• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Dheera

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 17, 2023
Messages
234
சஞ்சயின் ஆஃபிஸில் அமர்ந்திருந்த சத்யா திடீரென "டேய் அண்ணா யாருடா அந்த ஏ.எஸ் கம்பனியோட ஓனர்? அவர பத்தித் தான் ஃபுல் நியூஸூம்..." என்றவாறு பத்திரிகையை அங்கும் இங்கும் புரட்டிப் பார்த்துக் கொண்டே கேட்டாள்.

அவனைப் பற்றி கேட்டவுடன் தன் வேலைகளை தற்காலிகமாக தூக்கி அந்தப் பக்கம் வைத்த சஞ்சையோ அவளது கேள்விக்கு பதில் தரலானான்.

"இப்போ லீடிங்ல இருக்கிற கம்பனி தான் அவரோடது. டோப் வன் பிஸ்னஸ்மேன் அவார்ட் வாங்கி இருக்கிறாரு. பக்கா பிஸ்னஸ் மேன். செம்ம ஸ்மார்ட் வேற.." என்றவன் கண்ணடிக்க அவளது உதடு வளைந்தது. தொடர்ந்தவனாக "இவருக்குப் பின்னால ஒரு பிஸ்னஸ் விமின் பட்டாளமே சுத்தி வருதுனா பாரேன்..." என்று அவனைப் பற்றிக் கூறும் போது அவனது முகத்தில் கர்வம் வந்து ஒட்டிக் கொண்டதோ..!? அதில் சத்யாவின் முகம் அஷ்ட கோணலாகியது.

"அப்போ அவர் த க்ரேட் பிஸ்னஸ் மேனா இருக்க மாட்டாரு. ஒரு ப்ளே பாயா இருக்கனும்.." என முகத்தை திருப்பி இருந்தாள். தங்கையின் பதிலில் சிரித்த சஞ்சையோ "அது தான் இல்லை. இவர் நீ நெனக்கிற மாதிரி இல்லை. பெண்களை திரும்பிக் கூட பார்க்க மாட்டாரு. இவருடைய முழு மூச்சே ஆபிஸ் மட்டுந்தான். வீட்டுக்கு ஒரே பையன். பாசமான ஒரே ஒரு ஃப்ரெண்ட். அப்பறம் அம்மா மேல உயிரே வச்சிருக்கிற ஒரு அழகான அடங்காத பையனு சொல்லலாம்..." என்றான் அந்தப் புன்னகை மாறாமலே.

இவர்களின் உரையாடலுக்குரியவனின் பெயரை சொல்லாமல் விட்டது சஞ்சயின் தவறா..!? இல்லை ஏனோ அவனைப் பற்றி அறியும் ஆவலில் அவனது பெயரைக் கேட்காமல் விட்டது சத்யாவின் விதியா..!?

அவளும் அவனது கூற்றில் "நீயே செட்டிபிக்கேட் கொடுங்கிறன்னா நல்லவராத் தான் இருக்கனும். இந்த நல்லவர நேர்ல பார்க்கனும் போல இருக்குடா...?" என்றாள் ஆர்வமாய்.

சஞ்சயோ சிரித்து விட்டு மீண்டும் தன் வேலையில் மூழ்கிப் போனான்.

இவளது ஆசை இன்று மாலையே நிறைவேறும் தருவாயில் நிராசையாகப் போவதை பாவம் அவள் அறிந்திருக்கவில்லை.

ஆஃபிஸ் முடிந்து இருவருமாய் தங்கள் காரில் பயணமாகினர்.

ஆத்விக்கின் காரை நவீன் ஓட்டிக் கொண்டு வர அவன் நவீனின் அருகில் அமர்ந்திருந்தான். கார் வந்து ட்ராபிக்கிள் நிற்க சரியாக அந்நேரம் பார்த்து சஞ்சயின் காரும் வந்து அவர்களின் அருகில் நின்று கொண்டது.

சஞ்சயோ யதார்த்தமாக ஆத்விக்கின் கார் பக்கம் திரும்பியவன் வின்டோவினூடாக அவனை கண்டு விட்டான். மலர்ந்த முகத்துடன் அவசரமாக தன் தங்கையின் புறம் திரும்பியவன் "ஹேய் குட்டிம்மா அங்க பாருடி. நீ மோர்னிங் கேட்டுட்டு இருந்தியே அவருடி.." என்றதெல்லாம் அவளது செவிகளைத் தீண்டவில்லை.

