• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காதல் தீ நீயே 06

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Joined
Jul 30, 2021
Messages
566
அத்தியாயம் 6


மிக பிரமாண்டமான நந்தவனத்தின் நடுவே இருந்த மல்லிகை பந்தலின் கிழே தன் மனம் கவர்ந்த காதல் மனைவி… எப்பொழுதும் இல்லாத ஜொலிப்புடன் தன் மூச்சு படும் தூரத்தில் நிற்க அவன் வார்த்தைகள் இன்றி கண்களில் கவி பாடிக்கொண்டு இருந்தான்..

அவனின் அத்தகைய பார்வையின் பிரதிபலிப்பாக தன் காதல் கணவனை அவன் வாங்கி குடுத்த பரிசான அ ஆ நகை கடையின் தங்க வளையல்களை ஆசையுடன் ஒரு பார்வை பார்த்து நிமிர்ந்து அவனை அவன் எதிர்பார்த்த அளவை விட பல மடங்கு காதலுடன் ஒரு பார்வை வீசினாள்…

அவன் பின்னால் மறைத்து வைத்த சிறு நகை பெட்டியை திறந்து அவள் கண்களுக்கு விருந்து ஆக்கினான்.. (ஆரு வின் லைட் வெயிட் நகைகள் தான் அது )அவள் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்ததில் அவன் விரும்பியே தொலைந்து போனான்…

இவ்வாறு அந்த விளம்பர படம் நிறைவு பெற்றது… ஒன்னரை நிமிடம் மட்டுமே ஓட கூடிய விளம்பரத்தை அனைவருக்கும் முன்னோட்ட படம் போட்டு காண்பித்து விட்டு ஆவலாக கேசவனின் முகத்தை பார்த்து இருந்தான் மித்ரன்…

ஆரு இதற்க்கு வருவதாக கடைசி நிமிடம் வரை கூறியவள் வேறு வேலை இருப்பதாக தந்தைக்கு அழைத்து கூறி விட்டாள்..

அதனால் பாவம் மித்ரன் அவனின் ஆவலான பார்வையை கேசவனின் மீது வீச வேண்டியது ஆகிற்று…

"மித்ரன் உன்னோட உழைப்பு திறமை மேல எனக்கு எப்பவும் நம்பிக்கை உண்டு… அதை இன்னைக்கும் நிரூபித்து இருக்க வாழ்த்துக்கள்…."

"ரொம்ப நன்றி சார்…"

"நான் தான் தம்பி நன்றி சொல்லணும்… என்னோட கடையோட பிரத்தியேக டிசைன் எல்லாத்தையும் வித விதமா போட்டோ புடிச்சி குடுத்து இருக்கீங்க… எங்க வீட்டு அம்மா பார்த்தா ரொம்ப சந்தோச படுவாங்க…"

"நானும் ஆன்ட்டிய விசாரிச்சேன்னு சொல்லுங்க சார்…"

"நீயே வீட்டுக்கு வந்து விசாரிச்சிக்கோ மித்ரா… அது என்ன அவங்க ஆன்டி நா சார் ஹா? "

"ஹாஹாஹா சீக்கிரம் வரேன் அங்கிள்.… "என அவர் ஆசையையும் தன் ஆசையையும் சேர்த்து கூறினான்…

….
'இதற்கு விளம்பர பட முன்னோட்டதிற்கே சென்று இருக்கலாம் என தோன்றும் அளவுக்கு அவளின் எண்ணங்கள் அனைத்தும் அங்கு எப்படி விளம்பரம் வந்து இருக்கும்,? எல்லோருக்கும் பிடித்து இருக்குமா? மித்ரனின் திறமை மீது சந்தேகம் கொண்டு அல்ல இத்தகைய கேள்விகள்…

இவளின் நகைகளை அப்படி என்ன செய்து காட்டி இருப்பான் என்பது தான்… அன்று வாங்கி சென்றவன் இன்னும் திருப்பி தரவில்லை…

இதை கேட்டு ஒரு சண்டை இட வேண்டும் அவனிடம் என தானாகவே ஒரு எண்ணம் தோன்ற, தோன்றிய மறுகனம் அதை புதைத்து இருந்தாள்.. அவளின் நீண்ட சில தூங்கா இரவுகளின் விளைவு இனி எதற்கும் அவனை தன்னிடம் நெருங்க விட கூடாது… அப்படியே சந்தித்து கொள்ளும் தருணத்தில் மிக இயல்பாய் இருக்கவும் முடிவு செய்து கொண்டாள்…'

முடிவு இவளை சார்ந்தது என்றால் பரவாயில்லை… இதில் மித்ரனும் அல்லவா இருக்கிறான்… இவளை அப்படியே விட்டு விடுவானா என்ன?

