• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Dheera

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 17, 2023
Messages
234
உள்ளே வந்தவர்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க வர்ஷினிக்கோ தான் செய்த உணவை இருவருக்கும் பரிமாற கைகள் பரபரத்தன.

உள்ளே அறையில் அமராவும் விக்ரமின் தாயாரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது வர்ஷினி மட்டுமே சாப்பிட்டாள். ஆதித்யா சாப்பிட்டிருக்கவில்லை.

இங்கே வர்ஷினியோ மூவரையும் உண்ண அழைக்க தீராவிற்கோ அவளது அக்கறையில் இரத்தக் கண்ணீரே வந்து விட்டது..

"ச்சே இப்படி ஒரு பாசமான தங்கச்சியை இத்தனை நாளா நான் மிஸ் பண்ணிக்கேன்டா..." என வராத கண்ணீரை துடைத்து விட்ட தீரா, ஆதித்யாவின் தோளில் சாய இந்தப் பக்கம் வந்த விக்ரம் "சார் அவ என் தங்கச்சி.. கொஞ்சம் அடக்கி வாசிங்க.." என முகத்தை அஷ்டகோணலாக்க

"போடா..போடா..ஆயிரம் தான் இருந்தாலும் அவள் என் மச்சிட ஃவைப்..சோ எனக்குத் தான் உரிமை கூட.." என சும்மா இருந்தவனையும் இழுத்து சண்டை போட

"அப்படி இல்லை தீரா சார்..நான் தான் அவளுக்கு முதல்ல அண்ணாவானேன்..பாருங்க எம் அம்மாவ கூட அவளும் அம்மானு தான் கூப்புடுறா..வேணா அவள்டையே கேட்டுப் பாருங்க, யாருக்கு அவள் உரிமை கூடனு.." என உண்மையாகவே அவனும் எதிர்த்து வாதம் செய்ய

முகத்தை முறித்தவன் "அவ எங்கே..!? எப்படியும் உன்னைத் தான் சொல்லுவா..." என்றவனுக்கும் லேசாக பொறாமை எட்டிப் பார்த்ததுவோ...

தன் மனைவிக்காக அங்கே பட்டிமன்றமே நடப்பதைப் பார்த்தவன் எழுந்து நின்று "ஸ்டோப் திஸ் நோன்சன்ஸ்..அவ யாருக்கும் உரிமை இல்லை...சீ இஸ் மைன்.." என பாக்கெட்டில் கைவிட்டு நின்று கொள்ள, எதிரெதிராய் முகத்தை பார்த்து முறைத்துக் கொண்டிருந்த இருவரும் இப்போது ஆதித்யாவை முறைத்து வைத்தனர்.

"அது தானே..!! எங்கடா புகையலையேனு பார்த்தேன்..!!? பாரு உள்ளே தீஞ்சி மணக்குது.." என தீரா விக்ரமிடம் ஆதியின் சேர்ட் காலரை இழுத்துக் காட்ட அங்கே சிரிப்பொலியில் வீடே கலகலத்திருந்தது..

"வாங்க வாங்க..." என வர்ஷினி மீண்டும் அழைக்க மறுபடியும் ஒரு பாச யுத்தத்தை தொடர்ந்து கொண்டே அவர்கள் மேஜையை அடைந்தனர்.

ஆதித்யாவிற்கோ அவர்களைப் பார்த்து உச்சுக் கொட்ட மட்டுமே முடிந்தது..

"ஆமா ரதியை எங்கே..?" இப்போது தீரா.

"அவ எங்கண்ணா வெளியே வரா. கூப்பிட்டாலும் அசையவே மாட்டேங்குறா..." என வர்ஷினி சொல்ல

"இரு நான் அழைச்சிட்டு வரேன்..." என்றவன் எழுந்து சென்றான்.

ஐந்து நிமிடம் கழித்து வந்தவனின் பின்னே ரதியும் வந்தாள்.

ஒற்றைக் கையை இடுப்பில் குற்றியவள் "பார்ரா.. இவ்வளவு நேரமும் நாங்க காலை பிடிக்காத குறையா கெஞ்சியும் வர மறுத்தவ இவர் கூப்பிடவும் வந்துட்டா..." என உதட்டை சுழித்தாள்.

"அதுக்கெல்லாம் ஒரு முக ராசி வேணும்..." என தீரா கூறி நன்றாக அவள் வாயால் வாங்கிக் கட்டினான்.

