• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Dheera

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 17, 2023
Messages
234
"வர முடியாது..ஐ எம் இன் டியூட்டி..." என்றவன் லவுட் ஸ்பீக்கரில் போட்டு விட்டு கேஸ் ஃபைல் ஒன்றை பார்த்துக் கொண்டிருந்தான்.

அந்தப் பக்கப் அனு தான்."இப்போ வெளியே வர முடியுமா முடியாதா...?" அவள் காட்டமாக கேட்க, அவனது இதழ்கள் சிரிப்பில் விரிந்தன..

"உங்களுக்கு தழிழ் புரியாதா..?" என தீரா விடாமல் வாயடிக்க, ஏகத்துக்கும் கடுப்பானவள் "டேய் வெண்ணெய் இப்போ நீ வரல நான் உள்ளே வந்துருவேன்டா..." என்றாலே பார்க்க தீராவின் பேனை கைநழுவி விழுந்து விட்டது அவனைப் போலவே..!!

"என்னது வெண்ணெயாஆஆஆஆ..." என சுற்றும் முற்றும் பார்த்தான். நல்லவேளையாக யாரும் அங்கே இருக்கவில்லை.

"ஆமான்டா...இப்போ வர்ரியா இல்லையா...?" மறுபடியும் வெளியே இருந்து கத்த, கெத்தை விடாதவன் "வர முடியாதுடி.. முடிஞ்சா வா உள்ளே..." என வைத்து விட்டான். அவனுக்கு அது தானே தேவை..

என்கிட்டேயே சாவாலா!? என பல்லை கடித்தவள் மின்னலென ஸ்டேஷனினுள் புகுந்து கொண்டாள்...

கான்ஸ்டபிலோ அந்தப் பொண்ணுல இது என்ற ரீதியில் பார்த்து வைத்தான்.. யாரையும் கவனிக்கும் நிலையில் தான் அவள் இருக்கவில்லை ... உள்ளே வேக நடையுடன் வந்தவளை கடமைக்காக தடுத்தார் அந்த அதிகாரி.
. "ஆமா யாருமா நீ...?" எனக் கேட்க இடுப்பில் கைவைத்து அவரை முறைத்தவள் "என்ன மேன் லந்தா..நான் யாருனு தெரியும்ல.. அப்படி இருக்க வா, நீ, போனு பேசுற..." என வயாதனவர் என்றும் பாராமல் அவள் சண்டைக்குத் தாயாராக அந்த மனுசனோ அவளை மேலும் கீழும் பார்த்து விட்டு "யாரும்மா நீ..?" என்றார். அவள் முறைத்த முறைப்பில் நீ
.நீங்கள் என்றாகி இருந்தது.

"அது.." என்றவள் முன்னே போய் மீண்டும் பின்னே வந்து.."யாருனு கேட்டல்ல..இப்போ சொல்லுறேன் கேட்டுக்க.. நான் தான் உங்க ஏ.எஸ்.பி சாரோட பொண்டாட்டி..." என ஆர்பாட்டமாக ஆரம்பித்து கடைசியில் வெட்கப்பட்டுக் கொண்டே நகத்தை கடித்து விட்டு போய் விட்டாள்.

அவள் கூறிய செய்தியில் அந்த வயதானவர் மட்டுமல்ல மொத்த தீராவின் ஸ்டேஷனுமே ஜெர்க்காகி நின்றது...

வெளியே கான்ஸ்டபிள் யாருடனோ பேசும் அரவம் கேட்டே எழுந்து வந்தவனுக்கு அது அனு என புரிந்து விட்டது.. இருந்தும் வெளியே வராமல் திருட்டுத்தனமாக அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தவன் இறுதியில் அவள் கூறியதில் சிரித்தே விட்டான். (ஏய்..!! சின்சியர் சிகாமணிய நீ தாண்டி கெடுக்கிற...)

அவள் தனதறை வருவது தெரிய ஓடிப் போய் அச்சாப் பிள்ளையாக அமர்ந்து விட்டான்.

உள்ளே வந்தவளுக்கு இன்னும் நிமிராமல் இருந்தவனைப் பார்த்து கோபம் தலைக்கேற ஓங்கி நடந்து வந்து அவன் பார்த்துக் கொண்டிருந்த கோப்புவை பறித்து நிமிர்த்திக் கொடுத்தாள்.. அந்த வெண்ணெய் அவசரத்தில் கோப்புவை தலைகீழாக வைத்துப் படித்துக் கொண்டிருந்தது...ஹா..ஹா..