எண்ணங்களின் கூட்டில் கல் எரிந்தாற்போல் பல எண்ணக் கலவைகளுடன் அவளின் அலுவலக அறையில் அமர்ந்து இருந்தாள் ஆரு…

கேசவன் போன் செய்து அவர் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்… மேலும் அவளின் மெயில்க்கு விளம்பரத்தை அனுப்பி இருப்பதாகவும் கூறி வைத்தார்…

உடனே ஆவலாக திறந்து பார்த்தவளுக்கு கண்கள் அப்படியே நின்று விட்டது பிரியாவின் கண்களில்…

ஆம் பிரியாவை வைத்து மீண்டும் அதே ஹீரோவை அழைத்து ஒரே டேக்கில் முடித்து இருந்தான் மித்ரன்…

'பிரியா அவளின் முதல் படத்திற்கு முன்பே மக்கள் மனதை கொள்ளை கொள்வாள்' என மித்ரன் கனித்தது போலவே ஆரூவையே கண்கள் சிமிட்டாமல் பார்க்க வைத்து விட்டாளே…

மீண்டும் மீண்டும் அதை ஓட விட்டு பார்த்தவளுக்கு மனதுக்கு மிகவும் நெருக்கம் ஆகி விட்டது விளம்பர படம்…

மேலும் அவளின் மனதை குளிர்விக்க பிரியாவின் பல வித போஸ்களில் இவர்களின் யூனிக் டிசைன்கள் அணிந்து எடுக்கப்பட்ட போட்டாக்கள் வந்தது…

கடைசியாக வந்த மெயிலில் 'என்னை பார்த்து பயந்து வராமல் இருப்பாய்' என நினைக்கவில்லை என இருந்தது…

இவளின் பிபி எகிற தொடங்கியது… ஆனால் இம்முறை எரியும் கட்டையில் தெளித்த நீராக அவளின் முடிவுகள் இருந்ததால் உடனே அதில் இருந்து மீண்டு 'என்ன வேணா நினச்சிக்கோ' என எண்ண முடிந்தது…

"லக்ஷ்மி லக்ஷ்மிமிமி"…. என அழைத்து கொண்டே கேசவன் தனது அறைக்குள் சென்றார்..

"என்னங்க காபி டீ ஏதாவது கொண்டு வரவா"? என படுக்கையில் அமர்ந்து ஏதோ வரைந்து கொண்டு இருந்தவர் எழுந்து செல்ல பார்க்க விளங்காத ஒரு பார்வை பார்த்தார் கேசவன்

"என்னங்க அப்டி பாக்குறீங்க.."?என குழப்பமாக கேட்டார் லஷ்மி

"இல்ல நா உன்னை இந்த மாதிரி ஏதாவது தேவை அப்டினா தான் கூப்பிடுறேனா?" என வேதனை கூடிய குரலில் கேட்டார்

"அப்டிலாம் இல்லியே… ஓ கடவுளே… பார்க்க சோர்வா தெரிஞ்சிங்க அதான் சூடா குடிச்சா நல்லா இருக்குமேன்னு கேட்டேன்…"

"இல்ல எதுவும் வேண்டாம்… நீ இப்டி உட்காரு கொஞ்சம் பேசலாம்…"

"ஹா ஹா பேசலாமே…"என சிரித்துக்கொண்டே உட்கார்ந்தார்...

"நீ வீட்ல சந்தோசமா தான இருக்க லஷ்மி?" லஷ்மியின் முகத்தை ஏறிட்டு கேட்டார் கேசவன்

"எனக்கென்ன? அறிவா, அழகா அன்பான பிள்ளைகள், எல்லாவுமா நீங்க… வேற என்ன? "என கேட்டு மீண்டும் அவரே தொடர்ந்தார்...

