• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 13

"ஏன் ராஜேஷ் இப்படி பண்ணீன? உன்னால ஒவ்வொரு நிமிஷமும் நான் வெளில செத்துட்டு இருக்கேன்.. இதுக்கு பேசாமல் நான் அன்னைக்கே செத்து போயிருக்கலாம்" நிஷா தன் கணவன் ராஜேஷிடம் அந்த கைதிகள் பார்வையாளர் அறையில் பேசிக் கொண்டு இருந்தாள்.

"சாரி நிஷா! இப்படி எல்லாம் நடக்கும்னு நான் கனவுல கூட நினைக்கல.. அப்ப அந்த நேரத்துல நீ மட்டும் தான் என் கண்ணுக்கு தெரிஞ்ச.. உனக்காக மட்டும் தான்.. உனக்கு எதுவும் ஆகிடக் கூடாதுன்னு தான் இந்த கொலையை நான் செஞ்சேன்" என்றான் ராஜேஷ்.

"அந்த ராம் தப்பிச்சுட்டாரா? நான் வெளில வர்ற வரை நீ எப்படியாவது அவரைக் காப்பாத்து நிஷா.. எனக்கு பெயில் கிடைச்சுடும்னு லாயர் சொல்லி இருக்கார்.. அவர்கிட்ட மன்னிப்பு கேட்டு ஹெல்ப் பண்ண சொல்லு" ராஜேஷ் சொல்ல,

"எந்த முகத்தை வச்சுட்டு மன்னிப்பு கேட்கறதுன்னு தெரில ராஜேஷ்.. நம்ம சுயநலதுக்காக ஒரு நல்ல மனுஷன் வாழ்க்கைல விளையாடிட்டோம்னு கில்டியா இருக்கு" என்று நிஷா சொல்லும் போதே கண்களில் கண்ணீர் வடிய,

"நான் வந்துடுவேன் நிஷா.. ஒரு மாசத்துல கண்டிப்பா பெயில் வாங்கிடலாம்னு சொன்னாங்க.. அதுவரை அட்ஜஸ்ட் பண்ணு டா.. ப்ளீஸ் நிஷா.. அழாத ப்ளீஸ்" அவள் அழுவதை காதலித்து கரம் பிடித்த ராஜேஷால் தாங்க முடியவில்லை.

"இன்னைக்கு நமக்கு தல பண்டிகை நிஷா! இந்த உலகம் நம்மளை எங்கே கொண்டு வந்து நிறுத்தி இருக்கு பார்த்தியா?" என்ற ராஜேஷ் இதழ்களில் விரக்தி புன்னகை.

"என்னால முடியாது ராஜேஷ்.. அந்த ராம்கிட்ட உண்மையை சொல்லிட்டு அவன் முன்னாடி நிக்குற தைரியம் எனக்கு சுத்தமா இல்ல.. எவ்வளவோ அவாய்ட் பண்ணிட்டேன்.. இந்நேரம் ராம்க்கு என் மேல சந்தேகம் கூட வந்திருக்கலாம்.. எனக்கு நீ முக்கியம்.. அதுக்காக நான் நான்..." என்று அழுத்தவள்,

"நீ வெளில வரும் போது நான் உயிரோட இல்லைனா உனக்குன்னு ஒரு நல்ல வாழ்க்கையை தேடிக்கோ ராஜேஷ்.. ராம் ச்சீ'னு ஒரு பார்வை பார்த்தா அந்த பார்வையை கூட என்னால ஃபேஸ் பண்ண முடியாது.." என்றவள் ராஜேஷ் கூப்பிட கூப்பிட ஓடிவிட்டாள் அந்த சிறையில் இருந்து.

அடுத்ததாய் அவள் சந்திக்க சென்றது அந்த ரவுடிகளை தான். நிஷாவின் காதலியாக இவர்கள் நினைத்திருக்கும் ராமை எதாவது செய்தே தீருவேன் என பிடியாய் நிற்கும் ரவுடியை.

"உனக்கு இங்கன என்ன வேல? எங்களுக்கு தேவ உன் காதலானோட உயிர் தான்.. எத்தனையோ ஸ்கெட்ச்ச போட்டும் மிஸ் ஆயிட்டே இருக்கான் அவன்.. அவனுக்கு ரொம்ப நாள் எல்லாம் ஆயுசு இல்ல..சொல்லிரு" என்று அந்த நான்கு பேரில் ஒருவன் கூற,

"தயவுசெஞ்சு அவரை மன்னிச்சு விட்டுடுங்க.. நாங்க இனி அந்த அண்ணாமலை பக்கமே திரும்ப மாட்டோம்" என கையெடுத்து கும்பிட்டு நின்றாள் நிஷா.

