• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Dheera

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 17, 2023
Messages
234
க்ரீச்... என டயர் தேய சரிக்கிக் கொண்டு வந்து ட்ரெக் நிற்க..!! ஹக்... என்றவள் அப்படியே உருண்டு போய் பாதையின் ஓரத்திற்கு தள்ளப்பட்டிருக்க...!!ஆதித்யாவும் தீராவும் நடந்த சம்பவத்தை கண் கொண்டு பார்த்த அதிர்ச்சியில் அதிர்ந்து கண்களை அகல விரித்து நின்று விட்டனர்.

அருகில், பின்னே, முன்னே என வந்த வாகனங்கள் அப்படியே சடுன் ப்ரேக் போட்டு நின்று விட்டன.. எங்கும் நிசப்தம்..!!

முதலில் தன்னிலை உணர்ந்த ஆதித்யா நிமிடம் கூட தாமதிக்காமல் பாதையைக் கடந்து வர்ஷினியின் அருகே ஓடினான்.

அதன் பின்னே வாகன ஹான் ஒலியில் திடுக்கிட்டு களைந்த தீரா ஆதித்யா சென்ற திசையில் தானும் ஓடினான்.

சாலை ஓரமாக கிடந்தவளை தூக்கி மடியில் தாங்கியவனுக்கு இன்னும் அந்த அதிர்ச்சி விலகவில்லை. உஃப்ப்ப்...நொடியில் தப்பி இருந்தாள் வர்ஷினி..ஆம் ட்ராக் ட்ரைவர் வாகனத்தின் ஒலி எழுப்பியதெல்லாம் அவள் செவியைத் தீண்டவில்லை. மயிரிழையில் நடக்க இருந்த கோர விபத்தை தடுத்திருந்தாள் அனு.. ஆம் அவளே தான். அந்தப் பக்கமாக ஷாப்பிங் சென்று வந்தவளே ஒரு பெண் தவறாக பாதையினுள் நடந்து செல்வதை கவனித்தாள்.

"என்ன இவங்க...?" என்றவாறு திரும்பிப் பார்த்தவளே அந்த ட்ராக்கை கண்டு கொண்டாள். ஒரு கணம் அதிர்ந்து நின்றவள் நொடியில் நடக்க இருப்பதை புரிந்து கொண்டு அப்படியே கையில் இருந்த பையை பாதையில் போட்டு விட்டு வேகமாக ஓடி வந்தவள் வர்ஷினியை இழுத்தெடுத்திருந்தாள்.

அவள் இழுத்த வேகத்தில் அனு தடுமாறியவாறு நின்று விட்டாலும் வர்ஷினி கீழே தள்ளப்பட்டு உருண்டு பாதை ஓரம் வீசப்பட்டாள்.

நல்லவேளை பெரிய காயங்கள் இல்லையாயினும் பாதையில் உரசியதில் சிறு சிறு சிராய்ப்புகள் இருக்க அதிர்ச்சியில் உறைந்து போனவளாக கண்கள் மயக்கத்திற்கு கெஞ்சின...

இவனோ அவளை கன்னம் தட்டி எழுப்ப அவளோ மங்களாக தெரிந்த அவனது உருவத்தை கண்களில் நிரப்பிக் கொண்டு அப்படியே இமைகளை மூடிக் கொண்டாள்.

இங்கே பரிதவிப்புடன் ஓடி வந்த தீராவோ மயங்கிக் கிடந்த வர்ஷினியையும் அவளை தாங்கி இருந்தவனையும் பார்த்து விட்டுத் தான் மூச்சு விட்டான்.

இடுப்பில் கை வைத்து தலையை கோதி விட்டவன் ஆதித்யாவின் அருகில் உட்கார்ந்து "தேவ் என்னாச்சுடா..?" எனக் கேட்க அவனை சட்டை செய்யாமல் "காரை எடுத்துட்டு வா.." என்கவும் திரும்பி நடந்தான் தீரா..

அங்கே அனு என்றொருத்தி இருந்ததையே யாரும் பார்த்திருக்கவில்லை... அவள் தான் வர்ஷினியைப் பார்த்த அதிர்ச்சியில் நிற்கிறாளே...!!

