• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Dheera

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 17, 2023
Messages
234
வீட்டிற்கு வர வாசல் கதவு திறந்திருக்க நவீனிற்கு திக்கென்றது. அதிர்ந்தவாக்கிலே உள்ளே எட்டிப் பார்க்க, நல்லவேளையாக யாரும் அங்கே இருக்கவில்லை. இவர்கள் வருவார்கள் என ப்ரனீத்தா தான் கதவை திறந்து வைத்திருந்தார்.

கை தாங்களாகவே அவனை மாடிப்படியில் கூட்டிச் சென்று, ஆத்விக்கின் அறையை ஒரு கையால் திறந்து கொண்டு உள்ளே சென்ற நவீன், அவனை கட்டிலில் கிடத்தினான். பின் அவனது உடைகளை தளர்த்தி விட்டு ஏசியையும் ஆன் செய்து ஆத்விக்கின் பக்கம் வந்தமர்ந்தவனுக்கு நெஞ்சம் வலித்தது. இன்னும் அவனின் உளறல்கள் நின்றபாடில்லை.

"என் ஆத்விக்கை இந்த நிலைமைக்கு மாத்திட்டல்லடி. உன்ன சும்மா விடமாட்டேன். இங்க தான் இருக்கியா..? எப்படியும் மாட்டுவல்ல..அப்ப இருக்கு..." என்று மனதில் அவளை திட்டித் தீர்த்தவன், முன்னொரு காலத்தில் அவளும் தனக்கு நெருங்கிய நண்பியாக இருந்ததை வசதியாக மறந்து விட்டிருந்தான். இவன் அறியாதவொன்று இன்று தான் எடுத்த சபதமெல்லாம் அவளைக் காணும் போது தவிடு பொடியாகப் போவதை..

பின் உறங்கிக் கொண்டிருப்பவனின் தலையைக் கோதி நெற்றியில் முத்தமிட்டு விட்டு தனதறைக்கு சென்று விட்டான் அந்த உயிர்த் தோழன்.

..

காலை விடிந்தும் இன்னும் உறங்கிக் கொண்டிருந்தான் ஆத்விக். சிறிது நேரத்தில் விழிப்புத் தட்ட கண்களை கசக்கிக் கொண்டு எழுந்தமர்ந்தவனுக்கு லேசாக தலை பாரமாக இருந்தது. தலையை தாங்கியவாறு அப்படியே அமர்ந்திருந்தவனுக்கு அருகில் நிழலாட நிமிர்ந்து பார்க்க அங்கே நவீன் கையில் லெமென் ஜூஸ் உடன் நின்றிருந்தான்.

அவன் அவனை முறைத்துக் கொண்டிருக்க அதனை கணக்கில் எடுக்காமல் ஜூஸை வாங்கிப் பருகியவன், திடீரென நேரத்தைப் பார்த்து விட்டு அறக்கப்பறக்க எழும்பி குளியலறைக்குள் நுழையப் போக, நவீனோ அவன் முன் வந்து குறுக்காக கைகளை கட்டிக்கொண்டு "சார் இப்போ அவசரமா எங்க போறதா உத்தேசம்...?" என வினவ, ஆத்விக்கோ தன்னை தடுத்து நிற்பவன் மேல் கோபம் கொண்டவனாக "டேய் தள்ளுடா.. நேரம் காலம் தெரியாமல் விளையாட்டு வேற.. ஆபிஸ்க்கு டைம் ஆச்சுல..?" என அவனைத் தள்ளி விட

கடுப்பான நவீன் "ஓஓ இவரு பாப்பா பாருங்க நேரங் காலம் பார்க்காம இவர் கூட விளையாட.. ஆளும் மண்டையும்..." என அவனும் தன் பங்கிற்கு வசை பாட

நேரமாவதில் வெறியான ஆத்விக்கும் பற்களை நறநறுத்து விட்டு இடத்தை காலி செய்யப் போக, பின்னேயிருந்து நவீனோ "இன்னைக்கு சன்டே..." என சத்தம் போட அப்படியே ஆத்விக்கின் நடை தடைப்பட்டு நின்றது.

அசடு வழிந்து கொண்டே திரும்பியவன் "ஆமால்ல.. மறந்தே போய்ட்டேன் நவீன்..." எனப் பல்லைக் காட்ட நவீன் தலையில் அடித்துக் கொண்டான்.

பின் ஏதோ நினைவு வந்தவனாக "அதை விடு. நீ என்ன இங்க இருக்க.. எப்போ வந்த..? இங்கேயேவா ஸ்டே பண்ணின?" என்கவும்

"நான் இனி இங்க தான் இருக்கப் போறேன்..." என முகத்தைத் திருப்பினான் நவீன்.

