• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காதல் தீ நீயே 3

Admin 02

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
320
அத்தியாயம் 3

அம்மா பின்னால் நின்றிருப்பதை அறியாத ருத்ரன் ஏதேதோ உளறிக்கொண்டு இருக்க, அவன் தோளில் அடிவிழுந்தது படீரென்று, "ஆ!.. அம்மாஆஆஆஆ..." ருத்ரன் வலியில் கத்த...

அவன் காதைப்பிடித்து திருகியவர் "அம்மாவேதாண்டா, அம்மா இருக்கிறதாலதான் எல்லோரும் இப்படி பயில்வான் மாதிரி இருக்கீங்க, இதுல பிரியாவை வேற சண்டைக்கு இழுத்து விடுறீங்க , ஏன் வீடு ஒழுங்கா இருக்கிறது பிடிக்கலையா உங்களுக்கு?... மாமியார் மருமகள் ஒற்றுமையாய் இருக்கிறது பிடிக்கலையா" என்றவாறே மீண்டும் அவனை அடிக்கப் போக...

அம்மாவை தன் பக்கம் இழுத்த மித்ரன் "மாம் ப்ளீஸ் விட்டுடுங்க அவனை, பிழைச்சுப் போறான்..." என்றவாறே அம்மாவை சமாதானப்படுத்திய மித்ரன் "ஆனால் மாமியார் மருமகள் சண்டை வரணும்னு ருத்ரன் நினைக்கிறான் அம்மா, அது ரொம்பவே தப்பு கொஞ்சம் என்னன்னு விசாரிங்க அவன்கிட்ட... அப்படியே புத்திமதியும் சொல்லுங்க இது சரியில்லை மாம்..." என்றவாறு ருத்ரனை அம்மாவிடம் கோர்த்துவிட்டு விட்டு மித்ரன் எஸ்கேப் ஆகிவிட...
"மாம் நிஜமாய் சொல்றேன் அவன்தான் முதல்ல ஆரம்பித்தான்... நான் சும்மாதான் பேசிக்கிட்டு இருந்தேன்... சரியாய் வந்துட்டீங்க, நான் மாட்டிக்கிட்டேன், சாரி மாம்" என்று மன்னிப்புக் கேட்டான்... ருத்ரன் நன்றாய் மாட்டிக்கொண்டான் அம்மாவிடம்...

அங்கே வீட்டுக்குப் போன ஆருண்யா அப்பாவிடம் கோபப்பட்டாள், "நீங்க எதுக்கு அப்பா அங்கே வந்தீங்க?... நான் என்ன சின்னக்குழந்தையா, எதுவா இருந்தாலும் சமாளிக்க மாட்டேனா நான்?..." என்று கத்த

"லேட் ஆனதால்தான் நான் வந்தேன்... அதுவும் மித்ரனும் வந்ததால்தான் நான் அங்கே வந்தேன் ஆரும்மா, மத்தபடி என் பொண்ணுதான் சிங்ககுட்டி ஆச்சே, அப்புறம் எதுக்கு எனக்கு பயமாம்..." என்றவாறே அவர் மகளை அணைத்துக் கொள்ள...
அப்பாவின் தோளில் சாய்ந்து கொண்ட ஆருண்யாவுக்கு மித்ரன் பற்றிய நினைவுகள் எழ, வேதனையில் கண்களில் இருந்து கண்ணீர் வர நாசுக்காக அதை அவர் அறியாது துடைத்துக் கொண்டவள் "சரிப்பா எனக்கு தூக்கம் வருது நான் போறேன்..." அப்பாவிடம் குட்நைட் சொல்லிவிட்டு தன் அறைக்குப் போய் விட்டாள் ஆருண்யா...

"படுக்கையில் விழுந்து தலையணையில் முகம் பதித்தவளுக்கு மீண்டும் அவன் நியாபகமே, ஒரு காலத்தில் தன் டிசைனை அழகா இருக்கு என்று கொண்டாடியவன் இன்று அப்படியே தலைகீழாக மாறிப்போய் தனக்கு எதுவுமே திருப்தியாக இல்லை என்று கூறிவிடவும் அவளுக்கு முகத்தில் அடித்தது போல இருந்தது... அப்படி தன்னை மனம் வருந்தச்செய்யும் அளவுக்கு தான் செய்த குற்றம்தான் என்ன?... இதிலேயே அவள் மனம் செல்ல வெகு நேரம் கழித்தே உறங்கினாள் ஆருண்யா...

