ஓலை - 14
கை நிறைய வளையல்கள் பூண்டிருக்க... பொன்னகை கழுத்தை அலங்கரிக்க, தலை நிறைய பூ வைத்து அலங்கார தேவதையாக இருந்தாள் சுஜாதா.
ஆனால் அவளது முகத்தில் புன்னகை மட்டும் குறைந்திருந்தது. சதா யோசனையுடனே சுற்றிக் கொண்டிருந்தாள்.
'தான் அனுப்பிய கடிதம் போய் சேர்ந்திருக்குமா? பதில் வருமா?' என யோசித்தப்படியே சுஜாதா
வீட்டு வாசலுக்கு செல்லலாம் என இரண்டு எட்டு எடுத்து வைத்திருக்க.
" எங்க போற சுஜா? மாப்பிள்ளை ஊர்ல இருந்து வந்தாச்சு. கல்யாணப் பொண்ணா லட்சணமா எங்கேயும் அலையாமல் உள்ள போய் உட்காரு." என்று அவளது அம்மாவின் குரலில், தடுமாறி நின்றாள்.
காலையில் தான் சத்யபிரகாஷும், கோபியும் திருவண்ணாமலைக்கு வந்திருந்தனர்.
சற்று நேரம் ஓய்வெடுத்தவர்கள், பிறகு குளித்து விட்டு வர…
இருவருக்கும் பலமான காலை உணவு தயாராகியிருந்தது.
அதை ஹாலில் அமர்ந்து, ரசித்து உணவருந்திக் கொண்டிருந்தனர்.
வீட்டு சாப்பாடு இல்லாமல், ஹாஸ்டல் சாப்பாடே, சாப்பிட்டு நாக்கு செத்து போயிருந்த இருவரும், ரவுண்டு கட்டி உணவை உள்ளே தள்ளினர்.
திடீரென அவனைப் பற்றிய பேச்சு அடிபடவும், சத்யபிரகாஷ் நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.
கண்கள் கலங்க, உள்ளே சென்றாள் சுஜாதா.
தோளைக் குலுக்கிய சத்யபிரகாஷ் மீண்டும் உணவில் கவனத்தை செலுத்தினான்.
ஒரு வழியாக இருவரும் சாப்பிட்டு முடித்தனர்.
சத்யபிரகாஷோ, " கோபி… எனக்கு வெளில ஒரு வேலை இருக்கு. அதை முடிச்சிட்டு கடைக்குப் போகப் போறேன். நீயும் வர்றீயா?" என.
" இல்லைடா… அம்மாவையும், தம்பியையும் பார்க்க போறேன்." என்றான் கோபி.
" ஓகே டா. எதைப் பத்தியும் யோசிக்காதே. அம்மாவை கஷ்டப்படுத்தாதே. அவங்க என்ன சொன்னாலும் கேளு."
" சரி டா. அம்மா கல்யாண பண்ணிக்க சொன்னாலும் பண்ணிக்கிறேன் போதுமா?" என்று கோபி சிரிக்க.
' இவன் என்னமோ மனசுல நினைக்கிறான். ஆனால் ஒன்னும் சொல்ல மாட்டேங்குறான்.' கோபியை யோசனையுடன் பார்த்துக் கொண்டே மனதிற்குள் நினைத்துக் கொண்டான் சத்யபிரகாஷ்.
பேசிக் கொண்டே வெளியே வந்த இருவரும், வேற வேற வழியில் சென்றனர்.
***********************
வீடே விழாக்கோலம் பூண்டிருக்க… எல்லோருமே பரபரப்புடனே இருந்தனர்.
"கல்யாணம் பண்ணி பாரு…
வீட்டைக் கட்டிப் பாரு…" என்று பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள்.
எவ்வளவு ஆட்கள் இருந்தாலும், எல்லோருக்கும் ஏதாவது வேலை இருந்துக் கொண்டே இருந்தது.
இதில் சுஜாதாவிற்கும், சத்யபிரகாஷிற்கும் மட்டுமே வேலை இல்லாமல் இருக்க, அவர்களுக்கோ பொழுதை நெட்டி தள்ளுவதற்குள் போதும் போதுமென்று ஆகிவிட்டது.
