• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.
Joined
Jan 3, 2023
Messages
76
அத்தியாயம் 9


இரத்தம் நிற்காது வழிந்துக் கொண்டிருக்க அவனோ திகைப்பில் இருந்து சட்டென்று விடுபட்டு அவளருகே நெருங்கினான்.

"வேண்டாம் வராதீங்க VNA"

"பையித்தியமா நீ.. எவ்வளவு இரத்தம் போகுது தெரியுமா?... இப்படியே போனா என்னாகும்னு தெரியுமா?" என்று கேட்க "என்னாகும் செத்துப் போவேனா.. உங்களை நினைச்சு பித்துப் பிடிச்சு இத்துப் போறதுக்கு செத்துப் போயிட்டா கூட பரவாயில்லை. உங்களுக்கும் அதுதான வேண்டும்... அது நடந்தா நீங்க நிம்மதியா இருப்பீங்க தான" என்று அவள் சொல்லவும் "அறைஞ்சேன்னு வை பல்லு எல்லாம் சிதறிடும்" என்றான் அவன் கோபமாய்.


"அறைஞ்சுருந்தா உண்மையிலே ரொம்ப சந்தோசப்பட்டுருப்பேன் VNA" என்று அவள் அப்போதும் காதல் வழியும் குரலில் சொல்ல இவனோ அவள் கையைப் பிடித்து இழுத்து வந்தான்.

படுக்கையில் அமர வைத்துவிட்டு பக்கத்தில் இருந்த பாக்ஸை எடுத்து அவளுக்கு கட்டுப் போட்டுவிட்டான்..

அவன் முகத்தினையே விநோதமாக பார்த்துக் கொண்டிருந்தவளை நிமிர்ந்து பார்த்தவன் "இந்த மாதிரி எல்லாம் பண்ணாத புரிஞ்சதா?" என்றான் கடுமை நிரம்பிய குரலில்.


"நான் சொல்லுறதை நீங்க புரிஞ்சுகிட்டீங்களா VNA.." என்று அவள் ஏக்கமாய் கேட்க "நான் எத்தனை தடவை தான் உனக்கு சொல்லுறது.. என் மனசுக்குள்ள உன்னால வரமுடியாதுன்னு" என்று சொல்ல அவளோ அந்த கட்டினை கழட்டி எறிந்துவிட்டு அங்கிருந்து விறுவிறுவென சென்றுவிட்டாள்.


பிய்த்த வேகத்தில் அவன் முகத்திலே ஒரு துளி ரத்தம் வேகமாய் வந்து மோத இவளை... என்று நினைத்தவன் எப்படியோ போகட்டுமென எண்ணி வெளியே வந்தான்.


இன்றைக்கு அடுத்த அத்தியாயம் எழுத வேண்டும். ஆனால் அவன் மனம் எழுதும் நிலையிலே இல்லை. இப்படிலாம் அவன் எப்போதும் இருந்ததே இல்லை. அவன் எழுத வேண்டும் என்று நினைத்தாலே எழுத்துக்கள் அருவியாய் கொட்டும். இன்று ஏனோ வறண்டு போன குளம் போல் அவனிருக்க அவன் விழிகளில் விழுந்தது பாதி திறந்திருந்த அந்த அறை.


கால்கள் அவனையும் கேளாமல் அந்த இடத்திற்கு அவனை அழைத்துச் செல்ல கதவினை இன்னும் நகர்த்தி விட்டு உள்ளே நுழைந்தான்.

அந்த பகலிலும் அறை முழுவதும் இருளாக இருக்க கண்களை சுழலவிட்டு அறையின் விளக்குளைப் போட்டான். வெளிச்சம் பரவ அவன் கண்கள் அப்படியே விரிந்தது ஆச்சர்யத்தில்.


அந்த அறையின் சுவர் முழுவதும் எழுத்துக்களே நிரம்பியிருந்தது. அதுவும் அவனது எழுத்துக்கள். வாசுவிற்கு பேச்சே வரவில்லை. இந்த பெண் என்ன இப்படி எல்லாம் செய்து வைத்திருக்கிறாள் என்று அவன் நினைத்தபடி ஒவ்வொன்றாக பார்த்தான்.

