• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 21

ராம், தங்கராஜ் இருவரும் கையில் காபி கப்புடன் ஹாலில் அமர்ந்திருக்க, லதா கண்ணன் இருவரும் வாயடித்தபடி இருக்க, கிட்சனுக்கும் வாசலுக்குமாய் நடந்து கொண்டிருந்தார் சித்ரா.

பொதுவாய் மற்ற நேரம் என்றால் இந்நேரத்திற்கு பல கிண்டல்களை வழங்கி இருப்பார் தங்கராஜ்.

கண்ணன் கூறியதை கேட்டபின் அவரால் சாதாரணமாய் இருக்க முடியவில்லை.

என்ன இருந்தாலும் என் மகன் தோளுக்கு மேல் வளர்ந்து தோழன் போல கருதும் மகன் செய்த செயலில் வீட்டின் மேல் உள்ள அக்கறை தெரிந்தாலும் மனதெல்லாம் எரிய தான் செய்தது.

ராமுன் அதே சிந்தனையின் தான் உழன்று கொண்டிருந்தான். கொஞ்சமும் அங்கு நடந்ததை ராமினால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இதில் தான் எதுவும் செய்யவில்லையே எனும் ஆதங்கம் வேறு அவனை பாடாய்ப்படுத்திக் கொண்டிருக்கிறது

"ஆமா ஏன் அப்பாவும் அண்ணாவும் இப்படி அமைதியா இருக்காங்க?" கண்ணனிடம் லதா கேட்க,

"அண்ணா இருக்குறது ஆச்சர்யம் இல்ல.. அப்பா இப்படி இருக்குறது தான் ஆச்சர்யம்" என்றவன்,

"ம்மா! ஏன் இப்படி நடையா நடக்குறீங்க? டைல்ஸ் தேஞ்சிட போகுது" என பேச,

"அப்படியா! இங்க வந்து இந்த தூண்ல சாஞ்சுட்டு உட்கார்ந்து இரு.. கேட்ல எப்ப கீர்த்தி வண்டி உள்ள வருதோ அப்ப என்கிட்ட சொல்லு" என்றவர் சொன்னபடி எழுப்பி வந்து அவனை அங்கே அமரவும் வைக்க,

புரியாமல் அவர் இழுப்புக்கு சென்றவன், பின் "ம்மா! இதெல்லாம் டூ மச்.. ஏன் அவ வழி மாறி போய்டுவாளா?" என்றான் சிலிர்த்து எழுந்து.

"பேசாமல் போய் வேலையை பாரு டா.. நானே கீர்த்தி எப்ப வருவா.. எப்ப அவகிட்ட பேசலாம்னு பார்த்துட்டு இருக்கேன்.. இவன் வேற தொண தொணனு பேசிகிட்டு.." என்று சொல்லி செல்ல,

"ம்மா! மனசாட்சி தொட்டு சொல்லுங்க.. நான் தான் தொண தொணன்னு பேசுறனா?" என்றவனை,

"ஹாஹா! தொப்பி தொப்பி" என்று கிண்டல் செய்தாள் லதா.

"அடங்கு டி குண்டு!" என்று அவள் தலையில் கொட்டியவன், ராம் அருகே சென்று சோஃபாவில் அமர்ந்தான்.

"காபி ஆறி நாறி அரை மணி நேரமாச்சு.. என்ன பிரச்சனை உங்க ரெண்டு பேருக்கும்?" என்று கேட்க, வேகமாய் வாசலுக்கு ஓடினார் சித்ரா.

"சித்ரா பார்த்து.." என்று தங்கராஜூம்,

"ம்மா! ம்மா! பார்த்து.." என்று மூவருமாய் பதற,,

"ஏன் இப்படி கத்துறீங்க.. கீர்த்தி வண்டி சத்தம் மாதிரி கேட்டுச்சு.." என்று சொல்லி மீண்டும் உள்ளே சென்றார்.

"இப்படி சர்க்கஸ் காட்டினா அண்ணாக்கு கல்யாணம் பண்ண முடியாது.. உங்களுக்கு ஆபரேஷன் தான் பண்ண வேண்டியது இருக்கும்" கண்ணன் சொல்லவும்,

"சித்து கொஞ்சம் அமைதியா தான் இரேன்.. கீர்த்தி வரட்டும் பொறுமையா பேசிக்கலாம்" என்றார் தங்கராஜும்.

