• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கடைசி வரை(ரி)யில் - நிறைவுப் பகுதி

Joined
Jan 3, 2023
Messages
76
நிறைவு அத்தியாயம்

வெளியே வந்தவன் ஒரு நிமிடம் நிற்க பின்னாலே வந்த சுஜீதா "வாங்க வண்டியில போகலாம்" என்றபடி வண்டியினில் ஏறினாள்.
அவனோ "எங்க இருந்து என்னை கூட்டிட்டு வந்தயோ அங்கயே விட்டுடு சுஜீதா" என்று சொல்ல அவளும் அவன் மனநிலை புரிந்தவளாய் வண்டியினை எடுத்தாள்.

இருவரும் கிளம்புவதைப் பார்த்த அரவிந்த் முகம் மட்டும் சற்று இறுகி பின் சரியானது. "வாசு நீ லக்கி" என்று அவன் இதழ்கள் முணுமுணுத்தது...


விரைந்து சென்று கொண்டிருந்தது சுஜீதாவின் கரங்களில் அந்த வண்டி. ஆயினும் வாசுவின் கவனமெல்லாம் சுஜாதாவின் மீதே குவிந்திருந்தது.

"என்ன வாசு என்ன யோசிக்கிறீங்க?"

"இந்தளவுக்கு அவ உருகி காதலிக்க நான் என்ன அவ்வளவு வொர்த்தா அப்படின்னு தான் யோசிக்கிறேன்"

"அதுலாம் யோசிச்சு பார்த்துதான் காதல் வருமா வாசு..." என்று அவள் கேட்க அவனோ அமைதியானான்.

அதுசரி சுஜாதாவிடமும் சரி அவளின் அச்சாய் இருப்பவளிடமும் சரி எதிரில் இருப்பவர் பேசி ஜெயித்துவிட முடியுமா...!!!

"என்ன சைலண்ட் ஆகிட்டீங்க. உங்க ரைட்டிங் ஸ்டைல் எனக்குப் பிடிக்கும். அண்ட் உங்களையும் தான். பட் அவளை மாதிரி புத்தி பேதலிச்சு எல்லாம் கிடையாது..." என்று அவள் சொல்ல அவனோ நிம்மதியாக உணர்ந்தான்.

கூடவே அவள் "சுஜாதாவுக்கு கொஞ்சம்..." என்பதற்குள்
"இல்லை எனக்குப் புரியுது சுஜீ... நான் பார்த்துக்கிறேன். அவளைப் பத்தி நீ கவலைப்பட வேண்டாம்" என்றான் அவன்.

"தாங்க்ஸ் வாசு... அவ மனநிலை ரொம்ப மோசமாகிடும்னு எங்களுக்கு ரொம்ப பயமா இருந்தது. பட் நீங்க அவகூடவே இருந்தா அவ நார்மலாகிடுவா" என்று சொல்லவும் "அவ நார்மல் தான். நான் தான் அவளைப் பத்திப் புரிஞ்சுக்காம கொஞ்சம் அப்நார்மலா நடந்துக்கிட்டேன்" என்று அவன் சொல்லவும் "ம்ம்...அது உங்க லவ்வர்ஸ் பாடு... என்னை விட்டுடுங்க. அதுசரி அங்கதான் இருப்பான்னு நீங்க எப்படிச் சொல்லுறீங்க..." என்று அவள் கேட்க

"என் மனசு சொல்லுது அந்த வீட்டுல... அதுவும் அந்த ரூம்ல தான் இருப்பான்னு... ஆனா என்னை விட்டுட்டு போயிடுவாளோன்னு ஒரு பயம் இருக்கு. ப்ளீஸ் கொஞ்சம் பாஸ்ட்டா போயேன்" என்று அவன் சொல்ல அவளோ இன்னும் விரைந்து வண்டியினை அந்த வீட்டின் முன் நிறுத்தினாள்....