அத்தனையும் அவன் சுஜாதாவினை நினைத்து உருகி உருகி எழுதியது. ஆனால் அதை தனக்காக எழுதியிருப்பதாய் அவள் நினைத்து நினைத்து இவ்வளவு தூரம் ரசித்திருக்கிறாள் என்றால் அவள் மனநிலை மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதை அவனால் புரிந்துக் கொள்ள முடிந்தது.


அறைமுழுவதும் அவனது புத்தகங்கள் இறைந்து கிடக்க அவளது வெறித்தனமான ரசிப்பு அவனுக்கு சட்டென்று புரிந்தது.


ஆனால் அவளது மெச்சூரிட்டி இல்லாத அந்த மைண்டைப் பார்த்து தான் அவனுக்கு கொஞ்சமல்ல நிறையவே கடுப்பாக இருந்தது.


இந்தளவுக்கு பையித்தியமாய் அவன் அவனது காதலி சுஜாதாவினை கூட நினைத்து உருகியதில்லை என்று நினைக்கையில் இவளை நினைத்து அவனுக்குப் பொறாமையாகவும் இருந்தது. என்ன இருந்தாலும் அவனால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை... அவன் இரும்பு மனதோ அதற்குள் இவளை நுழையவே விடக்கூடாது என்பதில் தீவிரமாக இறுகியே இருந்தது. அப்படி இருக்கையில் இந்த சுஜாதாவால் என்ன முயன்றாலும் உள்ளே நுழைய முடியாது என்று அவன் எண்ணிக் கொண்டான்...


அவன் நினைப்பையெல்லாம் ஓரமாக தள்ளிவைத்துவிட்டு அறையையே சுற்றி சுற்றிப் பார்த்தான். அவனெழுதிய எழுத்துக்களின் கீழே அவளும் சில வார்த்தைகள் எழுதி வைத்திருந்தாள். அது அவளது அறிவின் தன்மையை அவனுக்கு தெளிவாக எடுத்துக் காட்டியது.


உன்னெழுத்தின் தீண்டலால்
என்னுயிர் புதிதாய் ஜனனம்
எடுக்க உணர்கிறேன்
அன்னையின் வாசத்தினை...

உன்னைப் போலெழுத
அவனிதனிலே யாருமில்லை..
உண்டென மறுக்காதே...
மறுத்தாலும் உண்மையிதுவே..!!!
என்று ஒருபக்கம் அவளெழுதியிருக்க அதற்கடுத்து இவ்வாறும் எழுதியிருந்தாள்.

எனக்கும் எழுத்துக்கும்
ஏக தூரமிருந்தும்
நெருங்கினேன்
உன்னெழுத்தின் ஈர்ப்பில்...!

உன்னெழுத்து தருமந்த இதம்
இதயத்தினை ஈரமாக்கி
என்னை தினந்தினம் நனைய வைக்கிறது.

எழுத்தின் மீதிருக்கும் பற்று
காதலாய் உருமாற
உன்னோடு இறுக்கிக் கொண்டு
விலகமுடியாதபடி
மாயம் செய்து மாயக்கண்ண(வாசுதேவ)னாய் சிரிக்கிறாய்...!

உன்னை நினைத்தே
வாழும் இவ்வாழ்வுக்கு என்ன பொருளென்றே தெரியாது..
புரியாது வாழ்கிறேன்...!!!
உனக்கிது புரிந்தால்
சொல்லிவிட்டு போ...
ம்ஹூம்
சொல்லிக்கொண்டே வா..!!!


அதைப் பார்த்ததும் அவன் மௌனமாகவே நின்றான். (உண்மையிலே இவனெல்லாம் என்ன பிறவியோ...!!! பாவம் சுஜாதா)


இறைந்து கிடந்த அந்த புத்தகத்தினை எடுத்துப் பார்க்க அதெல்லாம் கண்ணீரின் ஈரம் உணர்ந்து காய்ந்து போயிருந்தது. சில இடத்தில் இரத்தத் துளிகள் பட்டு அதுவும் உலர்ந்து போயிருந்தது. ஸ்டுப்பிட் என்று முணுமுணுத்தவனுக்கு அப்போதுதான் அவளது கரத்தில் இருந்து வழிந்த இரத்தம் நினைவுக்கு வந்தது.

