• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Dheera

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 17, 2023
Messages
234
அவன் அறைந்த வேகத்தில் தடுமாறி நின்றான் அரவிந்த்...

ஆதித்யா வேடிக்கை பார்த்தானே தவிர நண்பர்களை தடுக்க முயற்சிக்கவில்லை. வர்ஷினி அந்தப் பக்கம் திரும்பவே இல்லை.

அடுத்த அறையைக் கொடுக்க கையை ஓங்கும் போது சரியாக திரூபன் வந்து தடுத்து விட்டான்.

அவனும் அனைத்தையும் இவ்வளவு நேரமும் கேட்டுக் கொண்டு தானே நின்றான். இருந்தும் அவனின் பக்கம் இருக்கும் நியாயத்தைக் கேட்காமல் அவனை தண்டிப்பது தவறு என இடையில் வந்து மறித்தான்.

திரூபனின் பிடியை விட தீராவின் பிடி பலமாக இருந்ததால் அவன் தள்ளிய வேகத்தில் திரூ கீழே விழப் போய் கடைசி நொடியில் காலையூன்றி நின்று விட்டான்.

அவனை விரல் நீட்டி எச்சரித்தவனின் விழிகளில் தான் எத்தனை கோபம்...!!!?

இங்கே அரவிந்தின் பக்கம் திரும்பி ஆத்திரத்தில் சேட்காலரைப் பிடித்தவன் "ஏன்டா..ஏன்..?சின்னப் பொண்ணுடா.. அவளப் போய் விட்டுட்டு வந்திக்க.. இடியட்..!!!" என்றவன் அவனை உலுக்க கண்ணீர் வடித்தானே தவிர எதும் வாய் திறந்து சொல்லவில்லை. சொல்ல எதுவும் இருந்தால் தானே..தவறு அவனிடமல்லவா..

"அவ என்னடா பாவம் செஞ்சா..? உன் அத்தைக்குப் பிறந்தது அவ செஞ்ச தப்பா...?" என்றவனின் கண்களில் அனல் தெறித்தது..

பல்லிடுக்கில் வார்த்தைகளை கடித்துப் துப்பினான் தீரா..."அவ சொன்ன எதையும் தான் நம்பல.. அட்லீஸ் அந்த நடுராத்திரில ஒரு பொண்ணு உயிருக்காகவும், கட்புக்காகவும் போராடி கெஞ்சினப்ப கூட காப்பாத்தி இருக்கலாமேடா...நோன்ஸன்ஸ்..." என்றவன் அவனை சுவரில் தள்ளினான்..

பின் மீண்டும் சேட் காலரை கொத்தாகப் பிடித்து..."நீ எல்லாம் ஒரு டாக்டராடா...? அந்தப் சின்னப் பொண்ணுட கன்னத்துலயும் மு..முதுகுலயும் இருந்த காயத்தப் பார்த்து கூட உனக்கு புரியலை அது பொய்யா மெய்யானு...! பைத்தியகாரனே...!!"

இப்போது தீராவின் கண்களில் கண்ணீரின் சாயல்..."எ..என்னைப் பார்த்தும் பயப்படுறாடா.
.தாங்க முடிலடா..தாங்க முடியலை..எல்லாம் உன்னால தான்..." என்றவன் அவனை உதறித் தள்ளினான்...

சிட்... என்றவாறு தலையைக் கோதி தன்னை சமநிலைப்படுத்த போராடினான் அந்த பாசக்காரன்..

கீழே விழுந்து கிடந்தவனைப் பார்த்து ஆற்றாமையும் கோபமும் தலைக்கேறினாலும் நண்பன் கீழே கிடப்பதைக் கூட அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.. இருந்தும் அவனுக்கு கைகொடுக்க மனசில்லாமல் திரூவிடம் கண்ணைக் காட்ட அரவிந்தை எழுப்பி விட்டான்.

ஆதித்யாவும் தீராவுமே இந்தளவுக்கு இருப்பதால், அவனுக்கும் அரவிந்திற்கு உதவிட முடியாத நிலை.. ஆயிரம் தான் இருந்தாலும் உயிர் தோழனல்லவா...

