• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கண்டேன் காதலை 21

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 21

"என்னடா? என்ன பிரச்சனை உனக்கு? குட்டிப் போட்ட பூனை மாதிரி சுத்தி வந்துட்டு இருக்க? அண்ணிகிட்ட என்ன சொல்லணும்?" கலா கேட்க,

"ப்ச் மா! கொஞ்சம் அமைதியா இருங்க" என்றவன்,

"மாமா" என சண்முகம் பக்கம் திரும்பினான்.

"சொல்லுங்க மாப்பிள்ளை!" சண்முகம் கேட்க,

"இல்ல! அதுவந்து நான் இன்னைக்கு... நாங்க.. திவி..." என இழுக்க,

"சரிதான் நீ யோசிச்சு வை. காலையிலே நாங்க வந்து என்னனு கேட்டுக்குறோம்.. வாங்க எல்லோரும்" என கூட்டத்தைக் கலைக்கப் பார்த்தார் கலா.

"அய்யோ ம்மா! நான் வீட்டுக்கு போய்ட்டு காலையிலே சீக்கிரமே வந்துடுறேன்னு சொல்ல வந்தேன்" கார்த்தி சொல்ல,

"அட இதுக்கு ஏன் இவ்வளவு மெல்லுரிங்க? இங்க தூங்குறதுக்கு கொஞ்சம் அன்ஈஸியா தான் இருக்கும்.. உங்களுக்கும் டையார்ட்டா இருக்குமே? சரி சரி நீங்க போய்ட்டு ரெஸ்ட் எடுங்க" சண்முகம் சொல்ல,

"இதுக்கு தானா டா இந்த அக்கப்போரு? சரி சரி கிளம்பு.. இந்தா டி.. நீ வர்றியா இல்ல அவனை வழியனுப்பிட்டு தான் வருவியா?" என கலா திவியிடம் கேட்க, கார்த்தியின் கெஞ்சல் பார்வை திவிக்கு புரியவே இல்லை.

"மாமா! நான் திவியையும் கூட்டிட்டு போய்ட்டு கூட்டிட்டு வர்ரேன்" எவ்வளவு கூச்சமாய் தயக்கமாய் இருந்த போதும் கார்த்தி வேறு வழி இல்லாமல் சொல்லியே விட திவி கண்களோடு வாயும் திறந்து கொண்டது பல மீட்டர் தூரத்திற்கு.

அத்தைக்கு என்ன பதில் சொல்வதென ஒரு நொடி திவி யோசிப்பதற்குள் போட்டு உடைத்திருந்தான் கார்த்தி. அதில் அவளவுமே சிலையாகி அவனைப் பார்த்திருக்க, பெரியவர்கள் நிலையோ இன்னும் பரிதாபம்.

முதலில் சுதாரித்தது என்னவோ கலா தான். "ஏன் டி இத்தனை நாளும் நான் என்ன உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல கபடியா விளையாடிட்டு இருந்தேன்? இப்படி வந்த இடத்துல டீசன்சி பாக்குற என் புள்ளையையே இப்படி பேச வச்சுட்டியே? சரி சரி அவன் இன்னும் எதாவது சொல்றதுக்கு முன்னாடி ரெண்டு பெரும் இடத்தை காலி பண்ணுங்க" என்றவர், என்ன பதில் சொல்வது என தெரியாமல் நின்ற மற்றவர்களை தள்ளிக் கொண்டு அவரவர் அறையில் சேர்த்தார்.

அப்போதும் திவி கார்த்தியையே பார்த்து நிற்க, அவள் கைப்பிடித்து கார்த்தி கிட்டத்தட்ட இழுத்து தான் சென்றான் காருக்கு.

எதுவும் பேசாமலே நாற்பத்து ஐந்து நிமிடப் பயணம். திவி அவ்வப்போது திரும்பி அவனைப் பார்ப்பதும் வெளியில் பார்ப்பதுமாய் இருக்க, கார்த்தி அதை அறிந்தாலும் அவள் புறம் திரும்பிடவில்லை.

காருக்குள் ஓடிய மெல்லிய இசை அந்த இரவை ரசிக்க வைக்க போதுமானதாய் இருந்தது.

