அத்தியாயம் 30
நித்தி சிஐடி வேலையைத் தொடங்க தயாராக இருந்தாள். தமிழிடம் நேரடியாக கேட்டு விட வேண்டும் என நினைத்தவள் பின் 'அவன் அதுக்கு சரிபட்டு வரமாட்டான்' என அவளே முடிவு செய்து லட்சுமியிடம் கேட்க நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அதே நேரம் உதய் சத்யா இருவரும் கான்ஸ்டபிள் சாமி அண்ணாவை பார்க்க அவர் வீட்டுக்கே காலையில் சென்றிருந்தனர்.
ஆனால் அவரிடம் இருந்து பெரிதாக எந்த தகவலும் இல்லை. சில மாதங்கள் முன் மதுரையில் இருந்து டிரான்ஸ்பெரில் வந்திருக்கிறான். ஒரே மகன். ரொம்ப நல்லவன் என்ற சான்றிதழ் மட்டுமே அவருக்கு தெரிந்தது. அடுத்து அவர்கள் சொன்னபடி உதய்க்கு தெரிந்தவர் மூலம் டிடெக்டிவ் ஏஜென்சி சென்று அவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்தனர். இரண்டு நாட்களில் முழு விபரம் தருவதாக சொல்லவும், வேறு வழி இல்லாமல் காத்திருக்க முடிவு செய்து அதை நித்தியிடமும் சொல்லிவிட்டான் சத்யா.
நித்தி, தமிழ் ஸ்டேஷன் சென்றதும் லட்சுமணன் இல்லாத சமயம் பார்த்து லட்சுமியிடம் பேச்சு கொடுத்தாள். நித்தியின் ஸ்டைல்லே எடுத்ததும் நேராய் விஷயத்திற்கு வருவது தானே! அதே போல லட்சுமியிடமும் தமிழுக்கு சத்யா மேல் என்ன கோபம் என்று தடாலடியாய் கேட்க, அவருக்கு வருத்தமாகவே இருந்தது.
"இல்ல நித்தி! தமிழ் உன்கிட்ட என்ன சொன்னான்னு எனக்கு தெரியாது. ஆனால் அவன் கெட்டவன் இல்லை அது மட்டும் தான் சொல்வேன். வேற எதுவும் என்கிட்ட கேட்காதடாமா" என்று விட புஸ்ஸன்று ஆனது நித்திக்கு.
மதுரையில் தமிழ் வேலை பார்த்த ஸ்டேஷன் ஏரியாவை தெரிந்து கொண்டு அங்கே சென்று விசாரிக்க போவதாக சத்யாவிற்கு போன் வர, முழு விபரம் தெரிந்து கொண்டு வருமாறு கூறினான்.
இரண்டு நாட்கள் அதை பற்றி எண்ணியே சத்யா உதய்க்கு நாட்கள் நகருவேனா என செல்ல, நித்திக்கு அந்த இரண்டு நாட்கள் யோசனையில் சென்றது. லட்சுமி எதுவும் சொல்ல முடியாது என்றதும், அதை தெரிந்தே ஆக வேண்டும் என்பதில் உறுதியானாள் நித்தி.
தமிழுக்கு அவளிடம் பேசாமல் இருப்பது சுத்தமாக முடியவில்லை. காதல் ஒருவனை எவ்வளவு பலவீனமாக்கி விடுகிறது என நினைத்து சிரித்தவன் அவனே போய் அவள் முன் நின்றான்.
"தியா"
"தோ பாரு! என்னை என்ன வேணா சொல்லி கூப்பிடு.. ஆனால் இந்த மாதிரி செல்ல பேருனு சொல்லிட்டு கிய்யா முய்யானு கூப்பிடாத.. எரிச்சலா வருது"
அவளின் இந்த பதில் கோபத்திற்கு பதில் அவன் முகத்தில் சிரிப்பையே கொண்டு வந்தது.
"சரி தியா! அதை அப்புறம் பேசலாம். அம்மா கோவிலுக்கு போகணும்னு உன்னை ரெடியாக சொன்னாங்க" என தமிழ் சொல்ல, வந்தது முதல் வீட்டிலேயே இருப்பதால் வெளியே செல்லலாம் என அவளும் தயாரானாள்.
பட்டு புடவையில் தயாராகி இவள் வெளியே வர, அவனும் வேஷ்டி சட்டையில் ரெடியாகியிருந்தான்.
