• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.
Joined
Jan 3, 2023
Messages
76
அத்தியாயம் 25

உனக்குள் நானே உருகுமிரவில் உள்ளத்தை நான் சொல்லவா
மருகும் மனதின் ரகசிய அறையில்
ஒத்திகை பார்த்திடவா
சிறுகசிறுக உன்னில் என்னை தொலைக்கும் வழி சொல்லவா


என்ற பாடல் காரினில் ஒலித்துக் கொண்டிருக்க அவளோ வாசுதேவனின் நினைவில் வண்டியினை செலுத்திக் கொண்டிருந்தாள்.

இரவின் இருட்டு எங்கும் நிறைந்திருக்க அவன் தொட்ட இடங்கள் அனைத்தும் தணலாய் கொதித்துக் கொண்டிருக்க மீண்டும் அவனின் தகிக்கும் அணைப்பினையே எதிர்பார்த்து அவள் தேகம் ஏங்கியது.


சட்டென்று கழுத்தில் இருந்த தாலி செயினை அவள் வெளியே எடுத்துப் பார்க்க அவளது இதழ்களோ புன்னகையில் வளைந்தது.

இதைப் பார்த்ததும் அவன் தந்த ரியாக்சனை மனம் மீண்டும் ஒரு முறை ரிவைண்ட் செய்து பார்த்தது.


ஒரு கரம் ஸ்டீயரிங்கை பிடித்திருக்க மற்றொரு கரமோ அவளது நெற்றியை தடவிக் கொண்டது. அவனிடம் வலிக்கவில்லை என்று சொல்லிவிட்டாள் தான். ஆனால் அவளுக்கு அக்காயம் பயங்கரமாக வலித்தது. அவன் முன் மட்டும் அவள் வலியினை அவள் காட்டிக் கொள்ள முற்படவே இல்லை. அவனைப் பற்றி அவளுக்கேத் தெரியும். இதை நினைத்து அவன் உண்மையிலே வருந்துவான் என்று...

அவன் கோபத்தினை எப்படிக் காண்பித்தாலும் தாங்கிக் கொள்ளும் மனநிலையில் தான் அவள் இருக்கிறாள் காரணம் அவளுக்கு அவனின்றி எதுவும் இல்லை...

தன் வீடு தன் வேலை இவையுண்டு
தானுண்டென சின்னதோர் கடுகு போல் உள்ளங் கொண்டே திரிந்தவளை
தானுண்டு தன்னெழுத்துண்டென
தனியொருவனாய் தரணியில்
தன்னெழுத்தினால் மாயம் செய்து
தனக்கென ஓர் அடையாளங் கொண்டு
தன்னிகரில்லாது விளங்குமொருவன்
தன்னோடு இழு(ஈர்)த்துக் கொண்டான்...

ஓட்டு மொத்த வசீயத்திற்கும் சொந்தக்காரனவன் எழுதுமிந்த எழுத்துக்கள் அஞ்சனம் பூசும் அணங்கிவள் அகத்தினை மொத்தமாய் மயக்கி மகுடிக்காடும் அரவமாய் நெளிய வைத்தே நிலைகுலைய செய்கிறது...!

அவ்வசீயத்தின் தன்மையில்
தள்ளாடுமிவளின் தேகத்தினை தாங்கிட
சடுதியில் நீ வந்து நிற்பாயென
நினைத்து நினைத்தே நெஞ்சம் ஏங்கிப் போய் சுவாசிக்கவும் மறந்து வாசிக்க மட்டுமே செய்கிறது...!

நயனங்களில் உன்னெழுத்து விழுந்த மாத்திரத்தில் உயிரெழுத்தெல்லாம் உயிர்கொண்டு என்னுயிரை உருவியெடுக்கிறது என்னிலிருந்து...!

இதென்ன இம்சையென உதறவும் முடியாது
விலகவும் விடாது
ஏனடா எனை இப்படி சோதிக்கிறாய்...!

