• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Dheera

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 17, 2023
Messages
234
ஆஃபிஸ் செல்ல ரெடியாகி வந்த நவீனை சூர்யா தன்னிடம் அழைக்க அவனும் "ம்மா காஃபி..." என்றவாறு போய் அவர் பக்கம் அமர்ந்து கொண்டான்.

சூர்யாவும் நவீனும் கம்பனி விடயம் பேசிக் கொண்டிருக்க "இந்தாப்பா..." என காஃபி கப்பை நவீனின் புறம் நீட்டிய ப்ரனீத்தாவும் உடன் அமர்ந்து கொண்டார்.

நவீனை பரிவுடன் பார்த்துக் கொண்டிருந்த ப்ரனீத்தா "நவீன் கண்ணா இங்கேயே தங்கிக்கோப்பா. உனக்கும் தனியே இருக்க கஷ்டமா இருக்குமில்லப்பா..? நீ இங்க இருந்தா அம்மா உன்னைய நல்லா பார்த்துப்பேன்பா. நீ வந்த பிறகு தான் வீடே நிறைஞ்ச மாதிரி இருக்கு..."என்றார் ஏக்கமாய். அவரின் குரலில் மண்டிக்கிடந்த கவலையில் நவீனின் உள்ளம் கனத்துப் போனது. அவனுக்கும் தெரியுமே ஆத்விக் ஒரு வருடமாக தன் பெற்றோரிடம் கூட சரியாக முகம் கொடுத்துப் பேசுவதில்லையென்பது. இப்போதெல்லாம் ஓரிரு வார்த்தைகளுடன் நிறுத்திக் கொள்கிறான்.

தொடர்ந்தவராக "அதுமில்லடா கண்ணா. நீ இங்க இருந்தன்னா ஆத்விக் கண்ணாவும் கொஞ்சம் சரி சிரிச்சுப் பேசுறான். எங்களுக்கு நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருந்தா அதும் போதுப்பா..." என கண்கலங்கியதில் நவீன் வாயடைத்துப் போனான்.

எப்போதும் போல இந்த பாசமான உள்ளங்கள் கிடைத்ததில் இறைவனுக்கு நன்றி கூறியவன் "ம்மா ப்ளீஸ்மா. நீங்க எல்லாம் என் மேலே வச்சிருக்க பாசத்த சத்தியமா என்னால தாங்கிக்க முடில. உ..உங்க ஆசைப் படி இனி நான் இங்கேயே இருக்கிறேன்..." என்றவன் அப்படியே அவரது மடியில் தலை வைக்க அவனது முடிவில் அகம் மகிழ்ந்தவராக தன் பெறா மகனின் தலையை கோதி விட்டார் ப்ரனீத்தா.

இவ்வளவு நேரமும் இவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த சூர்யாவின் உள்ளமும் நிறைந்து போனது.

திடீரென நவீன் "ஆனால் ஒரு கன்டிஷன்.." என பீடிகைப் போட அவர்கள் இருவரும் புரியாமல் "என்னப்பா..?" என்றிருந்தனர். அவன் கூறிய கன்டிஷனில் சூர்யாவும் ப்ரனீத்தாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே மனமேயில்லாமல் "ஓகே" என்றனர்.

அப்போது தான் ஜாகிங் போய் வீடு வந்து சேர்ந்த ஆத்விக் "என்ன என்னத்துக்கு ஓகே..." என்றானே பார்க்க இப்போது அனைவரும் அவனைப் பார்த்தனர்.

அவனோ கேள்வியைக் கேட்டு விட்டு நவீனைப் பார்த்து கடுப்பாகி "ஆமா இப்படியே மடில தூக்கி வச்சிக்கோங்க.. பாப்பா பாருங்க..." என்கவும் நவீனும் அவனை வார நினைத்து வாயில் விரல் வைத்து சப்பிக் காட்ட ஆத்விக்கிற்கு இன்னும் கடுப்பாகியது. "எரும..." என வாய்க்குள் முனுமுனுத்துக் கொண்டவனிடம் ப்ரனீத்தா "அவனும் நீயும் எங்களுக்கு எப்போவும் கொழந்தை தான்ப்பா.." என்றார் அந்தத் தாய்.

