• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காதல் தீ நீயே 11

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Joined
Jul 30, 2021
Messages
566
காதல் தீ நீயே 11

கோவிலில் ஆருண்யாவிடம் பேசிவிட்டு வந்தவன் நேராக சென்றது அருணின் மியூசிக் ஸ்டியோ.

"என்ன டைரக்டர் சாருக்கு நம்ம ஸ்டியோலாம் கண்ணுல தெரியுதே..
வாங்க வாங்க வந்து உட்காருங்க" என்று அருண் நக்கல்தொனியில் கூற, " அடேய் அடங்குடா அருண்" என்றவாறே அருணின் முதுகில் அடியொன்றை போட்டு அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தான்.

"உன் கை என்னடா இரும்பா? இந்த வலி வலிக்குது?" என.அருண் கேட்க
"ஏன் இதுக்கு முன்னாடி நீ அடியே வாங்குனது இல்லையா"
"ஏன் வாங்கினது இல்லை நிறையவே வாங்கியிருக்கேன்"
"அப்புறம் என்ன. கம்முனு இரு" என்ற மித்ரன் தன் யோசனையில் மூழ்கிவிட அருணோ அவனை யோசனை முகத்தை பார்த்து "என்னாச்சுடா.. ஆரு எதாச்சும் சொன்னாளா? ஆனா அவ எதாவது சொன்னா கலங்குற ஆளா நீ ?

"ஆமா அப்படியே உன் தங்கச்சி பேசிட்டாலும்.. எப்போ பாரு போலீஸ்கராங்க மாதிரியே விறைப்பா சுத்துறா அவ" என வெளியே சொன்னவனின் உள்மனம் "ஆரவாரமா இருந்தவளை அவ்ளோ அமைதியாக அழுத்தமா மாத்தினதே நீ தான்டா" என்று கூறிட மனம் வெறுத்து போனான் அவன். மித்ரனின் செய்கைகளை அருண் கவனிப்பதை அறிந்து " அது ஒண்ணுமில்லடா.. நைட் ஒரு கனவு வந்திச்சுடா" என கூற அவனை நிறுத்திய அருண்,

"என்ன கல்யாண கனவா?"

ஆமாடா... எப்புடி டா கண்டுபிடிச்ச நீ ?

அது வேற ஒண்ணுமில்ல. கல்யாணமாகாத 90ஸ் கிட்ஸ்க்கு புதுசா வந்த வியாதியாம். சரி சொல்லு என்ன கனவு எப்படி வந்திச்சு ? ஜாம் ஜாம்னு மேளதாளத்தோட நடந்திச்சா? இல்லை பொண்ணை கடத்தி கூட்டிட்டு போய் கல்யாணம் பண்ணுனியா? என கேட்க அவனிடம் விளையாடும் நோக்கத்தில் மித்ரன் பாதி உண்மையும் பாதி பொய்யும் கலந்து

"கல்யாணம் நடந்தது எனக்கில்லடா? உனக்கு அதுவும் முகம் தெரியாத ஒரு பொண்ணு. ரொம்ப அழகா இருந்திச்சு அந்த பொண்ணு. விடியற்காலைல கண்ட கனவு வேறயா. நடந்திருமோனு பயமா இருக்கு" என்று கூற

அருணுக்கு கல்யாணம் என்றதும் சந்தோஷபட்டவன் பெண் அவனது தென்றல் இல்லை என கூறியதும் முகம்வாடிப்போனான். அவனது முகவாட்டத்தை கண்டு மித்ரன் ஏதோ சொல்ல வர அதற்கு முன் அருண்" நீ பயப்படாத கல்யாணம் நடக்கும் அது எனக்கும் தென்றலுக்கும் தான். அந்த பொண்ணு வேற அழகா இருக்குனு சொல்ற. வேணும்னா எங்க கல்யாணம் முடிஞ்ச அப்ரோ கனவுல வந்த பொண்ணை நான் கட்டிக்கிறேன். இதெப்படி இருக்கு என்று அருண் கேட்க " தென்றல் கேட்டியாமா அவன் சொன்னதை" என்று மொபைலை எடுத்து மித்ரன் கூற "டேய் டேய் அவகிட்ட ஏன்டா போட்டு குடுக்குற" என பதறியவன் மித்ரனின் மொபைலை வாங்கி பார்க்க அங்கு அழைப்பு எதுவும் இல்லை. "அப்பாடா" என பெரூமூச்சு விட்டு அமர்ந்தவன் "ஐயோ" என தலையிலடித்து கொண்டு பாக்கெட்டிலிருந்த தன் மொபைலை
எடுத்தான். அதில் இவ்வளவு நேரம் பேசிக்கொண்டிருந்ததை கேட்டுக்கொண்டிருந்தாள் தென்றல் .

