• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காதலில் தீ நீயே 4

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Joined
Jul 30, 2021
Messages
566
அத்தியாயம் 4

"இப்போ நீ வந்து நிக்கும் போதே தெரியுது, என்னை கண்டுபிடிச்சுட்டேனு. சோ கெட் ரெடி ஃபார் தி கேம், மை ஸ்வீட் ஹார்ட்!" என்ற அவனின் வார்த்தைகள் ஆருண்யாவிற்கு உச்சபட்ச அதிர்ச்சியாக இருந்தது.

அதன் தாக்கம் தாங்காது தடுமாறியவளின் கைப்பிடித்து அருகே இருந்த நாற்காலியில் அமர வைத்தவன், "நா சொன்னது உங்களுக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன் மிஸ். ஆருண்யா" என்றவன் தன் அசோசியோடை அழைத்துக்கொண்டு அந்த மாடல் நடிகையை நோக்கிச் சென்றான், மித்ரன்.

'நேத்து தான் என்னை திரும்ப பார்த்தான், அதுக்குள்ள இவனோட வேலைய ஆரம்பிச்சுட்டான்! கோலா உருண்ட, இருடா உனக்கு இருக்கு' என்றவள் மனதினுள் எண்ணினாலுமே, முகத்தில் அப்பட்டமான, அடக்கப்பட்ட கோபம்.

அங்கு லீஷாவிடம் காட்சியினை மித்ரனின் அசோசியேட் விளக்க, அவளோ 'யாருக்கு வந்த விருந்தோ' என்று அலட்சியமாக கேட்டுக்கொண்டும், மற்ற யூனிட் ஆட்களை ஏவி தனக்கு ஜூஸையும், பழங்களையும் கொண்டுவரச் சொல்ல, கடுப்பின் உச்சத்திற்கே சென்றுவிட்டான் மித்ரனின் அசோசியேட்.

நேற்றே அந்த நடிகர் தன் பங்கு காட்சிகளை முடித்திருக்க, இன்று ஆருண்யாவின் டிசைன்கள் சிலவற்றை போட்டு கொஞ்சம் காட்சிகளை எடுத்தால் போதும் என்ற நிலையில் இருக்க, 'இன்று தனக்குத் தான் முழு உரிமையும்' என்ற மமதையில் இருந்த லீஷாவுமே கொஞ்சம் மிதமிஞ்சிய அலட்டல் செய்து கொண்டிருந்தாள்!

அங்கு காட்சிக்கான கேமரா ஆங்கில் மற்றும் ஸ்கிரீன் பிரசென்ஸ் பற்றி ஒளிப்பதிவாளரிடம் தன் சக அசோசியேட்டிடமும் பேசிக்கொண்டே லீஷாவையும் கவனித்த மித்ரனுக்கு , அவளின் எண்ணமும் புரிந்தது தான் இருந்தது.

ஆனால், அந்த அழுத்தக்காரனைப் பற்றி தெரியாமல் அவள் செய்யும் அலும்புகள் தாங்காமல் அங்கிருந்தவர்களே தலையைப் பிய்த்துக்கொள்ள, இதில் அந்த நகைக்கடை வாடிக்கையாளர்கள் சிலர் வேறு 'ஷூட்டிங்' பார்க்கவென்று வந்து நிற்க, ஆருண்யாவிற்கு உடலில் உஷ்ணம் ஏற ஆரம்பித்திருந்தது.

எல்லாம் சொல்லி முடித்தவன், ஷாட்டிற்கு தயாராக, அவளுக்கு காட்சியை விளக்கிய அசோசியேட்டோ, "மேம், நீங்க அங்க உட்காந்திருக்கீங்க உங்க கண்கள் எதையோ தேடுது ஆனா அது இங்க இல்லை! திடீர்னு அதை பார்த்தவுடனே ஒரு ஆச்சர்ய பாவனை உங்க முகத்தில.. சட்டுனு எழுந்து அத நோக்கிப் போகுறீங்க அவ்வளவு தான் மேம்.. " என்று விளக்கியவன் மித்ரனின் முன்பு வந்து நின்றான் பரிதாபமாக!

"நல்ல பீதாம்பரியப் போட்டு விளக்கிட்டு வந்திருக்கேன் பாஸ்.. இந்த டைம் சொதப்பிச்சுனா என்னைய மட்டும் தயவுசெய்து திரும்ப அதுக்கிட்ட அனுப்பிடாதிங்க" என்றான் அயர்வாக.

