• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Dheera

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 17, 2023
Messages
234
பொசுவென இருக்க கைகளை அங்குமிங்கும் தடவியவாறு மெல்லக் கண்ணைத் திறந்தவளுக்கு அந்த அறையில் இருந்து வந்த வாசனை மனதை ஏதோ செய்தது. தன் மனதிற்கு நெருக்கமான ஒன்றாகத் தோன்ற மீண்டும் கண்களை இறுக்கி மூடித் திறந்தவளுக்கு இப்போது தெளிவாக அனைத்தும் புலப்பட்டன.

மனம் வேறு தாறுமாறாக அடித்துக் கொள்ள அப்படியே திரும்பியவளுக்கு இருந்த மெல்லிய ஒளியில் ஒன்றும் தெரியவில்லை. எங்கே இருக்கிறோம் என சுற்றி சுற்றி பார்த்தவள் தலையைத் தாங்கிக் கொண்டு எழுந்தமர்ந்தாள்.

இன்னும் அவளுக்கு எங்கிருக்கிறோம் என்பது விளங்கவில்லை.

அந்த மெல்லிய வெளிச்சத்திலும் அவளைத் தான் கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தான் ஆதித்யா.

"ஆங் எங்க இருக்கேனு தெரிலயே...?" என வெளிப்படையாக தன்னுடனே பேசிக் கொண்டிருந்தவளைப் பார்த்து மெல்ல இதழ் விரித்தான் தேவ்.

வாயாடி என விக்ரம் கூறி இருந்தது நினைவு வர சட்டென குரலை செருமிக் கொண்டவன் "உன் வீட்ல தான் இருக்க..." என்றானே பார்க்க அவளும் அவனை இடைமறித்தவளாக "என் வீடா..எனக்கு யாரு வீடு கட்டி தந்தா...?" என்கவும் இன்னும் அவள் சுயத்தை அடையவில்லை என புன்னகைத்தவன் "ம்ம் உன் புருஷன்..." என அவனும் விடாமல் கூற அவளோ "எனக்கு யாரு புரு...ஷ..பு..." என்று திக்தித் தினறியவள் அப்போது தான் அவளுக்கு அவள் ஒருவனுடன் பேசுவது தெளிவாக உறைத்தது..

கட்டிலை விட்டு துள்ளி எழுந்தவள் நின்ற வாக்கிலே அறையை சுழற்றி பார்வையை செலுத்த அதோ கண்டு விட்டாள் ஆதித்யாவை...

அந்தக் கணம் தனக்கு நடந்தவை அனைத்தும் நினைவில் வர கண்களில் கண்ணீர் வடிய தன்னையே குனிந்து பார்த்தவளுக்கு உடல் வெளிப்படையாக நடுங்கியது..

தான் கீழே விழ முன்பே தன்னைக் கடந்து மின்னல் வேகத்தில் சென்று சடுன் ப்ரேக் போட்டு நின்ற ட்ரக்கை கவனித்தவளாகிற்றே... அதில் அவள் மோதி இருந்தால் இதோ இப்போது தன் உயிர் இங்கே இருக்குமா..? என்ற நிதர்சனம் நெற்றிப் பொட்டில் அறைய மெல்லிய நடுக்கம் உடலில் பரவியது..

தடார் என எழுந்தவன் அவளருகில் வந்து இதமாக அவளை பக்கவாடாக அணைத்து "நத்திங் வர்க்ஷு..யூ ஆர் சேர்ஃப்..." என்றவனின் அணைப்பில் அவனை திரும்பிப் பார்த்தவள் தீ பட்ட புழுவாய் பதறி விலகினாள்...

அவளது விலகல் அவனுக்கு கோபத்தைத் தர இருந்த அனைத்து கோபமும் வந்து தாக்கியவனாக ஆவேசமாக அவளது கைசந்தைப் பிடித்து திருப்பி வார்த்தைகளை அனலாக தெறிக்க விட்டான்..

