• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Dharshinichimba

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
76
கவிதை 1: "தனி அழகு"

"ஒளிரும் போது தீபம் அழகு!
விரியும் போது மலர் அழகு!

நீந்தும் போது மீன் அழகு!
ஏந்தும் போது விரல் அழகு!

ஈர்க்கும் போது விழி அழகு!
பார்க்கும் போது பசுமை அழகு!

சுரக்கும் போது ஊற்று அழகு!
மறக்கும் போது பகை அழகு!

கேட்கும் போது இசை அழகு!
மட்கும் போது உரம் அழகு!

கோர்க்கும் போது மணி அழகு!
சேர்க்கும் போது மாலை அழகு!

உழைக்கும் போது வியர்வை அழகு!
தழைக்கும் போது வாழை அழகு!

வடிக்கும் போது சிலை அழகு!
துடிக்கும் போது இதயம் அழகு!

ரசிக்கும் போது இயற்கை அழகு!
பசிக்கும் போது உணவு அழகு!

காயும் போது சருகு அழகு!
சாயும் போது தோள் அழகு!

சிந்திக்கும் போது சிந்தனை அழகு!
சந்திக்கும் போது சோதனை அழகு!

தோன்றும் போது வானவில் அழகு!
ஊன்றும் போது கோல் அழகு!

நினைக்கும் போது நினைவுகள் அழகு!
புன்னகைக்கும் போது இதழ்கள் அழகு!

சேர்ந்திருக்கும் போது திருமணம் அழகு!
காத்திருக்கும் போது காதல் அழகு!

எளியோர் கற்கும்போது தமிழ் அழகு!
பெற்றோர் ஏற்கும்போது காதல் அழகு!

சோதிக்கும் போது இறைவன் அழகு!
சாதிக்கும் போது பெண் அழகு! "

- தர்ஷினிசிம்பா
 
Last edited:

Dharshinichimba

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
76
கவிதை 2: "உயிர்மெய்"

"உயிராக நீ......!
மெய்யாக நான்....!

நீயும் நானும் ..........
அன்பெனும் மொழியால்
ஒன்றாக.......

நம் அன்பின் கலவையில்
உருவானது.....
எல்லோருக்கும் கிடைக்காத
உயிர்மெய் எனும்
நம் குழந்தை செல்வம்.....! "

-தர்ஷினிசிதம்பரம்
 

Dharshinichimba

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
76
கவிதை 3: "உன்னோடு"

தழுவிக்கொள்ள
உயிர்துடித்தாலும்...
தொட்டுவிடும் தூரத்தில்
நீ இருந்தாலும்...
நூலிழை கோடாய்
தடுக்கிறதடி உன் தயக்கம்...

வாய்ச்சொல்வேண்டாம்
உன் விழிஅசைவு
போதுமடி...
ஏழுஜென்மத்திலும்
மரணித்தும் பயணிப்பேன்
உன்னோடு...
- தர்ஷினிசிம்பா
 

Dharshinichimba

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
76
கவிதை 4: "நீ"

"புத்தகத்தின் எழுதாத
வெள்ளை காகித
கோடுகளாய் நான் ...
என்னை
வரிகளால் நிரப்ப வந்த
எழுத்துக்கள் நீ... "

-தர்ஷினிசிதம்பரம்
 

Dharshinichimba

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
76
கவிதை 5: "போராடுவேன்"

"கண்னே!

நீ

கடைசிவரை

வருவாய் என்றால்

கலைப்பில்லாமல்

காதலுக்காக போராடுவேன் !

மறுப்பு தெரிவித்தால்

மரணத்தையும்

மெளனமாக

ஏற்பேன்!"

-தர்ஷினிசிதம்பரம்
 

Dharshinichimba

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
76
கவிதை 7: "ரசிக்கின்றேன்"

எந்தன்
உயிரினை
குடிக்கும் ஆயுதம்
உந்தன்
விழிகள் மட்டுமே!

பொருளென்றால்
நொறுகியிருப்பேன்...

என்னை
வருட வந்த
தென்றலாயிற்றே!
ரசிக்கின்றேன்
உந்தன் வரவை
என்
நெஞ்சுக்குள்!
 