"கூல் டா" என்றவன் தன் ரேடோ வாட்சைப் பார்த்தவாறே, "கயிஸ், இதுதான் பஸ்ட் அண்ட் லாஸ்ட் டேக். நல்லா வரும்னு நம்பறேன். இல்லேனா பேக் ஆப்" என்றான் கணீர் குரலில்.

'லூசா இவன், எத்தன இன்வெஸ்ட் பண்ணிருக்கோம். கூலா சொல்லுறான் பாரு' என்று அவனை மனதில் வறுத்த ஆருண்யா, கடுப்புகள் தாங்காது அருணிற்கு ஒரு குறுச்செய்தியும் அனுப்பியிருந்தாள்.

'உன் பிரண்டு அந்த கோலி சோடா, திரும்ப என்கிட்ட வாலாட்டுறான். உன் நண்பனுக்கு ஏதும் சேதாரம் ஆகக்கூடாதுனா ஒழுங்க வால சுருட்டிட்டு இருக்கச் சொல்லு, இல்ல தென்றல் கிட்ட உன்ன பத்தி போட்டுக்கொடுத்துடுவேன். ஜாக்கிரதை!' அவள் அந்த செய்தியை அனுப்பிய பின்னர் தான் 'எதற்காக இப்படி ஒரு செய்தியை அனுப்புனோம்' என்ற எண்ணியவாறே அதை அவள் அழிக்கப்பார்க்க, அங்கு அருண் அவளின் செய்தியைப் படித்திருந்தான்!

"டேக்.. ஆக்ஷன்" என்ற மித்ரனின் குரல் அவளை அங்கு திருப்ப, ஆனால் அந்த மாடலாகப்பட்டவளின் முகபாவனைகள் ஆருண்யாவிற்கே குமட்டிக்கொண்டு வந்தது. இதில் மித்ரன் மற்றும் அவனின் குழுவினரின் நிலையை வேறு சொல்ல வேண்டும்.

"இதையெல்லாம் எவன்டா நடிக்கக் கூப்பிட்டது" என்று அங்கு நின்றிருந்த மக்களுள் ஒருவர் சொல்ல, அதை ஆமோதித்தே அங்கிருந்து அகன்றனர் பலர்.

"பேக் - ஆப்" என்ற மித்ரனின் அழுத்தமான சொற்கள் லிஷாவிற்கு ஆத்திரத்தையே ஏற்படுத்தியது.

'தான் நடித்த விதம் பற்றியாவது தன்னிடம் அவன் பேசுவான்' என்றவளின் மனக்கோட்டை மணல் கோட்டையானதில் கோபம் கண்களை மறைக்க, "ஹவ் டேர் யூ, என்னையவே இன்சல்ட் பண்ணுற." என்று கத்தியவாறே அவள் மித்ரனை நெருங்க, அங்கு ஒருத்திக்கு அவளை விடவுமே ஆத்திரம் பொங்கி கரையைக் கடக்கப் பார்த்தது.

கைகளை மார்புக்கு குறுக்கே கட்டயபடியே அவன் லிஷாவையேப் பார்க்க, அந்த பார்வையின் சீற்றம் தாளாது அவள் பின்வாங்கும் நொடி அங்கு வந்திருந்தார் கேசவன்.

"என்ன தம்பி, என்னாச்சு" என்றவாறே அந்த தள மேலாளர், அவரின் பி.ஏ இன்னும் சிலர் படை போல் அவரை சூழ்ந்தவாறு வர, ஆருண்யாவின் கோபம் இப்போது அவரிடம் திரும்பியிருந்தது.

"ஒன்னுமில்ல சார்.. ஜஸ்ட் அ டாக். விளம்பரத்தில நடிக்கிற மாடல் மாறுறாங்க." என்றான் எவ்வித அலட்டலும் இல்லாம்.