"வாட்...? கம் எகைன்..." என்றான் ஆத்விக். ஒருவேளை தனக்கு தவறாக கேட்டு விட்டதோ என நினைத்து.

"ஏன் நேத்து ட்ரிங் பண்ணினதுல ஹியரிங் அவுட்டாகிட்டா என்ன..?" என்றான் அவனும்.

"டேய் டேய் ஓவரா பண்ணாம சொல்லுடா. இனி இங்கேயேவா தங்கிக்கப் போற...?" என்றவனிடம் ஆமென தலையாட்டி வைத்தான் நவீன்.

ஆத்விக்கிற்கோ கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. தலை கால் புரியாமல் குதித்தவன் "டேய் மச்சி ஆர் யூ சீரியஸ்..? ஐ எம் சோ ஹேப்பிடா.. தங்கியூ மச்சி..." என அவனைக் கட்டிக் கொண்டு கன்னத்தில் முத்தமிட்டவனை
"ச்சீ கருமம் புடிச்சவன். போய்க் குளிடா.." என வாய் விரட்டி விட்டாலும் மனம் அவனது கரிசனையில் கரைந்தது என்பது உண்மையே..

அவனும் சிரித்து விட்டு பின் சீரியஸாகி "ஹேய் மிஸ்டர்.. ஐ எம் யுவர் பாஸ். சோ கிவ் மீ ரெஸ்பெக்ட்..." என அவனது தலையில் தட்டி விட்டு சென்று கதவடைத்துக் கொண்டவனைத் தொடர்ந்து "ஓகே பாஸ்.. வெளில போகலாம் சீக்கிரம் குளிச்சிட்டு வா..." என்றான் நவீன்.

..

சத்யா எழுந்து குளித்து விட்டு ரெடியாகி கீழே வர சஞ்சய் பேப்பர் படித்துக் கொண்டிருந்தான். அவனருகில் வந்தவள் "குட்மார்னிங் டா அண்ணா..." என்றவாறு அவனருகில் அமர்ந்து கொண்டாள்.

அவனும் "குட் மார்னிங்டா குட்டிமா..." என்று புன்னகைத்தவனிடம்
"ண்ணா இன்னைக்கு லீவ் தானேண்ணா. நம்ம வெளில போகலாம். வீட்டுல இருந்து போர் அடிக்குதுணா.. வரீங்களா..?" என்றவளை வேற்றுக் கிரகவாசி போல பார்த்து வைத்த சஞ்சய் "வெளில போகனும் அவ்வளவு தானே? அதுக்கு ஏன் இவ்வளவு பெரிய வார்த்தையெல்லாம் பேசுற..? உங்களுக்கு வராதத ட்ரை பண்ணாதிங்க ஓகேவா.. தயவு செஞ்சு என்னைய வாங்க போங்கனு கூப்பிடாதடா குட்டிம்மா, சகிக்கமுடியல..." என்றவன் வாயைக் கொடுத்து புண்ணாகிக் கொண்டான். அவனுக்கு இலவசமாக கொட்டுக்களை வழங்கியவள் அப்படியே அவனை அணைத்துக் கொண்டாள்.

பின் இருவரும் தயாராகி காரில் அமர்ந்து கொண்டிருக்க எங்க போகனும் குட்டிமா..?" என்றான் சஞ்சய்.

சிறிது யோசித்து விட்டு ஷாப்பிங் மால் போகலாம் எனக் கூறிய தங்கையின் ஆசைக்கிணங்க அங்கேயே சென்றனர்.

..

வெள்ளை சேர்டிற்கு கறுப்பு நிற பேண்ட் அணிந்து தலையை ஒருகையால் கோதியவாறு படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்தான் ஆத்விக். நவீனும் சூர்யாவும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க இவன் வந்தவுடன் மூவருக்கும் உணவு பரிமாறப்பட்டது. அவர்களும் சாப்பிட்டு முடிந்த பின்னர் பெற்றோரிடம் விடைபெற்று விட்டு வெளியே சென்று விட்டனர்.

..

சத்யாவும் சஞ்சய்யும் ஒரு மால் அருகில் வண்டியை நிறுத்த சரியாக ஆத்விக்கும் நவீனும் அங்கே தான் வந்து இறங்கி நின்றிருந்தனர்.

அனைவரும் உள்ளே நுழைந்த சமயம் சத்யா மட்டும் தனியே ஒரு பக்கம் சென்று விட ஆடவர்கள் மூவரும் மற்றைய பக்கம் தங்களுக்குத் தேவையானதை எடுத்துக் கொண்டிருந்தனர்.