அடுத்த நாள் மெரூன் கலர் சல்வார் அணிந்து, மிகவும் மெல்லிய செயினில் ஆங்காங்கே சிறுசிறு ரூபி கற்கள் பொருத்தப்பட்டு இருக்க, அவள் கழுத்தில் செயின் இருக்கோ இல்லையோ என்பது போலவும், ஆனால் அவளது ஒவ்வொரு அசைவிற்கும் அந்த வைரக்கற்கள் மின்னுவது போலவும் இருக்கும், அப்படி ஒரு சிறப்புடன் வடிவமைத்திருந்தாள் ஆருண்யா...

அவள் காதில் அணிந்திருக்கும் காதணி கூட அவ்வாறுதான் இருக்கும்... அவள் அப்பாவுக்குத்தான் அதிருப்தியாக இருக்கும்... 'பின்னே நகைக்கடைக்கார் பெண் இவ்வாறு சிம்பிளாக இருக்கலாமா?..'. எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் அவள் கேட்டகாததால் சலித்துப்போய் விட்டுவிட்டார்... 'குறைந்த பட்சம் பட்டுப்புடவையாவது கட்டிக்கொள்' என்று கூட கெஞ்சிப் பார்த்து விட்டார், ம்ஹும் மசியவேயில்லை அவருடைய செல்லமான பிடிவாதக்கார மகள்...

" ஆரூம்மா இன்னைக்கு நம்ம கடை விளம்பரத்திற்காய் சூட்டிங் எடுக்க வராங்கம்மா, இன்னைக்கு ஒரு நாளாவது ஒழுங்கா போயேன்..." என்று அவர் பரிதாபமாய் கூற... அவருடைய வருத்தம் என்னவென்றால் சூட்டிங் எடுக்கும் பொழுது ஓரமாக ஏதாவது ஒரு இடத்தில் தன் மகள் இருந்தாலும் அதை எல்லோரும் பார்ப்பார்களே, அதற்கு ஓரளவிற்காவது ரிச்சாய் உடை அணியலாமே என்பதுதான்...

"டாட் ப்ளீஸ் விளம்பரத்தில் நடிக்கப்போறது நான் இல்லை, லீசாதான் அதில் நடிக்கப் போறாங்க... சோ ப்ளீஸ் ஆளை விட்டுடுங்க, அது மட்டும் இல்லாமல் நீங்க சொல்ற நகைங்க எல்லாம் கழுத்தை உறுத்தும் அப்பா, ஒரு பத்து நிமிஷத்துக்கு மேல அணிய முடியாது..." என்றவளாய் அங்கே இருந்து கிளம்பினாள் தங்கள் கடைக்கு...

பொதுவாய் ஆடம்பரமாக தன்னை அலங்கரித்துக்கொள்ள அவளுக்கு விருப்பம் இருக்காது என்றுமே, ஆனால் அவள் அணியும் உடைகள் முதற்கொண்டு அணிகலன் வரை எல்லாமே பிராண்டட் ஐட்டமாகத்தான் இருக்கும், ஆனால் அதிலும் சிம்பிளாக இருக்கும்படிதான் அவள் தேர்வு இருக்கும்...

அப்பாவிடம் விவாதம் செய்ததில் கால் மணிநேரம் லேட் ஆகிவிடவே அவளுக்கு உள்ளுக்குள் பக் என்றிருந்தது, 'இனி இவன் வேறு ஆரம்பிப்பானே ! சும்மாவே மஹாராஜா மாதிரி பேசுவான், இனி என்ன பேசுவானோ' என்று... சற்று தயங்கி உள்ளே போகப் போனவள் உடனே தெளிவானாள் 'ஆஹா!... டென்ஷன் ஆனா ஆகட்டுமே!... அப்படியே ஆனாலும் இப்போ என்ன குறைஞ்சு போகப் போகுதாம், அப்படியாவது அவன் திமிர் குறையட்டும் டர்ட்டி பெல்லோவ்...' என்று நினைத்தவளாய் அலட்சியமாக கடையின் உள்ளே சென்றாள் ஆருண்யா...

கடைக்குள் பரபரப்பாய் இருக்க, ஒரு புறம் மாடல் லீஸா ஒரு இருக்கையில் அமர்ந்து ஜூஸ் குடித்தவாறு இருக்க...

