• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Dheera

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 17, 2023
Messages
234
அடுத்த நாள் காலை அனைவருக்கும் இனிதென விடிந்தது. அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அனைவரும் வீட்டில் இருந்தனர்.

நவீனும் ஆத்விக்கும் ப்ரெஷாகி கீழே வர அவர்களுக்காக வழமை போல ப்ரனீத்தாவும் சூர்யாவும் காத்துக் கொண்டிருந்தனர். கேலி கிண்டலுடன் சாப்பிட்டு முடிய ஆத்விக்கே பேச்சை ஆரம்பித்திருந்தான்.

"இன்னைக்கு என் குட்டி ட்ரீட் இருக்கு. சோ லன்ச்க்கு வெளியே போகலாம். எல்லாரும் ரெடியாகுங்க..." என்று முடித்து விட்டான்.

..


அனைவரும் புறப்பட்டு ஆத்விக் அரேன்ஜ் பண்ணி இருந்த ஹாட்டலுக்கு சென்றனர். ஆத்விக் உணவை ஆடர் கொடுத்து விட்டு வந்தமர்ந்திருக்க எதேச்சையாக திரும்பிய நவீனின் கண்ணில் தென்பட்டாள் ஓர் மாது. மெரூன் நிற ஸ்கேட்டிற்கு பாதாம் நிற டாப் அணிந்திருந்தவள் துப்பட்டாவை கழுத்தைச் சுற்றிப் போட்டிருந்தாள். அந்த மிதமான அலங்காரமே அவளை தேவதையென காட்டிக் கொடுத்தது. அவளது நண்பிகளுக்கு மத்தியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தவளின் வாயை விட கண்கள் அதிகம் பேசின. பார்த்தாலே தெரியும் செல்வந்த குடும்பத்துப் பெண் என்று. இவ்வளவு நேரமும் அவளைப் பார்த்துக் கொண்டிருந்த நவீனிற்கு அவள் அந்த பணத்தில் மோகம் கொண்டவளாக தெரியவில்லை. பின் பெருமூச்சுடன் திரும்பிக் கொண்டான்.

சாப்பாடு வந்ததும் உண்ண ஆரம்பித்ததும் நவீனின் சேர்ட்டில் உணவு சிந்தி விட்டது. "ஷிட்..." என்றவாறு வாஷ் ரூமை நோக்கி எழுந்து சென்றான்.

சுத்தப்படுத்திக் கொண்டு திரும்பி வரும் வழியில் அவனை யாரோ தடுத்து நின்றிருந்தது. நிமிர்ந்து பார்க்க, அங்கே நின்றிருந்தது என்னவோ இவ்வளவு நேரமும் அவன் பார்த்துக் கொண்டிருந்த பெண் தான்.

புரியாதவனாய் "யாரு நீங்க..?" என்றான்.

மெலிதாக சிரித்தவள் "ஹாய். திஸ் இஸ் அமர்த்திக்கா...நா.. நான் உங்க கிட்ட ஒன்னு சொல்லனும்..." என்றாள் தயங்கியபடி.

அவளையே இமை வெட்டாமல் பார்த்திருந்த நவீன் "ம்ம் சொல்லுங்க..." என்றான்.

ஏதோ ஓர் தைரியத்தில் வந்தவளுக்கு அவனை இத்தனை அருகில் பார்த்ததும் நாக்கு வறண்டு விட்டது. இருந்தும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு "நா..நான்.. ஐ லவ் யூ..." என பட்டென சொல்ல வந்ததை போட்டுடைத்து விட்டாள்.

