் கத்த

உடனே ருத்ரா...”நான் தான் தெரியாம பேசிட்டேன்னு சொல்றேன்ல அஜுன்...அப்புறம் ஏன் திட்றீங்க?அப்படி ஒன்னும் சகிச்சுகிட்டு இருக்க வேண்டாம் நீங்க...நான் தான தப்பு செஞ்சேன்...எனக்கு இந்த தண்டனை தேவை தான்.நானே அனுபவிச்சுகிறேன்.நீங்க என்னை மறந்திடுங்க” என சொல்ல

பளார் என்று ஒரு சத்தம் கேட்க அதற்க்கு பின்புதான் அர்ஜுனுக்கே உரைத்தது அவளை அடித்து இருக்கிறோம் என்று....



 

Vathani

Administrator
Staff member
Joined
Jul 23, 2021
Messages
863
பார்த்து கொண்டிருந்த அபியும் அகிலும் "அர்ஜுன்!!!!" என கத்த,ருத்ராவோ சிறிது நேரம் அதிர்ச்யில் அப்படியே நின்றவள் ஓடி போய் மீண்டும் அவனது மார்பில் சாய்ந்தவள் ...கண்ணீர் அவனது சட்டை நனைக்க எனக்கு வேற வழி தெரியல அஜுன் அதான்” என அழுது கொண்டே சொன்னாள்..

“இனிமேல் இந்த வார்த்தையை சொல்லாத குட்டிம்மா....உன்னை நான் மறப்பதா....அது நடக்குமா என சொன்னவன் அவளை தன்னோடு இறுக்கிஅணைத்து கொண்டான்.

சிறிது நேரம் இந்த நிலை நீடிக்க வேடிக்கை பார்த்து கொண்டிருந்த இருவரும் என்ன செய்வது என தெரியாமல் முழித்து கொண்டிருந்தனர்.

பின்னர் அபி “அர்ஜுன்..அர்ஜுன் “என சொன்னதும் சட்டென்று நிதானத்துக்கு வந்தவன் ஆரூவை விடுவித்து “சரி இப்படி உட்கார்.நீ எதாவது சாப்ட்டியா?” என கேட்க

அவள் இல்லை என்று தலையை மட்டும் அசைக்க

உடனே “அகில் சாப்ட்ரதுக்கு ஏதாவது இருக்கா” என அவன் கேட்க

“இல்ல மச்சான்...பழங்கள் தான் இருக்கு” என எடுத்து கொடுக்க அதை சாப்பிட கொடுத்தான் அர்ஜுன்.

சிறிது நேரம் அமைதியாக செல்ல “இனி என்ன பண்ணலாம் அர்ஜுன்” என அகில் ஆரம்பிக்க

அதாண்டா எனக்கும் ஒன்னும் புரியல....கண்டிப்பா அம்மாவை சமதானபடுத்த கொஞ்ச நாள் ஆகும் .ஏன்னா இவ பேசினது அந்த மாதிரி” என்று சொன்னவன் ருத்ராவை திரும்பி பார்க்க

சாப்பிட்டு கொண்டிருந்தவள் நிமிர்ந்து அவனை பார்க்க,அவளது மனதில் இருந்த வலி பார்வையில் தெரிய தனது இமைகளை மூடி அவளை அமைதி படுத்தினான் அர்ஜுன்.

“கொஞ்சா நாள் காத்திருக்கணும் பார்க்கலாம்.ஆமா நேத்து ஏன் உன்னோட போன் ஸ்விட்ச் ஆப்ல இருந்தது என கேட்டான் அர்ஜுன்.
சிறிது நேரம் அமைதியாக இருந்தவள் பின்னர் நமது விஷயம் அம்மாவுக்கு தெரிஞ்சுடுச்சு அஜுன்.நேத்து முழுவதும் அம்மா என் உடன் பேசவில்லை என்று சொல்லிவிட்டு நேற்று நடந்த விஷயங்களை அவனிடம் சொன்னாள்..