ஒரு வழியாக திருமண நாள் அழகாக விடிய, ஊரிலே மிகப் பெரிய மண்டபத்தை ஏற்பாடு பண்ணியிருந்தனர்.
மதியரசி, மனோகர் திருமணம் அவசர அவசரமாக நடைப்பெற்றதால், எளிமையாகவே நடைப்பெற்றது.
அதனால் சத்யபிரகாஷ், சுஜாதா திருமணத்தை வெகு விமரிசையாக ஏற்பாடு செய்து இருந்தனர்.
உற்றார், உறவினர் முன்னிலையில் ஐயர் அக்னி வளர்த்து, மந்திரம் சொல்ல…
அதை திரும்ப சொல்லிய இருவரது முகமோ இறுகிப் போய் தான் இருந்தது.
சத்யபிரகாஷ் ஊரிலிருந்து வரும்போது நன்றாகத்தான் இருந்தான்.
ஆனால் திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியே சென்று விட்டு வந்தவன் முகம் வெளிறிப் போயிருந்தது.
சுஜாதாவோ உணர்வுகளை தொலைத்து நின்றிருந்தாள்.
' அவ்வளவு தான் தன் கனவு.' என்று எண்ணியவளோ பொம்மை போல் அமர்ந்து ஐயர் செல்வதை செய்துக் கொண்டிருந்தாள். இனி அவள் வாழ்க்கை அவள் கையில் இல்லை என்பது புரிந்தது.
அவளுக்கு அருகில் நின்றிருந்த மதியரிசியோ, மெல்ல குனிந்து,"சுஜா… கொஞ்சம் சிரி டி. அப்புறம் ஆல்பம், வீடியோவைப் பார்த்து ஃபீல் பண்ணுவ." என்று முணுமுணுக்க.
அவளை லேசாக தலைத் திருப்பி பார்த்தவள், ' அவளைப் போல தானே தானும் இருக்கப் போகிறோம்.'என்று எண்ணிக் கலங்கியவள், அதை மறைத்து மெல்ல புன்னகைத்தாள்.
அதற்கு பிறகு எல்லா சடங்கு சம்பிரதாயம் முடிக்கும் வரைக்கும் அதே இழுத்துப் பிடித்த சிரிப்புடன் இருந்தாள்.
கோபி இந்த ஊருக்கு வந்ததில் இருந்து அவன் அவனாகவே இல்லை.
அவனுக்குள்ளும் வேண்டாத நினைவுகள் தோன்றிக்கொண்டே இருந்தது.
‘இங்கே வந்தே இருக்கக் கூடாது. சீக்கிரம் இங்கிருந்து கிளம்ப வேண்டும்.’ என்று எண்ணியவன், முள்ளின் மேல் நிற்பது போல் நின்றிருந்தான்.
பெரியவர்கள் ஆசைப்பட்டபடி சுஜாதா, சத்யபிரகாஷின் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது.
இளவட்டங்களின் கேலி, கிண்டலில் சத்யபிரகாஷின் முகத்திலும் புன்னகை வந்தமர்ந்தது.
சாப்பிடும் போது இனிப்பை சுஜாதாவிற்கு ஊட்ட சொல்லி ஒரே ரகளை நடக்க.
சத்யபிரகாஷ் இனிப்பை எடுத்து சுஜாதாவிற்கு ஊட்டினான். வெட்கத்துடன் வாங்கிக் கொண்டாள் சுஜாதா. அதைப் புகைப்படம் உள்வாங்கிக் கொள்ள… அவர்களது திருமண ஆல்பத்தில் அந்த ஒரு புகைப்படம் மட்டுமே அழகான கவிதையாக இருந்தது.
அவர்கள் வழக்கப்படி திருமணம் முடிந்ததும், கோவிலுக்கு செல்ல வேண்டும்.
அந்த பொறுப்பு மனோகர், மதியரசியிடம் ஒப்படைக்கப்பட்டது.
கோவிலில் சாமி தரிசனம் முடித்து விட்டு வீட்டிற்கு வந்த சத்யபிரகாஷும், சுஜாதாவும் மீண்டும் தங்களது இயல்பை தொலைத்து விட்டு, இறுகிப் போயிருந்தனர்.'
