• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.
Joined
Jan 3, 2023
Messages
76
அத்தியாயம் 31

அவளை விட்டு விலகி சென்றுவிடுவானென நினைத்தபடி அவள் பார்க்க அவனோ மீண்டும் அவன் வேலையைப் பார்க்க ஆரம்பித்துவிட்டான்...

அவன் நடந்துக்கொள்வதினை ஆச்சர்யமாக பார்த்தாலும் அவள் மனம் என்னவோ இறுக்கமாகத்தான் இருந்தது.

சற்றுமுன் கூட எற்றுக் கொள்ளவே மாட்டேனென உரைத்தவன் இப்போது இருக்கும் நிலைமையை பார்த்தால் யாராய் இருந்தாலும் இறுக்கம் வரத்தான் செய்யும்.

ஆனால் அவள் இறுக்கத்தினை அவன் இதழ்கள் வீணை நரம்பினைப் போல் மீட்டி மீட்டி அவளிடத்தில் இருந்து கிளம்பிய புதுவிதமான இசையினை கேட்டு ரசித்துக் கொண்டிருந்தது.

அவன் முகம்தனில் காதலும் காமமும் எக்கச்சக்கமாய் வழிந்துக் கொண்டிருந்தது.


எழுத்தாளனிவன் முன் திறந்த புத்தகமாய் இவளிருக்க எங்கிருந்து படிக்கத் தொடங்க என்றே புரியாது தவித்து முகம் பார்க்கிறான்...

நீண்டிருந்த நெற்றி இங்கிருந்து தொடங்கென அவனிடம் கெஞ்ச அவன் பார்வையோ அவள் இடை தாண்டியிருந்த முடிவினை நோக்கி செல்லத் தொடங்கியது. ஏன் அதுதான் இன்பத்தின் தொடக்கம் என்பதாலோ...!

வெற்றுத் தேகமாய் இருவரும் தரையினில் படுத்திருக்க இறுகிய அணைப்பு இடைவெளியை இல்லாது செய்து காதலினை பொழிகையில்
இதழ் தாண்டி ஈரம் ஒழுகிக் கொண்டிருக்க
இவன் முகமும் ஈரமதனை பூசிக் கொண்டது... அது இதழ்நீர் மட்டுமல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது...

இடை தாண்டிய இன்பத்தினுள் இவன் புகுந்து தன் நாவால் கவியெழுத (அவன்)எழுத்தின் எழுச்சியினை அவள் உணர்ந்து அவனோடு ஒன்றிக் கொண்டாள்...

பெண்'மை' தொட்டு எழுதுமிந்த மாயாவியின் கைவண்ணத்தில் அவள் தேகமெல்லாம் சிலிர்த்து பரவசத்தில் சிறகடிக்க எழுதியதெல்லாம் அவளைப் போல் உருகியோடத் தொடங்கிவிட்டது.

ஆசையெனும் ஆடையுடுத்திக் கொண்டு நாணமெனும் ஆடைதனை அவிழ்த்தெறிந்துவிட்டு இவள் நிற்க
வெற்றுதேகத்தின் வெப்பம் இவனை சுண்டியிழுத்தே அவள் காலடியில் மண்டியிட வைக்கிறது...!

மண்டியிட வைத்ததில் கூட அவஸ்தை அவளுக்குத்தானே தவிர அவனோ அவளை இன்னுமின்னும் ஆனந்த அவஸ்தையில் சிக்க வைத்து திணற வைத்தே மாயம் செய்தான்...

"ச்சீ விடேன்" என அவளுரைக்க
விடத்தான் முயற்சி செய்துக் கொண்டிருக்கிறேனென அவன் உரைத்தாலும் முயற்சி மட்டும் அவன் விட்டுவிடவே இல்லை... இலக்கினை இலகுவாய் எட்டிட விடா முயற்சி எத்துனை முக்கியமென்பது அவனுக்குத் தெரியாதா என்ன???

எழுதும் உன் விரல்களுக்குள் இத்தனை இன்பத்தினை ஒளித்து வைத்தா எனை ஏங்க விட்டிருக்கிறாயென அவள் முறுக்கிக் கொள்ள பழி வாங்க இதல்ல நேரம்.. இது ஆழியாய் நீ என்னை அலைக்கழிக்கும் காலம்... உன் பெண்மையின் பேரலையில் என் ஆண்மையின் ஆர்ப்பரிப்பெல்லாம் அமிழ்ந்து போக நீயதை வாரிச் சுருட்டி உன்னோடு பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும் - பிதற்றினான் இவன்...

