• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Dheera

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 17, 2023
Messages
234
இப்படியே இவர்கள் மூவரினதும் வாழ்க்கை அழகான விடியலுடனும் அமைதியான பொழுதுமாக கடந்து இரண்டரை ஆண்டுகள் சென்றிருக்க அன்று தான் அந்தச் சம்பவமும் நடந்தது.

வழக்கம் போல சத்யா சஞ்சய்யுடன் காலேஜ் வந்திறங்கினாள். அவளுக்கு அண்ணன் ஒருவன் இருக்கிறான் என்பது வரை தெரிந்து வைத்திருந்தவர்களுக்கு அவன் யார் என்பது தெரியவில்லை. அவனை நேரில் கண்டதுமில்லை.

இவள் இங்கே வந்து கொண்டிருக்க அங்கே ஆத்விக்கும் நவீனும் வளாகத்தினுள் கதைத்துக் கொண்டிருந்தனர்.

நடந்து வந்து கொண்டிருந்தவளின் முன் சட்டென புகுந்தான் வருண். சத்யா எல்லோரிடமும் கலகலவென்று வெகுளியாய் பழகுவதால் நண்பனானவனே இவனும். ஆனால் இவளென்னவோ தப்பெண்ணம் இல்லாமல் தான் பழகுகிறாள். ஆனால் அவன் தான் மிகப் பெரிய ப்ளே போய். இவளின் அழகில் மயங்கி தானாக வழிந்து வந்து பேசியவன்.

எப்போதும் போல அவனுடன் சகஜமாக அவள் பேசிக் கொண்டு வர இதனைக் கண்ட ஆத்விக்கிற்கு சுருக்கென கோபம் வந்து விட்டது. அவளைப் பற்றி அவனுக்குத் தெரியும். இந்த கோபமெல்லாம் வருண் மேல் தான். இப்படியே இவள் வர, எதேச்சையாக திரும்பியவள் இவர்கள் இருவரையும் கண்டு விட்டு வருணை விடுத்து அவனிடம் சொல்லிக் கொள்ளாமலே இடையில் கலன்று இவர்களிடம் சென்று விட்டாள். ஆத்விக்கைப் பார்த்த வருணும் பேசாமல் மெதுவாக வேறு பக்கம் சென்று விட்டான்.

வந்தவளை வழமை போல நவீன் சண்டைக்கிழுக்க அவளும் வாயடித்துக் கொண்டிருந்தாள். இவர்களைப் பார்த்த ஆத்விக்கிற்கு ஓர் யோசனைத் தோன்ற திடீரென மாயமாகி இருந்தான்.

வந்தவனோ வருணைப் பார்த்து "ஏய்..." என்றான். அந்தக் கர்சனையில் திரும்பியவன் ஆத்விக்கைப் பார்த்து யோசனையில் நெற்றி சுருக்கினான்.

முகம் கோபத்தில் சிவந்திருக்க "நான் உனக்கு ஆல்ரெடி வார்னிங் தந்திருக்கேன். அப்படி இருக்க என்ன தைரியத்துல ஸ்ரீ கூட பேசுற நீ.. அவ்ளோ கொழுப்பா...?" என முறைத்தவன் அவனது தலையில் தட்ட, கடுப்பான வருணும் தலையைத் தடவிக் கொண்டே "அவ என் கூட பேசுனா உனக்கென்ன...?" என்றானே பார்க்க ரௌத்திரத்துடன் அவனை முறைத்த ஆத்விக்கும் "எனக்கு என்னவா..? ஷீ இஸ் மை கேல்.. இனி ஒரு தடவை அவ கூட நீ பேசுறப் பார்த்தேன், மூஞ்சி மொகரை எல்லாம் பேந்துரும்.. பே..." என்றவன் அவனை விரட்டி விட்டான்.

அவனும் சினத்தை தன்னுள்ளே பொதித்து வைத்தவனாக வேறெதுவும் பேசாமல் சென்று விட்டான்.

இங்கு நடந்தததும் இதற்கு முன் வருணை ஆத்விக் வார்ன் பண்ணியதோ எதுவும் நவீனிற்கு தெரியாது. வருணும் மனதில் ஓர் திட்டத்துடன் ஆத்விக்கை திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்று மறைந்தான்.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த இடைப்பட்ட காலத்தில் ஆத்விக்கும் சத்யாவும் தங்கள் காதலை பரிமாறிக் கொள்ளவில்லை. இவன் சொல்லட்டும் என அவளும், தன் காதலைச் சொன்னால் இருக்கும் அவளது இந்த நட்பைக் கூட இழக்க நேர்ந்து விடுமோ என்று அஞ்சியவனாக அவனும் தங்களது காதலை வெளியே சொல்லிக் கொள்ளவில்லை.

