• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.
Joined
Jan 3, 2023
Messages
76
அத்தியாயம் 24

"இப்படி பேசிப் பேசி தான் இந்த நிலையில உக்காந்துருக்க. வெல் நான் இங்க இருந்து போகலைன்னாலும் கூட பரவாயில்லை. ஆனா நீ நினைக்குறது எப்பவுமே நடக்காது. அண்ட் இன்னொரு விசயம் என் அம்மாவினை பத்தி இனியொரு தடவை பேசுன அப்பறம் நான் இன்னும் மோசமானவனா மாற வேண்டியிருக்கும். ஜாக்கிரதை..." என்றவனின் குரலில் என்ன இருந்ததோ அது அவளை பலமாய் தாக்கியது...


"இதுக்கு மேலேயும் மோசமானவனா மாற என்ன இருக்கிறது VNA... எல்லா மனுசனுக்குள்ளயும் ஒரு மிருகம் ஒளிஞ்சுட்டு இருக்கும். அதுக்கான சமயம் கிடைக்கும் போது அது தன்னை வெளிப்படுத்தும். இது உங்களுக்கான வாய்ப்பு VNA... அதனால என்னை உங்க கூரிய பற்களால் குத்திக் கிழிக்கலாம்.. நான் வேதனைப்படுவதை இமைக்காது பார்த்து ரசிக்கலாம்... ஆனால் இதெல்லாம் கொஞ்ச நாள் தான். அந்த மிருகத்துக்கு ஆயுள் கம்மி. அதுவும் உங்களைப் பத்தி எனக்கு நல்லாவே தெரியும்" என்றவள் தன் கையை எடுத்தபடி அவனையோர் பார்வை பார்த்தாள்.


"தெரியலை... உனக்கு என்னைப் பத்தி தெரியலை... ஜஸ்ட் என்னோட பயோவைப் பார்த்து என்னைப் பத்தி எல்லாமே தெரிஞ்சு வச்சுருக்கதா உன்னை நீயே ஏமாத்திட்டு இருக்க. ஓ...ஷிட்... இதெல்லாம் நான் எதுக்கு உன்கிட்ட போய் சொல்லிட்டு இருக்கேன்... சீ... எனக்கு உன்கிட்ட பேசவும் பிடிக்கலை உன் மூஞ்சை பார்க்கவும் பிடிக்கலை. தயவு செய்து போயிடு என் லைப்பை விட்டு... இனி எப்பவும் உன்னைப் பார்க்கக் கூடாதுன்னு தான் நினைக்கிறேன்..." என்றான் அவன் சிறிதும் உணர்ச்சி இல்லாது...

"பார்த்துட்டே இருப்பீங்க VNA" என்றதும் அவன் அங்கிருந்து சென்றுவிட்டான்.


அவன் கோபம் வலி விரக்தி அனைத்தையும் அவன் எழுத்தின் மடியில் புதைத்து கரைத்துக் கொண்டிருக்க அவளோ இன்னமும் காயத்திற்கு மருந்திடாது வெறுமனே அமர்ந்திருந்தாள்...

---------------------------

சு...தா கமிஷ்னர் அலுவலகத்தில் அமர்ந்து அவள் முன் கிடந்த அந்த ரிப்போர்டினையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்...

அந்த ரிப்போர்ட் அவள் எதிர்பார்த்தது போல் தான் வந்திருந்தது. அந்த காலேஜ் ஐடியில் இருந்த கைரேகையும் நேற்று அவளுக்கு கிடைத்த அந்த ஊசியில் இருந்த கைரேகையும் ஒன்றுதான்.

மர்டர் பண்ணதும் வாசுவை கடத்துனதும் ஒரே ஆள் தான்... நம்மகிட்டயே விளையாட்டு காட்டுறாங்களே... என்றவளின் முகத்தில் சன்னமாய் ஒரு புன்னகை ஒன்று ஒட்டியிருந்தது...

----------------------------------

அவள் போன் விடாமல் அடித்துக் கொண்டிருந்தது. இருந்தும் அவள் கவனம் அதில் குவியவில்லை...

நெற்றியிலிருந்து உருகி வழிந்த இரத்தம் இன்னமும் உரைந்தபாடில்லை... மீண்டும் போன் அடிக்க அவளெடுத்து பேசினாள். என்ன பேசினார்களோ அவளோ இறுகி வெறும் உம் கொட்டிக் கொண்டிருந்தாள்.

