• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காதலே 7

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 7

"நம்ம ஏன் இப்போ காலேஜ் பைனல் இயர் பண்றவங்களை செலக்ட் பண்ண கூடாது?" என உதய் கேட்க,

"அதுல நமக்கு என்னடா பெனஃபிட்? நமக்கு உடனே வேலை பார்க்குறவங்க தேவை. நீ சொல்ற படி செஞ்சா அவங்க காலேஜ் முடிச்சிட்டு ஜாயிண்ட் பண்ண 6 மாசம் ஆகுமே?"

"உண்மை தான். ஆனால் நாம இப்போ தான் ஸ்டார்ட் பண்றோம் சோ நம்மகிட்ட பெருசா எந்த ப்ராஜெக்ட்டும் கைவசம் இல்லை. அப்பா மூலமா சின்ன சின்ன ப்ராஜெக்ட் தான் வரும். நாம ஸ்டாண்டர்ட்டா வர கண்டிப்பா 6 மாசம் ஆகும். இப்போ பைனல் இயர் படிக்கிறவங்க பார்ட் டைம் ஜாப் மாதிரி ஈவினிங் வந்தா போதும். அண்ட் நமக்கும் சேலரி பணம் கம்மியா கொடுத்தா போதும். 6 மாசத்துக்கு அப்புறம் அவங்களே தொடர்ந்து வேலைக்கு வந்தா நாமளும் சம்பளம் உயர்த்தி குடுத்திடலாம்" என அவன் கூற வந்ததை கூறி முடிக்க, சத்யா அதை அமைதியாக யோசித்தான்.

"சூப்பர் மச்சி. நான் இதெல்லாம் நினைக்கவே இல்லை. நீ கிரேட் டா. அப்படியே பண்ணிடலாம். அப்புறம் ப்ரோபஸ்ஸனல் ஒர்க்கர் இந்த ப்ரொபைல்ல இருந்து 2 பேர் செலக்ட் பண்ணிடலாம் சரியா?" என்று சத்யா கேட்க திருப்தியுடன் சம்மதம் தெரிவித்தான் உதய்.

"அப்போ நம்ம நித்தியும் வரலாமே! வீட்ல அவளுக்கு போரடிக்கும் தானே? கூடவே அவளும் காலேஜ் பைனல் இயர் தானே படிக்கிறா?" என்று உதய் கூறியதும்,

"வாடா என் நல்லவனே! மாட்டினியா? நான் அப்பவே நினச்சேன் டா. இதுக்காக தான் நீ இவ்வளவு நல்லவனா ஆபீஸ் பத்தி யோசிச்சியா? எப்படியோ எனக்கு இதுல ரொம்ப ரொம்ப சந்தோசம் மச்சி" என சத்யா அவனை அணைத்துக் கொண்டான்.

"டேய் என்ன டா பண்ற? என்ன சொல்ற?" ஒன்றும் புரியாதது போல உதய் கேட்டாலும், தெரியும் என்று அவன் புன்னகை காட்டி கொடுத்தது.

"மச்சி! என்கிட்டயே நடிக்கிறியா? முதல்ல நீ எனக்கு பிரண்ட் அப்புறம் தான் நம்ம உறவு கூட. ஏன்டா மதுவை நான் விரும்புறதை வீட்டுலையா பர்ஸ்ட் சொன்னேன்? நித்திகிட்ட கூட சொல்லல…” என்றவனுக்கு முதன் முதலில் மது மீதான தன் காதலை யாரிடம் கூறினோம் என்பது நியாபகம் வர அமைதியானவன் பின் தலையை உலுக்கிக் கொண்டான்.

“உன்கிட்ட தானே என் லவ் பத்தி சொன்னேன்! ஆனால் நீயும் நித்தியும் என்கிட்டயே மறைக்கிறீங்க பார்த்திங்களா?" என்றான் சத்யா

“டேய் என்ன அவளையும் சேர்த்து சொல்ற?” உதய் புரியாமல் கேட்க,

"ஆமா ரெண்டு பேரும் தானே லவ் பண்றீங்க?"

"அடேய் இதே மாதிரி அவகிட்ட கேட்டு, சேருறதுக்கு முன்னாடியே எங்களை பிரிச்சிடாதே டா! அவளுக்கு எதுவும் தெரியாது. நான் தான் அவளை விரும்புறேன்."