உன்னெழுத்தினை பத்திரமாய் உள்ளத்தில் பதிந்திருக்குமிவள் உன்னெழுச்சியின் உச்சத்தினை
ம்ஹூம் உன்னை பத்திரப்படுத்திக் கொள்ளாது போய்விடுவேனா...
பலநாள் தவத்தின் வரமல்லவா அது...
ஏங்கிய எனக்குத்தான் தெரியும்
உள்ளுக்குள் தங்குமுன் மறுஉருவத்தின் மகத்துவம்...
வறண்ட பூமியாய் இறுகி வெடித்து பிளவுபட்ட கிடந்த கருவறையில் உன் உன்னதம் படுமிந்த உன்னத நேரத்திற்கே உன்னை உள்ளத்தில் நினைத்த நாளிலிருந்தே காத்திருக்கிறேன்...
ஷ்ஷ்...ப்பா....இப்போதாவது இறங்கி வந்திருக்கிறாயே....

இல்லை இல்லை கொஞ்சம் மேலேறி வருகிறேன் உன் மென்மையின் வெம்மையில் கொஞ்சம் இளைப்பாற வேண்டும்.. அதன்பின்னரே இறங்கி உன்னுள் நானுழைய வேண்டும்...
உன்னவனாய் உருமாறவேண்டும்...
உயிர்க்குள் உயிர் விதைக்க வேண்டும்...
விதைத்தது முளைக்கையில் உன் முகங் கண்டு முத்தமிட வேண்டும்... என்றவன் சட்டென்று கீழிறங்கி அவள் பாதத்தினை ஏந்தி அதில் முகம் புதைத்தான்...

"ஷ்ஷ் வாசு என்னதிது... நீ வாசுதேவன்... என்னோட இறைவன்" என்றவள் காலை விடுவிக்க போராட

"உன் காதலென்னும் பவித்திரம்
இப்பாவியின் தகுதிக்குச் சற்றே அதிகம் -
இருப்பினுமுன்
பாதமேந்தி என்னையும்
புனிதமாக்கி கொள்கிறேன்...!

இல்லையில்லை,
நீ இறைவனென மறுக்காதே...!
இறைவியின் பாதம் ப(தொ)ட்டதாலே இவன் இறைவன்...!!!
மற்றபடி,
இவன் வெகுசாதாரணமானவன்...!!!!
" என்றான் அவன்...

அவன் காதலாகி கசிந்து உருக அவள் கண்களிலிருந்து பட்டென்று கண்ணீர் எட்டிப் பார்த்தது. அதோடு "VNA லவ் யூ... இதைத் தவிர வேறென்ன சொல்ல..." என்றவளின் அதரங்கள் அவனோடு அமிழ்ந்து போனது. அதன் பின் என்ன நடந்திருக்கக் கூடும்..??? ம்ம் எஸ்.. அதுதான் நடந்து முடிந்தது...

அவளோடு கலந்து சோர்ந்து அவள் மீதே விழுந்தவன் அவளையே தன் மஞ்சமாக்கி சுகமாய் துயில் கொள்ள ஆரம்பித்துவிட்டான்.

ஆனால் அவள் உறங்கவில்லை.. அவனோடு கூடிக் கலந்த சந்தோசம் அவளை இன்னும் அழகாய் அந்த நேரத்தில் காட்டியது. நடந்த நிகழ்வினை எண்ணிப் பார்த்தவளின் நெஞ்சம் அவன் நினைவால் விம்மத் தொடங்கியது...

கெஞ்சி, கொஞ்சி, விஞ்சி என அவன் காட்டிய பரிணாமங்களில் அவள் இமைக்க மறந்து அவனுடனே இயைந்து சென்றாள்...

இது அவன்தானா என்ற ஆனந்த அதிர்ச்சியில் அவள் திக்குமுக்காட அவனோ அவளை அப்படியே தின்றுவிட்டான்.

இவன் மீது கொண்ட காதல் எங்கே ஏற்றுக் கொள்ளப்படாமலே நிராகரிக்கப்பட்டு விடுமோவென நினைத்தவளுக்கு இது மிகுந்த நிம்மதியினை தந்தது. அந்த இதத்தில் அவள் விழிகள் கண்ணீரைச் சிந்தியது...


