• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Dheera

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 17, 2023
Messages
234
அம்மாவை மேலே அனுப்பியவனும் அவருக்குப் பின்னே படிகளில் ஏறிச் சென்றான்.

அப்போது தான் குளித்து முடித்து வந்தவள் கபேர்டை திறக்க, என்ன ஒரு ஆச்சரியம்...!! அனைத்தும் அவளது மனதைப் படித்தது போல அவளுக்கு பிடித்தவைகளாக இருந்தன... அவளுக்குள் ஆசைகள் இருக்கின்றன. ஆனாலும் தன்னிலை புரிந்து கொண்டவளாக அதனை வெளிக்காட்டாமல், இருப்பதைக் கொண்டு வாழப் பழகி இருந்தாள்.. ஆனால் இப்போது..? தனக்குப் பிடித்தவை அவருக்கு எப்படித் தெரியும்..? என ஆராய்ந்தவளுக்கு கண்கள் சட்டென கலங்கி விட்டன.

சிலநேரங்களில் நமக்கு எது அழகாய் திருப்தியாய் இருக்கும் என்பது நம்மை விட நம்மை நேசிப்பவர்களுக்கு ஆழமாய்ப் புரியும். அப்படித்தான் ஆதித்யாவும் அவளுக்கு சூட் ஆவதைப் போல ஆடை உட்பட அணிகலன்கள் அனைத்தையும் வாங்கி வைத்திருந்தான்.

அதில் அழகாய் இருந்த மஞ்சள்,வெள்ளைச் சுடிதாரை எடுத்து அணிந்து கண்ணாடியின் முன் நின்று தலைவாரிக் கொண்டிருந்தவள் அப்போது தான் கண்ணாடியினூடு பின்னே தெரிந்த உருவத்தை கவனித்தாள்..

அமரா...
ஆம் அவரே தான்.. அப்படியே கையில் வைத்திருந்த சீப்பு நழுவி கீழே விழுந்ததில் அதிர்ந்து நின்றிருந்தாள் வர்ஷினி... இவரை எப்படி மறந்தாள்..??

அவளைப் பார்த்த அமராவிற்குமே கண்கள் கலங்கி விட்டன. ஆனால் அவள் நிலை...?

அவளருகில் வந்த அமரா அவளைப் பார்த்து புன்னகைக்க, பதிலுக்குத் தானும் அவள் உதட்டை பிரிக்கவில்லை.. அவள் தான் அன்று தனக்காக அவர் பேசாமல் நின்றதை உள்ளுக்குள் நினைத்து துடித்துக் கொண்டிருக்கிறாளே..

அவளது நிலை அவருக்கு முள் போல் தைத்தாலும் வெளிக்காட்டாமல் அவளது கன்னத்தைத் தொட வர, அந்த சிலையும் உயிர்பெற்றதோ.. சட்டென முகத்தை பின்னோக்கி இழுத்தவளை பார்த்து ஸ்தம்பித்து நின்றது அமரா மட்டுமல்ல ஆதித்யாவும் தான்.

தன் தாயின் தொடுகையை ஏற்காதவளின் செயலில் கோபத்திற்கு பதிலாக யோசனையே மண்டியிருந்தது..

பின் இருவரும் மனஸ்தாபப்பட்டு நிற்பதை காண சகிக்காதவனாக தாயருகில் வந்து எதையும் காணாதவன் போல "மாம் கீழே அவங்க வெயிட் பண்ணிட்டு இருக்காங்க. நீங்க போங்க நான் வர்ஷுவ அழைச்சிட்டு வரேன்..."என்றவன் கண்ணாலே தாயிற்கு ஆறுதல் கூற அவரும் அவனை கவலையுடன் பார்த்து விட்டு கீழே சென்று விட்டார்.

இங்கே வர்ஷினியின் பக்கம் திரும்ப அவள் கண்ணீரை உள்ளிழுப்பது தெளிவாக விளங்கியது அவனுக்கு..

இப்போது அவன் கோபப்பட்டால் அவள் மேலும் தன்னுள் மருகுவாள் என சரியாகக் கணித்தவன் அவளது கையைப் பிடித்து அழைத்துச் சென்று சோஃபாவில் அமரச் செய்து தானும் அவளருகில் அமர்ந்து கொண்டான்.

அவளது பார்வை அவனிடத்திலும் இல்லை. ஓரிடத்தை வெறித்துக் கொண்டிருந்தது..

