• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Dheera

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 17, 2023
Messages
234
இப்படியே நாட்கள் கடந்தோடி ஒரு மாதமாகி இருந்தது..

யாருடைய வாழ்விலும் எந்த மாற்றமும் இருக்கவில்லை. ஆதித்யாவும் வர்ஷினியும் தங்களது மனஸ்தாபங்களை பேசிப் புரிந்து கொண்ட பிறகு அவர்கள் காதலிப்பதிலும் தங்களது குடும்ப வாழ்க்கையை கொண்டு நடத்துவதிலும் எந்தத் தடைகளும் இருக்கவில்லை. தெளிந்த நீரோடை போல அவர்களின் வாழ்க்கை போய்க் கொண்டிருந்தது.

தீராவோ தன் தாய் தந்தையிடம் தங்களின் காதல் விடயத்தைக் கூறி இருக்க அனு என்றவுடன் அவர்களுக்கு சற்று விருப்பம் குறைவு தான். காரணம் அவளது குடும்பம். இருந்தும் தன் ஒற்றை செல்லப் பிள்ளை ஆசைப்பட்டுவிட்டானே அவனின் மனது நொந்து விடக்கூடாதே என மனதாற அவளை தங்கள் மருமகளாக ஏற்றுக் கொண்டனர்.

விக்ரமின் தாய்க்கு தன் மகன் ஒருத்தியை விரும்புகிறான் என்றால் கசக்கவா செய்யும். எப்போதுடா அவன் தன் மருமகளை அழைத்து வருவான் என ஏங்கிக் கிடந்தவருக்கு கிளி போல யாத்தனா மருமகளாக கிடைத்திருக்க சட்டென திருமணத்திற்கு சம்மதம் சொல்லி விட்டார். யாத்தனாவின் வீட்டில் ஆதித்யாவின் பீ.ஏ என்றவுடன் சரி.. யோசிக்கக் கூடவில்லை. உடனே அவர்களும் கூடி வந்தனர்.

ரதியோ இன்று வரை அரவிந்த் தன்னை பார்க்க அனுமதிக்கவில்லை. அவனுக்கு அதுவே வாழ்வில் பெருத்த அடியாகிப் போனது. அவனது தந்தையும் தன் மருமகளை நெருங்க நினைக்க அவரைக் கூட அவளுக்கு காணப்பிடிக்கவில்லை. அவளே மறுக்கும் போது அவளை வற்புறுத்துவது சரியில்லை எனக் கருதிய ஆதித்யாவின் குடும்பத்தினரும் சரி தீராவோ சரி ஒரு வார்த்தை எதிர்த்துப் பேசவில்லை. விட்டுப் பிடிக்கலாம் என பேசாமல் தங்கள் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தனர்.


...


"ஆஹா இவ எதுக்குடா இங்கே வரா...?" என வெளிப்படையாகவே அலறினான் தீரா.

"டேய்...!!" என கோபப்பட்ட திரூபனை மேலும் கீழும் பார்த்த தீரா "நீ ஏன் எகிற்ற...?" என்றவனின் அரைக் கண் பார்வையில் தன் முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டவன் "நா..நான் ஏன் எகிறனும்...அதெல்லாம் ஒன்னுமில்லையே..." என்ற திரூபனின் திருட்டு முழியை ஆதித்யாவிடம் கண்காட்டிய தீரா "நான் எதுவும் சொல்லலையே.. அதுக்கு ஏன் டென்ஷன் ஆகுற நீ..? நீ டென்ஷன் ஆகுறதப் பார்க்கும் போது தான் எனக்கு சந்தேகம் உறுதியாகுது..." என போலிஸ்காரனாய் பிட்டு எடுத்து விட்டான்.

"எ..எ..என்ன சந்தேகம்..?" என்றவனுக்கு அந்த ஏசிக் குளிரிலும் வியர்த்தது..

"உனக்கென்ன திடீர்னு வேர்க்குது..?" என்று விடாமல் தீரா அவனது நெற்றியை தொடப் போக சட்டென எழுந்தவனுக்கு என்ன பேசுவதென புரியவில்லை. தேவையில்லாத பயம் அவனிடம்..ஹா..ஹா..

அவனைப் பார்க்க ஆதித்யாவிற்குமே சிரிப்புத் தான் வந்தது.. சிரிப்பை அடக்க உதட்டை மடித்த தீரா திரும்ப அங்கே வந்து நின்றாள் மேக்னா.