"தென்றல் மா.. எல்லாம் கேட்டுட்டீங்களா?'

ம் என்ற ஒற்றை பதில் மட்டுமே எதிர்புறமிருந்து வர இதுவரை சிரித்தபடி இருந்த முகம் தொங்கி போனது.

"அதெல்லாம் ஒண்ணுமில்லடா. நான்.சும்மா விளையாடினேன்" என்று அவளை அருண் சமாதானபடுத்த ஆரம்பிக்க அருணிடம் சொல்லிவிட்டு கிளம்பினான் மித்ரன். மித்ரன் வெளியேற அவன் முதுகை பார்த்துகொண்டே "கிராதகா. உனக்கு எதுவும் செட் ஆகலனு என்னை கோர்த்து விடுறயாடா" என மனதுக்குள் திட்டி கொண்டான்.( வெளியே கேட்குற மாதிரி சொல்லி அதுக்கும் திட்டு வாங்குறது யாராம்)

😍😍😍😍😍😍

மறுநாள் காலை


சண்டைகாரி நீதான்
என் சொந்தகாரி நீதான்
சத்தியமா இனிமேல் என் சொந்தமெல்லாம் நீ தான் என ஆட்டமும் பாட்டுமாக ரெடியாகி கொண்டிருந்தான் மித்ரன்.
அவனுக்குள்ளும் சோகம் இருந்தது.
'கனவூல வந்தது எல்லாம் நிஜமா நடந்திருந்திச்சுனா எவ்ளோ நல்லா இருந்திருக்கும்.‌ கனவு கனவாகவே போயிடுச்சு' என்ற சோகம் உள்ளுக்குள் இருந்தது. அந்த சோகத்தையும் தாண்டிய உற்சாகம் அவனிடத்தே இருந்தது. ஏனென்றால் அவன் பேசிய வார்த்தைகளும் அவன் செய்த காரியமும் அப்படி. அவனது ஊகிப்பின் படி அவள் இரவே அந்த நகை பெட்டியை திறந்து பார்த்து உடனே கால் செய்வாள் என்பதுவே.. அது நடவாமல் இருக்கு காலை அவளது தரிசனம் அதுவும் சிவந்த முகத்துடன் முறைத்த பார்வையுடனான தரிசனம் அதனை எதிர்பார்த்து இருந்தான். உள்ளுக்குள் உற்சாகம் ஊற்றெடுக்க ரெடியாகி கீழே வந்தவன் " அம்மா ஃடிபன் ப்ளீஸ்" என கத்த வீட்டிலுள்ள அனைவரும் அவனை ஒரு மாதிரியாக பார்த்தனர். கிச்சனில் இருந்து அவன் தாயார் வந்து " டேய் மித்ரா என்னடா இன்னைக்கு சீக்கிரமே கிளம்பி வந்துட்ட. நான் இன்னும் எதுவும் ரெடி பண்ணவே இல்ல. இப்போ தான் டீயே போட்டேன்" என்றிட

"என்னது.. இப்போ தான் டீ போட்டீங்களா?"

"ஆமாபா.. இப்போ தானே ஆறே ஆகுது. நீ முன்னாடி சொல்லவும் இல்ல என்றவர் ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணுபா. சட்டுனு உப்புமா செய்து தரேன்" என்று கிச்சனுக்குள் நுழைந்திட