"உங்களுக்கு என்ன.. எனக்கு தானே டென்ஷன்" என்று சித்ரா உள்ளிருந்து குரல் கொடுக்க, லதா அதை வேடிக்கை பார்த்தவாறு இருந்தாள்.

ராமும் சித்ராவின் பரபரப்பில் கொஞ்சம் கவனத்தை திசை திருப்பி இருக்க, கொஞ்சம் யோசனையாய் இருந்த கண்ணன்,

"ம்மா கொஞ்சம் இங்க வாங்களேன்" என்றான்.

"அங்கீருந்தே சொல்லு.. எனக்கு காது கேட்கும்" சித்ரா பதில் கொடுக்க,

"எல்லாம் அண்ணா கல்யாண விஷயமா தான்.. வராட்டி போங்க" என்று சொல்லி தந்தையைப் பார்த்து கண்ணடிக்க, உடனே ஓடி வந்திருந்தார் சித்ரா.

அதில் ராமுமே மெலிதாய் சிரித்துக் கொண்டான்.

"சொல்லு டா.. என்ன?" என்று நின்று கொண்டே கேட்க, அவரை அருகில் அமர்த்தியவன்,

"ம்மா! கல்யாணம் பண்ணிக்க போறது யாரு?" என்று பொறுமையாய் கேட்க,

"ம்ம்! உங்க அப்பாவும் நானும்.. கேட்கறான் பாரு கேள்வி" என்று எழுந்து கொள்ள பார்த்தவரை மீண்டும் அமர்த்தியவன்,

"கேளுங்க ம்மா! ராம் அண்ணா தானே கல்யாணம் பண்ணிக்க போறான்? அப்ப கீர்த்திகிட்ட நீங்க பேசினா சரியா வருமா இல்ல அண்ணா பேசினா சரியா வருமா?" என்று கண்ணன் கேட்க,

"அப்ப நடந்தா மாதிரி தான்" என்று லதா முணுமுணுத்தது அனைவரின் காதிலும் விழ,

"கண்ணா! என்ன உளறுற? அதெல்லாம் அம்மா பேசினா போதும்" என்றான் ராமும்.

"அப்ப வேணா கல்யாணம் நடக்க சான்ஸ் இருக்கு" என்று லதா மீண்டும் கூற,

"ஏய் உள்ள போ டி.. ஏடாகூடமா பேசிகிட்டு.." என்ற சித்ரா,

"எனக்கும் இவன் மேல நம்பிக்கை இல்ல டா.. ஏற்கனவே இவன் அவ்வளவு வேலை பார்த்து வச்சிருக்கான்" சித்ரா பாவமாய் சொல்ல,

"ம்மா!" என்ற ராம் செல்லமாய் முறைக்க,

"நிஜமா தான் டா சொல்றேன்.. நீ பாட்டுக்கு சண்டை போட்டுட்டு வந்துடுவ.. யாரு புலம்புறது?" என்றார் சித்ராவும்.

"எனக்கும் கண்ணன் சொல்றது தான் சரினு தோணுது சித்ரா.. அவங்களுக்குள்ள ஒத்து வந்தா தானே கல்யாணம் பேச முடியும்.. நீ புலம்பி அவளை சம்மதிக்க வச்சுட்டா ஆச்சா?" என்று கணவனும் கேட்க,

"ப்பா! என்னை பார்த்தா சண்டைக்காரன் மாதிரியா தெரியுது? ஆளாளுக்கு ஓவரா பண்றீங்க" என்றான் ராம் கோபமாய்.

"உன்கிட்ட சில சேஞ்சஸ் தெரியுது அண்ணா.. ஆனாலும் அது உன் வாழ்க்கைக்கும் சரியா இருக்கனும் இல்ல.. அதுனால தான் சொல்றேன்" என்றான் கண்ணன்,

"ஆமால்ல தடியா! ராம் அண்ணாகிட்ட ரொம்பவே சேஞ்சஸ் தெரியுது" என்றாள் லதாவும்.

"இல்லையே நான் நானாதான் இருக்கேன் எப்பவும்" என்று ராம் சொல்ல,

"ஆனா கோபம் வந்தா நீ நீயா இருக்க மாட்டியே" என்றான் கண்ணன்.

