• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 20

"சித்து! உனக்கு ஏன் இவ்வளவு டென்ஷன்? ஜஸ்ட் உன் அண்ணன்கிட்ட பேச தான் போறோம்.. எல்லாம் சரினு ஆனா அப்புறமா எல்லாம் பார்த்துக்கலாமே? இப்ப எதுக்கு பூ, பழம், வெத்தலனு எடுத்து வச்சுட்டு இருக்குற?" தங்கராஜ் மனைவியின் பரப்பிரப்பில் கேட்க,

"நீங்க சும்மா இருங்க.. உங்களுக்கு என்ன தெரியும் இதை பத்தி.. எல்லாம் நான் பார்த்துக்குறேன்..இவனுங்க வேறு எங்கே போனானுங்களோ" என்ற சித்ரா,

"ரெண்டு பேரும் வர்றதுக்குள்ள நல்ல நேரம் முடிஞ்சிடும்.. வாங்க நாம போய் பேசிட்டு வந்துடலாம்" என்று சொல்ல,

"ஒரு முடிவோட தான் இருக்கனு தெரியுது.. ஆனாலும் எந்த முடிவா இருந்தாலும் ஏத்துக்கணும் சித்து மா" மனைவியிடம் தெளிவாய் சொல்ல,

"அதெல்லாம் நல்ல முடிவா தான் இருக்கும்.. எதுவும் பேசாமல் வாங்க நீங்க" என்றதும், மலைப்பாய் இருந்தது தங்கராஜிற்கு.

இருவரும் போயிருக்கும் காரியம் என்ன என்று தெரியாமல் மனைவி இவ்வளவு அவசரப்படுவது மனதை கலவரப்படுத்தினாலும் எல்லாம் நல்லபடியாய் அமையும் என்ற நம்பிக்கையில் தான் அவரும் சித்ராவுடன் துணை நிற்கின்றார்.

அபர்ணா கல்லூரி சென்றிருக்க, கீர்த்தி ஆஃபிஸ் சென்றிருக்க, ஜெகன் மட்டும் வீட்டில் இருந்தார்.

ஏற்கனவே தங்கராஜ் வந்து முக்கியமான விஷயமாய் பேச வருவதாக சொல்ல, தானும் கீர்த்தி திருமண விஷயமாய் பேசவே வீட்டில் இருந்தார்.

"அண்ணே!" சித்ரா குரல் கொடுக்கவும் வெளிவந்த ஜெகன், இருவரும் நின்ற தோரணையில் தன்னை மறந்து பார்த்திருந்தார்.

"என்ன ஜெகா! உள்ள கூப்பிட மறந்து போச்சா?" கிண்டலாய் தங்கராஜ் கேட்க,

"அட ச்ச! நான் ஏதோ நினைப்புல நின்னுட்டேன் அத்தான்.. வாங்க உள்ள வாங்க ரெண்டு பேரும்" என்று அழைக்கவும், முகமலர்ச்சியுடன் உள்ளே நுழைந்தார் சித்ரா.

தாம்பூலத் தட்டுடன் வந்திருக்கும் தங்கையின் குடும்பத்தை பார்த்ததுமே விஷயம் ஓரளவு புரிந்தது ஜெகனிற்கு.

ராம், நிஷா விஷயம் ஓரளவு தெரிந்திருக்க, "உட்காருங்க.. காபி போடுறேனே!" என்றார் ஜெகன் கொஞ்சம் குழப்பதோடே.

"அண்ணே! நம்ம வீட்டுல என்ன.. அதெல்லாம் ஒன்னும் இல்லை.." என்ற சித்ரா உள்ளே சென்று தண்ணீர் எடுத்து வந்து தங்கராஜிடம் கொடுத்தார்.

யார் முதலில் ஆரம்பிப்பது என ஜெகனும் தங்கராஜும் நினைத்தபடி அமர்ந்திருக்க, சித்ரா தான் பேச்சை துவங்கினார்.