திரூபனின் மூலம் ஆதித்யாவிற்கும் தீராவிற்கும் அரவிந்திற்கும் மேக்னா நல்ல நட்பாகிப் போனாள். அவளும் லாயர் என்பதால் அதுவும் தங்களின் வயதை ஒத்தவள் என்பதால் அவளுடன் நட்புறவாட அவர்களுக்கு எந்தத் தடைகளும் இருக்கவில்லை. அதில் இவள் இயல்பாகவே வாயாடி..அதிலும் லாயர் என்றால்..?!
அவள் பேசினால் தீராவிற்கே தலைசுற்றி விடும். அந்தவளவு வாயடிப்பாள்.

திரூபனை வைத்து அவர்கள் கலாய்ப்பதை பார்த்துக் கொண்டே வந்தவளுக்கு கோபத்தில் மூக்கு நுனி சிவந்திருந்தது..

தீராவின் முன் வந்து நின்றவள் "இப்போ உனக்கு என்ன வேணும்...?" என இடுப்பில் கைகுற்றி நிற்க இப்போது பலம் வந்தவனைப் போல திரூபன் அவளருகில் சென்று நின்று கொண்டு.."அதானே..உ..உனக்கென்ன வேணும்...?" என்றான்.

"த்தூ நாயே..." என அவனைப் பார்த்து பல்லைக்கடித்தவனை சொடக்கிட்டு அழைத்தாள் மேக்னா.

மூக்கால் புகையை விட்டவன் "என்ன..?" என அவளைப் போல கேட்டு வைத்தான்.

"எதுக்கிப்போ இவனை கலாய்சிட்டு இருக்க...?"

"என் ஃப்ரெண்டு நான் கலாய்ப்பேன்..வேணா கடிச்சுக் கூட வைப்பேன்..உனக்கென்னடி...?"

"அது நேற்று வரை..." என்றவளிடம்

"ஏன் இன்னைல இருந்து என்னவாம்..?"

"இன்னைல இருந்து அவன் என் லவ்வர்..." என அசையாமல் குண்டைத் தூக்கி போட்டவளைப் பார்த்து ஜெர்காகி நின்றான் தீரா..

ஆதித்யாவோ எதிர்ப்பார்த்தேன் என்பது போல புன்னகையுடன் லேப்பினுள் தலையை நுழைத்திருக்க ஓர் கணம் அவளது பார்வை அவனிடம் சென்று மீண்டது.

"வாட்...?" என எழுந்தே விட்டான் அவன்.

"வாத்தும் இல்லை கோழியுமில்லை..ஆக வேண்டிய வேலையைப் பாரு..." என்றவள் ஆதித்யாவின் முன் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.

"இந்த டயலோக்க எங்கயோ கேள்வி பட்டிருக்கேனே...?"என இப்போது சிந்தனையில் மூழ்கிய தீராவைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டவள் "எபிசோட் ஒன்பதுல இந்த நாறவாயால நீ தான் உன் ஆளுகிட்ட சொல்லி வச்சே..." என்றவளிடம் பல்லைக் காட்டிவன்... "அதெல்லாம் வசந்த காலமடா..." என கனவில் மிதந்தவனுக்கு பையாலேயே அடித்தவள் "அன்னைக்குத் தான் ஒருத்திட வாழ்க்கை நாசமா போன நாள்..." என சலித்தாள்..

"வட் யூ மீன் வாயாடி..." என அவளருகில் இன்னொரு நாட்காலியை இழுத்து போட்டவன் நாடியில் கைகுற்றி கதை கேட்க

"ஏன்னா உன்ன மாதிரி உருப்பிடாதவனை அவள் முதல் முதலா பார்த்தா பாரு..." என்றவளின் பதிலில் இப்போது தான் அவள் தன்னைக் கலாய்ப்பதை உணர்ந்தான்.

"உன்னையையே இந்த மூதேவி கல்யாணம் பண்ண ஒத்துக்கிட்டிருக்கும் போது என்னை என் அனு பேபி பார்த்ததுல தப்பே இல்லை..." என பாய்ந்து ஆதித்யாவின் பின் ஒளிந்து கொண்டான்.

"என்னடா சொன்ன கொரில்லா.....?" என்றவள் அவனைத் தாக்க மேசையை சுற்றி வர அவனோ பாசாங்கு காட்டியவாறு சுற்றி சுற்றி ஓடினான்..

"இதெல்லாம் திருந்தாத கேஸ்.."என நெற்றியில் அடித்து விட்டு திரூபன் வெளியேறி இருந்தான்.