"அண்ட்...இன்னொரு விசயம் வாசு. அவளை அரெஸ்ட் பண்ணுவேன்னு சொன்னது சும்மா தான்.. அந்த கொலையை அவ பண்ணலைன்னா நான் பண்ணியிருப்பேன்.. அப்படிப்பட்ட மோசமான பிறவி தான் அது... ஒரு பொண்ணை நிர்வாணமா வீடியோ எடுத்து அவளை மிரட்டி வரவச்சு யூஸ் பண்ணிக்க பார்த்திருக்கான்...ச்சை... சரி விடுங்க அதெதுக்கு இப்போ.... அந்த கேஸை எப்படி முடிக்கணும்னு எனக்குத் தெரியும்... சோ நீங்க அவளைப் போய் பாருங்க... அவகூட சந்தோசமா இருங்க... கடைசி வரைக்கும்..." என்றவள் கைநீட்ட அவனும் அவள் கைப்பிடித்து குலுக்கிவிட்டு உள்ளே அவசரமாய் ஓடினான்.

அறையின் உள்ளே ஓடியவன் அவளுக்கென்று இருக்கும் அறையினுள் வேகமாய் நுழைந்தான்.

இருட்டு மட்டுமே நிரம்பியிருக்கும் அவ்வறையினை அவன் வெளிச்சமாக்க.... தரையில் இவன் புத்தகத்தினையே அவனாய் பாவித்து அதன் மேல் வீழ்ந்து கிடந்தவள் தெரிந்தாள்.


"சுஜாதா" என்று ஓடிவந்து அவன் அள்ளிக் கொள்ள அவள் கையிலிருந்து பெருமளவு இரத்தம் வழிந்து அவனெழுதிய புத்தகங்களின் வெண்மையினை வண்ணமாக்கியிருந்தது.

அச்சிவப்பு வண்ணத்தில் அவள் காதல் சிதறியோடுவதை அவனால் தாங்கவே இயலவில்லை. "சுஜாதா" என்று அவளை அவன் உலுக்க அவள் மயக்கத்தில் ஆழ்ந்து போயிருந்தாள்.


அவளுக்குப் பக்கத்தில் அதே டைரி... கூடவே அவன் புகைப்படங்கள்..,
அதில்,

தொல்லையாயிருந்தவள்
தூரமாய் செல்கிறாள்...
ஆயினும்,
இவனையே சுற்றி வருவாள்
ஆவியாய் மாறியாவது...!

இவனைப் பாராது
இவனெழுத்தைப் படிக்காது
இவனை யுணராது
இருப்பதென்பது
இவளுக்கு நரகம்தான்
இருந்தாலும்
இவன் நிம்மதிக்காய்
இதையுமேற்று
இருளுலகம் தேடி செல்கிறாள்...!

வாழுங் காலமெல்லாம்
வாசுதேவனின் நினைப்பிலே
வாழவேண்டுமென நினைத்தவள்
வரமுடியாத தூரம் செல்கிறாள்..
அவன் நலனுக்காக..!
அவனுக்காக....!!!


இறையாய் இருந்தவனை
இரையாய் உண்டு களித்தவள்
வாசுதேவனின் நிலையற்ற மனதின்
நிலையைக் குறித்தே சிந்திக்க
அந்த உணர்வின் அழுத்தம் தாங்காது உயிர் விட துணிகிறாள்...!!

இரவு பகலென
எந்நேரமும்
அவனையே முன்னிருத்தி
அவனை சிந்தை விட்டகலாது
பத்திரமாய் இறுக்கிப் பிடித்தவளின்று பிடியை தளர்த்தி விட்டு
பிடிவாதமாய் தனித்து கிளம்புகிறாள்...!!

அவணெண்ணத்தில் என்ன ஓடுகிறதென்று தெரியாது..
இருந்தும்,
அதில் ஏதுவும் பிழையிருந்துவிடுமோ
என்ற அச்சத்திலே
இவள் மனம் வேதனை தாளாமல் வாழ்க்கையின்
கடைசி அத்தியாயத்தினை
எழுதத் தொடங்குகிறது...!!