சத்யா ஆடைகளைப் பார்த்துக் கொண்டிருக்க அவளைக் கவர்ந்ததோ ஓர் அழகிய பட்டுச் சேலையொன்று. அதனை கையில் எடுத்து தடவிக் கொடுத்தவளுக்கு தன்னை மீறி உதட்டில் ஓர் புன்னகை கீற்றாக வந்து மறைந்தது. பின் சஞ்சயிடம் காண்பிக்கவென அவனைத் தேட, அவன் அவ்விடம் இருக்கவில்லை.

அப்படியே அவள் அவனைத் தேடி மற்றைய பக்கம் வர, அங்கே சஞ்சய்யும் ஆத்விக்கும் பேசிக் கொண்டிருந்தனர். நட்பாகத் தொடங்கிய அவர்களின் உரையாடல் இறுதியில் பிஸ்னஸ் விடயம் பற்றி கலந்தாலோசிக்கப்பட்டுக் கொண்டிருக்க, அண்ணனைத் தேடி வந்த சத்யாவை கண்டு கொண்டான் சஞ்சய்.

அவளுக்கு சப்ரைஸ் தர நாடி, நமட்டுச் சிரிப்புடன் ஆத்விக்கைத் தன் பக்கம் திருப்பி "எனக்கொரு தங்கச்சி இருக்கா. அவள் ஒரு ஆட்டிக்கல்ல உங்கள பார்த்துட்டு உங்கள மீட் பண்ணனும்னு எக்சைட்டா இருக்கா. அவ இப்போ நம்மல நோக்கித் தான் வரா. சோ நான் உங்கள அவளுக்கு சப்ரைஸா இன்ட்ரோ கொடுக்குறேன். ப்ளீஸ் காப்பரேட் வித் மீ... அவட ரியெக்ஷனைப் பார்க்க ஒரு ஆசை.. அது தான்" என கண்ணடித்து கூறியவனிடம் தோள்களை உலுக்கி விட்டு சம்மதமாக தலையை ஆட்டி வைத்தான் ஆத்விக். பெண்களை ஏறிட்டுக் கூட பார்க்காதவன் இவளிடம் மட்டும் பேச நினைத்ததன் காரணம் என்ன..??

சஞ்சய்க்குத் தெரியும் தங்கையின் புது க்ரஷ் இவன் தான் எனவும், இவனைத் தான் தங்களது பெற்றோர் அவளை மணக்க சொல்லி கேட்டிருந்ததும் என்று. இருந்தும் அவளே மனதில் உள்ளதை சொல்லாத போது அவனாக இதனைக் கூற விரும்பவில்லை.

சஞ்சய்யைக் கண்டு கொண்டவள் அவனுடன் திரும்பி நிற்கும் ஆடவர்களைப் பார்த்து நெற்றி சுருக்கி "இவன் யார் கூட பேசிட்டு இருக்கிறான்..?" என்று யோசித்து விட்டு அடியெடுத்து வைத்து வந்தாள்.

அவர்கள் அருகில் வந்தவள் "அண்ணா இது நல்லா இருக்குல்ல.. நான் பெக் பண்ணிக்கவா..??" என்றவளின் குரலில் அதிர்ந்து திரும்பினர் ஆடவர்கள் இருவரும்.

சர்வநிச்சயமாக அங்கே சத்யாவை அவர்கள் எதிர்ப்பார்க்கவில்லை என அவர்களது முகங்கள் காட்டிக் கொடுக்க சத்யாவின் நிலையும் அது தான்.

கிட்டத்தட்ட ஒரு வருடமாக அவள் காணத் தவித்த முகம்.. அவளது கண்களை அவளாலே நம்ப முடியாத திகைப்பில் நின்றிருந்தவளின் வாயோ "ஆத்வி..." என முணுமுணுத்தது.

அந்த ஒற்றை வார்த்தையில் கலைந்த ஆத்விக்கின் முகம் கோபத்தில் செந்தனலாக சிவந்திருந்தது. வெறியில் "டேமிட்.." என்றவாறு சுவரில் ஓங்கிக் குத்த அப்போது தான் நவீனும் திகைப்பிலிருந்து மீண்டிருந்தான். அவனது இதழும் "ஸ்ரீ..." என மெல்ல அசைய, ஆத்விக் ஏதும் பேசாமல் தன்னைக் கட்டுப்படுத்த வழியின்றி விட்டென அவ்விடம் விட்டகழ்ந்தான்.