"என்னடா இந்த பொண்ணோட..." என்றவன்,

"இந்தா பாரு! ஐயா ஒருவாட்டி சொல்லிட்டா சொன்னா சொன்னது தான்.. புரிதா? திரும்ப அவருகிட்ட போய் மன்னிக்க சொல்லி, உனக்கு பாவம் பார்த்து நின்னோம்னு வையேன்... எங்க உசுரு எங்களுக்கு இல்ல" என்றவன்,

"வாங்க டா போலாம்" என்றபடி வண்டியில் ஏறி கிளம்பிவிட்டிருக்க, தவித்துக் கொண்டே இருந்தாள் நிஷா.

சரியாய் அப்போது அழைத்திருந்தான் வெங்கட். ராஜேஷின் நண்பன். ராஜேஷ் வெளிவரவும் நிஷாவை இக்கட்டில் இருந்து காப்பாற்றவும் உதவிக் கொண்டிருப்பவன்.

"சொல்லு வெங்கட்!" நிஷா கலங்கிப் போய் பேச,

"லாயர் நாளைக்கு உன்னை மீட் பண்ண சொன்னார்" என்றவன்,

"ராம்கிட்ட எப்ப உண்மையை சொல்லி ஹெல்ப் கேட்க போற? நீ லேட் பண்ற ஒவ்வொரு நேரமும் அவனுக்கு தான் ஆபத்து.. சொல்ல சொல்ல கேட்காமல் உன் ராஜேஷ்க்காக இன்னொருத்தன் உயிரோட விளையாடாத" என்றான் வெங்கட்.

ஆரம்பத்தில் இருந்து நிஷாவிற்கும் ராஜேஷிற்கும் சொல்லிக் கொண்டு தான் இருக்கிறான். யார் பேச்சையும் கேட்காமல் ராஜேஷ் ஒருவனை மட்டும் மனதில் வைத்து அவனைக் காப்பாற்றினால் போதும் என்று எடுத்த முடிவு.. எவ்வளவு பெரிய தவறு என்று இப்போது தான் புரிந்தது அவளுக்கு.

"கேட்குதா நிஷா?" வெங்கட் மீண்டும் சொல்ல,

"நான் அப்புறம் பேசுறேன் வெங்கட்" என்றவள் வைத்துவிட்டாள். மொபைலைப் பார்த்தவளுக்கு ராம் தன்னை தொடர்பு கொள்ள முயற்சித்ததும் தெரிந்தது.

அடுத்து என்ன என்ற கேள்வி அவளை சுற்றி வளைக்க, சீக்கிரமே ராமிடம் பேசி பிரச்சனையை முடிக்க வேண்டும் என்று எப்போதும் நினைப்பது போலவே இப்போதும் நினைத்துக் கொண்டாள்.

அடுத்தநாள் காலை விடியும் பொழுது ராம் போன் செய்து அது எடுக்கப்பட்டால் நிஷாவை வீட்டிற்கு அழைக்க வேண்டும் என முடிவு செய்திருக்க, காலை பதினோரு மணிக்கு தீபன் கால் செய்யவும் ராம் அறைக்குள் வந்தான் கண்ணன்.

அங்கே ராம் ஸ்பூன் மூலம் சாப்பிட்டுக் கொண்டிருக்க, அருகே சித்ரா அமர்ந்திருந்தார்.

"ஊட்டி விடுறேன்னு சொன்னா வேண்டாம்னு இப்படி சாப்பிட்டுட்டு இருக்கான் டா.. எப்ப தான் வீட்டோட ஒட்டப் போறானோ!" என கண்ணனைப் பார்த்ததும் சித்ரா புலம்ப,

"சாப்பிட்டியா ண்ணா?" என்றான் கண்ணன்.

"ம்ம் ஆச்சு" என்றபடி பிளேட்டை தள்ளி வைக்க,

"சரி கிளம்பு வெளில போனும்" என்றான் வேகமாய்.