"இதை பார்த்ததும் உங்களுக்கு புரிஞ்சிருக்கும் நினைக்குறேன்.. நம்ம ராம்க்கு கீர்த்தியை கேட்டு வந்திருக்கோம்.." சித்ரா சொல்ல,

"இரு சித்ரா!" என்று அவர் கைகளைப் பிடித்த தங்கராஜ்,

"ஜெகாக்கு ராமைப் பத்தி நல்லாவே தெரியும்.. சொல்ல வேண்டியது எதுவும் இல்ல.. ஆனாலும் ஒரு சின்ன புள்ளியா அவன் கல்யாணத்துல எடுத்திருந்த முடிவு உன்னை உறுத்தும்" என்று சொல்ல,

"அத்தான் அதெல்லாம் ஒன்னும் இல்லை.." என்று ஜெகன் சொல்லவர,

"நான் முழுசா சொல்லிடுறேன் ஜெகா" என்றவர்,

"அது எங்களுக்குமே வருத்தம் தான். ஆனா அது தப்பான முடிவுன்னு அவனுக்கும் தெரிஞ்சு விலகிட்டான்.. இப்ப அவன் முழு மனசா தான் கல்யாணத்திற்கு சம்மதம் சொல்லியிருக்கான்.. பொண்ணு யாரா இருந்தாலுமே!" என்றவரை,

"அதெப்படி! என் அண்ணன் பொண்ணைத் தவிர வேற பொண்ணு இனி நான் பார்ப்பேனா?" என்று சித்ரா சொல்ல,

"சித்து! அதை ஜெகா தான் முடிவு பண்ணனும்.. நீ கொஞ்சம் பேசாம இரு" என்ற தங்கராஜ்,

"சித்ராக்கு கீர்த்தியை தான் முதல்ல இருந்தே ராம்க்கு கட்டி வைக்கணும்னு ஒரு ஆசை.. டெய்லி ஒருமுறையாவது அதை சொல்லி புலம்பிடுவா.. ஆனா முடிவு உன்னோடதும் கீர்த்தியோடதும் தான்.. கீர்த்திக்கு கூட ராம் பத்தி எல்லாம் தெரியும்" என்று கூற,

எல்லாம் தெரியும் என்பதன் அர்த்தம் மற்றவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.

"அத்தான்! நீங்க இவ்வளவு சொல்லணும்னு இல்ல.. எனக்கும் இதுல ரொம்ப சந்தோஷம் தான்.. ராம் மாதிரி ஒரு பையன் கீர்த்திக்கு கிடைச்சா எனக்கு அதைவிட என்ன வேணும்? நான் இவ்வளவு நாள் இப்படி நடக்கும்னு நினைச்சதே இல்ல.. ஆனா கீர்த்திகிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டா நல்லதுன்னு தோணுது.. தப்பா நினைச்சுக்காத சித்ரா" என்றார் ஜெகன்.

"இதுல தப்பா நினைக்க எதுவுமே இல்ல.. சித்ராவுமே முதல்ல ராம்கிட்ட கேட்டு ராம் சரினு சொன்ன பின்னாடி தான் இங்க வந்ததே.. நமக்கெல்லாம் விருப்பம் இருக்குற மாதிரி பசங்களுக்கும் ஒரு ஆசை இருக்கும்ல" என்று சொல்ல,

"நானே கீர்த்திகிட்ட பேசுறேன்" என்றார் சித்ரா.

"சரி மா" என்று சிரித்த முகமாய் ஜெகன் கூற, அதுவே அவர் சம்மதத்தையும் கூறியது.

"அப்ப சாயந்திரம் நீங்க இருக்கும் போதே பேசிடுறேன்" சித்ரா சொல்ல,

"என்னவோ கீர்த்தி சம்மதமே சொல்லிட்ட மாதிரி சித்ரா முகத்துல சந்தோசத்தை பாரேன்" தங்கராஜ் சொல்ல,

"அப்படி நடந்தா எனக்கு அதைவிட என்ன வேணும்த்தான்" என்றார் ஜெகனும்.

அனைவருக்குமே தெரியும் ஜெகனிடம் கீர்த்தி பேசுவதில்லை என்று. அது ஏன் என்று அபர்ணா மூலம் கேட்டு பதில் இல்லாமல் போனபின் யாரும் எதுவும் கேட்டுக் கொண்டதில்லை.

ஆனால் ஜெகனுக்கு தெரியாமல் கீர்த்தி எந்த செயலும் செய்தது இல்லை. அபர்ணாவின் படிப்பு, கீர்த்தியின் வேலை என அனைத்தும் அபர்ணா மூலம் ஜெகனிடம் சொல்லிவிடுவாள் கீர்த்தி.

தன் காதல் என்ற ஒன்றை மட்டும் கீர்த்தி மனதில் பூட்டி வைத்து மறைத்திருக்க, அதை யாரும் அறிவார்களா இனியாவது என்று தெரியவில்லை.

பன்னிரண்டு மணி அளவில் வீடு வந்து சேர்ந்தனர் கண்ணனும் ராமும். இருவரின் முகத்தை வைத்தே போன விஷயம் நமக்கு சாதகமாய் அமையவில்லை என்பதை தெரிந்து கொண்டார் தங்கராஜ்.