எல்லாம் அன்று வரை தான்.

ஒரு நாள் காலேஜில் மரத்தின் கீழே அமர்ந்து கொண்டு நண்பர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.

"டேய் மச்சி எவ்ளோ நாள் தான் மனசுக்குள்ள வச்சிக்கிட்டு இருப்ப. உன் லவ்வ அவ கிட்ட சொல்லித் தொலைய வேண்டி தானே..." என நவீன் தலையில் அடித்து அலுத்துக் கொண்டான்.

அவனை அழுத்தமாக பார்த்த ஆத்விக் "சொல்லு சொல்லுன்டா.. என்னத்தடா சொல்ல. அவ கிட்ட போனாலே பயமா இருக்குடா..." என்றவனை அற்பப் புழுவைப் போல பார்த்து வைத்த நவீனும் "நீயும் சொல்லமாட்ட.. என்னையும் சொல்ல விடமாட்டிக்கிற..." என்கவும்
"என் லவ்வ நான் தான் மச்சி சொல்லனும்.. நான் சொல்லுவேன்டா என் காதலை இந்த உலகமே அசந்து போற மாதிரி..." என கண்களில் காதலுடன் கூறினான் ஆத்விக்.

"எப்போ..? அவ கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கிட்டு அறுபதாம் கல்யாணம் பண்ணிக்கும் போது, நீங்க பொல்ல ஊன்டிட்டு போயா...." என்றவாறு நினைத்து நினைத்து சிரித்தவனை, அடிக்க வெறியுடன் கீழே குனிந்து கல்லைத் தேடிக் கொண்டிருந்தான் ஆத்விக்.

நவீனோ அலேட் ஆறுமுகமாகி எழுந்து ஓடி விட்டான். ஓடி வந்தவன் எதன் மீதோ மோதி நிற்க திரும்பிப் பார்க்க அங்கே சத்ய ஸ்ரீ நின்று கொண்டிருந்தாள்.

"தடிச்சி இதுக்குத் தான் சொல்லுறது அரிசி மூட்ட மாதிரி சாப்பிடாதேனு.. பாரு என் பாடி டேமேஜ் ஆகிறிச்சு.." என்றவனை கொலைவெறியுடன் முறைத்துப் பார்த்த சத்யா "யாருடா பக்கி தடிச்சி. நீ தான்டா எருமை, முண்டம், கண்ணு தெரியாம வந்து மோதின கபோதி..." என எரிந்து விழுந்தாள்.

"யாருடி கபோதி..? நீ தான் வெள்ளப் பன்னி..." என விடாமல் வாயடித்தவனை எதிர்த்து திட்ட அவள் வாயெடுப்பதற்குள் முந்திக் கொண்ட ஆத்விக் "அடச்சீ வாய மூடுங்க ரெண்டு பேரும். எப்ப பார்த்தாலும் பேபிஸ் மாதிரி சண்டை போட்டுக்கிட்டு..." என கடுப்படித்தான்.

அவனை ஆழ்ந்து பார்த்த நவீன் "உனக்கென்ன பொறாமையா மச்சான்ன்ன்..." என இழுத்துக் கேட்டவனின் இழுவையில் ஆத்விக்கிற்கு வார்த்தைகள் தந்தியடித்தன.

"அ..அ.. அப்படியெல்லாம் ஒன்னும் இல்லையே...எனக்கென்ன பொறாமை வேண்டி இருக்கு..." என்றவன் உதட்டை வளைத்தான்.

சத்யா உதட்டுக்குள் சிரித்து விட்டு பின் தன்னவனின் தினறலை தாங்க மாட்டாது இருவரையும் சமாதானப்படுத்தி க்ளாஸிற்கு அழைத்துச் சென்று விட்டாள்.

இவர்களின் பேச்சை அந்தப் பக்கமிருந்து கேட்டுக் கொண்டிருந்த வருண் "ஓஹோ இப்படிப் போகுதா கதை. இன்னும் இவன் ப்ரொப்பேஸே பண்ணலயா.. வெல்.. அப்போ என் வேலை ஈசியா போய்ட்டு. உங்க ரெண்டு பேரையும் காதலை சொல்லாமலே எப்படிப் பிரிச்சு விடனும்னு ஐ நோ..." என வில்லன் போல நினைத்துக் கொண்டவன் "ஆத்விக் என் மேலயே கை வச்சிட்டல, உனக்கிருக்குடா..." என்று கருவியவனாக போய் விட்டான்.

...


