• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காதல் தீ நீயே 07

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Joined
Jul 30, 2021
Messages
566
அத்தியாயம் 7

நண்பனுடன் பேசி விட்டு தன் கண்களை அப்படியே சுழலவிட்ட அருணுக்கு, அடுத்த பால்கனியில் நிலவை வெறித்துக் கொண்டிருந்த தங்கை கண்ணில் பட,

' இன்னும் எத்தனை நாளைக்கு உனக்கு நீயே வேலி போட்டு அடைஞ்சு கிடக்கப் போற ஆரும்மா...

எனக்கு இப்போ இருக்குற ஆருவை சுத்தமா பிடிக்கல, எதுக்கெடுத்தாலும் சண்டை போடுற அந்த ஆரு தான் வேணும்.

டேய் மித்து உன்னால மட்டும் தான் அந்த ஆருவை மீட்டுக் கொண்டு வர முடியும்டா, இப்போ ரெண்டு மூணு நாள் நீ அவ கூட வேலை பாத்ததுலையே அவ பழைய இயல்பு அவளை அறியாமலே வந்து போனது போல மொத்தமா அவளை மாத்திக் கொடுத்துடு '

தங்கையை பற்றி கவலையாக மனதில் எண்ணியவன் தொடர்ந்து நண்பனுக்கு கட்டளையும் போட்டு விட்டு அவனும் நிலவை வெறிக்க ஆரம்பித்து விட்டான்.

ஆனால் இது எதையும் அறியாத ஆருவோ ' ஸ்ஸப்பா! இனி அந்த மித்ரனை பார்க்க வேண்டிய தேவையே இல்லை.

அவனும் என்னை சீண்ட தேவையில்லை, நானும் பதிலுக்கு கத்த வேண்டிய தேவையில்லை ' என நிம்மதி உணர்வு பெருக,

அடுத்த நொடியே ' இவ்வளவு நாளும் என்னோட காதலை மனசுக்குள்ளையே வைச்சு மருகினது போதாதா, இனியும் அதே போல தான் தொடரப் போகுதா ' என்ற ஆயாசமும் தோன்ற கிடைத்த நிம்மதி தொலைந்து போனது.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான உணர்வுடன் அன்றைய இரவு கடந்து செல்ல,

அடுத்த நாள் ஆர்ப்பாட்டமில்லாது புலர, மகேந்திரன் குடும்பம் காலை உணவுக்காக ஒன்றாக கூடியிருந்தனர்.

" காயு நீ நம்ம தென்றலைப் பத்தி என்ன நினைக்குற? " சம்பந்தமில்லாது கேள்வி கேட்க மகேந்திரனை மற்றவர்கள் விசித்திரமாக பார்க்க,

" அப்பா எதுக்கு இப்போ காத்தை என்னோட பக்கம் திருப்புறீங்க? நானே நான் உண்டு என்னோட பாட்டு உண்டுன்னு அமைதியா என்னோட வழி தனி வழின் னு போய்ட்டு இருக்கன். "

" ஹேய் தென்றல் நீ எப்போ சுரங்க பாதை எல்லாம் ரெடி பண்ண? அண்ணனுக்கு நீ சொல்லவே இல்ல பாரு " மித்ரன் கேள்வியில் குழம்பிய தென்றல் முழிக்க,

" என்ன தென்றல் முழிக்குற? இப்போ நீ தான சொன்ன, ஏதோ தனி வழில போய்ட்டு இருக்கன்னு... அது தான் ஒருவேளை சுரங்க பாதை ரெடி பண்ணி அந்த வழில போய்ட்டு வந்துட்டு இருக்கியோன்னு நினைச்சுட்டன். "

அப்பாவியாக மித்ரன் கூறியதை தொடர்ந்து மற்றவர்கள் வாய் விட்டு சிரிக்க, தென்றல் கொலைவெறியாய் அவனை முறைத்தாள்.

