• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கண்டேன் காதலை 17

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 17

"நிஜமா சொல்றியா புகழ்? விளையாடலையே?" போனில் பேசிக் கொண்டிருந்தாலும் கண்கள் அப்படி விரிந்து கிடந்தது ப்ரியசகிக்கு.


இரண்டு மணி நேரம் முன்பு பார்த்த போது கூட எப்போதடா கிளம்புவோம் என்று நின்றிருந்த புகழ் திடீரென போன் செய்தது மட்டும் அல்லாமல் இவ்வளவு பெரிய அதிர்ச்சி கொடுத்தால் எப்படி தான் தாங்குவாள் பெண் அவள்.


"சத்தியமா டி! அதுவும் திவி கூட எனக்கு பெருசா ஹெல்ப் பண்ணல.. உன்னோட சீனியர் தான் ஸ்டார்ட் பண்ணி விட்டது தெரியுமா?" புகழ் அவ்வளவு உற்சாகமாய் சொல்ல,


"சீனியர்? கார்த்தி சாரா? என்னால நம்பவே முடில.. உண்மையா தான் சொல்றியா? அப்ப உன் வீட்ல ஓகேவா?" சகி இன்னும் புகழை நம்பாமல் கேள்வியாய் கேட்டுக் கொண்டிருந்தாள்.


"அய்யோ நம்பு சகி! உன்மேல ப்ரோமிஸ்.. அம்மாவும் அப்பாவும் ஒரு வார்த்தை கூட அகைன்ஸ்டா பேசல தெரியுமா! திவி பேசியிருந்தா கூட அம்மா அப்பா இவ்வளவு ஸ்ட்ரோங்கா ஓகே சொல்லி இருப்பாங்களா தெரியல.. ஆனா உன் சீனியர் சொல்லவும் அப்பா டோடல்லி சேஞ்ச்டு.. என்னாலேயே நம்ப முடியலைன்னா பார்த்துக்கோயேன்" புகழே இன்னும் அந்த கணத்தில் இருந்து வெளிவராமல் மகிழ்ச்சியில் ததும்பி பேச,


"ஓஹ் மை காட்! ஐம் சோ பிளெஸ்டு புகழ்.. ஆமா இன்னும் என்ன என்னோட சீனியர்? எப்ப தான் கார்த்தி சாரை மாமானு கூப்பிட போற?" என்றாள் சகி.


"ப்ச் ரொம்ப முக்கியம் போ டி! நான் இப்ப எவ்வளவு ஹாப்பியா இருக்கேன் தெரியுமா? சகி... இனி நான் உன்கிட்ட பேசும்போது நின்னு நிதானமா உன் கண்ணை பார்த்து பேசலாம்.. நினச்ச நேரம் நினச்ச இடத்துல உன்கூட டைம் ஸ்பென்ட் பண்ணலாம்.. இதெல்லாம் பீல் பண்ணினா எனக்கு இன்னைக்கு தூக்கம் வருமான்னே தெரியல.. நீ என்னடான்னா..."


"டேய்! இதெல்லாம் நார்மல் லவ்வர்ஸ் பீல் பண்றது.. நீ தான் ஜந்து ஆச்சே.. இனி நமக்கு கல்யாணம்.. சோ நாம அடுத்த ஸ்டேஜ் பத்தி தான் யோசிக்கணும்.. லூசு லூசு"


"வாவ் நீ அவ்வளவு அட்வான்ஸ்டா வந்துட்டியா டியர்.. ஆமா ஆமா.. இனி நமக்கு கல்யாணம்.. ஏன் கண்ணை பார்த்து பேசி டைம் வேஸ்ட் பண்ணனும்? சோ அடுத்து நமக்கு ஒரே ஜாலி தான் இல்ல.." அவன் பேச்சையே மாற்றிவிட,


"டேய் டேய்! ரொம்ப அவ்வளவு அட்வான்ஸ்டா எல்லாம் யோசிக்காத! இவ்வளவு எல்லாம் பேசுவியா நீ? நான் சொன்னது மேரேஜ்க்கு அப்புறம் நிறைய கமிட்மெண்ட்ஸ் எல்லாம் வருமே அதை பத்தி" என்றாள் பிரியசகி.