"இது தான் எங்க கல்யாணம் நடந்த கதை. யாரோ செய்த தப்புக்கு நான் தண்டனை அனுபவிச்சேன். சத்யா ஊருக்கு வந்துட்டாலே போதும். இங்கே நிக்காதே, உள்ள போ, சத்தமா பேசாதே… சிரிக்காதா… அடக்க ஒடுக்கமா இருன்னு இப்படி சொல்லி சொல்லியே, உங்கப்பா பேரைக் கேட்டாலே எனக்கு வெறுப்பு வர்ற மாதிரி பண்ணிட்டாங்க. என் மனசும் அலைப்பாய்ந்தது.”என்று தனது சிறுவயது கதையை கூறிய சுஜாதாவின் குரல் தழுதழுத்தது.
" அம்மா! இப்போ நீங்க ஆசைப்பட்ட மாதிரி தான வொர்க் பண்றீங்க. இன்னைக்கு சென்னைல ஃபேமஸான ஃபேஷன் டிசைனரா இருக்கீங்க. அதுக்கெல்லாம் அப்பா தானே ஹெல்ப் பண்ணாங்க. இதுலேயே அப்பா உங்க மேல வைச்ச பிரியம் தெரியலையா. இன்னும் தேவையில்லாத நினைச்சு வருத்தப்படுறீங்க." என்று சந்தியா மெதுவாக வினவ.
" அதானே…" என்றாள் சுனிதா.
“என்னோட உணர்வுகளை உங்களால புரிஞ்சுக்க முடியாது. நான் அனுபவித்த வலி எனக்குத் தானே தெரியும்.' என்று தனக்குள் முணுமுணுத்தவர், " சந்தியா சொல்றதும் சரி தான். எதுக்கு தேவையில்லாததைப் பத்தி இப்போ பேசிக்கிட்டு. மணியும் ஆகிடுச்சு.இரண்டு பேரும் போய் படுங்க…" என்று கூற.
" சரி மா." என்ற இருவரும், மனதே இல்லாமல் அங்கிருந்து நகர்ந்தனர்.
சுஜாதாவோ செல்லும் மகள்களை பார்த்துக்கொண்டிருக்க. அவரது கண்களில் இருந்து கண்ணீர் தன்னை மீறி வழிந்தது.
வெளியே சென்ற மகள்கள் இருவரும் மீண்டும் உள்ளே வந்தனர் .
"அம்மா… நம்ம சென்னைக்கு போகலாமா?" என்று சுனிதா வினவ.
அவசரமாக கண்ணை துடைத்த சுஜாதா," ஏன்? என்னாச்சு… " என்று அவளைப் பார்த்து வினவ.
" அது மா… எங்களுக்கு அப்பாவைப் பார்க்கணும் போல இருக்கு." என்றாள்.
"என்ன இது புதுசா அப்பாவை விட்டு பிரிஞ்சு இருக்க முடியலையா? "
என்று சந்தேகமாக சுனிதாவைப் பார்க்க.
சந்தியா உதவிக்கு வந்தாள். " இல்லை மா. அப்பா நம்மோட டைம் ஸ்பென்ட் பண்றேன்னு சொல்லிட்டு, இப்போ ஊருக்கு போயிருக்கிறது கஷ்டமா இருக்கு. அதான் மா. நம்மளும் ஊருக்கு போகலாம் மா." என்றாள்.
" அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நாமளும் இப்ப போகணும்னா பாட்டி திட்டுவாங்க. அப்பா ஊருக்கு போனதற்கே ஏதோ சொல்லிட்டு இருக்காங்க." என.
அம்மாவின் கலங்கிய முகத்தையும், கரகரத்த குரலையும் கண்டுக் கொண்ட சந்தியா, " சரி மா. நீங்க எதையும் யோசிச்சு வருத்தப்படாதீங்க. காலையில் சீக்கிரம் எழுப்புங்க மா. நாளைக்கும் கோவிலுக்கு போகலாம். ப்ளீஸ் மா." என்று கெஞ்ச.
" சரி… சரி… நான் எழுப்புறேன். இப்போ போய் தூங்குங்க. குட்நைட்." என்று சுஜாதா முயன்று புன்னகைத்தார்.