'ஆறு மணிதான் ஆகுதா?' என அதிர்ச்சியடைந்தவன் தன்து வாட்சையும் வீட்டு கடிகாரத்தையும் மீண்டும் மீண்டும் பார்க்க மணி ஆறு தான் ஆகியிருந்தது. 'எத்தனை தடவை பார்த்தாலும் ஆறு மணி ஆறு மணி தான்' என மனசாட்சி வேறு சத்தம் போட, 'சரி வெயிட் பண்ணி சாப்பிட்டே போகலாம்' என டைனிங் டேபிளில் அமர்ந்தான். அவன் அமர்ந்ததும் அங்கே வந்த தென்றல்
"அம்மா காஃபி" என கத்திக்கொண்டே
டைனிங் டேபிளில் அமர, உள்ளிருந்து " தென்றல் இங்க வந்து காஃபி எடுத்துட்டு போ. நான் மித்துக்கு உப்புமா பண்றேன்" என்றிட
"என்னது மித்து அண்ணாக்கு உப்புமா வா".. என அதிர்ச்சியோடு மித்ரனை பார்க்க அவனோ ஏதோ யோசனையில் அமர்ந்திருந்தான்.
அவனை பார்த்து அவன் தோளை சுரண்ட அதையும் கண்டுகொள்ளாது யோசனையில் அமர்ந்திருந்தான்.
சரியாக இரண்டு நிமிடங்களுக்கு பின் முகத்தில் தண்ணீர் சாரலடிக்க
அடித்து பிடித்து எழுந்தான் மித்ரன்.

அவன் முன்னே தென்றல் ஒரு பாத்திரத்தில் தண்ணீரும் மற்றொரு கையில் வேப்பிலையுமாக நின்று தொண்டிருந்தாள். மூன்று முறை அவன்‌ முகத்தில் தண்ணீரை தெளித்தவள் பூஜை அறையிலிருந்து எடுத்து வந்த விபூதியையும் அவன் நெற்றியில் வைத்து விட்டு " உன்னை பிடித்த காத்து கருப்புலாம் உன்னை விட்டு அகன்று விட்டது. இனி உனக்கு எந்த பிரச்சனையும் இல்லை தமயா.. சென்று வென்று வா" என கூறிட அதுவரையிலும் அவள் செய்கையை கண்டு முறைத்து கொண்டிருந்தவன் அவளின் இரு கைகளையும் சிறைபிடித்து அவளை அடிக்க செல்ல "இங்க பாருங்க அப்பா... அண்ணாக்கு நல்லது தான்‌ பண்ணேன். ஆனா அவன் என்னை அடிக்கிறான்' என‌சொல்ல

"இதையெல்லாம் நாங்க முன்னாடியே நிறைய படத்தில பார்த்துட்டோம். ரொம்ப நடிக்காத" என்றவன் அவளை கொட்ட ஆரம்பிக்க "மித்ரா அவ சின்ன பொண்ணு தானே.‌விடு அவளை" என்று பின்னிருந்து குரல் வர திரும்பி பார்த்தவனை கண்டு டைனிங்கால் வாசலில் நின்றிருந்த மகேந்திரனும் ருத்ரனும் சிரித்து கொண்டிருந்தனர்.

முகத்தில் மொத்தமும் தண்ணீர் வழிய விபூதியும் அதனுடனே வழிய
சிரிப்பூட்டும் விதமாகவே நின்று கொண்டிருந்தான் மித்ரன்.‌ அவர்கள் சிரிக்கவும் தன்‌நிலையை உணர்ந்தவன் மீண்டும் தென்றலின் தலையில் நங்கென இரண்டு கொட்டுகள் வைத்துவிட்டு "ஹலோ நான் தான் இந்த கதையோட ஹீரோ என்னை வச்சு காமெடி பண்ணாதீங்க" என்று கூறிவிட்டு தன்னறைக்கு சென்றான்.