"நா வீட்ல தான இருக்கேன்னு அலட்சியமா இல்லாம எல்லோரும் என்கிட்ட எல்லாத்தையும் ஷேர் பண்றிங்க, சஜெசேன் கேக்குறீங்க…இன்னும் என்ன? "என்று மிகவும் சந்தோசமாக கேட்டார்… தாய்மையின் வரமும் கணவனின் காதலும் அவரை எப்பொழுதும் போல் சாட்சாத் மஹாலஷ்மியாக தான் காட்டும்…

"உன்னோட கனவ எனக்காக தான விட்டுட்ட? ஆனா நா மட்டும் உன்னோட உதவியால நினைச்சதை செஞ்சிட்டேனே… அதான் கொஞ்சம் உறுத்தலா இருக்கு.. "என லஷ்மியின் கைகளை பிடித்து பேசினார்

"என்ன ஆச்சு உங்களுக்கு இன்னைக்கு...29 வருஷத்துக்கு முன்னாடி நடந்ததுக்கு இப்போ அப்பாலஜி பண்ணிட்டு இருக்கீங்க?" லஷ்மி கேசவனின் மனதை மாற்ற கிண்டலாக பேசினார் மேலும்...

"நா விரும்பி தான் வீட்ல இருக்கேன்… யாரோட உதவியும் இல்லாம பிள்ளைகளை வளர்க்குறது சின்ன விஷயம் இல்லங்க..

அதுலயும் அவங்களோட பழக்க வழக்கம் முதல் கொண்டு எல்லாத்தையும் சரியான முறையில வளர்க்கறது பெரிய டாஸ்க்..

ஆரு கூட பரவாயில்ல இந்த அருண் மாதிரியான ஆண் பிள்ளைகளுக்கு தான் நிறைய சொல்லி தர வேண்டி இருந்தது…

சமூகத்துக்குள்ள ஒரு ஆண் நுழையும் போது அங்க இருக்கற பெண்களை சக உயிரா பாக்குற மனச உருவாகுறது ரொம்ப முக்கியம்ங்க…

அது மட்டும் இல்ல நா இப்பவும் என்னோட கனவ துரத்திகிட்டு தான் இருக்கேன்…சீக்கிரம் அதை என் வசமாவும் ஆக்கிடுவேன் …

சாதிக்க, சம்பாதிக்கலாம் வயசு முக்கியமா என்ன? செய்யணும்ற மனசு தான் முக்கியம்...

நா ஒரு ஆர்ட்டிஸ்ட்… நம்ம கடையில என்னோட டிசைன்குன்னு தனி மதிப்பு இருக்கு… இன்னும் என்ன? இது போதும் எனக்கு… நா நிம்மதியா இருக்கேன்… ஓகே வா?" என பேசி முடித்தவரை என்றும் போல் இன்றும் புதிதாக பார்த்தார் கேசவன்

"என்ன அப்படி பாக்குறீங்க?"

"30 வருஷதுக்கு முன்னாடி பாத்த மாதிரியே இருக்க இப்பவும் அதே அழகோட அறிவோட…"

"அடடா தாத்தாக்கு பேச்சை பாரு?"

"யேய்... என்ன அப்டி சொல்லிட்ட? ஒரு முடி கூட நரைக்கலயாக்கும் எனக்கு?" என மீசையை முறுக்கி தலை கோதினார்...

"பையனுக்கோ பொண்ணுக்கோ கல்யாணம் செஞ்சி இருந்தா நீங்க கட்டாயம் தாத்தா தான் "என கூறி கண்கள் சிமிட்டினார்…

"யேய் என்ன இப்டிலாம் பண்ற லஷ்மி? "குரல் மாறியது கேசவனுக்கு

"நீங்க பண்ணல அதான் நா பண்ணேன்…" மீண்டும் கிண்டல் பேசினார் லஷ்மி

"நீ இன்னைக்கு புல் பார்ம்ல இருக்க… நான் தான் வந்து மாட்டிகிட்டேன்…" அப்பாவியாக கேசவன்

"ஹாஹாஹா…. "என சிரித்து அவரை இன்னும் வெறுப்பேற்றும் சமயம்...

"என்ன நடக்குது இங்க? எங்களை விட்டுட்டு ரெண்டு பேரும் ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்கீங்க?"