வெளியே வந்து அவர்கள் அறைக்குள் நுழையவும், சுனிதா பிடி பிடி என பிடித்துக் கொண்டாள்.
" லூசாக்கா நீ? நம்ம ஊருக்கு போனால் தானே யாரு அந்த ரைட்டர்னு கண்டுபிடிக்க முடியும். அவர் குடும்பம், வாழ்க்கை என அவர் நல்லா செட்டிலாயிட்டாருனு, தெரிஞ்சு கிட்டு அம்மாட்ட சொன்னா, அவங்க கொஞ்சம் ஃபிரியாவங்க. நாம இங்கே இருந்தால், எப்படி கண்டு பிடிக்க முடியும்? அதுக்காக தானே ஊருக்கு போகலாம்னு கேட்க போனோம். போன வேலையை விட்டுவிட்டு மத்த வேலையை கரெக்டா செய்துருக்க கா." என்று பொறிய.
"ஹேய் சுனிதா. எனக்கு அது தெரியாதா? அம்மா தான் போக முடியாதுன்னு சொல்லிட்டாங்க. அப்புறம் என்ன பண்றது. ஊருக்கு போனதுக்கு அப்புறம் பார்த்துக்கலாம். அம்மா முகம் வாடி போய் டல்லா இருக்காங்க. கோவிலுக்கு போனா கொஞ்சம் ரிலாக்ஸாவாங்க. அதான் நாளைக்கு கோவிலுக்கு போலாம்ன்னு சொன்னேன். நான் எதுக்கு சொல்றேன்னு புரிஞ்சுக்காம, எப்பவும் போல தாம் தூம்னு குதிக்க வேண்டியது. இது எல்லாம் தெரிஞ்ச மாதிரி ஏகாம்பரி மாதிரி ஏதாவது சொல்றது. மண்டையில ஒன்னும் கிடையாது." என்று பதிலுக்கு எகிறினாள் சந்தியா.
திருப்பி பதில் சொல்ல முடியாமல், முழித்துக் கொண்டிருந்தாள் சுனிதா.
தங்கையின் முகத்தை பார்த்து சிரித்துக் கொண்டே சந்தியா உறங்க முயன்றாள்.
அவளைப் பார்த்து பெருமூச்சு விட்டுக் கொண்டே, சுனிதாவும் உறங்கினாள்.
வழக்கம் போல கோவிலுக்கு நேரத்தோடு கிளம்பி சென்றனர்.
பெரியவர்களின், " எப்பப் பாரு கோவிலுக்கு கிளம்பி போயிடுறீங்க. எங்க கூட கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்தா என்ன?" என்ற முணுமுணுப்பை கேட்கத்தான் சுஜாதாவும், அவரது மகள்களும் இல்லை.
அவர்கள் தான் கோவிலுக்கு போகிறோம் என்று கூறிவிட்டு, பெரியவர்களின் பதிலை கேட்பதற்குள் கிளம்பி விட்டிருந்தனர். இருந்தால் இன்னும் கொஞ்ச நேரம் அவர்களின் பிரசங்கத்தை கேட்க வேண்டுமல்லவா…
சுனிதாவோ, தன் அம்மாவின் முகத்தில் புன்னகை வர வைக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு இருந்தாள்.
சாமி தரிசனம் முடியும் வரை அமைதியாக இருந்தவள், பிறகு தனது வாலை விரித்து விட்டிருந்தாள்.
" அம்மா! உங்களுக்குத் தான் பிடிக்காத கல்யாணம். ஆனா அப்பாவுக்கு உங்களை பிடிக்கும் தானே. அவரும் ஏன் மா எல்லா ஃபோட்டோலையும் உர்ருனு இருக்காரு. ரெண்டு பேருமே மாப்பிள்ளை ஊர்வலத்தில மூஞ்சுல பேயடிச்ச மாதிரி இருக்கீங்க. அதைப் பார்த்தா காமெடியா இருக்கு." என்று சுனிதா சிரிக்க.
சந்தியாவும் சிரிப்பை அடக்க முடியாமல், அடக்கிக் கொண்டு இருந்தாள்.