அவனியில்
ஆயிரம் உணர்வுகள்
ஆயிரம் உறவுகள் இருக்கையில் அத்தனையுந் தாண்டி இவளுக்கென்றே இருக்கும் நீ உண்மையிலே யார்???

யாதுமானவனாய்
என் அண்டமிதில் நீயிருக்க
உனக்கென்றிருக்கும் உலகத்தில் உன்னோடு நானிருக்க வேண்டுமென்ற ஒற்றை ஆசையில் இவள் உயிர் வாழ்கிறாள்..!
இவள் வாழ்வதும் வீழ்வதும்
இனி உன் கையில்....!!!!


அதற்குள் வீடு வந்துவிட அவள் வண்டியினை நிறுத்திவிட்டு அங்கேயே நின்றாள். கதவைத் திறந்து அவள் உள்ளே செல்ல இவள் வந்ததைக் கூட கவனிக்காது கதையெழுதிக் கொண்டிருந்தான் VNA.

"இவ்வளவு லேட் ஆகிடுச்சு இன்னுமா நீங்க முழிச்சுட்டு இருக்கீங்க..."

"எழுதிட்டு இருக்கேன்..." பட்டென வந்தது பதில்.

"தூங்கிட்டு காலையில எழுதலாம்ல"

"புடிச்ச விசயத்தை புடிச்சு பண்ணும் போது தூக்கம் வராது. தூங்கவும் தோணாது" என்று அவன் நிமிராமல் பதில் சொல்ல அவளோ அவனையே விழுங்குவது போல் பார்க்கத் தொடங்கினாள்.

உடனே அவன் "என்னைப் பார்க்காம கிளம்பு.. போய் தூங்கு" என்று சொல்ல "புடிச்ச விசயத்தை புடிச்சு பண்ணும் போது தூக்கம் வராது தூங்கவும் தோணாது..." என்றாள் அவனைப் போலவே.

"என்னதான் உனக்குப் பிரச்சனை" என்று அவன் சலிப்பாய் கேட்க "சைட் அடிக்குறதை நீங்க டிஸ்டர்ப் பண்ணுறீங்க அதுதான் பிரச்சனை" என்றாள் அவளும் சலிக்காமல்.

அவனோ கடுப்பில் அவள் மீதிருந்த கோபத்தினை கம்ப்யூட்டர் கீபோர்டு மீது காட்டிக் கொண்டிருந்தான்.

நர்த்தனமாடிய அவன் விரல்கள் அவன் சுருங்கியிருந்த புருவம் ஏறியிருந்த நெற்றியென அவள் பார்வை அவனை அணுஅணுவாக ரசிக்கத் தொடங்கியது...

அவள் பார்க்கிறாள் என்று தெரிந்தும் அவன் எந்தவித உணர்வுமில்லாது அமர்ந்து அவன் வேலையை பார்த்தபடி இருக்க... அவளோ வெகுவசதியாய் இன்னும் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஒருவழியாய் அனைத்தையும் முடித்தவன் சேவ் செய்துவிட்டு தன் சிஸ்டத்தினை ஆஃப் செய்தான்.

அவனுடையதை எடுத்து ஓரமாய் வைத்துவிட்டு அவன் ரெஸ்ட் ரூம் சென்றுவிட்டு வெளியே வர அப்போதும் அங்கேயே அமர்ந்தவளைப் பார்த்தவன் பார்வை தலையினை நோக்கிச் சென்றது.

நாலு தையல் போட்டுருக்க அளவுக்கு நம்ம மூர்க்கத்தனமா தாக்கிட்டு மனசாட்சியே இல்லாம இப்பவும் இப்படி பேசுறோமே... என்று அவன் மனம் பாவமாய் அவளுக்கு வக்காலத்து வாங்க உனக்கு மயக்க மருந்து கொடுத்து மயக்கத்துலயே வச்சுருக்கணும்னு நினைக்குற அவளுக்கு நிறைய மனசாட்சி இருக்குதாம். போய் வாங்கி வச்சுக்கோ என்று மூளை அதனைக் கேவலமாய் திட்ட அவனோ தலையை அழுந்த தேய்த்துக் கொண்டான்.


