• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காதலே 1

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
685
516
93
Chennai
அத்தியாயம் 1

"அம்மா... அம்மா.." என்று அழைத்துக் கொண்டே படிகளில் வேகமாக இறங்கி வந்தான் சத்யா.

"ஏன்டா காலையிலே என்னை ஏலம் விடுற?" என சமையலறையில் இருந்து வெளிவந்த மஞ்சுளா அவனை மேலும் கீழும் பார்த்துக் கொண்டே,

"இவ்ளோ சீக்கிரமே எங்கடா கிளம்பிட்ட?" எனக் கேட்க, அவரை முறைத்தவன்

"ம்ம்ம்மா.... நேத்து நைட்டே உங்ககிட்ட சொன்னேன்ல! க்ளைன்ட்ட பார்க்க சீக்கிரமா போகணும்னு? இப்ப மணி 8 ஆகுது! இட்ஸ் ஆல்ரெடி லேட் மா. டிபன் எங்கே?" என்று நேரமான டென்ஷனில் கேட்க, திருதிருவென விழித்தார் மஞ்சு.

"ஒரு பத்து நிமிஷம் கண்ணா. அம்மா ரெடி பண்ணிடுறேன்" என்கவும்,

"அப்ப நேத்து நான் சொன்னதை மறந்துட்டிங்க! அப்படி தானே?" என முறைத்துக் கொண்டே கோபமாகக் கேட்டான்.

"இல்லை கண்ணா! நித்தி இன்னைக்கு மது வீட்டுக்கு போறதனால டிபன் வேண்டாம்னு சொன்னா. சரி நமக்கு தானேனு மெதுவா பண்ணலாம் நினச்சேன். நீ சொன்னது நிஜமா ஞாபகம் இல்லை டா. சாரி!" என பாவமாக கூற, சத்யா கோபம் இன்னும் ஏறியது.

"ஓஹ்! உங்க மருமகள் வேண்டாம்னு சொன்னதும் மகன் கேட்டது மறந்துடுச்சு! அப்படி தானே?" என மீண்டும் அவன் கோபம் கொள்ள அங்கே வந்தாள் நித்தி.

"என்ன சத்யா! காலங்காத்தால என் அத்தையை திட்டிட்டு இருக்கிற?" எனக் கேட்க, அவளையும் முறைத்தவன்

"எனக்கு எதுவும் வேணாம்" என கிளம்பப் போக, அவனை நிறுத்திய மஞ்சு அவன் கையில் ஒரு பாக்ஸை திணித்தார்.

என்ன இது என அவன் கேள்வியாக பார்க்க, "நீ தானே நேத்து உன்கூட உதயும் வர்றானு சொன்ன? அதான் அவனுக்கு புடிக்குமேனு கேசரி பண்ணினேன். அவன்கிட்ட மறக்காமல் குடுத்திடு" என்றார்.

"ம்மா நான் டிபன் செய்யுங்கனு நேத்து சொன்னது உங்க காதுல விழல. பட் உதய் வர்றானு சொன்னது விழுந்துச்சா? இதெல்லாம் டூ மச் மா. நான் வந்து பேசிக்கிறேன்" என்றுவிட்டு செல்ல எத்தனிக்க அவனை தடுத்தாள் நித்தி.

அவளை முறைத்துப் பார்த்தவனைக் கண்டு கொள்ளாமல், "அத்தை நான் தனியா போனா வீண் ஆட்டோ செலவு. சோ நானும் சத்யா கூட போய் இறங்கிக்குறேன்" என்றவள் அவனுக்கு முன் வேகமாக கார் நோக்கி சென்றாள்.

"சரியான கஞ்சம்" என தலையில் அடித்துக் கொண்டவன் மறக்காமல் மஞ்சு கொடுத்த பாக்சை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

நித்தி வீட்டு வாசற்படியில் இறங்கி கார் நோக்கி செல்ல, அங்கே மூங்கில் ஊஞ்சலில் அமர்ந்திருந்த ராஜம்மாள் தன் வாயால் அவளைப் பிடித்துக் கொண்டார். "ஏன்டி! கட்டிக்க போறவனை பேர் சொல்றியே.. கூறு இருக்கா உனக்கு?" எனக் கேட்க,

"ஏய் கிழவி! நான் தானே கட்டிக்க போறேன். என் மாமாவ எப்படி கூப்பிடணும்னு எனக்கு தெரியும். உன் வேலையைப் பாரு" என்றவள் காருக்கு ஓட, அவள் பின்னே இதனை கேட்டு சிரித்துக் கொண்டே வந்த சத்யா ராஜம்மாவின் கன்னத்தைக் கிள்ளி விட்டு ஓடினான்.

ராஜம்மாள் அந்த வீட்டின் மூத்த பெண்மனி. அனைவரையும் விரட்டி வேலை வாங்க ஆசை கொண்ட பெரியவர். அவருக்கு இரண்டு பிள்ளைகள். மூத்தவர் குணசேகரன். அடுத்ததாக மகள் பத்மா.

