• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Viswadevi

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
317
ஓலை - 15

" சத்யா… டேய் சத்யா…" என்ற கோபியின் குரல் கிணற்றிலிருந்து ஒலிப்பது போலிருந்தது சத்யபிரகாஷற்கு…

" ப்ச் என்னடா… "

" டேய் எழுந்திருடா…" என்று பரிதாபமாக கெஞ்சினார் கோபி.

" டூ மினிட்ஸ்டா. ப்ளீஸ்." என்று முணுமுணுத்த சத்யபிரகாஷ், திரும்பி குப்புறப்படுத்தார்.

அவனது செய்கையில் கோபியின் முகத்தில் புன்னகை வந்தமர்ந்தது.

" டேய் நீ இன்னும் மாறவே இல்லை டா. காலேஜ் படிக்கும் போது, எழுப்புனா டூ மினிட்ஸ், டூ மினிட்ஸ்னு சொல்லிக்கிட்டு எழுந்திருக்கவே மாட்டியே. அதை தான் இப்பவும் செஞ்சுட்டுருக்க." என்று கோபி அவனை கலாய்க்க.

அரைகுறையாய் முழித்திருந்தாலும் கோபியின் வார்த்தைகள் சத்யபிரகாஷின் செவியில் விழுந்தது.
அதற்கான பதிலும் உடனே வந்தது.

" டேய் அதெல்லாம் ஒன்ஸ் அபான் ஏ டைம். நவ் ஐயம் மெயிண்டெயின் பங்சுவாலிட்டி."

" ஓஹோ… இப்போ டைம் என்னன்னு தெரியுமா?"

" அதை கேட்கத் தான் இப்படி காலங்கார்த்தால வந்தீயா?"

" இப்போ மணி நைன் தர்ட்டி." என்றார் கோபி.

" ஓ.. காட்." என்று வேகமாக எழுந்த சத்யபிரகாஷ், " டேய் ஃபூல்… லெவன் ஓ க்ளாக் மீட்டிங் இருக்குல… வந்ததும் எழுப்ப வேண்டியது தானே. தேவையில்லாததெல்லாம் பேசி கிட்டு…" என்று கத்தியவன், போர்த்திருந்த போர்வையை வீசி விட்டு, எழுந்தார்.

" டேய் நான் ஒரு முக்கியமான விஷயத்தை பத்தி பேசத்தான் வந்தேன்." என்று கோபி சொல்ல.
அதை கேட்பதற்குத் தான் சத்யபிரகாஷ் அங்கில்லை.

" டென் மினிட்ஸ்ல வந்துடுறேன். ரெண்டு பேருக்கும் காஃபி எடுத்துட்டு வர சொல்லு." என்று குளியலறைக்குள் இருந்து சத்யபிரகாஷின் குரல் ஒலித்தது.

பத்து நிமிடத்தில், குளித்து கோட் சூட்டில் தயாராகி வந்தார் சத்யபிரகாஷ்.

" ஏன் டா நேத்து தான் ஊர்ல இருந்து வந்து, ரெஸ்ட் எடுக்காமல் வேலைப் பார்த்த.‌‌.. ரைட் இன்னைக்காவது ரெஸ்ட் எடுக்கலாம்ல. ஏற்கனவே ஃப்ளான் பண்ண மாதிரி, நானே மீட்டிங்கை அட்டெண்ட் பண்ணியிருப்பேனே." என்றார் கோபி‌.

" இதுல என்ன இருக்கு டா. அதான் நான் வந்துட்டேனே. நான் மேனேஜ் பண்ணிக்கிறேன்."

" இல்லடா. காலையில் எழுந்திருக்காம அசந்து தூங்கிட்டு இருக்க. அதான் சொன்னேன்." என்று கோபி விடாமல் கூற.

" நேற்று தூங்க ரொம்ப நேரமாச்சு." என்று மெதுவான குரலில் சத்யபிரகாஷ் கூறினார்.

" ஏன் டா?" என்று ஈஸியாக ஒரு வார்த்தையில் கோபி கேள்வி கேட்டு விட்டார்.

ஆனால் அதற்கான பதில் கூறுவதற்குள் சத்யபிரகாஷ் தவித்து போனார்.
அந்த கேள்விக்கணையை தவிர்க்க தான் நினைத்தார்.
அவரது பதிலுக்காக கோபி காத்திருப்பதைப் பார்த்ததும், தனது முடிவை மாற்றிக் கொண்டார். " அது வந்து, பழசை நினைத்துப் பார்த்தேன்." என.