ஹீ..ஹீ என அசட்டு சிரிப்பொன்றை உதிர்த்தவனிடம் "பல்லக்காட்டின பல் செட் பறக்கும்..." என முறைக்க, "ஆத்தாடி..." என்றவன் வாயை மூடிக் கொண்டான். அதில் முறைக்க நினைத்து சிரித்தே விட்டாள் அனு...

அவளது சிரிப்பையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்க என்னவென புருவம் உயர்த்தியவளிடம் "ஆமா வெளியே என்னவோ பேசின சத்தம் கேட்டுச்சு..."

"ம்ம்..?"என யோசிப்பது போல பாசாங்கு செய்தவள் "அப்படியா..என்ன கேட்டுச்சு...?" என அவனைப் போலவே கேள்வி கேட்டு வைக்க இப்போது முறைப்பது தீராவின் முறையாகிப் போனது.

முதலில் கணக்கில் எடுக்காதவள் பின் காதலோடு அவனை நெருங்கி "ஏன் நான் உங்க பொண்டாட்டி இல்லையா...?" என சேர்ட் காலரின் நுனியை சுரண்ட அவளிடம் இலகி நின்ற மனதை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டவன் "முதல்ல தள்ளி நில்லு..." என அவளை அப்புறப்படுத்த, வாயைப் பிளந்தவள் பின் வீம்பாக கைகட்டி நிற்க சிரித்துக் கொண்டே எழும்பிய எ.எஸ்.பி அவளருகில் சென்று "அதுசரி நான் எப்போ உன்னை லவ் பண்ணுறேனு சொன்னேன்.." என்றவனிடம் கோபமாக திரும்பி "முசல் புடிக்கிற நாயை மூஞ்சிய பார்த்தா விளங்காதா..." என அடிக்கண்ணால் பார்க்க அவளிடமிருந்து இப்படி ஒரு பதிலை எதிர்பாராத தீரா முகத்தை வாடியது போல வைத்துக் கொண்டு "ஏன்டி இப்படி குதர்க்கமாவே பேசுற...?" என்றான்.

"ஓஓ உங்களுக்கு இருக்கிற வாய்க்கு நின்னு நிதானமா வேறு பேசனுமோ..." என அதற்கும் கொட்டி வைக்க
"அவ்வளவு லெந்தாவா பேசுறோம்..." என்றவனைப் பார்த்து "லாங்கா இல்லை ராங்கா பேசுறீங்க..." என்றவளை மெச்சுதலாக பார்த்தவன்..."பார்ரா ஸ்பைசி கூட ரைமிங்கா பேசுறா..." என்றவனை கடித்துக் குதறிவிடும் வெறி அவளுள்...

"சரி மேட்டருக்கு வா.. இன்னும் நான் உன்கிட்ட லவ்வே சொல்லல்ல.. ஒருவேளை நான் சொல்லாம விட்டு வேற ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிகிட்டா என்ன செய்வ...?" என்று கேட்டவனின் பக்கம் முழுவதுமாக திரும்பியவள் "இந்த மூஞ்சிக்கு நானே அதிகபட்சம்..." என்றவளைப் பார்த்து உதட்டை வளைத்தவன் கண்ணாடித் தடுப்பில் தன் முகத்தை ஆராய்ந்தவனாக "அவ்வளவு கேவலமாவா இருக்கோம்...?" எனக் கேட்க, தலையில் அடித்துக் கொண்டாள் அனு.. பின்ன? எவ்வளவு அடித்தாலும் தாங்குகிறானல்லவா!? அடிதாங்கி என நினைத்தவளுக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது..

திடீரென சிரிப்பவளை பைத்தியம் போல பார்த்து வைத்தவன் "ஏய் என்னடி பிசாசு மாதிரி பயம்காட்டுற...?" என விழித்தவனை பார்வையால் எரித்தாள்.

"போடா..." என்றவள் பையுடன் கிளம்பப் போக பதறித் தடுத்தவன் "அனு பேபி இப்படி வாசப்படி வரைக்கும் வந்துட்டு கோலம் போடாம போனா எப்படி..." என எட்டிப் பிடிக்க "வாட்...?" என வாயை அஷ்டகோணலாக்கியவளைப் பார்த்து கண்ணடித்தவன் உதட்டைக்குவித்துக் காட்ட அப்போது தான் அவன் சொன்ன கோலத்திற்கான அர்த்தம் அவளுக்கு புரிந்தது...

வாயை மூடி சிரித்தவள் "போடா... " என்று விட்டு மீண்டும் வெளியேறி விட்டாள்.