மதிய நேரமதில் சத்ய ஸ்ரீ லைப்ரரியில் இருக்க திடீரென அவள் முன் வந்து நின்ற ஆத்விக் "ஸ்ரீ..!! உனக்கிட்ட கொஞ்சம் பேசனும். திஸ் இஸ் மை நம்பர். நைட் கால் பண்ணுவேன்..." என்றவன் வந்த வேகத்தில் கடகடவென பேசிவிட்டு மறைந்து போனான்.

இவளுக்குத்தான் நடப்பது கனவா நனவா என்றிருந்தது. கனவில்லையே.. நிஜம் தானே என அவன் தந்து விட்டு சென்ற காகிதம் அவள் கையில் இருக்கிறதே. சற்று நேரத்தில் திடுக்கிட்டு கலைந்தவள் கையிலிருந்த காகிதத்தைப் பார்க்க உடல் சிலிர்த்தடங்கியது. இத்தனை நாட்களும் ஒரு சின்னச் சிரிப்பு, இரண்டு வார்த்தைகளுடன் தன்னைக் கடந்து செல்லும் தன்னவன் இன்று பேசியது மாத்திரமல்லாமல் தன் கையைப் பிடித்து காகிதத்தை வேறு திணித்து விட்டு சென்றதை நினைக்க நினைக்க வானத்தில் ரெக்கையில்லாம் பறந்தாள் பாவை.. அதில் வெட்கப் புன்னகை வேறு அவளது இதழ்களில்..

வெளியே வந்த ஆத்விக் நவீனைக் கட்டிக் கொண்டு ஒரு குத்தாட்டம் போட்டான்.

நவீன் ஹைஃபை போட்டுச் சிரிக்க அவனிலிருந்து விடுபட்டவன் "விடுடா மச்சி. அவ பக்கத்துல போக நான் பட்டபாடு எனக்குத் தான் தெரியும்..." என்றவாறு நெஞ்சை தடவி விட்டவன் பெரு மூச்சு விட, அவனை புன்னகையுடன் எதிர் நோக்கிய நவீன் "லீவ் இட் டா. எல்லாம் சரியா வரும்.. வில் சீ..." என்றவனைப் பார்த்து ஆமோதிப்பாய் தலையசைத்தான் ஆத்விக்.

..


சிறிது நேரத்தில் க்ளாஸில் யாருமில்லாததைப் கவனித்த வருண் மெதுவாக உள்ளே நுழைந்தான். வந்தவன் சத்யாவின் இடத்தை ஆராய, அவளின் பையை கண்டு விட்டான். அதனருகில் சென்றவன் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு பையைத் திறக்க உள்ளே வீற்றிருந்தது அழகான டயரியொன்று. அதனை கையில் எடுத்தவனை "டோன்ட் டச் இட்..." என்ற வாசகம் வரவேற்க மர்மப் புன்னகையுடன் திறந்தவனின் முகம் அப்படியே மாறி விட்டது.

உள்ளே ஆத்விக்கின் அழகிய புகைப்படத்தின் கீழே "மை லவ்..." என்றிருந்தது. கண்ணில் அனல் தெறிக்க அதனை வெறித்தவன் யாரோ வரும் சத்தம் கேட்டு அவசர அவசரமாக அதனை எடுத்துக் கொண்டு வெளியேறி இருந்தான்.

இங்கே வகுப்பிற்கு வந்த சத்யா பையினுள் புக்சை எடுத்து வைக்கும் போதே அதனைக் கண்டாள். ஆம் அவளின் டயரி தொலைந்திருந்தது.

அனைத்து இடங்களிலும் தேடி முடித்தவளுக்கு இறுதியில் அழுகையாக வந்தது. ஆத்விக் தந்த முதல் பரிசல்லவா.. கலங்கினாள் காரிகை..

அதனை நவீன் எடுத்தாள் கூட அவனை உண்டு இல்லை என்று செய்து விடுவாள். அதனை ஆத்விக்கும் கவனித்து தான் இருக்கிறான். அதனாலே அவளுக்கும் தன்னில் இஷ்டமிருக்கிறது என்பதை நம்பினான் ஆடவன். ஆனால் இன்று...? அதனைக் காணவில்லை.

...

வருணோ ஆத்விக்கை தேடி சென்று கொண்டிருக்க அவன் கண்ணில் பட்டான் தனியே நின்று கொண்டிருந்த ஆத்விக்.

கேலி நகையுடன் அவனை நெருங்கினான். யதார்த்தமாக அந்தப் பக்கம் திரும்பிய ஆத்விக் தன்னை நோக்கி வரும் வருணைக் கண்டு "இந்த அம்மாஞ்சி எதுக்கு நம்மல தேடி வரான்...?" என்றெண்ணியவன் அவனையே பார்த்துக் கொண்டிருக்க, நேரே வந்தவன் "ஆத்விக் உனகிட்ட ஒன்னு சொல்லனும்..." என பீடிகைப் போட அவனும் இவனின் உள்குத்தறியாது "ம்ம் டெல் மீ..." என்றான்.