அவனை அப்படி பார்த்ததும் முதல் நாள் தமிழை பார்த்தபோது நித்தி சத்யாவிடம் சொன்ன, "நான் சைட் அடிக்க எல்லா தகுதியும் அவனுக்கு இருக்கு" என்ற வார்த்தை ஞாபகம் வர அவள் முகத்தில் ஒரு புன்னகை வந்தது.
'என்ன சிரிக்கிறா! வேஷ்டில அவ்ளோ கேவலமாவா இருக்கோம்?' என தமிழ் நினைத்தாலும் அவள் பார்வை அவன் பக்கம் அடிக்கடி வருவது தெரிந்து மனதில் பூத்தூறல் தான்.
ரசனையுடன் தமிழ் அவளைப் பார்த்துக் கொண்டிருக்க, அதற்குள் சுதாரித்த நித்தி "ஆமா நீ எங்கே கிளம்புற? எனக்கும் அத்தைக்கும் வழி தெரியும். நீ ஒன்னும் வர வேண்டாம்" என்று சொல்லிவிட்டு வெளியே வர, லட்சுமி ஊறுகாய்க்கு மாங்காய்களை வெட்டிக் கொண்டிருந்தார்.
நித்தி புரியாமல் பார்த்துக் கொண்டிருக்க, பின்னால் வந்த தமிழ் ஒரு கள்ளச் சிரிப்புடன் அவளுக்கு முன் வந்து லட்சுமியை அழைக்க கோபத்தில் இருந்த அவர் வேண்டா வெறுப்பாக திரும்பினார்.
இருவரின் தோற்றமும் அப்படியே அந்த நிமிடமே மனதில் பதிய ஆசையாய் அவர்களை பார்த்துக் கொண்டிருந்த நேரம், "அம்மா! தியா கோவிலுக்கு போகணும்னு சொன்னா! நாங்க போயிட்டு வந்துடுறோம் மா" என தமிழ் சொல்ல, நித்தி அவனை முறைத்துக் கொண்டும் அத்தை முன் ஒன்றும் பேச முடியாமலும் நின்றாள்.
அதற்கு மேல் மகன்மேல் கோபத்தை வளர்க்க முடியாமல் மனமார வாழ்த்தி அனுப்பி வைத்தவரிடம், வெளியே சாப்பிட்டு வந்து விடுவதாக சொல்லி செல்லவும் நித்தியும் விடைபெற்று கிளம்பினாள்.
'சாப்பிட போறோமா? இன்னைக்கு இருக்கு டா உனக்கு.. நான் சாப்பிடற சாப்பாட்டுல பில்லு எகிறனும்.. இவன் கதறணும்' நினைத்தபடி தான் உடன் சென்றாள்.
"என்ன மேடம் வேஷ்டில என்னை பார்க்க கொஞ்சம் கஷ்டமா இருக்கா? ஏன் சிரிச்ச?" கோவிலுக்கு செல்லும் வழியில் தமிழ் நித்தியிடம் பேச்சை வளர்க்க, அவள் வாய் திறக்கவில்லை.
"நான் கண்ணாடி பார்க்கும் போதெல்லாம் ஏதோ நானும் கொஞ்சம் அழகா தான் இருக்கேன்னு நினைச்சுட்டு இருந்தேன்" என மீண்டும் அவன் பேச,
'எவன் டா இவன்! வாயை கிளறாமல் இருக்க மாட்டான் போல' என பல்லைக் கடித்துக் கொண்டு இருந்தாள்.
"பேசு தியா! ஏதோ கோபத்துல அன்னைக்கு அப்படி பேசிட்டேன் சாரி" என்று சரணடைய, 'படுத்தேவிட்டானய்யா' என்ற ரேஞ்சில் ஆச்சர்யமாக பார்த்தாள் நித்தி.
அவளை பார்த்து சிரித்தவன், "நீ கோபமா பேசினாலும் பரவாயில்லை! இனி நான் எதுவும் பேசமாட்டேன். ப்ளீஸ் பேசாமல் இருக்காதயேன். எப்பவும்போல திட்டிட்டாவது இரு" என்று சொல்ல,
"என்ன! அவார்ட் தர்ற அளவுக்கு நடிக்கிற? இப்ப எதுக்கு எனக்கு ஐஸ்?" என்றாள் நித்தி.
"ஹ்ம்ம் நான் சொன்னா நம்பவா போற?" என கேட்டதும், அவள் பேசாமல் திரும்பிக் கொண்டாள்.
