• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ஒளிப்படைத்த கண்ணினாய் - 20

Vathani

Administrator
Staff member
Joined
Jul 23, 2021
Messages
863


 அத்தியாயம் 2௦


வானத்தில் இருந்து வரும் மழை நீரை எதிர்பார்த்து பூமி காத்திருப்பது போல அகில் என்ன சொல்லுவான் என எதிர்பார்த்து மூவரும் அவன் முகத்தை பார்த்திருக்க அவனோ உங்கள் திருமணம் நடப்பது கொஞ்சம் சிரமம் தான் என சொல்ல மூவரும் அதிர்ந்து விட்டனர்.

அமைதியாக இருந்த அபியே “ என்ன மாமா நீங்க இப்படி சொல்றிங்க ....நீங்கதான சொன்னீங்க எந்த பிரச்சனைக்கும் தீர்வு இருக்குனு...கண்டிப்பா இதுக்கும் தீர்வு இருக்கும்.நல்ல யோசிங்க”என்றாள்.

அவளை பார்த்து சிரித்த அகில் “தங்களது சித்தம் எனது பாக்கியம்” என தலை குனிந்து பவ்யமாக இருப்பது போல் நடிக்க

“மாமா!!!!!!!! என பல்லை கடித்தவள்...என்ன மாமா பண்றது யோசனைகிறது மூளை இருக்கிறவங்க பண்றது தான்..உங்கள பண்ண சொல்லிட்டேனேன்னு வருத்தபடரிங்க்ளா”...என அவள் முகத்தை சோகமாக வைத்து கொண்டு கிண்டலாக சொல்ல

“அடிபாவி உன்னை” என எழுந்து அவளை துரத்த ...வேதனையில் இருந்த அர்ஜுனும் ஆருவும் மனம் விட்டு சிரித்தனர்.

“ஹப்பா ...இப்பதான்ப உங்க முகத்தை பார்த்தவே நல்ல இருக்கு.எதுக்கு அண்ணீ இவ்ளோ சோகம்.நாங்க எல்லாம் இருக்கோம் ...எங்க மாமா இப்பதான் இல்லாத மூளையே கசக்கி யோசனை பண்ணிக்கிட்டு இருக்கார்.கண்டிப்பா நல்ல முடிவு வரும்” என்றாள்..

அவளது பேச்சு விளையாட்டுதனமாக இருந்தாலும் அந்த இடத்தில அது ஆருவிர்க்கு ஆறுதலாக இருந்தது.

“சரி அர்ஜுன் எனக்கு நேரமாச்சு ...நான் கிளம்பறேன்....இனி நம்ம அடிகடி பேசறது கஷ்டம் அர்ஜுன்.முக்கியமான விஷயம் இருந்தா மட்டும் போன் பண்றேன்” என ருத்ரா கிளம்ப

“இரு நான் உன்னை விட்டுடு வரேன்” என அர்ஜுனும் கிளம்பினான்.

அவர்கள் வெளியே செல்ல அகில் தலையில் கை வைத்து யோசனையில் அமர

அவனயே சிறிது நேரம் பார்த்து கொண்டிருந்தவள் அமைதியாக சமையல் அறைக்கு சென்றாள்.

சிறிது நேரத்தில் பாத்திரம் தீயும் வாசனை வர அவசரமாக நிமிர்ந்து பார்த்தவன் அங்கு மித்துவை காணாமல்

“மிது...மிது” என அழைக்க

“இங்க இருக்கேன் மாமா” என அழும் குரலில் சமையல் அறையில் பதில் வந்தது.

“அச்சோ அங்க என்ன பண்ற” என வேகமாக எழுந்து வந்தவன் ...அங்கு பாத்திரம் அதிக சூட்டில பழுத்து போய் இருக்க அதை எடுக்க தெரியாமல் உப்...உப் என்று வாயினால் ஊதிகொண்டிருந்தால் அவனின் மனம் கவர்ந்தவள்.

வேகமாக வந்து இடுக்கியில் அதை எடுத்து கீழே வைத்தவன் ,அடுப்பை அனைத்து விட்டு அவளிடம் திரும்பி “அறிவிருக்கா உனக்கு...என்ன பண்ற நீ “என கேட்க

அவனது கத்தலில் பயந்தவள் “அது வந்து மாமா..நீங்க டையர்டா இருப்பிங்கனு டீ போடவந்தேன்...பத்திரத்தை அடுப்பில் வச்சுட்டு முதல்ல தண்ணீர் ஊத்தனுமா...பால் ஊத்தனுமானு மறந்துட்டேன்...அதுனால இங்கி பின்கி போட்டு பார்த்து எது வருதோ அத முதல்ல ஊற்றலாமனு போட்டுக்கிட்டு இருந்தேன்...அதுக்குள்ள இந்த பாத்திரம் இப்படி ஆகிடுச்சு...உங்க பாத்திரம் சரி இல்லை மாமா ...முதல்ல இதை மாத்தனும்” என இவள் செய்த தப்பை பாத்திரத்தின் மேல் போட

அவள் செய்ததும் அதை அவள் சொன்ன விதமும் அகிலிற்கு சிரிப்பு வர “ஏண்டி இப்படி பண்ற...நீ தப்பு பண்ணிட்டு பத்திரத்தை குறை சொல்றியா...சரி..சரி..நகரு என அடுப்பிற்கு அருகில் சென்றவன் என்னடி இது...... அடுப்பை சுத்தி இத்தனை வச்சிருக்க” என்றான்.