கோபியின் முகம் ஒரு நிமிடம் சுருங்கியது. அதை சமார்த்தியமாக மறைத்தவன், பார்வையை திருப்ப…

சமையலம்மா கொண்டு வந்திருந்த ப்ளாஸ்க் கண்ணில் பட்டது.

இருவருக்கும், இரு கஃபில் ஊற்றியவன், ஒன்றை சத்யபிரகாஷிடம் கொடுத்து விட்டு, நிதானமாக தனது காஃபியை அருந்தினான்.

உள்ளே சென்ற காஃபி மூளையை சுறுசுறுப்படைய வைக்கவும் தான், தான் வந்த விஷயமே ஞாபகத்திற்கு வந்தது.

" டேய்… நான் சொல்ல வந்ததை சொல்ல விடாமல், ஏதேதோ பேசி, மைண்ட்ட டைவர்ட் பண்றடா. நான் வந்த விஷயத்தை சொல்றேன். " என்று படபடப்புடன் கோபி ஏதோ கூற வர…

" காஃபியை முதல்ல குடிக்க விடுடா. ஆஃபிஸுக்கு போகும் போது மத்ததை பேசிக்கலாம்." என்ற சத்யபிரகாஷ், காஃபியை மிடறு, மிடறாக ரசித்துக் குடித்துக் கொண்டிருந்தார்.

இவனிடம் பொறுமையாக பேசினால் வேலைக்காகது என்றுணர்ந்த கோபி விஷயத்தை பட்டென்று போட்டு உடைத்தார். " இதய உதயன் யாருன்னு சுனிதா ஃபோன்ல கேட்டா?"என.

குடித்துக் கொண்டிருந்த காஃபி புரையேற… தலையை தட்டிக்கொண்டே, ' தான் சரியாக காதில் வாங்கவில்லையோ…' என்று மீண்டும் கோபியிடம், " என்னடா சொல்ற சுதா உன் கிட்ட பேசினாளா? உன் மேல் கோபமா தானே இருந்தா?" என சம்பந்தா சம்பந்தமில்லாமல் சத்யபிரகாஷ் வினவ.

லூசாடா நீ என்பது போல் சத்யபிரகாஷைப் பார்த்த கோபி, " என் டார்லிங்கோட கோபமெல்லாம், நான் ஊருக்கு அவக் கூட வரலைன்னு தான். என்னோட பேசாமல் அவளால இருக்க முடியாது." என்று பெருமையாக கூறினார்.

" இப்போ இது ரொம்ப முக்கியம் பாரு… " என்று கோபியை கலாய்த்தவருக்கு, சற்று முன் அவர் கூறியது புத்தியில் உறைக்க," அப்போ இதய உதயன் யாருன்னு கேட்டது உண்மை தானா?" என்று பயத்துடன் வினவினார் சத்யபிரகாஷ்.

" ஆமாம் டா."

"நீ என்னடா சொன்ன?" இன்னும் தெளியாமல் சத்யபிரகாஷ் பதட்டத்துடனே கேட்டார்.

" ப்ச்… நான் ஒன்னும் சொல்லலை."

" எல்லாம் தெரிஞ்சுருக்குமா டா கோபி? அப்புறம் எப்படி உனக்கு ஃபோன் பண்ணி கேட்டா?"

" டேய் சத்யா ரிலாக்ஸ்… நான் பத்திரிகைல வொர்க் பண்ணது தெரியும்ல… அதான் அந்த ரைட்டர் யாருன்னு கண்டுபிடிக்க முடியுமான்னு கேட்டா.
நான் அந்த பத்திரிக்கையே இப்போ இல்லை. அதுனால கண்டுபிடிக்கிறது கஷ்டம். முடிஞ்ச வரைக்கும் ட்ரை பண்றேன்னு சொல்லியிருக்கேன்."

" ஓ…" என்ற சத்யபிரகாஷோ, ' எப்படி இதய உதயன் பற்றி பிள்ளைங்களுக்கு தெரிஞ்சிருக்கும், ஒரு வேளை சுஜாதா சொல்லியிருப்பாளோ…' என்று தனக்குள் புலம்பிக் கொண்டிருந்தார்.

அவரது கவலையை இன்னும் அதிகரிப்பது போல, அவரது செல்போன் இசைத்தது.