பெருமூச்சு விட்டவன் அவளது கையை எடுத்து தன்கைக்குள் பொத்திக் கொண்டு "வர்ஷூ நீ அம்மாவ எவொய்ட் பண்ணத்துக்கு ஏதாவது ரீசன் இருக்கும்னு எனக்குத் தெரியும்.. ஆனாலும் நீ எனக்கு சொல்லித் தான் ஆகனும்.. வட் ஹெப்பன்ட்...?" என அமைதியாகத் தான் கேட்டான்.

கொஞ்ச நேரம் அமைதியாக அவள் இருக்க, அவள் பேச அவகாசம் அளித்துக் காத்திருந்தான் இதுவரை இப்படி பொறுமையுடன் யாரிடமும் பேசியிராதவன்.

கொஞ்சம் கொஞ்சம் தன்னை ஆசுவாசப்படுத்தியவள் இப்போது ஆதித்யாவின் பக்கம் திரும்பி "நான் ஏன் உங்களை அன்னைக்கு திருமணம் செய்து கொள்ள ஒத்துக்கிட்டேனு தெரியுமா...?" எனக் கேட்க இப்போது அது எதற்கு என அவன் நினைத்தாலும் "ம்ம் தெரியும்.. அம்மா சொன்னாங்கனு தானே..." எனக் கூற வலியுடன் சிரித்தவள் "ம்ம் அதுக்காகத் தான்.. ஆனால் அவங்க என்ன கேட்டாங்கனு தெரியுமா..?" எனக் கேட்டவளின் ஒற்றைக் கண்ணீர் துளி வந்து அவனது கையில் விழுந்து தெரித்தது..

அதனைக் குனிந்து பார்த்துக் கொண்டே இல்லை எனும் விதமாக அவன் தலையாட்டினான். அவன் எங்கே அவர்கள் பேசியதைக் கேட்டான். அவன் முழுக்க முழுக்க அவளது பதிலுக்காகவல்லவா காத்திருந்தான்.

அவனது கைகளுக்குள் இருந்த தன் கையை உறுவிக் கொண்டவள் தன் கன்னம் வழிந்த கண்ணீரைத் துடைத்தவளாக "அவங்களை அ..அம்மாவா நினைச்சா இந்த திருமணத்துக்கு சம்மதம் சொல்ல சொன்னாங்க..."

"எ..எனக்கு.." என்றவளுக்கு அதற்கு மேல் வார்த்தைகள் வரமாட்டேன் என்றது..

அவள் கையை உறுவும் போதே அவனது பார்வை அவளை ஊடுறுவியது. இப்போது அவளது இயலாமையைப் பார்த்தவனுக்கு அதற்கு மேல் பொறுக்கமுடியவில்லை..

அவளருகில் நெருங்கி அமர்ந்தவன் அவளை பக்கவாடாக அணைத்து தன் தோளில் சாய்க்க அவள் எதிர்வினைகள் இன்றி அவனைத் தான் அந்நாந்து பார்த்தாள்.

"ம்ம் சொல்லு..." என அவளது கையில் அழுத்தத்தைக் கொடுக்க அது தந்த தைரியத்தில் "எனக்கு ஒரு அ..அம்மா... இதைத் தவிர என் சி..சிந்தனைல எதுவும் இருக்கைல்ல..அ..அதனால தான் உ..உடனே சம்மதம் சொ..சொன்னேன்.. " என்றவளது கண்ணீர் அவனது டீசேர்டை தாண்டி அவன் மார்பை நனைத்தது..

மனம் தைத்தது அவனுக்கு.. அதனால் உடல் இறுக அமர்ந்திருந்தான் அவன்.. அவளது மனதில் இருந்ததை அறியாமல் எவ்வளவு பாரதூரமான வார்த்தைகளை அவள் மேல் அள்ளித் தெளித்தான். நினைக்க நினைக்க மனம் வெந்தது..

உதடு நடுங்க உடல் அழுகையில் குழுங்க அவனை எட்டிப் பார்த்தவள் தான் அந்தக் கேள்வியை கேட்டிருந்தாள்..."நா..நான் அ..அ..அந்த.." என்றவள் வாயை நடுங்கும் கைகளால் துடைத்துக் கொண்டு "அந்த மாதிரிப் பொண்ணாங்க..??" என்றவள் கதறினாள்..

என்ன கேட்டுவிட்டாள்...??தாங்கிக் கொள்ள முடியவில்லை அவனால்... அவனுக்கே நெஞ்சம் வெடித்து விடும் போல் இருந்தது.. அது சரி, நான் கேட்டதைத் தானே அவளும் கேட்டுவிட்டாள்..