"உங்களை கூட வச்சுக்கிட்டா ரொமான்ஸ் பண்ணுவாங்க…"

"ச்சு சும்மா இருங்க...ஹே வாடா அருண் எப்போ வந்த?" கணவனை அடக்கி அருணிடம் பேசினார் லஷ்மி

"நா வந்தது கூட தெரியல அப்டி ஒரு பேச்சு ரெண்டு பேருக்கும்…"

"எல்லாம் உங்க கல்யாணம் பத்தி தான்… யாருக்கு முதல்ல செய்லாம்னு பேசிட்டு இருந்தோம்…"

"ஹான்…"

"என்னங்க ரியாக்ஷன் இடம் மாறி வருது…"மெல்லிய குரலில் கணவனிடம் கேட்டார்..

"அதான… நீயே பேசு…" என அவரையே பேச வைத்தார்

"என்னடா அருண் லவ்வா?" அவனின் வெட்க முகத்தை பார்த்து கேட்டார் லஷ்மி

"அம்மா என்னம்மா இப்டி போட்டு தாக்குற? "

என உடனே ஒத்துக்கொண்ட மகனை கொஞ்சம் அதிர்ச்சியாக பார்த்தாலும் உடனே சுதாரித்து பேசினார் லஷ்மி

"பொண்ணு போட்டோ காட்டு டா பாக்கலாம்…" போன் கேலறியில் இருந்த தென்றலின் போட்டோவை காட்டினான்… அவர் வாங்கி கேசவனுக்கும் காட்டினார்..

"அழகா இருக்கா டா….ஆனா அம்மா கிட்ட சொல்லாம மறச்சிட்ட பாத்தியா?"

"சாரி மா… சொல்ல கூடாதுன்னு இல்ல… ஆரு இருக்கும் போது நா இப்டினு வந்து நிக்க யோசனையா இருந்துச்சு மா…"

"நீ என் மகன் டா… நீ ஒன்னு செஞ்சா சரியா தான் இருக்கும்…"

"இந்த நம்பிக்கையை எப்பவும் விடாதீங்க மா…"

இவ்வளவு நேரமாக அமைதியாக வேடிக்கை பார்த்த ஆருவை..

"அடடா என் செல்ல பொண்ணு என்ன இவ்ளோ அமைதியா நிக்கிறாங்க?"

"அம்மா மடில படுத்துக்கவா?"

"இதெல்லாம் கேட்கணுமா வா டா…"

"என்ன பிரச்சனை என் ஆருக்கு?"

"ஒன்னும் இல்லமா சும்மா தோணுச்சு…"

"அம்மா நீங்க என்னை கொஞ்சுனீங்க இல்ல அதான் பாப்பாக்கு பொறாமை…" அவளை வம்பிழுக்க அருண் சீண்டினான்..

"அப்டியா டா" என சிரித்து கொண்டே கேட்டார் லஷ்மி

"லைட்டா" என ஒத்துக்கொண்டு சிரித்தாள்

"ஹாஹாஹா வாலுங்களா.."

அம்மா இங்க பாருங்க என போட்டோஸ் சிலவற்றை பிரிண்ட் போட்டு கொண்டு வந்ததை காட்டினாள்…

"வாவ் ஆரு… யாரு எடுத்தது இதெல்லாம்…"

"உங்களுக்கு ஒன்னுமே தெரியாதாம்மா? நா நம்பிட்டேன்" என அவரை போலவே கண் சிமிட்டி சிரித்தாள்…

"ஹாஹாஹா...சும்மா நீ இவ்ளோ ஆர்வமா குடுத்தியே அதான் கேட்டேன்…"

"எல்லாம் இந்த அருண் பிரண்ட் தான் எடுத்தான்…"

"ஆரு" என மூன்று குரல்கள் வந்தது…

"மரியாதை இல்லாம நமக்கு சின்னவங்களை கூட பேச கூடாது ஆரும்மா…"என அவளின் தலை தடவி கூறினார் லஷ்மி

"சாரிம்மா இனி சொல்ல மாட்டேன்… எனக்கு வேலை இருக்கு நா ரூம்க்கு போறேன்…அண்ணா உன்னை அப்புறம் பேசிக்கறேன்…"

"என்ன டா ஆச்சு இவளுக்கு?"

"தெரியலம்மா நா பேசி பாக்குறேன்… அப்புறம் இப்போ எதுவும் என்னோட கல்யாணம் பத்தி பேச வேண்டாம்மா….