"இடியட் அறிவில்லை..கண்ணை எங்க வச்சிட்டு வந்த.. இன்னேரம் அந்த ட்ரெக் வந்து அடி..." என கூற வந்தவன் வார்த்தையை வாயினுள்ளே மென்று முழுங்கி விட்டு அதே கோபத்துடன் "இப்போ உன்னை ஹேட் பண்ணுற உரிமை உனக்கு கூட இல்லை. உனக்கு என்ன சரி ஆச்சுனா உன்னை இல்லை அவனை சங்க நெறிச்சி சாவடிச்சிடுவேன்..." என அறையே நடுங்க கர்சித்தவன் அவளை முறைத்து விட்டு கடக்க முற்பட்டு பின் திரும்பி வந்து "இங்கே இருந்து போக நினைச்ச..." என விரல் நீட்டி எச்சரித்தவன் அறையின் கதவை அறைந்து சாற்றி விட்டு சென்று விட்டான்.

அவனது சத்தத்திலே அதிர்ந்து அச்சத்தில் தேங்கி நின்றவள் அவனது பேச்சு புரியாதவளாய் நிற்க அறைக் கதவு அறைந்து சாற்றப்பட திடுக்கிட்டு விழித்தாள்....!!!!

மறந்து கூட அவள் மேல் தனக்குள்ள காதலை ஒரு வார்த்தையால் சரி கூறி இருக்கவில்லை. அப்படி கூறி இருந்தால் அவள் அவனை உணர்ந்திருப்பாளோ என்னவோ...!!

...

தன் கோபம் முழுவதையும் ஸ்டியரிங்கில் காட்டியவன் இலக்கே இல்லாமல் பாதையை வெறித்துக் கொண்டு மின்னலென காரை செலுத்திக் கொண்டிருந்தான்.

வாய் வேறு அதன் பாட்டில் கருணையே இல்லாமல் வர்ஷினியை அர்ச்சனை செய்து கொண்டிருந்தது... "நான்சென்ஸ்..என்னை விட்டு போய்ருவாளா...? என்னைப் பார்க்க இளிச்சவாயன் மாதிரியா இருக்கு...? டேமிட்...."என மீண்டும் ஓங்கி ஒரு குத்து குத்தினான்...(டேய் அலப்பறை..இது உனக்கே நியாயமா இருக்கா. நீ இன்னும் அவளை லவ் பண்ணுறத சொல்லைல்ல. தன்னை தொறத்தி விட்டவன் திடீர்னு கூப்பிட்டு கொஞ்சினா அலறாம, அணைப்பாளாடா...? அதான...!?)

எவ்வளவு தூரம் சென்றானோ தெரியவில்லை. நகரத்தை விட்டு தொலைதூரம் வந்து இருந்தவன் யாருமற்ற பாதையில் காரை ஒடித்து திருப்பி நிறுத்தி இருந்தான்.

மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க இருந்தவனுக்கு என்ன செய்தாலும் மனதின் வெம்மை குறைந்த பாடில்லை... ஒரு கட்டத்துக்கு மேல் முடியாமல் தலையை இருக்கையில் சாய்த்து சாய்ந்து கொண்டவனுக்கு இவளின் இந்த சிறு விலகலையே தாங்கிக் கொள்ள முடியவில்லை.. அப்படியானால் அவளுக்கு எப்படி வலித்திருக்கும்...? அவன் அவளுக்கு செய்த அனைத்தும் நினைவு வந்தவனாக மெல்ல நிமிர்ந்தவனின் கண்கள், வெளிச்சத்தில் பளபளத்தன... அப்படியானால் ஆதித்யா அழுகிறானா...!? அந்த அகந்தை, செருக்கு, கர்வம் பிடித்தனின் கண்கள் பனிக்கின்றனவா...!?
ஆம் ஆடவனின் கண்களில் கண்ணீரின் சாயல்..!!
ஏற்றுக் கொள்ள முடியவில்லை அவனால்...!!
தோல்வி..!!
ஆம் அவன் அவனவளிடத்தில் கர்வத்தைக் கொன்று தோற்று நிற்கின்றான்...

கண்களை அழுந்த துடைத்துக் கொண்டவனுக்கு அதன் சூடு மனதைச் சுட தன் இடைப்பல் தெரிய கவர்ச்சியாய் புன்னகைத்தவன் "என் கர்வத்தைக் கொன்றாயடி..!!" என அழகாக தன் மனதில் உள்ள காதலை எழுத்துக்களாய் சித்தரித்து உச்சரித்துக் கொண்டான்...(ப்பாஹ் தலைகீழா வந்தாலும் தலைப்பு வந்துட்டு...)

பின் சிறிது நேரம் அப்படியே இருந்தவன் காரைக் எடுத்துக் கொண்டு மீண்டும் வீட்டை நோக்கி வந்தான்.