" சரி சரி அவனை விடு, பார்வையாலையே எரிச்சு கொன்னுடாத, நான் அப்பா கேட்க கேள்விக்கு விளக்கம் சொல்றேன். கேட்டுக்கோ தென்றல்,

நீ உன்னோட வழில தனியா போய்ட்டு இருக்குறதைப் பார்க்க அப்பாக்கு நெஞ்சு பொறுக்குது இல்லையாம். அது தான் துணைக்கு யாரையாவது அனுப்பலாம்னு ப்ளான் போடுறாரு... அப்பிடி தானப்பா? "

ருத்ரன் கிண்டலாக தங்கையிடம் தொடங்கி தந்தையிடம் கேள்வியாக முடித்தான்.

" நோ நோ நோ அதெல்லாம் முடியவே முடியாது. அம்மா உங்க புருசன் கிட்ட சொல்லி வைங்க, என்னால இப்போ கல்யாணம் பண்ணிக்க முடியாது. "

" அச்சச்சோ பேபி ஆனாலும் நீ இவ்வளவு அப்பாவியா இருக்கக் கூடாதுடா...

அம்மா அப்பா முகத்தை பாரு, அம்மா தான் இந்த பேச்சுக்கு அடித்தளம் போட்டு இருக்காங்க. அதை அப்பா கட்டி எழுப்பிட்டு இருக்காரு "

உச்சுக் கொட்டியபடி பரிதாபமாக கூறிய ருத்ரன் மேலும் தொடர்ந்தான்.

" ஏன் மித்ரன் நம்ம தென்றலுக்கு வாக்கப்படப் போறவன் நிலைமையை யோசிச்சு பாரன்.. இவ பாட்டை கேட்டே அவன் காது ஓட்டை ஆகிடாதா? "

" ஆமா அண்ணா எனக்கும் அதை நினைக்க தான் கவலையா இருக்கு... வேணும்னா நாம இவளுக்கு ஒரு சிங்கர் இல்லன்னா மியூசிக் ட்ரைக்டர் ஒருத்தனை பாத்து கட்டி வைச்சுடுலாம். "

" ஓஓஓ நீ அப்பிடி சொல்லுறியா? இது கூட நல்ல ஐடியா தான், நீ என்ன சொல்ற தென்றல்? "

அண்ணனும் தம்பியும் ஒன்றாக தென்றலை கலாய்த்துக் கொண்டிருக்க,

" அத்தை எதுக்கு இப்போ நம்ம தென்றல் கல்யாணத்துக்கு இவ்வளவு அவசரம்?

அவ இப்போ தான் படிச்சு முடிச்சு அவளோட பீல்ட்ல அடியெடுத்து வைச்சு இருக்கா, இன்னும் கொஞ்ச நாள் போகட்டுமே "

தன் நாத்தனாருக்காக குரல் கொடுத்த ப்ரியாவுக்கு பறக்கும் முத்ததை அள்ளி இறைத்தாள் தென்றல்.

" அடடா நான் சும்மா பேச்சுக்கு கேட்டேன். என்னோட ப்ரண்டு மகேஸ்வரியை நேத்து எதேர்ச்சியாக மீட் பண்ணினன். அவ தான் அவ பையனுக்கு நம்ம தென்றலை கேட்டா.

எனக்கு இதில விருப்பம் இல்ல, ஆனா நீங்க எல்லாரும் என்ன நினைக்குறீங்கன்னு தெரிஞ்சுக்கலாம்னு தான் கேட்டேன். " காயத்ரி கூறிய பின்னரே தென்றலுக்கு மூச்சை கூட ஒழுங்காக விட முடிந்தது.

உணவை முடித்தவர்கள் தத்தம் வேலையை பார்க்க சென்று விட,

" தென்றல் எதுக்கும் நீயும் உன்னோட அருணும் உங்க காதல் பத்தி அம்மா அப்பா கிட்ட சொல்லிடுறது நல்லதுன்னு நினைக்குறன் " தென்றலிடம் மித்ரன் கூற மறுப்பாய் தலை அசைத்தாள் தென்றல்.

