• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Dheera

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 17, 2023
Messages
234
தீரா வந்து அனுவிடம் விடயம் கேட்க அவள் "நீ ரெஸ்ட் எடு இதோ வந்துர்றேன்..." என்றுவிட்டு வெளியே போக அனைவரும் மீண்டும் வெளியேறினர்.

அரவிந்தோ அவர்களுடன் சம்பந்தப்படாமல் மறைவாய் நின்று கொண்டான். ஆனால் அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தான். அவர்களுடன் முகம் கொடுக்க ஏனோ தயக்கம் அவனுள்..

"நானும் ரதியும் **காலேஜ்க்கு ஒன்னாத்தான் ஜாயின் ஆனோம். ஜாயின் பண்ணின மொதல் நாளிலிருந்தே எங்களுக்குள்ள அப்படியொரு நட்பு உருவாச்சு.. இப்படியே ஜாலியா போயிட்டு இருந்தப்ப தான் ஆன்டிக்கு திடீர்னு சுகமில்லாமப் போச்சு.. ரொம்ப மனசு ஒடஞ்சிட்டா.. வீட்டுல ஒத்த பிள்ளை வேற.. அங்கிலும் ரொம்ப கவலைப்பட்டார். அ..அப்போ தான் திடீர்னு ஆண்டி இறந்துட்டாங்கனு கேள்விப்படவும் அறக்கப்பறக்க போ..போறதுக்குள்ள அ..அங்கிள்...இறந்துட்டாரு..." என்றவளது உடல் அழுகையில் குலுங்கியது. இப்போது நினைக்கக் கூட அவளாலே அந்த இழப்பை தாங்கிக் கொள்ள முடியவில்லை. அப்படி இருக்க அவளுக்கு எப்படி இருக்கும் என்பதை அங்கிருந்த அனைவருக்கும் உணர முடியுமாய் இருந்தது..

"நா..நான் போனப்ப பை..பைத்தியம் மாதிரி அழுதாள். பாவம் அவள்..
ஒ...ஒரு நாளைலையே அவளை அநாதையாக்கிட்டுப் போய்ட்டாங்க...அ..அப்போ தான் யாரோ அவளுடைய அத்தானுக்கு கால் பண்ணுறனு எழுந்து ஓடினாள்..நானும் போய் பார்க்க அப்படியே தரையில மடிஞ்சி கிடந்தாள்.. என்னனு கேட்டதுக்கு ஒன்னுமே சொல்லைல்ல.. ஆனால் நிலைமை சரியில்லைனு மட்டும் புரிஞ்சது...அதுக்குப் பிறகு நான் வேற காலேஜ் மாறிட்டேன்.. அவளுக்கு எவ்வளவோ தொடர்பு கொள்ள ட்ரை பண்ணினேன்.. ஆ..ஆனால் கடைசில.." என்றவள் கையை விரித்துக் காட்டிவிட்டு "ஆமா அவளுக்கு இப்போ என்னாச்சு..ஏன் ஹாஸ்பிட்டலில் இருக்கா..கன்னத்துல வேற ஏதோ ...அவள் எப்படி இங்க வந்தாள்? என்ன நடக்குது?" என நிறுத்தியவள் தீராவைப் பார்க்க அவளுக்கு எப்படிச் சொல்லி புரிய வைப்பதென அவனுக்குமே புரியவில்லை.

எல்லோருடைய முகமும் இருண்டு போயிருக்க தீரா தான் "அனு ஐ வில் டெல் யூ ஆல்.. இப்போ ரதியை கொஞ்சம் பார்த்துக்கோ..." என்றவன் அவளை உள்ளே அனுப்பி வைத்தான்.

பின் ஆதித்யா "தீரா இனி ரதி என் வீட்ல வர்ஷினி கூட இருக்கட்டும்..." என்றவனின் பேச்சில் அத்தனை கடினமும் உறுதியும்.

அவனிடம் எதிர்த்து ஒரு வார்த்தைப் பேச அங்கே யாருக்கும் தைரியம் இல்லையென்றாலும் அவன் கூறுவதே சரி எனப்பட்டது அனைவருக்கும்..

அதன் பின் அங்கே அரவிந்த் இருக்கவில்லை.. இலக்கே இல்லாமல் கால் போன போக்கில் ஹாஸ்பிட்டலை விட்டு வெளியேறி இருந்தான்...