"டேய்!"

"சரி அதெல்லாம் விடுங்க.. இப்ப சொல்லுங்க ம்மா.. யார் பேசினால் சரியா வரும்?" என்றான் கண்ணன்.

"சரி அப்ப ராமையே பேச சொல்லலாம்" என்று சித்ராவும் ஒரு மனதாய் சொல்ல,

"ம்மா! அவன் தான் சொல்றான்னா நீங்களுமா?" என்றான் ராம்.

"நீ பேசு டா.. அப்ப தான் ஒரு முடிவுக்கு வர முடியும்" தந்தையும் சொல்ல, கண்ணனை தான் முறைத்தான் ராம்.

"ம்மா! அண்ணி வந்துட்டாங்க" லதா சொல்ல,

"குண்டு! கொஞ்சம் டைம் கொடு.. அண்ணா என்ன பேசுறதுன்னு யோசிச்சிக்கட்டும்" என்று கண்ணன் கிண்டல் செய்ய,

"ஆமா! நான் பார்லிமென்ட்ல பேச போறேன்.. டைம் கொடுக்குறாங்க.. ம்மா! முதல்ல அவ என்கிட்ட பேசுவாளானு கேளுங்க" என்று ராம் சொல்ல,

"டேய்! என்ன டா சின்ன புள்ள மாதிரி பேசுற.. உனக்கு கல்யாணத்துக்கு பேசிட்டு இருக்கோம் டா" என்ற சித்ராவிற்கு அப்போதே படபடப்பாய் வந்தது.

"ண்ணா! என்ன பேசுற நீ?" கண்ணனும் புரியாமல் கேட்க,

"இல்ல கண்ணா! இது சம்மந்தமா தான் அவகிட்ட பேச போறேன்னு முன்னாடியே சொல்லணும் இல்ல.. அதை சொல்லுங்கனு சொல்றேன்" என்ற பின் தான் பதட்டமே தணிந்தது சித்ராவிற்கு.

"சரி நான் அண்ணனை சொல்ல சொல்றேன்" சித்ரா சொல்ல,

"நீ போய் சொல்லிட்டு வா சித்து" என்று தங்கராஜ் சொல்ல,

"அம்மா வேணாம்! நீ போ கண்ணா!" என்றான் ராம்.

"எது நானா?" என்று கண்ணன் பதற,

"ஆமா நீ தான்" என்றான் சாதாரணமாய் ராம்.

"ண்ணா! நான் சொன்னா நம்ப மாட்டா" என்றான் நிஜமாய்.

"அதெல்லாம் நம்புவா.. நீ போ" என்று சொல்லி தன் அறைக்கு அவன் செல்ல,

'இதென்ன டா கண்ணனுக்கு வந்த சோதனை' என்றபடி செல்ல தயாரானான்.

"ஆல் தி பெஸ்ட் தடியா!" லதா சொல்ல,

"குண்டு! உன்னை வந்து பார்த்துக்குறேன் " என்றபடி சென்றான்.

"மாமா!" என்று கீர்த்தி வீட்டு வாசலில் நின்று அழைக்க,

"உங்க மாமா இன்னும் வரல.. என்னனு சொல்லு" என்றாள் டீயைப் பருகியபடி.

"அவரும் இல்லையா.. இப்படியா கண்ணா உனக்கு சோதனை காலம் வரணும்" கண்ணன் தனக்கு தானே பேசிக் கொள்ள,

"என்ன தனியா பேசிட்டு நிக்குற?" என்றாள் கீர்த்தி.

"ஒன்னும் இல்லையே! அப்பு எங்கே?" என்றான்.

"ரூம்ல.. ஆமா ஏன் இப்படி நெளிஞ்சுட்டு நிக்குற? டீ வேணுமா? இரு" என்று கீர்த்தி எழுந்து கொள்ள பார்க்க,

"இல்ல இல்ல கீர்த்தி வேணாம்.. இன்னைக்கு மாமாகிட்ட அம்மா அப்பா பேசினாங்க.. ஏதாவது மாமா உன்கிட்ட சொன்னாங்களா?" என்றபடி கண்ணன் அமர,

"இல்ல.. ஏன்? என்ன பேசினாங்களாம்?" என்றாள் கீர்த்தி.

