• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காதல் செய்யடா காந்தர்வா - 8

ஹரிணி அரவிந்தன்

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 5, 2023
Messages
25
"வாவ்…..!!!",

தன் மன பாரங்கள் எல்லாம் மறந்து உற்சாகமாக கூவினாள் ஆருத்ரா. அவள் இப்படி தான் சொல்வாள் என்பது தெரிந்ததுப் போல தேஜஸ் புன்னகை செய்தான். அங்கே வானத்தை முட்டிக் கொண்டு இருப்பதுப் போல் மேற்கூரையே தெரியாது பைன் மரங்களாலும் மூங்கில் மரங்களாலும் அந்த இடம் இருக்க, அதில் நடுநடுவே அழகாக பச்சை நிற இலைகளைக் கொண்டு கூரை வேய்ந்து இருக்க, மண்ணால் ஆன சுவர்கள் உடைய குடிசைகள் இருந்தன. ஆங்காங்கே ஒரு சில மனிதர்கள் எதோ செய்துக் கொண்டு இருந்தார்கள், யாருமே அவர்களைக் கண்டுக் கொண்டதாகவே தெரியவில்லை.

"ஆருத்ரா…! இவங்க இந்த சிக்மகளூர் வனப்பகுதியில் வாழும் பழங்குடியினர். இவங்க எல்லாரும் ரொம்ப ரொம்ப அன்பானவங்க, நான் என் மனசு பாரமாக இருக்கும் நேரங்களில் இங்கே தான் வருவேன்..",

அவன் சொல்ல சொல்ல அவள் அவனைப் புரியாதுப் பார்த்தாள்.

"இங்கே இவங்க என்ன தான் ஸ்டாரங்கா இருந்தாலும் உடல்நிலைனு வரும் போது இவங்க சோர்ந்துப் போயிடுறாங்க, இங்கே இவங்களுக்கு உடம்புக்கு ஏதாவது வந்தால் அதைப் பார்த்துக் கொள்ள இங்கே மருத்துவர்கள் யாருமே இல்லை, அதனாலே இவங்க உடம்பு முடியாமல் சீக்கிரம் செத்துப் போயிடுறாங்க…என் வேண்டுகோள் என்னனா நீங்க இங்கே மருத்துவராக இருக்கணும்…இங்கே கூட தங்கி இருக்கலாம், இல்லனா என் பங்களாவில் நீங்க இருக்கலாம்…அங்கே உங்களுக்கு எல்லா வசதிகளும் நான் செய்து தருகிறேன்…",

அவன் சொல்லி முடிக்க அவள் ஸ்தம்பித்து நின்றுக் கொண்டு இருந்தாள்.

"என்ன ஆருத்ரா? என்ன ஆச்சு?",

அவன் அவளின் திகைத்த முகத்தைப் பார்த்துக் கேட்டான்.

"எனக்கு மருத்துவம் பற்றி என்னத் தெரியும்?",

"ஓ அதுக்கு தான் இப்படி இருக்கிறீங்களா? நீங்க தான் சித்த மருத்துவம் படித்து இருக்கீங்கல?",

"அது பாதியில் தான் நிறுத்தி விட்டேனே…?",

"இருந்தால் என்ன? உங்களுக்கு அடிப்படை தெரியும் இல்லை அல்லவா? அதுப் போக நான் இருக்கேன்…அப்புறம் என்ன?",

அவன் சிரிக்க, அவள் அவனை வியப்பாகப் பார்த்தாள்.

"உங்களுக்கும் சித்த மருத்துவம் தெரியுமா?",

"ஆமாம்…தெரியும்…",

"அப்புறம் என்ன? நீங்களே இவங்களை பார்த்துக் கொள்ளலாமே…?",

"நான் நிரந்தரமாக இங்கே இருக்கலயே? நீங்க தானே இங்கே இருக்கப் போறீங்க? அதான், ஆனா நீங்க பயப்புட வேண்டாம், நான் உங்களுக்கு துணையா இருப்பேன்..எப்போதும்..",

இறுதியாக அவன் அந்த வார்த்தையை சொன்னப் போது அவன் மனம் உணர்வுக் குவியல்களில் தளும்பியது. அதை உணர்ந்தது போல் அந்த பைன் மரங்கள் இடையே இதமான காற்று கிளம்பியது.

"அப்பா….என்ன சுகமா இருக்கு!!",

அவள் கண் மூடி அந்த தென்றல் காற்றின் சுகத்தை அனுபவித்தாள். தன் உடலில் வெளிப்பட்ட அந்த மாற்றத்தால் உருவான அந்த இயற்கை குளுமையை அவள் அணிவிப்பதை பார்த்துக் கொண்டு இருந்தவன் முகத்தில் அன்பு தோன்றி இருந்தது.