இங்கே சற்று நேரத்தில் ரதியை அழைத்துச் செல்லுமாறு கூற வர்ஷினியுடன் ஒட்டிக் கொண்டே வீடு வந்து சேர்ந்தாள்..

அமராவிடமும் உண்மையைச் சொல்ல பதறித் தான் போனார்..

பின் அவளை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டனர். அப்படி ஒரு சம்பவம் நடந்ததையே அதற்குப் பிறகு யாரும் மூச்சுக் கூட விடவில்லை.

இரவு முழுவதும் விழித்திருந்த களைப்பில் அனைவரும் தங்கள் இடங்களுக்கு சென்று விட்டனர்.

ரதியும் ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருக்க அமரா சமைத்துக் கொண்டிருந்தார்.

ஆதித்யா ஆபிஸிற்கு சென்று விட்டான். வர்ஷினியும் தூங்கிக் கொண்டிருந்தாள்.

இனி அனுவையும் தனியே தங்க வைப்பது சரியில்லை என்பது புரிய சீக்கிரமே அவர்களின் காதல் விடயத்தை வீட்டில் கூறி அவளை மணந்து கொள்ள தீரா திட்டமிட்டிருந்தான்.

நண்பகலாகவும் எழுந்து வந்த வர்ஷினி கண்டதோ அமரா யாருடனோ ஃபோனில் பேசிக் கொண்டிருப்பதைத் தான்.

சரியாக அவளும் அவரருகில் வர பேசி முடித்தவர் திரும்ப இருவரும் ஒருவர் மேல் ஒருவர் மோதி இருந்தனர்..

"சா..சாரி..."

"அட இதுக்கெல்லாம் எதுக்கும்மா சாரி..." என்றவர் புன்னகைத்தார்.

பேச்சை மாற்ற "ஆமா யாரு ஃபோன்ல.. மா..மாமா வா..?" ஏனோ சட்டென அவளுக்கு உறவு சொல்லி அழைப்பது வர மாட்டேன் என்றது.

என்ன கேட்டு விட்டாள்... அப்போ இவளுக்கு எதுவும் தெரியாதா...??? என்று நினைத்துக் கொண்டவரின் கண்கள் கணவனின் நினைவால் கலங்கின..

"என்னாச்சு..ஏன் அழுறீங்க...?" என்று வர்ஷினி பதற

"அ..அவர் இறந்துட்டாருமா..." என்றவர் முந்தானையால் வாயை மூடிக் கொண்டு அழுதார்...

சரியாக அந்த நேரம் பார்த்து ஆதித்யாவும் உள்ளே நுழைய தாய் அழுவதைப் பார்த்து அவரருகில் விரைந்தான்.

"மாம் என்னாச்சு...?" என்றவன் அவரை பிடிக்க கஷ்டப்பட்டு அழுகையை அடக்கிக் கொண்டவர் "எனக்கொன்னுமில்லப்பா..அப்பாவ நினைச்சு தான் அழுறேன்.. ஆனால் நீ வர்ஷினியைப் பாரு. அவ அழுறா.." என்றவுடன் திரும்ப, அவள் அழுது கொண்டு தான் இருந்தாள்.

ஆக இப்போது தான் அப்பா இறந்த செய்தி அவளுக்குத் தெரியும் என்பதை சரியாக ஊகித்தவன் இப்போது அவளை சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கி விட்டான்.

"நீ என்னடி அடிக்கடி டேம்ம தெறந்து விடுற..?" என சூழ்நிலையை இலகுவாக்க அவன் வினவினாலும் அவனும் தந்தையின் பிரிவை எண்ணி தவித்தான்.

ம்ம்..என்றவள் வழமை போல அவனது நெஞ்சில் சாய்ந்து மூக்கை துடைத்தாள்..

அமரா அவளை வாஞ்சையுடன் பார்த்து வைத்தார் என்றால் ஆதித்யா நெகிழ்ந்தான்.

தன் தோள் வளைவுக்குள்ளே அவளை வைத்துக் கொண்டு மேலே அழைத்துச் சென்றான்.

மறக்காமல் ரதியைப் பற்றி விசாரித்து விட்டே போனான்...


***


பால்கனியில் நின்று கொண்டிருந்தான் ஆதித்யா. வர்ஷினி உடனே தன்னுடன் ஒட்டிக் கொள்ளுவாள் என்று கிஞ்சித்தும் நினைத்திருக்கவில்லை. அவளுக்கு அவன் கொஞ்ச நஞ்ச கஷ்டமா கொடுத்திருந்தான்...இருந்தும் அதையெல்லாம் மறந்தவள் போலல்வா அவள் நடமாடுகிறாள்..மறந்தால் அவனுக்கு நல்லது தான்..ஆனால்...???