ஏனோ மனம் வாடியது தீராவிற்கு.. முகத்தை சுருக்கிக் கொண்டே திரும்பியவன் சடாரென கதவு திறக்கப்பட அவன் சுதாரிப்பதற்குள் மின்னலென கன்னத்தில் முத்தமிட்டு விட்டு பறந்து விட்டாள்.

ஆனந்த அதிர்ச்சியில் உறைந்து நின்றது என்னவோ தீரா தான்...



...



"யாத்து ப்ளீஸ்டி..."

"முடியாது..முடியாது..முடியாது.." என்றவளிடம் காலில் விழாத குறையாக கெஞ்சிக் கொண்டிருந்தான் விக்ரம்.

"ஏய் ஒரே ஒரு ரைடுடி...ப்ளீஸ்டா..என் குட்டிமால்ல...தங்கம்ல வாடி.. உன் வீட்டுக்கு முன்னால இருக்க சந்தில தான் நிற்கேன்.."

"முடியாதுடா வளந்து கெட்டவனே..." என்று கூறி விட்டு நாக்கைக் கடிக்க திடீரென சத்தம் தன் அருகில் கேட்க, பைக்கில் இருந்தவாறே திரும்பிப் பார்த்தான் விக்ரம். அவனின் கண்ணுக்கினியாள் அங்கே தான் சிரித்துக் கொண்டிருந்தாள்...

கைகாட்டி அவளை நெருங்கி வரச் சொன்னவன் "ராட்சசி வரமாட்டேனு பிகு பண்ணிட்டு இங்கே என்னடி செய்ற...?" என்றவனுக்கு மெய்யாகவே அவளது வருகை ஆனந்தத்தை தான் தந்தது..

"அப்போ போய்டவா திரும்பி...?" என அவள் வீட்டுப் பக்கம் கைகாட்ட கையை உயர்த்தி கும்பிடு ஒன்று போட்டவன் வந்து ஏறுமாறு சைகை செய்தான்.

அவனை ஆழ்ந்துப் பார்த்தவாறே சிரித்தவள் சுற்றி முற்றி பார்த்தவாறே ஏறிக் கொண்டாள்..

இருவரும் வந்தது கடற்கரைக்குத் தான்.. அவளுக்கு கடல் என்றால் கொள்ளைப் பிரியம் என அவன் அறிவான். அதனாலே இங்கே அழைத்து வர, கடற்கரையைக் கண்டவள் ஆனந்த அதிர்ச்சியானாள்..

அவளது முகத்தில் வந்த சந்தோஷத்தைப் பார்த்தவனுக்கு மனம் நிறைந்து போனது..

குழந்தையாக மாறி கடற்கரையில் ஓடிச் சென்று கால் நனைத்தாள் யாத்தனா.. அங்கிருந்தே பறக்கும் முத்தமொன்றை அவனுக்கு கொடுக்க சின்ன சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

கால்களை மண்ணினுள் புதைத்தவாறு கைகட்டி தன்னவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனது காதல் விடயம் அவனது அப்பா அம்மாவிற்கு தெரியும்.. அவளது படிப்பு முடிந்த பிறகு அவள் வீட்டில் பெண் கேட்பதாக தீர்மானம்...

இப்படியே அவர்களினதும் பொழுது கழிந்தது..


...


"கங்ராட்ஸ்டி வாயாடி..." என திரூ வாழ்த்த அதை ஏற்றுக் கொண்டவளாக சிரித்தாள் மேக்னா...

நேற்றைய முந்தினம் சிறந்த முறையில் ஒரு கேஸை வாதாடி ஜெயித்திருந்தாள். நீதிமன்றம் உட்பட அலுவலகம் வரை அவளது பெயர் தான் அன்று முழுவதும் அடிபட்டுக் கொண்டிருந்தது..

அன்றே வாழ்த்தியவன் இன்று நேரில் கண்டதும் மறுபடியும் வாழ்த்தினான். வழமையாக இருவரும் சந்திக்கும் மாலிற்கு வந்திருக்க அவளோ சுற்றி சுற்றி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்...

கண்ணில் ஏதோ தவிப்பு.. மனம் வேறு அடித்துக் கொண்டிருந்தது.. கைகளைக் கோர்த்து விரல்களை பயத்தில் தட்டிக் கொண்டிருந்தாள்... பயமா..!? அப்படியென்றால் என்னவென்று கேட்கும் ரகம் அவள்.. அப்படிப்பட்டவள் இன்று பயப்படுகிறாள்.. அவளை வித்தியாசமாக பார்த்தவன் "மேனா வட் ஹெப்பன்ட்...?" என கேட்க எப்போதும் போல இன்றும் அவனது பிரத்தியேக அழைப்பில் மனம் பூரித்துப் போனது...