Dharshinichimba

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
76
கவிதை 8: "ஏந்தும் வரை"

"மணி ஒண்ணாகுது...
பொண்டாட்டி ஒருத்தி
இங்க இருக்கான்னு
கொஞ்சமாச்சும் நினைப்பிருக்கா?
பேய்ங்க கூட தூங்கிடும் போல
இந்த கம்பெனிகே நேந்து விட்ட
ஆடு இவன் இருக்கானே...
எனக்கு வர கோபத்துக்கு
அந்த போனையும் கம்பியூட்டரையும்
என்னைக்கு உடைக்க போறேன்னு
தெரியலை..
பேசாம அந்த போனையே
கல்யாணம் பண்ணிருக்கலாம்.
ஊரடங்கு போட்டாலும்
இவன் போனுக்கு
ஒரு பூட்டு போட முடியலையே
தடியன் வரட்டும் பேசிக்கிறேன்"
என்று திட்டியபடி
உறங்கிப்போனவளின்
மேனியில் திடிரென்று
பரவும் வெப்பத்தினில்
இதழ்கள் தானாய்
புன்னகையில் மலர்ந்தது.

'என்னவனின் வெப்பதினை
எனக்குள் ஏந்தும்வரை
இந்த அதிகாலை குளிறினால்
என்ன செய்யமுடியும்
என்னை?' என்ற
இறுமாப்பில்
தன்னவனின் நெஞ்சத்தில்
இன்னும் ஒட்டிக்கொண்டாள்...
அவளின்
கோபமெல்லாம்
காற்றினில் கரைந்தே ஓட...

-தர்ஷினிசிம்பா
 

Dharshinichimba

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
76
கவிதை 9: "சிணுங்கல்"


குழந்தை கூட தோற்றதடி

உன் சிணுங்களின் முன்னே!!

விழிமூடி மயக்கமென்ன

மருத்துவமனையிலே??

அம்மாவை தொலைத்த குழந்தையென

நிற்கின்றேன் உன் முகம் காண,

எழுந்து வா! என் மூச்சடைக்கிறது

நீஇல்லாமல்......."
- தர்ஷினிசிதம்பரம்
 

Dharshinichimba

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
76
கவிதை 10: "ஆசை"

"தாலி கட்டினாலும் அழற??
வளைகாப்பு பண்ணாலும் அழற??
என்ன தான் சொல்ல வர??
ஏன்டா இவன நம்பி வந்தோம்னு அழறியா??" நான் கேட்க...

கண்ணீரோடு சிரித்து கொண்டே என் தலையில் செல்லமாய் ஒரு குட்டு வைத்து,

"ஏன்டா கடவுளே! இவ்ளோ கியூட்டா ஒரு புருஷனை கொடுத்துருக்கியே? நான் என்ன புண்ணியம் பண்ணேனோ தெரியலையேன்னு?? நன்றி சொல்றேன்ன்னு" சொல்லும் அவள்.

"நான் கியூட் இல்லடி ஸ்மார்ட்" நான்.
"நீ ஓவர் கியூட் தான்" சிரிப்பினூடே அவள்.

விழிகள் விரிய வயிற்றை தொட்டு பார்க்க, "என்ன?" என்றேன் பதட்டமாய்.

"உனக்கு தான் சப்போர்ட் பண்றா உன் பொண்ணு. எட்டி உதைக்கிறா" என்று கன்னத்தில் சந்தனத்தோடு சிணுங்கும் அவள்.
கடவுள் எனக்களித்த வரம்.

எங்களின் இறுதிவரை இதே புரிதலோடு பயணிக்க ஆசை.
 

Dharshinichimba

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
76
கவிதை 11: "காதல் கணவா"


"காதலிப்பவர்களை பிடிக்கும்...

காதல் கூட பிடிக்கும்....

ஆனாலும் உறுதியோடு இருந்தேன்

பெற்றவர்களின் ஆசியோடு

கைப்பிடிப்பவரை

காதலிக்கவேண்டுமென்று!......



அதனால்தான்,

என் வாழ்வின் வரமாய்!

கடவுள் தந்த பரிசாய்...!

நீ கிடைத்தாய் !.....


வார்த்தைகள்

பேசாத மொழியாய்...!

என்றும் உன் விழிகளில்

என் மேல் காதலோடு

உலாவரும் என்னவனே...!



என் கண்ணிமை மூடி

நிரந்தரமாய் மண்ணுக்குள்

போகும் வரை !........

காதலித்து கொண்டிருப்பேன்

உயிரே உன்னை! ....."

-தர்ஷினிசிம்பா
 

Dharshinichimba

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
76
கவிதை 12: "தவமாய்"

"ஹலோ!" அவளின் குரல் தேனாய் என் செவிகளில்..

"எனக்கு பாப்பாகிட்ட பேச ஆசையா இருக்கு" கெஞ்சும் குரலில் நான்.