“இல்ல மாமா என் friend கார்த்திகா இருக்கால்ல அவதான் சொன்ன...சமையல் செய்யறதுக்கு முன்னாடி தேவைபடற எல்லார்த்தையும் பக்கத்துல எடுத்து வச்சுகனுமாம்.அப்போதான் காஸ் மிச்சபடுத்த முடியுமா” என கண்களை விரித்து ஏதோ பெரிய விஷயம் சொல்வதை அவள் சொல்ல

“ஆமா எல்லாத்தயும் எடுத்து வச்சுக்கிட்டு அப்படியே எதை முதல்ல வைகிறதனு அரைமணி நேரம் யோசனை பண்ண சொன்னாளா? ...எப்படித்தான் உனக்குன்னு இப்படி friend வந்து சேராங்களோ என தலையில் அடித்துக்கொண்டு சரி தள்ளு நானே டீ போடறேன்” என சொல்லிக்கொண்டு பாத்திரத்தை அடுப்பில் வைத்தான்.

‘மாமா விடுங்க மாமா...உங்க டீ சாப்பிட்டு சாப்பிட்டு உங்களுக்கு நாக்கு செத்து போய் இருக்கும்..நான் உங்களுக்கு சூப்பர் டீ ரெடி பண்ணி தரேன் “என அவனை தள்ளிக்கொண்டு முன்னே சென்றவள் வேகமாக பக்கத்தில் இருக்கும் பாக்ஸில் இருந்து ஒரு பொடியை எடுத்து போட
“ஏய்...என்ன பண்ற நீ “என அகில் கத்த

“டீ தூள் போடறேன்...சும்மா தொந்தரவு பண்ணாதிங்க” என சொல்லிகொண்டே அவள் வேலையை தொடர

“உங்க ஊர்ல மிளகுதூள் போட்டு தான் டீ போடுவிங்களா” என அவன் நக்கலாக கேட்க

“என்னது இது மிளகுதூளா என கிட்டே நுகர்ந்து பார்த்தவள் ஹிஹிஹி!!!!!ஆமா........ என வழிந்து கொண்டே சொன்னவள் ...ஆனா அம்மா டீத்தூளும் இப்படிதான் கருப்பு கலர்ல இருக்கும்னு சொன்னங்க..அதான் இதும் அப்படி இருந்ததுனால கொஞ்சம் கன்பியூஸ் ஆகிடுச்சு...சரி விடுங்க மாமா..பெப்பர் டீ உடம்புக்கு ரொம்ப நல்லது” என அவள் செஞ்ச தவறை அவள் சமாளிக்க

“மிது நானும் பல ஊர்ல பல டீ குடிச்சிருக்கேன்...லெமன் டி,கிரீன் டீ ஆனா பெப்பர் டீ முதல் முறையா நீ சொல்லிதாண்டா கேள்விபடறேன்...மாமாவ விட்டுட்டி செல்லம் ...பாவம் தான உன் மாம்ஸ் ...ம்ம்ம்” என கெஞ்ச

“சரி...சரி இப்ப என்ன பண்றது” என அவள் கேட்க

“நீ ஏதும் பண்ணவேண்டாம் அப்படி உட்கார் “என அவளை அப்படியே இடுப்பில் கை கொடுத்து தூக்கியவன்

அவனது கைகள் பட்டதும் உடம்பு சிலிர்க்க.”அச்சோ என்ன மாமா இது “என அவள் வெட்கத்தில் முகம் சிவக்க

அவளது முகத்தை பார்த்தவுடன் வேலையை மறந்து மெதுவாக அவளை அணைத்தவாறே கீழே இறக்கினான்.

“விடுங்க மாமா வீட்ல வேற யாரும் இல்லை” என அவள் சொல்ல

“அட ஆமா இங்க யாரும் இல்லையில என்றவன் சொல்லிமுடிக்கும் முன்பே அவளை அழகாக தூக்கியவன் ஹே குட்டச்சி ஆள் குட்டியா இருந்தாலும் பூ மாதிரி இருக்கடி” என சொல்லிகொண்டே தனது அறையை நோக்கி நடந்தான்.

அவனது ஸ்பரிசம் அவளையும் மயக்க.அவனது கைகள் அவளது இடையில் விளையாட ...”விடுங்க மாமா...வேண்டாம்...”என அவள் சொன்னது அவளுக்கே கேட்கவில்லை.

அவளை அப்படியே கட்டிலில் போட்டவன் மிது என சொல்லிகொண்டே அவள் மேல் விழுந்தவன் தனது இதழ் என்னும் தூரிகை மூலம் அவளது முகத்தில் முத்தத்தால் கோலமிட தவிர்க்க சொல்லிய அறிவை அவளின் உணர்வுகள் அடக்கி விட சிறிது நேரம் முத்தத்தின் சத்தம் மட்டுமே அங்கு நிறைந்திருந்தது.


பின்னர் தானாகவே அவளை விடுவித்தவன் கட்டலில் சாய்ந்து அவளை இழுத்து தன நெஞ்சில் போட்டு கொண்டவன்..”மித்தும்மா மித்தும்மா” என சொல்லிகொண்டே இருக்க

“என்னாச்சு...இன்னைக்கு ரொம்ப பாசம் பொங்குது ...ஒன்னும் நடிக்க வேண்டாம்...அதான் வெளியல ஒரு மனுசி நான் நிற்கிறேன்...அண்ணிய பார்த்த உடனே அவங்கள மட்டும் வாங்கனு சொல்லிட்டு உள்ள போயிட்டிங்க...உங்களை அப்பவே திட்டிருப்பேன் ...அர்ஜுன் இருந்ததனால அமைதியா இருந்திட்டேன்” என அவள் செல்ல கோபத்துடன் சொன்னாள்.