"என்ன டா உதை வேணுமா? அவனே கையை அசைக்க முடியாமல் இருக்கான்? டாக்டர் கூட அஞ்சு நாள் ரெஸ்ட் எடுக்க சொல்லி இருக்காங்க தானே? இன்னும் பத்து நாளைக்கு இந்த ரூமைவிட்டு அவன் வெளில வரக் கூடாது" என்று சித்ரா சொல்ல,

"ம்மா! இம்போர்ட்டண்ட் மா.. நான் பார்த்துக்குறேன்.. சீக்கிரமே கூட்டிட்டு வந்துடுவேன்" கண்ணன் சொல்ல, சித்ரா எதிர்க்கும் முன்,

"தீபன் கால் பண்ணினாரா கண்ணா?" என்றான் ராம்.

"ஹ்ம்ம்" எங்கோ பார்த்து கண்ணன் கூற, அதற்கான அர்த்தம் விளங்கிடுமா என்ன!.

"ம்மா! வந்துடுறோம்" என்று எழுந்து கொண்டான் ராம்.

"டேய்! ஏன்டா என்னை படுத்துறீங்க? எப்பவும் என்னை டென்ஷன் பண்றதே உங்க பொழப்பா போச்சு" ராம் பின்னால் அழாத குறையாய் சித்ரா பேசி வர,

"ம்மா! வெளில போகும் போது இப்படி தான் புலம்புவீங்களா?" என்று லதா கேட்க,

"நீ மட்டும் தான் டி இன்னும் பேசல.. பேசுங்க.. எல்லாரும் என்னையே பேசுங்க" என்று அதற்கும் புலம்ப,

"கண்ணா!" என்று வந்தார் தங்கராஜ்.

"இன்னைக்கு வீட்டுலையா பா?" என்றான் கண்ணன்.

"ஹ்ம்ம் மூணு நாள் லீவ் தானே பா.. நான் வேணா கூட வரவா?" சித்ராவைப் பொருட்படுத்தாது தங்கராஜ் கேட்க,

சில நொடிகள் யோசித்தவன், "வேணாம் பா.. நான் கால் பண்றேன்" என்றுவிட்டு ராமுடன் கிளம்பினான்.

"ஏன்க இப்படி இருக்கானுங்க ரெண்டு பேரும்?" கணவனிடம் சித்ரா கேட்க,

"அவங்களுக்கு தெரியும் விடு சித்து" என்றவர்,

"இந்த பண்டிகை இப்படி இருக்கும்னு நான் எதிர்பார்க்கல.." என்று சொல்ல,

கேள்வியாய் பார்த்த சித்ராவிடம் "ராம் அச்சிடேன்ட் பத்தி தான் சொல்றேன்" என்று சமாளித்துவிட்டு அறைக்கு சென்றுவிட்டார்.

"தீபன் கால் பண்ணினாங்களா கண்ணா? என்கிட்ட எதுவும் சொல்லலயே? என்னாச்சு? என்ன சொன்னாங்க?" ராம் கேட்க, அமைதியாய் இருந்தான் கண்ணன்.

"சொல்லு கண்ணா? எனிதிங் சீரியஸ்?" கண்ணன் கேட்க,

"ண்ணா! என்கிட்ட எதுவும் கேட்காதீங்க.. தீபன் அண்ணாகிட்ட பேசிக்கலாம்" என்று சொல்ல,

கண்ணனிற்கு எதுவோ தெரிந்திருக்கிறது என்று மட்டும் புரிந்தது ராமிற்கு.

தீபனை பார்க்கும் வரை எதுவும் ஓடவில்லை ராமிற்கு. மனதிற்குள் எதுவோ ஒன்று தொல்லை செய்ய, கண்ணனை திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தான் ராம்.

நிஷாவிற்கு ஏதேனும் பிரச்சனை இருக்குமோ? என்ற அளவில் தான் இப்போது அவன் கவலை.. என்னவாய் இருக்கும் என்ற எண்ணம் மட்டும் ஓட மனது வேறு வேறாய் யோசிக்க, அரை மணி நேரப் பயணம் யுகமாய் தெரிந்தது.

தீபன் ஆபீஸ் வர கூறாமல் ஒரு ரெஸ்டாரண்ட் பெயரை சொல்லி அங்கே வர சொல்லியிருந்தான்.

அந்த ரெஸ்டாரண்ட் அருகே சென்று காரை நிறுத்திய கண்ணன், ராம் இறங்க செல்லும் முன்,

"அண்ணா! என்று அழைத்தான்.