"தலைவலிக்குதா VNA" என்று அவளிடமிருந்து வந்த கேள்வியில் அவன் உஷாரானான்....

அதனால் வேகமாய் தலையை ஆட்டி மறுத்துவிட்டான். ஆனாலும் இவ்வளவு தெளிவாக இருக்கக் கூடாது என்று அவள் மனதுக்குள் நினைத்துக் கொண்டே "தூங்குங்க VNA" என்றாள்.

"ஒரு பொறுப்பான போஸ்ட்ல இருக்க. நீதான் மத்தவங்களுக்கு முன்மாதிரியா இருக்கணும் சுஜாதா. அதைவிட்டு உன்னைப் பத்தி கேவலமா நினைக்குற மாதிரி நடந்துக்க கூடாது. அது நல்லாவா இருக்கு. நீயே இப்படி இல்லீகலா நடக்கலாமா..." என்று அவன் அவளுக்கு நிதர்சனத்தினை எடுத்துரைக்க முயல
"இப்போ புரியுது ஏன் நீங்க வேண்டாம்னு சொல்லுறீங்கன்னு... எங்க இதை அக்சப்ட் பண்ணிட்டா உங்களை யாராவது இப்படி சொல்லிடுவாங்கன்னு பயம் அதான் இப்படி பேசுறீங்க. பேமஸ் ரைட்டர் செய்த காரியம் அப்படின்னு மீடியாவுல உங்க பேர் டேமேஜ் ஆகிடும்னு பயம்... சரிதானா VNA" என்றாள் அவள்.

"யூ இடியட் நான் உன்னைப் பத்தி பேசுறேன். நீ என்னடான்னா... "

"என்னைப் பத்தி யார் என்ன சொன்னாலும் எனக்கு கவலை இல்லை VNA. அவங்களுக்காக நான் வாழலை நான் எனக்காகத்தான் வாழ்றேன்... என்னை கேவலமா நினைக்குறவங்க மொத அவங்க வாழ்க்கையை பார்க்கட்டும். அதுக்குள்ள இருக்குற கேவலத்தை துடைக்கட்டும்... என்னை சொல்லுற அளவுக்கு யாருமே இங்க யோக்கியம் இல்லை. சோ அப்படி யாராவது சொன்னா மூடிட்டு உங்க வேலையை பாருங்கன்னு சொல்லிடுவேன்..."

"நீயெல்லாம் அடங்கவே மாட்ட. எப்படியோ போ... என்னை ஆளை விடு நான் ரொம்ப டயர்டா இருக்கேன்..."

"சாரி தூங்குங்க" என்றவள் அவனைத் தனியாய் விட்டுவிட்டு போய்விட்டாள்.

அவளில்லாத தனிமை அவனுக்கு என்னவோ போல் இருக்க அதைப் பற்றி சிந்திக்காது அவன் படுத்துவிட்டான்.

இருந்தும் அவள் நினைவுதான் அவனுக்குள் முட்டி மோதிக் கொண்டிருந்தது... அன்னையின் ஞாபகம் வேறு அன்று அதிகமாக அவனைப் போட்டுத் தாக்கியது...
------------------------------------

அரவிந்தின் அறையினுள் சு...தா உள்ளே நுழைய அவனோ புன்சிரிப்புடன் வரவேற்றான்.

"வாங்க போலீஸ் மேடம் என்ன ஆளவே பார்க்க முடியலை"

"என்ன செய்ய டாக்டர் சார் வேலை அதிகம்"

"அது சரி... என்ன இப்போலாம் ரொம்ப சாப்ஃட்டா மாறிட்டயா என்ன... யாருமே ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆகுறதுல்ல"

"இருந்தாத்தான அவனுங்க அட்மிட் ஆவானுங்க. நான்தான் போட்டுத் தள்ளிடுறேனே டாக்டர் சார்" என்று அவள் சொல்லவும் "அம்மாடி ராட்சஸி" என்றான் அவன் சிரித்துக் கொண்டு.