‘அச்சோ நான் உன்னை கவனிக்கவே இல்லடி...என் மகராணிய நான் வரவேற்க்காம வேற யார் வரவேற்ப்பாங்க என சொன்னவன் மீண்டும் மித்து” என சொல்லிகொண்டே அவளை இறுக்கி அணைக்க

“மாமா நீங்க என்னமோ எங்கிட்ட சொல்ல வரிங்க...ஆனா தடுமாறிங்க...சொல்லிடுங்க மாமா என அவள் கேட்டதும் அவள் முகத்தை தன் இரு கைகளிலும் ஏந்தியவன்,நிஜமாவே என்னை உனக்கு பிடிச்சிருக்காடி...என் மேல உனக்கு கோபம் இல்லயா ...நீ என்னை திட்டிருந்தா கூட சந்தோஷ பட்டிருப்பேன்...நீ அமைதியா என்னை மன்னித்தது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது” என சொல்லிவிட்டு அவளையே பார்க்க

சிறிது நேரம் அமைதியாக இருந்தவள் பின்னர் அவள் முகத்தில் சிறுபிள்ளைத்தனம் மறைந்து ஒரு அமைதி குடிகொள்ள...”கோபம் எனக்கும் இருந்தது மாமா...ஆனா அதையும் தாண்டி காதல் இருக்கு மாமா...இதற்க்கு காரணம் என்னனு கேட்டிங்கனா எனக்கு சொல்ல தெரியாது.நான் உங்களோட ரொம்ப நாள் வாழணும்னு ஆசைபடறேன் அவ்ளோதான்” என்றவள் மீண்டும் அவன் நெஞ்சிலே சாய்ந்து கொண்டாள்.

அவளை தனது உயிரோடு கலந்துவிடுவதுபோல் அணைத்தவன்...”மித்துமா நான் ரொம்ப கொடுத்து வச்சவேன்.எனக்கு இன்னைக்கு அர்ஜுன் ஆருகிட்ட பேசும்போது அவன் அந்த பொண்ணு மேல வச்சிருந்த காதல் எனக்கு மெய்சிலிர்த்து போய்டுச்சு...ஆனா இப்போ என் மித்து என்மேல வச்சிருக்க அன்புக்கு எதுமே ஈடாகாது.ஆனா எனக்கு அந்த அருகதை இருக்காணு தெரியல” என அவன் உணர்ச்சி கொந்தளிக்க பேச

அவ பேச்சை இடைமறித்தவள் “அப்படி சொல்லாதிங்க மாமா....உங்களுக்கும் அந்த அளவு காதல் இருக்கு.என்ன அவன் பழகி 6 மாதம் ஆனதால் எல்லா பாசமும் அப்படியே வெளிபடுத்தறான்...ஆனா நீங்க சின்னவயசுல இருந்தே எனக்குன்னு எத்தன விஷயம் பார்த்து செஞ்சிங்க...அது எல்லாம் என்மேல வச்சா பாசம்தான... அவங்க வேற...நம்ம வேற மாமா... ...அதனால்தான் உங்களை எனக்கு பிடிச்சதே”...நீங்க போட்டு குழப்பிக்காதிங்க என அவனை விட்டு கொடுக்காமல் பேச

“எப்படி மித்துமா உன்னால மட்டும் எல்லாத்தையும் பாசிட்டிவாவே எடுத்துக்க முடியுது என்றவன் எனக்கு நீ ஒருத்தி போதுண்டி...நீ என் பக்கத்துல இருந்தா நான் எதுக்கும் கவலைப்படமாட்டேன்” என்றவன் அவளை மீண்டும் அணைக்க முற்பட

அதற்க்குள் மித்துவின் அலைபேசி அலற அவனிடம் இருந்து ஓடியவள் அலைபேசியில் சிறிது நேரம் பேசிவிட்டு மீண்டும் வந்தாள்.அதற்குள் அகில் அவளுக்கு டீ போட்டு வைத்திருக்க, “நீங்களே போட்டிங்களா...சரி..சரி கொடுங்க...என ரொம்ப சலித்துகொன்டே வாங்குபவள் வாங்கியவள்..... வேகமாக குடித்து விட்டு “சரி மாமா நான் கிளம்பறேன்...கார்த்திகா வேற போன் பண்ணிட்டா...எனக்காக அண்ணாச்சி கடையில் எல்லாரும் வைடிங்..ஏதோ முக்கியமான விஷயமா” என சொல்லிவிட்டு ஓட

“அந்த குருப் கூட சேராதேன்னு சொன்ன கேட்கிறியா...பார் சிவ பூஜைல கரடி பூந்த மாதிரி கரெக்டா போன் பண்றாங்க” என அவன் பேசிகொண்டே இருக்க கேட்பதற்கு மித்து அங்கு இல்லை.