வந்ததும் அவர்களிடம் சித்ரா ஜெகனிடம் பேசியதை வாய் ஓயாமல் சொல்லியபடி இருக்க அதில் கவனம் செல்லவில்லை மற்ற மூவருக்கும்.

ராம் முகம் அவ்வளவு இறுக்கமாய் இருக்க தன்னறைக்கு சென்றவன் பின்னோடே சென்றார் தங்கராஜும்.

"ஏன் டா அவன் ஒரு மாதிரி இருக்கான்?" கண்ணனிடம் சித்ரா கேட்க,

"இப்ப தான் உங்களுக்கு தெரியுதா?" என்றான் கண்ணனும்.

"ஏதோ சரி இல்ல.. என்னடா பண்ணிட்டு வந்திங்க?" மீண்டும் முறைப்புடன் சந்தேகமாய் கேட்க,

"அட! அதெல்லாம் ஒண்ணுமில்ல மா.. ரொம்ப நேரம் ஆச்சுல்ல? கை வலியோ என்னவோ!" என்றான் பட்டுக்கொள்ளாமல்.

"என்ன ராம்? என்ன சொன்னான் அந்த ஆளு? முகமே சரி இல்ல?" தங்கராஜ் ராமிடம் கேட்க,

"என்ன சொல்வான்? என்ன சொல்ல? போனதுமே போய்ட்டு வாங்கனு சொல்லிட்டான்" அவ்வளவு கோபமாய் ராம் சொல்ல,

"ண்ணா! ஏன் கத்துற.. அம்மா வந்துட போறாங்க" என உள்ளே நுழைந்தான் கண்ணன்.

"என்ன கண்ணா? என்ன ஆச்சு? ஏன் ராம் இவ்வளவு கோபமா இருக்கான்?"

"ப்பா! ஒண்ணுமில்ல பா.. ப்ரோப்லேம் சால்வ் ஆயிடுச்சு" என்றான் சாதாரணமாய் கண்ணன்.

"சால்வ் ஆகிட்டுன்னா இவன் ஏன் டா இப்படி நிக்குறான்? என்ன நடந்தது?" தங்கராஜ் கேட்க,

"இவனை என்னனு சொல்ல ப்பா.. இதுக்கு தான் என் கூட வந்தானா? எனக்கு வர்ற கோபத்துக்கு..." ராம் கோபமாய் பேச,

"அப்படி என்ன தான் டா பேசின?" என்றார் தங்கராஜும் கண்ணனிடம்.

"என்கிட்ட கேளுங்க ப்பா.. இவன் என்ன பண்ணினான் தெரியுமா? அந்த ஆளு காலுல போய் விழுறான் பா.. அப்படி தான் அவன் என்னை மன்னிக்கணுமா? நான் என்ன தப்பு பண்ணிட்டா அவன்கிட்ட மன்னிப்பு கேட்க போனேன்?" ராம் கொதித்து கேட்க,

"ண்ணா இப்ப ஏன் உனக்கு இவ்வளவு கோபம்? ஒரு ப்ரோப்லேம் முடியுதானு பாரு.. அதையே ஏன் நினைச்சுட்டு இருக்குற? அவன் பெரிய இடத்துல இருக்கான்.. நாம சண்டை போட்டு நாளைக்கு பிரச்சனை ஆகி.. எதுக்கு இதை இழுக்கணும்? அவன் விழுனு சொன்னான் நான் விழுந்துட்டேன்.. இனி நம்மகிட்ட பிரச்சனைக்கு வர மாட்டான்ல?" கண்ணன் சொல்ல,

"என்ன கண்ணா சொல்ற? ஏன் டா இப்படி பண்ணின?" தகப்பனாய் கலங்கிப் போய் தங்கராஜ் கேட்க,

"ப்பா! பீ கூல் ப்பா.. பிரக்ட்டிக்கலா யோசிங்க நான் செய்தது சரினு புரியும் உங்களுக்கு"

"அதுக்காக அவன்கிட்ட நீ?...."