வெகு ஆசையாயெழுதிய
முதல் அத்தியாயம்
இவளைப் பார்த்து
சிரித்தப் படியே இருக்க
முடிவுரையை உயிரைக் கொண்டே முடித்துக் கொள்கிறாள்...!!!

கடைசி வரையில்
வாசுதேவனுடன் இருக்குமந்த பாக்கியம் இவளுக்குக் கிட்டவில்லை..‌
அதனால்,
இந்த கடைசி வரியினை
கண்ணீராலல்ல செந்நீராலெழுதி கரைந்து போகிறாள் காற்றென....!!!

சாரி VNA.....


இவ்வாறு அவள் எழுதி வைத்திருக்க அதைச் சுற்றிலும் இரத்தம் குளமென தேங்கியிருந்தது...


"எமோசனல் ஸ்டுப்பிட்" என்று வார்த்தைகளை கடித்துத் துப்பியவன் உடனே அவள் இரத்தம் வழியும் கரத்தினை சுற்றி கட்டிட்டான்.

ஏனோ அவன் தேகமெல்லாம் நடுங்கிக் கொண்டிருந்தது. அவள் தன்னை விட்டு போய்விடுவாளா என்று அவன் மனம் பதட்டத்தில் வேகமாய் துடித்துக் கொண்டிருந்தது...

"சுஜாதா சுஜாதா" என்று அவன் அலறித் துடிக்க அவளோ கண்விழிக்காது அசையாது உணர்விழந்து கிடந்தாள்...

"கடைசி வரையில் உன் காதலினை ஏற்றுக் கொள்ளக் கூடாதென இருந்த என் வைராக்கியத்தினை உடைந்தெறிந்து கடைசிவரையிலும் உன்னோடு இருக்க வேண்டுமென்ற எண்ணத்தினை என் மனதில் விதைத்தாய். கடைசி அத்தியாயத்தின் கடைசி வரியில் தோற்று வாழும் காதலை எழுதிய இவன் இப்போது உன்னால் சேர்ந்து வாழும் காதலை எழுதுகிறேன்... பென் கொண்டல்ல இந்த பெண்'மை' கொண்டு...

உன் கழுத்தில் தாலியைப் பார்த்த கணம் அடுத்தவன் மனைவியாய் எண்ணி அதிர்ந்து போனது உண்மை.. நீயும் அதை ஒத்துக் கொண்டு அரவிந்த் என்பவன் கணவன் என்றாய்.. துரோகத்தின் வேதனையில் துடிக்குமென் இதயம் வெடித்து அப்போதே துடிப்பைப் நிறுத்தாதிருந்ததே என்னளவில் ஆச்சர்யம் தான்...
இருந்தும்
உன் காதலினை,
உன்னை,
இழிவுப்படுத்திய பின்னுங் கூட கலங்காமல் அதை களங்கமென எண்ணாமல் என்னை மாற்றுவதிலே குறியாய் இருந்தாய்...!

நீ வைத்த குறி தப்பாது என் இதயத்தினை மாற்றி மாங்கல்யத்தினை தாண்டிய மனதினை பார்க்க வைத்தது... கூடுதலாய் மாங்கல்யத்தினையும் பார்க்க வைத்தது...!

யார் நீ...?
பெண் என்பவள் இப்படித்தான் என்றிருக்கும் ஆயிரத்தெட்டு கட்டுப்பாடுகளையும் உடைத்தெறிந்து
உள்ளத்தில் உள்ளதை உண்மையாய் உரைக்கிறாய்...!

நிஜமாய் சொல்ல வேண்டுமென்றால் உன்னளவிற்கு எனக்குத் தைரியமில்லை...
காரணம்,
நான் தாலியினை நினைத்தே தயங்க நீ தயங்காது தன் விருப்பத்தினை தெரிவித்து திமிராய் நிற்கிறாய்...!