"ஓஹ் அதுவா? நான் கூட என்னென்னவோ யோசிச்சிட்டேன்.."


"ஹெல்லோ பாஸ்.. அதெல்லாம் அப்புறம் யோசிக்கலாம்.. இப்ப நீயும் நானும் என்னோட அம்மாகிட்ட பேசணும் நியாபகம் இருக்குல்ல?"


"ஏன் இல்லாம? இனி என்னோட வேலையே அதானே! நான் மட்டும் இல்ல நான், அம்மா, அப்பா, திவி, உன் சீனியர் எல்லாரும் வர்றோம்.. உன் அம்மாவை அபேஸ் பண்றோம் ஓகே!"


"ஹ்ம்ம் என்னவோ சொல்ற.. பார்க்கலாம்.. அண்ட் நீ முதல்ல உன்னோட மாமாக்கு தேங்க்ஸ் சொல்லு என்னோட சார்பாவும் சேர்த்து"


"ப்ச் சகி! மாமா என்ன மாமா? நான் தான் உன் சீனியர் விட பெரியவன் தெரியுமா உனக்கு? மாமானு எல்லாம் கூப்பிட முடியாது.."


"அப்புறம் எப்படி கூப்பிட போற?"


"ஏய் போ டி போய் ட்ரீம்ஸ்ல உன்னை நான் என்னென்ன பண்றேன்னு பாரு.. அதை விட்டுட்டு சும்மா நொய் நொய்னு.. போ டி"


"இந்த சீன்க்கு ஒன்னும் குறை இல்லை.. சரி சரி போறேன்.. ஆனா நீயும் ஓவரா பண்ணாம எப்படி கார்த்தி சார்கிட்ட பிரண்ட் ஆகலாம்னு யோசி"


"ஹ்ம்ம் பார்க்கலாம் பார்க்கலாம்.." என்றவர்கள் பேச்சு அடுத்தடுத்து தொடர்ந்து கொண்டே தான் இருந்தது. அது காதலாகவும் அதை தாண்டியும் என ஒரு படி மேலே சென்றிருந்தது புகழின் மகிழ்ச்சியில்.


"தேங்க்ஸ்" என்றபடி கார்த்தியின் முன் வந்து நின்றாள் திவி. பதில் ஏதும் சொல்லாமல் அவளையே பார்த்தபடி இருந்தான் கார்த்தி.


"இப்படியே பார்த்தா வெளில போயிடுவேன்" பார்வை வீச்சு தாங்காமல் அவள் சொல்ல, அதற்கும் தோள்களை தான் குலுக்கினான் அவன்.


"இப்ப நிக்கவா போகவா?" திவி கேட்க,


"உனக்கு என்ன தோணுது?" என்றான் எதிர் கேள்வியாய்.


"ஹய்யோ! அத்தையை கூட புரிஞ்சிகிட்டேன்.. உங்களை தான் என்ன பண்றதுன்னே தெரியல" அவள் சலித்துக் கொள்ள அதற்கும் புன்னகை தான் அவனிடம்.


"இந்த சிரிப்புக்கு மட்டும் குறையே இல்ல.."


"ம்ம்ஹ்ம்ம்" என்றவனின் கிண்டல் குரலே இவளுக்குள் பனிச்சாரலை உண்டு பண்ணியது.


"இப்ப ஓகேவா? புகழ் ஹாப்பியா?" கார்த்தி கேட்க,


"அவன் ஹாப்பியோ இல்லையோ.. ஆனா நாங்க எல்லாரும் ஹாப்பி.. நீங்க அவனுக்கு சப்போர்ட்டா பேசுவீங்கன்னு நான் எக்ஸ்பெக்ட் பண்ணவே இல்லை தெரியுமா? அப்பா முகத்துல கூட அவ்வளவு சந்தோசம்" என்றாள் திவி.


"நான் ஒன்னும் உனக்காகவோ உன் அண்ணாக்காகவோ பேசலை.. ப்ரியா பாவமேன்னு..."