காரை தீரா எடுத்து வந்தவுடன் அலேக்காக வர்ஷினியை கைகளில் ஏந்திக் கொண்டவன் அப்படியே முன் சீட்டில் சாய்வாக கிடத்தி விட்டு லாக் செய்தவன் அருகே நின்றிருந்த தீராவின் பக்கம் வந்து.."நான் வர்ஷுவ லவ் பண்ணுறனானு கேட்டல்ல...!?எஸ் ஐ லவ் ஹேர்.., என் உயிரை விட மேலாக அவளை காதலிக்கிறேன்...!!!" என்றவன் அடுத்த பக்கம் போய் ஏறிக் கொண்டு காரைக் கிளப்பி இருந்தான்..

ஆனந்த அதிர்ச்சியில் ஜெர்க்காகி நின்றது என்னவோ தீரா தான்...

"ஹூரே..ஹூ..." என கையை காற்றில் குத்தி சந்தோஷத்தில் குதித்தவனை பின்னிருந்து ஒரு விரல் சுரண்டியது..

"யார்ரா இது...?" என ஸ்லோமொஷனில் திரும்பியவன் அனுவை கண்டு விட்டு கால்கள் தடுமாற ஆட்டம் ஒன்று போட்டவன் "அனு பேபி..நீ எங்கே...?" எனக் கேட்க அப்பவும் அதே போல மூஞ்சியை சுருக்கி வைத்திருந்தவள் "கேட்பீங்க..கேட்பீங்க..ஏன் கேட்க மாட்டீங்க...அந்த அக்காவோட உயிரைக் காப்பாத்தினது நான் தானே..."

"வாட்..நீயா..?" என்றவனிடம் அனைத்தையும் கூறி முடிக்க மெய்யாகவே அவளுக்கு நன்றி கூறினான் தீரா..

"தெங்ஸ் அனு.. நீ வர்ஷினியை மட்டும் காப்பாத்தைல்ல.என் ஃப்ரெண்டுட வாழ்க்கையையும் சேர்த்து காப்பாத்தி இருக்க..ரியலி தெங்ஸ்.." என உணர்ந்து சொன்னவனை குழம்பிப் போய் அவள் பார்க்க கண்கள் சிரிப்பில் சுருங்க அவளுக்கு புரியும் படியாக அன்று திருமணம் நடந்தது முதல் அனைத்தையும் கொட்டித் தீர்க்க, அவளுக்குத் தான் ஒன்றுமே தெரியாதே ஓஓஓஓஓ எனக் கேட்டவளுக்கு வர்ஷினியை நினைத்து பாவமாகப் போய் விட்டது.

"பாவம்ல வர்ஷினி அக்கா.. இருந்தாலும் தேவ் அண்ணா டூ பேட்..." என உதட்டை சுழித்தவளின் சிவந்த அதரங்களில் ஆடவனின் பார்வை படிந்து மீண்டது. அவனது பார்வை பட்ட இடத்தை நோக்கியவளுக்கு கன்னங்கள் சிவந்தன.

தாங்கள் இருப்பது பாதை என்பது புரிய தன் எண்ணத்தை ஒதுக்கி வைத்தவன் பேச்சை மாற்றும் பொருட்டு "அவன் கொஞ்சம் கோபக்காரன் தான்.. ஆனால் ரொம்ப நல்லவன்...என்ட் வன் மோர் திங் அவ உனக்கு அக்கா இல்லை தங்கச்சி..இன்னும் காலேஜ் கூட அவ முடிக்கவில்ல..." என்கவும் அவளுக்கு இது புது விடயம் தான்.

வர்ஷினி மறுபடி சென்னை வந்த உடனே அவளின் ஜாதகம் முழுவதையும் விரல் நுனியில் எடுத்திருந்தான் ஆதித்யா. அதற்கு உதவியது தீரா தான்.

"இருந்தாலும் தேவ் அண்ணாட வைஃப தங்கச்சினு மரியாதை இல்லாம கூப்பிட எனக்கு வரல்ல.. சோ சிம்பில் அண்ணின்னே கூப்புடுறேன்..." என்றவளின் புரிதலுடனான பேச்சில் திருப்தியுடன் புன்னகைத்தான் தீரா. தீராவின் பேச்சிலிருந்து தானாக அனுவிற்கு ஆதித்யாவின் மேல் மரியாதை வந்திருந்தது.