"ஹ்ம்ம். பேசு"

"ஹலோ! செல்லம். எப்படி இருக்கீங்க? சமத்தா இருக்கீங்களா? " நான்.

"எங்க? கொஞ்சம்கூட அடங்குறதே இல்ல. எந்த நேரமும் ஆட்டம் தான்" அவள்.

அப்படியாடா செல்லம்? அம்மாவ ரொம்ப தொந்தரவு பண்ணக்கூடாது. அப்பா சீக்கிரம் வந்துடுவேன். அதுவரைக்கும் நீ தான் அம்மாவை பார்த்துக்கணும்" நான்.

"அப்போ எப்போ வருவ மாமா?" என் நேசத்திற்கு ஏங்கியவளாய்.

"சீக்கிரமே வந்துடுவேன்" எப்பொழுது என்று தெரியாமல் நான்.

"எட்டு மாசம் ஆகுது உன்னை பார்த்து. உன்னை பார்க்கணும் போல இருக்கு" என்றாள் குரலில் தவிப்பை தேக்கி.

"எனக்கும் தான் உன் மடியில தலைவச்சி தூங்கனும்" நான்.

"எப்படியாவது குழந்தை பிறக்கிறதுக்குள்ளையாவது வந்துடவியா?" என்னவென்று சொல்லமுடியாத ஒரு உணர்வில்.

"எனக்கு நீ ஒரு கண்ணுன்னா என் தாய்நாடும் ஒரு கண்ணு" நான்.

"அதனால தான் இன்னும் அதிகமா உன்னை விரும்புறேன்" சிரித்தாள் அவள்.

"ஹ்ம்ம் போதும் சிரிச்சே கொல்லாத. உன்னையும் குட்டிதேவதையும் பார்க்க ஓடி வரேன். " நான்.

"அதையும் பார்க்கிறோம் நாங்க" அவள் என்னை சீண்டி.

"போதும்டி ஏற்கனவே என் உடல் மட்டும்தான் இங்க இருக்கு உயிர் உங்ககிட்ட தான் இருக்கு" நான்.

"பட்டாளத்துக்கு போனாலும் உன் காதல் வசனம் குறையல." அவள்.

"என் தேசமே அன்பால் உருவானது தானே? அதனால அப்படியே தான் இருப்பேன். போகணும் வரேன்." வைக்க மனமில்லாமல் வைத்த நான்.

மீண்டும் என் குரல் கேட்க தவமாய் அவள்.
 

Dharshinichimba

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
76
கவிதை 13: "பேசும் பொற்சித்திரமே"

உற்றார் உறவினர் எவரும் மீதியில்லை!
வீதியில் நடக்கையில் என்நிலை சொல்லி
எள்ளி நகையாடிடும் கூட்டத்தின் நடுவே
மாட்டிக்கொண்ட மானடி கண்ணம்மா!

வீதியேமேல் என்றெண்ணுமளவிற்கு
நஞ்சின் உச்சமாய் நெஞ்சை
பிசைந்திடும் ஏச்சுக்கள்
வீட்டிலே கேட்டபொழுதெல்லாம்..
என்றோ ஒருநாள் இந்நிலை
மாறிடுமென்று வெந்து நொந்திருந்த
இளங்கன்றடி கண்ணம்மா!

இருண்டிருந்த மேகமாய்
நெஞ்சம் கணத்திருந்த வேளை
இனி வாழ்வென்பது கனாவாகிடுமோ??
என்றிருகையில்
சில்லென்ற மழைச்சாரலாய்
சிந்திய என் கருவறைத்தங்கம்
நீதானடி கண்ணம்மா...

இப்புவியில் யான்பெற்ற பிறவியை
பூர்த்தி செய்ய இறைவன் அளித்த
என் பெண்மையின் வரமடி நீயெனக்கு...

மலடி என்ற உயிர்குடிக்கும் வார்த்தைக்கு
முற்றுப்புள்ளி வைத்த
என் வானத்து வெண்ணிலவே!

தாய்மையெனும் குளுமையில்
என்னை நனைத்து
என் துயர்போக்க வந்த
என் தாயல்லவோ.... நீ...
பேசும் பொற்சித்திரமன்றோ... கண்ணம்மா...??

-தர்ஷினிசிம்பா
 

Saranya writes

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
24
எல்லா அழகையும் கூட ஏத்துப்பேன்.அதென்ன சந்திக்கும்போது சோதனை அழகு?


Nice poems sago.keep inking.💙
 
Top