"அவனும் நானும் ஒன்னா மாம்..." என பற்களை நறநறுத்த ஆத்விக்கிடம் நவீன் "இல்லை மச்சி. நீ வளர்ந்த கொழந்தை. நான் வளராத குழந்தை.." என்று விட்டு சிரிக்க

"யாரு நீ குழந்த..? மூஞ்சியப் பாரு. இரு வரேன்..." என கிட்சன் நோக்கி சென்ற ஆத்விக்கைப் பார்த்து அலேட்டான நவீன் "டேய் நவீன்..பக்கி நம்மல சாத்துறதுக்கு என்னத்தையோ எடுக்கப் போய்ட்டு. இப்படியே எஸ் ஆகிடிடா...." என தனக்குத் தானே கௌண்டர் கொடுத்துக் கொண்டு ஓட எத்தனித்தவனை தடியுடன் வந்து ஆத்விக் மறைத்திருந்தான்.

அவனை அதிர்ந்து பார்த்த நவீனும் "டேய் மச்சான் மீ பாவம்டா..எனக்கு சேதாரமாச்சுனா பின்னாடி உனக்குத் தான் கஷ்டம் சொல்லிப்புட்டேன்..." என நைஸாக நழுவப் பார்க்க ஆத்விக்கோ விடாமல் "நீ இருக்கிறது தான்டா எனக்குப் பிரச்சினையே..." என அவனை அடித்துத் வாங்க இருவரையும் பெற்றவர்கள் சுவாரஸ்யமாக பார்த்துக் கொண்டிருந்தனர்.

இவனை மொங்கி எடுத்த ஆத்விக் எதுவும் நடவாததது போல விசிலடித்துக் கொண்டே தனதறைக்கு சென்றிருக்க முதுகைத் தடவி நெளிந்த நவீன் "காட்டெருமை கொதறி வச்சிட்டுப் போய்ரிச்சே..அம்மா என்னா அடி..." என வந்தமர்ந்தான்.

அவனைப் பார்த்து தாய் தந்தை வாயைப் பொத்திக் கொண்டு சிரிக்க அதில் மேலும் சூடாகியவன் "சிரிக்கிறீங்களா..? நல்லா சிரிங்க. ஆமா அவனுக்கு என்னத்த போட்டு வளக்குறீங்க. ப்பாஹ் ஒவ்வொரு அடியும் இடி மாதிரி விழுது.." என அலறிக் கொண்டிருக்கும் போதே ஆத்விக்கும் தயாராகி கீழே வந்து கொண்டிருந்தான்.

விக்ரம் மெதுவாக பெற்றோரிடம் "அவன்ட நான் இங்க ஸ்டே பண்ணுறத சொல்லிறாதிங்க. நான் சப்ரைஸாக சொல்லிக்கிறேன்..." என்றான் நடக்க இருக்கும் விபரீதம் அறியாமல். அவர்களும் அவனது உடன்படிக்கைக்கு தலையை ஆட்டி வைக்க அங்கே வந்த ஆத்விக் "என்ன மிஸ்டர். நவீன் கெளம்பலாமா..?" என்றான் நமட்டு சிரிப்புடன்.

அவனும் "என் கைல ஒரு நாளைக்கு மாட்டுவடி. அப்ப இருக்கு உனக்கு..." என முறைத்துக் கொண்டு விறைப்பாய் நிற்க "அதை மாட்டும் போது பார்த்துக்கலாம் இப்ப வா கெளம்புவோம்..." என முன்னாடி நடந்தவனைப் பார்த்து திக்கென்றிருந்தது நவீனுக்கு.

"ஆத்தி இவன வச்சுக்கிட்டு மனசுல கூட சுதந்திரமா ஒன்னும் நினைக்க முடியாது போல..அவ்வ்..." என மனதில் அழுது கொண்டே அவனும் பின்னாலே சென்றான்.

...


இதற்கிடையில் சத்யாவும் சஞ்சய்யும் ஆபிஸ் வந்து சேர்ந்திருக்க இடையில் இருவரும் பேசிக் கொள்ளவில்லை.

...