கீழே குனிந்து எதையோ தேடிக் கொண்டிருந்தாள் சத்யா. சஞ்சய் மீண்டும் அழைத்ததில் அவள் நிமிரவும் சிக்னல் விழுந்து ஆத்விக்கின் கார் புறப்பட்டுச் செல்லவும் சரியாக இருந்தது.

அண்ணனின் புறம் திரும்பியவள் "என்னடா..?" என எதுவும் புரியாதவளாய் கேட்டு வைக்க அவனும் "நீ காலைல கேட்டியே ஏ.ஏஸ் கம்பனியோட ஓனர், அவரை இப்போ தான் இங்கே பார்த்தேன்..." என தன் வின்டோவ் பக்கம் கண் காட்ட மனதில் எழுந்த தவிப்புடன் அந்தப் பக்கம் சஞ்சயைத் தாண்டி கழுத்தை எட்டிப் போட்டவள் சுற்றும் முற்றும் தேட
சஞ்சயோ "அவரு அப்பவே போய்ட்டாரு. மகாராணி இவ்வளவு நேரமும் என்னத்த தேடுனீங்களோ அதையே குனிஞ்சு தேடுங்க..." என்றவாறு காரை கிளப்ப எத்தனிக்க அவளும் அவனை முறைத்து விட்டு தன் பக்கம் சென்று அமர்ந்து கொண்டாள்.

அவளை ஒரு மார்க்கமாக பார்த்து விட்டு "நல்ல வேளை ராட்சசி மல்லுக்கு நிற்கைல்ல..." என மனதில் நினைத்துக் கொண்டே சென்று விட்டான்.

...


"அம்மா..அப்பா.. ரெண்டு பேரும் எங்க இருக்குறீங்க...?" என்றவாறு ஓட்டமும் நடையுமாக வீட்டினுள் நுழைந்தான் நவீன்.

அவனது சத்தத்தில் வெளியே வந்த ப்ரனீத்தா "அடடே வாப்பா கண்ணா..! எப்படிப்பா இருக்க..? நாங்க அழைச்சா மட்டுந்தான் வீட்டுப் பக்கம் வருவியாப்பா..?" என ஆதங்கத்துடன் அவனை வரவேற்க, அவன் பேசுவதற்குள் முந்திக் கொண்ட ஆத்விக் "அவனுக்கு பொண்ணுங்க பின்னாடி சுத்தவே நேரம் பத்தல. இதுல இங்க வர எங்கம்மா அவனுக்கு டைம் இருக்கும்?. அப்படி தானே மச்சான்...?" என்று முடித்து வைத்து விட்டு தனதறைக்கு சென்று விட்டான்.

அதில் அவனை முறைத்த நவீன் ப்ரனீத்தாவிடம் "அவன் சும்மா சொல்லுறான்மா. இவன் தர்ர வேர்க்ஸ் எல்லாம் முடிச்சிட்டு வீட்டுக்கு போகவே டைம் சரிம்மா. அதனால தான் இங்க வர கிடைக்கிறதில்லை..." என்றவனுக்குமே இது ஓர் உப்புசப்பில்லாத காரணமாகவே தோன்றியது.

தங்கள் மகன் பெண்கள் பற்றி பேசியதும் ப்ரனீத்தாவும் சூர்யாவும் அர்த்தமாக தங்கள் பார்வைகளை பரிமாறிக் கொண்டனர்.

பின் நவீனிடம் "அதுக்குத் தான் உன்னைய எங்க கூடவே வந்திருக்க சொல்லுறோம். நீ எங்கப்பா எங்க பேச்ச கேக்குற..? உன்னைய ரொம்ப மிஸ் பண்ணுறோம் கண்ணா" என்றார் தழுதழுத்த குரலில்.

அவர் அப்படிக் கூறியதும் நவீனிற்கும் கண்கள் கலங்கி விட்டன.

யாருமற்ற அநாதையாக இருந்த தனக்கு இப்படி எதிர்பார்ப்பில்லாமல் அன்பை வாரி வழங்கும் குடும்பம் கிடைத்ததற்கு தான் என்ன கைமாறு செய்யப் போகிறோமோ என்று மனதில் எண்ணித் துடித்தான் ஆடவன்.

தாங்கமாட்டாது ப்ரனீத்தாவை கட்டிக் கொண்டு தான் ஒரு ஆண்மகன் என்றும் பாராமல் அழுதே விட்டான் நவீன்.