"அத இந்த மூஞ்சி சொல்லுது .." என்கவும் ஆதித்யா அவளுடன் ஹை ஃபை போட்டுக் கொண்டான்.

"என்ன கலாய்க்கிறீங்களாக்கும்..?"

"பின்ன இல்லையாக்கும்..." என அவள் நொடிக்க தீராவே பட்டென சிரித்து விட்டான்.

"சரியான வாயாடியா இருப்பா போலயே.." என இப்போதும் தீரா வாயளக்க, "உங்களை விட கம்மி தான்..." என கூறியவள் அவனது தட்டில் உணவை அள்ளி வைத்தாள்.

"என்ன சாப்பாடே ஒரு மார்க்கமா இருக்கு.." என்ற தீரா உணவை ஆராய்ச்சி செய்ய

"அதை தான் சார் நானும் பார்த்துட்டு இருக்கேன்..." என்ற விக்ரம் "வர்ஷினி நீயா செஞ்ச...?" என முழித்தான்.

"ம்ம்..." என கண்ணை சிமிட்டிய அடுத்த நொடி "அப்போ நாங்க ஹாட்டல் போய் சாப்பிடுறோம்.." என்ற தீரா விக்ரமின் தோளில் கைபோட்டு அழைத்துச் சென்றான்.

வர்ஷினியோ அழுகைக்குத் தயாராக, கடுப்பான ஆதித்யா "உங்க ரெண்டு பேருக்கும் நாளைக்கு வேலை முக்கியம்னா வந்து உட்காருங்க..." என்றவன் அவன் பாட்டில் உணவை எடுத்து வைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

ரதியோ அவர்களை சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

"டேய் விக்ரா..!! சாப்பாடுட டிசைன் கொஞ்ச மாறி இருந்தாலே சமைச்சவன்ட மூஞ்சி டிசைன மாத்துற இவனே பேசாம உள்ளே தள்ளுறான்.. அப்போ நல்லாத் தான்டா இருக்கு போல.. அவசரப்பட்டுடோமோ..." என அவன் காதில் குசுகுசுத்தவன் வடை போச்சே என்ற ரீதியில் அவனைப் பார்க்க, "ஆமா சார். நம்ம தான் ஓவர் ரியெக்ட் பண்ணிட்டோம் போல..." என்றவனும் அவனை உதட்டை வளைத்துப் பார்த்து வைத்தான்.

அவர்களை பார்த்த வர்ஷினிக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தாலும் அடக்கிக் கொண்டு சேம் ரியேக்ஷனைக் கொடுக்க அவளைப் பார்க்கவும் பாவமாகத் தான் இருந்தது அவர்களுக்கு.

"சரி சரி நீ இவ்வளவு பாசமா கூப்பிடறாதால நாநாநாங்க வரோம்..." என்றவர்கள் வந்தமர வெடுக்கென தட்டைப் பறித்தவள் "அவ்வளவு கஷ்டப்பட்டு நீங்க ஒன்னும் சாப்பிட தேவைல...நான் திரூபன் அண்ணாவையும் அரவிந்த் அண்ணாவையும் அழைச்சு கொடுத்துக்கிறேன்..அன்லக்கி ஃபெலோஸ்.." என்றவள் உணவுப் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு புலம்பினாள்.

"என் மேலே யாருக்குமே பாசமில்லை... நான் எவ்வளவு பாசத்தை கலந்து இந்த சாப்பாட்டை செய்தேன்..ச்சே யாருமே எனக்குத் தேவையில்லை..." என்றவள் செல்ல முற்பட ஓடி வந்து ஆளாலுக்கு ஒரு பாத்திரத்தை பறித்தவர்களில் தீரா "ஐயே.. உட்கார்ந்து சாப்பிடுன்னா சாப்பிட போறோம்..அதுக்கு ஏம்மா இவ்வளவு பெரிய வார்த்தையெல்லாம் பேசுற...பாரு உன் பாசமலர் கண்ணீர் வடிக்கிறான்..." என்று விக்ரமைக் மாட்டி விட, திருதிருத்தவன் ஆமா ஆமா என சுண்டு விரலால் தீரா தெளித்து விட்ட தண்ணியை சுண்டி விட்டான்..

"சரி கையை காலாப் பிடிச்சி கெஞ்சி நான் செய்த சாப்பாட்டை சாப்பிட ஆசைப்படுறீங்க..வாங்க வாங்க..."என நொடியில் தன் முகபாவனையை மாற்றி சிரிப்புடன் அழைக்க அவர்களும் வந்தமர்ந்தனர்.