ஆபிஸினுள் ஆத்விக்கும் நவீனும் நுழைந்திருக்க காலை வணக்கம் வைத்தவர்களிடம் நவீன் மட்டுமே தலையாட்டி அதனை ஏற்றுக் கொண்டான். ஆத்விக் வழக்கம் போல யாரையும் பாராமல் தன் கேப்பினுள் நுழைந்த நொடி "நவீன்..இமீடியட்டா மீட்டிங் அரேஞ்ச் பண்ணு. அப்பறம் ஸ்டாப்ஸ மீட்டிங் ஹால்ல அசம்பில் ஆக சொல்லு. வித்தின் ஃபைவ் மினிட்ஸ் ஐ வில் பீ தெயார்..." என கட்டளையிட நவீனும் "ஓகே.." என சென்று விட்டான்.

மீட்டிங்கை நல்லபடியா முடித்து விட்டு வெளியே வந்த ஆத்விற்கோ திடீரென ஓர் தடுமாற்றம். மனதில் வெறுமையை உணர்ந்தான். நெஞ்சை தடவி விட்டுக் கொண்டே தனதறைக்குள் வந்தவனுக்கு ஏன் இந்த தடுமாற்றம் எனப் புரியவில்லை. உள்ளமோ எதையோ காணப் போவதாக எடுத்துக் கூற நிலையில்லாமல் தவித்தான்.

அப்படியே கண் மூடி சயனித்திருந்தவனை கலைக்கும் முகமாக உள்ளே கோப்புடன் நுழைந்தான் நவீன்.

ஆத்விக்கின் முகத்தை வைத்து ஏதோ சரியில்லையெனத் தோன்ற "மச்சி என்னாச்சுடா..?" என்றவனை வெற்றுப் பார்வை பார்த்த ஆத்விக், தலைக்குப் பின்னே கைகளை கோர்த்துக் கொண்டு "என்னனு தெரியல.மனசுக்குள்ள ஒரு மாதிரி இருக்கு..." என்றான்.

"ஏன்டா..?" எனக் கேட்டுக் கொண்டே அவன் முன் வந்தமர்ந்தவன் "உடம்புக்கு எதுவும் சரியில்லையாடா...?" என தவிக்க,

"ப்ச் அதெல்லாம் ஒன்னுமில்லடா..? கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா சரியாகிரும்..." என்றவன் தனிமையை நாடினான்.

அதனைப் புரிந்து கொண்ட நவீனும் "ஓகே..நீ ரெஸ்ட் எடு. நான் வெளில இருக்கிறேன். அப்பறம் எதும் தேவைனா கூப்பிடு." என்றவன் வெளியேறப் போய் மீண்டும் உள்ளே வந்து அந்தக் கோப்பை நீட்டி "இந்த டாக்கிமென்ட்லயும் சைன் வச்சிரு..." என்று விட்டு போய் விட்டான்.

அவன் சென்ற பின் அப்படியே கண் மூடினான் ஆத்விக்.

அன்றைய பொழுது அப்படியே கழிய, இரவானதும் வீடு செல்ல வெளியே வந்த ஆத்விக்கின் காரில் ஏறி ஒய்யாரமாக அமர்ந்து கொண்டான் நவீன்.

அவனை ஒரு மார்க்கமாக பார்த்து வைத்த ஆத்விக் "என்ன இன்னைக்கு என் கூட வர.? சார் தான் பிகு பண்ணுவீங்களே. பின்ன என்னத்துக்கு என் கார்ல ஏறி இருக்க.. மாம் வர சொன்னாங்களா என்ன..?" என்றான் யோசனையாக.

அவனைப் பார்த்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்ட நவீனும் வெளியில் "இப்ப உனக்கு என்ன பிரச்சினை. நான் வர்ரதா..? சரி விடு நான் கெளம்புறேன்." என்றவன் பின் "அதுவும் கோவமா கெளம்புறேன்..." என்றான்.

அவனே எதிர்பார்த்திராதது போல "ஓகே டன்.. இறங்கிப் போ மொதல்ல, காத்து வரட்டும்..." என்றான் ஆத்விக்.

"டேய்..டேய் நீயெல்லாம் ஒரு மனுஷனாடா.? எப்படா தொரத்தி விடுவோம்னு இருந்திருக்க..த்தூ..." என அவனை முறைத்து வைத்த நவீனிடம்

"டேய் ஆயா மாதிரி வாய் கிழிய பேசாம இப்போ வர்ரியா இல்லாயா..?" என்று கடுப்படித்தான் ஆத்விக்.