ஏற்றுக் கொள்ள முடியாது,
எனக்கிருக்கும் கொள்கைகளையும் விடமுடியாது என்ன செய்ய என்றே தெரியாது நரக வேதனையில் அனுதினமும் நான் அவஸ்தையில் நெளிய அன்பினை காட்டி காட்டி அன்னையின் பாசத்தினை கொட்டி இவன் மனதினை உன் வசப்படுத்திக் கொண்டே மாயம் செய்கிறாய்...!

உன் வேதனையின் வெப்பம் தாளாமல் உன்னிடம் நான் தஞ்சமடைய தாலியின் வடிவம் அப்போதுதான் வடிவாய் என் விழியில் பட்டுத் தொலைந்து...
இவள்,
அடுத்தவன் மனைவியல்ல,
அந்த அரவிந்த் மனைவியல்ல,
இந்த அநிருத்தனின் மனைவியென அறுதியிட்டுக் கூறியது...

மனதில் மட்டுமல்லாது
மாங்கல்யத்திலும் இந்த வாசுதேவனின் அடையாளமான குழலினையும்,
பெயரையும்
சேர்ந்தே சுமக்கும் உன்காதலின் புனிதத்தை நெருங்கும் தகுதி சுத்தமாய் எனக்கில்லை...

வெகு சாதாரணமானவனை இப்படியா உயரத்தில் ஏற்றிவைப்பாய்..! என் நெஞ்சம் விம்முகிறது...
"

என்றவன் கரம் அவள் ஆடைக்குள் ஒளிந்துக் கிடந்த அந்த மாங்கல்யத்தினை வெளியே எடுத்து பார்த்தது.

சற்றுமுன் நடந்த கூடலில் தான் அவன் அந்த தாலியின் பின்னால் என்ன இருந்தது என்பதினையே முழுதாய் பார்த்தான்.

அவனுக்கென்றே இருந்த கொள்கை கோட்பாடுகள் அனைத்தும் அதிலே தவிடு பொடியானது.

இதை இல்லீகல் அப்பயர் என்று சொன்னால் சொன்ன வாயினை எரிதழலால் சுடவேண்டும்... என்று அவனையேத் திட்டிக் கொண்டான்..

அப்படியென்ன அதிசயம் அதன் பின் இருக்கிறது. எஸ் அதிசயம் தான்‌.. அந்த தாலியின் பின்பக்கம் வாசுதேவ நாராயண அநிருத்தனுக்கு சொந்தமான புல்லாங்குழல் செதுக்கப்பட்டிருக்க அதன் கீழே மிகச்சிறிய அளவில் VNA என்று எழுதியிருந்தது.

அதைக் கண்ட மாத்திரத்தில் இத்தகைய காதலுக்குத் தாம் தகுதியானவன் தானா என்றே தான் அவனுக்குத் தோன்றியது. அப்போதே கேட்டிருப்பான்.

ஆனால் அவள் அப்படியெனில் தாலி இப்போது தடையில்லை என்று தெரிந்ததால் வந்த காதலா என்று கேட்டுவிட்டால்???...

அதற்காகவே தாலியை விட்டுவிட்டு தங்க மங்கையினை ஏந்திக் கொண்டான்...
ஆனால் இவள் இப்படி ஒரு முட்டாள்தனமான காரியத்தினை செய்து வைப்பாளென அவன் எதிர்பார்க்கவே இல்லை...