"ஸ்ஸ்ஸ்… ஓஹ்! சாரி சாரி. அவளும் சரிக்குசரி உங்கிட்ட பேசுறதால நான் தான் தப்பா அண்டர்ஸ்டாண்ட் பண்ணிட்டேன் டா" என சத்யா கூற,

"நல்லவேளை என்கிட்ட கேட்ட! அவகிட்ட கேட்டிருந்த.. அவ்ளோ தான் நான்!" என்று சிரித்தவாறு கூறினான் உதய்.

"சாரி டா. உன்கிட்ட மறைக்கணும்னு நினைக்கலை ஆனால் பாட்டி.... ம்ச் ரொம்ப சாரி டா. நீ என்ன நினைப்பியோனு தான். நானும் எவ்வளவோ முயற்சி பன்னினேன் நித்தியை நினைக்க கூடாதுனு பட் அவ தான் எனக்குன்னு புரிஞ்ச அப்புறம் எப்படியும் குடும்பத்தை சமாளிக்கலாம்னு ஒரு தைரியம். உன்கிட்ட சொல்றதுக்கு எது என்னை தடுத்ததுனு தெரியலை. ஒருவேளை பாட்டி மாதிரி நீயும் என்னை நினைச்சிட்டா என்னால தாங்க முடியாது டா" என உண்மையை ஒத்து கொண்டவன் பின் உணர்ச்சிகரமாக முடித்தான் உதய்.

"ஹேய் ச்சி. என்னை பார்த்தா உனக்கு எப்படி டா தெரியுது? உன்னோட இந்த முடிவுல எனக்கு எவ்வளவு சந்தோசம் தெரியுமா? உன்னை விட நித்திக்கு பெஸ்ட்டா யாரு டா இருப்பாங்க? பாட்டி விட கல்யாணம் செய்ய போறவங்க முடிவு தான் முக்கியம். பீ கூல் மச்சி" என சத்யாவும் உணர்ச்சி வசப்பட, ஒருவரை ஒருவர் அணைத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். பின் நித்தி கூடவே மதுவையும் சேர்த்துக் கொள்ளலாம் என சத்யா கூற, "டபுள் ஓகே" என்றான் உதய்.

பின் இன்டெர்வியூ முடித்து மெயில் அனுப்புவதாக சொல்லிவிட்டு அன்றைய வேலைகளை பார்த்தனர். சத்யா நித்திக்கு கால் செய்தவன் அவள் எடுக்காததும் அவள் மொபைலிற்கு ஒரு மெசேஜை தட்டி விட்டு வேலையை தொடர்ந்தான்.

'யாருடா அது கிளாஸ் நேரத்துல கூப்பிடறது' என நினைத்து நித்தி வைப்ரேட்டில் இருந்த மொபைலில் சத்யா பெயரை பார்த்ததும், "மாமாக்கு அறிவே இல்லை. இப்ப என்ன பண்றது" என யோசிக்க,

அருகில் இருந்த மது, "கிளாஸ் கவனி டி. சோனி பார்க்குது" என மேடமை கூற, அவளும் சோனி சென்றதும் பேசிக் கொள்ளலாம் என வைத்துவிட்டாள்.

இன்னைக்கு பார்த்து சோனி இவ்வளவு பிளேடு போடுதே. மாமா வேற சும்மா போன் பண்ணாது என்ன பண்ணலாம் என யோசித்தவள் மொபைலை மதுவிடம் கொடுத்தாள். அவள் சுவர் ஓரம் இருப்பதால் மாட்டிக் கொள்ள வாய்ப்பில்லை என்ற தைரியத்தில்.

"மாமா மெசேஜ் அனுப்பியிருகாங்க டி. கால் பண்ண முடியாது. என்னனு மெசேஜ் பண்ணு ".

"என் மேல என்னடி கோபம் உனக்கு? சோனிக்கு மட்டும் தெரிஞ்சுது நான் காலி" என்று கூறினாலும் அவள் சொன்னதை செய்தாள் மது.