அவனின் நிலை கண்டு பதறிய ப்ரனீத்தா "ப்ச் என்னப்பா இப்படி சின்னப் பையன் மாதிரி கண்ண கசக்குற...?" என அவனது முதுகை ஆதரவாக தடவி விட்டவரை நிமிர்ந்து பார்த்தவன் கண்களைத் துடைத்துக் கொண்டே "யா..யாருமில்லாத அ..அநா..." என்று தொடங்கவே அவனை முறைத்து விட்டு சமையலறையை நோக்கி சென்று விட்டார் ப்ரனீத்தா.

இவர்கள் இருவரினதும் நிலை சூர்யாவையே சற்று கலங்க வைத்திருந்தது. அவரை ஏக்கமாக பார்த்துக் கொண்டிருந்த நவீனிடம் "அவளுக்குத் தான் இந்த வார்த்தையெல்லாம் பிடிக்காதுனு தெரியுமில்லப்பா. பின்ன ஏன் இப்படி பேசுற..? நீயும் எங்க பையன் தானே. இனியும் இப்படிப் பேசாத நவீன்..." என மறைமுகமாக அவனை எச்சரித்கவர் "போப்பா போய் அவளை சமாதானப்படுத்து. இல்லன்னா இன்னைக்கு முழுக்க முகத்தை தூக்கி வச்சிட்டு திரிவா..." என்றவர் வேலை முடிந்ததென டி.வி ஐ ஆன் செய்து செய்தியில் மூழ்கி விட்டார்.

ப்ரனீத்தாவைத் தொடர்ந்து பின்னே சென்ற நவீன் கண்டதோ தான் கூறியதை யோசித்துக் கொண்டிருந்தவரைத் தான். அவர் அருகில் சென்றவன் அவரை பின்னாலிருந்து அணைத்தவாறு "சாரிம்மா. ப்ளீஸ் இந்த ஒரு தடவை பெரிய மனசு வச்சு மன்னிச்சு விடுங்க.. ப்ளீஸ் ப்ரனி குட்டி..ப்ளீஸ் ப்ளீஸ்..." என ஆயிரம் ப்ளீஸ் போட்டுக் கெஞ்சுகிறேன் என்ற பேரில் கொஞ்சிக் கொண்டிருந்தவனிடன் கோப முகத்தைக் காட்ட முடியவில்லை அவரால்.

அவரது சிரிப்பில் நவீனோ "தட்ஸ் மை கேள்..." என்றவாறு கண்ணடித்தவனின் காதை திருகியவர் "இதுக்கப்றம் இப்படி பேசுவியாடா..?" என அதட்ட உடனே சரண்டர் என கைகள் இரண்டையும் மேலே உயர்த்தியவன் "தாய்க்குலமே இதுக்குப் பிறகு தெரியாமக் கூட அப்படி சொல்ல மாட்டேன்..." என பெரிய கும்பிடு போட அதில் சிரித்த ப்ரனீத்தா "சரியான வாலுடா நீ..." என்று விட்டு "சரி சரி உனக்குப் பிடிச்ச சாப்பாட்டா தான் செய்றேன். போய் ஃப்ரெஷாகிட்டு வாப்பா..." என தன் வேலையில் மும்முரமாகி விட்டார்.

அவனும் ஓகே என்றவாறு படியேறி மேலே சென்று விட்டான்.


...


வீட்டிற்கு வந்த சத்யாவிற்கு அவனின் நினைவாகவே இருந்தது. அவனைப் பற்றிய ஆர்ட்டிக்கல் படித்ததிலிருந்து இப்படித் தான் இருக்கிறது அவளுக்கு. ஏதோ இனம்புரியாத படபடப்பு அவளுள். தன் கையை விட்டு நழுவிய ஒன்று தன் பக்கம் தலை சாய்ப்பது போன்ற விம்பம்...!!

அவளின் மனமோ மாற்றாணை நினைக்காதே என எச்சரித்தாலும் தன்னை மீறி வரும் அவனது எண்ணத்தை ஒதுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள்.

அப்போது சரியாக அவள் முன் அவளது மனசாட்சி வந்து நின்று கொண்டது.

"என்ன சத்யா நடந்தத எல்லாம் மறந்துட்ட போல.." என எகத்தாளமாய் சிரிக்க

"நா..நான் எதையும் மறக்கலையே..." என அழுது விடுபவள் போல கூறி இருந்தாள்.