அவன் சென்றதும் சத்யாவின் கண்களில் இவ்வளவு நேரமும் தேங்கி நின்றிருந்த கண்ணீர் அதன்பாட்டில் கன்னத்தில் வழிந்தது.

ஆம் அவளே சத்ய ஸ்ரீ.. இவர்களுக்கு ஸ்ரீ, வீட்டில் சத்யா எனும் குட்டிமா.

நவீனோ கோபத்தில் இவள் புறம் திரும்பி "உன்னைய அவன் திரும்ப பார்க்க கூடாதுனு தானே உன் லைஃப விட்டு வந்தான். மறுபடி அவன் வாழ்க்கைல ஏன் வந்த..? உன்னால அவன் அனுபவிச்ச கஷ்டம் போதாதா.. அவனை நிம்மதியா வாழ விடமாட்டியா...???" என கோபத்தில் வார்த்தைகளை விட்டிருந்தவனின் பேச்சில் விக்கித்து நின்றாள் சத்ய ஸ்ரீ.

"ந..நவீன்.." என அவள் திக்கித் தினற
"ச்சீ என் பேர சொல்லாத. அந்தத் தகுதியை நீ எப்பவோ இழந்துட்ட. கொன்றுவேன் உன்னை" என விரல் நீட்டி எச்சரித்தவனின் வார்த்தைகளில் மரித்தாள் பாவை.

இவ்வளவு நேரமும் ஏதோ படம் பார்ப்பது போல வாயைப் பிளந்து கொண்டு நின்றிருந்த சஞ்சய் என்ற சிலைக்கு அப்போது தான் உயிர் வந்தது போல.

தங்கையை தவறாகப் பேசுபவனில் கட்டுக்கடங்கா கோபம் வரப் பெற்றவனாய் "ஏய் மைன்ட் யுவர் வேட்ஸ். அவ என் தங்கச்சி..." என கர்சிக்க,
இகழ்ச்சியாய் இதழ் வளைத்த நவீனும் "ஓஓ இது தான் உங்க தங்கச்சியா..? நல்லா வளர்த்து வச்சிருக்கிங்க. லவ் என்ற பேருல ஒருத்தன ஏமாத்திட்டு இன்னொருத்தனுக்கு ஓகே சொல்லிட்டு போய்ட்டா.. ச்சே நீ எல்லாம் என்ன ஜென்மம்...?" என்று முடிப்பதற்குள் அவன் மேல் பாய்ந்திருந்தான் சஞ்சய்.

அவனது சேர்ட் காலரை கொத்தாக பற்றியவன் பற்களை நறநறுக்க சத்யாவோ "நோநோ....நோ..அண்ணா ப்ளீஸ்..." என காதைப் பொத்திக் கொண்டு அழ, சஞ்சய்யின் கைகள் தானாக இறங்கின.

அதில் நவீன் சேர்டை சரி செய்து கொண்டே அவனை முறைக்க, இன்னும் சீற்றம் குறையாதவனாய் சஞ்சையோ "இல்லம்மா என் முன்னாடியே உன்னைய தப்பா பேச எவ்ளோ தைரியம் அவனுக்கு..?" என்று பொங்கினான்.

"ப்ளீஸ் ணா.." என்று அவனிடம் கெஞ்சி விட்டு இயலாமையுடன் நவீன் புறம் திரும்பி "ப்ளீஸ் நவீன் நீயும் என்னைய வார்த்தையால கொல்லாத. அவன் தான் தப்பா புரிஞ்சிட்டு இருக்கான்னா நீயுமா...? எனக்கும் ஃப்ரெண்ட் தானடா நீ.. உனக்கு என்னைப் பத்தி தெரியாதா..? நீயும் புரிஞ்சிக்கலல்ல..? நான் என்னடா பாவம் செஞ்சேன்..?" என்று அழுதாள்.

"நீ என்ன பாவம் செய்யல..? அப்போ, அவன் சொல்லுறதும் பார்த்ததும் பொய்னு சொல்லுறியா..?" என்று கடுப்படித்தான் நவீன்.

இத்தனை நாளும் செய்யாத தப்பிற்கு தண்டனை அனுபவித்தவளது அழுகையெல்லாம் கோபமாக மாறி, அந்த மாலே அதிரும் வகையில் "ஆஆஆஆமாமா.. அவன் பார்த்தது கேட்டது எல்லாமே பொய்ய்... அவன் சொன்னது அதை விட பெரிய பொய்ய்ய்..." என்றவளுக்கு இறுதியில் அழுகை வெடித்திருந்தது.