...

இங்கே வர்ஷினிக்கோ அறையை விட்டுச் செல்ல பயமாக இருந்தது.. வீட்டில் யார் இருக்கிறார்கள்!? என்ன செய்கிறார்கள்!? என்னை என்ன நினைப்பார்கள்!? இப்படி பலவாறு சிந்தித்தவளுக்கு மனதில் பயம் சூழ்ந்து கொண்டது. அப்படியே கட்டிலில் அமர்ந்தவளுக்கு அந்த அறையின் நிசப்தம் அதே அறையில் தான் பட்ட காயங்களை காட்சியாய் காட்டியது..

ஒவ்வொரு இடமும் அவளுடன் பேசுவது போல் இருந்தது. நெஞ்சம் காந்தியது அவளுக்கு. சூடாக கண்ணீர் கண்ணைத் தழுவியது..

வர்ஷினி இதோ இந்த இடம் தான் உன்னை அவமானப்படுத்தியது...!! இந்த இடம் தான் உன்னை தகுதிக்காக தரையில் தள்ளிவிட்டது..!! இது இது இது தான் உன்னை எந்தக் கணவனும் கூறக்கூடாத பழிச்சொல்லை உன் மீது சுமத்தியது...!! என நான்கு சுவர்களும் நான்கு கதை சொல்ல கண்ணை இருட்டியது அவளுக்கு.. நெஞ்சம் அழுத்த வாயை மூடி அழுகையை அடக்க முற்பட்டவளுக்கு அது முடியாமல் போக சன்னமாக அம்மா... என வாய் முனுமுனுத்துத் துடித்தது..

அவ்விடமே மாயலோகம் போல பயம் காட்ட கால்கள் கிடுகிடுக்க "இல்லை..இ..இல்லை" என காதைப் பொத்திக்கொண்டு கண்கள் அச்சத்தில் விரிய அறையை விட்டு ஓடி வெளியே வந்தாள்...

எங்கே செல்வது என தடுமாறியவளுக்கு மீண்டும் அறையினுள் இருந்து சத்தம் வருவது போல் இருக்க திடுக்கிட்டு திரும்பி அறை வாசலைப் பார்த்தவளுக்கு உடல் வெடவெடுக்க தலையையை இடம் வலம் ஆட்டியவள் தலை முடியை கைகளால் இறுக்கி இழுத்து பிடித்தவாறு நோ... என்றுவிட்டு அப்படியே மயங்கி சரியவும் ஆதித்யா ஓடி வந்து தாங்கவும் சரியாக இருந்தது...

அவள் வெளியே ஓடி வந்த போதே அவனும் படி தாண்டி வந்து விட்டான். அவளது செய்கை அவனையுமே அதிரவைத்தது.. தன்னவளின் பைத்தியகாரத் தோற்றம் ஆடவனை கலங்க வைக்க அவளை தாங்க வருவதற்குள் மயங்கி சரிந்து விட்டாள்...

"வர்ஷுமா ஏய்.....சிட்" என கம்பியில் கையை குத்தியவன் மலர் குவியல் போல் இருந்த தன்னவளை கைகளில் ஏந்திக் கொண்டு கட்டிலில் கிடத்தி விட்டு அழைத்தான் அரவிந்திற்கு...


...


பால்கனியில் மார்புக்கு குறுக்காக கைகளை கட்டிக் கொண்டு நின்றவனின் சிந்தனை முழுவதும் அவள் மயங்கி விழுந்ததிலே இருந்தது..

அரவிந்த் வந்து தோளைத் தொட திரும்பியவனின் முகத்தில் என்றும் அவன் காணாத ஒரு கலக்கம்..

"என்னடா..?"என்கவும் "மச்சி வர்ஷு...?"என கேள்வியாய் நிறுத்தியவனிடம் "ஷீ இஸ் ஆல்ரைட்.. பட் ரொம்ப ஸ்ரெஸ்ட், ஸ்ரெயின் பண்ணிக்கிறா.. இப்படியே போனா அவளுக்கு வேறுமாதிரி எஃபெக்ட் பண்ணும்.. ஐ திங் யு காட் இட்...??" என்றவனிடம் ஆமோதிப்பாய் தலையசைக்க பால்கனி தடுப்பில் கை வைத்து நின்றவனின் கையில் அழுத்தம் கொடுத்த அரவிந்த் "நீ தாண்டா அவளை நல்லா பாத்துக்கனும்.. பல கஷ்டங்களை கடந்து வந்த பொண்ணு.. சின்னப் பொண்ணு வேற.எவ்வளத்த தான் தாங்குவா.. "என கூற செவி தாழ்த்திக் கேட்டானே தவிர எதுவும் பேசவில்லை.