இங்கு அர்ஜுனின் நிலையோ இலையில் விழுந்த தண்ணீர் போல் ஒட்டியும் ஒட்டாமலும் போய்கொண்டிருந்தது.மஞ்சு அவனிடம் சரியாக பேசுவது இல்லை.ஆருவை அவன் மறக்கவேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார்.அர்ஜுனும் பத்மநாபனிடம் ஆருத்ரா சொன்ன விஷயங்களை சொல்லிவிட்டான்.அவரும் அவனை திட்டவில்லை.அதே சமயத்தில் தன் மனைவி தனக்கு முக்கியம்.அவளுக்கு பிடிக்காத விஷயம் எனக்கும் பிடிக்காது.அவள் சந்தோசம் எனக்கு முக்கியம்.அதே நேரத்தில் எனக்கு ருத்ராவை பற்றியும் தெரியும்.அவள் தெரிந்து இப்படி பேசி இருக்க மாட்டாள். என்னை மன்னித்து விடு அர்ஜுன். என்னால் உனக்கு உதவ முடியாது” என அவர் தெரிவித்து விட்டார்.

இங்கு ருத்ராவோ பலநாள் சாப்பிடாமல் இருந்து வனஜாவை சிறிது சமாதானபடுத்தினாள்.இனி உங்களை மீறி ஏதும் செய்யமாட்டேன்.அர்ஜுனை பார்க்க மாட்டேன் என அவளுக்கு சத்தியம் செய்த பின்பே வனஜா அவளுடன் பேசினார்.அதும் முன்பு போல் இல்லை.கேட்ட கேள்விகளுக்கு பதில் வந்தது.

இருவருமே ஒரு மாதங்கள் அமைதியாக ஓட்டினர்.அகிலும் ஊருக்கு சென்றுவிட்டான்.புதிய தொழில் தொடர்பான வேலைகள் ஆரம்பித்துவிட்டன.அலைபேசியில் அகில் மித்து காதல் வளர்ந்து கொண்டிருந்தது.

உடனே புறப்பட்டு வா என மிதுவிடம் இருந்து அழைப்பு வர அவள் சொன்ன இடத்திற்கு சென்றான் அர்ஜுன் .அங்கு அகில் மித்துவும் இருந்தனர்.

“என்ன அகில்...ஆபிஸ் வந்திருக்க வேண்டியதான..இங்க எதுக்கு”? என்றான்.

“இல்ல உன்கிட்ட முக்கியமான விஷயம் பேசணும் என்றவன்..ருத்ராவிர்க்கு அவங்க ஊரில் மாப்பிள்ளை பார்த்திருக்கும் விஷயத்தை சொன்னவன்,அவன் என் நண்பன்.போட்டோவை காட்டினான்.எனக்கு அதிர்ச்சி.அதான் புறப்பட்டு வந்தேன்.இந்த மாப்பிளை விஷயம் ருத்ராவிர்க்கு தெரியாது “என்றான்.

அர்ஜுன் சிறிது நேரம் அமைதியாக இருந்தவன் எதுவும் பேசாமல் கிளம்பிவிட்டான்.

“அச்சோ என்ன மாமா இப்படி பண்ணிட்டிங்க...அவன் எதாவது கோபத்துல போய் பேசிட்டானா என்ன பண்றது...இது பொய்னு தெரிஞ்சு போச்சுனா அவ்ளோதான் ......நான் பொறுமையாதான சொல்ல சொன்னேன்” என மித்து கேட்க

“இல்ல மித்து...இப்போ பார்..அடுத்த கட்ட நடவடிக்கை எப்படி வேகமா நடக்க போகுதுன்னு...நானும் எத்தனை ஐடியா சொன்னேன்...எல்லாம் அப்புறம் பார்க்கலாம்னு தட்டி கழிக்கிறான்.அந்த பொண்ணு எங்கிட்ட அழுகுது..அதான் இந்த அதிர்ச்சி..பொறுத்திரு” என்றான்.

“என்ன மாமா உங்க டெக்னிக் இங்க பயன்படுத்தரிங்களா” என சொல்லிவிட்டு அவள் கண்ணடித்து சிரிக்க

“கண்டுபிடிச்சுடியே கள்ளி” என அவன் அவள் தலையில் தட்ட அங்கு சந்தோஷ குயில்களின் கானம் ஒலிக்க தொடங்கியது.

இங்கு பத்மநாபன் மஞ்சுவிடம் “மஞ்சு இங்கு வா என அருகில் அழைத்து அமரவைத்தவர்...என்னடா உடம்ப கவனிக்கிறதே இல்லியா?இப்படி இளச்சு போய்ட்ட” என பாசமுடன் கேட்க

அவரது பாசத்தில் கண் கலங்கியவள்,”ஏங்க நான் இது வரைக்கும் ஏதாவது ஆசைப்பட்டு கேட்டு இருக்கனா?இந்த பசங்களுக்கு எதாவது செய்யாம்ம விட்ருப்பனா? இப்ப மட்டும் யாரும் என்ன புரிஞ்சிக்க மாட்டேன்கிறிங்க?” என அழுது கொண்டே கேட்க

“யாருடா உன்ன தப்பு சொன்னா?நீ செஞ்சது எல்லாம் சரி.அந்த பொண்ணு பேசினது தப்பு”என அவர் சொல்ல

“உங்களுக்கு தெரியுமா? என கேள்வியோடு அவர் முகத்தை மஞ்சு பார்க்க

தெரியும் என்று தலை அசைத்தவர்,”அர்ஜுன் சொன்னான்.அதே நேரத்தில் அம்மாக்கு பிடிக்காத எந்த செயலும் எனக்கும் பிடிக்காதுப்பா.அதுனால எனக்கு திருமணம் இனி கிடையாதுன்னு சொல்லிட்டான்” என்றார்.