" இல்ல அண்ணா, முதல்ல உனக்கும் ஆருவுக்கும் இருக்குற பிரச்சினையை முடிங்க,

அதுக்கு பிறகு தான் எங்க காதல் பத்தி அம்மா அப்பா கிட்ட சொல்ல முடியும். அதுக்கு முன்னாடி எங்க விசயம் வீட்டுக்கு தெரிஞ்சுட்டா உங்களுக்குள்ள இருக்குற பிரச்சினை முடியாமலே போயிடும் "

பெரிய மனுசி போல கூறிச் செல்லும் தங்கையை வியந்து பார்த்தான் மித்ரன்.

நேற்று அருண் அவர்கள் வீட்டில் காதலை பற்றி கூறி விட்டாதாக இரவு அலைபேசியில் பேசிய போது கூறியது ஞாபகம் வர,

" ப்ராடு அப்போ நீ யாரோ ஒரு பொண்ணை காதலிக்குறன்னு தான் சொல்லி வைச்சு இருக்கியா? அவ யாருன்னு இன்னும் சொல்லல.... " நண்பனை செல்லமாக வைதவன் அடுத்த நடக்க வேண்டியதை பற்றி சிந்திக்கலானான்.

ஆபிஸில் தன் வேலையில் மூழ்கி இருந்த ஆருண்யாவை கலைத்த அலைபேசி அவளது கற்பனையையும் கலைத்து விட கொலைவெறியோடு முறைத்தவள், தன்னை சமன்படுத்திக் கொண்டு அதனை காதுக்கு கொடுத்தாள்.

" ஸாரி மேடம், உங்களை பார்க்க மித்ரன் ஸார் வந்திருக்காரு " என குரலில் பவ்யத்தோடு கூறிய ரிஸப்ஷன் பெண் இவள் பதிலுக்காக காத்திருக்க,

" ஓகே காவ்யா, நான் கொஞ்சம் பிஸி. ஒரு டென் மினிட்ஸ் கழிச்சு அவரை என்னோட கேபினுக்கு அனுப்பு " பதிலளித்தவள் முகத்தில் புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது.

உண்மையில் அவள் ஏதோ டிசைன் வரைவதில் தான் முழ்கி இருந்தாள். மித்ரன் வருகை பற்றி அறிந்ததும் வேலையில் இருந்த ஈடுபாடு பறந்து சென்று விட 'இப்போது எதுக்கு வந்திருக்கானோ' என்ற சலிப்பு வந்து, அந்த இடத்தில் தன்னை பாந்தாமாக பொருத்திக் கொண்டது.

அவள் கேட்ட அந்த பத்து நிமிடம் கூட தன்னை தானே சாந்தப்படுத்திக் கொள்வதற்காகவே அவளுக்கு தேவைப் பட்டது.

' ஆரு அவன் வந்து என்ன பேசினாலும் நீ அமைதியாவே இரு...

அண்ணைக்கு போல அவசரப்பட்டு கோவத்துல கத்திடாத...

கண்டிப்பா அவன் வந்ததுக்கு முக்கிய காரணம் உன்னை சீண்டி விடுறதா தான் இருக்கும். ஸோ பீ கேர் புல்....

கூல் ஆரு... கூல் ' தனக்கு தானே கூறிக் கொண்டவளை பார்த்து அவளது மனசாட்சியே நக்கலாக சிரிக்க அதனை அடித்து விரட்டிய அடுத்த நிமிடமே மித்ரன் இவளது அனுமதி பெற்று அவள் கேபினுள் வந்திருந்தான்.

