• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கண்டேன் காதலை 8

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 8


"புகழ் ரொம்ப அமைதியான டைப் போல! இல்ல திவி" கலா கேட்க,

"ஆமா அத்தை! என்னை மாதிரியே" என்றவளை மேலும் கீழுமாய் அவர் பார்க்க,

"ஏன் அப்படி பாக்குறீங்க? நிஜமாவே நான் அமைதி தான்" என்றாள்.

"அது தெரியும்! ஆனாலும்... சரி விடு!" ஏதோ சொல்ல வந்து அவர் நிறுத்த,

"சொல்லிடுங்க அத்தை! ஏதோ என்னை கழுவி ஊத்த தானே வந்திங்க?"

"அந்தளவுக்கு உனக்கு புரிஞ்சதே சந்தோஷம். அம்மா என்ன சொன்னாங்க? அடிக்கடி வந்து போக சொன்னியா?"

"ம்ம் சொல்லிருக்கேன்.. ஆனால் வர்றது டவுட் தான். இந்த புகழ்க்கு ஒவ்வொரு விஷயத்துக்கும் அம்மா வேணும்"

"பின்ன! அவனும் தான் வயசுக்கு வந்துட்டானே! பேசாமல் ஒரு கல்யாணத்தை பண்ணி வச்சுடுங்க! உன் அம்மாக்கும் நீ இல்லாத கவலை போய்டும்ல"

"இப்ப தான் பொண்ணு பாக்குறது பத்தி அம்மா பேசினாங்க! கரெக்ட்டா நீங்களும் அதையே சொல்றிங்க அத்தை!"

"அம்மாங்க மனசு அம்மாங்களுக்கு தானே தெரியும்.சரி என்ன மாதிரி பொண்ணு எதிர்பார்க்குறான்னு கேட்டியா புகழ்கிட்ட?"

"அதை ஏன் கேட்குறீங்க அத்தை! இவன்லாம் கல்யாணம் பண்ணுவானான்னே நான் டவுட்ல இருந்தேன். இவன் என்னனா நான் ஒரு பொண்ணை லவ் பண்றேன். நீ தான் ஹெல்ப் பண்ணனும்னு என்கிட்ட வந்து நிக்குறான்" திவ்யா ஆச்சர்யமாய் அத்தையிடம் சொல்ல,

"சரியா போச்சு போ!" கலா சலித்து கொள்ளவும்,

"அதே தான் அத்தை! உங்களுக்கும் நம்ப முடியலை இல்ல?" அவள் கேட்க,

"நான் அதை சொல்லல டி. ஹெல்ப்க்கு போயும் போயும் உன்கிட்ட வந்திருக்கானே! அதை தான் சொன்னேன்.. நீயே இதுல ஒரு வேகாத வேர்க்கடலை..நீ ஹெல்ப் பண்ணி அவன் கல்யாணம் பண்றதெல்லாம் நடக்குற காரியமா?" முருங்கை கீரையை ஆய்ந்து கொண்டு அவர் பேசிக் கொண்டிருக்க,

"அத்தை....." என காதில் புகைவர திவ்யா கத்தும் நேரம் வீடு வந்து சேர்ந்தான் கார்த்தி.

"பாரு டா! உன் பொண்டாட்டி என்னை எப்படி சத்தம் போடுறானு! இதெல்லாம் என்னனு கேட்க மாட்டியா நீ? கொஞ்சம் அடக்கி வை டா" பாவமாய் கலா சொல்லி மீண்டும் கீரையில் கவனம் வைக்க,

என்ன நடக்கிறது என புரியாமல் அத்தையை பார்த்துக் கொண்டிருந்தவள் திரும்பி தன் கணவனை பார்க்க 'உங்க ரெண்டு பேருக்கும் வேற வேலையே இல்ல' என முனகிக் கொண்டு அறைக்கு சென்றான் அவன்.

"ஏன்? எதுக்கு இந்த கொலவெறி?" அத்தையிடம் கேட்டவள் "உங்களை வந்து பார்த்துக்குறேன்" என்றுவிட்டு கணவனுக்கு டீ போட சென்றாள்.