"இல்லை நான் வரலை" என்று அவள் சொன்னதும் எதிர்முனை என்ன சொன்னதோ உடனே அவள் "வர்றேன்" என்று சொல்லிவிட்டாள்..


நேராக தன் அறைக்குள் சென்றவள் கீறியிருந்த தன் நெற்றியினை கண்ணாடியில் பார்த்தாள். காயம் ஆழமாக இருந்தது. கண்டிப்பாக தையல் போடத்தான் வேண்டும்.

"இதற்கு மருந்தே போடக்கூடாது என்று தான் நான் நினைத்திருந்தேன். ஆனாலும் போட்டுவிட்டு கிளம்பும்படி ஆகிடுச்சே..."என்றவாறு தையலை போட்டுக் கொண்டாள் அவளாகவே...


முடித்தவள் பேண்ட் எய்ட் போட்டு மீண்டும் தன்னை கண்ணாடியில்பார்த்துக் கொண்டாள். அவள் தோற்றம் வெகுவாக கலங்கியிருந்தது. இருந்தாலும் பரவாயில்லையென அவள் கதவினைப் பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டாள்.


வெகுநேரம் கழித்து அவனறையில் இருந்து வெளியே வர அவள் இல்லாது வெறுமையாக இருந்த இடத்தினைப் பார்த்தவன் ஏக நிம்மதியாக உணர்ந்தான்.

அது ஒரு மாயை... அவளில்லாது அவனால் ஒருபோதும் நிம்மதியாக இருக்க முடியாதென்பது அவனுக்கு என்று தான் புரியப் போகிறதோ!....


ஏனோ சட்டென்று அங்கிருந்து விலகிவிட வேண்டுமென்று அவனுக்குத் தோன்றவே இல்லை. அவள் நிலையினை பார்க்கையில் கோபம் வரும் அதே சமயம் பரிதாபமாகவும் இருந்தது. கூடவே அவனுக்கு அவளுடன் இருந்த அந்த நேரமும் வந்துவிட... தலையில் ஓங்கி அடித்து தன்னை தானே சமன் படுத்திக் கொண்டான்.


அவன் எதிர்பார்த்த அன்பு கிடைத்த நேரத்தில் அதை அனுபவிக்க இயலா நிலையில் நிறுத்திய அவளின் மீது கோபம் கோபமாய் வந்தது. அது ஒரு வித சுயநலமென்பது அவனுக்குப் புரிந்தது. இருந்தும் இப்படி நினைக்காமலும் இருக்க முடியவில்லை...


கல்யாணம் ஆனபிறகு எப்படி அவ என்னை லவ் பண்ணுறேன்னு சொல்லலாம். இது கேவலமான விசயமா அவளுக்குத் தோணவே இல்லையா... இதுக்கு என்ன பண்ண... என்று அவன் அவனையே கேட்டுப் பார்க்க "அவளுக்கு நிதர்சனத்தைப் புரியவை வாசு" என்று மூளை பதில் உரைத்தது.

"நானா???"

"ம்ம் ஆமா"

"நான் சொன்னா கேக்க மாட்டாளே??"

"நீ சொன்னா மட்டும் தான் கேப்பா வாசு... அவளுக்குப் புரியுற மாதிரி எடுத்துச் சொல்லு வாசு. கண்டிப்பா அவ புரிஞ்சுக்குவா" என்று மீண்டும் மூளை அவனிடம் சொல்ல அவன் கொஞ்சம் யோசிக்க ஆரம்பித்தான்...

வெகுநேரம் அதே சிந்தனையில் உழன்றவனுக்கும் அதுதான் சரியென பட்டது. அவளிடம் பொறுமையாய் எடுத்துச் சொல்ல வேண்டும். மறுபடியும் கோபமாய்..... அய்யோ அவ தலையில இருந்து ரொம்ப இரத்தம் வந்துச்சே... என்று தீடிரென அவன் முகம் மாற
"ஏய் வாசு அவமேல இரக்கப் படாத. அது உனக்குத்தான் ஆபத்து.. அவகிட்ட பேசி மட்டும் புரியவை. அதுல வேற எந்த உணர்வையும் கலந்துடாத" என்று கடுமையாய் அவனை எச்சரித்தது அவன் மூளை...


இப்படியே நேரம் சென்றுக் கொண்டிருக்க அவனோ அங்கயே படுத்து உறங்கியும் போனான். சற்று நேரங் கழித்து அவன் விழிதிறந்து பார்க்கையில் அவனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த சுஜாதா தான் தென்பட்டாள்.