“என்னது அப்படியா சொன்னான்..ஏன் அவளை விட்டா வேற பொண்ணே இல்லையா” என அவள் வேகமாக கேட்க

“இதே கேள்விதான் மஞ்சும்மா எங்க அம்மாவும் என்னை கேட்டாங்க...ஆனா எனக்கு உன்ன மட்டும் தான பிடிச்சிருந்தது என்றவர்..குறை இல்லாத மனிதர்கள் இல்லை மஞ்சு.உன் மகன் உன் மனம் போல் வாழ வேண்டுமா? இல்லை மனதிற்கு பிடித்தவளோடு வாழ வேண்டும்மா? நீய முடிவு பண்ணிகொள்.அந்த பொறுப்பை உன் மகன் உன்னிடம் கொடுத்து விட்டான்” என கூறிவிட்டு எனக்கு தூக்கம் வருகிறது.நான் படுக்கிறேன் என சொல்லிவிட்டு கண்களை மூடிகொண்டார் .மஞ்சுவிற்கோ அது தூங்கா இறைவனது.


காலை பதினோரு மணி அளவில் வீட்டின் அழைப்பு மணி ஓசை கேட்க கதவை திறந்தார் வனஜா.”வணக்கம் அத்தை .என் பெயர் அர்ஜுன்...நான் உள்ளே வரலாம்மா” என சிரித்து கொண்டே கேட்க

அவனை பார்த்ததும் திருசெந்தூர் முருகனின் ராஜா அலங்காரம் நினைவிற்கு வர,அந்த முகத்தில் இருக்கும் மயக்கபுன்னகை இவன் முகத்தில் சிறிது நேரம் அவனையே பார்த்து கொண்டிருந்த வனஜா
“ஆன்ட்டி...ஆன்ட்டி என அவன் இரண்டுமுறை அழைத்த பின்பே நிதானத்திர்க்கு வர...வாங்க...வாங்க” என வழிவிட்டார்.

உள்ளே வந்ததும் சிறிது நேரம் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தனர் இருவரும்.பின்னர் முதலில் அர்ஜுனே பேச்சே ஆரம்பித்தான்.தன்னை முதலில் அறிமுகபடுத்தி கொண்டவன் “ஆன்ட்டி நீங்க ருத்ரா மேல ரொம்ப கோபமா இருப்பிங்க...அதுல பாதி பங்கு என்னோடதும் தான் என ஆரம்பித்து அவளை பார்த்த உடனே பிடித்த கதையை சொன்னவன் ஆன்ட்டி அவ ரொம்ப சின்ன பொண்ணா இருக்கா...பாசமோ கோபமோ எத இருந்தாலும் அதிகம்தான்.இப்பவே நாங்க பேசி ஒரு மாதத்திற்கு மேல ஆகுது.எங்க அம்மா எனக்கு முக்கியம்னு சொல்லிட்டா.ஆனா திருமணம் என்று ஒன்று நடந்தால் அது எங்கள் இருவரோடுதான்.எங்களுக்கு நடுவில் யாரும் வர முடியாது ஆன்ட்டி” என தீர்க்கமாக சொல்ல வனஜா ஏதும் பேசமால் அவனியே பார்த்து கொண்டிருந்தாள்.

“எங்க வீட்லயும் இந்த திருமணதிற்கு சம்மதம் இல்லை” என அவன் தொடர

அதற்க்கு வனஜா “அப்புறம் ஏன் “என பேச ஆரம்பிக்க

“இருங்க ஆன்ட்டி நான் சொல்லி முடிச்சறேன்.நான் உங்களிடம் விவாதம் பண்ண வரலை...எங்களோட நிலையை சொல்லிட்டு போலாம்னுதான் வந்தேன்” என்றவன்

மஞ்சுவிற்கு ருத்ராவிர்க்கும் நடந்த மோதலை பற்றி சொன்னவன் “அதனால் எங்க அம்மாவிற்கும் இதில் உடன்பாடு இல்லை.ஆனால் உங்களது இருவர் சம்மதம் இல்லாமல் எங்கள் திருமணம் இல்லை.அது வரைக்கும் நாங்க காத்திருக்கோம்.அதற்குள் நீங்க வேறு ஏற்பாடு எதவது செய்ய நினைத்தால்,கண்டிப்பாக ஆரூ ஒத்துகொள்ளமாடாள்.மீறி நடந்தால் என சொல்லிவிட்டு வனஜாவை நேருக்கு நேர் பார்த்தவன் சிறிது நேரம் அப்படியே நின்று விட்டு நீங்க அப்படி பண்ண மாட்டீங்கனு நினைக்கிறன் அத்தை ” என சொல்லிவிட்டு வேகமாக வெளியேறினான்.

வனஜா அப்படியே திகைத்து போய் நின்றாள்.புயலை போல் வந்தான்.அவன் மனதில் இருப்பதை கொட்டி தீர்த்தான் .இப்போது கிளம்பிவிட்டான் என யோசித்தவள் தனது மகள் செய்த முட்டாள் தனமான காரியத்தை எண்ணி மனதிற்குள் வருந்தினாள்.
.
மறுபடியும் நாட்கள் ஓடின...எந்த மாற்றமும் இல்லை.ஒருநாள் மஞ்சு வீட்டில் தோட்ட வேலை பார்த்து கொண்டிருக்க அவளை பார்க்க ஒருவர் வந்தார்.