என்னதான் சந்தோசம் இருந்த போதும் அவள் மனம் இவன் மனம் குறித்தான கவலையில் ஆழ்ந்து விட்டது. இன்று ஏதோ ஒரு உணர்ச்சிப் பெருக்கில் தான் சாகப்போகிறேனென சொன்ன காரணத்திற்காக தன்னோடு கலந்து விட்டான். ஆனால் உறக்கம் களைந்து எழுந்ததும் அவன் மூளை அவனை உலுக்க ஆரம்பித்துவிடும்... இல்லீகல் அப்பயர் என்று..

அப்போது அவன் மனம் நிச்சயமாய் நடந்தத்தைக் குறித்தான கவலையில் ஆழ்ந்து விடும். அவன் அவனையே வெறுக்க ஆரம்பிப்பான். ம்ஹூம் என்னால் அவனை அவ்வாறான சூழ்நிலையில் பார்க்க இயலாது.. இந்த புனிதத்தினை வேறு மாதிரியாய் அவன் பார்க்கத் தொடங்கினால் அது என் காதலுக்கும் அவன் காதலுக்கும் கிடைக்கின்ற பெருத்த அவமானம். அப்படியொரு நிலையில் என் காதல் படும் அவமானத்தினை ஏற்றுக் கொள்ள என்னால் இயலாது. அதனால் அவனை விட்டு விலகி வரவே முடியாத தூரம் செல்ல வேண்டும் அதுதான் இப்போதிருக்கும் ஒரு தீர்வு...

இது உயிரையேப் பிளக்கும் வலியைத் தரும். அதெனக்குத் தெரியும்.. இருந்தும் இவன் வலியை பார்க்கும் தைரியம் இல்லாததால் தான் இந்த முடிவு... இதன் வலி கூட மரணத்தினை ஏற்றுக் கொள்ளும் வரைதான். இதை மனதார ஏற்றுக் கொள்கிறேன் VNA... என்னவொன்று உன்னோடும் உன் அச்சில் உருவாகும் குழந்தைகளோடும் என்னை எப்போதும் மயக்கும் உன்னெழுத்துக்களோடும் நான் நீண்ட காலம் வாழவேண்டும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அது நடக்காதென்று தெரிந்து போய்விட்டது. மீண்டும் உன்னை இறுகிப் போய் பார்க்கும் வலிமை எனக்கில்லை. இந்த நேரத்தின் இதத்தினையும் ஏகாந்தத்தினையும் சுமந்துக் கொண்டு தேககூட்டில் சுமக்கும் என் உயிர்க்கு விடுதலை அளிக்கிறேன்... உயிர் பிரிந்தாலும் என் உணர்வுகளும் நினைவுகளும் தங்களையே சுற்றிச் சுற்றிவரும்...
தங்களைப் பிடித்த சனியன் விட்டது என்று தலை முழுகிவிட்டு இனி நீங்கள் உங்கள் எழுத்துலகம், வாசகர் வட்டம் என்று நிம்மதியாக வாழலாம்... என்று நினைத்தவள் அவன் தலையினை மெதுவாக விலக்க "ம்மா" என்று சன்னமாய் முணங்கிக் கொண்டு அவள் மார்பில் அழுத்தமாக முகம் புதைத்தான் அவன்.

அவன் கரங்கள் அவள் வயிற்றினை வாஞ்சையுடன் தழுவியிருந்தது. அது உன்னை எங்கேயும் போக விடமாட்டேடென சொல்லுவதைப்போல இருந்தது அவளுக்கு. ஆனால் அது நிரந்தரமில்லை என்று நினைத்தவள் அவனோடு இயைந்து சில நிமிடங்கள் அப்படியே கிடந்தாள்.


பின் அவனை விலக்கி எழ முயற்சி செய்தவள் அப்படியே மீண்டும் படுத்துவிட்டாள்... காரணம் அவள் மாங்கல்யம் தற்போது அவன் கரத்தின் பிடியில் இருந்தது. அதைப் பிடித்துக் கொண்டு தான் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தான் அவன்.