உடனே வெளியே வந்தவன் அவளெங்கே என தேடினான்.
வெளியே எங்கும் அவளில்லாது போக "சுஜாதா" என்று அவன் சத்தமிட்டு அழைத்தான். ம்ஹூம் பதிலில்லை. மீண்டும் அவன் அழைக்க இப்போதும் பதிலில்லை.


எங்க போனா.. ஒருவேளை நம்மளை மாத்தவே முடியாதுன்னு புரிஞ்சுடுச்சா என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது நீ நினைப்பது தவறென்று சொல்வதற்காகவே "VNA" என்னும் குரல் பின்னாலிருந்து பலகீனமாக ஒலித்தது.


"சுஜாதா" என்று இவன் திரும்பி அவளைப் பார்க்க இரத்தம் இழந்த களைப்பு அவள் முகத்தில் தெரிந்தது.

"இங்க வா" என்று அவன் அழைக்க "VNA" என்று ஆசையோடு அவனருகே வந்தாள் அவள்.

அவள் கைப்பிடித்து இழுத்து நேராக அந்த அறைக்கு இழுத்துச் சென்றான். "என்னதிது" என்று அவன் கேட்க "பார்த்தா தெரியலையா VNA.. என்னோட உலகம்" என்றாள் அவள்.

"எவ்வளவு நல்லா எழுதியிருக்க தெரியுமா நீ" என்று அவன் சொல்ல "வாவ் நிசமாவா சொல்லுறீங்க" என்றாள் இவள்.


"ஆமா அழகா எழுதியிருக்க. உன்னோட உணர்வுகள் எனக்குப் புரியுது" என்று அவன் சொல்ல "நிசமாத்தான் சொல்லுறீங்களா" என்று அவனிடம் அவள் இன்னும் ஆர்வமாய் கேட்க "ஆமா சுஜாதா. என் எழுத்துக்களை இவ்வளவு ரசித்து அதை உணர்ந்து எழுதுறது என்பதெல்லாம் சாதாரண விசயம் இல்லை. வாசித்து விட்டு கடந்துப் போகாமல் அதை எண்ணத்தில் வைத்து நீ எழுதியதைப் பார்க்கையில் எனக்கு என்ன சொல்லுறதுன்னு தெரியலை" என அவன் சொல்ல அவளோ "ஐ லவ் சுஜாதான்னா சொல்லிடுங்க VNA. ரொம்ப சிம்பிள்" என்றாள் சாதாரணமாக. அவ்வளவுதான் அவனுக்கு சுர்ரென்று கோபம் ஏறியது.


"ஸ்டுப்பிட்... இதை விட்டா உனக்கு வேற எதுவும் தெரியாதா" என்று அவன் கேட்க "எனக்கு நீ பக்கத்துல இருந்தா இதைத் தவிர வேற எதுவும் தெரியாது. அதே மாதிரி வேற யாரும் தேவையும் இல்லை" என்று மீண்டும் அவள் உளறத் தொடங்க "உளறாம போறயா ப்ளீஸ்" என்றான் அவன்.


"உளற வச்சுட்டு உளறாத என்று சொன்னால் யான் என்ன செய்வேன்.. உனக்கு தெரியாது VNA என் தேகத்தில் கொந்தளிக்கும் உணர்வுகளைப் பற்றி. என் மனதில் ஆர்ப்பரிக்கும் ஆசைகளைப் பற்றி. அது தரும் வெம்மை உன்னையேச் சுட்டு விடுமென தெரிந்துதான் கொஞ்சம் தள்ளியே இருக்கிறேன். ஆனால் நீ புரியாது என்னைப் பாடாய் படுத்திக் கொண்டிருக்கிறாய். உனக்காய் அதையும் நான் தாங்கிக் கொள்கிறேன். ஆனால் இதையே நீட்டித்துக் கொண்டே செல்லாதே.. என் நிலை இன்னுமின்னும் மோசமாய் மாறும். இல்லை என்னை பிடிக்கவே இல்லை என்றால் என் உயிரை நீயே எடுத்துக் கொள்.. உன்னையே நினைத்து துடிதுடிக்கும் எனக்கான நல்லதாய் அது அமையும்... VN...A" என்றவள் அப்படியே மயங்கிவிழப் போக அவனோ "சுஜாதா" என் சொல்லியபடி அவளைத் தாங்கிக் கொண்டான்.