நவீன் அதிர்ந்து விட்டான். உண்மையாகவே அவளிடமிருந்து இப்படியான வார்த்தைகளை அவன் எதிர்பார்த்திருக்கவில்லை என அதிர்ந்த அவனது முகம் காட்டுக் கொடுத்தது. "வாட்..கம் எகைன்..?" என் அவளுக்கருகில் முன்னேறியவனின் மனநிலையை அறியாமல் அவளோ "ஐ லவ் யூ. லவ் யூ சோ மச்..." என உணர்ச்சி வசப்பட்டு சத்தமிட்டு கூச்சலிட்டவளின் கன்னத்தை பதம் பார்த்திருந்தது ஆடவனின் கை. இந்தத் தாக்கத்தை எதிர்பாராதவள் தடுமாறி தன்னை நிலைப்படுத்திக் கொண்டாள். நவீனோ இன்னும் குறையாத கோபத்துடன் "ஏய்.. பொண்ணு தான..? பப்ளிக் ப்ளேஸ்ல எப்படி பிகேவ் பண்ணனும்னு ஒரு பேசிக் சென்ஸ் இல்ல..? ச்சே இப்போ தான் உன்னை நல்ல பொண்ணுனு நெனச்சேன். அதுக்குள்ள உன் பணக்காரப் புத்திய காட்டிட்டல்ல..இடியட்.." என்று கடித்த பற்களுக்கிடையே வார்த்தைகளை கடிந்து துப்பினான்.

ஏற்கனவே கன்னம் தீயாய் எரிய கலங்கி நின்றிருந்தவளுக்கு அவனிடமிருந்து இப்படிப்பட்ட வார்த்தைகளை வெளிப்பட உள்ளுக்குள் ஏதோ உடைந்த உணர்வு. எல்லோரும் தங்களைப் பார்ப்பதை அவமானமாக உணர்ந்தவள் கன்னத்தைப் பிடித்துக் கொண்டே தாங்க முடியாமல் விறுவிறுவென வெளியேறி இருந்தாள்.

அதன் பின்னர் தான் நவீனிற்கு தான் செய்த காரியம் உறைத்தது. தலையில் தட்டிக் கொண்டவன் தன்னையே நொந்து கொண்டான். "எந்த உரிமையில ஒரு பொண்ணுக்கு அதே பப்ளிக் முன்னால கையை நீட்டி இருந்தோம்..?" என இதோ பத்தாவது முறையாக தன்னுள் கேட்டுக் கொண்டான். பின் ஆத்விக் வந்து தோளைத் தொட அவனை கலங்கிய விழிகளுடன் ஏறிட்டுப் பார்த்தான்.

"என்னாச்சுடா மச்சி.. ஏன் ஒரு மாதிரி இருக்குற..?" என்றவனிடம் இடம் வலமாக தலையாட்டி விட்டு அவன் சென்று விட்டான்.

ஆத்விக்கும் ஓர் தோள் குலுக்கலுடன் பில் பே பண்ணி விட்டு வந்து ஒன்றாக கிளம்பி சென்றனர். வரும் வழி முழுக்க நவீன் எதுவும் பேசவில்லை. அவனின் அமைதி வழமைக்கு மாறாக இருக்க பெற்றோரும் விசித்திரமாக அவனைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

பின் வீட்டுக்கு வந்து இறங்கியும் இறங்காமலும் இருக்க நவீனோ பைக்கை எடுத்துக் கொண்டு வெளியேறி விட்டான். குழம்பியது என்னவோ ப்ரனீத்தாவும் சூர்யாவும் தான். அந்நேரம் ஆத்விக் யாருடனோ ஃபோனில் பேசிக் கொண்டிருந்தான்.

நவீன் வந்து வண்டியை நிறுத்தியது என்னவோ கடற்கரையில் தான்.