" வாங்க மிஸ்டர் மித்ரன். என்ன விசயமா என்னை பாக்க வந்தீங்க? " அமைதியாக வந்த ஆருவின் குரலில் மித்ரனே ஒரு நிமிடம் ஆடிப் போய் விட்டான்.

' பார்றா ஆரு மேடம் ரொம்ப உசாரா தான் இருக்காங்க. அவங்க குரல்ல அநியாயத்துக்கு அமைதி, சாந்தம் எல்லாம் தெரியுதே... பரவால்ல அதை நாம அடிச்சு விரட்டிடலாம் ' என மனதோடு பேசியவன்,

" உங்களோட நகைகளை கொடுத்துட்டு போகலாம்னு வந்தேன் மேடம். அதோட நீங்க என்னோட ஆட் பத்தி எந்த கமண்டுமே சொல்லலியே... " வெளியே கெத்தாக கூறினான்.

" நகையை கொடுக்குறதுக்கு நீங்க தான் வரணும்னு எந்த அவசியமும் இல்லையே, மிஸ்டர் மித்ரன். அன்ட் உங்க ஆட் பத்தி நீங்க எதுக்கு எங்கிட்ட கேட்கணும். அதைப் பத்தி அப்பா கிட்டையே கேட்டுக்கோங்க. "

சற்று நேரம் அந்த அறையில் அமைதி நிலவ அதனை ஆருவே கலைத்தாள். " ஓகே மித்ரன் நீங்க என்னோட நகையை கொடுத்துட்டு கிளம்பினீங்கன்னா, நான் என்னோட வேலையை எந்த தொந்தரவும் இல்லாம செய்வன். "

ஆரு தொந்தரவு என்ன வார்த்தையை அழுத்திச் சொல்ல,

" நான் இப்போ வெளில போகணும்னு சுத்தி வளைச்சு சொல்றீங்க, அப்பிடி தான மிஸ் ஆருண்யா? "

" நல்ல காமெடி ஸார், நான் அப்புறமா சிரிச்சுக்குறன். நான் சுத்தி வளைக்காம நேராவே சொல்றேன் மித்ரன், நகையை கொடுத்துட்டு கிளம்புறீங்களா? "

" கிரேட் இன்சல்ட், இப்பிடி தான் உங்க வீட்டுல உங்கள வளர்த்தாங்களா? கொஞ்சம் கூட மரியாதை இல்லாம "

" எங்க வீட்டைப் பத்தியோ, வளர்ப்பை பத்தியோ பேச உங்களுக்கு எந்த அருகதையும் இல்ல மிஸ்டர் மித்ரன். ஏன்னா இப்போ கூட நான் எந்த தப்பும் செய்யல,

ஒரு காலத்துல வார்த்தையாலையே என்னை கொன்னவங்களுக்கே மரியாதை கொடுத்து, அமைதியா தான் பேசிட்டு இருக்கேன். அதுவும் நீங்க தேவையில்லாம என்னோட டைமை வேஸ்ட் பண்ற ஒரே காரணத்தால தான் உங்களை இங்க இருந்து கிளம்பச் சொல்றன். "

இப்போதும் கூட ஆருண்யா வார்த்தைகளில் கொஞ்சம் கூட கோவம் இருக்கவில்லை. மாறாக சாந்தம் சாந்தம் சாந்தம் மட்டுமே...

ஆருவை கோவப்படுத்தி பார்ப்பதை மட்டுமே தன் நோக்கமாக கொண்டு இங்கு வந்திருந்தவனுக்கு ஆரம்பத்தில் இருந்தே தோல்வியை கொடுத்துக் கொண்டிருந்தவளுக்கு எதிராக தன் கடைசி ஆயுதத்தை எடுத்து விட்டான் மித்ரன்.

" ஓகே ஓகே ஸாரி மேடம், உங்க பொன்னான நேரத்தை வீணடிச்சதுக்கு மன்னிப்பு கேட்டுக்குறேன். அப்போ நான் கிளம்புறேன் " கூறியபடி வெளியே செல்ல முயன்றான்.