“அம்மாகிட்ட சாரி கேட்டுட்டு இருக்கும்போது ஆசிரமத்துல இருந்து போன் வந்துச்சு...நான் முதலே வரேனு சொல்லி இருந்தேன்.அதான் அவங்க போன் பண்ணாங்க.பாவம் அவன் சின்ன பையன்...எனக்காக காத்து இருப்பானு சொல்லி தான் அன்னைக்கு வந்தேன்.அப்போ போன ஸ்விட்ச் ஆப் பண்ணேன்.அப்புறம் இன்னைக்கு காலையில தான் ஆன் பண்ணேன். வந்த இடத்துல இந்த மாதிரி ஆகிடுச்சு...நான் ரொம்ப குழம்பி போயிருக்கேன் அஜுன்.எல்லாரும் என்னையே சுத்தி சுத்தி அடிக்கிற மாதிரி தோணுது”.

“அச்சோ உங்க வீட்லயும் பிரச்சனயா” என அபி வருத்ததுடன் கேட்க

“ஆமா அபி...எங்க அம்மா இப்படி கோபபட்டு நான் பார்த்ததே இல்ல.....நேத்து ரொம்ப பேசிட்டாங்க...எனக்கு பயமா இருக்கு.இனி என்ன நடுக்குமோனு. “என புலம்பினாள்.

“என்ன அண்ணீ இது...நீங்க என்ன கல்யாணமா பண்ணிகிட்டீங்க ...லவ் தான பண்றீங்க ...கண்டிப்பா அவங்க சம்மதம் கேட்பீங்க தான ...அதுக்கு போய் ஏன் இவ்ளோ கோபபடறாங்க” என அபி கேட்க

“ஆமா அபி...எனக்கும் அதான் புரியல...அம்மா அப்படி நட்டுபுறமும் கிடையாது...ரொம்ப முற்போக்கான பெண் தான்...அவங்க இதுக்கு எதிர்ப்பு சொல்வாங்கன்னு நான் நினைக்கவே இல்ல” என்றாள் ருத்ரா.

“இல்ல ருத்ரா நீங்க தப்பா புரிஞ்சுகிட்டீங்க என சொன்ன அகில் அவங்க நீங்க காதலித்ததை தப்புன்னு சொல்லல...அவங்க கிட்ட இருந்து நீங்க அதை மறச்சிங்க இல்லியா அதான் அவங்கநாள தாங்கிக்க முடியல...உங்க அப்பா இறந்து எவ்ளோ நாள் ஆகுது “என கேட்க

“நான் மூன்றாம் வகுப்பு படிக்கும்போதே இறந்து விட்டார்” என்றாள் ருத்ரா.

ம்ம்ம் நல்லா யோசிச்சு பாருங்க அதற்க்கு பின்பு உங்களை இந்த நிலைக்கு கொண்டு வரதுக்கு உங்க அம்மா எவ்ளோ கஷ்டபட்ருப்பாங்க...இந்த காலத்துல ஆண்கள் கூட இருக்கும்போதே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.இந்த சமயத்துல இரண்டு பெண்கள் மட்டும் தனியா இருந்து வாழ்வது எவ்ளோ சிரமம் தெரியுமா?...அதும் உங்க அம்மா உங்கள ரொம்ப திறமையா , தைரியமா வளர்த்திருகாங்கனா அதுக்கு அவங்க உங்க மேல வச்சிருக்க அதீத பாசமும் நம்பிக்கையும் தான்.என்னோட வளர்ப்பு தப்பாகாது என்று அவர்கள் முழுசா நம்பினாங்க.இப்பவும் அது தப்பாகலை...இந்த விஷயத்த நீங்களா சொல்லி இருந்தா பிரச்சனனை இல்ல...அடுத்தவங்க சொல்லி தெரிஞ்சதை அவங்க அவமானமா நினைக்கிறாங்க....இப்போ அவங்கனால அதை தாங்கி கொள்ள முடியல... ...இது ஆண் துணை இல்லாம ஒரு பெண்ணை நல்ல படியா வளர்க்கிற எல்லாம் அம்மாக்கும் வர கோபம் தான்...நீங்க பண்ணதும் ஒரு விதமமான நம்பிக்கை துரோகம் தான்....அதும் நீங்க மாப்பிள்ளை வேண்டாம்னு சொன்ன உடனே எந்த கேள்வியும் கேட்காம சரின்னு சொன்னங்க இல்லியா...உங்க மேல எவ்ளோ நம்பிக்கை இருந்தா அவங்க சொல்லிருப்பாங்க....அத நீங்க புரிஞ்சுக்குங்க.....ஆனால் காதல் வந்து விட்டால் கள்ளத்தனமும் சேர்ந்து வந்துவிடும்....இது அவங்களுக்கும் தெரியும்...ஆனா உங்க மேல வச்சா பாசம் அதை ஏத்துக்க முடியாம பண்ணுது என்றான் அகில்.