"என்ன டி பண்ண போற?" கலா குரல் கொடுக்க,

"அவருக்கு டீ போட போறேன் அத்தை" என அவளும் உள்ளிருந்தே குரல் கொடுக்க,

"சரி சரி போடு" என்றவர் சிரிக்கும் சத்தம் அவளுக்கு கேட்கவில்லை.

"ஏன் மா அந்த காரை சர்வீஸ் போட சொல்லியிருந்தேனே அப்பா போகவே இல்லையா?" கார்த்தி கேட்டுக் கொண்டே அன்னை அருகே வர,

"அப்பா நேத்து வெளில போய்ட்டாரு டா.. நாளைக்கு பைக்ல போ நான் அப்பாகிட்ட சொல்லிடுறேன்" என்று பேசிக் கொண்டிருந்த நேரம் டீயுடன் வந்தாள் திவி.

அவன் முன் அதை நீட்ட "என்ன இது?" என்றான் பார்த்ததும் என்ன என தெரிந்தே!.

"டீ!" அவள் சொல்ல,

"நான் குடிக்க மாட்டேனே! என்றதும் "அப்ப காபி கொண்டு வரவா?" என்றாள்.

"ஈவினிங் டீ, காபி எல்லாம் பழக்கம் இல்ல திவி" என்றவன் அன்னை பக்கம் பேசிக் கொண்டே திரும்ப அவர் சிரிப்பை அடக்கிக் கொண்டிருந்தார்.

அவன் சொல்லி முடித்ததும் "நீங்க சொல்லியிருக்கலாமே அத்தை!" என அத்தையிடம் சொல்ல வந்தவள் அவர் சிரிப்பை கண்டு மீண்டும் முறைத்து நின்றாள்.

"அத்தை! ஐம் பாவம் என்னை விட்டுடுங்களேன்" சொன்னது தான் தாமதம் என்பதை போல சிரித்தவர் இருவரின் முறைப்பையும் பார்த்து

"இது கூட தெரில! என்ன தான் பண்றிங்களோ! உங்களையெல்லாம்..." என்று மீண்டும் ஒரே டயலாக்கை பேச,

"எங்களுக்கு கல்யாணம் ஆகி இன்னும் ஒரு வாரம் கூட ஆகல" என்று திவ்யா முறுக்கிக் கொள்ள,

"அதை கொடு" என்றவன் ஒரே மடக்கில் வாயில் ஊத்திக் கொண்டு எழுந்துவிட்டான்.

"ஏங்க நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்" அவன் எழுந்ததும் வேகமாய் திவ்யா சொல்ல,

"என்னடி அவனை மிரட்டுற?" என்று வெளியே வந்தவர் அருகில் அதே வேகத்தில் சென்றவள்

"அத்தை! நீங்களே பேசு பேசுன்றிங்க! பேசற நேரம் கலாய்க்கிறிங்க நான் என்னதான் பண்ணட்டும்?" அவர் காதில் இவள் படபடக்க,

"உன்னை பேச வேண்டாம்னு யாரு சொன்னா? இப்படி தடதடனு பேசாதன்றேன். அவனுக்கு பச்ச உடம்பு! பிஞ்சு மனசு!... பொத்தி வளத்துருக்கேன்! பயத்துல துன்னூறு அடிக்க வேண்டியதாகிடாம பாத்துக்கோ" அவளை போலவே அவரும் காதில் கிசுகிசுத்தார்.

"சத்தியமா உங்களுக்கு சமமா என்னால பேச முடியாது அத்தை! எதாவது தப்பு பண்ணியிருந்தா நாலு திட்டு கூட திட்டிடுங்க... ஆனா இப்படி பழி வாங்காதீங்க" திவ்யா கெஞ்சிக் கொண்டிருக்க,

"இப்ப என்னாச்சு உங்க ரெண்டு பேருக்கும்?.. ம்மா வரவர நீங்க ரொம்ப படுத்துறீங்க. நான் அப்பா கடைக்கு போய்ட்டு வர்றேன்" என்றவன் சென்றே விட மாமியாரை முறைத்து நின்றாள் மருமகள்.

"ஹாஹா! நீ பேசணும் சொன்னியே கொஞ்சமாச்சும் உன்னை மதிச்சானா?"

"வேணாம் அழுதுடுவேன்!"