அவங்க ரெண்டு பேரையும் பார்த்து முறைத்த சுஜாதா, " ஹேய் உங்க அப்பா டி. அவரையுமா இப்படி கிண்டல் பண்றது. விட்டுடுங்க டி … பாவம் அந்த மனுஷன். ஆசையா தான் கல்யாணத்துக்கு வந்தார், ஆனால்… " என்றவர் தனக்குள் முணுமுணுத்தார்.
" என்ன மா சொல்றீங்க?" என்று சந்தியா வினவ.
" ஹாங். அது அப்போலாம் மாப்பிள்ளை அழைப்பு, மாப்பிள்ளையை மட்டும் அலங்கார கார்ல ஊர்வலமாக அழைச்சிட்டு வருவாங்க. எங்க கல்யாணத்தில தான், எங்க ரெண்டு பேரையும் சேர்த்து உட்கார வச்சு அழைச்சிட்டு வந்தாங்க.
கல்யாணத்துக்கு முன்னாடி சேர்ந்து உட்கார்ந்து வந்ததை ஒரு மாதிரியா உங்கப்பா ஃபீல் பண்ணியிருப்பாங்க. அதான் மாப்பிள்ளை ஊர்வலத்துல அப்படி இருந்தாரு… ஆனா கல்யாண போட்டோவில் எல்லாம் நல்லா சிரிச்சுகிட்டு தான் இருப்பாரு." என்றாள் சுஜாதா.
"நம்பற மாதிரி இல்லையே." என்று சுனிதா ஆராய்ச்சியாக பார்க்க.
" பின்ன என்ன டி. இப்போ போலவா கல்யாண பொண்ணே மம்மட்டியான், மம்மடியான்னு ஆடிட்டு வர்றதோ, இல்லை புல்லட் வண்டி டுக்கு டுக்குனு தெலுங்கு பாட்டுக்கு ஆடிட்டு வர்றதோ கிடையாது. பொண்ணும், மாப்பிள்ளையும் கல்யாணத்துக்கு முன்னாடி பார்த்துக்குறதே தப்புன்னு சொல்லுவாங்கத் தெரியுமா… " என்று சுஜாதா புலம்ப.
" ஓஹோ… ரொம்ப கவலையா இருக்காமா. இது தெரிஞ்சிருந்தா சில்வர் ஜூப்ளி ஃபங்ஷன் ல உங்கள ஆட விட்டு இருக்கலாமோ…" என்று சுனிதா கூற.
"அடி ஆத்தி… நான் ஆடுறதா. அதை மட்டும் உங்கப்பா பார்த்தாரு, அவருக்கு நெஞ்சு வலியே வந்துடும்" என்ற சுஜாதா, ஒரு நிமிடம் கற்பனை பண்ணிப் பார்க்க, அவளாலே சிரிப்பை அடக்க முடியாமல், வாய் விட்டு நகைத்தார்.
அவளோடு சேர்ந்து மகள்கள் இருவரும் சிரித்தனர்.
சிரித்து முடித்ததும், மீண்டும் மகள்களைப் பார்த்த சுஜாதா வாய் விட்டு நகைக்க…
இத்தனை வருஷங்களில் இப்படி ஒரு மலர்ச்சி அவரது முகத்தில் பார்த்திராத மகள்களோ அதிர்ச்சியில் உறைந்து நின்றனர்.
ஒரு வழியாக சிரிப்பை அடக்கிய சுஜாதா, " எதுக்குடி என் முகத்தையே பார்த்துட்டு இருக்கீங்க. அதுல என்ன என்னோட பர்பாமென்ஸ் தெரியுதா? ஒழுங்கா எழுந்திருச்சு வாங்க. பாட்டி திட்டுவாங்க வீட்டுக்கு போகலாம்." என்றவர், அவர்களை அழைத்துக் கொண்டு நடக்க.
திடீரென சுனிதாவோ, " ஹை இங்க பாருங்க. க்யூட்டா ஒரு மோகினி உருவம் இருக்கு. நான் இதுவரைக்கும் கவனிச்சதே இல்லையே." என்று கூற.
" ஹேய் வாலு. அதைப் பார்க்காத…" என்று சுஜாதா அதட்டினார்.
அதற்குள், " வாவ். அமேசிங்." என்றாள் சந்தியா.