" ஒரு நிமிசம் மிஸ்டர் மித்ரன், என்னோட நகையை கொடுக்கத் தான வந்தீங்க. அதை கொடுக்காமலே போறீங்க?" கேள்வியாக ஆரு கேட்க,

உள்ளுக்குள் மகிழ்ந்தவன் " அச்சசோ ஸாரி மிஸ் ஆருண்யா, நகையை கொடுத்துட்டு போகத் தான் இங்க வந்தேன். ஆனா அந்த நகையை எடுத்துட்டு வர மறந்துட்டேன். " கூறி இப்போது கண்டிப்பாக அவள் கோவத்தில் கத்துவாள் என எதிர்பார்த்து காத்திருந்தான்.

இதை கேட்டதும் ஆருவுக்கு கோவம் பொங்கி வந்தது உண்மை தான், ஆனாலும் அதனை அப்பிடியே தன்னுள் மறைத்தவள்,

" இட்ஸ் ஓகே மிஸ்டர் மித்ரன், உங்களுக்கு இருக்குற வேலை பிஸில எதை எப்போ என்ன செய்யுறோம் என்பதை மறந்துட்டீங்க, அவ்வளவு தான...

பரவால்ல அதை உங்க அசிஸ்டண்ட் கிட்டையே கொடுத்து விடுங்க, இல்லன்னா சொல்லுங்க நான் வேற யாரையாவது விட்டு அதை வாங்கிக்குறேன் " கூறிய ஆரு அத்துடன் பேச்சு முடிந்தது போல பென்சிலை எடுத்து வரையத் தொடங்கினாள்.

அங்கேயே நின்று அவளைப் பார்த்த மித்ரன் தோற்றுப் போன உணர்வுடன் அங்கிருந்து செல்ல,

உள்ளே ஆருவும் தொய்ந்து போய் மேசையிலேயே தலை வைத்து படுத்து விட்டாள். ஆனாலும் அவள் முகத்தில் மித்ரனை வென்று விட்ட கர்வம் இருக்கத் தான் செய்தது.

தன் ஸ்ரூடியோவில் மியூசிக் கம்போசிங்கில் இருந்த அருணுக்கு மித்ரன் அழைப்பு விடுக்க, அந்தோ பரிதாபம் அருண் மொபைல் சைலண்டில் இருந்தது.

தன் காரை கடற்கரைக்கு அருகே நிறுத்தியிருந்த மித்ரன் சீட்டை பின்னால் சாய்த்து விட்டு கண்களை மூடிப் படுத்து விட்டான்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் ஆரு கோவப்பட்டு கத்தியதில் 'தான் அவளை நோக்கி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் வெற்றிப் படியாக மாறுகிறது' என எண்ணி ஆனந்தப்பட்டுக் கொண்டிருந்த மித்ரனுக்கு இன்றைய ஆரு அதெல்லாம் பொய்யென அனைத்தையும் உடைத்து போட்டிருந்தாள்.

'பேசாம அவ கிட்ட போய் நடந்ததை எல்லாம் சொல்லிடலாமா? ' மனது கேள்வி எழுப்ப,

'எதை சொல்றதா இருந்தாலும் அதை அப்போ சொல்லியிருந்தா அவ நம்பி இருப்பா, ஆனா இப்போ போன உன்னை கண்டுக்க கூட மாட்டா... அவளுக்கா உணர்ந்து அவ உண்மையை தேடினா தான் அவளுக்கு உம்மேல நம்பிக்கை வரும் ' மூளை அறிவுறுத்த ஆமென கேட்டுக் கொண்டான் மித்ரன்.

' இப்போ இருக்குற ஆருவை கனவுலையாவது பார்த்துட மாட்டோமான்னு அப்போ ஏங்க வைச்சவ, இப்போ அதே பழைய ஆருவுக்காக என்னை புலம்ப வைச்சுட்டா பாரன் ' என்றவனுக்கு அவனை அறியாது புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது.