சற்று நேரத்தின் பின் அவன் உள்ளே வந்து பார்த்தாலும் அந்த ரெண்டும் அப்படியே தான் ஓடிக் கொண்டிருந்தது.

களைத்துப் போய் ஆதித்யாவின் தோளில் கை வைத்தவளை அவன் கணக்கில் எடுத்தபாடில்லை..

தீராவும் சோபாவில் தொப்பென அமர்ந்தான்.

"டேய் சின்சியர் சிகாமணியே...!! உனக்கு இருக்க அர்ப்பணிப்புக்கு ஒரு அளவே இல்லையாடா...?" என்றவளை திரும்பிக் கூட பார்க்காமல் தன் வேலையில் இயந்திரமாய் அமர்ந்திருந்தான்.

ஆடவர்கள் இவர்களே ஆதித்யாவின் ஓர் முறைப்பில் அவனுக்கு பதில் பேச்சு பேசமாட்டார்கள். ஆனால் இவள் பழகியது கொஞ்ச காலமேயாயினும் அவனது முறைப்புக்கெல்லாம் அஞ்சமாட்டாள்.. அதனாலே அவளிடம் ஆதித்யாவே நட்புடன் பழகக் காரணம்...

"டேய் இவன் ஒரு ரோபோட் டா..." என்றவள் திரூபனின் அருகில் அமர அப்போது தான் அவனிதழ் புன்னகையில் விரிந்தது.. ஆனால் பார்வை கணினியில்.

அதனை கண்டு கொண்டவள் பேனையை அவன் மீதெறிய லாவாகக் பற்றியவனைப் பார்த்து நொந்து போய் விட்டாள் மேக்னா..

"பாவன்டா வர்ஷினி.." என்றவளிடம் "அவளை கட்டின இவன் தான்டி பாவம்..." என ஒத்து ஊதினான் தீரா..

ஏன்டா என்பது போல பார்த்தவளிடம் இது நாள் வரை நடந்த அனைத்தையும் கூற விழுந்து விழுந்து சிரித்தாள்.. இதில் "உங்களுக்கெல்லாம் அவள மாதிரி ஆள் தான்டா சரி..." என்று எகத்தாளப் பேச்சு வேறு...

அதில் மூவருக்குமே வர்ஷினியை நினைத்து முகத்தில் புன்னகை பூத்தது...

"ஆமா எங்கடா இந்த டாக்டர்...?" என நினைவு வந்தவளாக கேட்டவளிடம்

"அவன் ஒரு ஓரமா சாமியார் மாதிரி சுத்துறான்..வெளங்காத பய..." என்றுவிட்டு ஃபோனில் மூழ்கி விட்டான் தீரா.. அதற்கும் சிரித்தாள் மேக்னா.

ஆனால் அங்கே இவர்களின் பேச்சிற்கு சொந்தக்காரனோ ஓர் முடிவுடன் தன் பணியை செய்து கொண்டிருந்தான்.


...


மாலையானதும் ஆதித்யாவிற்கு அழைத்திருந்த தீரா "மச்சி அந்த சக்தி மேட்டர் நம்ம ஐ.ஜி க்கு தெரிஞ்சிருச்சுடா..."

"என்ன மேட்டர்..?"

"ப்ச் அது தான். அந்த சக்தியை போட்டுத் தள்ளுனது நீ தான். அதுக்கு உதவுனு நான் தான்னு..." என்றவன் காக்கித் தொப்பியை தலையில் மல்லாக்காக கவுத்தினான்.

"ஓஓஓ அந்த மேட்டரா.. அது தான் அவருக்கு எப்பவோ தெரியுமே..."

"என்னடா சொல்லுற...?" என அதிர்ந்தவனிடம்

"அந்த கேஸ்ல அவனை பிடிக்க நமக்கு கெல்ப் பண்ணுனதே அவர் தாண்டா..." என அசால்டாக கூறினான்.

"டேய் என்னடா இத்துன குண்டை தூக்கிப் போடுற.. எப்படிடா... அது எப்படிடா உனக்கு தெரியும்..?"

"அவர் எனக்கு மாமான்னா நான் அவருக்கு மருமகன்டா..." எனக் கூறியவனிடம்

"அதுவும் சரி தான்..." என்றவன் ஏதோ கேட்க வர அதற்குள் அவனின் அழைப்பு துண்டிக்கப்பட்டது.