நான் போகிறேன்
மேலே மேலே...
பூலோகமே காலின் கீழே...
விண்மீன்களின் கூட்டம்
என் மேலே!
பூவாலியின் நீரைப்போலே, நீ
சிந்தினாய் எந்தன் மேலே...
நான் பூக்கிறேன் பன்னீர் பூப்போலே!!!

எஸ்பிபியின் குரலில் இந்த பாடல் ஆரம்பிக்க கார்த்தியின் கைகள் ஸ்டீரிங்கில் தாளமிட்டு உதடுகள் கூட முணுமுணுத்ததும் புதிதாய் ஒரு பரவசம் திவ்யாவினுள்.

தடுமாறிப்போனேன்
அன்றே உன்னைப்பார்த்த நேரம்...
அடையாளம் இல்லா ஒன்றைக்
கண்டேன் நெஞ்சின் ஓரம்...
ஏன் உன்னைப் பார்த்தேன்?
என்றே உள்ளம் கேள்விக்கேட்கும்....
ஆனாலும் நெஞ்சம் அந்த நேரத்தை
நேசிக்கும்!!!!

என்ற வரிகளினை அப்படியே உள்வாங்கி ரசித்து கார்த்தியும் சேர்ந்து பாட உதட்டில் அவனின் அக்மார்க் புன்னகை அப்படியே உறைந்து கிடந்தது.

அவனின் ஒவ்வொரு அசைவுகளையும் தனக்குள் சேகரித்துக் கொண்டிருந்தவளுக்கு இந்த நொடி அப்படியே மனதில் பதிந்து போக, அவனின் இந்த உணர்வுகளுக்கு தான் தான் காரணம் என்ற எண்ணமும் சேர்ந்து பெண் அவளை நாணம் கொள்ள வைத்தது என்னவோ நிஜம் தான்.

"நிறைய டைம் இந்த சாங் கேட்ருக்கேன் திவி.. ஆனா மீனிங் தெரிஞ்சு புரிஞ்சு இன்னைக்கு தான் கேட்குறேன்னு நினைக்குறேன்" அவள் புறம் திரும்பாமலே அவன் சொல்லிவிட இன்னும் இன்னும் உயரப் பறந்து கொண்டிருந்தாள் திவி.

"ஹான்! ஆனா பார்த்த நேரத்துல எல்லாம் தடுமாறின மாதிரி தெரிலேயே?" பாடல் வரியிலேயே அவனை மடக்கினாள்.

"ஹ்ம்ம்! எக்ஸாக்ட்லி ரைட்.. ஆனா அடுத்த நாளே தடுமாறினதும் உண்மை தான் மேடம்" அவன் பேச்சில் இருந்த உற்சாகமும் ஏதோ ஒரு தேஜசும் அதற்கு மேல் அவளை பேச விடவில்லை.

"சச் அ நைஸ் சாங்!" என்றவனின் அந்த பயணம் அவ்வளவு இனிமையாய் இருந்தது என்றால் அவளுக்கோ அது தித்தித்தது தான் உண்மை.

இரவு பதினோரு மணி அளவில் தான் வீடு வந்து சேர்ந்திருந்தனர்.

"திவி! ஒரு கிளாஸ் பால் ப்ளீஸ்" என்றவன் அறைக்குள் சென்றுவிட, இன்னும் இனம் புரியா உணர்வுடனும் ஒரு பரவசத்துடனும் சமையலறைக்குள் நுழைந்தாள் திவி.

அடுத்த பத்து நிமிடங்களில் இவன் குளித்து முடித்து வரவும் திவி பாலுடன் அறைக்குள் வரவும் சரியாய் இருந்தது.

"ஹ்ம்ம் வா" வாசலில் நின்றவளை இவன் சாதாரணமாய் உள்ளே அழைக்க, தன் மனதை கடினப்பட்டு மாற்றி சாதாரணமாய் உள்ளே நுழைந்தாள் திவி.

"ஹனிகா கால் பண்ணியிருந்தா" கார்த்தி சொல்ல,

"ஓஹ்!" என்றதற்கு மேல் எதுவும் கேட்கவில்லை அவள்.