அவரை பார்த்ததும் எங்கோ பார்த்தது போல் இருக்க வேலையை விட்டு விட்டு மஞ்சு அருகில் வர அதற்குள் அவரும் அருகில் வந்து விட

“ஹே வனஜா!!!!!!!!!!!! “என சந்தோஷ குரலில் தாவிசென்று அவளை கட்டி அணைக்க பல வருடங்களுக்கு பிறகு தனது உயிர் தோழியை பார்த்த சந்தோசத்தில் வனஜா பேச்சின்றி நிற்க அந்த இடத்தில இருவர் கண்களில் கண்ணீர் மட்டுமே.முதலில் நிதானம் அடைந்த வனஜா “...மஞ்சு எப்டி இருக்க? திருமணதிற்கு பிறகு நீ ஏன் எனக்கு கடிதமே போடல” என கேள்விகளால் பேச்சை தொடங்க

“எல்லாம் நான் சொல்றேன்...முதல்ல உள்ள வா என அழைத்து சென்று அவளை உபசரித்தவள்..... ம்ம்ம் இப்போ கேள் சொல்றேன்” என்றாள்.
.
“ஆமா நீ ஏன் எனக்கு கடிதமே எழுத வில்லை” என வனஜா கோபிக்க

“இல்லை வனஜா...இவருக்கு ஒரு இடத்துல நிரந்திரமான வேலை இல்லை.சுத்திகிட்டே இருந்தமா..அதுனாலதான் என சொல்லிவிட்டு
ஆமா நான் ஊருக்கு வந்தப்போ நீ திருமணம் முடித்து சென்றுவிட்டதாக சொன்னங்க...எப்படி இருக்காங்க எல்லாரும்” என்றாள்..

வறட்சியான புன்னகையை பதிலாக தந்தவள் எல்லாமே கடவுளின் எண்ணப்படி நடக்குது.நாம் நினைத்தது எது நடந்தது என விரக்தியாக பதில் வர

“என்னாச்சு வனஜா..பெரிய இடத்துலதான உன்ன கொடுத்திருகிறதா சொன்னங்க...அதை சொல்லிக்கூட அண்ணா என்னை திட்னங்க...அவ அப்பா அம்மா பேச்சை கேட்டதால் செல்வாக்கா இருக்காணு” என மஞ்சு சொல்ல

அது உண்மைதான் மஞ்சு.ஆனால் எதுமே நிரந்திரம் இல்லயே...என்னோட கதைய விடு..நீ எப்படி இருக்க என்றதும்

“ நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன் வனஜா.என்னை தங்கம் போல் தாங்குற கணவர் அழகான 2 குழந்தைகள் நிம்மதியா இருக்கேன்” என்றாள்..

“ரொம்ப சந்தோசம் மஞ்சு...நீ பட்ட கஷ்டத்துக்கு ஒரு விடிவு இது” என சொல்ல

“அன்று உன்னோட உதவி இல்லினா எனக்கு இந்த வாழ்வே இல்லையே என்றவள் அன்று நீ மட்டும் இவரை நம்பி போ,உன்னை கண்டிப்பா கடைசி வரைக்கும் வச்சு காப்பாற்றுவார்னு சொன்னது தான் எனக்கு பெரிய தெம்பே என்றாள்.
.
“உண்மை தானே மஞ்சு..பாரு எங்க அண்ணா உன்னை அப்படிதான் வச்சிருகார்” என சிறித்து கொண்டே கேட்க

“ஆனா நீ அப்படி இல்லையே வனஜா..என்ன நடந்தது சொல்லு” என மஞ்சு கேட்க

அவருக்கும் தன மனதில் இருக்கும் பாரத்தை யாரிடமாவது இறக்கி வைக்க தோன்ற கொட்ட ஆரம்பித்து விட்டார்.

“என்ன சொல்றது மஞ்சு...பிஸினெஸ் தனியா வந்து பண்ணதுல அவங்க சொந்தகாரங்களுக்கு கோபம்.இவரும் கொஞ்சம் அடிபட்டு மேலே வந்தார்.நன்றாக போய் கொண்டிருந்த எங்கள் வாழ்கையில் மறுபடியும் புயல் அவர்கள் சகோதரர்கள் வழயில் வந்தது.உனக்கு தான் ஆண் வாரிசு இல்லயே...உனக்கு எதற்கு சொத்தில் பங்கு தரவேண்டும்.இருக்கும் வரை பயன்படுத்திவிட்டு எங்க வாரிசுகளுக்கு குடுத்து விடு என அவரை நச்சரிக்க ஆரம்பித்தனர்.இவர் அதற்க்கு ஒத்து கொள்ளவில்லை.இதனால் பல மன உளைச்சல்களை அவர்க்கு கொடுத்தாங்க.இதெல்லாம் அவர் எங்கிட்ட சொல்லவே இல்ல மஞ்சு.நானும் குடும்ப வாழ்க்கை நன்றாகத்தான் போய்கிட்டு இருக்கு என சந்தோசப்பட்டு கொண்டிருந்தேன்.என் பொண்ணுக்கு எட்டு வயது இருக்கும்.நெஞ்சு வலிக்குது என்றார்.மருத்துவமனைக்கு செல்லும் வழியிலே எல்லாம் முடிந்து விட்டது”என சொல்லிவிட்டு அப்படியே கல்லாக போல் அவர் அமர்ந்திருக்க

மஞ்சு அவள் அருகில் வந்து அவள் கைகளை இறுக பற்றி “வனஜா “என்றதும் வெடித்துவிட்டால் வனஜா...”என்னால முடியல மஞ்சு...அவர் என்னை இப்படி விட்டுடு போவார்னு நினைக்கலை.பதினைந்து வருடத்திற்கு பிறகு இப்பதான் என்னால் அழகூட முடிந்தது.அந்த நேரத்தில் அந்த ஈவு இரக்கமில்லாத மனிதர்கள் எனக்கு அதற்க்கு கூட வாய்ப்பு கொடுக்கவில்லை என கதறி அழுக...... மஞ்சுவிற்கு இது அதிர்ச்சியாக இருந்தது.தன மனதில் உள்ள வேதனையை அழுகையிலே இறக்கி வைத்த வனஜா பின்னர் கண்களை துடைத்து கொண்டு அமைதி அடைய.....