அப்போது தான் உள்ளே நுழைந்தவளை "வர்ஷூ..." என்றழைத்தவனை சுற்றி சுற்றி தேடினாள் காரிகை.

"வர்ஷூ இங்கே இருக்கிறேன்.." என்றதன் பின்னர் தான் அவன் பால்கனியில் நிற்பதை பார்த்தாள்.

அப்படியே அந்தப் பக்கம் சென்றவளை பிடித்து அங்கிருந்த ஊஞ்சலில் இருத்தினான்..

"வாவ் செம்மயா இருக்குங்க... இதை நான் கவனிக்கவே இல்லையே.." என்றவள் ஒய்யாரமாக அமர்ந்து காலால் எந்தி ஆட முற்பட்டாள்.

அவளுக்கு அந்த சிரமத்தைக் கூட கொடுக்காதவன் பின்னே வந்து ஊஞ்சலை ஆட்டி விட குதூகலமானாள் அந்தச் சிட்டு...

"பிடிச்சிருக்கா வர்ஷூ...?"

"மம் ரொம்ப பிடிச்சிருக்கு... அதை விட நீங்க வர்ஷூனு கூப்பிடுறது இன்னும் பிடிச்சிருக்கு..." என்று சொன்ன பிறகு தான் நினைவு வந்தவளாக சட்டென நாக்கை கடித்து விட்டு அவனை அந்நாந்து பார்த்தாள்...

அவன் கோபப்படுவான் என எதிர்பார்த்திருக்க அந்த கூர்மையான விழிகளில் வந்த மோகப் பார்வையில் தலையை திருப்பிக் கொண்டவள் திருதிருத்தாள்..

இப்படியான பதிலை அவளிடமிருந்து எதிர்பாராதவனுக்கு அவளது முட்டைக் கண்கள் உருண்ட தினுசில் மன்மதன் வந்து சிம்மாசனமிட்டு அமர்ந்து விட்டார்...

ஊஞ்சலை ஆட்டிக் கொண்டே குனிந்தவன் குனிந்து கொண்டே தான் சென்றான்.. அவ்வளவு குள்ளச்சி அவள்.. இல்லாவிட்டால் அவன் தான் வளத்தெரியாமல் வளர்ந்திருக்கிறானோ...!

"ஏய் என்னடி இவ்வளவு குள்ளச்சியா இருக்க நீ...?" என்றவுடன் எங்கிருந்து தான் அவளுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்ததோ தெரியவில்லை "ஆதி என்னைய குள்ளச்சி சொல்லாதிங்க.." என மூஞ்சியை சுருக்க அவன் தான் ஆனந்த அதிர்ச்சியில் அவள் முன்னே வந்திருந்தான்...

"ஹேய் வர்ஷூமா வட் டிட் யூ சே...?" என்று அவளருகில் அமர்ந்து கையைப் பிடிக்க மறுபக்கம் திரும்பியவள் "கு..குள்ளச்சி சொல்லாதிங்க.. எனக்கு கோவம் வரும்.." என்றாள்.

"ப்ச் வர்ஷூ..அதில்லை அதுக்கு முன்னாடி ஏதோ சொன்ன..."

"அது தான் சொன்னேன்..."

"ஐயோ ஏன்டி..! என் பேரை ஷாட்டா சொன்னியே.."

"நான் எப்போ சொன்னேன்..ஆதின்னு தானே சொன்னேன்.." என்றவள் எதற்காக மூஞ்சியை அஷ்டகோணலாக திருப்பினோம் என்பதையே மறந்திருந்தாள்.

"அதே தான்..." என்றவன் அவள் எதிர்பாராத நேரம் அவள் கன்னத்தில் மீசை குத்துமளவு முத்தமிட்டிருந்தான்..

ஷாக்காகி கண்ணை விரித்தவள் பின் "அவுச்...மீசை குத்துது..."என தடவி விட்டவளின் பதிலில் தலையில் அடித்துக் கொண்டான். பின்ன, அவள் சுயநினைவில் இருக்கும் போது முத்தமிட்டிருக்கிறான். அதற்காக வெட்கப்படுவாள் என்று அவன் எதிர்பார்த்திருக்க மீசை குத்துகிறது என்னவளின் பதிலில் அவன் தலையில் துண்டைப் போடாமல் விட்டதே பெரிது...