"சரி இவ்ளோ கெஞ்சுற. உன்னையப் பார்க்கவும் பாவமாதான் இருக்க. அதுக்காக நான் ஒரு முடிவுக்கு வந்திருக்கேன்.." என்றான் நவீன்.

"ஓஓ இது வேறயா..? சார் அப்படி என்னத்த முடிவு பண்ணி இருக்கீங்க.." என்றான் ஆத்விக் புருவம் உயர்த்தி.

ஆத்விக் காரை ஸ்டார்ட் செய்ய அவசரமாக மீண்டும் உள்ளே ஏறியவன் "அதனால உன் கூடவே வந்துரலாம்னு முடிவு பண்ணிட்டேன்.." என்றான் பச்சக் குழந்தையாய். பின்ன..!? கோபத்தில் ஆத்விக் காரைக் கிளப்பிக் கொண்டு போய் விட்டால். அந்தப் பயம் தான் பையனுக்கு..ஹா..

பாதையில் மிதமான வேகத்தில் இருவரும் சென்று கொண்டிருக்க அந்தோ பரிதாபம் ட்ராபிக்கிள் சிக்கி விட்டனர்.

"ப்ச்.." என்று சலித்தவனாக பார்வை திருப்பினான் ஆத்விக். அடுத்த நொடி அவனது கண்களில் அத்தனை ரௌத்திரம்..

சரியாக அந்நேரம் பார்த்து சத்யாவும் சஞ்சயுடன் காரில் வந்து ஆத்விக்கின் கார் பக்கம் நிற்க சத்யா இருந்ததோ ஆத்விக் இருந்த பக்கம்.

ஏதோ உந்த திரும்பிப் பார்க்க அங்கே யாரையும் காணவில்லை. பின் மறுபக்கம் திரும்பவும் சிக்னல் விழுந்து இரு கார்களும் இரு வெவ்வேறு பக்கங்கள் வளைந்து சென்றன.

வீடு வந்த சத்யாவிற்கு எதையோ தொலைத்த உணர்வு. மனம் வேறு வெறுமையாக இருந்தது. பெருமூச்சுடன் உள்ளே நுழைந்து கொண்டாள்.

..


பாதையில் கவனமில்லாமல் பாடலொன்றை முனுமுனுத்துக் கொண்டு வந்து கொண்டிருந்த நவீன் அப்போது தான் விழித்துப் பார்த்தான். கார் தங்களது வீட்டுப் பக்கம் போகாமல் வேறு வழியில் செல்ல குழம்பிப் போய் ஆத்விக்கிடம் "டேய் பங்கு எங்கடா போற..?" என்றான்.
அவனிடம் பதில் இல்லை.

நிமிடத்திற்கு நிமிடம் காரின் வேகம் கூடிக் கொண்டே போக ஆத்விக்கின் முகத்தில் தெரிந்த ரௌத்திரத்தில் நவீனிற்கு வார்த்தைகள் வர மறுத்தன.

பின் ஒருவாறு தன்னை சமாளித்துக் கொண்டு ஏதோ கேட்க வர, க்ரீச் என்ற சத்தத்துடன் கார் சறுக்கிக் கொண்டு நின்றதோ பாரின் முன்.

அவனடித்த ப்ரேக்கிள், இருந்த வாக்கிலே முன்னே போய் பின்னே வந்த நவீன் நிமிர்ந்து போர்டை பார்த்தவன் அதிர்ந்து நண்பனின் புறம் திரும்ப, அதற்குள் அவன் இறங்கி உள்ளே நுழைந்திருந்தான்.

ஓடிப் போய் அவனது கையைப் பிடித்து தடுத்தவன் "டேய் இங்க எதுக்குடா வந்தே..?அம்மா தேடுவாங்க வாடா போகலாம்.." என்றவனை திரும்பிப் பார்த்து முறைத்தவன் அவனது கையை உதறி விட்டு சென்று விட்டான்.

தலையில் அடித்துக் கொண்ட நவீனும் ப்ரனீத்தாவிற்கு அழைத்து "அம்மா இன்னைக்கொரு முக்கியமான மீட்டிங் இருக்கு. நாங்க வர லேட்டாகும். எங்களுக்காக வெயிட் பண்ணிட்டிருக்காம தூங்குங்க..." என்றவன் படபடவென பேசிவிட்டு அவர் மறு கேள்வி கேட்பதற்குள் வைக்கப் போக அவர் ஏதோ கேட்கவும் இவனும் "ஆமாம்மா டினர் சாப்பிட்டு தான் வருவோம்..." என்றவன் அழைப்பை துண்டித்து விட்டு ஆத்விக்கைத் தேடிச் சென்றான்.