“ஆமா” என சொல்லி விட்டு அவள் ஒரு நிமிடம் தயங்க...”நீ என்னை அண்ணான்னு கூப்பிடலாம் ருத்ரா...சார் எல்லாம் வேண்டாம்” என அவன் சொல்ல

“ஆமாம் அண்ணா ...எங்க அம்மா எனக்கு எத செஞ்சாலும் உனக்கு இதுல சம்மதமான்னு பலமுறை கேட்பாங்க...நான் கூட கேட்பேன்...நீங்க செய்யறது எல்லாமே எனக்கு பிடிக்கும்னு...ஆனா நான் சரின்னு சொன்ன பின்புதான் அதை செய்வாங்க” என்றாள்.
.
“அதான் ருத்ரா நானும் சொல்றேன்.கண்டிப்பா அவங்களுக்கு இது பெரும் அதிர்ச்சி தான்.இபோ என்ன செய்யறது” என அகில் யோசனையில் மூழ்க

“ஆமா நம்ம விஷயத்த யாரு உங்க அம்மாகிட்ட சொன்னது” என அர்ஜுன் கேட்க

“அங்கிள் தான் சொல்லிருக்கார் அர்ஜுன்.....அன்னைக்கு அம்மாகூட வெளியே போகணும்னு சொல்லிட்டு உங்க கூட வந்தேன்ல... அப்போ அவர் அம்மாவை மார்கெட்ல பார்த்திருக்கார்.என்ன ருத்ரா நீங்க வெளியே போறிங்கனு சொன்ணா என சொல்ல அம்மா இல்லையென்று சொல்ல அப்புறம் அங்கிள் எனக்கு அவ மேல சின்ன சந்தேகம்னு சொல்லி நம்ம விஷயத்த சொல்லிருக்கார்” என்றாள்..

“இன்னைக்கு காலையில தான் என்ன கூப்பிட்டு சொன்னார்.நான் உங்க அம்மாவை பார்த்து பேசினேன்....உங்க அப்பாவோட நண்பன் நான்...அவர் பொண்ணு ஒரு தப்பு செய்யும்போது நான் எப்படி சும்மா இருக்க முடியும்.அவங்க எல்லாம் பணம் இருக்கிறவங்க.அர்ஜுன் நல்ல பையன்தான்...ஆனா உங்க அம்மாக்கு உன்ன விட்டா யாரும் இல்லை அத புரிஞ்சுக்கோனு அட்வைஸ் பண்ணார் என்றாள்..

இப்போ என்னடா பண்றது என அர்ஜுன் கவலையுடன் கேட்க ...

வேற வழியே இல்ல....ரொம்பவே சிக்கல்..அர்ஜுன் உங்க திருமணம் நடக்குமான்னு இப்போ எனக்கே சந்தேகமா இருக்கு என்றான் அகில்...

என்னதுதுதுது!!!!!!!!! என மூன்று பெரும் அதிர்ச்சியுடன் அகிலை பார்த்தனர்.



வாழ்க்கையே போர்க்களம்

வாழ்ந்து தான் பார்க்கணும்

போர்க்களம் மாறலாம்

போர்கள் தான் ,மாறுமா ?

மனிதன் மனமோ

பல கணக்குகளை போட

விடையை சரிபார்ப்பவன்

விதியாகி போனதால்

மதியும் இங்கு மௌனமானதோ ?
 
Top