ஈஸ்வரனை மனமுருக தமிழ் வேண்டிக்கொண்டான், "இந்த ஜென்மம் முழுதும் நித்தியுடன் தன் வாழ்வு சந்தோசமாக அமைய வேண்டும்" என்று. நித்திக்கு என்ன வேண்டுவது என தெரியாமல் கைகூப்பி அந்த சிவனையே பார்த்துக் கொண்டு நின்றாள் எல்லாம் நல்லதாக அமைய வேண்டும் என்று.
"அப்புறம்! எங்க போலாம் தியா?" என்றதும் அவள் முறைக்க,
"ப்ச் முறைச்சுட்டே இருக்காத டி. ஹோட்டல்ல சாப்பிட்டு வீட்டுக்கு போலாம். பட் அதுக்கு இன்னும் டைம் இருக்கு. சோ சாய்ஸ் இஸ் யுவர்ஸ்!" என்றதும் அவளுக்கும் போரடிப்பது போல தோன்ற,
"பீச் போலாமா?" என்றாள் கண்கள் பளிச்சிட, அதில் லயித்தவன் "ஓஹ் எஸ் போலாமே!" என்று சொல்லி கிளம்பினர்.
கடற்கரை மணலில் கால்கள் புதைய நித்தி நடக்க, அவள் நினைவுகள் மொத்தமும் வீட்டை சுற்றியே!.
அதை அறிந்தே தமிழும் அவளிடம் கேட்டான்."யோசனை பலமா இருக்கிறதை பார்த்தா நீ, உன் மாமா, உன் பேமிலி எல்லாம் இதே பீச்க்கு வந்ததா தான் இருக்கும் போல"
"ம்ம் ஆமா! அடிக்கடி வருவோம்.. சின்ன வயசுல இருந்து இப்போ வரையும்.. ஹனி இனியா சண்டையை தீர்க்கவே முடியாது.. மணல்ல வீடு கட்டுறதுக்கு கூட சண்டை தான் போடுவாங்க.. நான், சத்யா மாமா, உதய் பராக்கு பார்த்துட்டு நடந்துட்டே இருப்போம். இங்க நடக்குறது எங்க மூணு பேருக்கும் ரொம்ப புடிக்கும்" என நினைவுகளை கண்ணில் தேங்கிய படியே மெய்மறந்து சொல்ல தமிழ் ஏங்கி போனான். என்னுடனான நினைவை எப்போது சேமிப்பாய் என்று.
"தியா!" என்று தமிழ் அழைக்க, கனவுலகில் இருந்து கலைந்து அவனைப் பார்த்தாள்.
"இங்கே உட்காரலாமா?" என அவன் கேட்க, நடக்க வேண்டும் என்று தோன்றினாலும், பட்டு புடவையுடன் தூரமாக நடப்பது கடினம் அதோடு வேஷ்டி கட்டியிருக்கும் அவன் நிலையும் புரிய, கடலலைகளை ரசிப்பதற்கு ஏதுவாக ஒரு இடத்தில் அமர்ந்தனர்.
சிறிது நேரம் மௌனத்தில் கலைய, நித்தி திரும்பி அவனைப் பார்த்தாள். அவனும் ஏதோ யோசனையில் இருப்பது தெரிய திரும்பிக் கொண்டவளுக்கு ஏனோ அவனிடம் பேச தோன்றியது.
"நீ ஏன் போலீஸ் ஆன?"
இதென்ன கேள்வி என்பது போல அவளை பார்த்தான். "சும்மா சொல்லு. அத்தைம்மா, மாமாக்கு நீ இந்த வேலை பாக்குறது புடிக்கலயாம்.. அன்னைக்கு சொன்னாங்க. உனக்காக தானே அவங்க வாழுறாங்க! ஏன் அவங்களுக்கு புடிக்காத வேலை பார்க்குற?" பேச வேண்டும் ஏன தோன்றினாலும் என்ன பேச என தோன்றவும் அவள் அத்தை அன்று சொன்னதை இப்போது கேள்வியாக அவனிடம் கேட்டாள்.
"சொன்னா நம்புவியா?" தீவிரமாக அவன் கேட்க,
'இதற்கும் மாமாவை தான் சொல்வானோ!' என முறைத்து பார்த்தாள்.