"அவசரக்காரன்..." என திட்டி விட்டே அவன் வீட்டிற்கு கிளம்பினான்.


...


ஆதித்யாவின் வீட்டில் நண்பர்கள் மூவருமாய் அமர்ந்திருக்க சடாரென உள்ளே நுழைந்தான் அரவிந்த்.

"எவன்டா அவன்...?" என திரும்பிய தீரா நிச்சயம் அரவிந்தை அந்தக் கோலத்தில் எதிர்பார்த்திருக்கவில்லை.

முடியெல்லாம் களைந்து மீசை தாடியுடன் அடையாளம் தெரியாதளவு ஆளே மாறி இருந்தான்.

"என்னடா இவன் குட்டி தாதா மாதிரி வந்து இருக்கான்..." என தங்களுக்குள் பேசி சிரித்தவர்களுக்கு அவனது தோற்றம் உண்மையாகவே சிரிப்பைத் தான் தந்தது... அவனது இந்த சாமியார் கோலம் தேவையில்லாத தலைவலி.. அதனை அறிந்த மூவரும் சிரித்து வைக்க கடுப்பான அரவிந்த் "உங்க மூனு பேரையும் வந்து வச்சிக்கிறேன்.. அவளை மொதல்ல தெளிய வச்சிட்டு வாரேன்.." என்றவன் பல்லை நறநறுத்து விட்டு படியேறப் போக தீராவோ "சாமியாரே..!! பார்த்து போய்ட்டு வாங்க..." என வழியனுப்பி வைத்தவன் இங்கே திரும்பி "தெளிஞ்சிருக்கிறவளை தெளிய வைக்க போகுதாம் மூதேவி.. மறுபடியும் குழப்பி விடாம இருந்தா சரி..." என சொல்லி முடிக்க மற்றைய இருவரும் சிரித்து வைத்தனர்.


...


"ரதி..." என அழைத்துக் கொண்டே உள்ளே நுழைந்தவனைக் கண்டு பதறி எழும்பினாள் அவனவள்..

அவளருகில் அவன் வர "நீ..நீங்க..?" என வெளியே பயத்தில் எட்டிப் பார்த்தவளைப் பார்த்து இன்னும் கோபம் வரப் பெற்றவன் அவளின் அனுமதியின்றியே அவளை இழுத்து இதழில் இதழ் பதித்தான்.

எதிர்பாராத தாக்குதலில் அவள் அவனை தாக்கினாலும் அவன் அசைந்தானில்லை..முதல் முத்தத்தை அணுஅணுவாய் ரசித்துக் ருசித்துக் கொண்டிருந்தான்.

அவளோ அச்சத்தில் அதிர்ந்து அப்படியே நிற்க இலேசாக அவனின் இதழ் விரிந்தது.. அப்படியே அவளை விடுவித்தவனுக்கு அப்போது தான் கட்டுப்படுத்த முடியாமல் தான் செய்த செயலே மண்டையில் உறைத்தது..

அதிர்ந்தவளின் தோற்றத்தில் தலையில் தட்டிக் கொண்டவன் தயங்கியே "ர..ரதி..." என அழைக்க அசைந்தாலில்லை..

அவளது தோளைத் தொட்டவனின் தொடுகையில் கண்ணை சிமிட்டியவளைப் பார்த்து ஆசை வந்தது மாமன் மகனுக்கு..

சுயத்தை அடைந்தவள் இவன் பக்கம் திரும்பி பதறி விலகினாள். அவளது விலகல் அவனுக்கு வலித்தது..

"ரதி..." என அருகே வரப் போனவனை தடுத்தவள் "கிட்ட வராதிங்க.. அங்கேயே நில்லுங்க.."

"ரதி நான் சொல்ல வரத கே.."

"உஸ்ஸ்..." என வாயில் விரல் வைத்து தடுத்தவள் "நிறுத்துங்க சார்.. இதுவரை நீங்க சொன்னது எல்லாம் போதும்... அதை நான் கேட்டதும் போதும்.. இனி என் வாழ்க்கைல குறுக்கே வராதிங்க..." என கும்பிடு போட்டவளை வேதனையுடன் பார்த்தான்.

"ர..ரதிம்மா..ஐ..ஐ எம் சாரிடா..." என்றவனின் கண்கள் கலங்கிப் போயின..