"அதையாச்சும் ஒழுங்கா பண்ணு! புருஷன்கிட்ட பேச பெர்மிஸ்ஸன் கேட்டு நிக்குறா பின்ன போகாமல் என்ன செய்வான்?" போகிற போக்கில் கலா பேசி செல்ல, முகத்தை திருப்பிக் கொண்டு அமர்ந்துவிட்டாள் திவ்யா.

"ஹாய் சகி! வந்து ரொம்ப நேரம் ஆச்சா!" - புகழ்.

"ச்ச! ச்ச! இப்ப தான் ஒன் ஹவர் தான் ஆகுது" என்றவள் முகம் அத்தனை கடுப்பில் இருக்க அசடாய் அவன் சிரித்தான்.

"நீ பெரிய அப்பாடக்கர்னா நான் உனக்காக வெயிட் பண்ணனுமா? ஒரு நாள்.. ஒரே ஒரு நாளாச்சும் எனக்கு முன்ன வந்து எனக்காக வெயிட் பண்ணியிருப்பியா?" பிரியசகி அரை மணி நேரத்திற்கும் மேலாக அந்த பார்க்கில் இவனுக்காக காத்திருந்த கோபத்தில் பொரிய,

"எனக்கு இது பழக்கம் இல்ல சகி! அன்னைக்கு இப்படி தான் தனியா எவ்வளவு நேரம் வெயிட் பண்ணினேன் தெரியுமா உனக்காக? போற வர்றவங்க எல்லாம் என்னையே பார்த்துட்டு போனாங்க.."

"அதுக்காக நான் வெயிட் பண்ணா பரவால்லையா? என்னை யாரும் பார்க்க மாட்டாங்களா? சிம்பிளா வந்தோமா இருந்தோமான்னு இருந்தா உன்னை யாரு பார்க்க போறாங்க? நான் ராயல்னு நெத்தில எழுதி ஒட்டாத குறையா ஹைடெக் வாட்ச்... பிரேஸ்லெட்.. தலையில கேப்.. ஆப்பிள் போன்னு வச்சுட்டு பார்க்ல திருட்டு முழி முழிச்சுட்டு இருந்தா அப்படி தான் பார்த்துட்டு போவாங்க"

"அதுக்காக நான் என்ன வேஷம் போட்டுட்டா வர முடியும்.. நான் எப்பவும் இப்படி தான்..." முகத்தை பாவமாய் வைத்து தனது சகியிடம் அவன் திட்டு வாங்கும் அழகை சுகுணா பார்த்திருந்தார் என்றால் நெஞ்சு வலி கூட வந்திருக்கும்.

"அவனவன் காலேஜ் கட்டடிச்சு வேலைக்கு மட்டம் போட்டு ஆளை கூட்டிட்டு ஊர் சுத்துறான்.. நீ என்னடான்னா ரூல்ஸ் போட்டு லவ் பண்ற! உன்னை எல்லாம்...."

"ஏய் என்ன சும்மா சும்மா திட்டுற? நான் எப்ப ரூல்ஸ் பேசினேன்?" - புகழ்.

"நீ வாயை திறந்து சொல்லல அவ்வளவு தான். வாரத்துக்கு ரெண்டு நாள் தான் மீட் பண்ணனும். மாசத்துக்கு ஒரு நாள் தான் வெளில போகணும். வேலை நேரத்துல போன் பண்ணிடவே கூடாது. இதெல்லாம் என்ன? என்னை சொல்லணும்... உனனை பத்தி தெரிஞ்சும் உன்னை லவ் பண்ணினேன் பாரு"

"சகி ப்ளீஸ் டா.. நம்ம மேரேஜ்கு அப்புறம் உன்கூட பேசிட்டே இருக்கேன்.. உன்னை எங்கே வேணா கூட்டிட்டு போறேன்.. இப்பலாம் போனா அங்கங்க தெரிஞ்சவங்க நிப்பாங்க.. கூட்டமா இருக்கும்.. அதுமட்டும் இல்ல.. யாராச்சும் தப்பா பேசினா எனக்கு கோபம் வரும்..." அவன் சொல்லிக் கொண்டே செல்ல, கையெடுத்துக் கும்பிட்டவள்

"போதும் சாமி! இதையே தான் ஆயுளுக்கும் சொல்ல போற! அட போ டா!"