அது கோபியின் பக்கத்தில் இருக்க, ஃபோனை எடுத்து நீட்ட "யாரா இருந்தாலும் அப்புறமா பேசுறேன்." என.

" மனோ." என்றார் கோபி.

" ஓ… இங்கே குடு." என்று கை நீட்டினார்.
கைப் பட்டு போன் ஸ்பீக்கர் ஆன் ஆக…

" டேய் சத்யா… எப்படி இருக்க? உன்னுடைய டிசென்ட்ரி எப்படி இருக்கு? நீ நல்லா தானே இருக்க?" என விடாமல் மனோகர் கேள்வி மேல் கேள்வியாக கேட்க.

" நான் நல்லா தான் இருக்கேன். இப்போ உனக்கு எதுவும் கடையில வேலை இல்லையா? மொக்கப் போட நான் தான் கிடைச்சேனா? லூசு மாதிரி உளறிக்கிட்டு… வைடா ஃபோனை…" என்று கடுப்படித்தார் சத்யபிரகாஷ்.

" டேய் என் கிட்ட ஏன் காயுற? உன் பொண்டாட்டி தான் சொன்னா? நீ சாப்பிட்ட ஃபுட் ஏதோ உனக்கு ஒத்துக்கலையாம். டிசென்ட்ரியாம். உன்னைப் பார்த்துக்க அவளால மட்டும் தான் முடியுமாம். உடனே கிளம்பனும்னு ஒத்த கால்ல நிக்குறா?"

" டேய் விளையாடாதடா… உண்மையை சொல்லு. சுஜா இப்போ கிளம்புறாளா?" என்று நம்பாமல் சந்தேகமாக வினவினார் சத்யபிரகாஷ்.

" நான் சீரியஸா தான் சொல்றேன். சுஜா அப்படி சொல்லிட்டுத்தான் கிளம்புறா? ஆனா அவ சொல்லறதை என்னால தான் நம்ப முடியலை. சந்தேகமா இருக்கவும் தான் உனக்கு ஃபோன் பண்ணேன்.
உன் உடம்பு எதையும் தாங்கும் உடம்பாச்சே எனக்கா தெரியாது." என்ற மனோகர் சிரிக்க…

" அதுக்கு எதுக்குடா சிரிக்கிற…" என எரிந்து விழுந்தார் சத்யபிரகாஷ்.

" இல்லை உடம்பு சரியில்லைன்னு சொல்றதுக்கு காரணமா இல்லை. போயும், போயும் டிசென்ட்ரின்னுனா சொல்லணும். ஒரு ஃபீவர், கை கால் லேசா இழுத்துக்கிச்சு, சின்ன ஆக்ஸிடென்ட் என்று ஏதாவது சொல்லிருக்கலாம்ல." என்ற மனோகர் மீண்டும் சிரிக்க.

'எதுக்கு சுஜாதா, எனக்கு உடம்பு சரியில்லைன்னு பொய் சொல்லணும்.' என்று ஒரு பக்கம் மூளை யோசித்துக்கொண்டிருக்க… வெளியவோ, " டேய் சிரிக்கிறதை முதல்ல நிறுத்து. அதுவும் வாய்ல ஏதாவது நல்ல வார்த்தை வருதா பாரு." என்று திட்ட.

" ஒரு ப்ளோல அப்படி சொல்லிட்டேன். உனக்கு ஏதாவது ஆகனும்னு நான் நினைப்பேனா. சாரி டா. அப்புறம் நானும் சிரிக்கக் கூடாதுன்னு, என்னை கன்ட்ரோல் பண்ணி தான் பார்க்குறேன். பட் இங்க நடக்குற கூத்தை பார்த்தால், என்னால முடியலைடா சாமி.
சுஜாதா முகத்தை பார்க்கணுமே, முகத்தை பாவமா வைச்சுக்கிட்டு, ஊருக்கு கிளம்பணும்னு சொன்னதும், எங்க அம்மா, சித்தி, உங்க அம்மா, எல்லாரும் கிளம்பலாம் என ஐடியா பண்ண, அவங்களை வர விடாமல் தடுக்க சுஜா பட்டப்பாட்டை பார்த்தாலே தெரியும்." என்ற மனோகர், சுஜாதா கூறியதை நினைத்துப் பார்த்தான்.