அது அவருக்கே சற்று அதிர்ச்சியாகத் தான் இருந்தது. ஏனெனில், அந்த உச்ச நடிகரின் பரிந்துரையில் வந்த மாடல் தான் லீஷா. முதலில் அவருக்கே அவளை பிடிக்கவில்லை தான். ஆனால், அந்த நடிகரின் கட்டாயத்தின் பெயரில் ஒப்புக்கொண்டார். இப்போது மித்ரனின் பேச்சுக்கு என்ன எதிர்வினை புரிய என்று சில விநாடி சிந்தித்தவர் பின்,

"எனக்கு வர வெள்ளிக்கிழமை படம் வேணும் தம்பி. அதுக்குள்ள முடிச்சிடுவீங்களா?" என்றவர் கொக்கியிட,

"நாளைக்கு ஷூட் முடிஞ்சிடும் சார். வியாழன் காலேல உங்க கையில படம் இருக்கும்" என்றவன் ஆருண்யாவை ஒரு ஆழ்ந்த பார்வைப் பார்த்தவாறே அங்கிருந்து சென்றிருந்தான்.

அவன் பார்வையில் அர்த்தம் புரிந்ததுமே, அவன் மீதிருந்த கோபம் மேலிட, செல்லும் அவனையே கோபமேறிய விழிகளுடன் பார்த்திருந்தவள், தன் கோபத்தைக் கட்டுப்படுத்த இயலாமல் திரும்பி நின்றுக்கொண்டாள்.

பெருத்த அவமானத்துடன் நின்றிருந்த லிஷாவிடம் வந்த ஆருண்யாவின் அசிட்டேன்ட் அவளிடம் இருந்த நகைகளை தருமாறு கேட்க, ஆத்திரத்தில் அவரை அரைந்திருந்தாள் அவள்.

"ஏய், என்னம்மா செய்யுற நீ" என்ற கேசவன் குரல் மித்ரனை தடுக்க, அதற்குள் லீஷாவின் கன்னம் பழுத்திருந்தது ஆருண்யாவின் கைகளால்.

"எங்க ஸ்டாப் மேல கை வைக்க நீங்க யாரு? எங்க நகைகள போட்டுட்டு எங்களையே அடிக்கறீங்க? மாடல்னா கொம்பா முளச்சிருக்கு. ஒழுங்கா நகைங்களை கழட்டி வெச்சிட்டு போயிட்டே இருங்க‌." என்றவள் திரும்பி அவளின் அசிஸ்டேன்ட்'டிடம்,

"அவங்க டிரசிங் ரூம் போகும் வர கூட உங்களால வெயிட் பண்ண முடியாதா?" என்றவள் மென்மையாக கடிந்துக்கொள்ள, அவளையேப் பார்த்திருந்த மித்ரனுக்குத் தான் சந்தோசம் மிதமிஞ்சியிருந்தது.

நெடுநாட்களுக்கு பின் அவனின் 'ஆரு' மீண்டு(ம்) வந்திருக்கிறாள் என்ற ஒன்றே அவனுக்கு நிறைவாய் இருந்தது அத்தருணத்தில்.

அவனால் அவளுக்கு நடந்த நிகழ்வுகளின் தாக்கமோ!(?) என்னவோ அவன் கண்கள் கூட அவளின் இப்போதைய வெளிப்பாட்டில் கலங்கியிருந்தது மகிழ்வின் காரணமாக.

கேசவனுமே அதே நிலையிலேயே தான் இருந்தார். ஆனால் 'தன் மகளுக்கு நடந்த நிகழ்வுகளின் பின்னணியில் மித்ரன் தான் இருக்கிறான்' என்று அவருக்குத் தெரிந்தால் இனி அவர் இதே அமைதியை காத்திருப்பாரா?

தன்னை மறைக்கும் பொருட்டு ஓய்வறை நோக்கி சென்றவன் மனதில் தான் அந்த பட்டம்பூச்சி நாட்கள் மனதில் வந்து மின்னி மறைந்துச் செல்ல, அதில் தன்னின் முட்டாள் தனமான செய்கைகளும், வார்த்தைகளும் இப்போது நினைப்பினும் அவனைக் குத்த, அவனின் உணர்வுகளை அடக்கவே பெரும்பாடு ஆகிவிட்டது மித்ரனுக்கு.