"சுஜாதா உன் காதல் எதையும் எதிர்பாராது, உன்னையே தர நானோ சுயநலமாய் இருந்துவிட்டேனோ என்ற எண்ணமே கடைசிவரையில் விடாதென்னை துரத்துமே... இப்போது அதனுடன் இந்த பாவமுமா... வேண்டாம் சுஜாதா... இப்பிறவிக்கு அதொன்றே போதும்.. நீயும் என்னை வதைத்து சிதைத்துவிட்டு சென்றுவிடாதே... உன்னை நீங்கி இவ்வுலகில் நான் இருக்க மாட்டேன்... என்னை விட்டுத் தனியாய் செல்லாதே... அன்னையோடு இருந்த நாட்களில் அவளில்லாது நான் இருந்தில்லை. ஆனால் அவள் என்னை விட்டுச் சென்றுவிட தனிமையில், துயரில் எத்தனையோ நாட்கள் நான் உறங்காது ஏக்கத்திலே ஏங்கிப் போய் அழுதிருப்பேன் என்று உனக்கும் தெரியும் தானே... இப்போதும் மீண்டும் அப்படி அழ வைக்க வேண்டும் என்று உனக்கேன் அவ்வளவு ஆசை?... வேண்டாம் இந்த பாவியினை மன்னித்து உன் பாதத்தில் என்னையும் சேர்த்துக் கொள். உனக்கென இருக்கும் உயிர் உன்னோடே போகட்டும்" என்றவன் அவள் பாதத்தினை சேர்த்து பிடித்துக் கொண்டான்...


"ஷ்...ஷ் VN..A..." என்ற குரல் அவ்வேளையில் ரொம்பவும் மென்னையாய் ஒலிக்க அவனோ "சுஜாதா" என்றபடி அவள் முகத்தின் அருகே வந்தான்...

அவன் கண்களில் இருந்த கண்ணீர் அவன் முகத்தில் இருந்த கலக்கம் வேதனை ரணம்... அவன் தேகத்தில் இருந்த நடுக்கம் அத்தனையும் அவள் கண்கள் ஸ்கேன் செய்து முடிக்க அவள் வாய் திறந்து பேசினாள்...

"VNA ஐ லவ் யூ.. உங்களுக்கு இது இல்லீக......" என்றவளின் வாயிலே பட்டென்று அடித்தான் அவன்.

"லூசு மாதிரி பேசாத... இதுதான் இல்லீகலா... யூ ஸ்டுப்பிட்" என்றவன் தாலியினை உயர்த்திக் காட்ட அவளோ "இதனால தான் ஏத்துக்கிட்டீங்களா" என்று கேட்க "இதுக்காகத்தான் ஏத்துக்கிட்டு இருப்பேன்னு நீ நம்புனா... அது உண்மையாத்தான் இருக்கும் சுஜாதா" என்றான் ஒரு மாதிரியான வலி நிரம்பிய குரலில்...

"ஷ்ஷ் வாசு... என்னதிது... எனக்குத் தெரியும் VNA வைப் பத்தி... VNA always right... நீங்க என்கிட்ட உங்களைப் ப்ரூப் பண்ண வேண்டிய அவசியமில்லை.Don't Justify yourself to me.. நான் ஜஸ்ட் கேட்டேன்" என்றாள் அவன் முகத்தினை கையிலேந்தி...

"எப்படி நீ இப்படி இருக்க. இவ்வளவு அன்பு... வாய்ப்பே இல்லை சுஜாதா.. உன்னை நினைச்சா பெருமையா இருக்கற அதே சமயம் ரொம்பப் பொறாமையாவும் இருக்கு" என்றவனது குரல் கலங்கி வெளிவந்தது..

"பொறாமையா..."

"ம்ம் ஆமா.. இந்த சாதாரணமான ஒருத்தனுக்காகவா நீ இவ்வளவு தூரம் உன்னை காம்ப்ளீக்கேட் பண்ணிட்டு.. உன்னையே எனக்குத் தந்து....." என்றவனை தடுத்தவள்

"ஷ்ஷ் VNA... என்னை எமோசனல் ஸ்டூப்பிட் அப்படின்னு சொல்லிட்டு நீங்கதான் அப்படி நடந்துக்கிறீங்க..." என்றபடி அவனை அப்படியே இழுக்க அவன் அப்படியே நிலைதடுமாறி அவள் மீதே விழுந்தான்.

"ஏய் என்ன பண்ணுற..." என்றவன் கேட்க "எனக்கு நீங்க வேண்டும்" என்றாள் அவள்..

"எடுத்துக்கோ...I'm always yours" என்றவனை அவளது கரங்கள் ஆசையுடன் வருடியது.