அருண் தன் வேலையை முடித்தவனாக மொபைலை பார்க்க அது மித்ரன் ஒற்றை மிஸ்ட் காலை தாங்கி நின்றது. நேற்று இரவு போன் எடுக்கலன்னு அத்தனை தடவை கூப்பிட்டான். இப்போ என்ன ஒரு மிஸ்ட் காலோட நிறுத்திட்டான்.

புலம்பிய அருண் மித்ரனுக்கு அழைப்பு விடுத்தான். ஒரே ரிங்கில் அழைப்பை எடுத்த மித்ரன்,

" ஏன்டா அருண் உங்க வீட்டுல ஏதாவது போதிமரம் வளக்குறீங்களா என்ன? "

" என்னது? போதிமரமா? என்னாச்சுடா உனக்கு "

" பின்ன என்னடா, உன்னோட தங்கச்சிக்கு அளவுக்கு மீறின ஞானம் வந்திருக்கு! அதுதான் புத்தருக்கு போதி மரத்துக்கு கீழ ஞானம் கிடைச்ச போல அவளும் ஏதாவது போதிமரத்தடில உட்கார்ந்து ஞானத்தை வாங்கிட்டாளோன்னு நினைச்சேன். "

" ஹா ஹா என்னடா இவ்வளவு பொரியுறா? ஆரு ஏதாவது பெரிய பல்ப்பா கொடுத்துட்டாளா என்ன? "

" நீ வேற ஏன்டா அந்த வயிற்றெரிச்சலை கொட்டிக்குற.. இண்ணைக்கு எவ்வளவு ஆசையா அவளை கோவப்படுத்தி பாக்கலாம்னு போனேன் தெரியுமா? "

" போதும்டா இதுக்கு மேல நீ எதுவும் சொல்ல வேணாம். அங்க என்ன நடந்து இருக்கும்னு எனக்கு கண்ணு முன்னாடி தெரியுது... "

நண்பர்கள் இருவரும் ஆருவைப் பற்றி பேசிக் கொண்டிருக்க, இங்கே காபி ஷாப்பில் லிஷா நொடிக்கொரு தடவை கடிகாரத்தையும் வாசலையும் பார்தவாறு அமர்ந்து இருந்தாள்.

" என்ன லிஷா ரொம்ப டென்சனா இருக்க போல? " கூலாக கேட்டவாறு அமர்ந்த பரத்தை எதுவும் கூறாது முறைத்தவள்,

"என்னை எதுக்கு இங்க வரச் சொன்ன? அந்த மித்ரனையும் ஆருண்யாவையும் பழி பழிவாங்குறதுக்கு நல்ல ஐடியா கிடைச்சிருச்சுன்னு தான இங்க வரச் சொன்ன... "

"ஆமா லிஷா அதில என்ன டவுட்டு உனக்கு? அதைப் பத்தி பேசத் தான உன்னை இங்க வரச் சொன்னதே... "

"வேணாம் பரத் என்னோட கோவத்தை கூட்டாத, என்னை எத்தனை மணிக்கு வரச் சொன்ன? நீ எத்தனை மணிக்கு வர்ற? "

"இப்போ என்ன உன்னோட டைம்ல பத்து நிமிசம் தான போயிருக்கு, ஆனா நம்மளை பார்க்க வரப்போற மிஸ்டர் கலைச்செல்வன் பத்தி உனக்கு தெரியுமா?
அவருக்கும் மித்ரனுக்கும் என்ன சம்பந்தம்னு தெரியுமா?
அவரால நமக்கு கிடைக்கப் போற லாபம் என்னனு தெராயுமா?
தொடரும்...

எழுத்தாளர் - ஆரா
 

MEGALAVEERA

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 10, 2021
Messages
545
Nice epi
 
Top