மனதை அழுத்தும் பாரங்கள் என்றால் மாத்திரமே ஆத்விக் இப்படி மதுவை நாடுவது. அதற்கும் அவனுக்கு நவீன் என்றவொரு ஜீவன் தேவை. ஏனென்றால் இவனின் உலறல்களைக் கேட்பதற்கு. பாவம் அவன் நிலை அப்படி..
இவனிற்கு இந்தப் பழக்கமெல்லாம் இந்த ஒரு வருடத்துக்குள் வந்தது தான். அதற்கு முன்னர் இவனிற்கு கவலைகள் என்றென்பது இருந்தால் தானே.

பாசாமான தாய் தந்தை, உயிர் கொடுக்கும் நண்பன், சில நேரங்களில் பேசிப் பேசியே உயிரெடுக்கும் அதே நண்பன் என்று அவனது வாழ்க்கை தெளிந்த நீரோடையாக சந்தோஷமாகத் தான் சென்று கொண்டிருந்தது. என்று அவளை விட்டுப் பிரிந்து வந்தானோ அன்று தொடங்கியது சனி இவனது வாழ்வில்..
இவனின் இந்தத் தேவையில்லாத கூத்துக்கெல்லாம் நவீன் வேறு துணை. ஆனால் எவ்வளவு தான் நடந்தாலும் நவீன் மதுவை தொட்டுக் கூட பார்க்க மாட்டான். பின்ன யாரு ஆத்விக்கை பத்திரமாக கொண்டு வந்து வீட்டில் சேர்ப்பது. (உன் நல்ல மனசுக்கு அளவே இல்லடா நவீனு. என் கண்ணு கூட வேர்க்குதுனா பாரே..)

"இவனுக்காக ஒவ்வொரு தடவையும் அம்மா கிட்ட பொய் சொல்ல வேண்டியதா இருக்கு..." என மனதில் ஆத்விக்கை தாளித்துக் கொட்டிக் கொண்டே அவன் முன் வந்தமர்ந்தான்.

ஆத்விக் ஒரு பெக்கை அடித்து விட்டிருக்க, இவன் வந்தமர்ந்தவுடன் அவனைப் பார்த்து பல்லைக் காட்ட நவீனும் "மச்சி யூ ஸ்டார்ட்..." என்றவாறு மேசையில் உறங்கி விட்டான்.

ஆத்விக்கும் முகத்தில் கவலையை பூசிக் கொண்டு "டே..டேய் மச்சான்..நா..நான் அவள பார்த்தேன்டா..." என்றான் உதட்டைப் பிதுக்கிக் கொண்டு.

உடனே படுத்திருந்த நவீன் எழுந்தமர்ந்து சீரியஸாகி "என்னடா சொல்லுற..? என் கூடத் தானே இருந்த..? எப்படா பார்த்த? எங்க பார்த்த..?" என படபடத்தான்.

"அ..அந்த ட்ராஃபிக்ல மச்சி.. இதோ இப்படி நின்னிட்டு இருந்தா எவன் கூடயோ..." என தன் பக்கத்தில் சுட்டிக் காட்டியவன் கவலையாக ஆரம்பித்து கோபத்தில் முடித்து வைத்தான்.

நவீனிற்கும் என்ன சொல்வதென்று தெரியவில்லை.

"ம..மச்சி எ..என் லைஃப்ப ஸ்பொயில் பண்ணிட்டு அ..அவ மட்டும் ஹேப்பியா இருக்காடா.. ஆ..ஆனால் ஆனால் அவட ஃபேஸ்ல ஹெப்பினஸ் இல்லையேடா..? ஏன் மச்சான்..?" என்றான் நவீனிடம். அந்த நொடிப் பொழுதிலும் அவளை உன்னிப்பாக கவனித்து அவளது உள்ளத்தைப் படித்தவன் போல கூறுகின்றானே.. இவனை என்னவென்று சொல்வது..!?