' “ஐயோ! என்ன நடக்குது இங்க. அவருக்கு உடம்பு சரியில்லைன்னு சொல்றேன். என்னமோ பிக்னிக்கு வர்ற மாதிரி நான் வர்றேன், நீ வர்றேன்னு சொல்றீங்க." என்று படபடத்தாள் சுஜாதா.

" அடியே உன்ன மட்டும் தனியா எப்படி அனுப்ப முடியும். உங்க சின்ன அத்தையை இங்கே பார்த்துக்க சொல்லிட்டு, நாங்க எல்லோரும் கிளம்பி வரோம்." என்று அவளது அம்மா கூற.

"நீங்கள்லாம் வந்தா உங்களை ஒழுங்கா கவனிக்க சொல்லி படுத்துவார். அப்புறம் நான் எங்க அவரை கவனிக்கறது." என்று எரிந்து விழுந்தார் சுஜாதா.

" சுஜா சொல்றதும் சரி தான்." முதல்முறையாக அவளது அம்மா, சுஜாதாவின் பேச்சிற்கு ஒத்துக் கொண்டார்.' அதையெல்லாம் சத்யபிரகாஷிடம் சொன்னவன், உன்னை மாதிரியே சுஜா மாறிட்டா டா…
அப்ப சுஜா இங்கே வந்துட்டா போதும், மொத நாலு நாள் நீ சும்மா இருப்ப… அப்புறம் ஏதாவது சாக்கு போக்கு சொல்லி ஃபோன் பண்ணுவ…
பீரோ சாவியை காணும், அதைக் காணும் உடனே வான்னு சொல்லுவ… அதையே இப்ப அவ ஃபாலோ பண்ணுறா" என்று சொல்லி மனோகர் சிரித்தார்.

அதைக் கேட்டுக் கொண்டிருந்த கோபி, " ஹேய் மனோ… இந்த மேட்டர் இவ்வளவு நாளா எனக்கு தெரியாம போச்சே… " என்று வினவ.

கோபியின் குரலைக் கேட்டதும், அந்த பக்கம் மனோகர் சைலன்ட் ஆகிவிட்டார்.

" டேய் மனோ பேசுடா. இன்னும் உனக்கு கோவம் போகலையா ?" என்று வினவ.
அந்த பக்கமிருந்து பதிலே வரவில்லை.
உடனே தனது அருகிலிருந்த சத்யாவிடம், " பேசுவானா? மாட்டானா? என்னன்னு கேளு டா ." என்று அவனிடம் பாய்ந்தார் கோபி.

" உங்க ரெண்டு பேர் பிரச்சனையில என்ன நுழைக்காதே. நீ ஊருக்கு வந்தா தான் அவனது கோபம் தீரும். நீயோ ஊருக்கு வரமாட்டேனு சபதம் வச்சிருக்க. எங்க கல்யாணத்தப்போ ஊருக்கு வந்த தானே… அப்புறம் என்ன வந்துச்சு." என்று தனக்கு இருந்த டென்ஷனில் கோபியிடம் எரிந்து விழுந்தார் சத்யபிரகாஷ்.

கோபியோ, ' ஏன் ஊருக்கு வரலன்னு இவனுக்கும், இவனோட மச்சானுக்கும் நல்லாத் தெரியும் தானே… என் உணர்வுகளோட விளையாடுறதே இவங்க ரெண்டு பேருக்கும் பொழப்பா போச்சு.' என்று எண்ணியவன், " சரி ஆஃபிஸுக்கு டைமாயிடுச்சு. நான் கிளம்புறேன்." என்று முகம் வாட கிளம்பினார்.

தன் நெற்றியில் லேசாக தட்டிய சத்யபிரகாஷ், " டேய் சாரிடா. வேற ஒரு டென்ஷன். நீ மைண்ட்ல ஏத்திக்காதே. அகெயின் சாரி டா. தென் என்னால மீட்டிங் அட்டெண்ட் பண்ண முடியும்னு தோணலை." என்றார்.

" சரி…" என்று தலையாட்டிய கோபி அங்கிருந்து கிளம்பி விட்டார்.

" என்னடா சத்யா… கோபி கோபப்பட்டு கிளம்பிட்டானா…" என்று வருத்தமாக மனோகர் வினவ.