இவ்வளவு நேரமும் உள்ளுக்குள் கொதித்துக் கொண்டிருந்தாலும் வெளியே சாதாரணமாக முகத்தை வைத்திருந்த ஆதித்யா இறுதியாக அவனிடம் விசாரணையை தொடங்கி இருந்தான். அழுத்தமாக தன் பாதத்தை எடுத்து வைத்து வந்தவன் கைகளை கட்டிக்கொண்டு அரவிந்தின் முன் நின்றிருந்தான். நண்பர்கள் மூவரினதும் பார்வை அவனில் தான் நிலைத்திருந்தன... பின் "டெல் மீ இந்தளவுக்கு மிருகம் மாதிரி கல்நெஞ்சக் காரனா நீ திரும்பி வந்திருக்கேன்னா அதுக்கு நிச்சயம் ஏதாவது காரணம் இருக்கு... அரவிந்த் என்றவனை தாண்டி என் ஃப்ரெண்ட் அந்த ராத்திரில ஒரு பொண்ண இக்கெட்டான சூழ்நிலையில விட்டுட்டு வாரளவுக்கு கெட்டவன் இல்லை..." என்றானே பார்க்க அரவிந்தின் கண்களில் தவிப்பு.. அதனைப் புரிந்து கொண்டவனாக அமைதியாக நின்றவனை தீரா திரும்பிப் பார்த்தானே தவிர எதுவும் தடுக்கவில்லை. ஆதித்யா ஏதோ முடிவுடன் இருப்பது அவனுக்குப் புரிந்தது..

"நா..நான்..." என்ற அரவிந்தின் கண்கள் கண்ணீரை விட்டன. ஆனால் அதற்காக அங்கே யாரும் இரங்கவில்லை.

சொல்லு என்பது போல கண்ணைக் காட்டியவனிடம் அந்த காஃபி ஷாப்பில் தான் கண்டதையும் கேட்டதையும் சொல்ல ஏகத்திற்கும் கடுப்பாகி விட்டான் தீரா.

"முட்டாள்..." என பல்லை நறுநறுத்தவன் முன்னேற அவனை தடுத்திருந்தான் ஆதித்யா..

"ம்ம் நீ பார்த்தது உண்மை தான்..." என்ற ஆதித்யாவின் பேச்சில் அதிர்ந்தவனாக தீரா"டேய் அவன் தான் குடிகாரன் மாதிரி ஒலர்ரான்னா.. நீ வேற ஏன்டா...?" என்றவனை பார்வையால் அடக்கிய பின்னும் அவன் பதில் பேசுவானா...!?

தன்னையே பார்த்துக் கொண்டிருந்த அரவிந்திடம் "ஆனால் அது ரதி இல்லை..." என்றதற்கு இப்போது அரவிந்த் அதிர்ந்தாலும் தீரா அது.. என தலையை ஒடித்தான்.

"எ..என்ன...?" இப்போது அரவிந்த்.

"என்ன நொன்ன..?" என அதற்கும் தீரா கடுப்படிக்க ஆதித்யா முறைத்த முறைப்பில் கப்சிப்..

"எஸ்... நீ எத்தனை மணிக்கு அங்கே ரதியை..ஐ மீன் அந்தப் பொண்ண பார்த்த...?" என்ற ஆதித்யாவிடம் அவன் குறிப்பிட்ட நேரத்தைச் சொல்ல...

"இல்லை.. அந்த நேரத்தில ரதி என் வீட்டில தான் இருந்தா..." ஏதோ இன்வெஷ்டிகேசன் செய்வது போல இருந்தது அவனின் பேச்சு..

அரவிந்த் குழப்பத்தில் முழிய அவனை அழுத்தமாக பார்த்தவன் வர்ஷினியை அழைக்க அவளோ.."என்னால அங்கே வர முடியாது..." என்று முகத்தை திருப்பிக் கொண்டாள்.

அந்தக் கலவரத்திலும் வர்ஷினியின் அந்த சிறு பிள்ளைத் தனமான பேச்சு தீராவிற்கும் திரூபனிற்கும் புன்னகையைத் தந்தது.. அரவிந்தோ அடிபட்ட பார்வை அவளைப் பார்த்து வைத்தான். அதனைக் கூட கவனிக்கும் நிலையில் அவளில்லை.. அவளுக்கு அரவிந்தின் மேல் அத்தனைக் கோபம்...

"ராட்சசி..." என முணுமுணுத்துக் கொண்டே அவளருகில் சென்றவன் கையைப் பிடித்து இழுத்து வந்தான்..

அவளோ, வீம்பு இருந்தாலும் அவனின் இழுப்புக்கு வந்தாள். அதில் மெல்ல அவனின் இதழ்கள் விரிந்தனவோ..!!?

மீண்டும் அரவிந்திடம் வந்தவன் "உன் அத்தை பொண்ணு சொன்னதையே நம்பைல்ல.. நாங்க சொல்லுறத நம்புவியோ நம்ப மாட்டியோ தெரியாது..." என்றவனை வேதனையுடன் பார்த்தான்.