தென்றல் வீட்ல கொஞ்சம் பிரச்னை இருக்கு அது முடியாம இதை பேச முடியாதுன்னு சொல்லிட்டா மா…"

"சரி டா பாத்துக்கலாம்… இந்த ஆருவையும் என்னனு கவனி டா…"

"நா பாத்துக்கறேன் மா… நீங்க ரிலாக்ஸ் ஹா இருங்க…

என்ன பா அப்டி பாத்துட்டு இருக்கீங்க.."

"அவர் வந்ததுல இருந்து ஒன்லி ரியாக்ஷன் நோ ஆக்ஷன் ஹாஹாஹா"

"ஹாஹாஹா அம்மா லவ் யூ ம்மா…"

"ச்சி போடா…"

"ஐயோ எவ்ளோ அழகு என் அம்மா… ஹாஹாஹா அப்பா முறைக்குறாரு மீ எஸ்கேப்…."

"மியூசிக் டைரக்டர்ன்னு வெளிய கெத்து காட்டிகிட்டு உன்கிட்ட இப்டி கொஞ்சிட்டு திரியுறான்….எல்லாம் அம்மா செல்லமா போச்சுங்க…" கொஞ்சம் பொறாமை கொஞ்சம் பெருமையுடன் கூறினார் கேசவன்

"அடடா உங்க பொண்ணு தான் எப்பவும் அப்பா புராணம் பாடுவாளே போதாதா?"

"இன்னிக்கு அவளும் உன்னை தான தேடினா…

என்னமோ மனசுக்கு கலக்கமா இருக்கு லஷ்மி இவள நினைச்சா…"

"ஒன்னும் இருக்காதுங்க… கண்டிப்பா நம்ம உதவி தேவைப்பட்டா நம்ம கிட்ட வருவா பாத்துக்கலாம் விடுங்க…"

"ஹ்ம்ம்…"

'ஆட் (ad) பாத்து இருப்பாளா? என்ன நினச்சு இருப்பா? ஐயோ எக்ஸாம் ரிசல்ட்க்கு வெயிட் பண்ற ஸ்டுடென்ட் மாதிரி ஆகிட்டேனே…

இந்த அருண் பய கூட போன் எடுக்க மாட்டேங்குறான்… தென்றல் கூப்டா மட்டும் பாஞ்சி போய் எடுப்பான்… நா என்ன அவன் லவ்வரா? ஐயோ ஏன் இப்டி சம்பந்தம் இல்லாம உளறிட்டு இருக்கேன்…'என தனக்கு தானே பேசிக்கொண்டு இருப்பவனை வித்தியாசமாக பார்த்தாவரே மித்ரனின் அறைக்குள் வந்தாள் பிரியா...

"ஹாய் மித்து"

"சொல்லுங்க அண்ணி"

"உன்னோட ரெட் அலெர்ட் ஹ காட்டுறேன்னு சொல்லி காட்டவே இல்லியே?"

"நீங்க வேற அண்ணி அவ என்ன நினைக்குறான்னு ஒன்னுமே புரியல…
அவளை மாத்தணும்னு நானும் அருணும் சேர்ந்து போட்ட பிளான் எல்லாம் வேஸ்ட் அவ உண்மையாவே அலெர்ட் ஆகிட்டா போல…

இனி கொஞ்சம் மாத்தி யோசிச்சு தான் அவகிட்ட மூவ் பண்ணனும்… "என அவருக்கு எல்லாம் தெரியும் என்பது போல் பேச...

"அப்டி என்ன ஆச்சு உங்க ரெண்டு பேருக்கும்…"என ஒன்னும் தெரியாமல் கேட்டாள் பிரியா...

"இப்பவே சொல்லனுமா அண்ணி எனக்கு ரொம்ப டையர்ட்யா இருக்கு… சமயம் வரும் போது சொல்றேனே.."உளறி கொட்ட இருந்தியே டா மித்ரா என அவனை அவனே திட்டிக்கொண்டு சமாளித்தான்

"ஹே கூல் நோ இஸ்ஸுஸ் எப்ப தோணுதோ அப்போ சொல்லுங்க…."

"அண்ணா இன்னும் வரலையோ?"

"ஆமா ஏன்?"

"அதான் எங்க அண்ணிக்கு நான்லாம் கண்ணுக்கு தெரியுறேன்…"என கிண்டல் தோணியில் பேசும் போதே..

"ரியா ரியா…" ருத்ரன் பிரியாவை அழைத்து கொண்டே வீட்டின்னுள் வந்தான்..