இருவருக்கும் பரிமாறியவள் ஆதித்யாவைப் பார்த்து கண்ணடிக்க ரதிக்கு ஏதோ தவறாய்ப் பட்டது..

"இன்னைக்கு ஒரு புடி புடிக்க வேண்டி தான்..." என்ற தீரா ஒரு கவலத்தை உள்ளே தள்ளி மென்றவனுக்கு விழி பிதுங்கியது...

அவனை ஒரு பார்வை பார்த்த விக்ரமும் குழப்பத்துடன் ஒன்றை உள்ளே தள்ளிய அடுத்த நொடி வெளியே வந்து விட்டது..."உவ்வேக்...." என விட்டான் ஓட்டத்தை கிட்சனை நோக்கி...

தீராவோ மெல்லவும் முடியாமல் விழுங்க முடியாமல் மாட்டிக் கொண்டு தவித்தான்.

ஒருவன் வைத்த உடன் பறந்து விட்டான். அது சரியான ரியெக்ஷன் தான்..

ஆனால் அடுத்த பலியாடு ரியேக்டே பண்ணாமல் இருக்கிறது என அவனது முகத்தை ஆராய்ந்தனர் ரதியும் வர்ஷினியும்...

தீராவை கண் காட்டி ரதி என்னவெனக் கேட்க அவளோ தெரியலையே என உதட்டைப் பிதுக்கினாள்.

மேலே பார்த்தால் எப்படித் தெரியும்...? கீழே அல்லவா பார்க்க வேண்டும்.

ஆம் ஆதித்யா தான் அவனது வயிற்றில் கத்தி வைத்திருந்தான். அதனால் தான் அவன் விழித்துக் கொண்டிருந்தான்.....

"அண்ணா நல்லா இல்லையாண்ணா சாப்பாடு...?" என போலிக் கண்ணீர் வடித்த வர்ஷினியைப் பார்த்து உண்மையாகவே கண்ணீர் வடித்தான் தீரா..

"அண்ணா என்னண்ணா காரமாக இருக்கா? கண்ணால தண்ணி வருது..." என வருந்தியவளிடம் "ம்ம்..ம்..ம்ம்ம்..." என்றவனுக்கு அதற்கு மேல் முடியாமல் ஆதித்யாவின் கையைத் தட்டி விட்டு ஓடினான் வெளியே..

"அண்ணா அந்தப் பக்கம் இல்லை இந்தப் பக்கம்..." என வழி காட்டியவளை நோக்கி அருகில் கிடந்த பந்தொன்றை எடுத்து எறிந்து விட்டு கிளம்பி விட்டான்...

அவளோ லாவாகப் பற்றிப் பிடித்து வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்து நிற்க அங்கே வந்த விக்ரமோ "ராட்சசியே..!! சாவடிக்கிறதுனா விஷத்த வாங்கி தந்திருக்கலாமேடி..அதுக்கு இப்படியா...?" என்றவன் விட்டால் அழுது விடுவான்.

அவனது பாவனையில் வாயைப் பொத்தி சிரித்தவள் பின் சீரியஸாகி "அண்ணா எவ்வளவு பாசமா சமைச்சி தந்திருக்கேன்..!? இப்படி சொல்லுறீங்க.. நான் கோபம்..." என முகத்தை திருப்ப

"நீ கோபமாவே இரு. உன்னை எப்படி சமாதானப்படுத்தனும்னு எனக்கு தெரியும். ஆனால் இப்போ ஆள விடு...அம்மா....!!!" என அலறிக்கொண்டே அறையினுள் புகுந்து விட்டான்.

இங்கே ஆதித்யாவிற்கு வைக்கப்பட்டது அமரா சமைத்த உணவு என்பது குறிப்பிடத்தக்கது..

பின் அடுத்தவனைக் காணவில்லை என மூவரும் வெளியே போக "அனு பேபி நான் செத்தேன்னா வேற யாரையாச்சும் கல்யாணம் பண்ணுவ..?" என அழுதவனுக்கு அங்கிருந்து என்ன பதில் வந்ததோ தெரியவில்லை "காட்டேரி..!! கைல கெடச்சே கைமா தான்டி.. எப்படா விட்டுட்டு எஸ் ஆகுவோம்னு பார்த்துட்டு இருக்க போல..மொதல்ல வைடி ஃபோனை..." என்றவன் ஆத்திரத்துடன் வைத்து விட்டு நகத்தைக் கடித்துக் கொண்டு தின்டில் அமர்ந்திருந்தான்.