இந்த தாலி தள்ளி நிக்கும் படி என்னை ரொம்ப எச்சரிக்குதுன்னு சொன்னவன் இப்படி இருப்பதைக் கண்டு புன்னகை ஒன்றை உதிர்த்துவிட்டு அவள் அவன் கரத்தினில் இருந்து அதை உருவிக் கொண்டு எழுந்தாள். கழுத்தில் கணமாய் தொங்கிக் கொண்டிருந்த அம்மாங்கல்யத்தினை மீண்டும் எடுத்துப் பார்த்தவள் அதன் பின்புறம் பார்த்துவிட்டு மென்மையாய் சிரித்துக் கொண்டே "சாரி அரவிந்த்... இது தப்புன்னு எனக்குத் தெரியும். பட் என்ன பண்ண... என்னால என் மனசை மாத்திக்க முடியலை. அதனால தான் இப்படி நடந்துக்கிட்டேன். இதுவும் உனக்கு கஷ்டத்தை தரும். ஆனா அட்ஜஸ்ட் பண்ணிக்கோ அரவிந்த் எனக்காக..." என்றவள் அவசரமாய் ஆடைகளை அணிந்துகொண்டு அதனை ஆடைக்குள் போட்டுக் கொண்டு அங்கிருந்து வெளியேறினாள்.


இருள் கவிழ்ந்திருக்க வெளியே யாருமில்லாது இருந்தது வேறு அவளுக்கு ஏக வசதியாய் போய்விட்டது. இப்போது அவள் அவனை விட்டு விலகி செல்வது அவன் ஏற்றுக் கொள்ள மாட்டான் என்பதற்காக அல்ல...

அவன் மயக்கத்தில் பேசியபடி கண்ணீர் விட்டதை அவளும் கேட்டுக் கொண்டு தான் இருந்தாள். அவன் சொல்லிய ஒவ்வொரு வார்த்தையும் அவளுக்குள் இப்போதும் வார்த்தை மாறாது ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது.

அதுவும் கடைசியாய் ஐ லவ் யூ சுஜாதா ஆனா நீ அடுத்தவன் மனைவி என்று சொன்னது அவளுக்குள் பெரும் பிரளயத்தினை ஏற்படுத்தியிருந்தது.

அதனால் தான் அவள் அவ்வாறு பேசினாள். அவ்வளவு காதலினை வைத்துக் கொண்டு தாலிக்கு கட்டுப்பட்டு தன்னைச் சுற்றி வேலி போட்டு வாழும் அவனை எண்ணி வருத்தம் இருந்த போதும் ஏதோ ஓர் நிறைவு இப்போது வந்திருந்தது.

அதற்கு காரணம் அவன் இந்த தாலியோடவே தன்னை ஏற்றுக் கொண்டு அவனை அவளுக்குப் பரிசாக அளித்தது தான்.

அந்த பரிசுக்கான பதில் பரிசினை அவளும் தர வேண்டுமல்லவா. அதற்காகத்தான் இப்போது அவள் செல்கிறாள்... ஆம் மரணம் ஒன்றே அவனுக்கான பரிசு...

அவள் காதல் அவனை மிகுந்த சிரமத்திற்கு ஆட்படுத்தி சித்ரவதை செய்துவிட்டது. இப்போது அதிலிருந்து அவனை விடுதலை செய்ய வேண்டும்...

இனி எழுத்தாளன் வாசுதேவ நாராயண அநிருத்தனாய் அவன் நிம்மதியாய் வாழ வேண்டும்... வாழ்வான் நிச்சயமாக... என்றவள் அந்த இருளில் கலந்து அவ்விடம் விட்டு அகன்றே விட்டாள்...

அன்று நான் இல்லாமத்தான் நீங்க நல்லா இருப்பீங்கன்னா நீங்க நல்லாவே இருக்க வேண்டாமென சொன்னவள் இன்று விலகியோடும் மர்மம் ஏனென அவளுக்கே புரியவில்லை... ஆனால் ஒன்று புரிகிறது. அவள் ஏதோ ஒரு முடிவினை நோக்கித்தான் போகிறாள் என்று..

அவளை விடுங்கள்...

இனி அவளில்லாத நிலையில் வாசுவின் நிலை என்ன???? ரணப்பட்டு வேதனையடைவானா??... இல்லை,
அவள் நினைத்தது போல் விட்டது தொல்லையென நிம்மதியாய் இருப்பானா????

எல்லாம் அவ்வாசுதேவனுக்கே வெளிச்சம்....!!!
 

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,971
இத்தனை நாள் அவன் போய்விடுன்னு கெஞ்சினான் ஆனால் இன்று அவளாகவே பிரிவை ஏற்க மைடிவெடுத்துட்டாள் 🤔🤔🤔🤔🤔🤔
 
Top