• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கடவுளிடம் நேரடியாக பேசு ☀️

சக்திமீனா

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Nov 27, 2021
Messages
92
சாமியின் தரகனாக வேலை செய்வதாக சொல்லிக் கொண்டு, அயோக்கியத்தனம் செய்யும் சாமியார்களுக்கும் ஜாதி மதம் கிடையாது என்பதை உணர்த்தும் ஒரு சம்பவத்தைப் பற்றி, என்னுடைய சிறு மூளைக்கு எட்டிய, சிறு கருத்தும், சிறு அலசலும்.

சமீபத்தில் வெளியான ஒரு செய்தி, பார்த்த போது எரிச்சலையும் கோபத்தையும் உருவாக்கியது.

கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு பகுதிக்குட்பட்ட, கொல்லங்கோடு ஃபாத்திமா நகரில் வசிக்கும் கிறிஸ்தவ தந்தை, பெனெட்ரிக் ஆன்ட்ரோ என்ற அயோக்கியன், அழகிய மண்டபம், பிலாந்தலை புனித விண்ணேற்பு அன்னை திருத்தலத்தில் ஃபாதரியராக இருக்கிறார். ஃபாதரியார் வேஷத்தில் இருக்கிறான் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.

அவன் சிறு குழந்தைகள் மற்றும் சிறு பெண்களை தன் பேச்சால், வயப்படுத்தி, அவர்களை ஆபாசமாக வீடியோ எடுத்து, அவர்களை மிரட்டியதாக, அந்த செய்தி வெளியானது.

29 வயதான அந்த பொறுக்கி தந்தை, பெண்களுடன் வாட்ஸ் ஆப்பில் பேசி அவர்களை வயப்படுத்தி, இந்த அக்கிரமத்தை செய்துள்ளான். வீடியோ கால் மற்றும் நேரிலும் பெண்களை ஆபாசமாக்கி வீடியோ பதிவு செய்ததாக, போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

80 பெண்களிடம் பேசி, மயக்கி, இருநூறுக்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களை எடுத்து வைத்துள்ளான் இந்த சதைப்பித்து கொண்ட, மதம் பூசிய ஃபாதிரியார்.

இதில் எனக்கு கோபம் எதுவெனில், அந்த பொறுக்கி வயப்படுத்துகிறான் என்றால் முட்டாள் தனமாக அவனிடம் வயப்படும் பெண்களின் குற்றத்துக்கு என்ன தண்டனை தருவது.

இப்படித்தான் சமீபத்தில் ஈஷா மையத்திற்கு யோகா கற்றுக் கொள்ள சென்ற இளம்பெண் மாயமாகி, பின் மரணித்த செய்தி, இணைய தளங்களில் பரவலாக வளம் வந்தது.

சில நாட்கள் பேச்சுக்கு பிறகு அந்த செய்தி நீர்த்து போனது போலவே, இந்த கேடு கெட்ட ஃபாதரின் பொறுக்கித்தனம் பற்றிய செய்தியும் நீர்த்து போகும். கசப்பானாலும் அதுவே உண்மை.

இவ்விரு குற்றங்களுக்கும் ஆரம்பப்புள்ளி, பெண்கள் சாமியார் மீது வைத்திருக்கும் நம்பிக்கைதான்.

இது போன்ற பெண்களிடம் கேட்க என்னிடம் ஒரு கேள்வி உண்டு.

நீங்கள் நம்பிக்கை கொள்வது சாமியிடமா?

நான் தான் சாமி என்று சொல்லிக் கொள்ளும் தரகனிடமா?

ஆத்மார்த்தமாக கொள்ள வேண்டிய தெய்வ நம்பிக்கைக்கு தரகன் எதற்கு?

உங்களில் யார் ஒருவன் வேசியிடம் செல்லவில்லையோ, அவன் இந்த வேசி மீது கல்லெறியுங்கள்” என்ற வாசகத்தின் மூலம், விபச்சாரியும் இந்த சமூகத்தில், தான் செய்த தவற்றிலுருந்து, திருந்தி வாழ தகுதியுடையவள் என்று உலகிற்கு சொன்னவர் யேசு கிறிஸ்து.

இங்கு இயேசு கிறிஸ்துவின் சித்தாந்தம் தான் கடவுள். மனிதர்களின் நம்பிக்கை, அந்த விலை மதிப்பில்லாத சித்தாந்தத்தின் மீது தான் இருக்க வேண்டும்.

இடைத்தரகன் மீது அல்ல….

இயேசு கிறிஸ்துவின் சித்தாந்தத்தை கொலை செய்தவன், எப்படி கிறிஸ்துவின் போதகராக இருக்க முடியும்?

இவன் ஒரு அயோக்கியன்.

இது போன்ற அயோக்கியர்களை சாமியாக நம்பி, சாமியை அசிங்கப்படுத்துபவர்களே முதல் குற்றவாளிகள்.

என்னுடைய தகப்பனார் பெயர் சி.மாணிக்கவாசகம். அவர் கடைந்தெடுத்த ஆன்மீகவாதி. தெய்வப்பற்றும், தெய்வ நம்பிக்கையும் மட்டுமே வாழ்க்கை என்று வாழ்ந்து கொண்டிருப்பவர்.

பாண்டிக்காட்டு குடும்பத்தில் பிறந்து, கிடக்கறி உண்பதில், மிகுந்த பிரியம் கொண்டு வளர்ந்த அவர், அசைவம் உண்பதை நிறுத்தி பதினைந்து வருடங்கள் ஆகிறது.

அவர் எனக்குள் தெய்வ நம்பிக்கையை விதைத்த போது, எனக்கு அவர் சொல்லி தந்த பாடம் ஒன்று உண்டு.

"நீ கோயிலுக்கு செல்வது பூசாரியை தேடி இல்ல. தெய்வத்தை தேடி. உன் வேண்டுதலும், விவாதமும், கண்ணீரும், கோபமும், சிரிப்பும், பணிவிடையும் தெய்வத்துகிட்ட தான் இருக்கணும். பூசாரிகிட்ட இல்ல. கடவுள் கிட்ட நேரடியாக பேசு. தரகன் மூலமா பேச முயற்சி செய்யாத!!".

இதை விட மிகச்சிறந்த பக்திக் கோட்பாடு, இவ்வுலகில் இருக்குமென்று நான் நம்பவில்லை.

என்னுடைய கடவுள் என் ஆன்மாவை விட தூய்மையானவன். என் அம்மாவை விட அன்பானவன். எல்லோருக்கும் சரி சமமான பொதுவுடைமை இயற்கையை பரிசளித்தவன். உலக வாழ் உயிர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பவன்.

யாரோ ஒருவர் விதித்த விதிகளுக்குள், யாரோ எழுதிய சாஸ்திரத்துக்குள், யாரோ எழுதிய அலங்கார வடிவத்துக்குள், என் கடவுளை அடைத்து விட முடியாது.

அப்படிப்பட்ட என் கடவுள், ஒரு சாமியாரின் சொல்லுக்குள் அடங்குவான் என்று நம்ப நான் முட்டாள் இல்லை.

நம்பி ஏமாந்து கொண்டிருக்கும் முட்டாள்கள், தங்கள் தெய்வ நம்பிக்கையை கற்பழிப்பவர்கள். அவர்களே முதல் குற்றவாளிகள்.



சக்தி மீனா......
 
Top