"கேளுங்க.. நல்லா கேளுங்க பா.. வர்ற வழி முழுக்க என்னை சமாதானம் பேசிட்டு வர்றான்.. என்னை அங்க நிக்கவே விடாமல் இவனே உள்ள போய்.. ப்ச் ஷிட்" தன்னால் எதுவும் செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் ராம் பேச,

"ண்ணா! அப்ப சொன்னது தான்... நான் பிரச்சனையை முடிக்கணும் நினைச்சேன்.. அது முடிஞ்சிடுச்சி.. அவ்வளவு தான்.. இனி அவனை நாமலோ இல்ல அவன் நம்மையோ பார்க்க போறது இல்ல.. இத்தோட இதை விடுங்க.." என்றவன்,

"பதவில இருக்குறவங்க எப்ப என்ன செய்வாங்கனு தெரியாது.. ஹீரோ மாதிரி சவால் விட்டுட்டு வந்து பின்னாடி அம்மா, அப்பா, தங்கச்சினு ஒவ்வொருத்தரும் கொஞ்சம் லேட்டா வீட்டுக்கு வந்தாலே பதறிட்டு இருக்கனும்.. இதெல்லாம் எதுக்கு? நாம ஒன்னும் அவ்வளவு பெரிய ஆளுங்க இல்ல.. அவன் செய்யுறதுக்கு அவனுக்கான தண்டனை எப்போ எப்படி கிடைக்கும்னு நமக்கு தெரியாது.. பின்ன கடவுள் எதுக்கு பா?"

"அண்ணாவை வெளில நிற்க சொல்லிட்டு நான் உள்ளே போனேன்.. உன் அண்ணனுக்காக நீ என் காலுல விழுவியானு கேட்குறான்.. என் அண்ணனுக்காக நான் விழ மாட்டேனா? செஞ்சேன்.. உடனே அவனும் மனசெல்லாம் மாறிடல.. இனி என்கிட்ட வச்சுக்காதீங்கனு தான் சொன்னான்.. தப்பிச்சோம் டானு வெளில திரும்பினா இவன் பாத்துட்டான்.. ஆ.. ஊ.. னு குதிக்குறான்..போனவன் வந்துட்டா என்ன பண்றதுன்னு இழுத்துட்டு வந்தேன்" கண்ணன் அவன் பாணியிலேயே சிரிப்புடன் முடிக்க,

"அவனை இல்லாமல் பண்ணியிருந்தாலும் நாம நல்லா தான் இருந்திருப்போம்" கோபமாய் ராம் சொல்ல,

"எங்கே? ஜெயில்லயா?" என்று கேட்க, ராம் கோபமாய் பார்க்க,

"என்ன சொல்றதுன்னு தெரியல கண்ணா.. ஆனா நீ எப்படி அவன் காலுல விழலாம்.. மனசே கேட்க மாட்டுது டா.. உன் அம்மாக்கு மட்டும் தெரிஞ்சா.." தங்கராஜ் சொல்ல,

"வேற வினையே வேணாம்.. துடப்பகட்டையை தூக்கிட்டு நான் தான் ரவுடி பேபினு அம்மா கிளம்பிடும்.. இப்ப போலவே அம்மாக்கு எப்பவும் தெரியக் கூடாது பா" என்ற கண்ணன்,

"இனி அந்த நிஷா பக்கமும் அந்த ஆளு போக வாய்ப்பில்ல நினைக்கிறன்.. அவ ஹஸ்பண்ட்னு அன்னைக்கு போட்டோல பார்த்தோம்ல அவனை கூட அங்கே பார்த்தேன்.. பட் என்ன பேசிகிட்டாங்கனு தெரியல..அது நமக்கு தேவையும் இல்லைனு தான் வந்துட்டேன்" என்று சொல்ல,

"டேய்..." என்றவர் கண்கள் கலங்கி இருந்தது.

"ப்பா! ஒன்னும் இல்ல பா.. நீங்க குடுக்குற பில்டப் தான் ஓவரா இருக்கு" என்று சொல்லி கண்ணன் சிரிக்க,

"டேய் போய்டு பார்த்துக்க.." என்றான் ராம்.

"நான் போறேன்.. ஆனா இவ்வளவு கோபம் உனக்கு ஆகாது பார்த்துக்கோ.. அதுக்கு தான் கீர்த்தி விஷயத்திலும் உன்னை பல முறை கேட்டேன்" கண்ணன் சொல்ல,

பதில் ஏதும் கூறாமல் முறைப்புடன் ராம் நிற்க, பதில் எதுவும் சொல்ல முடியாமல் தவித்து நின்றார் தங்கராஜ்.

"இதை இத்தோட விடுங்களேன்.. அம்மா சொன்ன மாதிரி அடுத்து கீர்த்திகிட்ட போய் பேசுங்க.. அந்த லூசு என்ன சொல்லும்னு யோசிங்க.. அதை விட்டுட்டு தேவை இல்லாதத எல்லாம் பேசிகிட்டு" என்றவன் வெளியே சென்றுவிட,

"பாருங்க பா இவனை.." என்று ராம் தந்தையிடம் சொல்ல, அவன் தோள்களில் தட்டிச் சென்றார் தந்தை.

தொடரும்..
 
Top