'மஹாராஜாவை எங்கே காணோம்..?' என்று நினைத்தவளாய் அவனை தேடுவது அவனுக்கு தெரியக்கூடாது என்பதற்காக இயல்பாய் பார்ப்பது போல மற்றோரு புறம் பார்க்க, அங்கே போடப்பட்டு இருந்த சேரில் அமர்ந்திருந்தவன் அவளையே பார்ப்பது கண்டு உள்ளுக்குள் திடுக்கிட்டாலும் வெளியே அதை மறைத்துக்கொண்டவளாய்...

படு அலட்சியமாக அங்கே சென்ற ஆருண்யா அவன் அருகில் தன் டிசைன் அடங்கிய பைலை வைத்தாள்...

அவள் கரங்களில் இருந்த ப்ரேஸ்லெட்டை பார்த்தவன் பின் தன் வாட்ச்சைப் பார்த்தான், 'பக்கி அடுத்து நம்மை பார்க்கும் பாரேன்...' அவள் நினைத்து கூட முடிக்கவில்லை அவன் அவள் முகத்தை அழுத்தமாய்ப் பார்த்து வைக்க,
தான் நினைத்தது போல பார்த்து வைத்தவனைக் கண்டு அவளுக்கு சிரிப்பு வந்துவிடவே சிரித்துவிட்டாள்...

தன்னைப் பார்த்து வாய்க்குள் நகைத்தவளைப் பார்த்தவன் எதிரே இருந்த இருக்கையில் அவளை அமரச் சொல்ல... அவளோ அவன் சொன்ன இருக்கையில் அமராமல் சற்று தள்ளி இருந்த இருக்கையை எடுத்துப்போட்டு அமர்ந்துகொண்டாள்...

அவளது லூசுத்தனமான செயல்களைக் கண்டவனுக்கு கடுப்பாக வரவே நெற்றியில் பட்டென்று அடித்துக்கொண்டான்... அதைப் பார்த்த அவனது அசிஸ்டெண்ட் "சார் வாட் ஹேப்பன்ட்?..." என்றவாறு ஓடி வரவே...

"நோ! நோ நத்திங் ஐம் ஓகே..." என்றவாறே அவளைப் பார்க்காது பைலை எடுத்தான்... பின்னே ஒரு முடிவோடு தன்னை தேடி வந்திருப்பவளிடம் அவனும்தான் என்ன செய்ய முடியுமாம்...

'டேய் மித்ரா போகும் வரை உன் கெத்தை மட்டும் விட்டுவிடாதே, நேத்து நீ படுத்தியபாட்டுக்கு இன்னைக்கு புல் பார்ம்ல உன்னை பழி வாங்கணும்னே வந்திருக்கா... சோ அலர்ட்டா இருந்துக்கோடா... கூல் கூல் கூல்" என்றவாறே மனதை அமைதிப்படுத்திக்கொண்டு

"வெல் மிஸ் ஆருண்யா இதுதான் உங்களோட எட்டு வயதிலிருந்து வரைந்த டிசைனா?..." என்று கேட்க...

அவளும் தொழில் என்று வந்தவுடன் விளையாட்டை கை விட்டுவிட்டு அவன் முகம் பார்த்தாள்... "எஸ் சார், இதெல்லாம் என்னோட பழைய டிசைன்ஸ்... பட் இந்த பைல்ல இருக்கறது எல்லாம் பாரம்பரிய நகைகள் பற்றிய டிசைன், குறிப்பா செட்டிநாட்டு கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் இதெல்லாம், ஆனால் ஒரு சின்ன மாற்றம் என்னன்னா இக்காலப்பெண்கள் அணியும் வண்ணம் அதில் சின்ன சின்ன மாற்றம் செய்திருக்கேன்..." என்று அவள் சில மாடல்களை எடுத்துக் கொடுக்க... அவன் புருவங்கள் வியப்பில் விரிந்தது...

இக்காலப் பெண்கள் அணியும் விதத்தில் மிக எளிதாய் அதே சமயம் பாரம்பரியமும் கெடாமல் அவள் டிசைன் செய்திருந்த விதம் அவனுக்கு மிகவும் பிடித்துப்போய் விட, உதடுகள் அவளை பாராட்டும் விதமாய் புன்னகைத்தது...

"வாவ் ஆருண்யா உங்க டிசைன்ஸ் எல்லாமே சூப்பர், ஆனால் இது எல்லாவற்றிலும் எனக்கு மிகவும் பிடித்த டிசைன் ஒன்று உண்டு..." என்று சொல்லியவாறே அவன் கண்கள் அவள் மெல்லிய சங்கிலியில் பதிய...