யாரோ தோள் மீது கை போட எரிச்சலில் தட்டிவிட்டவனை காலால் உதைந்து தள்ளி விட்டான் ஆதித்யா.. அவனைத் திரும்பிப் பார்த்தவன் முறைத்து "பரதேசியே..!! பொண்டாட்டி என்னடானா சும்மா இருந்தவன சுரண்டி கூப்பிட்டிட்டு, பக்கம் பக்கமா வசனம் பேசி நஞ்சத் தந்தாள்..புருஷன் நீ என்னடான்னா, கத்தியை வச்சி அந்த விஷத்தை சாப்பிட சொன்னதும் இல்லாம இப்ப எட்டி உதைரியா..நீ எல்லாம் நல்லாவே இருக்க மாட்டேடா...அவ்வ்" என சாபமிட்டு அழுதவனைத் தேற்றத்தான் அங்கே யாரும் இருக்கவில்லை.

வர்ஷினியோ வாய்விட்டே சிரித்தாள்..

"குள்ளச்சி!! சிரிக்கிறா பாரு..." என்றவுடன் அவள் சிரிப்பு நின்று விட்டது..

ஆதித்யாவோ "ஆஹா சிக்கிட்டான் சித்தப்பு..." என்றவாறு நைசாக கலண்டு விட்டான்.

அவளது சிரிப்பு நின்றவுடன் திரும்பிப் பார்க்க அவளோ மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க நின்றிருந்தாள்..

"என்ன..?" என அவன் கேட்டு முடிப்பதற்குள் அருகில் இருந்த தண்ணீர் வாளி அவன் தலையில் கவிழ்ந்திருந்தது...

"அக்கா.." என அதிர்ந்தே விட்டாள் ரதி.

அது போதாது என அவனருகில் வந்தவள் "இதுக்கப்றம் என் ஹைட்ட என்னவாச்சும் கிண்டல் பண்ணுனிங்க தோளை உரிச்சு வாசல்ல தொங்க போட்டுறுவன்.." என இல்லாத மீசையை முறிக்கி விட்டே சென்று மறைந்தாள்.

"அண்ணா..." என அவனருகில் வந்த ரதி தலையில் கிடந்த வாளியை எடுக்க வாயிலிருந்த தண்ணீரை கொப்பளித்தவன் அவளைத் தான் பார்த்து வைத்தான்.

அவனைப் பார்த்து இப்போது ரதியே அடக்கமாட்டாமல் சிரித்து விட்டாள்.


...


"நா..நான் அவளைப் பார்க்கனுன்டா..." என கலங்கினான் அரவிந்த்.

"அவ இருக்கிற நிலைமைக்கு உன்ன ஃபேஸ் பண்ணமாட்டானு நினைக்கிறேன்..." என கூறினான் ஆதித்யா.

அவனுக்கு அரவிந்த் மேல் கோபம் இருந்தாலும் அதனை விட நண்பன் அழுவதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

"தெ..தெரியுன்டா..ஆ..ஆனால்...?" என நிறுத்தியவனிடம்

"ஐ கேன் அன்டஸ்டேன்ட் அரவிந்த்.. பட் நீயே கொஞ்சம் யோசிச்சுப் பாரு.. நீ அவளை காப்பாத்துவேனு வந்து உதவி கேட்டவளை நடு டோட்டுல தனியே விட்டுட்டு வந்திருக்க.. அப்படி இருக்க அவள் உன் கூட பேசுவானு நினைக்கிறாயா...?" என கேள்வியாய் நிறுத்தியவனிடம் பதில் சொல்லத் தெரியாமல் மேலும் தவித்தான் அரவிந்த்.

அவனின் மௌனம் ஆதித்யாவை சற்று இளக வைக்க "லிசின் அரவிந்த். அவ எப்படியும் உன்னை எக்சேப்ட் பண்ணுறது கஷ்டம்.. அதுக்காக அவள் உன்னை ஏதுக்கமாட்டாள்னு அர்த்தம் இல்லை.. டுமோரோ அவளை வந்து பாரு... அதுக்கப்றம் பேசிக்கலாம்..." என்றவனிடம் ஆமோதிப்பாய் பதிலளித்தவன் வைத்து விட்டான்.

தொடரும்...

தீரா.
 
Top