" ஹேய் பொண்ணுங்ளா… அந்த மோகினியைப் பார்க்கக்கூடாது நம்மளுடைய வேண்டுதலை அது வாங்கிக்கும்." என.
"என்னம்மா சொல்ற ஒன்னும் புரியல?" என்றாள் சந்தியா.
" அது சாமிக் கிட்ட நாம என்ன வேண்டுகிறோமோ, அந்த வரத்தை வாங்கிக்கும். நம்ம வேண்டுதல் பலிக்காது." என்று தெளிவாக விளக்கிக் கூறினார் சுஜாதா.
" ஐயோ!" என்று சந்தியா பதற…
சுனிதாவோ, " அதான் பார்த்தது பார்த்தாச்சே, அந்த ஓவியம் எவ்வளவு அழகா இருக்கு. வா நாம செல்ஃபி எடுத்துக்கலாம்." என்றவள் சந்தியாவையும் இழுத்து நிற்க வைத்து ஃபோட்டோ எடுத்துக் கொண்டாள்.
" ஃபோட்டோ எடுத்தது போதும். இப்போ வர்றீங்களா? இல்லையா?" சுஜாதா சத்தம் போட…
" அம்மா… நீங்க கொஞ்ச நேரம் உட்காருங்க. நாங்க மறுபடியும் சாமி கிட்ட போய் வேண்டிக்கிட்டு வரோம். ப்ளீஸ் மா." என்று மூத்த மகள் கெஞ்ச.
அவரால் மறுக்க முடியாமல் போனது.
" சரி போய் சாமி கும்பிட்டு, சீக்கிரமா வாங்க. நான் இங்கேயே வெயிட் பண்றேன்." என்று விட்டு அந்த பிரகாரத்தில் ஒரமாக அமர்ந்தார் சுஜாதா.
உள்ளே சாமி பிரகாரத்தை நோக்கிச் சென்ற சுனிதா, " ஹே… சந்து… இதெல்லாம் நீ நம்பறியா?" என்று வினவ.
" நம்பறேனோ, இல்லையோ… அம்மா, அப்பாவுக்காக வேண்டிருக்குறேன். அதுல ரிஸ்க் எடுக்க நான் விரும்பல." என்று சந்தியா கூற.
"அதுவும் சரிதான்." என்று முதல் முறையாக அக்காவின் பேச்சுக்கு தலையை ஆட்டினாள் சுனிதா.
சமத்தாக சென்று கடவுளிடம் தீவிரமான வேண்டுகோளை வைத்து விட்டு, சுஜாதாவிடம் திரும்பி வந்தனர்.
சுஜாதாவோ, தனதருகே வந்து நின்ற மகள்களை கவனிக்காமல், அங்கே கோவிலில் தன்னைப் பார்த்து, பயந்து ஓடினவரை யோசனையாக பார்த்துக் கொண்டிருந்தாள்.
" அம்மா… ஏன் மா அந்த அங்கிளை வெறிச்சு பாக்குறீங்க. அவரும் திரும்பித் திரும்பி பார்த்துக்கொண்டு போறாரு." என்று சுஜாதாவை அசைத்து சந்தியா வினவ.
" ஹாங் என்னமா? சாமி கும்பிட்டீங்களா? வீட்டுக்கு போலாமா?"என்றார்.
"அம்மா… அந்த அங்கிள் உங்களுக்கு தெரிஞ்சவரா?" என்று மீண்டும் சந்தியா வினவ.
" ம் ஆமாம். தெரிஞ்சவர் தான்." என்ற சுஜாதா நடக்க…
அவருடனே நடந்த சுனிதா, " அப்புறம் ஏன் மா, அன்னைக்கு லெட்டர் போடும் போது அந்த அங்கிள் தெரிஞ்சவங்க மாதிரியே காண்பிச்சுக்கலை.
அவசரமா போஸ்ட் பாக்ஸ்ல போட்டுட்டு ஓடுறதுலே குறியா இருந்தாரு மா. நான் தான் வலுக்கட்டாயமாக அந்த லெட்டரை வாங்கினேன்." என.
" என்ன சொல்ற சுனிதா? இந்த அங்கிள் தான் லெட்டரை கொடுத்தாரா?" என்று மகளைப் பார்த்து வினவ.