"இல்லையே நீ திக்கிறத பார்த்தா ஏதோ டென்ஷனா இருக்கிற மாதிரி இருக்கு...சரி அதை விடு. நடந்தத மறக்கலைன்னா பின்ன ஏன் அந்த ஏ.எஸ் கம்பனியோட ஓனர் பத்தி யோசிக்கிற...?"

அதில் அதிர்ந்து விழித்த சத்யா "அ..அது ஏதோ சு..சும்மா. ஆனால் நான் எதையும் மறக்கவுமில்லை. மன்னிக்கவுமில்லை. நீ மொதல்ல இங்கிருந்து கெளம்பு..." என்றவுடன் அதுவும் அவளைப் பார்த்து ஏளனமாக சிரித்து விட்டு புகையாக களைந்து சென்றது.

சத்யாவோ யோசித்து விட்டு ஒரு முடிவுடன் எழுந்து சென்றாள்


...


குளித்து விட்டு தலையில் நீர் சொட்டச் சொட்ட இடையில் டவலைக் கட்டிக் கொண்டு வந்து நின்ற ஆத்விக் டீசேர்ட்டை எடுக்க கபேர்ட்டை திறந்த நொடியில் அவனது கண்ணில் முதலில் பட்டதோ அந்த டயரி.

அதனை எடுத்து தடவிக் கொடுத்தவனை ஒவ்வொரு பக்கமும் வலியுடன் தடவிச் சென்றது. அதில் ஓர் பக்கத்தில் அவனது பார்வை நிலைக்குத்தி நின்க, கண்ணில் நீர்த் திடையிட அதனை வாசித்தான்.

என் காதல் கொண்ட மனது அவளது ஒற்றை வார்த்தையை எதிர்பார்த்து ஆசையாக வந்த அந்நொடி...!!

சட்டென டயரியை மூடி விட்டவன் மீண்டும் தன்னை சமாளித்துக் கொண்டு வாசிக்கலானான்.

எந்த ஒரு காதல் கொண்ட நெஞ்சும் அதனைக் காணக் கூடாது. ஆனால் நான் கண்டேன் என் காதல் ஓவியத்தை கிறுக்கல் சித்திரமாய்..!!

அதுவே அவளைத் தொலைத்த நொடியும் கடைசியாக அவளைப் பார்த்த நொடியும்...!!

அதற்கு மேலும் தாங்க முடியாமல் அந்த நாளின் நினைவில் துக்கம் தொண்டையை அடைக்க டயரியை மூடி மீண்டும் இருந்த இடத்தில் தினித்தான். அந்நேரம் பார்த்து சரியாக நவீனும் அவனது அறையினுள் நுழைந்திருந்தான்.

அவனும் நண்பன் நின்றிருந்த நிலையைக் கண்டு "இவன் எதுக்கிப்போ சாமியார் மாதிரி நிக்கிறான்...?" என்று எண்ணியவாறு அவனது தோளைத் தொட அதில் கலைந்த ஆத்விக் சட்டென மறுபுறம் திரும்பி கண்களில் கோர்த்திருந்த கண்ணீரைத் துடைத்து விட்டான்.

உயிர் நண்பனின் நிலையை அறியாதவனா என்ன அவன்..!? உடனே நிலைமையை சரி செய்யும் பொருட்டு அவன் முன் போய் நின்றவன் "என்ன மச்சான் குளிச்சிட்டு அரைகுறையா வந்துட்ட போல.? பாரு கண்ணுல தண்ணி இருக்கு..." என்றான் சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு.

அவனது உல்டா பேச்சில் இவ்வளவு நேரமும் இருந்த அழுத்தம் நீங்கியவனாக லேசாக இதழ் விரித்தான் ஆத்விக்.

அதில் இன்னுமே வலிகள் மிச்சம் இருக்க அதனை கண்டு கொண்டவனாக "சரி சரி சீக்கிரம் கீழ வா. அம்மா சாப்பிட கூப்பிட்டாங்க..." என்றான் நவீன்.

எவ்வளவு தான் அவனை திசை திருப்ப முயற்சித்தும் ஆத்விக்கின் முகத்தில் அயர்ச்சியைக் கண்ட நவீன் "மச்சி இப்படி இருக்காதடா.. அம்மா உன்னைய இப்படிப் பார்த்தா ரொம்ப வொரி பண்ணுவாங்க..." என்றவன் பின் தயங்கித் தயங்கியே "நான் ஒன்னு கேட்கட்டா மச்சி...?" என்றான்.

