• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Dheera

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 17, 2023
Messages
234
"நம்மல வச்சு காமெடி கீமடி பண்ணலயே..அவ்வ்" என்று எண்ணி முடிப்பதற்குள் அங்கே விசும்பல் சத்தம் கேட்டது.

அவளின் அருகில் சென்றவன் "சா..சாரி. நான் ஏதோ தெரியாம அப்படி நடந்துக்கிட்டேன்.." என்று சொல்லி முடிப்பதற்குள் அவளோ "உ..உங்க மேல எந்தத் தப்பும் இல்லை. என் மேல தான் எல்லாத் தப்பும். நா..நான் அப்படி நடந்திருக்கக் கூடாது தான். பிடிக்காதவங்கள வலுக்கட்டாயமா பிடிச்சு வைக்க முடியாதில்லையா. உ..உங்களுக்கு என்னை பி..பிடிக்கலனு புரிது. நா..நான் வீட்ல சொல்லி இந்தப் பேச்சை இப்போவே முடிச்சு வைக்கிறேன்..." என கூறி விட்டு நகர்ந்தவள் மனதினுள் நவீனைப் பார்த்து சிரித்து வைத்தாள். நகர்ந்தவள் மனதினுள் கவுண்ட் பண்ணிக் கொண்டே போக, அதிர்ந்த நவீன் "இந்தாம்மா பொண்ணு.." என அழைக்கவும் அவள் மூன்று எண்ணி முடியவும் சரியாக இருந்தது.

உள்ளுக்குள் சந்தோஷத்தில் குத்தாட்டம் போட்டவள் அதற்கு உல்டாவாக முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு திரும்பினாள்.

அவனோ அவளது கலங்கிய விழிகளை ஏறிட்டுப் பார்த்து "நீ பேசிட்ட. இப்போ நா..நான் பேசவா...?" என்றவனுக்கு ஏனோ வார்த்தை தந்தியடித்தது.

அவளது அமைதியில் இவனோ அவளை ஆழந்து பார்த்துக் கொண்டே "ஐ லவ் யூ.." என மனதில் பட்டதை போட்டு உடைக்க அதிர்ந்து அவனை நிமிர்ந்து பார்த்தவளுக்கு சந்தோஷத்தின் மிகுதியில் கண்களை கரித்துக் கொண்டு வந்தது.

அப்படியே அவள் ஓரெட்டு முன்னே வைக்க நவீனோ திடீரென பயத்தில் பின்னே சென்றவன் தன் கைகளால் இரு கன்னத்தையும் பொத்திக் கொண்டான். அவனது செயலில் காயம் மறந்து வாய்விட்டே சிரித்தாள் அமர்த்திக்கா. அவள் சிரிக்கையில் அத்தனை அழகாக இருந்தாள். அதில் நவீனின் கண்களில் ரசனை வந்து குடி கொள்ள, சட்டென்ற அமைதியில் அமர்த்திக்கா நவீனைப் பார்க்க, அவனது பார்வை மாற்றத்தில் வெட்கம் வந்தது காரிகைக்கு.

தலை குனிந்தவளை அவன் இன்னும் நெருங்கி வர, அவளோ பின்னோக்கி நகர்ந்து கொண்டே சென்றாள். ஓர் கட்டத்திற்கு மேல் நகர முடியாமல் சுவரில் ஒட்டி நின்றிருந்தவளை கைகளால் சிறை செய்தான் ஆடவன்.

இவன் இப்படியெல்லாம் நடந்து கொள்வான் என நினைத்திராதவள் அதிர்ந்தாலும், உள்ளுக்குள் அனைத்தையும் ரசித்துக் கொண்டு தான் நின்றாள். இருந்தாலும் பெண்களுக்கு உரித்தான நாணத்தில் தலையை கவிழ்த்தி இருந்தவளின் நாடியை ஒற்றை விரலால் பிடித்து அவன் நிமிர்த்த, அவளுக்கோ உடலில் மின்சாரம் தாக்கிய உணர்வு.