"இப்போ சொல்லுங்க ஆருத்ரா! உங்க தற்கொலை எண்ணத்தை தூக்கி எறிந்து விட்டு உங்கள் உயிரை சந்தோஷமாக வைத்து இருக்கும் இதுப் போன்ற விஷயங்களில் ஏன் உங்களை நீங்க ஈடுபடுத்திக் கொள்ள கூடாது? நீங்க விரும்பியது போல் இதுவும் புதிய உலகம் தான், நீங்க இங்கே புதிய வாழ்வை தான் வாழப் போறீங்க…ஆனால் அர்த்தமுள்ள மற்றவர்களுக்கு பயனுள்ளதாக மாற்றிக் கொள்ளப் போறீங்க…இங்கே இருப்பீங்களா?",

அவன் மந்தஹாச புன்னகையுடன் கேட்டான். அவள் தலையாட்டி ஆமோதித்தாள். அதில் அவன் மனம் நிறைந்து விட்டது.



















"இவர் தான் இந்த கூட்டத்தின் தலைவர் தும்பு…",

அவனால் அறிமுகப்படுத்தப்பட்ட அந்த வயதான மனிதர் ஆருத்ராவை பார்த்து நட்பாக சிரித்தார்.

"ஆருத்ரா….உங்களுக்கு எது வேண்டுமானாலும் இவரைக் கேட்டுக் கொள்ளலாம்…",

"அப்போ நீங்க தேஜஸ்…",

இந்தமுறை அவளின் மூன்றாம் நபர் அழைப்பான மிஸ்டர் காணாமல் போய் இருந்தது.

"நானும் தான்…இந்த காட்டில் இருக்கும் வரை நீங்க என் பொறுப்பு போதுமா?",

என்று அவன் சிரித்தான். அவனின் மனம் நிறைந்த அந்த சிரிப்பில் அங்கே நறுமணம் கொண்ட மலர் வாசனை வீசியது.

"ஹ்ம்ம்….!! தேஜஸ் நான் சொன்னேன்ல? எவ்ளோ ஸ்மெல்…மனசை மயக்கிற மாதிரி இருக்கு, இப்படி ஒரு வாசனை தரக் கூடிய பூக்கள் கூட உலகத்தில் இருக்கா என்ன? எனக்கு இந்த பூவைப் பார்க்கணும்…",

அவள் கேட்க, அவளையே ஒரு நொடி பார்த்தவன் தலையாட்டினான்.

அன்று இரவு அவள் அவனின் அந்த பங்களாவில் அவள் தங்கினாள். அவளுக்கு தங்கும் அறைக் கொடுத்தான். கிட்டத்தட்ட ஸ்டார் ஹோட்டலை மிஞ்சிய சொகுசு அறை அது.

"வாவ்…இதுப் போன்ற அறை இந்த காட்டிலா!! இது மாதிரி நீங்க தானே கட்டச் சொன்னீங்க! அப்பா!! உங்களுக்கு என்ன ரசனை!!",

அவள் விழி விரிய பார்த்து வியந்தப்படி சொல்ல, அவன் அவளறியாது அவளை ரசித்துக் கொண்டே சொன்னான்.

"ஏன் நீங்க நிறைய ஸ்டார் ஹோட்டலில் ஷீட்டிங்க்கு தங்கி இருந்திருப்பீங்களே…?",

"இருக்கேன் தான், ஆனால் அப்போதுலாம் கிடைக்காத ஒரு இனம் புரியாத அமைதி இங்கே கிடைக்கிறது…, இந்த அமைதியும் நிறைவும் எனக்கு வாழ்நாள் முழுக்க நினைவில் இருந்துக் கொண்டே இருக்கும் தேஜஸ்…"

அவளின் அந்தப் பதிலை ரசித்தான்.

"இதற்காக தானே நான் உனக்காக இங்கே காத்திருந்தேன் பெண்ணே… என்னோடு இருக்கும் இந்த நினைவுகள் உன் மனதின் ஓரத்தில் உன் வாழ்நாள் முழுக்க இருந்துக் கொண்டே இருக்க வேண்டும்…அதுதான் என் ஐந்து வருட காத்திருப்பு காதலுக்கு கிடைக்கும் வரம்…",

அவன் தனக்குள் சொல்லிக் கொண்டான்.

"நீங்க தூங்குங்க ஆருத்ரா….நான் காலை வருகிறேன்…",

என்றவன் நகர முற்பட, அவளோ விழித்தாள்.

"தேஜஸ்…எனக்கு இங்கே தனியா தூங்க பயமா இருக்கு…",

"இப்பவே தும்பு கிட்டச் சொல்லி ஒரு பெண்ணை உங்க கூடப் படுத்துக் கொள்ள துணைக்கு அனுப்புறன்…நீங்க தூங்குங்க…"

என்றவன் அந்த அறையை விட்டு வெளியே வந்தவன் சிரித்துக் கொண்டான். அவளுக்கே தெரியாமல் மறைந்து இருந்து அவளை ரசித்தான்.

"இவள் தான் எத்தனை அழகு…!! மின்னல் பாவை…",

அவன் மனம் அவளை ரசித்தது. அவள் சுற்றும் முற்றும் பார்க்க தொடங்க, அதை உணர்ந்து உள்ளே சென்றான்.