அவன் பார்வை செல்லுமிடம் கண்டவன் தன்னுடைய துப்பட்டாவை ஒழுங்காய் போட்டுவிட்டு 'இவன் கண்ணை நோண்டி கொக்குக்குதான் போடணும், ம்ஹும் வேணும்னே பண்ணுறான்...' என்றவாறே அவள் இருக்கையில் இருந்து எழுந்து கொள்ள...

"மை காட் நான் தப்பா பார்க்கலை ஆருண்யா உங்களை, உங்க கழுத்தில் நீங்க அணிந்திருக்குற சங்கிலி அழகாய் இருக்கு... அதைத்தான் பார்த்தேன்" அவன் சொல்லவும் அவனை அவள் நம்பாமல் பார்க்க,

"நான் நிஜமாகத்தான் சொல்றேன் ஆருண்யா, பிகாஸ் இப்போ இருக்க பொண்ணுங்களுக்கு உன்னோட இந்த டிசைன் ரொம்ப பிடிக்கும், ஒரு வாய்ப்பு கொடேன் நான் நிரூபிக்கறேன்..." ஒரு டைரக்டராக அவன் ஆர்வமாய்க் கேட்க...

அவன் தன்னிடம் விளையாடுகிறானோ என்று அவன் கண்களைப் பார்த்தவளுக்கு அதில் இருந்த உண்மை புலப்படவும், சரியென்று அதைக் கலட்டிக் கொடுக்க போனாள்...

"நோ நோ ஆருண்யா இது பப்ளிக் பிளேஸ், இங்கே வைத்து இப்படி செய்ய வேண்டாம்... வா உன்னோட அறைக்கு போகலாம்..." என்றவாறே அவளை அழைத்துக்கொண்டு அவன் அறைக்குள் செல்ல முயல... அவனை வாயிலில் தடுத்து நிறுத்தியவள்...

"மூன்றாம் நபரான நீங்க என்னோட தனி அறையில் இருக்கிறது தப்பு மிஸ்டர் மித்ரன் சோ ப்ளீஸ் வெளியே இருங்க..." என்றவள் அறைக் கதவை சாத்திக் கொள்ள... மிதரனுக்கோ முகத்தில் அடித்தது போல ஆனது...

அவனால் அவள் செய்ததைத் தாங்கிக்கொள்ள இயலவில்லை, அதுவும் தன்னை அவள் மூன்றாம் நபர் என்றதை அவனால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை... கதவை தட்டி வலுக்கட்டாயமாக திறக்க சொல்லலாம் என்றாலோ சுற்றிலும் ஆட்கள் இருக்கின்றார்கள்...

அமைதியாய் இருக்கையில் வந்து அமர்ந்து கொண்டான் மித்ரன்... ஒரு பத்து நிமிடம் கழித்து வெளியே வந்தவள் அவனிடம் ஒரு பாக்ஸை நீட்டினாள் "இதில் அந்த சங்கிலி கம்மல் ப்ரேஸ்லெட் எல்லாமே ஒரு செட்டா இருக்கு..." என்று நீட்ட அதை வாங்கிக்கொள்ள சொல்லி அசிஸ்டெண்ட்டிடம் கண் ஜாடை செய்தான் மித்ரன்...

'ஏன் துரை வாங்கிக்க மாட்டாரா?... பெரிய இவன்னு நினைப்பு இவனுக்கு, இருடா உன்னை பேசிக்கறேன், சாயந்திரம் வரைக்கும் இங்கேதானே சுத்துவே நீ?..." மனதிற்குள் கருவிகொண்டிருந்தவள்

அடுத்து அவன் சொன்ன வார்த்தையில் அதிர்ந்து நின்றாள் ஆருண்யா!...

அவன் சொன்ன வார்த்தைகளின் கனம் தாங்காதவளாய் அப்படியே சரிந்து விழப்போனவளை இருக்கையில் அமர வைத்தவன், "நான் சொன்னது உங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன் மிஸ் ஆருண்யா...?" என்றவனாய் அங்கே நின்றிருந்த மாடல் லீஸாவிடம் சென்றான் அன்றைக்கு அவள் நடிக்க வேண்டிய காட்சிகளை விளக்குவதற்காய்....
தொடரும்...

எழுத்தாளர் : ரஜனி
 
Top