எங்க அம்மாகிட்ட கூட நான் இப்படி அழுததில்லை மஞ்சு.உன்கிட்டதான் மனச விட்டு அழுதேன்.அங்கும் வந்து அவர்கள் பிரச்சனை பண்ண எனக்கு எந்த சொத்தும் வேண்டாம் என்று என்று சொல்லிவிட்டு வெளியே வந்துவிட்டேன்.இது என் பிறந்த வீட்டிற்க்கு பிடிக்கவில்லை.என் அண்ணீ எங்கே நான் அவர்களுக்கு பாரமா வந்து விடுவோனு பயந்தாங்க..அந்த சமயத்துல எந்த பக்கம் திரும்பினாலும் அடிதான்.ஆனாலும் நான் அசரவில்லை.ஒரு பள்ளயில் ஆசிரியாராக சேர்ந்து என் மகளை நன்றாக படிக்க வைத்தேன்.


இப்போ அவள் படித்து ஒரு நிறுவணதில் ஆடிட்டராக பயிற்சி எடுத்து வருகிறாள் என்றாள்.”.மஞ்சு வனஜாவின் சோகத்தில் மூழ்கி இருந்ததால் இந்த வார்த்தையை கவனிக்க வில்லை.

“என்ன வனஜா நீ..உனக்கு இவ்ளோ நடந்திருக்கு...நான் உன் பக்கத்துல இல்லாம போயிட்டானே ...எனக்கு நீ இருந்த...உனக்கு என்னால உதவமுடியிலேயே” என வருந்த

“விடு மஞ்சு...அவங்களுக்கு என்னென்னு தலையிலே எழுதி இருக்கோ அதான நடக்கும் “என அவளை தேற்ற

“இல்ல வனஜா...துன்பத்தில் உதவாத நட்பு என்ன நட்பு” என அவள் வருந்த

“உனக்கு தெரிஞ்சுருந்தா கண்டிப்பா நீ வந்திருப்ப...எனக்கு தெரியாதா” என வனஜா அவருக்கு ஆறுதல் சொன்னார்.

“கண்டிப்பா வனஜா என்றவர் ஆமா இப்போ எப்படி என் வீடுன்னு உனக்கு தெரிஞ்சது” என கேட்க வனஜா அமைதியாக தலையை கீழே கவிழ்ந்தார்
.
“மஞ்சு நான் என்னோட முழு கதையும் சொல்லிடறேன்.நாங்க தனியா வந்ததக்கு அப்புறமும் அவரோட சகோதர்கள் எங்களுக்கு இடைஞ்சல் கொடுத்து கிட்டே இருந்தாங்க..என் பொண்ணும் அவங்க அப்பா மாதிரி.கோபம் அதிகம் வரும்.அதே சமயத்தில் யாரையும் நம்பி விடுவாள்.அதனால் அவர்களிடம் அவள் ஏமாந்து விடக்கூடாது என்பதற்காக அவள் கோபபடும்போது நான் அவளை கண்டிக்க வில்லை.அவள் மரியாதை குறைவாக பேசும்போது அவளை திருத்த முயற்சிக்க வில்லை.அதனால் அவ கோபகாரியாவே வளர்ந்துட்டா.அவ கிட்ட பேச எல்லாரும் பயபடுவங்க.சட்டுன்னு கோபம் வந்திடும்.ஆண்துணை இல்லாத எங்களுக்கு இவளோட இந்த குணமும் எனக்கு ஒரு பாதுகப்பா தோனுச்சு.அவளிடமும் யாரும் நெருங்க பயந்தாங்க.ஆனா அது எவ்ளோ தவறுன்னு எனக்கு இப்போ புரியுது” என சொல்ல

“அதனால் என்ன வனஜா...பெண்கள் இப்படிதான் இருக்கனும்.அமைதியா இருந்தா நம்மள மிதிச்சிட்டு போய்கிட்டே இருப்பாங்க....அதும் உன் பொண்ணு கண்டிப்பா ரொம்ப கோபகாரியா இருக்க மாட்டா...எனக்கு தெரியும்...அத்தியாவசிய இடங்களில் ரௌத்திரமும் கொஞ்சம் வேணும் வனஜா” என மஞ்சு அவளுக்கு ஆதரவாக பேச

“புரியுது மஞ்சு...இப்போ ஓரளவுக்கு அவளே புரிஞ்சு தெறிஞ்சு நடந்துகிரா...ஆனா சில விஷயங்கள் கை மீறி போகிடுச்சு” என சொன்னதும்

“என்ன வனஜா..எதாவது பிரச்சனையா?கவலைபடாத நாங்க இருக்கோம்”. என்றார்.
 