நவீனும் சஞ்சய்யும் அவளது சத்தத்தில் அதிர்ந்து விட்டனர்.

இருந்தும் நவீனோ "வெல்.. நைஸ் ஜோக் மிஸ். சத்ய ஸ்ரீ. நீ செஞ்ச தப்பை மறைக்க இது என்ன புது ட்ராமாவா..?" என்றான் நண்பனின் மேலிருந்த நம்பிக்கையில் இதற்கடையோரச் சிரிப்புடன்.

சத்யாவோ கலங்கியவளாக "அன்னைக்கு அந்த இன்சிடன்ட் நடந்தப்ப நீ பக்கத்துல இருந்தியா..? இல்லைல..பின்ன எப்படி என் மேல தப்பிருக்குனு நீ சொல்லுவ...?" என்றாள் நவீனிடம்.

நவீனும் அப்போது தான் யோசிக்கலானான். பின்னர் "ஐ ட்ரஸ்ட் ஆத்விக்..." என்றதும் அவனை அடிபட்ட பார்வை பார்த்து வைத்த சத்யா "அப்போ என் மேல நம்பிக்கை இல்லையா..? நான் பொய் சொல்லுறேன்ல..? உன்னத் தவிர எனக்கு ஃப்ரெண்ட் யாராச்சும் இருக்கா..? சொல்லு.. நான் பொய் சொல்லுறேன்ல...?" என விரக்தியாய் சிரித்தவளின் சிரிப்பு நவீனின் உயிர் வரை தீண்டிச் சென்றது.

அண்ணனிடம் திரும்பி குழந்தை போல உதட்டை வளைத்தவள் "நான் பொய் சொல்லுறனா ண்ணா...?" என்று கேட்டவளைப் பார்த்து சஞ்சய்க்குமே கண்கள் கலங்கி விட்டன.

விட்டால் நவீனையும் ஆத்விக்கையும் அடித்தே கொன்று விடும் வெறி அவனுள். "இல்லடா என் குட்டிமா பொய் சொல்லமாட்டானு எனக்குத் தெரியும்..." என்று அவளை தன் தோளில் சாய்த்துக் கொண்டவன் நவீனை பார்வையாலே சுட்டுப் பொசுக்கினான்.

அவளும் "ஆனால் இவனுக்கு தெரியலயேண்ணா..." என்றவளுக்கு கேவல் வர நவீன் துடித்துப் போனான்.

அவனுக்கு இப்போது தான் சந்தேகமே வந்தது.. குழப்பத்தில் நின்றிருந்தவனிடம் கண்களை அழுந்த துடைத்து விட்டவள் "உனக்கு உண்மை தெரியனும்னா கீழே இருக்க காஃபி ஷாப்க்கு வா..." என்றவள் அண்ணனையும் எதிர்பாராமல் கீழே சென்று விட்டாள்.

அவனருகில் வந்த சஞ்சய் "உங்கட லய்ஃபல என்ன நடந்துச்சுனு எனக்கு எதுவுமே தெரியாது. பட் ஒன்னு மட்டும் ஸுவர், என் தங்கச்சி பொய் சொல்லைல்ல. சொல்லவும் மாட்டா. இத்தனை வருஷம் அவ கூட படிச்சிருக்கிங்க. சோ அவ சும்மா சரி பொய் சொல்லும் போது அவட தங் ஸ்லிப் ஆகும். மைன்ட் இட்..." என்றவனும் சத்யாவைத் தேடி சென்று விட்டான்.

"ஆமால்ல இதை எப்படி மறந்தோம். நம்ம பேபி தெளிவாதானே பேசிட்டு போறா..." என்றவன் யோசிக்கலானான்.

"என்னடா நமக்கு வந்த சோதனை. யார் சொல்லுறதை நம்புறது..? பேபியும் உண்மைய தான் சொல்லுறா..அது கன்போர்ம். அப்பறம் ஆத்விக் சொல்லுறதப் பார்த்தாலும் உண்மை மாதிரி தான் இருக்கு.. எங்கயோ சிக்குதே..? ஏதோ மிஸ்அன்டஸ்டேனிங் இருக்கு..
மொதல்ல நம்ம பேபி சொல்லுறதக் கேட்போம். நானும் அவளை மறந்துட்டேன்ல..?" என்றவன் காலம் கடந்து அவளைப் பற்றி சிந்தித்துக் கலங்கினான்.

பின்னர் "இவன் எங்க போனானு தெரிலயே...?" என தலையிலடித்துக் கொண்டே அந்த காஃபி ஷாப்பை நோக்கி நடையைக் கட்டினான்.


தொடரும்...


தீரா.
 
Top