பின் தன் ஜீப்பை வரவழைத்தவன் அதில் அனுவைக் கொண்டு போய் ஹாஸ்டலில் விட்டுவிட்டு நேரே ஆதித்யாவின் வீட்டை நோக்கிச் சென்றான்.


***

மகனின் கார் வந்த சத்தம் கேட்டு வாசல் நோக்கி வந்த அமராவை வரவேற்றதோ கையில் ஓர் பெண்ணை ஏந்திக்கொண்டு வந்த தான் பெற்ற பிள்ளையைத் தான்..

யோசனையுடனே வந்தவர் இப்போது தான் வர்ஷினியைக் கண்டு கொண்டார். ஆச்சர்யத்தில் ஸ்தம்பித்து நின்றவர் பின் மகனை நோக்கி வேகமாக ஓடி வர அப்போது தான் ஆதித்யா தாயைப் பார்த்தான்.

அவரது பார்வை நிலைத்திருந்த இடத்தைப் குனிந்து பார்க்க அவனது மதி முகத்தாள் கண் மூடிக் கிடந்தாள். அவனது கண்களில் கனிவு வந்ததுவோ அமராவிற்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை..

இத்தனை நாளும் இல்லாதவள் இன்று மீண்டும் வந்துவிட்டாள் என்று சந்தோசப்படுவதா, இல்லை மயக்கத்தில் இருப்பவளுக்கு என்ன நடந்தது என கவலைப்படுவதா என்றிருந்தவர் முதலில் செய்ய வேண்டிய கடமை இருக்க "கண்ணா அப்படியே நில்லுப்பா..." என்றவர் தன் வயதையும் மீறி கிட்சன் நோக்கி ஓடினார்.

அதற்குள் தீராவும் வந்து சேர, உள்ளே இருந்து வந்தவர் இத்தனை மாதங்களும் தான் இழந்த சந்தோஷம் எல்லாம் கிடைக்கப் பெற்றவராக புதுத் தெம்புடன் மகனையும் மருமகளையும் வைத்து ஆரத்தி எடுத்தார். அன்று அவருக்கு வழங்காத வாய்ப்பை இன்று வழங்கி இருந்தான் ஆதித்ய தேவ்.

தீராவும் வாய் கொள்ளாப் புன்னகையுடன் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தவன் பின் அமராவின் அருகில் வந்து குறும்புடன் "அம்மா அப்போ எனக்கு இல்லையா ஆரத்தி..?" என எடுப்பாக தலையைக் கோத அவனை செல்லமாக முறைத்தவர் "அது என் அடுத்த மருமகள நீ என் வீட்டுக்கு கூட்டிட்டு வரும் போது தான்..." என்றவர் முகத்தை தோளில் இடித்து விட்டுப் போக...

"அப்போ சீக்கிரமே அடுத்த தட்டை ரெடி பண்ணுங்க.. மருமகள் ஆல்ரெடி ரெடி..." என கத்திச் சொல்ல

"படுவா இது எப்போடா நடந்தது..?" என அவனருகில் அவர் வர, தீரா மறு பேச்சு பேச வருவதற்குள் கடுப்பான ஆதித்யா "ரெண்டு பேரும் உங்க பாச மழைய அப்பறம் பொழிங்க. முதல்ல என் பொண்டாட்டிக்கு என்னாச்சுனு பாருங்க..." என்று முறைத்தவனைக் கண்டு தீரா சிரிக்க அமராவோ பதறியவராக "என்னப்பா ஆச்சு என் பிள்ளைக்கு..?" என வர்ஷினியை தலையை தடவி விட்டார்.

அவளை அவர் மகளாக ஏற்றுக் கொண்டதில் சந்தோஷப்பட்டவன் "சீ இஸ் ஆல்ரைட் மா..சின்ன ஆக்சிடன்ட் தான்.." என மறைக்காமல் பாதி உண்மையைக் கூற பதறி விட்டார் அமரா. அவனுக்குத் தானே தெரியும் கொஞ்ச நேரத்துக்குள் அவனது உடலையும் உயிரில்லா வெறும் கூடாக தன்னவள் மாற்றிய சோகக் கதை..