தொடர்ந்த ஆத்விக் "நான் அவள உயிருக்குயிரா லவ் பண்ணினேனேடா.. இ..இப்ப கூட லவ் பண்ணிட்டு தானடா இ..இருக்கேன்.." என்றவன் கூறிய செய்தி நவீனிற்கும் புதிதல்லவா. வாயைப் பிளந்து கொண்டு அவன் கூறுவதை பார்த்துக் கொண்டவனிடம் மீண்டும் "பட் அவ என்னைய லவ் பண்ணலடா.. வலிக்குதுடா.. ஏன் மச்சி நா..நான் நல்லா இல்லையாடா...?" என்று நவீனைப் போட்டு உலுக்க சுயத்தையடைந்தவன் "பைத்தியமாடா நீ. அவ இல்லாட்டி என்னடா..? நீ ம்ம் சொல்லுறதுக்காக அவ அவ தவமா இருக்காளுங்க.. நீ என்னடான்னா அந்த துரோகிக்காக குடிச்சு உடம்ப கெடுத்துக்கிற.. போதுன்டா வா போகலாம்..." என்றவன் சலிப்பாக தலையை ஆட்டி விட்டு அவனை எழுப்ப வர வெறியான ஆத்விக் "டேய் நவீன்..நா..நான் அவள திட்டுவேன். ஐ..ஐ ஹேவ் ஃபுல் ரைட்ஸ் ஒன் ஹேர்.. நீ அவள திட்டக் கூடாது.. நீ ஏன் திட்டுற..? பேசாம வாய மூடிட்டு இரு..." என உலறியவனுக்கு நாலு குத்து வயிற்றில் குத்தினால் என்னவென்றிருந்தது நவீனிற்கு.

பின் நவீன் "சரிடா அந்த மகாராணிய நான் ஒன்னும் சொல்லைல்ல. போதுமா..?" என வாயைப் பொத்திக் காட்டியவனுக்கு அவன் கேட்ட கேள்வியில் ஐயோ என்றிருந்தது.

"யாருடா அந்த மகாராணி..? யாரையாவது லவ் பண்ணுறியாடா..? வேணான்டா மச்சி. லவ் இஸ் வெரி டேன்ஜரஸ் டா. அந்தக் கடலுக்குள்ள விழுந்தே, வாழ்க்கை மண்ணாப் போய்ரும்டா. வே..வேணா மச்சான். நாம ரெண்டு பேரும் சன்னியாசியாவே இருந்துருவோன்டா.." என்றான் பால் வடியும் முகத்தைக் காட்டி.

விழி பிதுங்கிய நவீன் "டேய் டேய் ஏன்டா ஏன்..? நீயாச்சும் வாழ்க்கைல ஒரு தடவை லவ்வாச்சும் பண்ணின. நான் அது கூட பண்ணலடா. நான் பொண்டாட்டி புள்ள குட்டினு வாழனும்னு நெனக்கிறது உனக்கு பிடிக்கலையாடா நாதாரி..? நானும் யோசிச்சு யோசிச்சுப் பார்த்தேன். என்னடா நம்ம பின்னால ஒரு பொண்ணும் வர மாட்டிக்குனு. இப்ப தானே தெரியுது ஏழரை நம்ம கூடவே சுத்துதுனு..." என்றவனின் கதறலைக் கேட்க அங்கே யாருமிருக்கவில்லை. ஆத்விக்கோ அப்படியே கவிழ்ந்து படுத்துக் கொண்டு ஏதேதோ உலற, இதற்கு மேலும் பொறுக்காத நவீன் "வேற ஒன்னுமில்ல மச்சி. உனக்கு மப்பு ஏறிட்டு..வா போவோம் மொதல்ல..." என எழுப்ப அதற்கும் "எ..எங்க மச்...சி சாகவா..? நா..நான் வரலடா.. என் ப்ரனி குட்டி எனக்காக சாப்பிடாம காத்திருப்பாங்க.." என்றான் விட்டால் அழுது விடும் முடிவில்.

அதில் கடுப்பான நவீனும் "அது இப்போ தான் சாருக்கு புரிஞ்சுதோ...?" என்றான்.

பின் அப்படியே அவனை கை தாங்களாக தூக்கிச் சென்று காரில் கிடத்தியவன் மறுபக்கம் ஏறி அமர்ந்து கொண்டு காரை வீட்டை நோக்கி கிளப்பி இருந்தான்.


தொடரும்...


தீரா.
 
Top