சட்டென்று எழுந்தவன் நேராக நிமிர்ந்து அமர அவளோ அப்போதும் அவளின் பார்வையினை மாற்றவே இல்லை.

கொஞ்சம் பொறுமையாக அவன் "சுஜாதா" என்று அழைக்க "என்ன VNA" என்றாள் அவள்.

"எனக்கு உன்கிட்ட கொஞ்சம் பேசணும்" என்றவன் பார்வை அவனையறியாது அவள் நெற்றியினை நோக்கி நகர "பெரிய காயமெல்லாம் இல்லை VNA... just நாலு தையல் தான்.. வலிக்கவும் இல்லை" என்று சொன்னவளின் குரலில் இருந்த ஏதொவொன்று அவனைத் தாக்கியது... இப்போது அவன் மனம் உண்யையிலே குற்ற உணர்வில் தலைகுனிந்தது.

எந்த சூழ்நிலையிலும் எவரையும் வார்த்தையாலும் காயப்படுத்திவிடக் கூடாது என்றிருக்கும் நான் அவளை அடித்திருக்கிறேன்... இரத்தம் வருமளவிற்கு தாக்கியிருக்கிறேன் இது நான் தானா... பெண்களுக்கெதிரான அநீதியினை எழுதும் நானே இவ்வாறு நடந்துக்கொண்டிருக்கிறேனே... அப்படியெனில்.... அதற்குள் அவன் வேதனைப்படுவதை, குற்ற உணர்வில் நொறுங்குவதை தாங்க இயலாத சுஜாதா...

"VNA இந்த சூழ்நிலையில் யாரா இருந்தாலும் கோபப்படத்தான் செய்வாங்க. நீங்க கோபப்பட்டதை நான் எப்பவும் தப்பா நினைச்சுக்க மாட்டேன். ப்ளீஸ் அதுக்காக நீங்க வருத்தப்படாதீங்க. உங்களைப் பத்தி எனக்கு நல்லாவே தெரியும்...இந்த காயத்தைப் பத்தி நீங்க கவலைப்படாதீங்க... ஏன்னா எனக்குண்டான காயம் அது தன்னால ஆறிடும். அது என்னவோ தெரியலை என்ன மாயமோ தெரியலை.. எனக்கொன்னுமே ஆவறதில்லை..." என்று அவள் சொன்னாலும் கட்டையும் மீறி துளிர்த்திருந்த செந்நீரில் அவன் சினத்தின் தாண்டவம் நன்றாகவே தெரிந்தது...


"சாரி" என்று அவன் சொல்ல "i don't want such a stupid things like sorry, plz, advise...just love and grace enough for me" என்றாள் அவள் பட்டென்று.

"அது என்கிட்ட இருந்து கிடைக்காது வெரி சாரி"

"Stupid" என்று அவள் முணுமுணுக்க

"எஸ் உன்னைப் பத்தி சரியாத் தெரியாம நான் .... பண்ணித் தொலைச்சுட்டேன். நான் ஸ்டுப்பிட் தான்" என்றான் அவன்.

"சரி விடுங்க ஏதோ பேசணும்னு சொன்னீங்க..." என்று அவனிடம் அவள் கேட்க அவனோ "சுஜாதா டூ பீ ப்ராங்... என்னால இதை சத்தியமா ஏத்துக்க முடியாது. உன்னோட உணர்வுகளை என்னால புரிஞ்சுக்க முடியுது. ஆனா என்னோட உணர்வுகளையும் நீ புரிஞ்சுக்கணும். வீ ஆர் அடல்ஸ். நல்லது கெட்டது எதுன்னு நமக்கு நல்லாவே தெரியும். நமக்கு நல்லது இல்லாதது இதுதான்னு தெரிஞ்ச உடனே அதை விட்டு விலகிடணும். இல்லை இதுதான் எனக்குப் பிடிச்சுருக்கு. நான் இப்படித்தான் இருப்பேன்னா... அது உன் இஷ்டம். ஆனா அதுக்காக என்னோட எல்லைக்குள்ள நீ வரக்கூடாது. நான் இனி ஒதுங்கிட்டேன்" என்றான்.