"கிளாஸ்ல இருக்கேன். என்ன விஷயம் மாமானு அனுப்பு" என நித்தி கூற,

அவள் கூறியதை கேட்காமல், வெறும் "என்ன" என்று மது அனுப்ப அதை பார்த்த சத்யா அது மது என அறியாமல், "காலேஜ் முடிஞ்சதும் ஆபிஸ் வா. கொஞ்சம் பேசணும்" என்று அனுப்பியவன், அடுத்து "அந்த லூசையும் கூட்டிட்டு வா" என அனுப்பினான்.

அவன் அனுப்பியதை நித்தியிடம் மது கூறிக்கொண்டிருக்க அடுத்து மெசேஜ் வரும் உணர்வில் மீண்டும் மொபைலை பார்த்தவள் முகம் கோபத்தில் ஜொலித்தது. 'உடம்பெல்லாம் திமிரு' என நினைத்தவள்,

"ஏண்டி உனக்கும் உன் மாமனுக்கும் என்னை பார்த்தா லூசு மாதிரி தெரியுதா? சொல்லி வை அப்புறம் லூசுனு நிரூபிக்கிற மாதிரி எதாவது செய்துடுவேன்" எனக் கூறி அதற்கு பதில் அனுப்பாமல் அவள் மேல் மொபைலை வீச, அவன் என்ன அனுப்பியிருப்பான் என யூகித்த நித்தி சிரித்துக் கொண்டே திரும்பினாள்.

பதில் வராவிட்டாலும் அவள் வந்துவிடுவாள் என்று சத்யா வேலையில் மூழ்கினான். 5 மணி அளவில் நித்தி மதுவுடன் போராட்டம் நடத்தி அவளையும் அழைத்து வர, ஒரு அஞ்சு நிமிஷம் இருங்க வந்துடுறேன் என்று சொல்லிவிட்டு சத்யா மீதி வேலையை முடித்துக் கொண்டு உதயுடன் வந்தான்.

"என்ன மாமா அப்படி என்ன முக்கியான விஷயம் பேசணும்னு கிளாஸ் டைம் மெசேஜ் அனுப்புனீங்க?" என்று நித்தி கேட்க,

"ம்ம் நீ தான் எப்படியும் கிளாஸ் கவனிக்க மாட்டியே அதான் அந்த நேரத்தில் அனுப்பி இருப்பான்" என உதய் கிண்டல் செய்ய,

"டேய் உன்கிட்ட கேட்டேனா?" என்ற நித்தியின் கேள்வியில் சத்யா விழுந்து விழுந்து சிரித்தான்.

"என்ன டா உன் அத்தை மக என்னை இன்சல்ட் பண்றா! நீ சிரிக்குற" என கேட்க, "நீ மட்டும் சும்மாவா இருந்த?" என்ற கேள்வியில் முகத்தை திருப்பிக் கொண்டான் உதய்.

வந்ததில் இருந்து மது சத்யாவை முறைத்துக் கொண்டு இருக்க, "என்ன இவ, நம்ம முகத்தை பார்க்கவே மாட்டா, இன்னைக்கு இப்படி முறைக்குறா? நித்தி என்ன உளறி வச்சானு தெரியலையே!" என நினைத்து கொண்டே, அங்கு இருந்த மினி பிரிட்ஜ்ஜில் இருந்து பொவண்டோவை இருவர்க்கும் எடுத்து கொடுக்க,

"அடப்பாவி மாமா! அவளுக்கு பொவண்டோ பிடிக்கும்னு பிரிட்ஜ்ஜில அதை மட்டும் தான் வச்சிருக்கியா?" என ரகசியமாய் கேட்டாள் நித்தி.

"அதை விடு! என் ஆளுகிட்ட என்ன சொன்ன? கடுகு போட்டு தாளிக்கிற அளவுக்கு முகம் சூடா இருக்கு?".

"ஹாஹா நான் என்ன சொன்னேன்? நீ தான் சொன்ன!" என்றதும்,

"நானா?" என புரியாமல் கேட்க, மெசேஜ் அனுப்பியதை கூறினாள்.

"அச்சச்சோ நானே சொதப்பிட்டேனா?" என வெளிப்படையாக தலையில் அடிக்க, வந்ததில் இருந்து மது சத்யாவை முறைப்பதையும், நித்தி சத்யா காதை கடிப்பதையும் பார்த்த உதய் 'இன்னிக்கு ஏதோ சம்பவம் நடந்திருக்கும் போலயே' என நினைத்துக் கொண்டான்.