"ஏன்னு தெரிஞ்சுக்கணுமா?" கார்த்தி மேலும் கேட்க,

"தேவையில்ல!" என்றவளின் நேற்பார்வை அவனை இன்னுமே சாய்த்தது.

"நாட் பேட்!" சொல்லிக் கொண்டான்.

"இப்ப எதுக்கு.... வீட்டுக்கு... கூட்டிட்டு வந்திங்க? அங்கேயே... எல்லாரோடவும் தங்கியிருக்கலாம் தானே?" - திவ்யா.

"ம்ம் தங்கியிருக்கலாம் தான்.. ஆனா நீ தான் இவ்வளவு தூரம் என்னை வர வச்சுட்ட"

"நானா?"

"நீயே தான்" என்றவன் ஜன்னல் திரைகளை இழுத்துவிட்டான்.

"என்ன சொல்றிங்க?"

"திவி! ஹ்ம்ம்.." அவன் யோசித்து நிற்க,

"என்னாச்சு?" என்றாள் அவன் அமைதியில்.

"ப்ச்! இன்னும் எனக்கு பேச தெரியலல?"

"என்ன சொல்றிங்க? எனக்கு ஒன்னும் புரியல"

"எனக்கு தான் சொல்ல தெரியல திவி" என்றவனை அவள் பார்த்தபடி நிற்க,

"இது தான்.. இது தான் என் பிரச்சனையே! நீ இன்னைக்கு காலையிலே இருந்து இப்படி பார்த்தே என்னை டிஸ்டர்ப் பண்ணிட்ட திவி" அவன் பேச இவள் மௌனித்தாள்.

"என்ன என்னவோ எனக்கு தோண வச்சுட்ட.. என்னால நான் நானா இருக்க முடியாதபடி செஞ்சுட்ட..." அவன் பேசிக் கொண்டே செல்ல,

"ஹெல்லோ ஹெல்லோ! என்ன பேச தெரியலனு பேசிட்டே போறீங்க? இவ்வளவு நாள் நான் உங்களை பார்க்கலையா? இல்ல அப்ப நான் உங்க கண்ணுக்கு தெரிலயா?" திவி குறும்பாய் கேட்க,

"அதான் சொல்றேனே! அப்ப பார்த்தப்போ உன்னை புடிச்சது.. நீ செஞ்சது புடிச்சது.. நீ பேசினது புடிச்சது.. ஆனா இன்னைக்கு... அதெல்லாம் தாண்டி சம்திங்.... ஹ்ம்ம்.. ஓப்பனா சொல்லவா?" அவன் கேட்க, இவளுள் ரயில் ஓடும் சத்தம்.

"எனக்கு புடிச்சிருக்கு திவி.. எல்லாமே.. எல்லாமே புடிச்சிருக்கு.. அண்ட் இந்த நாளை இப்படியே விட என்னால... ஐ காண்ட் திவி" என்றவன் அவளருகே சென்று அவள் கைகளையும் பற்றியிருந்தான்.

"பால்.." திவி இழுக்க,

"குடிக்கலாமே!" என்றவன் கொஞ்சமாய் குடித்து மீதியை அவளிடம் நீட்டி கண்களை வேறு சிமிட்டிட,

'இந்த நேரம் பார்த்து தொண்டையிலே கிச் கிச் ஆகிடுச்சே!' மனதில் நினைத்து வைக்க மட்டுமே முடிந்தது அவளுக்கு.

"உனக்கு ஓகே தானே?" அவன் கேட்க,

"என்ன?" என்றாள் விழிவிரித்து.

"இல்ல.. உனக்கு ஒன்னும் அங்கே இருக்க முடியலைன்னு கஷ்டமா இல்லையே?" இன்னும் அவள் கைகள் மட்டும் அவனிடத்தில்

"இ.. இல்ல.."

"ஹ்ம்ம்!" என்றவன் அப்படியே அவள் உள்ளங்கைகளில் மட்டும் விளையாடியபடி இருக்க பெண் நிலை சொல்லவும் தேவையில்லை.

"தூங்கலாமா?" - திவி.

"ம்ம் ஓகே" என்றவன் விளக்கை அணைத்து அவள் அருகில் படுக்க, இறுக்கமாய் கண்களை மூடிக் கொண்டாள்.