"ஹா ஹா ஹா. பரவாயில்லையே நான் மனசுல நினச்சது புரிஞ்சுடுச்சி போல!" என்றதும் அவள் கோபத்துடன் திரும்பிக் கொள்ள,
"சரி சரி சொல்றேன்" என்றவன் "எனக்கு இந்த வேலை அவ்வளவு புடிக்கும்.. என்னோட லைஃப் அண்ட் லைஃப் பார்ட்னர் ரெண்டுமே எனக்கு புடிச்சதா இருந்தால் தானே நான் சந்தோசமா இருக்க முடியும்? அதான் நானே முடிவெடுத்தேன்" என்றதும் அவளுக்கு கோபம் வர,
"அப்போ அதுக்காக யாரு கவலைப்பட்டாலும் பரவாயில்லை.. அப்படிதானே?" என இரு பொருளில் கேட்க,
"பார்த்தியா நான் சாதாரணமா பேசினாலே நீ கோபமாகிடுற!" என அவன் சொல்ல, நிதானமடைந்தவள் சில நொடிகளே அமைதியாய் இருந்தாள்.
"சரி ஓகே! நானும் பிரண்ட்லியாவே கேக்கறேன்.. சொல்லேன்? ஏன் என் லைஃப்ல வந்த? என்ன தான் கோபம் உனக்கு மாமா மேலே?" எப்படியாவது அறிந்திட வேண்டும் என்ற ஆர்வத்தில் அவனிடம் கெஞ்சாத குறையாக கேட்டுக் கொண்டிருந்தாள்.
"வேணாம் தியா! அதை கேட்காத டி. ஆனால் சத்தியமா சொல்றேன் உனக்காக மட்டும் தான் உன்கிட்ட வந்தேன். வேற எந்த நோக்கமும் இல்லை. என்னை நம்பிடு ப்ளீஸ்!" அவளுக்கு கொஞ்சமும் சளைக்காமல் அவளை போலவே கெஞ்சிக் கொண்டிருந்தான்.
"ப்ச்! போடாங்ங்.." என சலிப்புடன் அவள் கூற, ஒரு நொடி திகைத்து பின் வாய்விட்டு சிரித்தான் அவன்.
"சரி ஓகே நான் நம்புறேன். ஆனால் எனக்கு என் மாமா மேல நம்பிக்கை இருக்கு. கண்டிப்பா அவன் மேல தப்பு இருக்காது. எனக்காக சொல்லேன். எவ்வளவு பெரிய பிரச்சனைனாலும் நான் சால்வ் பன்றேன்" என சிறுபிள்ளையாய் மீண்டும் கெஞ்ச,
'சரியான கேடி டி நீ! போலீஸ்கிட்டயே போட்டுவாங்க பாக்குற! ஒன்னு பொம்பள ரவுடியா மாறி எதிர்த்து நின்னு கேட்குறது.. இல்ல கெஞ்சியே கவுத்துட பாக்குறது. பொழச்சிப்ப போ' என அவளை பற்றி நினைத்து அவளையே விழி எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
"டேய்! சொல்லு டா" பொறுமை போக அவள் கத்த,
"கொஞ்ச நேரம் நிம்மதியா இருக்க விடுறியா? ஏன் டி கேள்வியா கேட்டு கொல்ற?" என்றான் சிறிது கோப சலிப்புடன்.
மீண்டும் தோற்று போன முகத்துடன் அவள் திரும்ப, சில நிமிடங்களுக்கு பின் "ஆமா நீ மது எல்லாம் ஒரே காலேஜ் தானா? என்றான்.
"ஆமா அதுக்கென்ன இப்ப?" என அவள் கடுப்புடன் கேட்கவும்,
"அப்போ தமிழினி தெரியும் தானே?" என்றதும் சடாரென அவன் புறம் திரும்பினாள்.
அவன் அவளைப் பார்க்காமல் கடலை பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு தெரியும் இந்த ஒரு பெயர் போதும் அவனை முழுவதுமாய் அறிந்து கொள்ள என்று.
"நீ... நீ..." என அவள் தடுமாற ஒரு கசந்த புன்னகையுடன் எழுந்து கொண்டான்.
"டைம் ஆச்சு தியா. போலாம் வா" என்றவன் எழுந்து அவளுக்கு கை நீட்ட, அதே அதிர்ச்சியுடன் அவள் அமர்ந்திருந்தாள். அவனே அவள் கை பிடித்து எழுப்பி தடுமாறியவளை காரணம் புரிந்து கைப்பிடித்து அழைத்து வந்தான் காருக்கு.
தொடரும்..