அவனின் மனம் அவனையே கேள்வி கேட்டுக் கொண்டிருந்தது. யாரவள்..எங்கிருக்கிருக்கிறாள் என்று எதுவும் தெரியாமல் ஒரு பெண்ணை முதன் முறை உரிமையாக தண்டித்தது அவனை சுட்டது.
அவனது உள்ளமோ "நான் யாரு அவளை தண்டிக்க..அவ எக்கேடு கெட்டுப் போனா எனக்கென்ன..?அவள் என்ன என்னை மாதிரி யாரும் இல்லாதவளா..அவளுக்குனு ஒரு குடும்பம் இருக்குமே.. அவங்க வந்து என்ன கேள்வி கேட்டா நான் என்ன பதில் சொல்லுவேன்..? பார்க்க நல்லா படிச்ச பணக்கார வீட்டுப் பொண்ணு மாதிரி தானே இருக்கா.. அவ எதுக்கு முன்னப் பின்ன தெரியாத என்னை லவ் பண்ணனும்.. அவளுக்கு வேற வசதியான பையனா கிடைக்கல்ல.. ஒரு வேளை என்ன வச்சு ப்ளே பண்ண நெனச்சாலோ..? எதுவா இருந்தாலும் அவ பப்ளிக் ப்ளேஸ்ல அத்தனை பேர் முன்னாடியும் அப்படி நடந்துக்கிட்டது தப்பு.." என அவளுக்கு சார்பாகவும் அதே சமயம் எதிர்மாறாகவும் சிந்தித்தவனை குழப்பி விட்டு விதி வேடிக்கைப் பார்த்தது.

...


வீட்டுக்கு மீண்டும் திரும்பியவனை வரவேற்றதோ ஓர் தொழிலதிபருடன் பேசிக் கொண்டிருந்த மொத்தக் குடும்பமும் தான். அவரை சட்டென அடையாளம் கண்டு கொண்ட நவீன் சினேகிதமாக சிரித்து விட்டு "வணக்கம் சார்..." என்றான்.

வந்திருந்ததோ அன்று பார்ட்டியில் நவீன் சந்தித்த கிருஷ்ண மூர்த்தி என்றவர் தான். அவரோ "இன்னும் என்ன சார் மோர் எல்லாம். உரிமையா மாமான்னே கூப்புடுங்க மாப்பிள்ளை.." என்று எடுத்துக் கொடுத்தவரின் பேச்சு அவனுக்கு புரியவேயில்லை. அவனைப் பார்த்து நமட்டு சிரிப்புடன் அமர்ந்திருந்த ஆத்விக் அவனருகில் வந்து "டேய் ஹீ இஸ் கிருஷ்ணமூர்த்தி. உனக்கு தெரியும்ல..?" எனக் கேட்க அவனும் ஆமென தலையாட்டி வைத்தான்.

சூர்யாவோ "இவர்ட பொண்ணு எங்கேயோ உன்னப் பார்த்து லவ் பண்ணி இருக்கிறா. இப்போ கல்யாணம் பண்ணினா உன்னத் தான் கட்டிக்குவேனு ஒத்தக் கால்ல நிக்கிறா. சோ உன்னை அவங்க பொண்ணுக்கு மாப்பிள்ளை கேட்டு வந்திருக்காங்க.." என்றது தான் தாமதம் நவீன் சட்டென எழுந்து விட்டான்.

இப்போ தான் ஒருத்தியை பார்த்து வம்ப விலை கொடுக்காம வாங்கிட்டு வந்திருக்கேன். அதுக்குள்ள இன்னொன்னா..? என்பது அவனது மைனட் வாய்ஸ்.

"ஆமாப்பா பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு. உனக்கு ஏத்தவ தான். எப்பவும் இப்படியா இருந்துறப் போற. ஆத்விக்கும் செட்ல் ஆகிட்டான். உனக்கும் ஒரு கல்யாணத்தப் பண்ணி வச்சா இந்த அம்மாக்கு அது போதும்பா.." என போட வேண்டிய இடத்தில் ப்ரனீத்தா சரியாகப் போட, அதன் பிறகும் நவீன் மறுப்பானா என்ன..

"உங்க இஷ்டம்மா.." என்றவாறு தனதறைக்குள் சென்று விட்டான். போகும் அவனையே அனைவரும் பரிதாபமாகப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தனர்.