"அதான் நைட் போன் பேசுறோம்ல?"

"ஹான்! அப்ப மட்டும் அய்யாவுக்கு காதல் பொங்கும்.. இந்த சகிய தேடும்.. ஏன்னா அப்ப மட்டும் தானே வேலை வெட்டி இல்லாமல் நீ சும்மா இருக்குற.. முக்கியமா யாரும் பக்கத்துல இல்லாம கூட்டம் கூடாமல் உன் ரூம்ல நீ மட்டும் இருக்குற! அதனால தானே பேசுற? இல்லைனா போன் பண்ணுவ?"

"ப்ச்! இப்ப ஏன் இவ்வளவு டென்ஷன்? நமக்கு கிடைச்சதே ஒன் ஹவர் தான். ப்ளீஸ் மா"

"பார்த்தியா அது கூட டைமிங் தான்.. ஹையோ! தப்பு பண்ணிட்டேனே!" தலையை தாங்கிப் பிடித்து அவள் புலம்ப, இன்னும் பாவமாய் முகத்தை வைத்து கொண்டவனுக்கு நிஜமாய் இதெல்லாம் தவறாய் தெரியவில்லை.

பார்ன் வித் சில்வர் ஸ்பூன் ரகம் புகழ். இப்படி தான் அவன். சகி அவன் உயிர் தான். ஆனாலும் மனைவியென அவளை உரிமையுடன் கைப்பிடித்து அழைத்து செல்லும் நாள் வரை அவன் இப்படி தான் இருக்க போகிறான். அதற்கு அவளிடம் வாங்கிக் கட்டிக் கொள்ளவும் போகிறான்.

"சரி வா போலாம்?" - புகழ்

"எங்கே?"

"எங்கேயாவது போலாம்"

"அப்படி ஒன்னும் நான் புலம்பின அப்புறம் நீ கூட்டிட்டு போக வேண்டாம்"

"அதெல்லாம் இல்ல.. நீ இவ்வளவு பீல் பண்ணின அப்புறமும் நான் எப்படி சும்மா இருக்க முடியும்?"

"ஐயோ எப்பா! இந்த மூஞ்சிக்கும் வார்த்தைக்கும் குறையே இல்ல.. போடா!"

"சகிம்மா!"

"ஆரம்பிச்சுட்டான் டா"

"ஏன் சகி இப்படி பண்ற? சீக்கிரமே நாம கல்யாணம் பண்ணிக்கலாம். அம்மா நேத்து தான் கல்யாணம் பத்தி பேசினாங்க.. திவ்யாகிட்ட கூட பேசிட்டேன் தெரியுமா?"

"திவ்யாகிட்டவா? என்ன பேசின புகழ்? என்னை லவ் பன்றேன்னு சொல்லிட்டியா? திவ்யா என்ன சொன்னாங்க?"

"அம்மாகிட்ட பேசுறேன்னு சொல்லியிருக்கா! உன்னை பார்க்கணும்னு சொன்னா!"

"நிஜமாவா சொல்ற? அப்ப நானும் என் அம்மாகிட்ட சொல்லனுமா?"

"ஆமா! இனியும் வெயிட் பண்ணினா அப்புறம் இப்படி தான் நீ எதாவது என்னை சொல்லிட்டே இருப்ப"

"அப்ப நீயும் வா எங்க அம்மாகிட்ட பேசலாம்" சகி உடனே அழைக்க, நிச்சயம் அவன் மாட்டேன் என சொல்வான் என தான் நினைத்தாள்.

"நிச்சயமா வர்றேன்!"

"ஹேய் என்ன உடனே ஓகே சொல்லிட்ட? சீன் போடுவன்னு நினச்சேன்!"

"எனக்கு எப்பவும் சகி தான் முக்கியம். அவளுக்காக என்ன வேணா செய்வேன்"

"இப்படி பேசியே மயக்கிட்ற டா நீ!" என்றவள் அடுத்த நொடி சமாதானமாய் அவன் கைகளை பிடித்துக் கொண்டாள்.

காதல் தொடரும்..
 
Top