"என்ன?" முறைப்புடன் திவி கேட்க,


"இல்ல பிரியசகி பாவமேன்னு தான் பேசினேன்"


"ஆஹான் நம்பிட்டேன் நம்பிட்டேன்.."


"ஈவ்னிங் வீட்டுக்கு போலாமா இல்ல ஹனிகா போனதும் ஒரு வாரம் இங்கேயே இருந்துட்டு வர்றியா?" கார்த்தி கேட்க,


"ஏன் பொய் சொன்னிங்க? எப்ப பாரு என்னை ஹை பிபிலேயே வச்சுருக்கீங்க.. அத்தை மட்டும் சொல்லலைனா நான் வீட்டுக்கு வர்றது வரை என்கிட்ட உண்மையை சொல்லியிருக்க மாட்டீங்க தானே?"


"ஆமா! நான் அவ்வளவு கிளாஸ் எடுத்த அப்புறமும் அவ ஒரு வாரம் தங்குறானு சொல்லவும் ஏன் உன் முகம் மாறுது? அதான் அப்படி சொன்னேன்"


"நான் ஒன்னும் உங்களை சந்தேகப்படல.. எனக்கு அவளை புடிக்கல.. அதான் நீங்க சொல்லவும் கொஞ்சம்..."


"கொஞ்சம்?"


"கார்த்தி..."


"ஹ்ம்ம்! சரி சொல்லு.. இப்ப என்னை நம்புற தானே?" - கார்த்தி.


"நான் நம்பலைனு சொல்லவே இல்லையே!" - திவி.


"சொல்லலை தான் ஆனா உன் பார்வை சொல்லுச்சு.. அதுவும் ஹனிகாவை நேத்து பார்த்ததும் என்னை பார்த்தியே.. அந்த பார்வை பச்சையா சொல்லுச்சு"


"ப்ச்! இப்ப ஏன் இவ்வளவு பேசுறீங்க? ஒன்னு பேசியே ஆஃப் பண்றது.. இல்லைனா பேசாமலே ஆஃப் பண்றது"


"சரி ஓகே உன் சாய்ஸ்க்கே வர்றேன்.. பேசாமலே..." அவன் இழுக்க, இவள் சந்தேகமாய் பார்க்க


"பேசாமலே ஆஃப் பண்றது தான் எனக்கும் புடிச்சிருக்கு.. உனக்கும் ஓகேன்னா..." அவன் சொல்லவும் நேற்றைய ஞாபகங்களில் இவள் முகம் குப்பென சிவந்துவிட அதனையும் சிரிப்புடன் ரசனையாய் பார்த்து அமர்ந்திருந்தான் நம் நல்லவன்.


"ஆனா நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும் திவி" அவன் சொல்ல, சாதாரணமாய் அனைவரும் அழைக்கும் திவி என்ற அழைப்புக்கு எப்போதும் போலவே வானத்தில் பறந்து மிதந்து அழகாய் தெரிந்தாள் அவன் கண்களுக்கு.


"என்ன பேசணும்?"


"இங்கே இல்ல.. நம்ம வீட்ல"


"ஹ்ம்ம் சரி"


"ம்ம் அம்மாகிட்ட ஈவ்னிங் வர்றதா சொல்லிட்டு வந்தேன்"


"அதான் மணி 3 ஆயிடுச்சே.. கிளம்பலாம்.. நீங்க பிரெஷ் ஆகிக்கோங்க.. நான் அம்மா அப்பாகிட்ட சொல்லிட்டு வர்றேன்"


"ஷுர்?"


"ஏன்?"


"இல்ல இன்னும் நீ புகழ்கிட்ட பேசலையே? மேரேஜ் பத்தி அத்தை மாமா பேசுவாங்க இல்ல?"


"அதெல்லாம் அவங்க பேசி முடிவெடுத்து நம்ம வீட்ல வந்து இன்வைட் பண்ணட்டும்.. அப்புறமா வந்துக்கலாம்.. இப்ப நாம கிளம்பலாம்" அவனுக்கு முன் அவள் தயாராய் நிற்க, எதையோ நினைத்து சிரித்தான் கார்த்தி.


"ஏன் சிரிக்குறிங்க?"