நண்பனின் முகத்தை அப்படி காணச் சகிக்காவிட்டாலும் அவனுக்குப் நிறைய புரிய வைக்க வேண்டி இருந்தது ஆதித்யாவிற்கு..

தொடர்ந்தவன் "பட் ஒருத்தன் நிரபராதியா குற்றவாளியா என்பதற்கு சாட்சிகள் ரொம்ப முக்கியமில்லையா...!?" என்றவன் திரூவின் பக்கம் லேசாக தலை சாய்த்து "அப்படித் தானே...!?" எனக் கேட்க அவசர அவசரமாக "ஆமா ஆமா ரொம்ப முக்கியம்.." என உதட்டை வளைக்க ஆதித்யாவின் கண்கள் சிரித்தன.. பின் அரவிந்திடம் "சோ இங்க ரதி அந்த ஷாப்ல நீ சொன்ன டைம்ல இருக்கவில்லை என்றதுக்கு நானும் தீராவும் சாட்சி.. அதுக்கு மேல இவ சாட்சி..." எனக் கூற உதட்டை சுளித்தவள் எங்கோ பார்த்துக் கொண்டு "ஆமா.. அந்த நேரத்துல அவ என் கூட அதுவும் கிட்சன்ல இருந்தாள்...இன்னும் இவருக்கு நம்பிக்கை வரலன்னா போய் அந்த ஷாப்பலயும் எங்க வீட்டுலயும் இருக்க சீசீ.டிவி ஃபுடேஜ் எடுத்து பார்க்க சொல்லுங்க.." என்றவள் அதற்கு மேலதிகமாக "அவள் உங்க பார்வைல தப்பானவளாகவே இருக்கலாம்.. ஆனால் நீங்களும் டாக்டர் தானே,படிச்சவர் தானே அண்ணா.. அந்த இடத்துல அவளுடைய அத்தானா நின்னு யோசிக்காம சக மனுஷனா நின்னு யோசிக்கலாமேண்ணா..." என்றவளது வார்த்தைகள் அவனைச் சுட்டன. "அ..அந்த வலியை நானும் அனுபவிச்சிருக்கிறேன்ணா..ஒ..ஒன்னுக்கு ரெண்டு தடவை... நா..நான் அநாதை தான்ணா... " என்று துடித்தவளை பார்த்து ஆதித்யாவின் இதயத்தை யாரோ சம்மட்டியால் அடிப்பது போல வலித்தது.. அவனது கரங்கள் அவளை அணைக்க பரபரத்தன.. இருந்தும் மூளை மரத்து சிலையாகி நின்றான்... அன்று அவள் அநாதை என்று தெரியாமல் தான் விட்ட வார்த்தைகளையும் அவளை விரட்டி விட்டதையும் நினைக்க மனம் ரணமாய் வலித்தது..

"எ..எனக்கு தெரியும் என்ன காப்பாத்த ஒருத்தரும் வரமாட்டாங்கனு.. இ..இருந்தும் மனிதாபிமானமுள்ள ஒருத்தர் சரி வந்து கா..காப்பாத்தமாட்டாங்களானு துடிச்சேன்.. ஒரு பொண்ணுக்கு அவளுடைய கட்பு ரொம்ப முக்கியம்..." என்றவள் தலையைக் குனிந்து மௌனமாக கண்ணீர் வடித்தாள்.

"அ..அத பறிக்க நினைக்கிறாங்க எ..என்ற போது..." என்று ஆரம்பித்தவள் ஆதித்யாவின் கையை இறுக பற்றிக் கொண்டாள்.. அவளின் வலியை அந்த அழுத்தத்திலே இப்போது ஆடவன் உணர்ந்து கொண்டான்... அவள் துடித்திருக்கிறாள் அந்த நேரம் காப்பாற்ற நான் அங்கே இல்லை என்பதை நினைக்க நினைக்க அந்த அரக்கர்களுக்கு நரகத்தை காட்ட வேண்டும் என மனதில் உறுதி செய்து கொண்டான்.

"ரொம்ப வலிக்கும்ணா... அந்த வலில உங்களைப் பார்த்தப்போ அவளுக்கு எப்படி இருந்திருக்கும்னு எனக்கு உணர முடியுது.... அவளுடைய ரெத்த பந்தம் உங்களுக்கு ஏன்ணா அது புரியல்ல.." என்றவளின் பார்வையில் வந்து போன அந்நியத்தன்மையில் தமையன் மரித்தான்.