சட்டென அவளைத் திருப்பி இறுக கட்டிக் கொண்டவனுக்கு அவளது கண்ணீர் உடலை மட்டுமல்ல அவனது மனதையும் சேர்த்தே சுட்டது...

அவளும் ஆறுதல் தேடும் குழந்தையாக அவனுள் ஒன்றிக் கொண்டாள். வலித்தது..!! இப்போது அவனுக்கு..!!

இப்படியே நிமிடங்கள் மணித்தியாலங்களாக கடக்க அவளை விட்டு விலகியவன் "அதற்கும் இப்போ நீ மாம்ம அவொய்ட் பண்ணுறதுக்கும் என்ன ரீசன்..?" என புரியாமல் கேட்க உதட்டை மடக்கியவள் "அன்னைக்கு என் அம்மானு சொன்னவங்க அதுக்கு அடுத்த நாள் எனக்காக எதுவும் பேசலையே..." என குழந்தையாக துடித்தாள்...

அது அவனுக்குப் புரிந்தாலும் "அது நான் சொன்னதுக்காகத் தான்..." என்றவன் அவளை உற்றுப் பார்க்க "எனக்குத் தெரியும்..." என்றவளை மெய் மறந்து பார்த்துக் கொண்டிருந்தான் ஆதித்யா.


...


கீழே தீரா அரவிந்தை முறைப்பதும் அவன் பாவமாக விழிப்பதுமாக இருக்க ரதியோ யாருக்கு வந்த விருந்தோ என வீட்டை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அமரா அமைதியாக வர நிலைமை சரியில்லை எனப் புரிந்தது தீராவிற்கும் அரவிந்திற்கும். ஒன்றும் தெரியாத ரதிக்கு எதுவும் புரியவில்லை. இருந்தும் அமைதியாக வேடிக்கை மட்டும் பார்த்தாள்.

இப்படியே கொஞ்ச நேரத்தில் ஆதித்யா படியிறங்கி வர அவன் பின்னே தான் வர்ஷினியும் வந்து கொண்டிருந்தாள். அரவம் கேட்டு திரும்பியவர்கள் அதிர்ந்து பின் அர்த்தமாக சிரித்துத் கொண்டனர்.

இருவரும் ஒரே நிறத்தில் ஆடை அணிந்திருந்தனர். வர்ஷினி யதார்த்தமாகத்தான் அந்த சுடிதாரை எடுத்திருந்தாள். இதனை அவளைப் பார்க்க அறையினுள் சென்ற நொடியே ஆதித்யா கவனித்திருந்தான். அதற்கு அவளைக் காதலாகப் பார்த்தது வேறு சாப்டர்..

இங்கே அவர்கள் வந்து நிற்க எழுந்து சென்ற தீரா யாரும் அறியாமல் மெல்ல ஆதித்யாவின் காதில் "அப்பறம் மச்சி ஒரே லவ்ஸ் தான் போல..." என ஆடை ஒற்றுமையைக் காட்டி குசுகுசுத்து சொங்கி பல்லைத் காட்ட, அதற்கு பல்லை நறுநறுத்த ஆதித்யா அவனைப் போலவே அவன் காதில் "இப்படியே வெட்டியா பேசிட்டு இருந்தே அப்பறம் அனுக்கு புருஷன் இல்லாம செய்துருவேன்.." என அவன் சேட் காலரை தட்டி விட ஜெர்க்கான தீரா கைகளால் வாயைப் பொத்தித் கொண்டு பேசாமல் எழுந்து வந்த இடத்திலே போய் அமர்ந்து கொண்டான்.

இப்போது அவன் பக்கம் நெருங்கிய அரவிந்த் "அடி பலமோ..." என ஆதித்யாவைப் போலவே சேட் காலரை தட்டி விட கடுப்பான தீரா "எடுடா கையை..." என தட்டி விட்டதில் அரவிந்தின் இதழ்கள் சிரிப்பில் விரிந்தன..

அப்போதும் வர்ஷினி ஆதித்யாவைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.. இதோ இருப்பவர்களுக்கு முன் தானே தன்னை கேவலப்படுத்தினான்.. இருந்தும் இன்று அவனுக்கு கட்டுப்பட்டு அவனுடனே நான் ஒட்டித் திரியக் காரணம் தான் என்னவோ...?

இப்படியே அவள் யோசனையில் நிற்க எதிர்பாராத நேரம் திரும்பிய அவளது சிந்தனைக்குரியவன், நமட்டு சிரிப்புடன் என்னவென புருவத்தை உயர்த்த ஒன்றுமில்லையென தலையாட்டிவிட்டு அமைதியாக குனிந்து கொண்டாள்.