"இல்ல அங்கே அம்மாகிட்ட மாட்டின மாதிரி இன்னைக்கு உன் அம்மாகிட்ட மாட்டிக்க போற.. அதை தான் நினைச்சேன்.." என்று சொல்லி அவன் சிரிக்க, முறைத்தவள்


"மாட்டிவிட்டுட்டு சிரிக்குறதே உங்களுக்கு வேலையா போச்சு.." என்றபடி அறையைவிட்டு வெளியே சென்றாள்.


இவனும் தனக்குள் எழுந்த மாற்றங்களை நினைத்தபடி செல்லும் அவளையே பார்த்திருந்தான்.


"ம்மா நான் கிளம்புறேன்" திவி சொல்ல,


"அதுக்குள்ளவா? இப்ப தானே டி சாப்பிட்டிங்க? ரெஸ்ட் எடுத்துட்டு அப்புறமா போலாம் இல்ல.." என்றார் சுகுணா.


"அதான் வந்த வேலை முடிஞ்சுதே.. அப்பாக்கு சம்மதம் தானே?"


"எங்களுக்கு என்ன டா? வாழப் போறது அவன்.. அவனுக்கு புடிச்சிருந்தா போதும்.. அப்பா கூட அப்படி தான் சொல்லிட்டு போறாங்க"


"ஹ்ம்ம் நீங்க சொல்றதும் சரி தான். நல்ல பொண்ணுனு தான்ம்மா அவங்க சொன்னாங்க"


"அது தான் திவி அப்பாக்கும் சந்தோஷம்.. மாப்பிள்ளையே புகழுக்கு பொண்ணு பேசினதும் தான் அவருக்கு இன்னும் திருப்தியே!"


"இதே சந்தோஷத்தோட சீக்கிரமா பொண்ணு பார்க்க போலாம்.. நல்ல நாள் பார்த்து முடிவு பண்ணி என் வீட்டுக்கு வந்து சொல்லுங்க நாங்க வர்றோம்.. இப்ப கிளம்புறோம்.. புகழுக்காக தான் ஆட்டோ புடிச்சி ஓடி வந்தேன்.. அங்கே என் அத்தை எனக்காக வெயிட்டிங்.." திவி சொல்லவும் பெற்றவராய் அன்னைக்கு அவ்வளவு சந்தோஷம்.


"சரிங்க மேடம்.. நீங்க கிளம்புங்க.. புருஷன் கூப்பிட்டதும் என்னென்ன கதையெல்லாம் சொல்லி ஓடப் பாக்குற.. ஹ்ம்ம் நீ பொழச்சுப்ப டி" கிண்டலாய் அன்னை சொல்ல, சரியாய் கார்த்தி சொன்னது அங்கே நடந்து கொண்டிருந்தது.


"புகழ்! நான் கிளம்புறேன்.. சொன்னதை மறந்திடாத.. உன் லவ்வை வீட்ல ஓகே பண்ணினா நான் சொல்றதை செய்யுறேன்னு சொல்லி இருக்க.." என மீண்டும் புகழிடம் நியாபப்படுத்த, அவனுக்கிருந்த சந்தோஷ மனநிலையில் எல்லாவற்றிற்கும் தலையாட்டி வழியனுப்பி வைத்தான்.


"அத்தை! நான் வந்துட்டேன்" துள்ளி குதித்து வீட்டினுள் ஓடி வந்தாள் திவி. பின்னோடே அடக்கமாய் கார்த்தி.


"எல்லாம் பொறந்த வீட்டுக்கு சந்தோசமா போகும்.. இதை பாரு.. அதுவும் காலையில இது முகத்துல தான் முழிச்சேன்.. என்னவோ பல மாசம் கழிச்சு பாக்குற மாதிரி.. எங்கேருந்து தான் இழுத்துன்னு வந்தியோ டா" மகனிடம் குறை போல கலா சொல்ல,


"மாட்டேன்னு சொன்னவனை இழுத்து புடிச்சி கட்டி வச்சது மறந்து போச்சாக்கும்?" என பதில் பேசியபடியே தன் அறைக்கு சென்றான் கார்த்தி.