அவனது நிலை புரிந்தவனாக அவனுடனே எதுவும் பேசாமல் நின்றவனிடம் "இப்போ தான்டா புரியுது. அவட இந்த சின்ன விலகலே என்னால தாங்க முடியல.. அம்மா சொன்னாங்கன்ட ஒரு காரணத்துக்காக என்னை நம்பி வந்தவள கை விட்டுட்டேன் மச்சி..." என்றனின் இடது கண்ணிலிருந்து ஒரு துளி கண்ணீர் சலாரென தெரித்தது..

அதிசயம் தான்.. அரவிந்தும் ஆச்சர்யமாகத் தான் அவனைப் பார்த்தான். ஓரிரு வார்த்தைகளுக்கு மேல் பேசாதவன் இன்று நிதானமாக பேசுகிறான்.. அழுகிறான்.. நண்பன் புதியவனாய் இன்று அரவிந்திற்கு தெரிகின்றான்.. அவனது கம்பீரம் அழகென்றால் இந்தப் பரிமாணம் அதனை விட ஆயிரம் மடங்கு அழகாய் அவனைக் காட்டியது..

அவன் வருத்தப்படுவது பிடிக்காமல் ஆதித்யாவைத் திருப்பி அணைத்தவனை அணைக்கக் கூட சிந்தனை மரத்து நின்றிருந்தான் காளை..

அவனிடமிருந்து விடுபட்டவன் தூங்கிக் கொண்டிருக்கும் மனைவியை கண்களில் நிரப்பிக் கொண்டு "ரொம்ப கஷ்டப்படுத்திட்டன்ல அவளை.. வலிச்சிக்கும்ல அவளுக்கும்...?" என விடாமல் பிதற்றியவனை பதறி நண்பன் ஆறுதல் செய்ய முயற்சித்தும் தோல்வியையே தழுவினான்..

தன் மேலே கட்டுக்கடங்காத கோபம் வரப் பெற்றவன் அருகில் இருந்த சாடியை எடுத்து ஓங்கி தரையில் அடித்து நொறுக்கிய சத்தத்தில் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தாள் வர்ஷினி..

"டேய் ஆதித்யா தங்கச்சி பயந்துட்டா டா..." என வர்ஷினியைக் காட்ட எதுவும் யோசிக்காமல் சட்டென கோபம் வடியப்பெற்றவனாக அரவிந்தை தள்ளிவிட்டு வர்ஷினியை நெருங்கி இருந்தான்.

கன்னத்தை பிடித்துக் கொண்டே அவளருகில் அமர்ந்தவன் "ஒ..ஒன்னுமில்லடா ஒன்னுமில்லை.. ரிலேக்ஸ்...கோ பெக் டு ஸ்லீப்..." என்றவன் அவளது முதுகைத் தடவி ஆசுவாசப்படுத்த அப்படியே படுத்து கண்களை மூடிக் கொண்டாள் காரிகை..

அவளது நிலை அவனுக்கு நெஞ்சில் வலியைக் கொடுக்கவே குனிந்து அவளது பிறை நெற்றியில் நொந்துவிடுமோ என மென்னையாக முத்தம் வைத்தவன் தலையை தடவி விட்டான்.

அரவிந்திற்கு நண்பனின் மாற்றம் அத்தனை சந்தோஷத்தைக் கொடுத்தது.. இருவருக்காகவும் மனதார மனதில் பிராதித்தவன் நண்பனிடம் சொல்லாமலே சென்று விட்டான்...

இது ஒன்றும் கீழே இருந்த அமராவிற்கு தெரிய வாய்ப்பில்லை. அவரால் தாங்க முடியாது என்பதால் அவரிடம் இருவரும் கூறி இருக்கவில்லை.. சத்தம் எழுப்பாமலே அரவிந்த் வந்த வழியே சென்று மறைந்திருந்தான்...

தொடரும்...

தீரா.
 
Top