பின் ஒற்றைக் கையை இடுப்பில் வைத்து நின்று கொண்டவன் அவளை சீண்ட நினைத்து "அத்தனை பேர் முன்னாடியும் என்னை நேருக்கு நேர் பார்த்து சத்தம் போட்டு லவ்வ சொன்ன உனக்கு அந்த தைதிரியம் இப்போ எங்க போச்சு..?" என்றான் ஹஸ்கி வாய்சில்.

அவளுக்கோ அவன் அறைந்து தன்னை திட்டியது நினைவு வர கண்கள் குளம் கட்டி விட்டன. அதில் ஓர் துளி அவனது கையில் விழ பதறிய நவீன் அவளது கன்னத்தை தாங்கி கண்ணீரைத் துடைத்து விட்டு "ஹேய் என்னாச்சுமா...?" என்றதும் தாங்க முடியாமல் அடுத்த கணம் அவனை அணைத்திருந்தாள் மாது.

ஆனந்த அதிர்ச்சியில் கண்களை அகல விரித்து நின்ற நவீன், அவளது விம்மலில் தவம் கலைந்து அப்படியே அவளை பதிலுக்கு அணைத்திருந்தவனின் அணைப்பு நிமிடத்துக்கு நிமிடம் இறுகியதோ..

அவளது கண்ணீர் அவனது சேர்ட்டை ஈரமாக்க தன்னிலிருந்து அவளை பிரிய மனமே இல்லாமல் பிரித்து நிறுத்தியவனிடம் "வ..வன் இயரா உங்கள ஃபோலோ பண்ணுறேன் நவீன். ஒ..ஒவ்வொரு நிமிஷமும் நீங்க கிடைப்பிங்களா கெடைக்க மாட்டிங்களானு நெனச்சு நெனச்சு மனசுக்குள்ள செ..செத்துட்டு இருந்தேன். ஆ..ஆனால் ஆனால் இன்னைக்கு நீ..நீங்க அப்படி நடந்துக்கிட்டதும் இருந்த கொ..கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் போச்சு.. வலிச்சிது நவீன்..." என்றவளின் கதறலில் சிலையாகி நின்றான் ஆடவன்.

"என்ன வன் இயரா...?" என அதிர்ந்தவனின் முனங்கல் சத்தம் கூட அவனை உயிராக நேசிப்பவளுக்கு தெளிவாகக் கேட்டது.

"எஸ்.." என்று தலையை மேலும் கீழும் ஆட்டி வைத்தவள் ஏதோ நினைவு வந்தவளாக கண்களை துடைத்து விட்டு சிரித்துக் கொண்டே தன் ஃபோனை எடுத்து அவனிடம் காட்டிய புகைப்படங்களை மெய் மறந்து பார்த்திருந்தான் அவன்.

அத்தனையும் அவனது புகைப்படங்களே. கடந்த வருடம் தொடக்கம் இப்போது வரை அவன் என்ன என்ன செய்தானோ அனைத்தும் புகைப்படங்களாக அவளது கேளரியை நிறைத்திருந்தன. தன் கண்களையே நம்ப முடியாத திகைப்பு அவனுள். இறுதியாக அன்று ஹோட்டல் வாசலினுள் அவன் நுழைந்த போது எடுத்திருந்த புகைப்படம்.

அதனை ஆசையாக தடவிக் கொடுத்தவளின் காதலில் ஆடவனின் உடல் சிலிர்த்தது. அப்படியே கையைத் தூக்கி அவளது கன்னத்தை தடவிக் கொடுத்தவனின் கையைப் பற்றியவள் "இந்த நொடி என்னை விட அதிஷ்டசாலி யாரும் இருக்க மாட்டாங்க. ஐ எம் சோ ஹெப்பி நவீன்..." என இறக்கை இல்லாத குறையாக பறந்து கொண்டிருந்தவளிடம் "ஏன்..?" என்று மட்டும் தான் அவன் கேட்டான்.