" ப்ச்… அப்படியெல்லாம் இல்லை டா. ஒரு மீட்டிங் அட்டெண்ட் பண்ணனும், அதான் கிளம்பிட்டான். சரி டா, நீ புள்ளைங்களையும், சுஜாதாவையும் ட்ரைவரோட அனுப்பி வை. நான் பார்த்துக்கிறேன்.பை…" என்று ஃபோனை வைத்து விட்டு,
பெருமூச்சு விட்டுக் கொண்டவன், ஜக்கிலிருந்து தண்ணீரை எடுத்து அருந்தி விட்டு நிதானமாக யோசிக்கலனார்.

' சுஜாதாவோ, ஊருக்கு போனா அவ்வளவு சீக்கிரமா வரமாட்டாளே… அப்புறம் ஏன் இப்படி திடீர்னு கிளம்பி வர்றா? ' என்று யோசித்தவனுக்கு, தன் மகள்கள் கோபியிடம் கேட்டதும் நினைவுக்கு வந்தது.
அந்த அறையிலே நடைப்பயின்றுக் கொண்டிருந்தவனுக்கு திடீரென்று ஒரு யோசனை வர, உடனே ஃபோனை எடுத்து கிரிதரனுக்கு அழைத்தார்.
அவரோ, சத்யபிரகாஷின் ஃபோன் காலை எடுப்பதாக இல்லை.

'டேய் என்னுடைய ஃபோன் காலையா எடுக்க மாட்டேங்குற? இரு டா மவனே ' என்று பல்லைக் கடித்த சத்யபிரகாஷ், திருவண்ணாமலையில் கிரிதரன் வேலைப் பார்க்கும் போஸ்ட் ஆஃபீஸின் நம்பருக்கு அழைத்தார்.

சத்யபிரகாஷ் நினைத்தது போலவே கிரிதரன் ஃபோனை எடுக்க...

" டேய் கிரி… " என்று அடக்கப்பட்ட கோபத்துடன் சத்யபிரகாஷ் அழைத்தார்.
அந்தப் பக்கம் கிரிதரனுக்கோ, அவனது காதில் ஒலித்த குரலில் படபடவென்று ஆனது.

" யார் பேசுறது?" என்று நம்பாமல், குரல் தந்தியடிக்க மீண்டும் வினவினார்.

" எல்லாம் உன்னுடைய உயிர்த்தோழன் தான்." என்று பல்லைக் கடித்துக் கொண்டு கூற…

கிரிதரனுக்கோ, 'உயிரை எடுக்கும் தோழன்.' என்று விழுந்து தொலைத்தது.

" நான் என்னடா பண்ணேன். ஒன்னும் பண்ணலையே. கோயில்ல சுஜாதாவை பார்த்தேன். ஆனா தங்கச்சி பார்க்கிறதுக்கு முன்னாடி, பார்க்காத மாதிரி வந்துட்டேன் டா. ஆனால் உன் சின்ன பொண்ணு பார்த்திருச்சு. " என்று வழக்கம் போல உளறி விட்டார்.

" டேய் கிரி. ஒழுங்கா உளறாம என்ன நடந்துச்சுனு சொல்லு. என்னமோ நீ மறைக்கிற. நான் சொன்னதை ஒழுங்கா செஞ்சியா? இல்லை, போன முறை மாதிரி சொதப்பிட்டியா?"

" அதெல்லாம் இல்லை சத்யா. கரெக்டா லெட்டரை குடுத்துட்டேன்." என்று பதட்டத்தில் உண்மையை போட்டு உடைத்தார் கிரிதரன்.

" என்னடா சொல்ற? லெட்டரை யார் கையில கொடுத்த? எங்க வீட்டு கேட்ல இருக்குற போஸ்ட் பாக்ஸ்ல தான‌ போட சொன்னேன். போஸ்ட் பாக்ஸ்ல போட்டியா? இல்லையா? " என்று சத்யபிரகாஷ் கேள்விமேல் கேள்வியாக வினவ.

" அது வந்து… அது…" என்று கிரிதரன் மென்று முழுங்க.

" இப்போ ஒழுங்கா சொல்லப் போறியா இல்லையா?" என்று சத்யபிரகாஷ் கடுப்படிக்க.

" ஒரு சின்ன தப்பு நடந்துடுச்சு சத்யா."

" டேய் முதல்ல என்ன பண்ணி வச்சேன்னு சொல்லு... அது சின்ன தப்பா, பெரிய தப்பான்னு நான் சொல்றேன்." என்றார் சத்யபிரகாஷ்.