" ஹன்ட்ரெண்ட் பர்சன்ட் ஷ்யூர் மா." என.
" ஓ… " என்ற சுஜாதா யோசனையிலிருக்க.
" யாரு மா அவரு. ரொம்ப வேண்டியவரா? நம்ம மேல கோபமா இருக்காரா? அதான் பேசாமல் போயிட்டாரா?" என்று சந்தியா வினவ.
" அதெல்லாம் ஒன்னும் இல்லை டா. அவர் உங்க கோபி அங்கிளோட தம்பி தான். அவர் நம்மளை சரியா கவனிச்சிருக்க மாட்டாரு. சரி விடுங்க." என்றவர் அமைதியாக வர.
அதற்குள் சந்தியாவோ, மனதிற்குள் சில கணக்குகளை போட்டு இருந்தாள்.
சுஜாதவோ, வீட்டிற்கு வந்தவுடன் வேகமாக தனது அறைக்குச் சென்று அந்த கடிதத்தை எடுத்து மீண்டும் ஒரு முறைப் பார்த்தார்…
தன் கண் முன்னாடி இருக்கும் கடிதமோ, தான் முட்டாளாக்கப் பட்டிருப்பதை அப்பட்டமாகக் காட்டியது.
' உடனே ஊருக்கு கிளம்ப வேண்டும்.' என்று முடிவு எடுத்தவள், நேராக அவரது அத்தையிடம் சென்றாள்.
" அத்தை… நாங்க ஊருக்கு கிளம்புறோம்."
" ஏம்மா சுஜாதா… சத்யா வந்து அழைச்சிட்டு போறன் என்று தானே சொன்னான்." என்று மென்மையாகக் கூற…
"அது இல்லை அத்தை. அவருக்கு முடியலையாம்." என்றார் சுஜாதா.
" என்னது மாப்பிள்ளைக்கு முடியலையா? அதை முதல்ல சொல்லாம வளவளனு பேசிட்டு இருக்க. முதல்ல உங்க அப்பாட்ட சொல்லி ட்ரைவர வரச் சொல்லு.நீ, நான் அண்ணி எல்லாரும் கிளம்புவோம்." என்று சுஜாதாவின் அம்மா கூற.
எங்காவது தலையை நங்நங்கென்று முட்டிக்கொள்ளலாம் போல இருந்தது சுஜாதாவிற்கு… ' பின்னே ஊருக்கு போறதுக்காக ஒரு காரணத்தை கண்டு பிடிச்சா, இப்படி குடும்பமே கிளம்புறாங்களே.' என்று எண்ணி நொந்து போனார்.
" அம்மா… எதுக்கு இப்படி டென்ஷனாகுறீங்க. நீங்க டென்ஷனாகுறது பத்தாதுன்னு, அத்தையையும் கலவரப்படுத்துறீங்க. ஜஸ்ட் அவருக்கு டிசண்ட்ரி. அவ்வளவு தான். நான் போய் கவனிச்சிக்கிறேன்." என்று அவர்கள் வருவதைத் தடுக்க முயன்றார்.
மருமகளின் மனதைப் புரிந்துக்கொண்டவரோ, "சரி மா… பார்த்து பத்திரமா போயிட்டு வாங்க. இரு உன் அண்ணன் கிட்ட சொல்லி டிரைவரை வரச் சொல்லுறேன். பிள்ளைகளை விட்டுட்டு போறீயா?"
என.
" இல்லை அத்தை… அவங்களும் வரேன்னு தான் சொல்றாங்க."
" அடுத்த முறையாவது பத்து நாளாவது இங்கே இருக்குற மாதிரி வாங்க." என்றவர் மதியரசியைப் பார்க்க…
"அவருக்கு ஃபோன் பண்ணிட்டேன் பெரியம்மா. வரேன்னு சொன்னாங்க." என்றார் மதியரசி.
சந்தியாவும், சுனிதாவும் ஊருக்கு கிளம்ப போவதைப் பற்றி தெரிந்துக் கொள்ளாமல், அங்கே கோபிக்கு ஃபோன் செய்து அவரை மட்டுமல்லாமல், சத்யபிரகாஷையும் சேர்ந்து அதிர வைத்துக் கொண்டிருந்தனர்.