அங்கு அடிவாங்கியக் கன்னத்துடன், அடிபட்ட புலியென லிஷா அவளுக்கு ஒதுக்கப்பட்ட அறையை நோக்கிச் சொல்ல, எதிரே வந்த யூனிட் நபரிடம், "ஹே.. எனக்கு ஒரு ஃப்ரெஷ் ஜூஸ் கொண்டு வா" என்று அதே அதிகாரத்தோட அவள் கேட்க,

"அதுலாம் விளம்பரத்தில நடிக்கிறவங்களுக்கு மட்டும் தான் கொடுக்க முடியும். நீங்க இப்போ யாரோ தானே" என்று அந்த நபர் கூற, "நான் யாருனு தெரியுமா உனக்கு? போய் கொண்டு வாடா" என்றவள் கத்த,

"அடிச்சு முஞ்சியக் குழப்பிடுவேன்.. யாருகிட்ட சவுண்ட விடுர, மவளே இந்த பொண்ணு விட்ட மாதிரி நாலு அப்பு செவில்லையே விடுவேன்.. ப்பே" என்றவன் சென்றுவிட, சுற்றி நின்றவர்களின் ஏளனப் பார்வைக்கு விருந்தானாள் லிஷா.

*

"டேய்.. டேய் செல்லம்மா என்ன நம்புடா நா என்ன அப்படி பட்டவனா? அவளாதான் வந்தா, ஹக் பண்ணா, கிஸ்.. " என்று ஆரம்பித்தவன் அவள் கண்கள் கலங்குவது தாங்காது அவளை அணைக்க முற்பட, வெடித்து அழுதிருந்தாள் தென்றல்.

"என்ன தொடத போ.. போ" என்றவள் கத்தல், கதறல் எல்லாம் அருணிடம் வேலைக்கே ஆகவில்லை என்பதே உண்மை.

அவனின் அணைப்பு இறுக, இறுக.. இவளின் கோபமும் ஆதங்கமும் இன்னுமே ஏறியது!

ஒரு கட்டத்தில் இனி முடியாது என்ற நிலைமைக்கு தென்றல் வந்துவிட, அவனின் மார்பிலேயே ஒன்றியிருந்தாள் அப்பேதை.

"இப்பவாவது என்ன நம்புடா, இட் இசின்ட் மை ஃபால்ட்!" என்றவன் தன்னிலை விளக்கம் கொடுக்க, அதை அவளின் மூளை ஏற்றுக்கொள்ளவே இல்லை.

ஆனால் காதல் மனது தான் தாங்குமா? அது அவனிடம் தஞ்சம் புகுந்து நெடுநேரம் ஆகிற்றே! இருந்தாலுமே வீம்பு யாரைத் தான் விட்டது. அத்தோடு, இனி இந்த நிகழ்வுகள் எல்லாம் தன் சகித்துத் தான் ஆகவேண்டும் என்று உண்மை உரைக்க, இன்னுமே அவள் கலங்கித்தான் போனாள்!

டெல்லியில் இருந்தவன் இன்று காலை தான் சென்னை வந்திருந்தான். ஆனால் தென்றலின் கச்சேரி ஒரு பிரபல சபாவில் நடைபெறுவதால், தன் வருங்கால துணைவியின் பாடலைக் கேட்கவே சபாவிற்கு சென்றவனை வரவேற்று என்னவோ ஒரு பிரபல நடிகையே!

நாகரீகமான சேலைக் கட்டில், கவர்ச்சி கண்களைக் கூச, சபாவிற்கு வந்தவனை திடீரென்று ஆரத்தழுவி இருந்தாள் அந்த மாது!

தன் மன்னவனை தூரத்தே கண்டுவிட்ட தென்றலோ, காதில் அணிந்திருந்த டெரக்கோட்டா ஜிமிக்கிகள் ஆட, ஜதிகள் தப்பாது பாடியவளின் கண்களில் அந்த நிகழ்வுமே தப்பவில்லை.

மெல்லிய இதயம் கொண்டவளின் இதயம் அவன் ஒருவனை தான் உயிரென எண்ணிக் கொண்டிருக்க, அவள் கண்களின் முன்பே வேறோருத்தி அவனை அணைத்திருந்தது தாங்காது மேடையிலேயே கலங்கிவிட்டது.

சங்கீதத்தை கற்று தேர்ந்தவள், காதலில் இன்னமுமே கற்றுக்கொள்ள நிரம்பவே இருக்கிறதை அங்கு மறந்திருந்தாள்.

அருணுமே சட்டென்று அந்த நடிகையை விலக்க முடியாமல், நாசுக்காய் விலக்கி வைத்தவனிடத்திலேயே சுவிங்கம் போல் ஒட்டிக்கொண்டே இருந்தவளை, பெரும் பாடு பட்டு பிரிந்து வந்தவன் கண்களில் சிக்கியது, கலங்கிய விழிகளுடன் பாடும் அவனின் செல்லம்மாவைத் தான்.