" என்னைத் திட்ட கூடாது. "

" திட்டித் தொலைக்கலை. சொல்லித் தொலைடா"

" உன் சின்ன பொண்ணு, சுஜாதா மாதிரின்னு நினைச்சேன். ஆனால் உன்னைப் போல தான். என்னை பேசவே விடலை." என்றார் கிரிதரன்.

" டேய் அப்போ அந்த லெட்டரை சுனிதா கையில தான் கொடுத்தியா?" என்று அதிர்ந்து வினவினார் சத்யபிரகாஷ்.

"ஆமாம் டா." என்றார் கிரிதரன்.

" டேய் வெட்கமாயில்லை. உன்கிட்ட சொன்ன ஒரு வேலையாவது உருப்படியா செய்றீயா? ஒன்னும் கிடையாது." என்று நான்ஸ்டாப்பாக சத்யபிரகாஷ் திட்ட.

" டேய் நிறுத்துடா… நான் என்ன பண்றது. எல்லாம் என் நேரம். அன்னைக்கு தெரியாமல் ஒரு தப்பு பண்ணிட்டேன். அதுக்காக ஒரு மனுஷனை இத்தனை வருஷமாவா படுத்துறது. " என்று ரோஷமாகக் கூறினார் கிரிதரன்.

"ஓஹோ… நீ மனுஷனா? நான் மூளையில்லாத ஜந்துவா தான் நினைக்கிறேன் போதுமா? " என்று கேலி பேச…

" டேய் ஓவரா பேசாத… உன் பொண்ண பத்தி உனக்கு தெரியாதா? என் நேரம்… அன்னைக்குன்னு பார்த்து வெளியே விளையாடிட்டு இருந்திருக்கா." என்று பெருமூச்சு விட்ட படி கிரிதரன் கூறினார்.

" டேய் அதுக்குன்னு சின்ன பிள்ளைங்க கையில கொடுப்பாங்களா? ஆள் இருந்தா திரும்பி வந்துட வேண்டியது தானே. " என்று சத்யபிரகாஷ் ஆற்றாமையாக வினவ.

" ம்கூம். அப்படியே சின்ன பிள்ளைங்க கையில தூக்கிக் கொடுக்குறாங்க. நான் பாட்டுக்கும் லெட்டரை எடுத்து, போஸ்ட் பாக்ஸ்ல போடப் போறேன். கரெக்டா ஒரு பந்து வந்து விழுது. என்னடா இதுன்னு நினைக்கிறதுக்குள்ள, உன் பொண்ணு என்ட்ரி ஆயிட்டா. அப்புறம் என்ன நடந்துருக்கும்னு உனக்கே புரிஞ்சிருக்குமே.
அப்படியே உன் மக, சுஜாதாவே சுஜாதா தான். சின்ன வயசுல சுஜாதா என்னை மிரள வைச்சது பத்தாதுன்னு உன் பொண்ணும் என்னை வச்சு செஞ்சிருச்சு.
பத்து நிமிடம் தான் அங்க இருந்திருப்பேன். அப்பப்பா அந்த பத்து நிமிஷத்துல என்ன கதி கலங்க வைச்சுட்டா. விட்டா போதும்னு உன் பொண்ணு கையில கொடுத்துட்டு வந்துட்டேன். எப்படியும் சுஜாதாவுக்கு வந்தது தானே, பிரிச்சு பார்க்க மாட்டானு நினைச்சேன். " என்ற கிரிதரன் , ஒரு நிமிடம் பழசை நினைத்து பார்த்தார்.

' சுஜாதா அமுதா இறந்ததும், கோபியிடம் பேச சென்ற போது, முகம் கொடுத்து பேசாமல் கோபமாக சென்று விட்டான். அது அவள் மனதில் ஆறாத வடுவாக மாறியது. அவனது அண்ணன் என்ற ஒரே காரணத்தால் கிரிதரனிடம் அவ்வளவாகப் பேசமாட்டாள். அதுவும் இல்லாமல், சத்யபிரகாஷும், கிரிதரனும் நெருங்கிய நண்பராக மாற… அவளுக்கு கிரிதரன் மேல் வெறுப்பு வளர்ந்தது.
அவளுக்கு வரும் லெட்டரை வாங்கும் போது மட்டும் முகமலர நன்றி சொல்பவள், சத்யபிரகாஷைத் தேடி வீட்டிற்கு வந்தால் முறைப்பு தான் அவனுக்கு பதிலாக கிடைக்கும். அவளுடைய பார்வைக்கு பயந்தே அவன் அவ்வளவாக வீட்டிற்கு வரத் தயங்குவான்.'