குணசேகரன் மனைவி மஞ்சுளா. இரண்டு பிள்ளைகள். பெரியவன் சத்யன். செல்லமாக சத்யா. இரண்டாவது இனியன். வீட்டில் அனைவருக்கும் இனியா.

பத்மா திருமணம் ஆன ஐந்து வருடத்தில் விபத்தில் கணவனை இழந்தவள். இரண்டு மகள். மூத்தவள் நித்யா என்ற நித்தி. இரண்டாவது அனிதா என்ற ஹனி.

கணவனை இழந்த பின் தங்கையை தன்னுடன் தன் வீட்டில் வைத்துப் பார்த்துக் கொண்டார் குணசேகரன்.

ராஜம்மாவிற்கு தன் மகள் பேத்தியை மகன் வீட்டிற்கே மருமகளாக்கிவிட வேண்டும் என்று விருப்பம். அதை இப்படி தான் அடிக்கடி ஏதாவது வம்பு பேசி அனைவருக்கும் உணர்த்துவார்.

குணசேகரன், மஞ்சுளா, பத்மா என பெரியவர்கள் அனைவருக்கும் அந்த ஆசை இருந்தாலும் யாரும் அவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது என்ற முடிவில் அமைதியாகவே இருந்தனர்.

ஜாக்கிங் முடித்து வந்த குணசேகரன் தன் மனைவியிடம்,
"என்ன வீடு அமைதியா இருக்கு? பசங்களை எங்கே?" என்று கேட்க,

"சத்யாவும் நித்தியும் வெளியே கிளம்பிட்டாங்க. பத்மா கோவிலுக்கு போயிருக்கா. ஹனி தூங்குறானு நினைக்குறேன். இன்னும் கீழே வரல" என்று அவருக்கு காபி கொடுத்துக் கொண்டே கூறினார்.

அப்போது உள்ளே வந்த ராஜம்மாள் "ஏன்டா குணா! இவ்வளவு நேரமா எங்கே போன? தினமும் ஏழு மணிக்கு எல்லாம் வந்திடுவ?" எனக் கேட்க, "என் பிரண்ட் மோகனைப் பார்த்தேன் மா. பார்த்து பல வருஷம் ஆச்சுல்ல. பேசிட்டு இருந்ததுல நேரம் போனதே தெரியலை" என்றார்.

பின் ராஜம்மாள் அவர் அறைக்கு சென்று விட, குணசேகரன் மஞ்சுவிடம், "இனியாவ ஹாஸ்டல் சேர்த்திருக்க கூடாதோ? பாரு! வீடு எவ்வளோ அமைதியா இருக்கு? நம்ம ஹனிக்கும் அவன் வயசு தானே. நல்ல மார்க்ல டாக்டர் சீட் வாங்கி பக்கத்தில் இருக்கிற காலேஜ்க்கு போயிட்டு வர்றா. இவன்தான் சென்னைல இல்லாத காலேஜ்னு டாக்டருக்கு படிக்க கோயம்பத்தூர் போயிருக்கான். இப்போதான் முதல் வருஷமே ஆரம்பம் ஆகுது. எனக்கு தான் அவனை பார்க்காமல் என்னவோ மாதிரி இருக்கு" என்று புலம்பி கொண்டு இருந்தார்.

மஞ்சு அவர் தலையில் செல்லமாகக் குட்டியவர், "அவன் கேட்ட உடனே கூட்டிட்டு போய் சேர்த்தது யாராம்? நீங்க தானே?" எனக் கேட்க,

"அவன் என்ன கேட்டாலும் மறுக்க மனசே வரமாட்டேங்குது மஞ்சுமா. அப்படியே எங்க அப்பா மாதிரி அவன்" என பெருமை பேச, மஞ்சு அவரை கனிவுடன் பார்த்தார்.

குணசேகரன் குணத்திலும் தங்கம் தான். கவெர்மென்ட் பேங்க் மானேஜர். சத்யன் இனியன் மட்டும் இல்லாமல் நித்தி ஹனியையும் தன் பிள்ளைகளாகவே பார்ப்பவர். நான்கு பேருமே அவருக்கு செல்லம் தான்.

சத்யன் அங்கேயே கல்லூரி முடித்து இப்போது தான் ஒரு வருட காலமாக சென்னையில் உள்ள பிரபல ஐடி நிறுவனத்தில் வேலைக்கு சென்று வருகிறான். நித்தி சத்யன் படித்த கல்லூரியில் இப்போது நான்காம் வருடம் அதே ஐடி துறையில் படித்துக் கொண்டு இருக்கிறாள்.

"குட் மார்னிங் அத்தை! குட் மார்னிங் மாமா" என்ற குரலில் இருவரும் திரும்ப, ஹனி தான் வந்து கொண்டிருந்தாள்.

"வாடாம்மா. தூக்கம் விட்டுச்சா?" என குணா கேட்க,

"ஐயோ மாமா சத்தம் போடாதீங்க! அம்மா வரும்போது நான் அப்பவே எழுந்து குளிச்சு படிச்சுட்டு இருந்தேன்னு சொல்லணும் சரியா?" என்றாள் அந்த வீட்டின் குட்டி இளவரசி.