அழகாக தன் இடைப்பல் தெரிய சிரித்தவள் "ஏன்னா என் நவீன் எனக்கு கிடைச்சிட்டாரு.. ஐ..ஐ லவ் யூ நவீன்..." என்றவளுக்கு இறுதியில் தொண்டை அடைத்தது.

உலகில் இப்படியும் ஒருத்தரை காதலிக்க முடியும் என அவனவள் அவனுக்கு உணர்த்திக் கொண்டிருந்தாள். அவளை தன்னை நோக்கி இழுத்தவன் அவளது கன்னத்தில் ஆசையாக முத்தமிட அவனது மீசை தந்த குறுகுறுப்பில் அவனது சேர்ட்டை இறுகப் பற்றிக் கொண்டாள் பேதை.

கலங்கயவனாக "ஆனால் நா..நான் ஒரு அநாதை..." என்பதற்குள் அவசரமாக அவனது வாயை தன் மென் கரங்களால் மூடியவள் தலையை இடம் வலம் ஆட்டி மறுத்தாள்.

அந்த வார்த்தை அவளது உயிர்வரை சென்று வலிக்கச் செய்ய கலங்கியவளாய் "அ..அப்படி சொல்லாதிங்க நவீன். உங்களுக்கு அம்மாவா, அப்பாவா, ஒரு குழந்தையா, மனைவியா உங்க வாழ்க்கை முழுக்க இருக்க நான் தயார். இனி இந்த வார்த்தையை திரும்ப ஒரு தடவை சொன்னிங்கனா அது தான் நான் உயிரோட இருக்கிற கடைசி நா..." என்பதை சொல்ல விடாமல் அவளது இதழை சிறை செய்திருந்தான் அவளவன்.

இதனை எதிர்பாராதவள் அதிர்ந்தது ஓர் கணம் தானென, அடுத்து தன்னை அவனுக்கு வாகாக கொடுத்து விட்டு அவனை தன் இதயத்தினுள் சிறை செய்து கொண்டாள் அமர்த்திக்கா.

கொஞ்ச நாளா அந்த அவள் அவள் என்ற ஒருத்தி நம்மாள ஃபோலோ பண்ணிட்டு இருந்தாள்ல. அந்த அவள் வேற யாருமில்லை. நவீனை ஒருதலையாக காதலித்துக் கொண்டிருந்த அமர்த்திகாவே தான்.

பின் அவளை விடுவித்தவனைப் பார்த்து அவள் கண் சிமிட்டி சிரிக்க அவனோ பின்னந்தலையை கோதிக் கொண்டே மென்னகையுடன் அவளை கண்களால் களவாடிக் கொண்டிருந்தான். அவனது அந்த வசீகரப் புன்னகையில் மெய் மறந்து நின்றிருந்தவளிடம் "வெளியே எல்லோரும் நமக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க. நீ மொதல்ல போ. பிறகு நான் வரேன்..." என்றதும் தலையாட்டி விட்டு சென்றவள் திடீரென ஓடி வந்து அவனது கன்னத்தில் இதழால் தீண்டி விட்டு ஓடி விட்டாள். அவளது சேட்டையில் நவீனிற்கு சிரிப்புத் தான் வந்தது. ஏதோ அரிய பொக்கிஷம் தன் கிடைத்ததைப் போல உணர்ந்தான் அவன்.

அமர்த்திக்காவின் பின் வந்த நவீனைப் பார்த்தவர்களுக்கு அவர்களின் முகமே அனைத்தையும் கூற சந்தோஷமாகியது.