சென்றவன் கடுப்புடன் முகம் கழுவி
சட்டையையும் மாற்றிவிட்டு கீழே வந்தான். தென்றல் ப்ரியா உட்பட அனைவரும் டைனிங் காலில் அமர்ந்திருக்க அவர்களுடன் இணைந்தவன் "என்ன எல்லாரூம் இங்க இருக்கீங்க" என்று எதுவுமே நடவாத போல் கேட்க அனைவரும் அவனை கண்டு நமட்டு சிரிப்பொன்றை உதிர்க்க தென்றலோ ஒரு‌படி மேலே போய் " என்ன அண்ணா நீ . உன்னால எப்படி எதுவுமே நடக்காத மாதிரி இருக்க முடியுது. என அதிமுக்கியமான கேள்வியை கேட்க "தங்கையே சற்று அருகில் வந்தால் அந்த ரகசியத்தை நான் உங்களுக்கு கூறுவேனாம்" என்று பல்லை கடித்து கொண்டே அவன் கூற மீண்டும் அங்கே ஓர் சிரிப்பலை பரவியது. இன்னும் இங்கே இருந்தால் சிரித்தே கடுப்பேற்றுவார்கள் என‌ அறிந்தவன்
"அம்மா நான்‌ வெளியவே சாப்டுக்கிறேன்" என்று கிளம்பி விட
தென்றலின் மண்டையில் மீண்டும் ஒரு கொட்டு வைத்த தாய்" பாரு உன்னால அவன் சாப்டாம போறான்"

"அம்மா நான் அவனுக்கு நல்லதுதான் பண்ணியிருக்கேன்‌. உன் உப்புமா சாப்பிடுறதுக்கு அவன் வெளிய சாப்பிடுறது பெட்டர்" என்றவள் தாயார் வறுத்தெடுப்பதற்குள் தன்னறைக்குள் ஓடி ஒளிந்து கொண்டாள்.

🤗🤗🤗🤗🤗🤗

அலங்கார கண்ணாடி முன்னே அமர்ந்திருந்த ஆருண்யா கையில் புதியாய் மினுங்கியது அந்த மஞ்சள் தாலி. முகமோ சிவந்திருக்க உள்ளுக்குள்ளே கோபமா அமைதியா என்றறியா பரவசம். உள்ளுக்குள்ளே இனிதான இதமான உணர்வு. குறும்புகாரன் என மித்ரனை வைதவள் முகத்தில் புன்னகை இருந்தாலும் இனி அவனை தானாக சென்று பார்க்க கூடாது என முடிவெடுத்திருந்ததாள்.‌ அதனால் ஆபீசிற்கு கிளம்பி கொண்டிருந்தாள்.

அவளுக்கு நேற்று இரவு நடந்தவை நினைவிற்கு வந்தது.

நகைபெட்டியை திறந்து பார்க்காமலே
பையினுள் வைத்தவள் நகைகடைக்கு வந்து வேலையில் பிஸியாகி விட
மாலை வீட்டுக்கு வீட்டுக்கு வந்த பின் தான் நகையை ஓபன் செய்து பார்த்தாள். அதிலே அவளுக்கு பிடித்தமான‌ அந்த செயினுடன்‌ மஞ்சள் தாலியும் இருக்க அதை எடுத்து பார்க்கவே அவள் கரம் நடுங்கியது. கண்களும் கலங்கியிருந்தது.
அதனை எடுத்து கைகளில் வைத்தவள் அதற்கு நோகாதவாறு தடவி கொண்டிருந்தாள்.‌ அவளுக்குள்ளே பரவசம் வந்து ஒட்டிக்கொள்ள படபடப்பாக உணர்ந்தாள். இந்நொடியே தன்னவனை காண மனம் கூப்பாடுஇட மொபைலை எடுத்து அதில் இருந்து மித்ரனை போட்டோவை எடுத்து " என்னடா மிக்கிமவுஸ்.. தாலி வச்சுட்டா நான்‌ ஓடி வந்து உன்னை பார்ப்பேனா?
என்னை பற்றி மொத்தமும் தெரிஞ்சு இவ்ளோ சில்லியா பண்றியே டா ? "
என கூறியவள் முகத்தில் தான் அத்தனை பிரகாசம். பல நாட்களுக்கு பின் பொலிவு பெற்றிருந்தது அவளது முகம். நினைவுகளில் மூழ்கியவளை கலைத்து சுவர்சேவல் (கடிகாரம்) சத்தம் எழுப்ப நேரமாவதை உணர்ந்து நகைகடைக்கு கிளம்பினாள்.
செல்லும் வழியில் தன்னை யாரோ பின்தொடர்வது போல் இருக்க ஸ்கூட்டி மிரர் வழியே பார்க்க பின்னால் ஒருவன் வருவது தெரிந்து வண்டியின் வேகத்தை அதிகரித்தாள். அவள் நகைக்கடையின் உள்ளே நுழையவும் அந்த வண்டி திரும்பி செல்வதை கண்டவள் தன்னறைக்கு சென்று அருணுக்கு அழைத்து விபரம் சொன்னாள்.