நவீனிற்கு கல்யாணம் என்றதும் ஏனென்றே தெரியாமல் அமர்த்திக்காவே கண் முன் வந்து சென்றாள். அதே யோசனையுடன் கதவைத் திறந்தவனுக்கு தன் கண்களால் காண்பதை நம்ப முடியவில்லை. அங்கே இருந்தது சாக்ஷாத் அமர்த்திக்காவே தான். என்ன சற்று அவனை முறைத்துக் கொண்டு நின்றிருந்தாள்.

இவனோ என்னடா நடக்குது என்று குழம்பிப் போய் திரும்ப அங்கே கதவு நிலையில் சாய்ந்து சிரித்துக் கொண்டிருந்தான் ஆத்விக்.

"என்னடா..?" என அவளை ஜாடை காட்டி கேட்க ஆத்விக் நடந்தவற்றை கூறலானான்.

...


ஹோட்டலில் நவீனிடம் என்ன நடந்ததென ஆத்விக் கேட்க அவன் பேசாமல் சென்றது அவனுக்கு சந்தேகத்தைத் தந்தது. எதுவோ சரியில்லையென மனம் உணர்த்த அருகில் நின்றிருந்த வெயிட்டரிடம் விசாரிக்க அவரோ நடந்த சம்பவத்தைக் கூற அவனும் அவள் யாரென்று விசாரித்து விட்டு ஆபிஸில் வேலை பார்க்கும் ஒருவனிடம் அவளைப் பற்றி தகவல் திரட்டச் சொல்லி இருந்தான். அதன் பிறகு தான் தெரிந்தது அவள் கிருஷ்ண மூர்த்தி என்ற தங்களது கம்பனி பாட்னரின் மகளென்றும் நவீனை காதலிப்பவள் என்றும். பின் சந்தோஷத்துடன் கிருஷ்ணமூர்த்தியிடம் பேச அவருக்கு கசக்குமா என்ன..? உடனே சம்மதம் சொல்லி விட்டார். அதன் பிறகு அரங்கேறியது தான் இவை அனைத்தும்.

நவீனிற்கு சப்ரைஸாக இருக்கட்டும் என அவனிடம் கூறாமல் அவனின் வரவிற்காக அனைவரும் காத்திருந்தனர்.

அவனிற்கு ஒரு விடயம் மட்டும் நன்கு புரிந்தது. நவீனிற்கு அவளைப் பிடித்துள்ளது. அதனாலே தான் உரிமையுடன் அவளுக்கு கை நீட்டியுள்ளான் என. அவனது ஊகமும் சரியே. வரும் வழியிலே குழம்பித் தவித்த நவீனிற்கு அந்த உரிமைக்கான காரணம் புரிந்து விட்டது. ஆம் அவனின் மனதினுள் அவள் நுழைந்து விட்டாள்.

அப்படியே கதையைக் கேட்டுக் கொண்டே நவீன் நழுவிச் செல்லப் பார்க்க பாய்ந்து அவனைப் பிடித்த ஆத்விக் அவனை உள்ளே தள்ளி விட்டான்.

அவனை ஏன்டா என்பது போல நவீன் பார்த்து வைக்க, அங்கே வந்த அமர்த்திக்கா நவீனைப் பார்வையால் எரித்து விட்டு ஆத்விக்கிடம் "அண்ணா நீங்க போங்க. நான் பார்த்துக்கிறேன்.." என்றாள். அவனும் சென்று விட "டேய் மச்சி" என்று கம்மியொலித்த நவீனின் குரல் பாவம் அவனுக்கு கேட்கவில்லை. அதற்குள் அமர்த்திக்கா கதவை மூடித் தாளிட நவீனோ எச்சில் கூட்டி விழுங்கிக் கொண்டு"எ..என்ன பண்ணப் போற..?" என்றான்.

அவளோ காதில் எதையும் வாங்கிக் கொள்ளாமல் அப்படியே போய் ஜன்னல் பக்கம் நின்று கொண்டாள்.


தொடரும்...


தீரா.
 
Top