"அது வந்து.. நீயும் சத்யாவும் லவ் பண்ணுறீங்களா..?"

"ஆமா.. அதுக்கிப்போ என்ன..?"

"ஓஓஓ" என்றவன் "நீ அவ கூட பேச வேண்டானு சொன்ன. நானும் ட்ரை பண்ணினேன். பட் சத்யா தான் நான் பேசாம இருக்கவும் இன்னைக்கு ரொம்ப வொரி பண்ணிட்டா. நீ எனக்கு ஃப்ரெண்டுக்கு மேல. சோ பேசாம இருக்காத எனக்கு ஒரு மாதிரி இருக்குனு கண் கலங்கினாள்..." என்றான் பொய்யை உண்மையைப் போல முகத்தை வைத்துக் கொண்டு.

அவனை முறைத்த ஆத்விக் பின் தாங்கமாட்டாது சிரித்து விட்டான்.
"நைஸ் ஜோக்.. யாரு ஸ்ரீ சொன்னாளா அப்படி..? போடாங்.." என்றவன் கடைசியில் பார்வையாலே அவனை எரித்து வைத்தான்.

"நீ நம்பமாட்டேனு எனக்கு தெரியும். அதனால தான் உன் கிட்ட ஒரு இன்பர்மேஷன் தரனும்னு வந்தேன்..." என்றவனைப் பார்த்து கேள்வியாய் புருவத்தை உயர்த்தினான் ஆத்விக்.

"சத்யா இப்ப கொஞ்சத்துல என்னைய தனிய மீட் பண்ணனும்னு கேன்டீன் வர சொல்லி இருக்கா. ஏதோ பர்ஸ்னலா பேசனுமாம்..." என தெரியாதவன் போல உதட்டைப் பிதுக்கியவனின் சேர்ட் காலரை பாய்ந்து போய் பிடித்திருந்தான் ஆத்விக். "யாரைப் பத்தி என்னடா பேசுற நான்சென்ஸ்.. உன்ன.. " என்றவன் கடித்த பற்களுக்கிடையே வார்த்தைகளை கடிந்து துப்ப அவனது கையை தட்டி விட்ட வருண் "ஹேய் டியூட் கூல்.. சரி நான் கேக்குறதுக்கு பதில் சொல்லு. அவ உன்னைய லவ் பண்ணுறேனு அவ வாயால சொல்லி இருக்காளா...?" என்றதும் ஆத்விக்கின் கண்களில் ஓர் தேடல். அவனின் அமைதியை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட வருண் "இல்லைல.. ஓகே அத விடு. நவீன் கூட பேசுற அளவு சரி உன் கூட பேசுறாளா...? அதுவுமில்லைல..?" என்றான் அவனை ஆழ்ந்து பார்த்தவாறே..

இவன் சொல்வதும் உண்மை தானே. அவள் தன்னுடன் அதிகம் பேசுவதில்லையே...
யோசிக்கலானான் ஆத்விக். அவள் பேசாததன் காரணம், அவள் தன்னை விரும்புவதால் பெண்களில் இருக்கும் இயல்பான நாணத்தினால் தான் என்பதை சிந்திக்கத் தவறினான் ஆடவன்.

அவனை குழப்பி விட்ட வருண் அவனை மேலும் யோசித்து தெளிவடைய விடாமல் "அப்போ அவளுக்கு உன் மேல லவ் இல்லைனு தானே அர்த்தம். மேபி யாரையாச்சும் அவ மனசார லவ் பண்ணலாம்ல. அதனால கூட நீ காதலா பார்க்கவும் உன்னைய தவிர்த்திருக்கலாம்ல..?" என்றவனை சட்டென ஏறிட்டுப் பார்த்தான் ஆத்விக்.

இவனின் இந்த ரியெக்ஷனே போதும் என நினைத்த வருணும் மனதுக்குள் சிரித்து விட்டு "ஓகே டியூட். உன் நல்லதுக்காக தான் சொன்னேன். நீ அவள லவ் பண்ணுறேனு தெரியும். இப்போ நான் போய் ஆகனும். அங்க சத்யா எனக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பா..." என்றவனின் முகம் திரும்ப எத்தணிக்கும் போது அந்நியன் அவதாரம் எடுத்திருந்தது.

ஆத்விக்கின் நிலை தான் பரிதாபமாக இருந்தது.


தொடரும்...


தீரா.
 
Top