அருணும் மித்ரனுக்கு அழைத்து

" டேய் மித்ரா நீ ஆருவை பாலோ பண்றதுக்கு ஆள் போட்டிருக்கிறியா?" என கேட்க " நான் எதுக்குடா அப்படி பண்ணனும். ஏன் என்னாச்சு " என கேட்க " யாரோ நம்ம கடை வரைக்கும் அவ பின்னாடியே வந்திருக்காங்க " என கூற "சும்மா யாராவது பொண்ணு நல்லாயிருக்கேனு பாத்திருப்பாங்க டா நீ டென்சன் ஆகாத. எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு" என் அழைப்பை துண்டித்தவனின் மூளையோ வேக வேகமாக எதையோ கணக்கிட்டது.
அவன் நினைவு வீட்டிலிருந்து கிளம்பிய தருணத்திற்கு சென்றது. வீட்டில் அத்தனை களேபரங்களையும் செய்து விட்டு வந்தவனையும் அவன் ஆபீஸ் வரைக்கும் இருவர் பாலோ செய்தததை கண்டு கொண்டான். இருந்தாலும் தன் கணிப்பு தவறாக இருக்குமோ என நினைத்தவன் வரும் வழியில் வேறொரு வழியினை தேர்ந்தெடுத்து வர பின்னால் வந்தவர்களை காணவில்லை. தான் தான் தவறாக ஊகித்து கொண்டோமோ என நினைத்தவன் ஆபீசிற்கு வந்தான். ஆபீசிற்கு வந்தவனின் கண்களில் முதலில் பட்டது ஆபீஸ் நுழைவு வாயிலில் இருந்து இருபது அடி தொலைவில் நின்று கொண்டிருந்த இருவரும் தான். இவங்க தானே அவங்க என மனது மீண்டும் சந்தேகம் கொள்ள அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் ங்கிற மாதிரி சநதேகம் வந்ததும் எல்லாமே தப்பா தான் தெரியுது என நினைத்து தன்னை தானே நிதானபடுத்தி அலுவலகத்திற்குள் நுழைந்தான்.
இப்போது ஆருண்யாவையும் யாரோ பின்தொடர்வதை அறிந்ததும் அவன் மனம் ஏதேதோ யோசித்தது. கூடவே அவளாகவே தன்னை தேடிவரவைக்க வில்லங்கமான யோசனையும் அவன் மூளையில் உதித்தது.

அன்று மாலை நகைக்கடையிலிருந்து கிளம்பிய ஆருண்யா ஸ்கூட்டி எடுத்து வெளியே வந்து யாரேனும் சந்தேகம் கொள்ளும் படி நிற்கிறார்களா? என பார்த்தவள் யாருமில்லை என உறுதி செய்த பின் வீடு நோக்கி சென்றாள். ஆனால் செல்லும் வழியிலே இருவர் அவளை பின் தொடர்ந்திட சற்று வேகமாக வண்டியை செலுத்த அவளை பின்தொடர்ந்தவர்களோ அதற்கு ஈடாக அவர்களும் வேகத்தை கூட்டினர். ஆருண்யா இன்னும் வேகத்தை அதிகரிக்க அவர்களும் இன்னும் அதிகரித்தனர். இதென்னடா வம்பு என நினைத்த ஆருண்யா மக்கள் நடமாட்டம் அதிகமும் இல்லாது வெகு குறைவாகவும் இல்லாத ஒரு இடம் பார்த்து ஸ்கூட்டியை நிறுத்தினாள்.
இவளது இந்த செயலை தன் மொபைலில் பார்த்துகொண்டிருந்த
அவன் உதடுகள் " பரவாயில்லை. போல்ட் அன்ட் ப்ரில்லியன்ட் கேர்ள்" என உச்சரித்தது. வண்டியை நிறுத்தியவள் பின்னே திரும்பி பார்க்க சற்று தள்ளி பைக்கை நிறுத்திய அந்த இருவரில் ஒருவன் வேடிக்கை பார்ப்பது போல தலையை அங்குமிங்கும் திரும்பிட மற்றொருவனோ ஆருண்யாவிற்கு முன்னே வண்டியை நிறுத்தி போன் பேசுவது போல் நின்று கொண்டான்.
தான் கிளம்பாமல் இவர்கள் கிளம்பபோவதில்லை என உறுதி செய்தவள் மனதில் ஒரு குழப்பம்.. தான் செய்வது சரியா என்று . அவளது குழப்பமான முகத்தினை திரையில் கண்டவன் முகமோ சுருங்கியது.