"ராட்சசி உனக்கு எந்த ஃபீலிங்குமே வரலயாடி...?"

"என்ன ஃபீலிங் வேணும்...?"

"உனக்கு கிஸ் பண்ணிக்கேன்டி.. ஏதாச்சும் ஃபீல்..!! இட் மீன்ஸ், ஹௌ ஐ சே...?" என்றவன் தலையை கோத வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டவள்...

"ஓஓ அதை கேக்குறீங்களா...? அந்த பழைய படத்துல ஓல்ட் லேடிங்க வாயில விரல வச்சிக்கிட்டே தலைய தொங்க போட்டுகிட்டு தரைல..." எனக் கூற வந்தவளை

"ப்ளீஸ் இதுக்கு மேலே ஒரு விளக்கமும் தேவையில்லை..." என்றவன் தலைக்கு மேல் கைகூப்பி கும்பிடே போட்டு விட்டான்...

வர்ஷினி கண்ணீர் வருமளவு சிரித்தாள் அவனின் செய்கையில்..

ஆசை தீர அவளைப் பார்த்துக் கொண்டிருந்தவன் "வர்ஷூம்மா என் மேலே உனக்கு கோபம் இல்லையாடா...?" என திடீரென கேட்க சட்டென வடிந்தது அவள் சிரிப்பு..

"அம்மாகிட்ட முகத்தை திருப்பினவ என் கூட மட்டும் ஏன் எல்லாத்தையும் மறந்த மாதிரி பிகேவ் பண்ணுற...?" என்றவனை திரும்பிப் பார்த்தவளின் முகம் சிவந்து போய் இருந்தது..

அவளைத் தாங்கியவன் "உன்னை கஷ்டப்படுத்தோனும்னு கேட்கல்ல.. பட் ஐ நீட் சம் க்ளெரிபிகேஷன்ஸ்..." என்றவனின் பார்வை அவளை துளைத்தது..

அவள் கூறிய பதில்..?


...


" நான் அவங்க சொன்னாங்கன்ற காரணத்துக்காக தானே கல்யாணம் செய்துக்க ஒத்துக்கிட்டேன்.."

அவளின் பதிலில் ஏதோ ஒன்றை எதிர்பார்த்து ஏமாந்து தான் போனான் ஆதித்யா.

"அப்போ என் மேல கோபம் இல்லையா...?"

"கோபம் இல்லை வருத்தம் இருக்கு..." என்றவளது கண்கள் கண்ணீரை விடவா வேண்டாமா என்றிருந்தது.

"எனக்கு புரியல்லை..." என்றவனது விரல்கள் அதன் பணியை கட்சிதமாக செய்து விட்டன. அவளது கண்களை துடைத்து விட்டன..

சிரித்தாள்.. ஆனால் உயிர்ப்பில்லை..."எனக்கு கிடைச்ச ஒரே ஒரு அம்மாவையும் அடுத்த நாளே இழக்க வச்சிட்டிங்களே.. அந்த வருத்தம் தான்..." என்றவளது பதிலில் துடித்துப் போனான் ஆதித்யா..

"வ..வர்ஷூ..." என்று நிறுத்தியவன் முதல் தடவை என்ன பேசுவதென்று தடுமாறினான்..

"அப்போ அம்மா சொன்னாங்கனு ஒரே காரணத்துக்காக மட்டுந்தான் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டியா..?"

என்ன பதில் சொல்லுவாள் இதற்கு..உன்னை காதலிக்கிறேன், அதனால் என்றா..!? ஆம் அதைத் தான் சொல்லி இருந்தாள்.

"நான் இதுக்கு பதில் சொல்லுவேன். ஆனால் அதை என்னாலேயே ஏற்றுக் கொள்ள முடியாது..." என்றவள் கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டாள்..

அவளை தன் தோளில் சாய்த்தவன் "ம்ம்..தெளிவா சொல்லு...லெட் மீ க்ளியர் ஓல் திங்க்ஸ்"

"நான் என்னைக்கு உங்களை பார்த்தேனோ அன்னைக்கே என் மனசுக்குள்ள வந்துட்டிங்க.. ஆனால் அது ஏதோ சும்மா ஒரு ஈர்ப்புனு நெனச்சி விட்டுட்டேன்.. அதை விட இன்னொருத்தவங்களுக்கு கணவன் ஆக போற உங்க மேல ஆசைப்படுறது தப்பு தானே ஆதி..."