"உள்ளே வரலாமா ஆருத்ரா?",

என்றவன் குரலில் அவள் முகத்தில் மகிழ்ச்சி உண்டாவதைப் பார்த்தவன் கண்கள் மகிழ்ச்சிக்குப் போக, அங்கே பூக்கள் நறுமணம் வீசியது.

"ஹம்மஹா….!!! கண்டுப்பிடித்து விட்டேன், உங்க மேல் தான் ஸ்மெல் வருது, என்ன சென்ட் யூஸ் பண்ணுறீங்க தேஜஸ்..?",

அவள் கேட்க, அவன் பதில் சொல்லாது சிரித்தான்.

"உங்களுக்கு துணையாக படுத்துக் கொள்ள பவழம் என்றப் பெண் இன்னும் கொஞ்ச நேரத்தில் வருவா…நீங்க நல்லா தூங்குங்க…நான் இங்கே தான் இருப்பேன், தென் காலையில் பார்க்கலாம்…குட் நைட்…",

என்றப்படி அவன் சென்று விட, அவன் சென்ற சில நொடிகளில் அந்தப் பெண் வந்து இருந்தாள். சிவந்த மேனியுடன் சிக்கென்று இருந்த அந்தப் பெண்
சிறு வயது தான் என்பதால் ஓயாது பேசிக் கொண்டே இருந்தாள்.

"ஓ…அதான் இந்த காடு இப்படி இருக்கா பவழம்?",

"உங்க காட்டில் அதெல்லாம் இருக்கா?",

அவளிடம் அந்த காடு, அவர்களைப் பற்றி ஆர்வமாக கேள்விக் கேட்டு கொண்டு இருந்த ஆருத்ரா ஒருக் கட்டத்தில் தன்னையும் அறியாமல் தூங்கி விட, தூங்காமல் அவள் அருகே அமர்ந்து அவள் தூங்கும் அழகை ரசித்துக் கொண்டு இருந்தாள் பவழம். அவளின் சேலைத் தோற்றம் கோட்டு சூட்டுக்கு மாறியது. பின் கோட் சூட்டும் மாறி ஒளி வீசும் காந்தர்வன் தோற்றத்திற்கு மாறியது. பவழம் போல் உருவம் மாறி வந்து அவளையும் அவள் தூங்கும் அழகையும் ரசித்துக் கொண்டு அமர்ந்து இருந்தான் தேஜஸ். அவன் காந்தர்வன்..இரவு, பகல், பசி, தூக்கம் போன்றவற்றைக் கடந்தவர்கள். மனிதர்களிடம் இருந்து முற்றிலும் வேறுப்பட்டவர்கள்.

உறங்கிக் கொண்டிருந்தவளின் முகத்தில் இருந்த நிம்மதியில் அவன் மனம் நிறைந்ததில் அவளின் தூக்கம் கலையா வண்ணம் அவன் அவளின் தலைக் கோதினான். அவனின் வழக்கமான அந்த தோற்றத்தால் அந்த அறை முழுவதும் நிரம்பி இருந்த வெளிச்சத்தில் அவள் மிக மிக அழகாக இருப்பதாக அவனுக்குத் தோன்றியது. அதை உணர்ந்து இமைக்காமல் அவளையே ரசித்தான் அவன்.

"தேஜஸ்….!!",

அவளின் அழைப்பை தன் மனதில் மீண்டும் மீண்டும் வரவழைத்து ரசித்துப் பார்த்துக் கொண்டே இருந்தான். அந்த இரவு நிலவு இப்போது உச்சியை அடைந்து இருந்தது. இரவுக்கான சில் வண்டுகளுக்கான ரீங்காரம் அங்கே அதிகமாக இருந்ததில் அதனால் அவளின் தூக்கம் கெட்டு விடுமோ என்று எண்ணினான்.

உடனே அந்த அறையின் வாயில் அருகே அமர்ந்தான். அவன் அவ்வாறு அமர்ந்த வேகத்திற்கு அவன் மடியில் ஒரு வீணை தோன்றி இருந்தது. அதை கண் மூடி ரசித்து இசைக்க ஆரம்பித்தான். பூமியில் உள்ள இறைவன் படைத்த உயிர்களை மட்டும் உறக்கத்தில் ஆழ்த்தும் இசை அது. காந்தர்வர்கள் இசையில் சிறந்து விளங்குபவர்கள். அவர்கள் எப்போதும் தங்கள் இசையால் இறைவனை மகிழ்விப்பவர்கள். அவன் உண்டாக்கிய இசையருவி அங்கே பாயத் தொடங்க, அவ்வளவு தான் கொஞ்சம் கொஞ்சமாக அங்கே அமைதி பரவியது. அந்த சில் வண்டுகள், சுவர் கோழிகளின் சப்தம் முற்றிலும் நின்றுப் போயிருந்தன.

அதை உணர்ந்தவன் இசைப்பதை நிறுத்தி விட்டு எழுந்து அவள் அருகே அமர்ந்து அவள் நெற்றியில் மென்மையாக முத்தம் இட்டான்.

- தொடரும்

Screenshot_20230105-192132_Gallery.jpg
 
Top