ஆத்விக்கிடம் ம்ம் மட்டுமே.

"நீ இன்னும் அவள மறக்கலையாடா...?" என்றான் முகத்தில் சோகத்தை தேக்கி வைத்துக் கொண்டே.

அதில் விரக்தியாய் சிரித்தவன் நவீனின் புறம் முழுவதுமாகத் திரும்பி "அவ என்ன சந்தைல வாங்கின பொருளாடா, யூஸ்லெஸ்னு தெரிஞ்ச உடனே தூக்கி எறிய...?" என்றவன் திடீரென "மச்சி ஸீ கில்ட் மீ வன்ஸ் டா. பட் ஹேர் மெமரிஸ் கில்லிங் மீ டெய்லி டா..." என்றவன் அவனை அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டான்.

நவீனிற்குமே அவனது பேச்சில் கண்கள் கலங்கி விட்டன.

"நா..நான் என்னடா பண்ணினேன் அவளுக்கு? அவள லவ் பண்ணுனது தப்பாடா. என் அம்மாக்குப் பிறகு அவள தானடா உயிரா நெனச்சிருந்தேன். ஆ..ஆனால் ஆனால் அவ என்னை ஏமாத்திட்டா நவீன். அ.. அன்னைக்கு அவளை அந்த நிலையில பார்ப்பேனு நான் கனவுல கூட நெனக்கலடா..." என்றவன் தவிப்புடன் அவனிடம் ஆறுதல் தேடி அழ, நவீனுக்குமே வலித்தது.

"அழாதடா மச்சி. என்னால உன்ன இந்த நிலைமைல பார்க்க முடிலடா. உன் நிலைமைக்கு காரணமான அந்த ஸ்ரீ என் கண்ணுல படட்டும் அப்பறம் இருக்கு அவளுக்கு..." என ஆத்திரத்துடன் மொழிந்தவனுக்கு தெரியாதே நடந்த உண்மை எதுவென...

இவர்கள் இப்படி இருக்க கீழே இருந்து ப்ரனீத்தாவின் குரல் ஒலித்தது. அதில் நவீன் ஆத்விக்கை அணைப்பிலிருந்து விடுவித்து "அம்மா கூப்பிடுறாங்கடா. நான் மொதல்ல கீழ போறேன். நீ ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வா..." என்றவன் சென்று மறைய, சில நிமிடங்களின் பின் ஆத்விக்கும் ரெடியாகி கீழே சென்றிருந்தான்.


...



"நீ என்னைய நல்லா ஏமாத்திட்டலடி?"

"நா..நான் உன்ன ஏமாத்தல.. நீ தான் ஏதோ தப்பா புரிஞ்சிட்டு இருக்க..."

"ச்சீ.. உன்ன லவ் பண்ணின பாவத்துக்கு கூப்பிட்டு வச்சு சாவடிச்சிட்டலடி..
எவனோடயோ எப்படியோ இருந்துட்டு போ..."

"நோ..நோ..." என அழுதவளது கரங்கள் மெத்தையை பரிதவிப்புடன் தடவி, பின் ஒருவாறு விழிப்புத் தட்ட "நோநோநோ..." என அடித்துப் பிடித்து எழுந்து கொண்டாள் சத்யா.

அந்த ஏசிக் குளிரிலும் கனவின் தாக்கத்தில் உடல் வியர்வையில் குளித்திருக்க அருகில் இருந்த தண்ணீரை எடுத்து பருகியவளுக்கு சற்று ஆசுவாசமாக இருந்தது.

அப்படியே படுக்கையில் தலைசாய்த்தவளது மனமோ உள்ளுக்குள் ஊமையாக கதறியது.

"ஏன்டா என்னைய நீ நம்பல. அவ்வளவு தான் என் மேல வச்சிருந்த நம்பிக்கையா..?" என்றழுதவள் "எ..என்னைய மறந்திருப்பல்ல? எங்கடா இருக்க..? ஒரு தடவை சரி உன் முகத்தை பார்க்கமாட்டேனானு மனசு தவிக்குதுடா... ப்ளீஸ் நான் உன்னை பார்க்கனும்..." என மனதில் தன்னவனுடன் போராடிக் கொண்டிருந்தாள் பாவை.


தொடரும்...


தீரா.
 
Last edited:
Top