மதுவை பார்த்து அசட்டு சிரிப்பு ஒன்றை சத்யா கொடுக்க, முகத்தை திருப்பிக் கொண்டாள் அவள். "போச்சு ஏற்கனவே நல்லா பேசுவா இனி அதுவும் போச்சா" என நினைத்துக் கொண்டே சத்யா அமர்ந்திருக்க, உதய் தான் அவர்களை கூப்பிட்ட நோக்கத்தை கூறினான்.

"எல்லாம் சரி மாமா.. ஆனால் இந்த ஜந்து கூட ஒர்க் பண்ணனுமானு தான் யோசிக்கிறேன்" என நித்தி உதயை சத்யாவிடம் கூற, "ஹேய் மங்கி, நீ ஒன்னும் வரவேணாம். நான் மதுவை தான் ஹெல்ப்க்கு கூப்பிடலாம்னு இவன்கிட்ட சொன்னேன்" என உதய் கூறினான்.

"டேய்! நீ யாரு டா என்னை வேண்டாம்னு சொல்ல? நான் வருவேன் அதுவும் நாளைக்கே வருவேன். போ டா" என்றதும், இவளை சமாளிக்க உதயால் மட்டுமே முடியும் என நினைத்துக் கொண்டான் சத்யா.

"உன்னை எப்படி அம்மு நான் வேண்டாம்னு சொல்லுவேன்" என நினைத்துக் கொண்டே சிரித்துவிட்டு உதய் அமர, மது யோசனையுடன் இருந்தாள்.

அனைவரும் அவளை பார்ப்பது உணர்ந்து, "நான் வீட்டில கேட்டு சொல்லவா?" என கேட்டதும்,

நித்தி "அவ வருவா மாமா" என்றவள், "உன் சித்திக்காக தானே யோசிக்கிற? அது தான் பணம்னா ஆ’னு பார்க்குமே! சம்பளம் வரும்னு சொல்லு" என்றதும், மதுவிற்கும் அது சரி எனப்பட்டது.

"மாமா இது என்ன தான் உங்கள் ஆபீஸ்னாலும் சம்பளம் வாங்காம எங்களால வேலை பார்க்க முடியாது" என்று கெத்தாக நித்தி கூற,

"அதானே உன் கஞ்ச புத்தி எங்க போகும்! இந்த சம்பளத்தை வச்சி இனி வீட்டில ஒரு பைசா வாங்க கூடாதுனு அப்பவே கணக்கு போட்ருப்பியே?" என உதய் கூற,

"பின்னே நீயா எனக்கு செலவு செய்வ?" என்றாள் நித்தி.

'நீ சொன்னா நான் ரெடி தான்' என நினைத்தவன் அதை சொல்லாமல் சிரிக்க, இவர்களை வேடிக்கை பார்த்த மற்ற இருவரும் தலையில் அடித்துக் கொண்டனர்.

மதுவிற்கும் ஆசைதான் இங்கே வேலை பார்க்க. வீட்டிற்கு போனால் எப்படியும் சாந்தி வாயில் அரைபட்டுக் கொண்டே தான் இருக்க வேண்டும். இங்கே இவர்களோடு இருந்தால் கண்டிப்பாக கவலை இல்லாமல் சிறிது நேரம் இருக்கலாம் என நினைத்துக் கொண்டாள்.

பின் நேரமாவதை உணர்ந்து உதய், "கிளம்புறேன் டா அம்மா கால் பண்ணிட்டாங்க" என்றவாறே எழ,

"டேய் நான் இன்னைக்கு கார்ல வர்ல. அப்புறம் அந்த ப்ராஜெக்ட் விஷயமா நான் கொஞ்சம் வெளியில் போகணும்னு சொன்னேனே?" என சத்யா உதய்க்கு கண்ணை காட்ட, ஏதோ பிளான் பண்றான் என புரிந்து, "ஹ்ம் ஆமாம் டா. நீயே போய்ட்டு வா" என்று கூறினான் உதய்.

தொடரும்..
 
Top