-------------------------------------

"விஜய் இங்கதான்" என்று அவனிடம் சொல்ல வண்டியை அவன் நிறுத்தினான். இறங்கியவள் அந்த வீட்டினுள் வேகமாய் நுழைய அவளின் பின்னாலே இவனும் நுழைந்தான்.


இவள் நுழைந்த வேகத்தினை சற்றும் எதிர்பாராத அந்த வீட்டினர் சற்று பயந்து "மேடம்" என்க அவளோ "ஒரு சின்ன என்கொயரி விசயமா வந்தேன். இங்க நந்தினி..." என்று அவள் கேட்க "என் பொண்ணுதான் மேம் உள்ள இருக்கா" என்று அவர் சொல்லவும் "நான் பார்க்கலாமா.. பயப்படாதீங்க. ஒன்னும் பிரச்சனை இல்லை. சும்மா பேசிட்டு கிளம்பிடுவேன்" என்று அவள் சொல்லிவிட்டு அவளிருந்த அறைக்குள் நுழைந்தாள்.


ஒரு போர்வையை போர்த்தியபடி எங்கயோ வெறித்து பார்த்துக் கொண்டிருந்தவளைக் கண்டவள் "நந்தினி" என்று அழைக்க "நான் இல்லை நான் இல்லை" என்று பதறி எழுந்தாள் அவள்.


"ஏய் வெயிட் எதுக்கு இவ்வளவு பதட்டம்" என்று அவள் பொறுமையாய் நந்தினியைப் பார்த்து பேச "மேம் மேம்" என்று சொன்னவளின் கண்கள் கலங்கத் தொடங்கியது.


"நந்தினி ரிலாக்ஸ்.. எதுக்கு இப்போ என்னைப் பார்த்து இவ்வளவு பயப்படுறீங்க" என்று அவள் கேட்க "ஒன்னுமில்லை மேம்" என்றாள் அவள்.

"ஓகே நான் ஒரு மர்டர் கேஸ் விசயமா.." என்று சொல்ல ஆரம்பித்த போதே நந்தினி பயத்தில் மிரண்டு அப்படியே பின்னால் நகர ஆரம்பித்தாள்.

அதை கவனித்தவள் இருந்தும் நிறுத்தாமல் "அந்த கேஸ் விசயமா ஒரு சின்ன என்கொயரி.. அதான் வந்தேன்" என்று சொல்லி நிறுத்தினாள்.

"என்கொயரி... மேம்... ஆனா... நான்" என்று அவள் திணற "என்னாச்சு நந்தினி இவ்வளவு பயப்படுறீங்க.. இதைப் பார்க்குறப்போ என் போலீஸ் ப்ரைன் என்ன சொல்லுதுன்னா இந்த மர்டரை பண்ணது நீங்களா இருப்பீங்களோன்னு" என்பதற்குள் "அய்யோ மேம் இல்லை மேம்.. இல்லை மேம்" என்று அவள் பதறியடித்து பதில் சொன்னாள்.


"சரி விடு நந்தினி... ஒரேயொரு கேள்வி.. காலேஜ் போகலை இன்னைக்கு" என்று கேட்க "இல்லை மேம் கொஞ்சம் உடம்பு சரியில்லை. அதான்" என்று நந்தினி தயங்கியபடி அவள் கண்களைக் கூடப் பாராமல் சொல்ல "ம்ம் ஓகே.. சரி நாளைக்குக் காலேஜ் போவீங்கதானே.. அப்போ இது தேவைப்படும்" என்று அவள் தன் கையினை நந்தினியின் முன் நீட்ட அவள் கையிலிருந்த அந்த பொருளைப் பார்த்து நந்தினியின் முகம் வியர்த்து வழிய ஆரம்பித்துவிட்டது.

இவ்வளவு பொறுப்பாய் இருப்பவள் VNAவிடம் மட்டும் எப்படி இப்படி நடந்துக் கொள்கிறாள்.... ????
 
Joined
Jan 3, 2023
Messages
76
Top