ஆருண்யா குழப்பமாக இருந்தாலும் தைரியத்தை வரவழைத்து வேடிக்கை பார்ப்பது போல் நின்று கொண்டிருந்தவனிடம்
சென்று " டேய். யாருடா நீ.. எதுக்கு டா என்னை பாலோ பண்ற" என கேட்க அவளது இந்த செயலை பார்த்து கொண்டிருந்தவன் முகத்திலே பெரும்புன்னகை பூத்திருந்தது.

"நான் எதுக்கு உங்களை பாலோ பண்ணனும். நீங்க என்ன பெரிய அழகியா?' என அவன் எதிர்கேள்வி கேட்க

"ஒழுங்கா பதில் சொல்லு. இல்லை போலீஸ்ல புடிச்சு குடுத்திடுவேன்' என ஆரா கூறிட

"என்ன நீ பூச்சாண்டி காட்டினா நான் பயந்திடுவேனா.. ஆமா நான் உன்னை பாலோ பண்றேன். அதுக்கு இப்போ என்ன?"

"எவ்ளோ தைரியம் இருந்தா என்னை பாலோ பண்றேன்னு என்கிட்டயே சொல்வ" என்று ஆருண்யா அவனிடம் எகிற "நானா எதுவும் வந்து சொல்லல. நீ தான் வந்துகேட்ட அதான் சொன்னேன். எனக்கு இப்போ பாலோ பண்றதுக்கு மட்டும் தான் ஆர்டர் வந்திருக்கு. கொலை பண்ண ஆர்டர் வந்தா அதையும் செய்ய தயங்கமாட்டேன்." என்றவன் பைக் ஸ்டார்ட் செய்து அவளை பார்க்க அவளோ அவனையே முறைத்து கொண்டிருக்க "என்ன பாக்குற. சீக்கிரம் போய் ஸ்கூட்டியை எடுத்துட்டு கிளம்பு. நான் உன்னை பாலோ பணணனும்" என்று கூற அவளுக்கோ கோபம் தலைக்கேற யாரோ ஒருவன் தன்னிடம் திமிர் பேச்சு பேச காரணமானவனுக்கு தன் மொபைல் எடுத்து அழைப்பு விடுத்தாள்.


அங்கே எதிர்திசையில் ஒன் டூ த்ரி
என்றவன் கூறி முடிக்க அழைப்பு வந்தது. கலகலவென ஒரு சிரிப்பை உதிர்த்த மித்ரன் அழைப்பை ஏற்று
ஹலோ எனகேட்க

"டேய் . என்னடா வேணும் உனக்கு.?நீயா என்கிட்ட வர்றவரைக்கும் உன் முன்னாடி வரமாட்டேன். உன்கூட பேசமாட்டேன்னு டயலாக்லாம் விட்ட . ஆனா.இப்போ ஆள் அனுப்பி என்னை பாலோ பண்றியா நீ? இப்படி பண்ணா கோபபட்டு உன்கிட்ட கத்துவேன்னு நினைச்சியா?" என அவள் பொரிந்து தள்ள அவளுக்கு எதிரே கூல்ட்ரிங்க்ஸூடன் நின்று கொண்டிருந்தான் பாலோ செய்த அவன்.