அவளிடமிருந்து பதில் வராமல் இருக்க அவளது கை மேல் தன் கைவைத்து அழுத்தம் கொடுத்தவன் "ஆர் யூ ஓகே...?" என்றவாறு ஆழ்ந்து பார்க்க அவளோ இமை விலத்தாமல் அவனைப் பார்த்துக் கொண்டே "திரூ... ஐ..ஐ..ஐ வோன்டு சே சம்திங்..." என்றவள் யோசனையுடன் அவனைப் பார்க்க இத்தனை நாட்களும் பார்த்திராத புது மேக்னாவாக அவன் கண்களுக்கு அவள் தெரிந்தாள்..

தயங்குகிறாள்...அதுவே அவளது மனதைப் படம் போட்டுக் காட்ட எதிர்பார்க்காமல் அவளிடம் "ம்ம் சொல்லு..." என்கவும்

"தி..திரூ...ப்ச்..." என்றவள் கையை உறுவப் போக விடாமல் இழுத்து வைத்தவனை பார்த்தவள் தயக்கத்தை விடுத்து "ஐ..ஐ..." என்றிழுக்க "ஐ லவ் யூ..." என பட்டென கூறி விட்டான் திரூபன்..

அவள் அதிர்ந்து விழிக்க உதட்டைக் குவித்து சிரித்தவன் "இதைத் தானே சொல்ல வந்த..?" என்றான்.

அவள் ஆம் என்று விட்டு "இதெப்படி உனக்கு..?" என்றவளைப் பார்த்து இப்போதும் அதே போல் சிரிக்க "திரூ...!!"என சிணுங்கியவள் தலை குனிய "ஏய்ய் தயவு செஞ்சு அந்த ரியெக்ஷனை மட்டும் கொடுத்துறாதடி. மாமன் தாங்கிக்க மாட்டேன்..." என தன் காதலை மறைமுகமாக உணர்த்தி இருந்தான்.

அவளோ "ச்சீ போடா..." என்றவள் அவனைப் பார்க்க வெட்கப்பட்டுக் கொண்டே மறுபக்கம் திரும்ப "மேனா இங்க பாருடி..." என அவளது முகவாயைப் பற்றித் திருப்ப கண்கள் கலங்க திரும்பியவளைப் பார்த்து அதிர்ந்தான் ஆடவன்..

சட்டென அவளருகில் போய் அமர்ந்தவன் "ஹேய் என்னாச்சுடி...?" என்கவும் அவனது அக்கரையில் மேலும் கலங்கியவள் "உன் தோள்ல சாஞ்சிக்கட்டுமா...?" என்றாள்.

"இதென்னடி கேள்வி..?" என்றவன் அப்படியே அவளை தன் தோளில் சாய்த்து விட்டு அவளைச் சுற்றி கைபோட்டு அணைத்துக் கொண்டான்..

"ஏன்டா இவ்வளவு நாளும் என் காதலை நீ புரிஞ்சிக்கல...?" என அவன் நெஞ்சில் சாய்ந்திருந்தவள் கேட்க, அவனிடம் மௌனம் மட்டுமே... அவன் அவளை உணர்ந்து கொண்டிருந்த நேரம் அது..!!

பதிலெதுவும் வராமல் இருக்க நிமிர்ந்தவள் "சொல்லுடா..." என சேட் காலரை இழுத்து விட்டு மூக்கை உறிஞ்ச செல்லமாக அவளது மூக்கைப் பிடித்து ஆட்டியவன் "எக்சுவலி உன்னை பார்த்தன்னைக்கே எனக்கு உன் மேல க்ரஷ்டி.. ஆனால் அப்போ இருந்த சிட்டுவேஷன் என்ட் ஸ்டடிஸ் பிசில இதெல்லாம் நான் பெருசா மைண்ட் பண்ணிக்கல்ல.. எப்போ டிகிரி வாங்கி ஒரே எடத்துக்கு ரெண்டு பேருக்கும் போஸ்ட் கெடச்ச சந்தோஷத்த பங்கு போட நீ வந்தியோ அன்னைக்கு பிடிச்சிது இந்த வாயாடிய.. இன்னைக்கு வரை பிடிக்கிது...எஸ் ஐ எம் இன் லவ் வித் யூ மை டியர்" என்றவன் அவளது முடியைக் கலைத்து விட ஆசையாக அவனது தோளில் தலை வைத்தாள் மாது...

தொடரும்...

தீரா.
 
Top