'எப்போதுடா பாடல் முடியும்' என்று இருந்தவள், முடிந்தவுடன் வேகமாக அவளுக்கு என்று ஒதுக்கிய அறைக்குள்ளே புகுந்திருந்தாள்.

அங்கு வந்தவனிடம் தன் கோபத்தைக் கூட முழுவதுமாக காட்ட முடியாமல் அல்லல் படும் மனதை, திட்டி முடித்தவள் இறுதியில் அவனிடமே சரண் புகுந்திருந்தாள்.

மௌனமாய் நின்றவளின் நிலையோ, அருணை ஏதோ செய்ய, அவளின் புடவையும் அணிகலன்களும் தலையில் சூடியிருந்த ஜாதி மல்லியின் வாசம் வேறு அவனை ஏதேதோ செய்ய, ஆழ மூச்செடுத்தவன் அவளின் நுதலில் ஆழ்ந்த ஒரு முத்தத்தை வைத்தான்.

அதன் வழி, தான் மொத்த காதலையும் அவன் சொல்லிவிட, அந்த காமம் கடந்த காதல் முத்தமுமே தென்றலுக்கு அப்போது தேவையான ஒன்றாக இருக்க, கண்களை மூடி நின்றிருந்தாள், தன்னை சாந்தப்படுத்தும் முனைப்புடன்.

வெளியே பிள்ளைகளின் சப்தம் காதை தீண்ட, அவனிடமிருந்து விளகியவள் முகம் இன்னுமே கசங்கி இருந்தது. அது அவனுக்குமே தெரிந்தாலும், மேலும் எதுவும் கிண்டாமல் அவளின் புடவையை சரி செய்ய ஆரம்பித்திருந்தான், பிரபல தமிழ் திரையுலக இசையமைப்பாளர் அருண் கேசவன்.

மறுப்பு சொல்லும் ஒரு சிறு உடல் மொழி கூட தென்றலிடம் இல்லை. அதை அவளுமே ஏற்றாள் என்பது தான் உண்மை.

அவளின் ஒப்பனையை லேசாக சரி செய்தவன், தன் இரு கரத்தால் அவள் முகம் நிமிர்த்தி, "எப்பவும் உன்ன தொடுற உரிம என்னத் தவர வேற யாருக்கும் இல்லையோ, அதேதான் எனக்கும்! என் தென்றல் மட்டும் தான் என்ன ஆசையா, உயிரா, உணர்வா தொடமுடியும், அது தான் தொடரவும் செய்யும். வேற யாருக்கும் இப்போனு இல்ல எப்பவுமே என்ன நெருங்க முயற்சிக் கூட கிடையாது! புரியுதா"

நிலத்தைப் பார்த்திருந்தவளின் விழிகள் மெல்ல அவனை நோக்க, எப்போதும் அவளை வீழ்த்தும் அவனின் மீசை இன்றைக்கும் அதன் பணியை செய்ய, கைகள் மேலேழுப்பி அதனை இருபுறமும் முறுக்குவிட்டபடியே அவனின் இதழில் மெய்மறந்திருந்தாள் தென்றல்!

"கோவம் போச்சா என் செல்லம்மாவுக்கு" என்றான் அவள் அழிந்த கண் மையை துடைத்தபடி.

"மித்து மாதிரி நீங்களும் இருக்கலாமே?" என்றவளின் கேள்வி அவனுக்குப் புரியமல் இல்லை.

அதேபோல் சற்று முன்பு நடந்த நிகழ்வுக் கூட மாற்ற முடியாத ஒன்று தான்.

"உங்க அண்ணா, பார்வையாலையே எல்லாரையும் தள்ளி நிறுத்திடுவான். ஆனா என்னால இன்னுமே இது முடியல. உண்மைய சொல்லனும்னா, ஐ காண்ட் ரியாக்ட் லைக் ஹிம்! ஆனா இனி முடிஞ்சு அளவுக்கு இதுமாதிரி நடக்காம பார்த்துக்கறேன். பட், இனி நடந்தாலுமே யூ நீட் டூ அக்சப்ட் இட்!"

'சரி' என்ற விதமாய் தலை அசைத்தவளின் முகத்தில் கலக்கமே இருக்க, அவள் கைகளை அழுத்த பிடித்திருந்தவன் கவனத்தைக் கலைத்திருந்தது அந்த ஒலி.