தலையை உலுக்கிக் கொண்டு நிகழ்காலத்திற்கு வந்த கிரிதரன், " ஏன் டா பாப்பா லெட்டரை பிரிச்சு பார்த்துடுச்சா." என்று வினவ.

" அதெல்லாம் ஒன்னும் இல்லை டா. நா பார்த்துக்கிறேன். சரி பை." என்று வைத்தவன், மீண்டும் அறைக்குள் நடைபயின்றார்.

'சுனிதாவுக்கு எந்த அளவுக்கு விஷயம் தெரியும் என்று தெரியவில்லை. நம்ம ஊருக்கு கிளம்பும் போது, சந்தியா, சுனிதா ரெண்டு பேரும் கலக்கமாக இருந்தார்களே. ஒருவேளை அன்னைக்கே லெட்டரை படித்துப் பார்த்திருப்பார்களோ... அப்புறமா தான் சுஜாதாவிடம் லெட்டரை கொடுத்திருப்பாங்க. கோவில்ல சுனிதா கட்டாயம் கிரிதரன் பார்த்திருக்கிறாள். சுஜாதாவிடம் ஏதோ சொல்லியிருக்கிறாள். அதான் உடனே கிளம்ப வேண்டும் என்று சுஜாதா பிடிவாதம் பிடித்து இருக்கிறாள். சுஜாதா புத்திசாலி. இந்நேரம் எல்லாவற்றையும் கண்டுபிடிச்சி இருப்பா. நேரா இங்கே வந்து, என் சட்டையை பிடிச்சு கேள்விக் கேட்கப்போறா…' என்று மனதிற்குள் நினைத்தவன், பெருமூச்சு விட்டபடி‍," எதுவாயினும் பார்த்துக்கலாம். ஐ ஆம் வெயிட்டிங் சுஜா." என்று வாய்விட்டு கூறினார்.

சத்யபிரகாஷ் நினைத்த மாதிரியே சுஜாதா அவ்வளவு கோபத்துடன் தான் இருந்தார்.
யாருக்குத்தான், தான் முட்டாளாக்கப்பட்டோம் என்று தெரிந்தால் கோபம் வராமல் இருக்கும்.
சத்யபிரகாஷின் மேல் உள்ள கோபம் தீருவதற்குள், சென்னைக்கு சென்று அவரைக் கேள்வி கேட்க நினைத்து தான் அதையும், இதையும் காரணமாக கூறி கிளம்பிக் கொண்டிருந்தார்.
அந்த கோபத்தை மேலும் அதிகரிப்பது
போல் வீட்டில் உள்ளவர்கள், பேசிப் பேசியே அவளது பி.பியை ஏற்றிக் கொண்டிருந்தனர்.

சத்யபிரகாஷ் உடம்பு முடியவில்லை என்ற பதட்டத்தில், எல்லோரும் கிளம்ப நினைக்க… சுஜாதாவோ நிதானமாக பேசி அதை சமாளிக்கவும் சரி தான் என்றவர்கள் சமாதானார்கள்.

சுஜாதாவின் அம்மாவோ, " சுஜா… நம்ம சந்தியாவுக்கு கல்யாணம் பேசலாம்னு நினைச்சோம். முதல்ல மாப்பிள்ளை திடீர்னு கிளம்புனாரு, சரி உன்னை கூப்பிட திரும்பி வரேன்னு சொல்லவும் கொஞ்சம் சமாதானம் ஆனோம்.
இப்போ என்னன்னா மாப்பிள்ளைக்கு முடியலைன்னு நீயும் உடனே கிளம்புற…
என்னவோ மனசுக்கு சரியாபடலை. " என்று புலம்ப.

" அம்மா… தேவையில்லாம புலம்பாத…" என்றாள் சுஜாதா.

" என் கவலை உனக்கு புலம்பலா தெரியுதா."

" அம்மா… அப்படி சொல்லலை. சந்தியா சின்ன பொண்ணு மா. இன்னும் கொஞ்சம் நாள் போகட்டும் மா. எழிலும் இன்னும் வெளிநாட்டுல தானே இருக்கான். இங்கே வரட்டும் அப்புறமா பேசலாம். " என்று தடுக்கப் பார்த்தார் சுஜாதா.