பின் குடும்பமாக அமர்ந்திருந்து திருமணம் பற்றி பேசிக் கொண்டிக்க திடீரென ஆதவிக் நவீனை வெளியே சென்று வருவோம் என அழைக்க அவனும் அனைவரிடமும் விடைபெற்று விட்டு வெளியேறினான். செல்லும் அவனையே ஏக்கத்துடன் அமர்த்திக்கா பார்த்திருக்க ஏதோ உந்த நவீன் திரும்பிப் பார்த்தான். அவள் சிரிக்கவும் அவனும் பதிலுக்கு சிரித்து விட்டு சிறுதலையசைப்புடன் சென்று விட்டான்.

...

கார் வந்து கடற்கரையில் நிற்க குழம்பிய நவீன் "இங்க எதுக்குடா திடீர்னு கூட்டிட்டு வந்த..?" என்றான்.

"வா மச்சான். உனக்காக ஒராள் காத்துட்டு இருக்காங்க.." என்றான் ஆத்விக்.

நவீனோ வெட்கத்துடனே காலரை எடுத்து விட்டு "யாரு மச்சி. பொண்ணா என்ன..? என்றதும் அவனை ஏற இறங்கப் பார்த்து விட்டு ஃபோனை எடுத்து யாருக்கோ அழைப்பெடுக்க அதனை எட்டிப் பார்த்த நவீன் "யாருக்குடா அந்தப் பொண்ணுக்கா..?" என்றான் கண்கள் மின்ன.

"ஆமா ஆமா. அவட பெயர் கூட அமர்த்திக்கா தான்..." என்றான் ஆத்விக்கும்.

"பார்ரா நம்ம ஆள்ட பேர் மாதிரியே இருக்கு. நமக்கெதுக்கு அது. நமக்கு பொண்ணு போதும்.." என்றவனை முறைத்தவன் "அவ அப்பா பேர் கூட கிருஷ்ணமூர்த்தி..** கம்பனி ஓனர்..." என்று விட்டு ஃபோனை காதில் வைக்க, அலறிய நவீன் அவனது தொலைபேசியை பறித்து கட் பண்ணி விட்டான்.

"ஏன்டா..ஏன்.. இப்போ தான் ஒன்னு உருப்படியா கரெக்டாகி இருக்கு. அதுக்குள்ள சங்கு ஊதி விட்டுறாத சனியனே.." என்று விழி பிதுங்கியவனை ஏளனமாக பார்த்து வைத்த ஆத்விக் "உங்களுக்கு தான் ஒன்னு போதாதே தம்பி.." என்றான்.

"அதெல்லாம் போதும். நீ பேசாம வாய மூடிட்டு வந்து தொலை..." என்றவன் முன்னாடிப் போய் சட்டென சடுன் ப்ரேக் போட்டு நின்று விட்டான். ஆம் அங்கே மணலில் அமர்ந்திருந்தது சாக்ஷாத் சத்யாவே தான்.

முகத்தை அஷ்டகோணலாக திருப்பிய நவீனுக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தது. அப்படியே யூ டேர்ன் போட்டு திரும்பியவனை கப்பென பிடித்துக் கொண்ட ஆத்விக் அவனை சத்யாவின் பக்கம் உதைந்து தள்ளி விட்டான்.

அதில் விழுந்தவன் மண்ணை அள்ளி ஆத்விக் மீது வீசி விட்டு திரும்ப சத்யாவோ முகத்தை ஏழு முழத்திற்கு தூக்கி வைத்திருந்தாள். ஆனால் பார்வை என்னவோ நவீனை எரித்துக் கொண்டிருந்தது.

திருதிருத்த நவீன் ஆத்விக்கிடம் "இவ என்னடா கண்ணால பொசுக்குறா..." என குசுகுசுத்தவனைப் பார்த்து சிரித்தான் அவன்.