"அதுசரி! என்னவோ அவளுக்கு பயப்படுற மாதிரி தான். அவ போகும் போதே சொன்னா… ஹனியை எழுப்பி விட்டுட்டேன் இப்போ வந்திடுவானு. நீ அவ போய் ஒருமணி நேரத்துக்கு அப்புறம் தான் வர்ற" என மஞ்சு அவளை கூறிக் கொண்டே ஹார்லிக்ஸ் எடுத்து வர, எப்போதும் போலவே அதை ரசித்துக் குடித்தாள் ஹனி.

"இவளை பார்த்தால் டாக்டருக்கு படிக்கிற பொண்ணு மாதிரியா இருக்கு? இன்னும் குழந்தை மாதிரி எப்படி உறிஞ்சி குடிக்கிறா பாருங்க" என மஞ்சு கூற,

"ஒரு காபியை அவளை நிம்மதியா குடிக்க விடுறியா? அவ என்ன படிச்சு என்ன வேலை பார்த்தாலும் எனக்கு குழந்தை தான்" என்றவர் அவள் தலையை பாசமாக தடவினார்.

"அப்படி சொல்லுங்க மாமா." என்றுவிட்டு அவள் குடிப்பதை தொடர, பத்மா கோவிலில் இருந்து வந்தார்.

"அய்யயோ டெரர் மம்மி வந்தாச்சு. ப்ளீஸ் ப்ளீஸ் அத்தை சொல்லாதீங்க. அம்மா திட்டும்" என மஞ்சுவிடம் சரணடைய, அதற்கு அவசியமே இல்லை என்பது போல மஞ்சு பத்மாவிடம் பேச்சு கொடுத்து திசை திருப்பினார்.

"என்ன பத்மா கோவில்ல கூட்டம் அதிகமா? நேரமாகிட்டு"

"ஆமா அண்ணி. நல்ல கூட்டம் தான். ஆனாலும் சாமி தரிசனம் நல்லா இருந்தது" என்றுவிட்டு பிரசாதத்தை அண்ணனுக்கும் அண்ணிக்கும் கொடுத்தவர், "ஹனி இதை பூஜை அறையில் வச்சிடு. நீயும் பிரசாதம் எடுத்துட்டு வை" என்று அவள் கையில் கொடுத்து விட, அப்படியே எஸ்கேப் ஆகி ஓடிவிட்டாள் பெண். பின் பேசிக் கொண்டே இருவரும் சமையல் வேலையைப் பார்க்க, குணசேகரன் தன் அறைக்கு சென்றார்.

தந்தை இறக்கும் போது ஹனி இரு வயது குழந்தை. அவளுக்கு தந்தை பற்றி தெரியாததால் எதற்கும் கலங்க மாட்டாள். நித்தியும் தைரியமான பெண் தான். ஆனால் அவள் ஐந்து வயது வரை தந்தை பாசத்தை அனுபவித்தவள் ஆயிற்றே. அதனால் சிறு வயதில் அடிக்கடி அப்பாவை தேடி அழுவாள்.

அவளை விட ஒன்றறை வயது பெரியவன் சத்யா. அவனுக்கு அவள் அழுவது பிடிக்காமல் போக, தன்னுடனே வைத்து விளையாடி அவளை அழாமல் பார்த்துக் கொள்வான்.
வளர வளர சத்யா, நித்தி இருவரும் ஒன்றாகவே பள்ளிக்கு சென்று, அதன் பின் அவன் படிக்கும் கல்லூரியிலே தான் படிப்பேன் என அவளும் அவனோடே சேர்ந்து சுற்றுவாள். ஆனால் இது தந்தை வீடு அல்ல. தன் தாய்மாமன் வீடு என்ற எண்ணம் அவளுக்கு சிறு வயதிலேயே தோன்றி விட்டது.

தன் அன்னையை புரிந்து கொண்டு எதற்கும் அடம் பிடிக்காமல் இருந்து கொள்வாள். வீணாக செலவு வைக்க கூடாது. அவர்களுக்கு தொந்தரவாக என்றும் இருக்க கூடாது என்பதில் தெளிவாக இருப்பாள். அதுவே நாளடைவில் அவளை கஞ்சம் என்று கூறும் அளவுக்கு மாறி போனது.

ஆனால் கேட்டதெல்லாம் குணசேகரன் செய்வார் என்று ஹனிக்கு சிறு வயதில் இருந்தே அவரை பிடித்துப் போக, தனக்கு என்ன வேண்டும் என்பதை அவரிடமே கூறி காரியத்தை சாதித்து கொள்வாள் அந்த சுட்டி. அதற்காக பத்மா அவளை திட்டினாலும் குணசேகரன் தடுத்து விடுவார். அவ என் பொண்ணு என்று கூறும் போது பத்மாவாலும் எதுவும் எதிர்த்து பேசிட முடியாது.

தொடரும்..
 
  • Like
Reactions: Lakshmi murugan