"என்ன டா?" என்று அவன் பக்கம் திரும்பி ராம் கேட்க,

"நீ ஓகே தானே? எதுவானாலும் ஃபேஸ் பண்ணுவ தானே?" என்று கேட்க, திக்கென்று ஆனது ராமிற்கு.

அவன் அதிர்ந்த தோற்றத்தை பார்த்த கண்ணன்,

"ஐ க்நோ! நீ ஸ்ட்ரோங் எல்லாம் ஓகே தான்.. பட் எந்த ப்ரோப்லேம்னாலும் மெண்டலி ஃபேஸ் பண்ண தயாரா இருக்கனும்.. அதுக்காக தான் கேட்குறேன்" என்று கண்ணன் கூற, என்னவென்றே தெரியாமல் தலை தன்னால் ஆடியது ராமிற்கு.

ராம் மேல் கோபம் தான்.. இல்லாமல் இல்லை.. ஆனாலும் அண்ணன் என்ற பந்தம் எப்போதும் மாறாதே! அவனை தேற்றி அழைத்து செல்ல கேட்ட கண்ணன்,

ராமின் பாவனைகளை இப்போதே யோசிக்க ஆரம்பித்துவிட்டான். அவன் தேர்ந்தெடுக்கும் வழியைப் பொறுத்து தான் அவனுடன் உடனிருப்பதா வேண்டாமா என முடிவு செய்ய வேண்டும் என்பது வரை தெளிவாய் இருக்கிறான் கண்ணன்.

தீபனிடம் கூட சொல்லாமல் ஒரு வேலையை கண்ணன் செய்திருக்க, இன்னும் சற்று நேரத்தில் அனைவருக்கும் அதுவும் தெரிய வரும்.

"போலாம் கண்ணா!" யோசித்துக் கொண்டிருந்த கண்ணனை அழைத்தான் ராம்.

"ம்ம்!" என்றவன் உள்ளே அழைத்து செல்ல, அங்கே தீபன்னுடன் மற்றொருவனும் நின்றிருந்தான்.

உபசரிப்புக்கு கூட யார் முகத்திலும் புன்னகை இல்லாமல் இருக்க, இன்னும் இன்னும் உள்ளுக்குள் ஒரு பயம் ராமை ஒரு வழியாய் ஆக்கிக் கொண்டிருந்தது.

"எதுவா இருந்தாலும் சொல்லுங்க தீபன்" ராம் தான் முதலில் தைரியத்தை மனதில் கொண்டு வந்து கேட்டான்.

கண்ணனிடம் காட்டிய அதே புகைப்படங்களை ராம் முன் வைத்தவன் அனைத்தையும் கூறத் துவங்க, கண்ணன் புறம் முழுதாய் அமைதி ராமைப் பார்த்தவாறு.

"இவ்வளவும் நேத்து மட்டும் கலெக்ட் பண்ணின டீடெயில்ஸ் ராம்.." எஸ் தீபன் சொல்ல,

ராமின் பார்வை முழுதும் ஹாஸ்பிடலில் தன்னைஒளிந்து நின்று பார்க்கும் நிஷாவின் புகைப்படத்தில் நிலைக்குத்தி நின்றது.

பொய் என்று சொல்லும்படி ஒரு செய்தி கூட இல்லை என்பதாய் அனைத்திற்கும் சாட்சியாய் போட்டோக்களும் ஆதாரங்களும் முன் வைக்கப்பட்டிருக்க, அடிபட்டிருந்த கையை டேபிளில் வைத்திருந்த ராமின் கண்களில் எண்ணிலடங்கா அதிர்ச்சி.

அத்துடன் முழுதாய் நிஷாவின் பின்புலத்தையும் கூறி இருந்தான் தீபன்.

அத்தனையையும் பார்த்தவாறு கண்ணன் அமர்ந்திருக்க, அவனின் மொபைல் ஒலி எழுப்பியது.

"சொல்லு டா" கண்ணன் சொல்ல, எதிர்ப்பக்கம் கூறிய செய்தியில்,

"உள்ளே தான் இருக்கோம் வாங்க" என்று சொல்லி போனை வைக்க, தூரத்தில் உள்ளே நுழைந்து கொண்டிருந்தனர் கண்ணனின் நண்பனுடன் வெங்கட், நிஷா.


தொடரும்..
 

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
Thank u
 
Top