திரும்பி சத்யாவிடம் "கண்ணம்மா மாமாக்கு ஒரு இம்போர்டன்ட் கால் பண்ண வேண்டி இருக்கு. அதுவரைக்கும் இவனை நீ என்ன வேணாலும் பண்ணலாம். ஓபர் தான்..." என்றவனின் காலை கெட்டியாக பிடித்திருந்த நவீன் போக வேண்டாமென தலையை ஆட்ட அவனோ கொஞ்சம் கூட இரக்கம் என்பதைக் காட்டாமல் "பட் உயிர் ரொம்ப முக்கியம்.." என்றவன் குனிந்து நவீனின் கன்னத்தில் கிள்ளி விட்டான். அவனோ இவனை முறைத்துக் கொண்டே கையைத் தட்டி விட்டு எழுந்து கொள்ளவும் ஆத்விக் திரும்பி நடக்கவும் சரியாக இருந்தது.

"க்ராதகா..." என அவன் திட்டியதை செவியில் வாங்கிங் கொள்ளாமல் செல்பவனை வாயினுள் அர்ச்சனை செய்து கொண்டே திரும்ப அங்கே சத்யா எதையோ சீரியஸாக கீழே குனிந்து தேடிக் கொண்டிருந்தாள்.

தயங்கித் தயங்கியே அவளருகில் சென்றவன் "பே..பேபி.. அப்படி என்னத்த தேடிட்டு இருக்க. ஒருவேளை தங்கமோ..? நான் வேணா ஹெல்ப் பண்ணட்டுமா..?" என்றவன் குனிய, அதோ அவனின் உச்சி முடி அவளது கையில் வைத்து ஆட்டி எடுக்கப்பட்டது.

"ஆஆஆஆஆ ராட்சசியே.. விடுடி எரும.. அம்மா.." என்று அலறியவனுக்கு நாலு மொத்து முதுகில் போட்டு விட்டு "வலிக்குதா நாயே.. வலிக்கட்டும். நல்லா வலிக்கட்டும். இத்தனை நாளும் நான் பட்ட கஷ்டத்தை நீ அனுபவிக்க வேணா..? சாவுடா.." என மீண்டும் தலையில் கை வைக்கப் போனவளின் காலை அமர்ந்து பிடித்தவன் "வேணான்டி.. வலிக்குதுடி.. மீ பாவம்..அவ்வ்..." என கண்ணீர் வராத குறையாக அழுதவனைப் பார்த்து சிரிப்பு வந்தாலும் வீம்புக்காரி அழுத்தமாக இருந்து விட்டாள். பின் போனாப் போகட்டும் என அவனை உதறி தள்ளி விட்டவள் கோபமாய் சென்று மீண்டும் மணலில் அமர, நவீனும் எழுந்து போய் அவளருகில் தொப்பென அமர்ந்தான்.

அவளோ முகத்தை திருப்பி விட்டாள். விளையாட்டை விட்டு விட்டு நவீனும் சீரியஸாகி "சா..சாரி பேபி.." என்றதும் இவ்வளவு நேரமும் தேக்கி வைத்திருந்த விழிநீர் அவளது கன்னம் வழிந்தது.

அதில் நவீனுமே சோகமாகி விட, அவளோ "நீயும் என்னைய நம்பலல.. நான் உன்கிட்ட எத்தனை தடவை கெஞ்சினேன். என்னைய ஒரு மாதிரி பா..பார்த்து விரட்டி விட்டல்ல.. நா..நான் அப்படிப் பட்டப் பொண்ணாடா..?" என ஏங்கியவளை திடுக்கிட்டுப் பார்த்த நவீன் "ஹேய் அப்படில்லாம் இல்லடா.. நீ..நான்..ப்ச்.. ஐ எம் சாரி பேபி.." என்றவனது கண்களும் நண்பியின் கண்ணீரில் கலங்கியது.