"உன் கல்யாண விஷயம் தான்" கண்ணன் கூற,

"அதான் நேத்தே அப்பா சொன்னாங்களே! வேற என்ன பேசினாங்கன்னு கேட்டேன்" என்றாள்.

"கீர்த்தி! நான் சொல்றேன்..ஃபுல்லா கேட்டுட்டு பேசு ஓகே" கண்ணன் தடுமாறி கூற, அவனையே கேள்வியாய் பார்த்தாள் கீர்த்தி.

"அம்மா மாமாகிட்ட ராம்க்கு உன்னை கல்யாணம் பண்றது பத்தி தான் பேசினாங்க" கண்ணன் சொல்லிவிட்டு அவள் முகத்தை பார்க்க,

"ம்ம்! அப்புறம்?" என்றாள் கேலியாய். நேற்று இரவு விட்டதை இப்படி தொடர்வதாக கீர்த்தி நினைத்துக் கொள்ள,

"மாமாக்கும் ஓகே தான்.. ஆனா உன்கிட்ட ஒரு வார்த்தை கேட்கணும் சொன்னாங்க" என்று சொல்ல,

"சரி அடுத்து" இன்னும் அவள் கண்டுகொள்ளாமல் அவனை பதற செய்ய, முழுதாய் சொல்லிவிடும் முடிவில் இருந்தான் கண்ணன்.

"அம்மா தான் உன்கிட்ட பேச வர்றேன்னு சொன்னாங்க.. ஆனா நான் தான் லூசு மாதிரி பேசி சொதப்பி.... இப்ப ராம் உன்கிட்ட பேச வர்றான்" என்று சொல்ல,

"என்ன பேச?" என்றாள் மீண்டும் விளையாட்டாய்.

"அதான்.. உங்க மேரேஜ் பத்தி பேச"

"ஓஹ்! ஓகே"

"அதை தான் சொல்ல வந்தேன்.. இப்ப ராம் உன்கிட்ட பேச வருவான்.. உனக்கு என்ன தோணுதோ அதை பேசு.. எதுனாலும் கிளீயரா பேசிடுங்க சரியா?" என்று சொல்ல,

"போதும் டா.. ரொம்ப ஓட்டாத.. இப்ப என்ன? அவரு பார்த்த பையனுக்கு அத்தை ஓகே சொல்லிட்டாங்களா?" என்றாள் இதை பெரிதாய் எடுத்துக் கொள்ளாமல்.

"நினச்சேன்.. இப்படி தான் நீ சொல்லுவன்னு சொன்னா அங்கே யாரு கேட்குறா?" என்றவன்,

"நீ நம்பினாலும் இல்லைனாலும் இதான் மேட்டர்.. ஓகே.. அவன்கிட்ட தெளிவா பேசு" என்ற கண்ணன்,

"அப்பு" என்று சத்தமாய் அழைக்க,

"சொல்லுங்க அத்தான்" என்று வந்து நின்றாள் அபர்ணா.

"அம்மா கூப்பிடுறாங்க.. வா" என்று அழைத்துக் கொண்டவன்,

"சியர்அப் கீர்த்தி.. நோ டென்ஷன்" என்று சொல்ல,

"அடி வாங்காத கண்ணா" என்றவளிடம்,

"நான் அப்புறமா வர்றேன்.. கணக்கு வச்சுக்கோ.. பட் பீ சீரியஸ்" என்றவன் வந்த வேலை முடிந்ததாக ஓட, பின்னோடே அபர்ணாவும் செல்ல,

"லூசு! என்னை ஏதாச்சும் கரிச்சு கொட்டிட்டே இருக்கனும் இல்லைனா கலாய்க்கனும் இவனுக்கு.." என்றவள் டீயை முடித்துவிட்டு டிவியில் பாடலை வைத்தவள், அப்படியே அதன்முன் அமர்ந்திருந்தாள்.

கண்ணன் சென்று ஒரு மணி நேரத்தில் வீட்டின் வாசலில் ஆணின் நிழலாட, அது கண்ணன் என நினைத்த கீர்த்தி,

"என்ன உன் அண்ணனுக்கு காலுல ஆணியாமா?" என்றபடி சிரித்துக் கொண்டே பார்க்க, உள்ளே வந்து நின்றான் ராம்.

தொடரும்..
 
Top