சிரிப்புடனே அவன் நிமிர அந்த மங்குஸ் மண்டைகள் இருவரும் அவனைப் பார்த்து ம்ம் நடத்து நடத்து என உதட்டசைக்க அதற்கும் சாவடிப்பேன் என செய்கை செய்தான் தேவ்.

அதில் அவர்கள் சத்தம் போட்டே சிரிக்க வர்ஷினி சமையல் கட்டை நோக்கி சென்றுவிட்டாள். நானும் போறேன் என ரதியும் உடன் எழும்பிச் சென்றாள். அதற்குப் பிறகு என்ன நண்பர்களின் திருவிளையாடல்கள் தான் அங்கே அரங்கேறின.. திரூபன் இல்லாத குறை மாத்திரம் தான்..

சிலவினாடிகள் தொடர்ந்த அலப்பறையின் பின் அரவிந்திற்கு அழைப்பு வர விடைபெற்று சென்றவனின் பார்வை சமையலறையை தழுவி விட்டுச் சென்றது..

...


அங்கே ஐஜி. அமரதேவன் யாருடனோ ஃபோன் பேசிக் கொண்டிருந்தார்.

"ம்ம் எப்ப சார்ஞ் எடுத்துக்கப் போற...?"

"உனக்கே தெரியும் எல்லாக் கேசும் இழுத்துட்டு இருக்கு.. உன்னால மட்டுந்தான் அதனை க்லோஸ் பண்ண முடியும்.."

அங்கு என்ன கூறப்பட்டதோ அந்தக் கடினக் குரலில் சற்றே அசந்து தான் போனார் ஐஜி...பின் "எஸ்பா தீராக்கு உன்னுடைய கெல்ப் மறைமுகமாக கிடைப்பதை விட நேரடியாக கிடைத்தால் வீ கேன் எட்சிவ்.." என்றார் அவர்.

அதற்கும் அவன் ஏதோ கூற "ஓகேப்பா சீக்கிரம் எடுத்துக்கிறது தான் உனக்கு நல்லது..."

"ம் ஓகே..." என்றவர் அழைப்பை துண்டித்து விட்டு யோசனையில் ஆழ்ந்து விட்டார்.

சக்தியின் கேஸ் இன்னும் இழுத்துக் கொண்டிருக்கிறது..


...


மதியம் நெருங்கவே யோசனையில் நெற்றியை நீவி விட்டுக் கொண்டிருந்த ஆதித்யாவின் அருகே வந்தமர்ந்த தீரா "என்னடா என்னாச்சு....?" என வினவ அவனை சில நொடிகள் ஏறிட்டுப் பார்த்த ஆடவனின் பார்வை பின் சாதாரணமாக மாறியது.. பின் ஏதேதோ இருவரும் பேசிக் கொண்டிருக்க முதலில் எழுந்த தேவ்..."ஐ வில் பீ பேக்..." என்றவன் மேலே சென்று ஃபோமலாக ரெடியாகி எங்கோ சென்றான்..."

அதன் பின் அவசரமாக தீராவும் கிளம்ப வேண்டி இருப்பதால் ரதியை அழைத்துக் கொண்டு சென்று விட்டான்..

ஒருவர் பின் ஒருவராக செல்ல, வர்ஷினி யோசனையாக அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.. ரதியுடன் பேசுவோம் என்றிருந்தால் அதற்குள் தீரா அழைத்துக் கொண்டு சென்று விட்டான்.

இங்கே ஒரு காஃபி ஷாப்பிற்கு ரதியுடன் வந்திறங்கினான் தீரா.. உள்ளே இருவருமாக செல்ல, இடையில் அரவிந்த் தீராவிற்கு கால் செய்து எங்கே இருக்கிறான் எனக் கேட்க, அதற்கு அவன் தானும் ரதியும் ***காஃபி ஷாப்பில் இருப்பதாகக் கூற.. இரு வருகிறேன் எனக் கூறிய அரவிந்த் அவசரமாக அழைப்பைத் துண்டித்து விட்டான்.

அவனுக்கு ரதியுடன் பேச வேண்டி இருந்தது.. ஒருவேளை ஆதித்யாவின் வீட்டில் இருந்தால் லேசாகப் போய்விடும் என அவன் அழைத்திருக்க அவன் காஃபி ஷாப்பில் இருப்பதாகக் கூற அதுவும் நல்லது தான் என உடனே கிளம்பி விட்டான்...

ஆனால் அதற்குள் நடந்தவை...???


தொடரும்...

தீரா.
 
Top