"நானும் இப்படித் தான செய்யாத தப்புக்காக சாரி கேட்டேன். ஆனால் நீ..." என்று அழுதவளின் கையைப் பற்றியவன் "ஐ எம் ரியலி சாரி. ப்ளீஸ் அழாதடி. ஐ கான்ட் பியர் இட்..." என்றவன் தன் கன்னம் தொட்ட கண்ணீரை துடைக்க மறு பக்கம் திரும்பி விட்டான். அவனின் கண்ணீர் அவளை சற்று நிதானமாக்க கண்களை துடைத்து விட்டவள் அவனது கலக்கத்தில் கலங்கியவளாய் "ஆனாலும் நான் உன் கூட பேசுறதா இல்லை.." என்றவளின் பேச்சில் சட்டென திரும்பினான். அவளது பழைய துடுக்குத்தனம் மீண்டதில் வாய் நிறைந்த புன்னகையுடன் நவீன் "பரவாயில்லை பேசாத. ஆனால் மூஞ்சிய மட்டும் அப்படி தூக்கி வச்சிறாத. பார்க்க சகிக்கல..." என்று விட்டு சிரித்தவனின் முதுகில் அடித்தவள் "ஓஓஓ உங்களுக்கு இனி எங்க மூஞ்சி எல்லாம் பார்க்க சகிக்காது தான். அது தான் பார்க்க வேறொருத்தி வந்துட்டாளே..க்கும்.." என முக வாயை தோளில் இடித்து வைத்தவளைப் பார்த்து வாய் விட்டு சிரித்தான் நவீன்.

"அதுக்குள்ள நியூஸ் வந்துட்டு போல..." என்றவனிடம் "பின்ன..? எங்க ஸ்பீட் அப்படி செல்லம்.." என ஆத்விக்கை கண்காட்டியவளின் சந்தோஷத்தில் அகம் மகிழ்ந்தான் நண்பனானவன்.

அப்படியே அவளது தோளில் தலை சாய்த்தவனை பார்த்து அவளுக்கு உருகிற்று. அத்துடன் இத்தனை நாட்களும் இந்த சந்தோஷம் அனைத்தையும் தொலைத்து விட்டு தனியாக இருந்ததை நினைத்து கலங்கவும் செய்தாள்.

சரியாக அந்நேரம் பார்த்து நவீனின் சேர் காலரை யாரோ தரதரவென இழுத்துக் கொண்டு போக நவீனோ "எவன்டா எரும..?" என பல்லைக்கடிக்க சத்யாவோ "அச்சோ நவீன்..." என பதற அங்கே இழுத்துக் கொண்டு போனதோ ஆத்விக் தான்.

அவனைப் பார்த்து சத்யா சிரிக்க திரும்பிப் பார்த்த நவீன் "மட்டி மடையா..நீயாடா.. விடுடா எரும. எதுக்குடா இழுத்துட்டுப் போற?" என்று பிடியிலிருந்து விடுபடப் போராட அவனோ சீரியஸாக "அவ என் ஆள். மைன்ட் இட் ஃபெஸ்ட். இதுக்குப் பிறகு அவட மேல சாயுறது, கூட பேசுறதெல்லாம் வச்சுக்கிட்ட, கைய கால உடைச்சு கடல்ல தூக்கி வீசிருவேன்.." என்று எச்சரித்தான்.

"ஏய் ச்சீ வாய மூடு. பொறாம பிடிச்சவன்.." என்றவன் ஒருவாறு அவனிடமிருந்து விடுபட்டு எழுந்து விட்டான்.

அவனோ அவனை அப்படியே எவனுக்கு வந்த விருந்தோவென போட்டு விட்டு வந்து தன்னை காதலுடன் பார்த்துக் கொண்டிருந்தவளின் மடியில் தலையை வைத்து விட்டு கதையளந்து கொண்டிருந்தான். கடுப்பான நவீன் திரும்பி வீட்டுக்கு நடந்தான். அவனை இருவரும் பார்த்து சிரித்து வைத்தனர்.


தொடரும்...


தீரா.
 
Top