"என்டி உள்ளே போறது என் மகன் கார்த்தி தானே? பேச்செல்லாம் அவன் அம்மாவாட்டம் வருது.. சரி இல்லையே! என் புள்ளைய கூட்டிட்டு போய் என்னடி செஞ்ச?" மருமகளிடம் பேச்சை தொடங்க,


"அய்யோ அதை அப்புறம் பேசலாம்.. எங்கே அந்த முட்டக் கண்ணி? போய்ட்டாளா? உங்க புள்ள ஒரு நிமிஷத்துல என்னை கதைகலங்க வச்சுட்டார்" என ஹனிகாவை பற்றி கேட்க ஆரம்பித்தாள்.


"ஆமாம்மா! முதல்ல அதை முழுசா உங்க மருமகள்ட்ட சொல்லிடுங்க.. இல்லைனா அவளுக்கு தலையே வெடிச்சுடும்.. " என்றபடி பனியனுடன் வெளியே வந்தான் கார்த்தி.


"இந்த கலா பொறுப்புல ஒரு வேலையை கொடுத்துட்டு போனா சும்மா விடுவேனா.. அவளோட மாமன்காரன் வந்தான்.. அவன் கூடவும் போக மாட்டேன்னு ஒரே அடம்.." கலா சொல்ல,


"அய்யய்யோ அப்புறம்?" கதை போல கேட்க ஆரம்பித்தாள் திவி. வழக்கம் போல தலையில் அடித்துக் கொண்டான் கார்த்தி.


"அப்புறம் என்ன? கார்த்தியை பார்க்கணும்னு ஒரே அழுகை.. அவ மாமனும் கையை பிசைய ஆரம்பிச்சுட்டான்.. விடுவேனா நானு? கார்த்தியும் திவியும் ரெண்டு நாள்ல ஹனிமூன் போறாங்க.. திரும்பி வர ஒரு மாசம் கூட ஆகலாம்.. அப்ப என்னடிம்மா பண்ண போறன்னு கேட்டேன்.. அவ்வளவு தான் மூஞ்சில கடுகு கறிவேப்பிலை போட்டு தாளிக்குற அளவுக்கு கோபத்தோட ரெண்டு நாள் அவளை ஆசையா பார்த்துகிட்ட என்கிட்ட கூட சொல்லிக்காமல் கிளம்பிப் போய்ட்டான்னா பார்த்துக்கோ.. என் மனசு எவ்வளவு கஷ்டப்பட்ருக்கும்?" வருத்தம் போல முடித்து வைத்தார்.


"எது நீங்க? ரெண்டு நாள் ஆசையா பார்த்திங்க?"நக்கல் குரலில் கார்த்தி கேட்க,


"பின்ன நான் தானே டா அவளை கூடவே இருந்து பார்த்துகிட்டேன்.."


"ஆஹான்! அப்புறம் ஏன் மா அவ என்கிட்ட தனியா பேசணும்னு சொல்லி கூப்பிட்டு போன அப்புறம் ஒட்டு கேட்டு வந்து நின்னிங்க?" என அன்னைக்கு ஒரு வெடிகுண்டை தூக்கிப் போட்டான்.


"அய்யோ! அய்யோ! என் மானம் போச்சு மரியாதை போச்சு..எல்லாம் போச்சு.. உன்னால தானடி.. உன்னால தானே நான் அந்த வேலையை பார்த்தேன்.. இப்ப என் மகன் என்னை என்ன கேள்வி கேட்குறான் பாரு.. இந்த நேரம் பார்த்து எனக்கு சப்போர்ட் பண்ண என் புருஷன் வேற வீட்ல இல்லையே" திவி முதுகில் நாலு போடு போட்டவர் புலம்பளுடன் திவியைப் போட்டுக் கொடுக்க,


முதுகைத் தேய்த்துக் கொண்டே அசடு வழிந்தோடும் முகத்துடன் கார்த்தியை பார்த்தாள் திவி. அவளை நக்கல், ஏளனம், கிண்டல் என அனைத்தும் கலந்த குறுகுறு பார்வை பார்த்து நின்றான் கார்த்தி.


காதல் தொடரும்..
 
Top