"கொ..கொஞ்சம் கூட உங்களுக்கு திரும்பி வந்து அவளை பார்க்க தோனலைல்ல....தீரா அண்ணா சரியா வந்ததால அவள் இங்கே இருக்கிறாள்...அ..அவர் போக கொஞ்சம் தாமதமாகி இருந்தால்...?" என்றவள் விட்டென அவ்விடம் விட்டகழ்ந்தாள்.

ஆஆஆஆஆஆ மரண வலி அரவிந்தினுள்..!! நெஞ்சம் திடுக்கிட்டது ஆடவர் மூவருக்கும்..!! அவள் சொல்லுவது சரி தானே.. கொஞ்சம் தாமதமாகி இருந்தாலும் அவளது நிலை...!? தீராவிற்கு அரவிந்தைப் பார்க்கப் பார்க்க வெறுப்பே வந்தது.. அவனும் அவ்விடம் விட்டகழ்ந்தான்..

இங்கே அரவிந்தோ மனதில் ராத்திரி நடந்ததை எண்ணி துடித்தான்.. அவன் ஏன் வரவில்லை.? வந்தான்!! திரும்பி வந்தான்..!! மனம் கேட்காமல் அவன் திரும்பி வந்து பார்க்க அதற்குள் தீரா வந்து அழைத்து சென்றுவிட்டான்.

வெற்றிடமே அவனை வரவேற்க ரதி தன்னிடம் கெஞ்சியது தன் பிரம்மையோ எனக் கூட நினைத்தான்... பாவம் அவன் அறிந்திருக்கவில்லை ரதியின் நிலையையும் தன் எதிர்காலத்தில் அவள் இல்லாமல் தான் துடிக்கப் போகிறோம் என்பதையும்...!!


...


இப்படியே அங்கே இருந்த யார் மனதிலும் நிம்மதி என்பது இருக்கவில்லை. சற்று நேரத்தில் தீராவிற்கு அழைப்பு வர எடுத்துப் பார்த்தால் அனு தான்.

அவன் ஹாஸ்பிட்டலில் இருக்கிறேன் எனக் கூற என்னானதோ ஏதானதோ என பதறியவள் அவன் கூறிய எதையும் செவியினுள் போட்டுக் கொள்ளாமல் ஹாஸ்பிட்டலின் முகவரியை கேட்டு விட்டு வந்து விட்டாள்.

அங்கே வந்தவளை ஆளாலுக்கு ஒருபுறம் சோகத்தில் இருந்தவர்களே வரவேற்றனர்...

தவிப்புடன் அவளது பார்வை தீராவைத் தேட எதேச்சையாக திரும்பிய திரூபன் தீராவைக் காட்ட அவனருகில் ஓடினாள். அவனுக்கு எதுவும் ஆகவில்லை என்ற பிறகே அவளுக்கு நிம்மதியாய் இருந்தது...

அப்போ யாருக்கு என்னானது..?எனக் கேட்க ரதி இருந்த அறையைக் கைகாட்டினான்.

ஒவ்வொரு எட்டு வைக்கும் போதும் அவளுக்கு மனம் தடதடுத்தது.

அவளுடனே அனைவரும் உள்ளே நுழைந்தனர்.. மறைந்திருந்து சரி ரதியைப் பார்ப்போம் என அரவிந்தும் நுழைந்திருந்தான்.

உள்ளே வந்த அனுவோ அங்கே ரதியை எதிர்பார்த்திருக்கவில்லை.. அதுவும் இவளை ....!?

"ரதி....." என்றவள் அதிர்ந்து நின்று விட்டாள்.

கட்டிலில் கண் மூடி இருந்தவள் பழக்கப்பட்ட குரலாக இருக்க சட்டென கண்ணைத் திறந்து திரும்பிப் பார்த்தவளும் ஸ்தம்பித்தாள்..

"அ...அனு..." என அதிர்ந்து விழித்தவர்களைப் பார்த்து அனைவரும் குழம்பி நின்றனர்...

முதலில் சுயத்தை அடைந்தவள் "ரதி..." என பாய்ந்து கட்டிக் கொண்டாள் தன் கல்லூரி நண்பியை.. ஆம் இருவரும் கல்லூரி முதலாமாண்டில் ஒன்றாய் படித்துக் கொண்டிருந்த நேரம் தான் எதிர்பாராத விதமாக அனைத்து புயலும் அடித்து ஓய்ந்தது...

"அனு..அனு..." என அவளைக் கட்டிப்பிடித்து அழுதவளைப் பார்க்க அங்கிருந்த அனைவருக்குமே வேதனையாய் இருந்தது...

தொடரும்...

தீரா.
 
Top