Vathani

Administrator
Staff member
Joined
Jul 23, 2021
Messages
863
சிறிது நேரம் மஞ்சுவை உற்று பார்த்தவள் ...”மஞ்சு என் பொண்ணுக்காக நான் உன்னிடம் மன்னிப்பு கேட்கிறேன்.அவ பேசினது ரொம்ப தப்பு என மஞ்சுவின் கைகளை பிடித்து கொண்டு வனஜா கேட்க

“உன்னோட பொண்ணு என்னை என்ன பேசினா என கேட்ட மஞ்சு பாத்தியளே நிறுத்தி விட்டு...ம்ம்ம்” என தலை ஆட்ட

ஆமா மஞ்சு..என் பொண்ணதான் ருத்ரா.எனக்கு நீ தான் அர்ஜுனோட அம்மனு தெரியாது. அர்ஜுன் என்னை பார்க்க வந்தான் என ஆரம்பித்து அவன் சொன்னதை சொன்னவள் அவன் சொன்ன பிறகு தான் எனக்கு எல்லாம் தெரிந்தது .அப்படியே துடிச்சு போயிட்டேன்.அந்த அம்மாவோட மனசு என்ன பாடுபடும்னு நினச்சு நான் பல நாள் தூங்கலை .அவள் வீட்டுக்கு வந்ததும் அவளை பிடித்து நன்றாக திட்டி விட்டேன்.ஆனால் உண்மையா தப்பு செஞ்சது நான் தானே.சிறுவயதிலே அவளை கண்டித்து இருந்தால் இப்படி பேசி இருக்க மாட்டாள். அதனால் நான் வந்து மன்னிப்பு கேட்டலதான் சரி என் நினைத்து இங்கு வந்தேன்.வந்த பிறகுதான் அது நீ தானு தெரிஞ்சதும் ரொம்பவே நொந்திட்டேன் மஞ்சு .உன்னை போய் எப்படி அவ அப்படி பேசினா ....எல்லாம் என்னாலதான்......ஆனால் அவளை பாதுகாக்க எனக்கு வேறு வழி தெரியவில்லை அதான். மஞ்சு என் பொண்ணை மன்னிச்சுடு” என வனஜா கேட்க

“போடி லூசு...எப்போ அவள் உன் பொண்ணுன்னு தெரிஞ்சுடுச்சோ அப்பவே அவளும் என் பொண்ணுதான். என்ன பெருசா பேசிட்டா.....நான் செஞ்சதும் தப்புதானே....ரொம்ப மோசமா எல்லாம் திட்டலை...சின்ன பொண்ணு தான என சிரித்துகொன்டே சொன்னவர் .....எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு வனஜா.ஆனாலும் என் பையன் என் தோழியே எனக்கு சம்பந்தியா கொண்டு வருவான்னு நினைக்கலை” என மஞ்சு சந்தோசத்தில் துள்ளி குதிக்க

“இல்லை மஞ்சு.வேண்டாம்.நீ என் பொண்ணை மன்னித்தால் மட்டும் போதும்.உன்னோட நல்ல மனதுக்கு நாங்க கண்டிப்பா பொருந்தி வரமாட்டோம்.அதும் அன்னைக்கு அர்ஜுன் வந்து பேசும்போது என்ன தெளிவு தெரியுமா?...எனக்கு உன் வீட்டுகாரர் உனக்காக எங்கிட்ட பேசும்போது எவ்ளோ தெளிவா பேசினாரோ அதே அழுத்தம் தெளிவு இவனுக்கும் இருந்தது.ஆனா இது ருத்ராக்கு ஒத்துவருமா...அதும் இப்போ உன்னோட பையன் என்று தெரிந்த பின்பு வேண்டாம்” என வனஜா மறுக்க

“லூசு மாதிரி உலராத...என் பையன் உன் பொண்ணுமேல உயிரே வச்சு இருக்கான்.என்னை எதிர்த்து பேசாதவன் இப்போ அதுக்கும் துணிஞ்சசுட்டான்.இது எல்லாம் ஒத்து வரும். நீ அமைதியாக இரு...இனி அவதான் என் வீட்டு என் மருமக ....என சொல்லிவிட்டு சிறிது நேரம் அபி அகில் பற்றி பேசிகொண்டிருந்தனர். நல்ல யோசிச்சு முடிவு பண்ணு மஞ்சு என வனஜா தயங்க ...அதெல்லாம் முடிவு பண்ணியாச்சு...நாள் குறிச்சுட்டு சொல்றேன்...என் மருமகளை என் வீட்டுக்கு அனுப்பி வை என செல்ல மிரட்டல் விடுத்தவர் .... நம்மள இவ்ளோ நாள் வருத்த பட வச்ச இவங்க இரண்டுபேரையும் பேரையும் சும்மா விட்றலாமா..இரு என் தளபதியே கூப்பிடுகிறேன்” என அலைபேசியை எடுத்தார் மஞ்சு.


காதல் காற்றோடு கரைந்து போய்விடுமா

என எண்ணிருந்த நேரத்தில்

கனவிலும் நினைக்காத காட்சிகள் அரேங்கேற

நடப்பவை யாவும் மகிழ்ச்சியை தர

மனசெல்லாம் மத்தளமிட

வாழும் ஒவொவொரு நொடியும்

வண்ணமயமாக தெரிய

வானத்தில் மின்னும் நட்சத்திரங்கள்

வாழ்த்து தெரிவிக்க

வளைந்து ஓடும் நதி அலையோ

துள்ளி குதிக்க

வானத்தை வசபடுத்தி விட்ட

சந்தோஷத்தில்

இரண்டு மனங்களும் சங்கமித்தன.!!!!!!!!!!!!!!
 
Top