"சு...ஜா...தா" என்று பிதற்றியவனுக்கு அப்போதுதான் அவள் கரத்தின் காயம் நினைவுக்கு வந்தது.

உடனே விலகி "ஏய் கையில காயம் இருக்கு.. மொத அதுக்கு மருந்து போட்டு இன்செக்சன் போட்டுக்கோ... அப்பறமா என்னைக் கொஞ்சலாம்..." என்க அவளோ "அதெனக்கு வலிக்கலை. இதுதான் வலிக்குது" என்று அவனின் விலகலை சுட்டிக் காட்ட... "ஸ்டுப்பிட்" என்றவன் அவளை கட்டிக் கொண்டான்.


"VNA எனக்காக ஒரு கவிதை ப்ளீஸ்..." என்று அவன் முகத்தினை நிமிர்த்தி கேட்க
"இப்பவா.. இந்த நேரத்துலயா" என அவன் முகம் சுருக்கினான்...

"ம்ம் ஆமா.. சொல்லுங்க அதோட பேச்சை (கதையை) முடிச்சுக்கலாம்" என்று சுஜாதா மையலுடன் சொல்ல "உன்னை" என்றவனை தடுத்தவள்

"ஷ்ஷ்...கவிதை" என்க

"இந்த வாசு-
ஒரு பறவை.
நீள அகலமாய்
என்முன்
நீண்டு பரந்து
விரிந்திருப்பதெல்லாம்-
சுஜாதா எனும்
ஆகாயம் மட்டுமே.
நான் பறப்பதெல்லாம்
அவளோடே-
அவளுள்ளே-
ஆக...
அவள் இருக்கிறாள்
எப்போதும் எனக்குள்ளே...!!!

இந்தப்பறவை-
அவ்வப்போது
அமர்வதுண்டு-
சில மரங்களில்..
சில மனங்களில்..

இருந்தும்
ஒருபோதும் ஓரிடத்திலும்
நிலைத்ததில்லை.

அடுத்தென்ன
அடுத்தென்ன
என்றலையு மிந்த
ஊர்க்குருவி
ஓர்நாள்
பருந்தாகியது...

காரணம்,
இறைவியொருத்தியின் தரிசனம்
இவன் கண்ணுக்கு விருந்தாகியது..!

இது காதலில்லையென மறுத்தவன் இதுதான் காதலின் உயர்வு நிலையென புரிந்து அவளைப் புணர்ந்து காதல் செய்கிறான்...!!!

இப்போதிவன் மனம்
சொல்வதெல்லாம்- கடைசிவரையில் இவளோ உன் கதி...!
கூடவே,
இந்நேரத்திலுங் கூட
கவிதை கேட்டு
உணர்வுகளை தடுத்து
விளையாட்டுக் காட்டுவது
இவள் செய்யும் சதி...!!!

சதிகாரியின் சாகத்தினை
சலிக்காது எதிர்கொள்ள நினைத்தே அவசரமாய் இதை முடிக்கிறேன்...!
அதன்பின்,
மொத்தமாய் இவளை குடிக்கிறேன்...!!!


என்றவனின் இதழ்கள் வழக்கம் போல் அவளுடன் கலந்து காணாமல் போனது.. அது கரையும் வரை இருவரும் விடப்போவதில்லை...

வாசுதேவ நாராயண அநிருத்தனின் காதல் சுஜாதாவின் மனநிலையினை மாற்றுமா???... இல்லை அவனையே மாற்றுமா??? என்பதெல்லாம் பற்றி இனி நமக்கென்ன கவலை... அது அவர்கள் பாடு.... ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாக சொல்லலாம்...
வெறித்தனமாய் காதல் செய்தவளின் காதல் இனியும் தொடரும்

கடைசி வரையில்......!!!!!



வாழ்க வளமுடன்
நன்றி
😍


 

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,938
அம்மாடியோவ் செம முரட்டு காதல் சேர்ந்தது பல போராட்டங்களுக்கு பிறகு. சூப்பர் சூப்பர் சகி ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
 
Top