"ஹலோ மேடம் நீங்க ரொம்ப சூடா இருக்கீங்க. சோ இதை குடிச்சிட்டு கண்டினியூ பண்ணுங்க" என கூற அவன் கூறியது சரியாக உள்வாங்கிய பின்பு தான், தான் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பது நினைவில் வர போனை கட் செய்ய வந்தவளை "ஹேய் ஹேய்.. போனை கட் பண்ணிடாத. உன் முன்னால நிக்கிறவன் எவ்ளோ அழகா கெத்தா திமிரா ஆக்ட் பண்ணான். எவ்ளோ கஷ்டபட்டு ஸ்கிரிப்ட் எழுதி அவனுக்கு ப்ராக்டிஸ் கொடுத்து செய்ய வச்சிருக்கேன். ஆனா நீ அவனையும் என்னையும் பாராட்டாம போறியேமா. உனக்கு ஒரு கலையார்வம் இல்லையே" என அவளை சீண்ட " திரும்ப திரும்ப என்னை சீண்டுற இது நல்லதுக்கு இல்ல" என போனில் கத்தியவள்
எதிரே நின்று கொண்டிருந்த மித்ரனின் பணியாளிடம் "திரும்ப நான் போற வழியில எங்கேயாச்சும் வந்தத பார்த்தேன் உன்னை கொலை பண்ணிடுவேன்." என்றவள் ஸ்கூட்டி ஸ்டார்ட் செய்து கிளம்பிட அவனும் அவளை மீண்டும் பாலோ செய்தான்.
"இனி எதுக்கு என்னை பாலோ செய்றீங்க?" என கேட்க "நீங்க வீடு போற வரைக்கும் உங்களை பாலோ பண்ண ஆர்டர்" என்றிட எரிச்சல் ஏறிட "அவன் ஒரு பைத்தியம். அவனுக்கு வேலை செய்ற நீ இரட்டை பைத்தியம்'" என மனதிற்குள் திட்டியவள் வண்டி எடுத்து வீடு வந்து சேர்ந்தாள். இவையனைத்தையும் பாலோ செய்தவனின் பட்டன் கேமரா வழி பார்த்து கொண்டிருந்த மித்ரன்
"நீ சீக்கிரமே பழைய அடாவடி ஆருண்யாவா மாறிடுவ. உன்னை நான் மாத்திடுவேன்" என கூறிக்கொண்டான்.


வேறொரு புறம் " சார் காலையில நம்ம ஆட்கள் ஆருண்யா மித்ரன் இரண்டு பேரையும் பாலோ பண்ணாங்க. பட் ஈவ்னிங் ஒரு பிரச்சினை ஆகிடுச்சு. நமக்கு முன்னாடியே வேற ஒருத்தங்க அவளை பாலோ பண்ணாங்க. என்றிட "ம்ம்.. இப்போ தான் நீங்க இன்னும் அவளை நல்லா வாட்ச் பண்ணுங்க" என்ற பரத் லீசாவிடம் சென்று ஆருண்யாவை வேறு யாரோ ஒருத்தரும் பாலோ செய்வதாக கூற
"அப்போ சூப்பர். நம்ம கூட்டணி இன்னும் பெருசாக்கலாம். அவளுக்கு எதிரி யாரோ இருக்காங்க. அவங்க யாருனு கண்டுபிடிங்க" என்றவள் தன் அலங்காரத்தை சரிபண்ணுவதில் பிசியானாள்.

இங்கே ஆருண்யாவை பாலோ செய்தவனோ மித்ரனுக்கு அழைத்து " சார் மேடமை இன்னொருத்தரும் பாலோ பண்ணாங்க." என்றிட
"அது யாரு என்னங்கிற டீடெயில் சீக்கிரம் கலெக்கட் பண்ணுங்க. நாளைல இருந்து அவளை நல்லா கவனமா பாலோ பண்ணுங்க அவளுக்கு எந்த பிரச்சனையும் வந்திடகூடாது. வந்திச்சு உங்க கம்பெனி இருந்த இடம் தெரியாமல் அழித்துவிடுவேன்" என்று கடினமான குரலில் கூறியவன் போனை அணைத்தான். ஆருண்யாவிற்கு பிரச்சனை வரக்கூடாது என யோசித்தவன் தன்மேலும் சிறிது அக்கறை காட்டியிருந்திருக்கலாம்.
அதற்காக பின்வரும் நாட்களில் பெரிதும் வருந்தபோகிறான் என விதி தன்புத்தகத்தில் இப்பொழுதே அவன் பெயரில் எழுதி வைத்ததை அவன் அறியவில்லை.
தொடரும்...
எழுத்தாளர் - அருள்மொழி காதலி "ஷர்மி"
 
Top