அவரை தீரா சமாதனம் செய்ய, அங்கே ஆதித்யா எந்த அறையில் அவளது நிழல் கூட படக்கூடாது என்று விரட்டி விட்டானோ அதே அறைக்குள் இன்று காதலுடன் அவளை ஏந்திக் கொண்டு சென்றான்.

பின் அரவிந்திற்கு அழைத்து அவசரமாக வரச் சொன்னவன் மனைவி கண் விழிப்பதற்காக கோபத்துடன் காத்திருந்தான்.

கீழே தீராவோ அமராவை அமர வைத்து உண்மைகளை கூறி முடித்தவன் இன்று வரையான ஆதித்யாவின் காதலையும் கூறி விட்டான். அவருக்கோ இனி இல்லாத சந்தோஷம். இதற்காகத் தானே அவரும் பாடுபட்டார். அந்த இறைவனுக்கு மனதாற நன்றி கூறியவர் அரவிந்திற்காக காத்திருந்தார்.

...


ரதியோ இன்று தான் பார்த்த மாமன் மகனின் நினைவிலே சுழன்று கொண்டிருந்தாள்.

அவன் எவ்வளவு தான் விரட்டினாலும் அவன் பின்னே தன் கேவலமான மனசு செல்லக் காரணம் என்னவோ..!? இது தான் இந்த அதிசயமான காதலோ..!? என்று சிந்தித்தவளுக்கு வலியை மீறி புன்னகை வந்தது..

அரவிந்தின் அமைதியான அழகு அவளை வதைத்தது.. ஃபோனில் பேசியவனா இவன்..!? என்றிருந்தது, அவனைப் பார்த்த பிறகு. அத்தனை அமைதியாக இருந்தான் அரவிந்த். அலையலையான கேசம், எடுப்பான கலர் எல்லாவற்றுக்கும் மேலாக அந்த கண்ணாடிப் புட்டியுடனான கண்..., ப்பாஹ் பார்த்தவுடனே மனதில் பச்சைக்குத்தி அமர்ந்து விட்டான்.

ரதியோ அவளது அம்மாவின் சாயல்.. ஆனால் என்னை அவருக்குத் தெரியவில்லையே..? என பிள்ளை மனம் சுணங்க கண்களில் கண்ணீரின் தடம்... அப்படியென்றால் அவனுக்கு அவனது அத்தை உட்பட யாரையுமே தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சோ எதனால் இந்தக் கோபம்...? என நினைக்க நினைக்க உடலுடன் மனமும் சோர்ந்து போனது ரதிக்கு..

தனக்காக இப்போது இருக்கும் ஒரே ஒரு உறவு.. அது இருந்தும் இல்லாமல் இருக்க மனம் வலித்தது பாவைக்கு..விழிநீர் வழிய கண்களை மூடிக் கொண்டவளின் இமைகளுக்கு தாய் தந்தையின் அழகிய விம்பம்...!!!

***

மருந்தின் வீரியத்தில் மயக்கம் தெளிந்து ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள் வர்ஷினி..

அவள் முன்னே தான் கை கட்டி காலுக்கு மேல் கால் போட்டு அமர்ந்து வர்ஷினியையே இமை மூடாமல் பார்த்துக் கொண்டிருக்கிறான் மதியின் மணவாளன்...

அரவிந்தும் தீராவும் சென்றிருக்க அமரா மேலே வந்து இரண்டு மூன்று தடவை மருமகளை பார்த்து விட்டு போய்விட்டார். மறுபடியும் இருவரையும் தொந்தரவு செய்ய விருப்பம் இல்லாவராக யோசனையுடன் அமர்ந்திருந்தார்... வர்ஷினி எழுந்து விட்டால் அவளது ரியெக்ஷன் எப்படி இருக்கும்..? மறுபடியும் வீட்டை விட்டு சென்று விடுவாளோ..? என அச்சம் கொண்டார்..

அதே சிந்தனை தான் ஆதித்யாவின் மனதிலும் ஓடிக் கொண்டிருக்கிறது.. எது எப்படியோ அவளை மறுபடி இழப்பதில்லை என்பதில் உறுதியாக இருந்தான்...

ஆனால் பெண்ணவளின் உள்ளத்தில் தான் கொடுத்த வடுவை அழித்து அவளது மனதில் மீண்டும் குடியமர்வானா தாலி கட்டியவன்...!?

தொடரும்...

தீரா.
 
Top