காதல் கொண்டவளை அவனது கண்ணீர் வதைத்தாலும் "நீங்க எதுக்கு சார் மன்னிப்பெல்லாம் கேட்குறீங்க.. நான் தான் சாரி சொல்லனும்.. வேண்டாம்னு வெறுத்தவங்களை தேடித் தேடி அலைஞ்சேன் பாருங்க.. அது தான் நான் செஞ்ச பெரிய தப்பு.."

"அதில்ல ர.தி.."

"போதும் சார்.. என்னை எந்தளவு நீங்க வெறுக்குறீங்கனு.. அ..அ..அன்னைக்கு காட்டீடிங்க..." என்றவளுக்கு குரல் கமறியது.. கண்ணீர் வடிந்தது..

இப்போது அவள் அப்படியே கட்டிலில் அமர அவனும் தொப்பென அவள் காலுக்கருகில் விழுந்தான்..

"சா..சாரி ரதிம்மா.. நான் செஞ்சது மன்னிக்க முடியாத தப்புத் தான்.. அ..அதுக்காக நா..நான் செஞ்ச அதே தப்பை நீயும் செஞ்சிறாதே.. எ..என்னை எவொயிட் பண்ணாதடா..வலிக்குது..." என்றவன் அவளது மடியில் தலையைப் புதைத்து அழுதான்.

அவளுமே தாங்கமுடியாமல் கண்ணீர் வடித்தாள். அனிச்சையாக அவளது கை அவனது சிகையில் தஞ்சமடைய நிமிர்ந்தவனை குனிந்து பார்த்தாள்.

"ஐ..ஐ...லவ்..." என கூறமுடியாமல் தவித்தவளைப் பார்த்து "ஐ நோ..." என்றவனை பார்க்காமல் திரும்பியவள் வாயை மூடி அழுதாள்.

அவளருகில் அமர்ந்தவன் "ரதி ப்ளீஸ்..நீ என்னை மன்னிக்காட்டியும் பரவாயில்லை. ஆனால் கல்யாணம் முடிச்சு உன் கூடவே என்னை வச்சுக்கோ..." என சீரியஸாகவே கூற அவளுக்குத் தான் சிரிப்பு வந்து விட்டது..

"நீ சிரிச்ச தானே..."

கண்ணீரை துடைத்தவள் " இ.. இல்லையே..."

"இல்லை நீ சிரிச்சே.."

"இல்லை இல்லை...நான் சிரிக்கல்ல..நான் கோபமா இருக்கேன்..." என முகத்தை திருப்பியவளை தன் பக்கம் திருப்பியவன் "இல்லை நீ..." என தொடங்க..

"அடச்சீ வாய மூடு..நீ சிரிச்ச..நான் சிரிக்கலையாம்..." என்ற சத்தத்தில் ஒன்றாக இருவரும் திரும்ப அங்கே கதவு நிலையில் சாய்ந்து தீரா நிற்க அவனருகில் திரூபன் நின்றிருந்தான். ஆதித்யா திரும்பி நின்று ஃபோன் பேசிக் கொண்டிருந்தான்.

ரதியோ அவசரமாக எழுந்தாள்.

அரவிந்தோ "நீங்க எப்போடா வந்தீங்க...?" என்கவும் "மச்சி நீ...ம்ம்..ம்ம்.." என்றவன் விரல்களை ஒட்டி வைத்து முத்தமிட்டதை சொல்லிக் காட்டி பல்லை இளிக்க அவனருகில் அவசரமாக வந்த அரவிந்த "ச்சீ எருமை வெட்கமா இல்லை அடுத்தவன்ட ரூம எட்டிப் பார்த்திருக்க..." என்றான்.

அவர்கள் இப்போது தான் வந்தனர். ஏதோ குத்துமதிப்பாக தீரா அதனைக் கூற இவனின் பேச்சில் அது தான் நடந்திருக்கிறது என தெளிவாக விளங்கி விட்டது.

"அதே எருமைக்கு ரூமை மூடி வச்சிட்டு ரொமேன்ஸ் பண்ணனும்னு ஒரு காமண் சென்ஸ் இல்லை.. மூதேவி..." என அவனும் விடாமல் திட்டிக் கொண்டே சென்றான்.

நல்லவேளை ரதி திரும்பி நின்று கொண்டதால் இவர்களின் பேச்சு செவியில் விழுந்திருக்கவில்லை..

"என்ன மச்சி..கூடிய சீக்கிரம் டும்டும் கொட்டிருவாங்க போல..." என கலாய்க்க ஆடவன் வெட்கப்பட்டு தலை குனிந்தான்..

தொடரும்...

தீரா.
 
Top