"இதோ வந்துட்டேன்…"

"ஹாஹாஹா" எனும் மித்ரனின் சிரிப்பு ஒலி அவளை தொடர்ந்தும் திரும்பாமல் ஓடினாள் பிரியா…

அவள் சென்றதும் அருணிடம் இருந்து அழைப்பு வந்தது…

"டேய் உனக்கு இப்போதான் உன் போன் கண்ணுக்கு தெரிஞ்சுதா?" எரிந்து விழுந்தான் மித்ரன்

"மித்ரா டேய் என்னடா லவ்வருக்கு போன் பண்ற மாதிரி இத்தனை முறை அடிச்சி இருக்க?" என சிரித்து கொண்டே கேட்டான் அருண்

'ஐயோ என் மைண்ட் வாய்ஸ் அவனுக்கும் கேட்டுடிச்சா என்ன? 'என மனதுக்குள் புலம்பி வெளியே

"ச்சி அசிங்கமா பேசாத டா… மேட்டர்க்கு வா…"

"இப்போ நீதான் டா அசிங்கமா பேசுற… என் தென்றல்க்கு இதெல்லாம் பிடிக்காது டா…"

"அடிங் எரும எரும… உன் தங்கச்சி ரியாக்ஷன் என்னனு கேட்டேன் டா… அத விட்டுட்டு கண்டதையும் உளறிக்கிட்டு இருக்க?"

"ஹாஹாஹா நீ அனுப்பின போட்டோஸ் எல்லாத்தையும் பிரிண்ட் போட்டு அம்மா கிட்ட அழகா வந்து இருக்குன்னு சொல்லிட்டு இருந்தா டா…

அப்புறம் தென்றல் பத்தியும் பேசிட்டேன் டா இன்னைக்கு…

டேய் லைன்ல இருக்கியா டா…" என அருண் கத்தும் வரை பதில் பேசவில்லை மித்ரன் அதன் பிறகே பேசினான்...

"நா சந்தோசமா இருக்கேன் அப்புறம் பேசுறேன் பாய் பாய்…"

"அடப்பாவி இப்டி கழட்டி விட்டுட்டு போறானே…"

"நா என்ன உன் லவ்வரா கழட்டி விட?"

"டேய் இன்னும் நீ போகலியா?"

"ஹாஹாஹா கால் கட் பண்ணிட்டு புலம்பு டா…"

மூன்று நாட்களாக சரியாக தூங்காமல் சாப்பிடாமல் கூட இந்த ப்ராஜெக்ட்டை முடித்து கொடுத்து இருந்தான் மித்ரன்…

மீண்டும் ஹீரோவிடம் பேசி ஷூட்டிங் வர செய்து பிரியாவுடன் நடிக்க வைத்து ஒரே டேக்கில் பர்பெக்ட் என கூறி இருந்தான்…

ஷூட்டிங்கில் இருந்த அத்தனை பேருக்கும் அவ்வளவு சந்தோஷம்…

அடுத்து அடுத்து டப்பிங்,பிஜிஎம் கிராபிக் ஒர்க்ஸ், கடையின் பெயரை எடுத்து காட்டும் கடைசி நிமிட டயலாக் என அனைத்தையும் செய்து முடிக்க நிறைய மெனக்கெட வேண்டி இருந்தது…

அதனால் ஆருவை கூட எந்த தொந்தரவும் செய்யாமல் இருந்து விட்டான்…

இப்பொழுது தான் தோணுகிறது அவளை தொந்தரவு செய்து இருந்தால் அவளை இன்று பார்த்து இருக்க முடிந்து இருக்குமோ?

என்னை பற்றி தற்பொழுது அவளின் மனநிலை? ஆம் கேள்விக்குறி தான்…


சண்டை கோழியாய்
நீ இருந்தாய்
நகங்களை, அலகை
வெட்டி எறிந்தேன்…

பதுமையாய்
நீ வந்தாய்
சீண்டி சீண்டி
சண்டை கோழியாய்
சிலிர்க்க வைக்க
முனைகிறேன்..

முரன்கள் கொண்ட
முரடன் நான் தானோ?...

எழுத்தாளர் :- மோகனா சின்னத்தம்பி (சுசு ஸ்டோரி )
எழுத்தாளரின் பிற எழுத்துக்களை படிக்க
 

MEGALAVEERA

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 10, 2021
Messages
532
Nice epi
 
Top