"நேத்தே வந்தேன் நீ இங்க இல்லை. அதுசரி உங்க மேலிடம் என்ன பண்ணுறாங்க. ஆளவே பார்க்க முடியலை. அதை விடு... நான் சொன்ன விசயத்தைப் பத்தி நீ என்ன நினைக்குற. இதுவும் அவங்க மனநிலையோட அடுத்தக் கட்டமா... நேத்து அந்த டாக்டர் சொன்னதுல இருந்து எனக்கு இது மனசுக்குள்ள குத்திட்டே இருக்கு" என்றாள் அவள்.

"அவளைப் பத்திதான் உனக்கே தெரியுமே மா" என்று அவன் சொல்லவும். "சரி சரி அவளை விடு அடுத்த தடவை நான் அவளை தூக்கி ஜெயில்ல போட்டுடுறேன்" என்று அவள் சொல்ல அரவிந்தோ "அம்மாடி ராட்சசி நீ பாட்டுக்குப் போட்டுட்டு போயிடுவ அவ வெளியே வந்து என்னை துரத்தி விடுறதுக்கா" என்றான் அவன் சிரித்துக் கொண்டு.

பின்னர் அவன் முகம் வெகு தீவிரமானது. அதே தீவிரத்துடன்

"நாம ஈசியா சொல்லுவோம் மா.. ஆனா அவங்க மனநிலை நிமிசத்துக்கு நிமிசம் மாறிட்டே இருக்கும். நல்லாத்தானே இருக்கான்னு பேசுனா... அவ வேற மாதிரி பேசுவா. சோ இதை நாம கொஞ்சம் பொறுமையாத்தான் ஹேண்டில் பண்ணனும். என்னதான் கவுன்சிலிங் குடுத்தாலும் அதை ஏத்துக்கிற மனநிலையில அவ இல்லை... அது தான் இங்க பிரச்சனையே... எல்லாத்தையும் ப்ரேக் பண்ணிட்டு ஓடணும்னு பார்க்குறா. அந்த ஓட்டத்தை சட்டுன்னு நாம தடுத்தா அது தடுக்குறவங்களுக்குத்தான் ஆபத்து. அவங்களா இதை ரியலைஸ் பண்ணனும். அதுதான் இப்போதைக்கு நமக்கான ஒரே வழி... பட்?????" என்று இடை நிறுத்தினான்.

"என்ன பட்????"

"Its highly dangerous... Seriously"

"புரியுது... நானுமே அவ இப்படிலாம் நடந்துக்குவான்னு எதிர்பார்க்கவே இல்லை. என்ன செய்ய சரி விடு நான் பார்த்துக்கிறேன்... அடுத்த தடவையாவது உங்க மேலிடத்தை ஒழுங்கா ஹாஸ்பிட்டல் வரச் சொல்லுங்க... பாத்து பேசலாம்..."

"அவகிட்ட நீ பேசப்போறீயா... அவ உன்னை மூக்கு மேலயே குத்துவா"

"யாரு அவளா...??? "

"பின்ன இல்லையா..."

"ஹலோ பாஸ் நான் போலீஸ்" என்று இவள் சொல்லவும் "இப்படி அடிக்கடி சொல்லு அப்போத்தான் தெரியுது" என்றான் இவன்.

"உன்னைலாம் அக்யூஸ்ட் மாதிரி ரோட்டுல ஓடவிட்டு அடி நொறுக்கணும் டா.. பட் டைம் இல்லை. இப்போ கிளம்புறேன். ஒரு முக்கியமான கேஸ் இருக்கு" என்றவள் அவனறையில் இருந்து வெளியே வந்தாள்.

அவள் முகம் அவன் சொன்ன விசயத்தினை நினைத்து வருத்தத்துடன் இருக்க உள்ளே அரவிந்தோ யாரைப் பற்றி இவ்வளவு நேரம் பேசினார்களோ அவள் நிலையை குறித்தான கவலையில் ஆழ்ந்திருந்தான்....

அது யார்???
 
Top