"என்நிலை விளக்க இரண்டொரு நிமிடம் கூட ஆகாது. ஆனால், நான் எதுவும் சொல்ல மாட்டேன். என் கழுத்தில் கிடக்கும் தாலி பற்றி எதையும் என் வாயால் நான் கூறமாட்டேன். நான் ஏன் சொல்லனும்?. என் காதலுக்கான தகுதி இதால குறைஞ்சுடும்னு நீங்க சொன்னா ஆச்சா????... நான் சொல்லனும் VNA... என்னோட காதல் மாதிரி இந்த உலகத்துலயே இல்லை. Irrespective of marital status.... அதுக்கு இதைப் பத்தியான எந்தவித கவலையும் இல்லை... நான் மனதார உங்களைத்தான் விஎன்ஏ விரும்புறேன்.. வெறித்தனமா விரும்புறேன். என் வாழ்க்கையில் வேறெந்த ஆணையும் இந்த நிலையில் வைத்துப் பார்க்க என்னால் முடியாது. அது உனக்கு ஏன் புரிய மாட்டேங்குதே." என்று தவிப்புடன் கூறியவளின் வார்த்தியிலிருந்த வாய்மை அவனைச் சுட்டது... அது அவனை வாயடைக்க செய்தது...


"எனக்கும் அந்த பழைய உறவுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை" என்று அவள் சொல்ல "உன் வீட்டுக்காரர் பேர் என்ன?. நான் அவங்ககிட்ட பேசுறேன்" என்று அவன் அமைதியினை விடுத்து கேட்க "புரோக்கர் வேலை எதுவும் பார்க்குறீங்களா" என்றாள் அவள்.

"சுஜாதா"

"விஎன்ஏ ரிலாக்ஸ். சும்மாதான் சொன்னேன்... அவர் பேர் அரவிந்த்... ஹீ இஸ் அ டாக்டர்...." என்று அவள் சொல்ல சு....தா அந்த டாக்டர் அரவிந்த் அறையில் இருந்து வெளியேறிக் கொண்டிருந்தாள்....
-----------------------------

Coming to the Point.
"The Most Beautiful Curve in a Woman's Body, is her Smile!" என்றுரைத்த Bob Marley-இன் வரிகளை, "is her Brave Smile" என்றெழுதிடவே என்னாசை.

ஆனாலது நடப்பதற்கு, இங்கே நிறைய மாற வேண்டும். நிறைய சிந்திக்க வேண்டும். சிந்திப்பது என்பது, என் போன்றொருவன் இதுபோல் ஏதோவொன்றை எழுதுகையில், Just பாராட்டி கடந்து விடுவதோடு இல்லாமல், அதைத்தாண்டி தான் யார், என்ன செய்கிறோம்/செய்யப்போகிறோம் என்பதான சுய சிந்தனை.

You know Why?
"A Woman is Unstoppable, after she realizes who she is..!"

என்றிருந்ததை நிவேதிதா வாசித்து முடிக்கையில் அவள் விழியினோரம் நீர் கசிந்திருந்தது. உடனே புத்தகத்தினை மூடி வைத்தவள் முகம் தெளிவாக இருந்தது. இடிந்து போய் இருக்காது இனி என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்கத் தொடங்கினாள் நிவேதிதா...

இதை சுஜாதா மட்டும் பார்த்திருந்தால் இவ்வாறு எழுதியிருந்தாலும் எழுதியிருப்பாள்....!!!

இலக்கென்பதே கிடையாது
ஏமாற்றங் கண்டு
விரக்தியின் விளிம்பில்
இருப்பவளையும் இவனெழுத்து மாற்றுகிறதென்றால் இவனை
இறைவனென சொல்வதில்
தவறெதுவும் இல்லையே...!

சபைதனில்
தலைகுனிந்த திரௌபதியை
தலைநிமிரச் செய்வதன் அன்று அவனென்றால்
அடையாளமின்றி தவித்தவளையே
அடையாளமாய் மாற்றிய
இவனே இன்று அவனுமானான்!!! வாசுதேவனானான்....!!!

ஊக்கந்தந்து ஆக்கம் செய்யுமவன்
எழுத்தின் பெருமை மூவுலகம்
ம்ஹூம்
அதையுந் தாண்டி
பயணப்பட வேண்டுமென்பதே
அவனால் எழுதும்
அவனுக்காய் எழுதும்
அவனையே நினைக்கும்
அவனாலயே உருகுமிவளின் வேண்டுதல்...!!!
ஆசை...!
விருப்பம்...!
கனவு...!
 
Top