"உனக்கு எல்லாம் ஓகே தானே?" திரும்பிப் படுத்திருந்த அவள் காதில் மீண்டும் அவன் குரல் கேட்க, இம்முறை எதற்கு என கேட்கக் கூட தோன்றவில்லை அவளுக்கு.

அவளின் மௌனத்தையே சம்மதமாய் கொண்டு அவனின் முதல் அணைப்பை தொடங்கி வைத்தான்.

புகழ் நிச்சயதார்த்தத்திற்கான திவியின் அலங்காரமும் பூவின் வாசமும் அவனை இன்னும் வேறொரு உலகத்திற்கு இழுத்து செல்ல, கணவனின் இந்த புதிய உணர்வுக்கு விடை தேட முயன்று அவளும் இணைந்து கொண்டாள் அவனுடன்.

இந்த நாள் இந்த நிமிடம் என எதுவும் நம் கைகளில் இல்லை. நிமிடத்தில் தோன்றும் உணர்வுகளுக்கு அந்தந்த சூழ்நிலைகளை பொறுத்தே பதில்களும் அமைகின்றன.

ஏற்கனவே இன்று திவியின் பார்வை கார்த்தியை அழைக்கழித்திருக்க, ஹனிகாவை பற்றி இவனே கூற வந்தும் அவள் அதை கேட்க மறுத்து இவனுள் இன்னும் இறங்கிப் போனாள்.

இல்லறம் தோன்றும் நேரம் இனிமையாய் இருக்க இவர்களின் மனதிலும் அப்படி ஒரு நிம்மதியான தருணம் இது.

தேடாமலும் தேடப்படாமலும் இருந்தவர்களின் வாழ்க்கை ஒரு மையப்புள்ளியை நோக்கி ஒன்று சேர காலம் அதிகமாய் எடுத்துக் கொள்ளவில்லை. காரணம் புரிதலுடன் ஆன காதல்.

திவி... திவி.. என்ற புலம்பலும் இனிமையான வளையல்கள் கொலுசுகளின் ஓசையுமாய் அழகாய் முடிந்திருந்த அந்த இரவு, கார்த்தி திவியின் வாழ்வின் அழகான தொடக்கமாயும் அமைந்தது.

தன் மார்பில் தூங்கிக் கொண்டிருக்கும் மனைவியின் முகத்தை பார்க்க பார்க்க ஒரு பரவசம் எழுவதையும் அவனால் தடுக்க முடியவில்லை. இன்னும் அரை மணி நேரத்தில் கிளம்பினால் தான் புகழ் திருமணத்தின் சடங்குகளில் முன் நின்று கலந்து கொள்ள முடியும்.

நிஜமாய் இப்படி ஒரு நாள் தன் வாழ்வில் வரும் என ஒரு மாதத்திற்கு முன் நினைத்தும் பார்த்திருக்கமாட்டான் கார்த்தி.

'இவள் எப்படி என்னுள் வந்தாள்?' என்கின்ற கேள்விக்கு அவசியமே இல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாய் தன்னுள் வந்து கொண்டிருந்தவளை அவனும் உணர்ந்து கொண்டு தானே இருந்தான். 'ஆனால் இரவு நடந்தது?' என்கின்ற கேள்விக்கு அவனால் சிரித்துக் கொள்ள மட்டுமே முடிந்தது.

"திவி" மென்மையாய் அவன் அழைக்க, அவன் கரங்கள் அவள் தலைகோதிக் கொண்டிருந்தது.

"திவிமா" என்றதும் இன்னும் வாகாய் அவன் தோள்களைக் கட்டிக் கொண்டவளை அவனுக்கும் விட மனமில்லை.

"நல்லா தான் இருக்கு.. ஆனா இன்னைக்கு உன் பிரதர் மேரேஜ்... போயே ஆகணுமே!" அவள் காதில் முடிகளை ஒதுக்கியபடி அவன் சொல்ல, சட்டென கண்விழித்தாள் திவி.

"வேணாமா?" அதே நிலையில் இருந்து அவன் கேட்க, எழுந்து ஓடியே விட்டாள் குளியலறைக்கு. அவன் சிரிப்பு சத்தம் மட்டும் அவளைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தது.

தொடரும்..
 
Top