அவனின் அலைபேசியில் ஆருண்யாவின் குறுஞ்செய்தி வந்ததற்கான இசையெழுப்ப, இதை இருவருமே படித்து ஒரு அர்த்தம் பொதிந்த பார்வைப் பார்த்துக்கொண்டனர்.

"என் மச்சான் நிலைமையை இனி அந்த ஆண்டவனாலக் கூட மாத்த முடியாது! கொஞ்ச நஞ்ச வேலையா பார்த்து வெச்சிருக்கான்? அப்போ ஆரா விட்டுட்டா, இனி? நோ சான்ஸ்.." என்றவன் தலையை இடவலமாக ஆட்ட,

"எனக்குத் தான் பயமா இருக்கு! இத சாக்கா வெச்சு நீங்க என்னைய கழட்டி விட்டுடுவீங்களோனு" என்றவள் மென்னகையுடன் சொல்ல, அவனோ கொலைவெறி ஆகியிருந்தான்.

*

கேசவனின் அறையில் அனைவரும் சூழ்ந்திருக்க, தன் கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக அவள் பேசிக்கொண்டிருக்க, அவளின் ஒலியானது அந்த அறையைத் தாண்டி வெளியே வரைக் கேட்டிருந்தது.

"நீங்க என்ன ப்பா, அந்த டைரக்டர் என்ன சொன்னாலும் சரினு சொல்லிட்டு வரீங்க? டக்கு டக்குனு மாடல் மாத்தினா, பட்ஜெட் தாண்டி தானே போகும்? அந்த பணம் என்ன இவர் தருவாரா? இல்லை இவர் என்ன சம்பளமே வேண்டாம்னு சொல்லிடுவாரா?" என்றவள் தன் இயல்பை மீறி 'தையா தக்கா' என்று குதிக்க, அந்த அறையில் இருந்த எல்லாருமே அவளை அதிசயமாகவே பார்த்திருந்தனர்!

தன் இயப்பு இதுவல்லவே என்று அவளை சிந்திக்க விடாமல், அவளின் முழு கவனத்தையுமே தன்னின் மேலேயே வைத்திருந்தான் மித்ரன். ஆனால், அது இன்னுமே ஆருண்யாவிற்கு புரியவில்லை.

அவள் கொஞ்சம் கொஞ்சமாக தன் பழைய இயல்பிற்குத் திரும்பிக்கொண்டிருக்கிறாள் என்பதே கேசவனுக்கு அத்துனை மகிழ்ச்சியாய் இருக்க, அவர் அவள் பேசும் அழகையே பார்த்திருந்தார்.

முழுதாய் எட்டு வருடங்களுக்கு முன்பு அவளின் சந்தோசமும் சிரிப்பும் தொலைந்திருக்க, அவளின் சரவெடி பேச்சும், குறும்பு தனமுமே காணாமல் போயிருந்தது.

காரணங்கள் அறியாது பெற்றவர்கள் கலங்க, இவளோ தன் இயல்பையே மறந்து மறைத்து வாழப் பழகியிருந்தாள் தன் ஒரு தலை காதலுக்காக!

"மிஸ். ஆருண்யா, நீங்க கோட் பண்ண பட்ஜெட்ல எந்தவித மாற்றமுமே வராது. அண்ட் மாடல் மாறினாக் கூட நீங்க ஃப்பே பண்ண தேவையில்லை. இது என் டெசிசன், சோ நானே பார்த்துக்கிறேன். அண்ட் இனி இந்த ஆட் பண்ணப்போறது மிஸ்ஸஸ். ப்ரியா ருத்ரன் தான். அவங்கள பைனல் பண்ணிட்டேன், எல்லா பிராசஸ்ஸும் முடிஞ்சு கம்மிங் தேர்ஸ்ட் டே உங்க விளம்பர படம் உங்க கைக்கு வந்திடும்! இஸ் தட் கிளியர்" என்றவன் அழுத்தமாக கூறியவாறே அறையின் உள்ளே வந்திருக்க, அங்கு ஒரு சங்கடமான சூழல் நிலவி இருந்தாலும், ஆருண்யாவிற்கு கோபமே மிஞ்சியிருந்தது.
தொடரும்...
எழுத்தாளர் - சௌந்தர்யா உமையாள்

எழுத்தாளரின் பிற படைப்புகளை படிக்க கீழே உள்ள திரியை பார்க்கவும்


எழுத்தாளரின் Completed story


எழுத்தாளரின் ongoing

 
Top