அவளது ஒவ்வொரு வார்த்தையும் அவனை வெகுவாக தாக்கியது. அதன் விளைவால் அவனின் அணைப்பு கூடிக் கொண்டே போனது...

"அதுக்குப் பிறகு நான் எதையுமே மனசுல வச்சிக்கல..உங்களையும்..." என்றவள் அவனைப் பார்க்க அவன் எங்கோ வெறித்துக் கொண்டு சொல் என்பது போல அமர்ந்திருந்தான்.

"ஆ..ஆனால் நானே எதிர்பார்க்காதது தான் நீங்க கல்யாணத்தை நிறுத்தினதும் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டதும்...அப்போ கூட மனசு மரத்து போய் நின்னேனே தவிர உங்க மேலே எந்த எண்ணமும் இல்லை"

"ஆ..ஆனால்.." என்றவள் அவனின் சேட்டை இறுகப் பற்றிப் பிடித்தாள்..விழிகள் கண்ணீரை விட்டன.. மூக்கு நுனி சிவந்து போய் இருந்தது...

அவள் எதனை கூற வருகிறாள் என செய்தவனுக்கு தெரியாதா..??

தான் செய்தவை தன்னை வதைக்க கட்டுக்கடங்கா கோபம் வந்தது. இருந்தும் கட்டுப் படுத்திக் கொண்டான்..

"ஆனால் எப்போ இந்த வீட்டை விட்டுப் போனேனோ அன்னைக்கு தெரிஞ்சிது நான் உங்களை எவ்வளவு லவ் பண்ணுறேனு...." என்றவள் அவனை விட்டுப் பிரிந்து அழுதாள்.. ஆனால் முகத்தில் புன்னகை.. வலி...!!!

"அப்போ ஏன்டி அன்னைக்கு என்னைப் பார்த்தப்போ இதை சொல்லைல...?" என்றவனின் கண்களும் கலங்கி இருந்தன.

"எப்படிங்க சொல்ல.. உங்களுக்கு பக்கத்துல கூட இருக்க தகுதியில்லா நான் உங்களை காதலிக்கிறேன்னா...!?"

உஃப்ப்ப்... என காற்றைக் குவித்து ஊதியவனுக்கு நெஞ்சம் வலித்தது.. நான் சொன்னவைகளை தானே திருப்பித் தந்து உயிருடன் சாவடிக்கிறாள்... தாங்கவே முடியவில்லை அவனால்.. எழுந்தே விட்டான்..

அன்றே அவள் கூறி இருந்திருக்க தன் காதலை முதலிலே உணர்ந்திருப்பானோ..!?இந்தப் பிரிவு தேவையில்லாமல் இருந்திருக்குமோ..!? அங்கும் விதி சூழ்ச்சி செய்திருந்தது..

திடீரென நினைவு வந்தவனாக அவளருகில் சென்று "தா..தாலி எங்கே...?" என்று கேள்வியை முடிப்பதற்குள் அவன் முன்னே மஞ்சக் கயிறு ஆடியது..

ஆம் வர்ஷினி இத்தனை நாளும் தன் சுடிதார் கழுத்து வளைவினுள் மறைத்து வைத்திருந்தாள் அவன் கட்டிய தாலிக் கொடியை...

ஆதித்யாவிற்கு அத்தனை அதிர்ச்சி.. ஒற்றைக் கண்ணில் கண்ணீர் சலேரென வடிந்தது.. அதனை துடைக்கக் கூடத் தோன்றாமல் தாலியைப் பார்த்தவாறே
"இந்தத் தா..தாலி..?" என்கவும் கண்ணீருடனே அழகாக சிரித்தவள் "இந்தத் தாலி யாரு கட்டினதுனு இந்த சமுதாயம் கேட்டா நான் என்ன சொல்லுவேன்..?அதனால தான் இத்தனை நாளும் மறைச்சு வச்சிருந்தேன்..." என்று அவள் கூறி முடிப்பதற்குள் அவளது இதழ்கள் அவன் வசமாகின...

திடீரென்ற அவனின் தாக்குதலில் நிலை தடுமாறியவள் பின் அவனுள் கரைந்தாள்...!!!

தொடரும்...

தீரா.
 
Top