" சுஜாதா… என்ன பேச்சு இது. எப்பப் பார்த்தாலும், கொஞ்ச நாளாகட்டும். எழில் இங்கே இல்ல… அப்படின்னு ஏதாவது சொல்லி தட்டிக் கழிக்கப் பாக்குற. எல்லாம் கூடி வர மாதிரி இருக்குதுன்னு பார்த்தா, இப்போ தட்டித்தட்டி போகுது. எனக்கு மனசே சரியில்லை." என்று கலக்கமாக சுஜாதாவின் அம்மா கூற.

" எதுக்கு மா இப்படி கவலைப்படுறீங்க… சந்தியா சின்ன புள்ள… எழிலும் வரட்டும். ரெண்டு பேருக்கும் பிடிச்சிருக்கான்னு ஒரு வார்த்தை கேட்டுட்டு கல்யாண ஏற்பாட்டை ஆரம்பிக்கலாம். " என்று சமாதானமாக கூறினார்.

" சும்மா சின்ன புள்ளன்னு சொல்லாத. அவளுக்கு இருபத்தி மூணு வயசு ஆயிடுச்சு. நீ அந்த வயசுல ரெண்டு புள்ளையையும் பெத்தெடுத்துட்ட. அதுக்காக இவளுக்கும் சீக்கிரம் பண்ணனும்னு சொல்லலை. அது அந்த காலம். இப்போ காலம் மாறிப் போச்சு.
நம்ம சந்தியா படிச்சு முடிச்சிட்டு வேலைக்கும் போறா. இது தான் கல்யாணம் பண்ணிக்க சரியான வயசு‌." என்று அவர் பொறுமையாக கூற‌.
சுஜாதா அமைதியாக இருந்தார். அவளது அருகில் இருந்த சுனிதா, வாயை வைத்திருக்காமல், " பாட்டி… முதல்ல எலி… ச்சேச்ச எழில் மாமா முதல்ல சிங்கம் மாதிரி சிங்கிளா வர்றாரா, இல்லை ஜோடி போட்டுக்கிட்டு வர்றாருன்னு பார்ப்போம். " என.

" என்னடி சொல்ற… ஒன்னும் புரியலையே." என்றார் சத்யபிரகாஷின் அன்னை.

" அதுவா பாட்டி… புரியற மாதிரி நான் சொல்றேன். என் கொழுந்தானார், வெளிநாட்ல இருந்து யாரையாவது கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்தாலும் வருவாருன்னு நம்ம சுனிதா சொல்றா. ஆனா நம்ம எழிலு சொக்கத் தங்கமாச்சே." என்று விளக்கமாக கூறிய நித்யா, சுனிதாவைப் பார்த்து கண் சிமிட்டினாள்.

" அடியாத்தி… அண்ணி எத்தனை நாள் கோபம். இப்படி போட்டுக் கொடுத்திட்டீங்களே." என்று புலம்ப…

சத்யபிரகாஷின் அன்னையோ, " சுனிதா… பெரியவங்க பேசிட்டு இருக்கும் போது, இது என்ன விளையாட்டு பேச்சு. இதோ அனிதா, நித்யா, சந்தியா எல்லோரும் அமைதியா இல்லையா… நீயும் அமைதியா இருக்கிறதா இருந்தா இரு. இல்ல உள்ளாற போ."என்றுக் கூறியவர்,

சுஜாதாவிடம், " அம்மாடி மருமகளே… எழில் என்னோட வளர்ப்பு… அப்படியெல்லாம் எதுவும் பண்ணிட்டு வர மாட்டான்." என

" அது தெரியாத அத்தை. அவ ஏதோ உளறிட்டு போறா விடுங்க." என்றவரோ, ' உங்க பையனையே ஒழுங்கா வளர்க்கத் தெரியலை… இதுல பெருமை வேற.' என்று மனதிற்குள் பொங்கிக் கொண்டிருந்தார்.

அங்கு நடப்பதை யெல்லாம் மதியரசியும், அவளது அம்மா மற்றும் மாமியாரும் கவலையாக பார்த்துக் கொண்டிருந்தனர்.

அவர்களுக்கு அடுத்த தலைமுறையும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அதற்காகத் தான் சந்தியா, எழில் திருமணம்
நடக்கணும்னு ஆசைப்பட்டனர்.

இன்னொரு ஜீவனும் கவலையாக இருந்தது‌. அது சந்தியா தான். சந்தியாவின் முகத்தில் வந்துபோன பாவனையை பார்த்து அதிர்ந்தாள் சுனிதா.
 
Top