• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Pandiselvi

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 30, 2021
Messages
33
கரிசக்காட்டு கரிமருந்தில் பூத்த செங்காந்தளே.!

இந்தக் கதையை சிவகாசியை மையமாக வைத்து தான் எழுதப் போறேன். அதுனால கதைக்குள் போறதுக்கு முன்னாடி சிவகாசி பற்றி சிறிது தெரிந்து கொள்ளலாம்.

சிவகாசி- சிவகாசினு சொன்னாலே எல்லாருக்கும் தானாக நினைவுக்கு வர்றது பாட்டாசு தான். தீபாவளி சமயத்துல தான் பட்டாசு வாங்கி கலர் கலராக வானவேடிக்கைகளும் வண்ண மத்தாப்புக்களும் வானவில்லாய் காட்சியளிக்கும். இது மட்டுமே நிறைய பேருக்கு தெரிந்திருக்கும். அதன் வண்ணங்களை ரசிக்கும் நமக்கு அதன் பின்னால் எவ்வளவு உழைப்பு இருக்குனு தெரியாது. அதன் வண்ணங்களை மட்டுமல்ல அதன் பின்னால் பல தொழிலாளிகளின் உயிரை உறிஞ்சும் உழைப்பும் இருக்கிறது.

பட்டாசு பற்றி பார்ப்பதற்கு முன் தென் மாவட்டத்தில் உள்ள சிவகாசியைப் பற்றி பார்த்து விட்டு வருவோம் வாங்க..

சிவகாசி- தென் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். குட்டி ஜப்பான் என்று பெயர் பெற்றது. அந்த அளவிற்கு தொழில்கள் அங்கு நிறைய உள்ளன. தீப்பெட்டி, பட்டாசு மற்றும் அச்சுத் தொழிலுக்கு பெயர் போனது. இந்தியாவில் 90 சதவீதம் பட்டாசுகள் சிவகாசியிலிருந்து தான் தயாரிக்கப்படுகின்றன. தொழில் என்பது கால்மேல் கால் போட்டுக்கொண்டு இருக்கும் முதலாளித்துவம் மட்டுமல்ல தொழிலின் முதலாளியும் இறங்கி வேலை செய்தாலொளிய அந்த அளவிற்கு முன்னேற முடியாது.

1960களில் சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலைகள் நிறுவப்பட்டன. அன்று இருந்த பொருளாதார நிலையில் மிகச்சிறிய அளவில் ஆரம்பித்து இன்று ஊருக்கு நான்கு பட்டாசு ஆலைகளென வளர்ந்து நிற்கிறது.

ஆரம்பத்தில் ஒன்றிரண்டு இருந்த பட்டாசு தொழிற்சாலை நாளடைவில் வளர்ந்து ஊருக்கு பத்து இருபது என்று விவசாயத் தொழிலையே மறக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டது. முன்னாடி காலத்தில் இருந்தது போல் இப்போல்லாம் குழந்தை தொழிலாளர்கள் என்று யாருமில்லாதபடி சட்டங்கள் வந்து விட்டது. தொழில்கள் வளர்ந்து விட்டது, தன் உழைப்புத் திறனை பயன்படுத்தி தொழிலாளிகளும் நல்ல நிலைமைக்கு வந்தனர். இடையில் அரசியல் என்ற ஒன்றும் உள்ளே நுழைந்து பட்டாசுத் தொழிலையே மூடும் அளவிற்கு ஜிஎஸ்டி என்று வரியை அதிகமாய் கொண்டு வந்தனர். அதையும் மீறி பட்டாசுத் தொழில்கள் வளர்ந்து வரவும் ஏதோ சுகாதாரம் என்பது பட்டாசின் புகையினால் மட்டுமே பாதிக்கப்படுவது போல் தடை விதித்தனர். ஆனால் சிவகாசியில் உள்ள முக்கால்வாசி மக்களுக்கு மேல் அதை தான் நம்பியிருபப்தால் போராட்டங்கள் அப்படி இப்படி என்று மீண்டும் உரிமையை வாங்கினர். அது ஒரு பக்கம் என்றால் பட்டாசு ஆலைகளின் எண்ணிக்கை வருடத்திற்கு வருடம் அதிகரித்துக் கொண்டே இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதைப்பற்றி பேசனும்னா பேசிக் கொண்டே இருக்கலாம்.இடையிடையே கதையின் போக்கில் தெரிந்து கொள்ளலாம்.

இந்தக் கதையில் சிவகாசி, பட்டாசு தொழில், கொஞ்சமாய் அரசியல் மற்றும் காதல் என்று எல்லாம் கலந்த கலவையாய் எனக்குத் தெரிந்த பார்த்ததை வைத்து ஒரு கதை எழுதலாம் என்று இக்கதையை ஆரம்பிக்கிறேன். கதையில் அங்கங்கு சிவகாசி பட்டாசு ஆலைகளில் உபயோகிக்கும் பொருட்கள் மற்றும் பட்டாசு பற்றி சில வார்த்தைகள் வரலாம். அதன் அர்த்தங்களையும் கதையிலே சொல்றேன்.

சிவகாசினாலே அந்தப் பக்கம் எல்லாம் நிறைய கரிசக்காடு தான். அதுனால கரிசக்காடு.. அப்புறம் கரிமருந்துனா பட்டாசுக்கு உபயோகிக்கும் வெடிமருந்தின் பெயர் பட்டாசு வழக்கில் கரிமருந்து என்று சொல்வார்கள். அப்புறம் செங்காந்தள் எல்லாருக்கும் தெரியும். அந்த பட்டாசு கரிமருந்தில் உதித்த செங்காந்தள்களின் கதையைப் பற்றி சொல்வதால், "கரிசக்காட்டு கரிமருந்தில் பூத்த செங்காந்தளே". கரிசக்காட்டில் இருந்து கரிமருந்தாய் மாறிப்போன ஊரில் பூத்த சில செங்காந்தள்களின் வாழ்வையும், வேதனையையும், பாசத்தையும், நேசத்தையும், காதலையும் சொல்லும் இந்த கதைக்களம்..

கதையின் தலைப்பு எப்படி இருக்குனு சொல்லுங்க ஃப்ரண்ட்ஸ். அப்புறம் உங்களுடையை ஆதரவும் ஊக்குவிப்பும் இந்தக் கதைக்கும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இந்தக் கதையை ஆரம்பிக்கிறேன்.

நன்றி 🙏🙏

--
செல்வி.
 
Top